நான் சமீபத்தில் மிக ரசித்தபடம் மேலே.
மிக எரிச்சலுற்ற படம் கீ....ழே..
******************************************
வலைப்பதிவர்களில் நான் முதல் முதல் சந்திந்த பதிவர் என்கிற பெருமையைப் பெறும்-மன்னிக்க - பெருமை எனக்கு!- ஆகவே, பதிவர்களில் நான் முதலின் சந்தித்த பதிவர் என்று சொல்லிக் கொள்ளும் பெருமையை எனக்குத்தந்த (கரெக்டா நன்னன் சார்?) வெயிலானை திருப்பூர் வலைப்பதிவர் பேரவையின் தலைவர் என்று நான் சொல்வதுண்டு. நாளாக நாளாக அது நிஜமாகவே ஆகிக்கொண்டிருக்கிறது. (அப்போ இவ்ளோ நாள் சும்மாதான் சொல்லிகிட்டிருந்தியா நீ?) ஒரு தலைவருக்கே உரிய பொறுப்புணர்ச்சியோடு வலைப்பதிவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் திருப்பூர் வலைப்பதிவர்களுக்கென தனித்திரட்டி ஒன்றை உருவாக்கியிருக்கிறார். பார்த்ததும் நானே மிரண்டு விட்டேன். திருப்பூரில் இத்தனை வலைப்பதிவர்களா என்று பிரமிப்பாக இருந்தது.
http://tiruppur-bloggers.
(அந்தப் பக்கத்தில் போனால் வலதுபக்கம் உரையாடல் சிறுகதைப் பட்டறைக்கு ஒரு இணைப்பு கொடுத்திருக்கிறார். ஒரு வார்த்தையை மாற்றிப் படித்து பயந்துவிட்டேன்... ‘என்னடா இப்படி மிரட்டிக் கூப்பிடுகிறார்?’ என்று. பிறகு பொறுமையாய்ப் பார்த்தபோதுதான் புரிந்தது!)
***************************************
நண்பர் தங்கமணி பிரபுவின் ஹிட் கவுண்டரில் அவர் எழுதியிருந்த கேப்ஷன் குபுக்கென சிரிக்க வைத்தது. ஹிட்-64 மனை தெலுங்கு செட்டியார் என்று எழுதி ‘நாங்க கவுண்டர் இல்லீங்க’ என்றிருக்கிறார். வில்லங்கமான மனுஷன்!
அதேபோல நான் மிக ரசித்த ஒரு வலைப்பூ பெயர் ‘என் எழுத்து இகழேல்’.
எழுத்துப் பிழையெல்லாம் இல்லை.. ‘என்’ எழுத்துதான்!
*****************************************
போனவாரம் நான் ‘இந்த வாரப் பதிவர்’ என்று போட்டிருந்த கார்ல்ஸ்பெர்க்கிடமிருந்து அலையழைப்பு. ‘என்ன பாஸ்.. நான் அவ்ளோ நல்லா கதை எழுதுவேன்னு நீங்க நினைக்கறீங்களா?’ என்று கேட்டார். ‘நானெங்கப்பா அப்படிச் சொன்னேன்’ என்று கேட்டதற்கு ‘நீங்கதானே எப்படிக் கதை எழுதன்னு என் படத்தைப் போட்டு க்ளிக்கிப் போய்ப் பாருங்கன்னு சைடு பார்ல (ச்சே.. அங்க இல்லீங்க.. வலைப்பூவோட சைடு பார்!) போட்டிருக்கீங்க..” என்று கலவரப்படுத்தினார்.
பார்த்தால் அவரது படத்துக்கு கீழே உரையாடல் அமைப்பின் சிறுகதைப் பட்டறைக்கான விளம்பரம் கொடுத்திருந்ததை அப்படி எடுத்துக் கொண்டு சந்தோஷப்பட்டிருக்கிறார் மனுஷன்!
அவர் தாமோதரானா இல்ல என்னை தாமோதரனாக்கறாரான்னு தெரியல!
******************
ரொம்ப நாளைக்கு முன்னாடி எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட நண்பர் ஒருத்தர் அலைபேசினாரு. வழக்கமான பேச்சுகளுக்கு நடுவுல ‘நாளைக்கு என்ன நாள்னு தெரியுமா ஒனக்கு?’ன்னு கேட்டாரு. நான் வேற ஏதேதோ பேசிட்டிருக்க, ‘அதெல்லாம் விடு’ன்னு மறுபடி அதையே கேட்டாரு. தெரியலண்ணா’ன்னு சொன்னேன்.
“வாலண்டைன்ஸ் டேயெல்லாம் ஞாபகம் வெச்சுக்குவீங்கடா. இத மறந்து போகும் உங்களுக்கு..”
“ண்ணா.. அப்படி என்ன நாள்ணா?”
“வள்ளலார் தினம்டா”
“ஓஹோ... உங்களுக்கு எப்படி ஞாபகமிருக்கு?”
“இன்னைக்கு கடைக்காரன் சொன்னான்.. நாளைக்கு கடை லீவுன்னு.. அப்படி ஞாபகம் வந்தது..”
“எந்தக் கடை?”
“டாஸ்மாக்”
டொக்.
*******************************
Body Language என்றொரு விஷயம் இருக்கிறது. இண்டர்வ்யூவில் கலந்து கொள்ள வருபவர்களிடம் இந்த விஷயத்தைப் பார்ப்பது என் வழக்கம். பலரின் வழக்கமாகவும் இருக்கும். நிற்க. (அட.. உட்காருங்க..)
திருப்பூரில் வாகனம் ஓட்டும்போது இந்த Body Language பற்றிய அறிவு உங்களுக்கு இல்லாவிட்டால் ரொம்ப கஷ்டம். டூவீலர் ஓட்டுபவர்கள் இண்டிகேட்டர் எல்லாம் போடமாட்டார்கள். சிக்னல் காட்டமாட்டார்கள். வண்டி ஓட்டும்போதே, எந்தப் பக்கம் அவர்கள் திரும்ப வேண்டுமோ, அந்தப் பக்கமாய் அவர்கள் உடல் ஒரு மாதிரி திரும்பும். திறமையிருந்தால் நீங்கள் அந்த ‘உடல்மொழி’யறிந்து, விபத்தைத் தவிர்க்கலாம். இல்லாவிட்டால் கஷ்டம்தான்!
***********************************
கீழே உள்ள படத்தைப் பாருங்கள்....
தினமலரில் வந்தது இது. விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலைக்கு முன் பீரால் அபிஷேகம் செய்கிறார் ஒரு பக்தர்! காதலர் தினத்துக்கு, Pubக்கு எதிர்ப்பு தெரிவித்த கலாச்சாரக் காவலர்கள் இதற்கு என்ன செய்யப் போகிறார்கள்? ‘நாங்க செஞ்சா சரி, நீங்க செஞ்சாதான் தப்பு’ என்று சொல்வார்களோ?
பாலகணேஷ் போல பீர் கணேஷோ?
********************
இந்த வார ‘எப்படி இப்படியெல்லாம்...’
எப்படி இப்படியெல்லாம்?
ஒகேவா? (அடுத்த வாரம் வேற கலர்ல சொல்றேன்..)
.
58 comments:
me the first?? !!
yes !!!
It would be different if it is ' APPY O AM'..
without 1H and 1N... ithu eppidi irukku??
___________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
padivu super
பாடி லாங்குவேஜை எப்படியெல்லாம் வெளக்குறாங்க..
ரோட்ல பாத்து போங்க பரிசல்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//வர் தாமோதரானா இல்ல என்னை தாமோதரனாக்கறாரான்னு தெரியல!//
விளக்கம் தேவைங்க பரிசல். இதுகூட தெரியலைன்னு கேட்டறாதீங்க.
டாஸ்மாக் ...... அறிவு களஞ்சியம் போல் இருக்கே
ஒரு வேளை பிள்ளையாரும் சினிமா ஹீரோ ஆகிவிட்டரோ .....
AIDS க்கு காண்டம் போட்டு கொள்ளாத கடவுள் .... இதற்க்கு மட்டும் mask போட்டு கொள்கிறார் ........ என்ன விஷயம்
//Mahesh said...
me the first?? !!//
Congrats Mahesh.
யாரார் போறீங்க?
அதே போல் பெண்கள் வண்டியோட்டும் பாடி லேங்குவேஜை கவனித்திருக்கிறீர்களா..? ஒரு பதிவே போடலாம்.
@ மகேஷ்
நன்றிங்க.. நீங்க சொல்றதுக்கு வேற அர்த்தம் வருமே பாஸ்...
@ டம்பீ மேவீ
நன்றி.
@ ஸ்ரீராம்
அதையேன் கேக்கறீங்க பாஸூ..
//‘நாங்க செஞ்சா சரி, நீங்க செஞ்சாதான் தப்பு’ என்று சொல்வார்களோ?//
இது எதிர் கட்சிக் காரர்களின் சதி தலைவரே.
//இந்த வார ‘எப்படி இப்படியெல்லாம்...’
எப்படி இப்படியெல்லாம்?
ஒகேவா? (அடுத்த வாரம் வேற கலர்ல சொல்றேன்..)//
வேணாம், எனக்கு கோபம் வராது.
// சின்ன அம்மிணி said...
//வர் தாமோதரானா இல்ல என்னை தாமோதரனாக்கறாரான்னு தெரியல!//
விளக்கம் தேவைங்க பரிசல். இதுகூட தெரியலைன்னு கேட்டறாதீங்க.//
நிங்க கேட்டது தப்பில்லீங்க.. அதுக்காகவே அந்த தாமோதரனா-ங்கறதுல ஒரு லிங்க் கொடுத்திருக்கேனே.. அத க்ளிக்கிப் போய்ப் பாருங்களேன்...
@ அறிவிலி
நாலைஞ்சு பேர் போறோம்!
@ கேபிள் சங்கர்
அவ்வ்வ்வ்வ்வ்வ்..... ஏன் இப்டி?
@ தராசு
கோவம் வரும்.. ஆனா வராது?
திருப்பூர் புயல் வெயிலான் ..ஹி ஹி ஹி ..நாங்க இப்பவே ஒரு துண்ட போட்டு வைக்கிறோம்
நன்று :)
அவியல் சுவையாக இருந்தது.
அவியல்காரன்...
\\திருப்பூரில் வாகனம் ஓட்டும்போது இந்த Body Language பற்றிய அறிவு உங்களுக்கு இல்லாவிட்டால் ரொம்ப கஷ்டம். டூவீலர் ஓட்டுபவர்கள் இண்டிகேட்டர் எல்லாம் போடமாட்டார்கள். சிக்னல் காட்டமாட்டார்கள். வண்டி ஓட்டும்போதே, எந்தப் பக்கம் அவர்கள் திரும்ப வேண்டுமோ, அந்தப் பக்கமாய் அவர்கள் உடல் ஒரு மாதிரி திரும்பும். திறமையிருந்தால் நீங்கள் அந்த ‘உடல்மொழி’யறிந்து, விபத்தைத் தவிர்க்கலாம்.\\
அதாங்க திருப்பூர், விதிமுறைகளைப்பற்றி கவலைப்படாத போக்குவரத்து :))
அவியல் சரியாக அவிஞ்சிருக்கு இம்முறையும்.
ஆனால் ஒன்று. நீங்கள் போட்டிருக்கும் இரண்டு படங்களையும் பார்த்தால் "உடம்பில் இல்லாத உறுப்பின் பெயர்" கொண்ட பதிவர் ஏடாகூடமாக ஏதேனும் எழுத வாய்ப்பிருக்கிறது:-)
நீங்கள் ரசித்த படம் மிகவே ரசிக்கும் படி உள்ளது.
வாழ்க வெயிலான்.
இதுல என்ன சந்தேகம். உங்களையும் தாமோதரனாக்க ஆள் இருக்கானு தெரிஞ்சுக்கோங்க. :)
நல்ல உரையாடல். :D
சரி தான். திருப்பூரில் ஒருவர் வண்டி ஓட்டிவிட்டால் வேறு எங்கு வேண்டுமானாலும் ஓட்டி விடலாம்.
ச்சே, என்ன சொல்ல.... கலாச்சாரக் காவலர்கள் தான் சொல்ல வேண்டும்.
நிஜமாவே எப்படி இப்படியெல்லாம் யோசிக்குறீங்களோ....
@ கிரி
என்னாதுக்கு துண்டு போடறீங்க?
@ ஸ்ரீமதி
நன்றி!
@ உயிரோடை
மிக்க நன்றி!
@ நர்சிம்
அப்படியா? அதுவும் சரி!
@ நிகழ்காலத்தில்
கரெக்ட்தான் சிவா.
@ மருதவளி
அதாருங்க?
@ விக்னேஸ்வரி
நன்றி. (எங்க ஆளக் காணோம்?)
அவியல் எப்பவும் போல நல்லாத்தான் இருக்கு, ஆனா அதென்ன லொள்ளு ‘எப்படி இப்படியெல்லாம்...’ ம்ம்ம்ம்
அவியல் எப்பவும் போல நல்லாத்தான் இருக்கு, ஆனா அதென்ன லொள்ளு ‘எப்படி இப்படியெல்லாம்...’ ம்ம்ம்ம்
@ ghost
நன்றி!
நன்றி!
அது அப்படித்தான்...
கடைசி படம் சூப்பர் :-)
@ யுவா
கி கி கி!
அவியல் ரொம்ப நல்லா இருக்கு .
@ இளவட்டம்
நன்றி!
பிள்ளையார் பக்த 'கோடிகள்' எப்படி இப்படிப் பெருகினார்கள் என்று யோசித்தால், உங்க படத்தில் விடை இருக்கு.
இல்ல, கருப்பசாமி, முனீஸ்வரன், சொள்ளமாடன் மாதிரி பிள்ளையாருக்கு படைச்சு, அவரையும் தமிழ்க் கடவுள் ஆக்கும் ஆர்.எஸ்.எஸ். சதியாகவும் இருக்கலாம் :)
அவியல் நல்லா இருக்கு
அனுஜன்யா
டொக்.
//அதே போல் பெண்கள் வண்டியோட்டும் பாடி லேங்குவேஜை கவனித்திருக்கிறீர்களா..? ஒரு பதிவே போடலாம்.
//
கண்டிப்பா இது கேபிளோட பின்னூட்டம்தான்
:)))
சமீப காலத்தில் மிகவும் திருப்தி தந்த அவியல்.
Total Damage :(
//நான் சமீபத்தில் மிக ரசித்தபடம் மேலே.//
அப்ப வால்பையன் அனுப்பிய படத்தை நீங்க ரசிக்கவில்லை? அப்படிதானே பரிசல்???
அவியல் அருமை..... வள்ளலார் தினத்தையும், மகாவீரர் ஜெயந்தியையும் நமக்கு ஞாபக படுத்தற அரசாங்கத்துக்கு ஒரு "ஓ"
//இந்த வார ‘எப்படி இப்படியெல்லாம்...’
எப்படி இப்படியெல்லாம்?
ஒகேவா? (அடுத்த வாரம் வேற கலர்ல சொல்றேன்..)
அந்த டாப் 10 போட்டியில நீங்களும் கலந்துக்க போறீங்களா? :-)
:))
வள்ளலார் தினத்தை ஞாபகபடுத்தியது நம்ம ”வைத்திய”ர் தானே!?
//குசும்பன் said...
//நான் சமீபத்தில் மிக ரசித்தபடம் மேலே.//
அப்ப வால்பையன் அனுப்பிய படத்தை நீங்க ரசிக்கவில்லை? அப்படிதானே பரிசல்???//
பரிசல் ஒரு பின்நவீனவாதி இல்லை என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது!
அவியல் சுவையாக இருந்தது :)
என் ப்ளாகான ‘என்’ எழுத்து இகழேல் பற்றி குறிப்பிட்டிருந்தமைக்கு நன்றி!
ஒரு பொது சமையம் தள மன்றத்தில், நான் எழுதிய ஒரு கட்டுரைக்கு, ஆட்சேபணைகள் வர, நான் ப்ளாகில் எழுத ஆரம்பித்தேன். என் எழுத்தை இகழ்ந்து விட்டார்களே என்ற வேகத்தில் கொடுத்த தலைப்பு அது!
ரசித்தேன்.
இந்த பிள்ளையார் கடலில் கரைக்கும் சமாச்சாரம் முன்பெல்லாம் கிடையாது தானே.நானும் இதை வன்மையாக வெறுக்கிறேன்
அவியல் அருமை..
//.. திருப்பூரில் வாகனம் ஓட்டும்போது இந்த Body Language பற்றிய அறிவு உங்களுக்கு இல்லாவிட்டால் ரொம்ப கஷ்டம். ..//
நீங்க 8 போட்டுத்தான் license எடுத்திங்கலானு test பண்ணுறதுக்குத்தான்..
//.. எப்படி இப்படியெல்லாம்? ..//
இந்த வாரம் சரியில்லையே..!!
@ அனுஜன்யா
//இல்ல, கருப்பசாமி, முனீஸ்வரன், சொள்ளமாடன் மாதிரி பிள்ளையாருக்கு படைச்சு, அவரையும் தமிழ்க் கடவுள் ஆக்கும் //
இருக்கலாமோ???
@ சூரியன்
நன்றி.
@ எம். எம். அப்துல்லா
உங்க பின்னூட்டத்தை உங்க குரல்லயே படிச்சேன்!!
@ கார்ல்ஸ்பெர்க்
வொய் வர்ரி? டோண்ட் வர்ரி!!
@ குசும்பன்
இது MFM அல்ல!
@ ஆரூரன் விஸ்வநாதன்
நன்றி!
@ ட்ரூத்
கலந்துகிட்டு பரிசையும் வாங்கினவனப் பார்த்து இப்படி ஒரு கேள்வியா??
@ நாஞ்சில் நாதம்
:--))))
@ வால்பையன்
கி கி கி கி
@ பட்டாம்பூச்சி
நன்றி!
@ சுமஜ்லா
மிக்க நன்றீ!
@ செல்வேந்திராதிமூலகிருஷ்ணன்
நன்றி!
@ சங்கரராம்
நானும்.
@ பட்டிக்காட்டான்
சரி!
சென்ற வாரம் ஆனந்த விகடனில் உங்கள் கவிதைகள் படித்தேன். ரசித்தேன். வாழ்த்துகள்!
-ப்ரியமுடன்
சேரல்
யாரார் வர்றீங்க?
.
.
யார்ரா வர்றீங்க?
.
.
நானும் அப்படித்தான் படிச்சேன்..!
அவியல் நல்லா இருக்கு சார்...!
இவர்கள் பிள்ளையாரை மட்டுமல்ல, மதத்தை மட்டும் அல்ல, மத நம்பிக்கை உள்ளவர்களை மட்டுமல்ல, தங்களை தாங்களே கேவலப்படுத்தி கொள்கிறார்கள்.
மிக்க நன்றி சேரல், உங்கள் வெட்கக் கவிதையும் அருமை!
@ பேருந்துக் காதலன்
கரெக்டாப் புடிச்சப்பா!
@ சபேசன் மகாலிங்கம்
மிகச்சரியான வார்த்தைகள்!
அவியல் சுவை.
முதல் படம் ரசித்தேன்.. கடைசிப் படத்தில் உள்ளவனைத் தேடித் பிடித்து உதைக்கனும்..
என் எழுத்து இகழேல் நானும் ரசித்த ஒரு விஷயம்.. :)
Post a Comment