Saturday, September 5, 2009

நினைத்தாலே இனிக்கும் – விமர்சனம்



னது கல்லூரி நண்பன் சக்தியின் தந்தை பாக்யராஜ் வைக்கும் கெட்-டுகதருக்காக எட்டு வருடங்களுக்குப் பிறகு தன் கல்லூரி நண்பர்களைக் காண மும்பையிலிருந்து வருகிறார் பிருத்விராஜ். வரும்போதே ஃப்ளாஷ்பேக்கில் தனக்கும் ப்ரியாமணிக்குமான காதல், கார்த்திக்குக்கும் தனக்குமான தீராப்பகை, எல்லாருக்கும் நண்பனான சக்தி என்று தன் கல்லூரிக் காலத்தை நினைவுகூர்கிறார். கெட்-டுகெதருக்கு வந்த இடத்தில் ப்ரிதிவிராஜைக் கொல்ல முயற்சி நடக்கிறது. சக்தியின் தந்தையாக வரும் பாக்யராஜ் ஒவ்வொருவரிடமாகப் பேச, கொலை செய்ய முயற்சித்தது யாரென்று தெரிகிறது.

முடிவு வழக்கம்போல சுபம்.

சமீபமாகவே காய்ந்துபோய்க் கிடக்கிற ரசிக உள்ளங்களுக்கு கொஞ்சமும் ஏமாற்றம் தராத படம். ஃப்ளாஷ்பேக் ஆரம்பிக்கும்போதே ஜிவ்வென்று டேக் ஆஃப் ஆகிவிடுகிறது படம். அங்கங்கே வரும் ஃப்ளாஷ்பேக்கை, ஒவ்வொருவர் கோணத்தில் சொல்லியிருக்கும் விதமும் அருமை.



படம் முழுவதும் வியாபித்து நடித்திருக்கிறார் ப்ரித்விராஜ். ஆனால் கல்லூரி மாணவர் என்பதைக் கொஞ்சம் ஏற்க மறுக்கிறது. ப்ரொஃபசர் கேரக்டருக்கு சரியாக இருப்பார். ப்ரியாமணிக்கும் சொல்லிக் கொள்ளும்படியான படம். கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறார். நடிக்கவும் செய்கிறார். சக்திக்கும் நல்ல கேரக்டர்.


பாலு

பாலு கேரக்டரில் நடித்திருக்கும் இவர் யாரென்று கேபிள்சங்கர்தான் சொல்ல வேண்டும். வழக்கமாய் ஸ்ரீமன் செய்யும் கேரக்டர். கொஞ்சமும் மிகைப் படுத்தாத இயல்பான நடிப்பு. நல்ல எதிர்காலம் இருக்கிறது.

கார்த்திக், லொள்ளுசபா ஜீவா(ஒடம்பைக் குறைங்க சாமி!), பாக்யராஜ், இளவரசு, மனோபாலா, ஷாலி கேரக்டரில் வரும் பெண் என்று எல்லாருக்கும் அருமையான ஸ்கோப் உள்ள படம்.

படத்தில் ப்ளஸ் பாய்ண்ட் கேமரா. பாலசுப்ரமணியெம்!



முதல் பாடலிலேயே (நண்பனைப் பார்த்த தேதி மட்டும்) யாருய்யா கேமரா மேன் என்று கேட்க வைத்துவிடுகிறார். எல்லா காட்சிகளிலும் கண்ணுக்குக் குளிர்ச்சியான டோன். அழகாய்ப் பூத்ததே பாடலும், படமாக்கிய விதமும் டாப்!

பாடல்கள் கேட்டுச் சலிக்காததால் உட்கார வைத்துவிடுகிறது. என் பேரு உல்லாவும், செக்ஸி லேடியும் சன் டிவிக்காரர்களின் உபயத்தால் மகா மெகா ஹிட்டாகப் போவது உறுதி.

கடைசி காட்சியில் பாக்யராஜ் தன் வழக்கமான கை ஆட்டி கை ஆட்டிப் பேசும்போது தியேட்டரில் சிரிக்கிறார்கள். முடிவு சினிமாத்தனமானதுதான் என்றாலும், வேறு வழியில்லை. நிச்சயமாக பாக்யராஜுக்கு, ரொம்ப நாளைக்குப் பிறகு நிறைவுதரும் படம்.

வசனம் ஓரிரு இடங்களில் க்ளாப்ஸை அள்ளுகிறது. முக்கியமாக கால்பந்துப் போட்டியில் பாக்யராஜ், சக்தி-ப்ரித்விராஜைப் பார்த்துச் சொல்லும் டயலாக்!

நிச்சயமாக ஹிட்டாகக் கூடிய அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிற படம் - நினைத்தாலே இனிக்கும்.


பி.கு: கேபிள் சங்கருக்கு இன்னொரு கேள்வி: செக்ஸி லேடி பாடலில் வரும் அம்மிணி யாருங்க??? (ஹி.. ஹி... ஹி..)


.



23 comments:

Cable சங்கர் said...

athaithaan தேடிட்டிருக்கேன்.. சீக்கிரம் சொல்லிர்றேன்.:)

தராசு said...

//சமீபமாகவே காய்ந்துபோய்க் கிடக்கிற ரசிக உள்ளங்களுக்கு கொஞ்சமும் ஏமாற்றம் தராத படம்.//

ஹலோ, யாரு சொன்னது, காஞ்சு போய் கிடக்கறோம்னு, பொக்கொஷம், கந்தசாமின்னு இன்னும் எத்தனையோ படங்கள பார்த்து நாங்கெல்லாம் குஜாலாத்தான் இருக்கோம்,

நீங்களா எதாவது முடிவு கட்டிற்ரதா???

விமர்சனம் எழுதுய்யான்னா, கேபிள் அண்ணன்னுக்கு இவ்வளவு வேலை வெக்கறீங்களே, பாவம் அந்த பச்ச மண்ணு எத்தனை வேலையத்தான் செய்யும்.

Cable சங்கர் said...

அந்த முஸ்லிம் பெண் நடிகை பெயர் அனுஜா ஐயர்.. சிவி என்கிற படத்தின் கதாநாயகி பேயாய் நடித்தவர்..

பையன் பேரு கிடைச்சவுடனே சொல்றேன்

/விமர்சனம் எழுதுய்யான்னா, கேபிள் அண்ணன்னுக்கு இவ்வளவு வேலை வெக்கறீங்களே, பாவம் அந்த பச்ச மண்ணு எத்தனை வேலையத்தான் செய்யும்.
//

தராசண்ணே.. நீங்கதான்னே சரி.. இதுல போன் பண்ணி வேற ....

உண்மைத்தமிழன் said...

இன்னிக்கு பார்க்கப் போறேன். பார்த்துட்டு சொல்றேன்..!

ஜெட்லி... said...

அந்த பாலு கேரக்டர் பெயர் சஞ்சய், இவர் ஏற்கனவே
தரகு என்ற படத்தில் நடித்து இருக்கிறார்....
கரெக்ட்ஆ என்று கேபிள் அண்ணன் தான் சொல்ல வேண்டும்.

ஜெட்லி... said...

அந்த பாலு கேரக்டர் பெயர் சஞ்சய், இவர் ஏற்கனவே
தரகு என்ற படத்தில் நடித்து இருக்கிறார்....
கரெக்ட்ஆ என்று கேபிள் அண்ணன் தான் சொல்ல வேண்டும்.

எம்.எம்.அப்துல்லா said...

//சிவி என்கிற படத்தின் கதாநாயகி பேயாய் நடித்தவர் //

ஓ..மேக்கப் போடாம நடிச்சாரா??

Venkatesh Kumaravel said...

செக்ஸி லேடி 50 செண்ட் பாடல் ஒன்றிலிருந்து சுட்டது.

படம் மலையாள ரீமேக் தானே? டிவிடி ரிப் வரட்டும். ஹிஹி.

Eswari said...

படம் பார்க்க ஆவலா இருக்கேன். தீபாவளிக்கு சன் TV la போட்டுருவாங்களா?

Mahesh said...

அண்ணன் அப்துல்லாவின் பாட்டைப் பாராட்டி ஒரு வரி எழுதாததால் வெளிநடப்பு செய்கிறேன்....ஹூம்....

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

thamizhparavai said...

பாஸிட்டிவான விமர்சனம்.. எதிர்பார்த்த படம் .. பார்க்கலாம்...

சி.வேல் said...

வணக்கம் பரிசல்

சன் டிவியை பகைத்துகொள்ள விரும்பவில்லை தானே

குப்பன்.யாஹூ said...

Yout tube comments for sexy lady song:

this song looks exactly like HINDI MOVIE RACE "RACE SAASNKI" SONG..in which the backgrounds n evry actns r exactly lik saif n bipasha basu... copy cat.

catchy part of the song from 50 Cent in da club...don't know why Vijay Antony has to do this.

http://www.youtube.com/watch?v=PrKvrpYFAsg

மங்களூர் சிவா said...

//சமீபமாகவே காய்ந்துபோய்க் கிடக்கிற ரசிக உள்ளங்களுக்கு கொஞ்சமும் ஏமாற்றம் தராத படம்.//

சந்தோஷம்.

Unknown said...

///படம் மலையாள ரீமேக் தானே? டிவிடி ரிப் வரட்டும். ஹிஹி///

ஏய் வெங்கி.. அப்ப நீ நம்ம கட்சியா???

ஊர்சுற்றி said...

//நிச்சயமாக ஹிட்டாகக் கூடிய அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிற படம் -
//

எனக்கு அப்படித் தோணலீங்க. கதாப்பாத்திரங்களின் நட்பு மற்றும் அவர்களுக்கிடையேயான உரையாடல் சரியான விதத்தில் முதல்பாதியில் சொல்லப்படாததால், கதையோடு ஒன்ற முடியவில்லை.

Thamira said...

எப்பிடிய்யா முதல் நாளே படம் பாக்குறீங்க.. ஊட்ல ரொம்ப ஃப்ரீ போல.!

இங்கே டிவியில மொக்கபடம் கூட பாக்கவுடமாட்றாங்கப்பா..

Kumky said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

இன்னிக்கு பார்க்கப் போறேன். பார்த்துட்டு சொல்றேன்..!

போங்க கே.கே. நான் அங்க போய் படத்தையே படிச்சுடறேன்.

Kumky said...

சன் டி வி போடற 24மணி நேர விளம்பர மிரட்டலால படம் பார்க்கின்ற ஆசையே போய்விடுகிறதே....

A N A N T H E N said...

கட்டுரை படிச்சதும் படம் பார்க்க தோணுதுதான் ஆனாலும் தியேட்டர் போகிற ஐடியா இல்ல... என் பேரு முல்லா பாட்டு பத்தி சொல்லலையே? பாட்டு கேட்க நல்லாருக்கு, வீடியோ எப்படி?

Prabhu said...

நெகடிவ் ரிவியூஸ் ஜாஸ்தியா இருக்கே!

உண்மையா சொல்லுங்க, ப்ரியாமனி ஸ்டூடண்ட் மாதிரியா இருக்காங்க! எங்க காலேஜ் புரொபசர் மாதிரி இருக்காங்க!

விக்னேஷ்வரி said...

பார்த்திடுவோம்.