Tuesday, August 4, 2009

LOVE AAJ KAL - REVIEW



ஒரு நேர்மையான காதல்கதையைப் படமாகப் படைத்தமைக்கு இயக்குனர் இம்தியாஸ் அலிக்கு ராயல் சல்யூட்!

ஜெய்(சைஃப் அலி கான்)யும், மீரா(தீபிகா படுகோனே)வும் லண்டனில் சந்தித்து நண்பர்களாகிறார்கள். Again, நண்பர்கள்தான். வேறு காதலோ - கத்திரிக்காயோ எதுவும் அவர்களுக்கு துளிர்க்கவில்லை. அவ்வப்போது காண்பிக்கும் காட்சிகளின் மூலம் மீராவுக்கு காதல் உணர்வு துளிர்ப்பதைச் சொல்கிறார்கள். ஆனால் ஜெய் ஒரு மாடர்ன் இளைஞனாகத் திரிகிறான். ஆர்க்கியாலஜியில் சாதிக்க இந்தியா புறப்படுகிறாள் மீரா. அவ்வளவு தொலைவிலிருந்தெல்லாம் நாம் நண்பர்களாக இருகக்வோ (Boy Friend -Girl Friend) நம் உறவைத் தொடரவோ முடியாதென முடிவு செய்து BREAKING PARTY கொடுத்துக்கொண்டு பிரிகிறார்கள். இந்த BREAKING PARTY சமபந்தப்ப்ட்ட பேச்சு வரும்போதே தீபிகாவின் முக மாற்றத்தை வைத்து இது காதலா வெறும் நட்புதானா என அவள் குழம்பியிருப்பதை பார்வையாள்ர்களுக்கு உணர்த்துகிறார் இயக்குனர்.

மீரா கிளம்பும்போது வழியனுப்பிவிட்டு அமர்ந்திருக்கும் ஜெய்யிடம் ரிஷி கபூர் தனது காதலைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். இங்கே படம் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. இளமைக் கால ரிஷிகபூராக சைஃப் அலிகானையே காட்டியிருக்கிறார்கள். அவரது காதலியாக வருபவர் அவ்வளவு அழகு. (இதுவும் தீபிகா படுகோனே தான் என்று என் நண்பர் பெட் வைத்திருக்கிறார். யாராவது க்ளியர் பண்ணுங்கப்பா...)

இங்கே ஜெய்க்கு இன்னொரு கேர்ள் ஃப்ரெண்ட் கிடைக்கிறாள். அங்கே மீராவுக்கு விக்ரம் என்றொரு பாய் ஃப்ரெண்ட் கிடைக்கிறான். நடுநடுவே ஜெய்யும், மீராவும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள். மீராவுக்கு அந்த பாய் ஃப்ரெண்டுடன் திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்திற்கு முதல் நாளிரவு ஜெய்யிடம் உனக்கேதும் காதல் உணர்வே வரவில்லையா என்பது போல மீரா கேட்க, ஜெய்க்கு கோவம் வருகிறது. ஒன்றுமேயில்லை.. நீ திருமணம் செய்து கொண்டு நன்றாக இரு.. எனக்கப்படியேதும் கவலையில்லை என்கிறான்.

திருமணம் முடிந்து விக்ரமுடன் கட்டிலில் இருக்கும்வேளையில் ஜெய் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்றுணர்ந்து மீரா கணவனிடம் சொல்லிக் கொண்டு ஜெய்யைப் பார்க்கப் போகிறாள். பாதி வழியில் ஜெய்க்கு அலைபேச அவனோ தனது கனவு ப்ராஜெக்ட் ஒன்றிற்காக சான்ஃப்ரான்ஸிஸ்கோ கிளம்புவதைத் துள்ளலோடு சொல்ல, அவனுக்கு தன்மீது எந்த வித ஈர்ப்பும்மிலை என்று புரிந்து கொண்ட மீரா திரும்புகிறாள். (எங்கே திரும்பிச் சென்றாள் என்று அப்போது சொல்லாமல் விட்டு - பிறகு சொன்ன இடத்தில் இயக்குனர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்!)

ஜெய்க்கோ, வேலையில் சேர்ந்தபிறகு எல்லாம் ROUTINE ஆன வெறுப்பில் இருக்கும்போது மீரா பற்றிய நினைவு வருகிறது. பிறகு.... என்ன நடந்தது என்பதை திரையில் காண்க!


இயக்குனருக்கு பல இடங்களில் கைதட்டத் தோன்றுகிறது. தற்போதைய காதலையும், ரிஷிகபூரின் இளமைக்காதலையும் மாறி மாறி காண்பிக்கும் யோசனை, BLACK COFFEE-ஐயும் ஒரு கேரக்டராக உலவ விட்டது, ஜெய்யின் கனவு வேலை கிடைத்ததும் அவன் வழக்கமான வேலைச் சூழலில் உற்சாகமிழந்து காணப்படுவதைக் காண்பித்த விதம்... அனைத்தும் சபாஷ்!

வசனங்கள் - அற்புதம்!

உணர்வின்றி அழகுக்காக காதலை ஓகே செய்வதோ, பணத்துக்காக ஓகே செய்வதோ வேண்டாம். உள்ளுக்குள் அந்த ஃபீலிங் இல்லாமல் காதலிக்கவே காதலிக்காதீர்கள் என்று சொன்னமைக்காக இந்தப் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்!


.

27 comments:

மின்னுது மின்னல் said...

நான் தான் மொதோ ?



மின்னுது மின்னல்

anujanya said...

நல்ல கவிதை.. ஊப்ஸ் .. நல்ல கதை பற்றிய அழகான விமர்சனம்.

அளவிலா பயத்துடன் அனுஜன்யா

☀நான் ஆதவன்☀ said...

அந்த பெண் தீபிகா படுகோன் இல்லை.

பிரேசில் மாடல் அழகி Giselle Monteiro

கே.என்.சிவராமன் said...

சுருக்கமாக, அதேசமயம் சுவாரஸ்யத்துடன் எழுதியிருக்கிறீர்கள் பரிசல் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

kanavugalkalam said...

nalla oru padathuku meega arumayana veemarsanam........

ஸ்வாமி ஓம்கார் said...

வசனங்கள் - அற்புதம்!

ஆப்கோ ஹிந்தி மாலும்ஹே க்யா? :)

நர்சிம் said...

தூண்டிவிட்டீர்கள்..ஆவலை..படம் பார்க்கும்.

நர்சிம் said...

“ஹலோவ்..யார் பேசுறது..லக்கியா?ஆமா லக்கி..இங்க நடமாட்டம் தென்படுது..1:21க்கு..ஆமா”

தராசு said...

//உள்ளுக்குள் அந்த ஃபீலிங் இல்லாமல் காதலிக்கவே காதலிக்காதீர்கள் என்று சொன்னமைக்காக இந்தப் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்!//

ரைட்டு

Raju said...

( ஹிந்தி? ) வசனங்கள் - அற்புதம்!

:-)

கார்க்கிபவா said...

///உள்ளுக்குள் அந்த ஃபீலிங் இல்லாமல் காதலிக்கவே காதலிக்காதீர்கள் என்று சொன்னமைக்காக இந்தப் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலா//

ஒரு முறை பார்த்துட்டு சொல்ரேன்.. :)))

Sambar Vadai said...

http://www.intoday.in/index.php?option=com_content&task=view&issueid=&id=27375&sectionid=2&secid=12&Itemid=1

Imtiaz Ali's mystery girl in Love Aaj Kal - who plays the Punjabi girl-next-door Harleen Kaur—is actually a Brazilian model, Giselle Monteiro.

Vijayashankar said...

அதுக்குள்ளே பாண்டவர் பூமி ( தோழா தோழா பாட்டு ) ஒன் லையின் மறந்துட்டாங்க மக்கள்! ட்ரீட்மென்ட் வேற இல்லே?

Cable சங்கர் said...

what a coincidence
நானும் இந்த படத்தை பத்தி எழுதியிருக்கேன்.

Truth said...

உண்மையில் எனக்கு இந்த படம் பிடிக்கவே இல்லை. இடண்டு வருடம் ஒன்றாக இருந்து, பிறகு ஒரு வருடம் வேறொருவரிடம் இருந்துவிட்டு மீண்டும் (தீபிகாவின் திருமணத்திற்கு பின்) இனைவது ஏதோ மீண்டும் எந்த நேரமும் பிரிந்து விடலாம் என்றே எனக்கு பட்டது. ஆனால் பழைய காதல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பழைய காதல் ரொமாண்டிக்கா இருந்தது. நினைத்ததை சொல்லிட்டேன் :-)

SK said...

இவ்ளோ பீல் பண்ணா தான் படம் புடிக்குமா ??
சாயம்கால போயிட்டு வந்து சொல்றேன்.

குசும்பன் said...

//வசனங்கள் - அற்புதம்!//

அட பார்ரா!பார்ரா! பல மொழிவித்தகருன்னு தெரியாம போச்சு!

நான் எல்லாம் ஏக் காவுமே ஏக் கிஸான் ரகு தாத்தாவை விட்டுவிட்டு இன்னும் வரல:(

Prabhu said...

சொதப்பிருவாங்களோன்னு பயந்தேன்.

தினேஷ் said...

athu thiipika illa

Thamira said...

முதல்ல வீட்டவிட்டு வெளியே கிளம்பும் போது கபால்னு ஓடி வந்து கட்டிபிடிச்சு கிளைமாக்ஸ் வச்சாங்க.. அப்பாலிக்கா கார்ல போயிக்கினுருக்கும் போது கிளைமாக்ஸ் வச்சானுங்க.. அப்பாலிக்கா ஸ்டேசன் வாசல்ல வச்சானுங்க.. அப்பாலிக்கா பிளாட்பார்ம்ல.. அப்பாலிக்கா ரயில்ல தொங்கிக்கினே வச்சானுங்க.. அப்பாலிக்கா ரயில் கிளம்பியும் போயிரும், நூறடி போயிட்டு ரிட்டர்ன் வர்ற மாதிரி வச்சானுங்க.. சை.!

இதென்ன அதுமாதிரி கல்யாணம் ஆனப்பொறவு அவுளுக்கு தெரியுதா அது லவ்வுன்னு. அதுலயும் டைரக்டர் உக்காந்திருக்கிற மாதிரி கிளைமாக்ஸ் வேறயா? அப்படி என்னதான் கிளைமாக்ஸ்.. யோவ் வெண்ணை.. விமர்சனத்துல முடிவைப் படிச்சுட்டா படம் பார்க்க யாரும் பொக மாட்டாங்கன்னு எந்த‌ லூசுப்பய‌ கண்டுபிடிச்சான். அதென்ன வெள்ளித்திரையில் காண்க.. வெண்கலத்திரையில் காண்கன்னு கடுப்பேத்துறது.?

Thamira said...

அப்புறம் ஹிந்தி வேற தெரியுமா, அதுவும் வசனத்தை ரசிக்கிற அளவுக்கு.. சொல்லவேயில்ல?

RRSLM said...

//யோவ் வெண்ணை.. விமர்சனத்துல முடிவைப் படிச்சுட்டா படம் பார்க்க யாரும் பொக மாட்டாங்கன்னு எந்த‌ லூசுப்பய‌ கண்டுபிடிச்சான். அதென்ன வெள்ளித்திரையில் காண்க.. வெண்கலத்திரையில் காண்கன்னு கடுப்பேத்துறது.?..............................!//

நான் விமர்சனத்தைவிட அண்ணன் ஆதியின் பின்னோட்டத்தை வெகுவும் ரசித்தேன்......புலம்பல்கலாக இருந்த போதும் கலக்கல் ஆதி.

தராசு said...

//யோவ் வெண்ணை.. விமர்சனத்துல முடிவைப் படிச்சுட்டா படம் பார்க்க யாரும் பொக மாட்டாங்கன்னு எந்த‌ லூசுப்பய‌ கண்டுபிடிச்சான். அதென்ன வெள்ளித்திரையில் காண்க.. வெண்கலத்திரையில் காண்கன்னு கடுப்பேத்துறது.?//

தலைவா, சேம் பிளட்.

கூல் டவுன் தலைவா, எதார்ந்தாலும் பேசி தீத்துக்கலாம்.

Eswari said...

//விமர்சனத்துல முடிவைப் படிச்சுட்டா படம் பார்க்க யாரும் பொக மாட்டாங்கன்னு எந்த‌ லூசுப்பய‌ கண்டுபிடிச்சான். அதென்ன வெள்ளித்திரையில் காண்க.. வெண்கலத்திரையில் காண்கன்னு கடுப்பேத்துறது.?//
நா சொல்ல நினைச்சேன் ஆதிமூலகிருஷ்ணன் சொல்லிடாரு

மேவி... said...

500 followers kidaikka valthukkal

மங்களூர் சிவா said...

/
ஆதிமூலகிருஷ்ணன் said...

முதல்ல வீட்டவிட்டு வெளியே கிளம்பும் போது கபால்னு ஓடி வந்து கட்டிபிடிச்சு கிளைமாக்ஸ் வச்சாங்க.. அப்பாலிக்கா கார்ல போயிக்கினுருக்கும் போது கிளைமாக்ஸ் வச்சானுங்க.. அப்பாலிக்கா ஸ்டேசன் வாசல்ல வச்சானுங்க.. அப்பாலிக்கா பிளாட்பார்ம்ல.. அப்பாலிக்கா ரயில்ல தொங்கிக்கினே வச்சானுங்க.. அப்பாலிக்கா ரயில் கிளம்பியும் போயிரும், நூறடி போயிட்டு ரிட்டர்ன் வர்ற மாதிரி வச்சானுங்க.. சை.!

இதென்ன அதுமாதிரி கல்யாணம் ஆனப்பொறவு அவுளுக்கு தெரியுதா அது லவ்வுன்னு. அதுலயும் டைரக்டர் உக்காந்திருக்கிற மாதிரி கிளைமாக்ஸ் வேறயா? அப்படி என்னதான் கிளைமாக்ஸ்.. யோவ் வெண்ணை.. விமர்சனத்துல முடிவைப் படிச்சுட்டா படம் பார்க்க யாரும் பொக மாட்டாங்கன்னு எந்த‌ லூசுப்பய‌ கண்டுபிடிச்சான். அதென்ன வெள்ளித்திரையில் காண்க.. வெண்கலத்திரையில் காண்கன்னு கடுப்பேத்துறது.?
/

அப்பிடியே வழிமொழிஞ்சிக்கிறேன்
:)))

Unknown said...

//உணர்வின்றி அழகுக்காக காதலை ஓகே செய்வதோ, பணத்துக்காக ஓகே செய்வதோ வேண்டாம். உள்ளுக்குள் அந்த ஃபீலிங் இல்லாமல் காதலிக்கவே காதலிக்காதீர்கள் என்று சொன்னமைக்காக இந்தப் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்!//

Super....