.
ஆரம்ப ட்ராமாக்கள் முடிந்து ஒரு கட்டத்தில் வந்து நிற்கிறது ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர். (விஜய் டி.வி) எப்போதுமே இந்த மாதிரி நிகழ்ச்சிகளை, இந்தக் கட்டத்தில் இருந்து பார்க்கத் துவங்குவது என் வழக்கம். இந்த முறையும் ஏமாற்றவில்லை. நேற்று முன்தினம் துள்ளலான ஆட்டத்தோடு ‘மச்சான் மீசை வீச்சருவா’ பாடிய சின்னப் பெண்ணும், நேற்றைக்கு ‘எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே’ என்று பாடிய ச்சின்னப் பையனும் கண்ணிலேயே நிற்கிறார்கள். அதுவும் நேற்று பாடிய சிறுவனின் (ஆறு வயதிருக்கலாம்) ஞாபக சக்தியும், மூச்சு விடாமல் பாடிய விதமும், எக்ஸ்ப்ரஷனும் – ப்பா.. வாய்ப்பே இல்லை!
புதன் ஒரு பெண் பாடும்போது சரணத்தை மறந்திவிட, சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்த அவள் அப்பா எனை மிகக் கவர்ந்தார். ‘போனாப் போகுதும்மா... விடு’ என்ற முக பாவனையோடே அமர்ந்திருந்தார் அவர். இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் அப்பாக்களை விட, அம்மாக்களில் முகத்தில் தெரியும் படபடப்பு தாய்மையை உணர்த்துகிறது.
நடுவர்களில் மனோ கலக்குகிறார். இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் நடுவர்களாக அமர்ந்து, மனதுக்குப் பிடித்த பாடல்களை கேட்டுக் கொண்டே இருப்பது எவ்வளவு சுகமென்பதை தன் உடல்மொழியிலேயே வெளிப்படுத்துகிறார் அவர். திரைத்துறையில் ‘ரொம்ப ஜாலியான மனுஷங்கப்பா’ என்று நான் வியந்து பார்ப்பது ஜெயராமையும், மனோவையும்.
*****************************
என் ‘ஒன்றும் விடாத தம்பி’ ஒருத்தன் சொன்னதிது. சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது இது. அவனது கல்லூரியில் பேச்சில் சிறந்தவர்களை, சென்னைக்கு அழைத்திருக்கிறார்கள் ஒரு கட்சியினர். தலைமைக் கழகப் பேச்சாளர்களுக்கான தேர்வாம். போய்விட்டு வந்தவர்கள் சொன்னதிலிருந்து-இவன் சொன்னது: பெரிய மண்டபமொன்றில் தொண்டர்களுக்கு முன் இவர்கள் பேச வேண்டும். கட்சி நிர்வாகிகள், சில மந்திரிகள் எல்லாரும் இருப்பார்களாம். இவர்கள் கட்சித் தலைமையைப் புகழ்ந்தால் ஐநூறு. எதிர்க் கட்சிக்காரர்களை திட்டும்போதெல்லாம் ஆயிரம் என்று அள்ளி வீசுகிறார்களாம். அதுவும் பெண் பேச்சாளர்களின் வசவுப் பேச்சுக்கு ஆன் த ஸ்பாட் பேமெண்ட்!
அந்த மாதிரி ஒரு நிர்வாகி, வேட்டி மடிப்பிலிருந்து காசை எடுக்கும்போது, இடுப்பில் வைத்திருந்த க்வாட்டர் பாட்டில் மேடையிலேயே விழுந்து உடைந்ததாம். அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த மாணவன், சமயோசிதமாக ‘பாருங்கள், மது ஒழிப்பை மேடைக்கு வந்து செய்து காட்டிக் கொண்டிருக்கிறார் நம் கட்சிக்காரர்’ என்றதற்கு எக்ஸ்ட்ராவாக கைதட்டி ஆரவாரித்து அனுப்பினார்களாம்.
நல்லா இருங்கப்பூ!
*************************************
நண்பன் அறிவழகனுடன் ஒரு விழாவுக்குப் போயிருந்தேன். 101, 501 என்று மொய் வைப்பார்களே, அதற்காக ‘சில்லறை ஒரு ரூவா இருக்காடா’ என்று கேட்டேன்.
அறிவு சொன்னான்:
“நீ போய் ஒரு ரூவா வெச்சா நல்லாயிருக்காதுடா.. மினிமம் அம்பது ரூவாயாவது வை”
**************************
ஜெயா - கலைஞர் டி வி செய்திகள் எப்படியோ அப்படி ஆகிவிட்டன தினமலர், தினத்தந்தி செய்திகள். ஒவ்வொருவரும் அவரவர் கோணத்தில் எழுதுவது வாடிக்கையாடிவிட்டது.
கோவையில் தற்கொலை செய்து கொண்ட ஒரு பள்ளி மாணவி தன் கையில் 'Give everyone a chance 2 change' என்று எழுதியிருந்தார். அதை ஒரு பத்திரிகை ‘மாறுவதற்கு எல்லார்க்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள்’ என்று (2 என்பது குறுஞ்செய்திமொழியில் To எனக் கொள்ளலாம்) குறிப்பிட்டிருந்தது. சரி. ஆனால் இன்னொரு பத்திரிகை “எல்லாருக்கும் மாறுவதற்கு இரண்டு வாய்ப்பு தரவேண்டும்” என்று மொழிபெயர்த்திருந்தது!
அதைவிடக் கொடுமையை கீழே ஸ்கேன் செய்து போட்டிருக்கிறேன்.
ஐயாயிரம் என்றொரு பத்திரிகையும், பத்தாயிரம் என்றொரு பத்திரிகையும் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதைவிட, ஸ்கேனிங்கை ஜூம் செய்து பாருங்கள். ஒன்று இந்திராணி என்று பெயர் சொல்ல, இன்னொரு பத்திரிகை இந்திராதேவி என்கிறது.
அதுசரி, நமக்கெதுக்கு இந்தக் கவலையெல்லாம்? பேப்பரைக் கிழித்து பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு போய்க்கிட்டே இருக்கலாம்!
********************************************
வேட்டைக்காரன் பாடல்களில் ‘புலி உறுமுது’வும், ‘நான் அடிச்சா தாங்கமாட்ட’வும் இன்னும் எத்தனை நாள்களுக்கு குழந்தைகளில் தேசியகீதமாக இருக்கப்போகிறதோ தெரியவில்லை. ‘என் உச்சி மண்டைல’ டான்ஸ் தமாக்கா. விஜய் ஆண்டனி தன் முந்தைய பாடல்களின் சாயலில்லாமல் இசையமைக்கவே மாட்டேனென்பதை தன் ட்ரேட் மார்க்காகக் கொண்டிருக்கிறார்.
‘கண்டேன் காதலை’ (வித்யாசாகர்) படத்தில் சுரேஷ் வாட்கர் பாடிய ‘நான் மொழி அறிந்தேன்’ பாடலை இரவு அமைதியாய் இருக்கையில் கேட்டுப் பாருங்கள். அதே படத்தில் ‘சுத்துது சுத்துது’ பாடலில் ஹரிஹரன் புல்லாங்குழலோடே சேர்ந்து பாடும் ஆலாவைப் பாடிப் பாருங்கள். க்ரேட்!
*********************
.
26 comments:
" நேற்று முன்தினம் துள்ளலான ஆட்டத்தோடு ‘மச்சான் மீசை வீச்சருவா’ பாடிய சின்னப் பெண்ணும், நேற்றைக்கு ‘எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே’ என்று பாடிய ச்சின்னப் பையனும் கண்ணிலேயே நிற்கிறார்கள். அதுவும் நேற்று பாடிய சிறுவனின் (ஆறு வயதிருக்கலாம்) ஞாபக சக்தியும், மூச்சு விடாமல் பாடிய விதமும், எக்ஸ்ப்ரஷனும் – ப்பா.. வாய்ப்பே இல்லை!"
அது எப்படி நீங்களும் ஜட்ஜ் மாதிரியே வாய்ப்பே இல்லை, சான்ஸே இல்லைனு எழுதுறீங்க.டீவி பார்த்து, பார்த்து பழக்கமா?
"வேட்டைக்காரன் பாடல்களில் ‘புலி உறுமுது’வும், ‘நான் அடிச்சா தாங்கமாட்ட’வும் இன்னும் எத்தனை நாள்களுக்கு குழந்தைகளில் தேசியகீதமாக இருக்கப்போகிறதோ"
நம்ம வானொலி ஒலிபரப்பாளரின் பிளாக்கில் "நான் அடிச்சா தாங்கமாட்ட" அப்ப்டிங்கறத , "நானடிச்சா தாங்கமாட்ட" இப்படியும் சொல்லலாம் அப்ப்டினு எழுதியிருக்காரு , அதுவும் நல்லாத்தானிருக்கு
சூப்பர் சிங்கர் மேட்டர் நானும் நோட் பண்ணி வச்சிருந்தேன்,அதுவும் சரியா அந்த சஞ்சனா பொண்ணோட அப்பாவைப் பற்றிதான் நானும் எழுத நினைத்திருந்தேன்.’வட போச்சே’. அந்த பொண்ணு பாடும்போது அவரோட முகத்தில் தெரியும் சந்தோஷத்தைப் பார்க்கணும் ’அப்பா’னா இப்படி இருக்கணும்ங்கிற மாதிரி இருக்கும்.
அந்த குட்டிப்பையனின் ‘மாட்டுக்கார வேலா’ பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.கலக்குறான்.
மனோ மேட்டரும் அப்படியே.சேம் பிளட்.
சகா, அந்த பையன் இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனையும், அரபிக்கடலோரம் பாடியதையும் யூட்ய்ப்பில் பாருங்கள்.. கலக்கறான்.. பயமே இல்லை அவனுக்கு..
வேட்டைக்காரன் பாட்டு, பசங்க பாட ஆரம்பிச்சாடாங்க.. :))))
அவியல் வ.போ.சு.
அந்த குட்டிப் பயலோட டேலன்ட் பத்தி ஆக்ஸ்ட்டில் நான் போட்ட போஸ்ட் வீடியோவுடன்...
http://kirukkugiren.blogspot.com/2009/08/blog-post_13.html
Super Singer Junior so nice program to watch
:)
நல்ல அவிச்சுருக்கிங்க..
அறிவு - ஹா.. ஹா..
தினமலர், தினத்தந்தி செய்திகள். - இதுக்குத்தான் நான் வண்ணப்படங்கள் பகுதிய மட்டும் பார்க்குறது..
எப்படி இப்படியெல்லாம்..??
சூப்பர் சிங்கரில் குட்டிப் பையன் கலக்கிறான்.. :)
நேற்று ஒரு சிறுமி பட்டத்து ராணி பாடியது பார்த்தீர்களா? கலக்கினாள்..
//நடுவர்களில் மனோ கலக்குகிறார். இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் நடுவர்களாக அமர்ந்து, மனதுக்குப் பிடித்த பாடல்களை கேட்டுக் கொண்டே இருப்பது எவ்வளவு சுகமென்பதை தன் உடல்மொழியிலேயே வெளிப்படுத்துகிறார் அவர். திரைத்துறையில் ‘ரொம்ப ஜாலியான மனுஷங்கப்பா’ என்று நான் வியந்து பார்ப்பது ஜெயராமையும், மனோவையும்.//
நூற்றுக்கு நூறு சரி,., :) மனோ எப்போதுமே ஜாலியாக ரசிப்பவர்.. நேற்றும் அவர் தலையாட்டல்,புன்னகை போன்றவை ரசித்தேன்..
//“நீ போய் ஒரு ரூவா வெச்சா நல்லாயிருக்காதுடா.. மினிமம் அம்பது ரூவாயாவது வை”//
ஹா ஹா..
வாய்ப்பாடி குமார்.. அது நான் அடிச்சா & நான் நடிச்சா.. ;)
நியூஸ் பேப்பர் காமெடி அலாதீங்க! நம்ம ஒண்ணு சொன்னா நமக்கே தெரியாத அர்த்தத்துல போடுவாங்க! அதான் பெரிய ஆளுங்க எல்லா பி.ஆர்.ஓ. வச்சி அவங்க பாஷையில ரிலீஸ் பண்ணுறாங்க!
கார்க்கி,
இந்தமாதிரி சிலாகிச்சுச் சொன்னா சுட்டி குடுக்கனும்.
நான் பார்த்தது பட்டத்து ரானியைத்தான். நன்றாகப் பாடினார். இதுவரை பாடியதிலேயே இதுதான் டாப் பெர்பார்மன்ஸ்னு சுபா சொன்னாங்க.
மற்ற இரண்டும் பார்க்கலை. விஜய் ரிபீட் வருமா? இல்லன்னா யாராவது சுட்டி கொடுங்கப்பா.
இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியாகட்டும், குழந்தைகளை வைத்து நடத்தப்படும் எந்த ஒரு நிகழ்ச்சிகளாகட்டும்,
எனக்கு இதில் மாற்றுக்கருத்து உள்ளது தலைவரே.
விரைவில் இதைப் பற்றிய பதிவு வரும்.
//அதே படத்தில் ‘சுத்துது சுத்துது’ பாடலில் ஹரிஹரன் புல்லாங்குழலோடே சேர்ந்து பாடும் ஆலாவைப் பாடிப் பாருங்கள். க்ரேட்!
//
இதை நான் என்னுடைய தம்பியின் டைரிக் குறிப்புகள்ல எழுதனும்னு நினைச்சேன்
// கார்க்கி said...
சகா, அந்த பையன் இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனையும், அரபிக்கடலோரம் பாடியதையும் யூட்ய்ப்பில் பாருங்கள்.. கலக்கறான்.. பயமே இல்லை அவனுக்கு..
வேட்டைக்காரன் பாட்டு, பசங்க பாட ஆரம்பிச்சாடாங்க.. :))))
//
என்னைய மாதிரி சின்னபசங்கதான் இப்பல்லாம் பாட்டுல கலக்குறாங்க :)
//வடகரை வேலன் said...
கார்க்கி,
இந்தமாதிரி சிலாகிச்சுச் சொன்னா சுட்டி குடுக்கனும்//
அண்ணாச்சி, இந்தாங்க
http://www.youtube.com/watch?v=h7G83lqhiEA
http://www.youtube.com/watch?v=60KfN7Gxfg4&feature=related
//என்னைய மாதிரி சின்னபசங்கதான் இப்பல்லாம் பாட்டுல கலக்குறாங்க//
அப்துல்லாண்ணே, ”மாதிரி” சின்ன ப்சங்க இல்ல. அவங்க எல்லாம் உண்மையிலே சின்ன பசங்க..
இங்க பரிசல்னு ஒருத்தர் அவியல் சமைப்பாரே அவரை உங்களுக்கு தெரியுமா :) ?
Works now!
nice post. as usual.
:-)
நீங்க தினமலர், தினத்தந்தி ரெண்டுமே படிப்பீங்களா பரிசல்? நலம் உண்டாகட்டும் :-)
அந்த சின்ன பையனோட attitude was impressive. ஆனா பல விசயங்களை complete பண்ணாம jump பண்ணினமாதிரி இருந்தது(வயசு?).
இசையை பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது. தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்களேன்?
//திரைத்துறையில் ‘ரொம்ப ஜாலியான மனுஷங்கப்பா’ என்று நான் வியந்து பார்ப்பது ஜெயராமையும், மனோவையும்.//
True.
பரிசல்
அவியல் சுவை.
நானும் பேப்பர்ல வச்சு பஜ்ஜி தின்னுட்டு தொடச்சிட்டு போறவந்தான், ஆனா இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் லஞ்சத்தை சகிச்சிக்கிட்டு / கொடுத்துகிட்டு இருக்கப்போறோம்??
லஞ்சம் + ஜாதி இல்லாத இந்தியா எவ்வளவு வலிமையா இருக்கும் தெரியுமா?? இப்போ வலியா இருக்கு..
எது எப்படி போனா நமக்கு என்ன, நாம ஏர்டெல் சூப்பர் சிங்கர் பாத்துட்டு போவோம் (சத்தியமா நான் உங்கள குத்தம் சொல்ல வர்ல - நானும் தெனமும் ஆன்லைன்ல பாக்கறேன், எல்லாம் ஒரு ஆதங்கம் தான்)
ஏதாவது பண்ணனும் பாஸ்...
(இப்படி புலம்புவதை தவிர)
அப்புறம் அண்ணாச்சி, techsatish.net & isaitamil.net சைட்ல எல்லா ப்ரொக்ராம்களும் பாக்கலாம்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
குமுதம் , விகடன்லாம் போரடிக்க ஆரம்பிச்சாச்சு கே.கே.
இன்னும் கொஞ்சம் பெட்டரா இருந்தா நல்லாருக்கும்.
zee தமிழ் சரிகமபா வில ஒரு பையன் அருமையாய் பாடுகிறான் இன்று மாலை.. கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் பாடலை பாடினான் அற்புதம். அவியல் வழக்கம் போல..
தினதந்தி , தினமலர் ரெண்டுமே படிக்கிறதில்லை அதனால பிரச்சனை இல்லை.
நன்றி பரிசல், நன்றி கார்க்கி, நன்றி அண்ணாச்சி
பேப்பரைக் கிழித்து பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு போய்க்கிட்டே இருக்கலாம்!
இதிலிருக்கும் 'நுண்ண்ண்ணரசியலை' நினைத்து பத்துக்குப்பத்து அறையில் உருண்டு, உருண்டு சிரிக்கிறேன்.
நீங்களும் என்னை மாதிரி தானா
மொக்கை பாட்டெல்லாம் கேட்க முடியாது
filter ஆன பின்னாடி தான் கேட்கிற வழக்கம்
வெள்ளி சனி இரவு 10 மணிக்கு ZEE TV பாருங்க
திறமைகளின் குவியலை அங்கே பார்க்கலாம் ஒரு சின்ன பையன் பாடி கொண்டிருக்கும் போதே சுண்டு விரலை காட்டி mike ஐ judge இடமே கொடுத்து விட்டு ஓடி வேலையை முடித்து வந்து பாட்டை தொடர்ந்தது அழகின் உச்சம் கண்டிப்பாக பாருங்கள் ஹிந்தி தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை
raittu :))
என் பிளாக்யை வந்து பாருங்க
I have been watching airtel super singer junior 2 as well and I think that this little guy called Srikanth, who sang "munnal munnal vada" from Azhagiya Thamizh Magan is being forced to misuse his voice too much by his parents. Every song that he has sung in this show, he has always screamed a lot straining his voice too much I feel. I am not sure if this is just a problem with me that I feel this way or are there any more that feel the same way. Of course the judges seem to love his performance, but I am worried that such an encouragement to strain his voice is going to affect his voice quality in the long run. What does everyone else think?
அவியல் அறுவை, மன்னிக்கவும் அருமை
Post a Comment