Monday, September 7, 2009

பாலுமாமா

“கிருஷ்ணகுமார்.. ஒன்னப் பாக்க உங்க மாமா வந்திருக்காரு” – என் க்ளாஸ்மாஸ்டர் என்னை அழைக்கும்போதே எனக்கு கால்கள் தந்தி அடித்தது.

அது தெரிந்திருக்குமோ..

போய்ப் பார்த்தேன். பாலுமாமா நின்றிருந்தார். என்னைப் பார்த்ததும் தோளில் கைபோட்டு, ‘ஏண்டா இப்படிப் பண்ணின?’ என்று கேட்டார். நான் மௌனமாய் தலைகுனிந்தேன்.

விஷயம் இதுதான்....

அதற்கு முன்தினம் அவர் சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாய் எடுத்து, நாலைந்து காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கி, படித்து அதை என் புத்தகங்கள் வைக்கும் சிறிய பெட்டியொன்றில் மறைத்து வைத்திருந்தேன். எப்படியோ அந்த காமிக்ஸ் புத்தகங்கள் இவர் கண்ணில் பட்டிருக்கிறது. உடனே ஒன் ப்ளஸ் ஒன் டூ என கணக்குப் போட்டு வந்து பிடித்துவிட்டார்.

ஆறாவது படிக்கும்போது இது நடந்ததா, எட்டாவது படிக்கும்போதா என்று சிறு குழப்பம் இந்த சம்பவத்தை ஃப்ளாஷ்பேக்கும்போது வந்துபோகிறது. ஆம். இது கதையல்ல. நிஜம்.

அன்றைக்கு என்னை கன்னாபின்னாவென்று திட்டி அறிவுரையெல்லாம் சொல்லவில்லை அவர். தோள்மீது கைபோட்டபடி, ‘என்கிட்ட சொன்னா வாங்கித்தரமாட்டானேடா?’ என்றுதான் கேட்டார். (அந்தப் புத்தகங்களை என் அப்பா கடைசிவரை தனது ட்ரங்க் பெட்டியொன்றில் வைத்திருந்தார். இப்போதும் இருக்குமென நினைக்கிறேன். அவர் எப்போது பெட்டியைத் திறந்து எதையாவது தேட, அந்தப் புத்தகங்களை ஓரமெடுத்து வைக்கையிலும் எனக்கு உறுத்தும்)

பாலுமாமா என் அன்னையின் அண்ணன். ஸ்டேட்பாங்கில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் பேரும் என் அப்பா பேரும் பாலசுப்ரமணியன்தான். இனிஷியல்கூட K.R.தான் இருவருக்கும்! என் அப்பா லேட் மேரேஜ் என்பதால் மாமாவுடன் நான் போகும்போது அவரிடம் ‘இது உங்க பையனா’ என்று கேட்பார்கள். கூட்டுக் குடும்பத்தில் வசித்ததால், என் மாமாவுடன்தான் அதிக நேரமிருப்பேன்.

ஸ்டேட்பாங்கில் பணிபுரிந்து கொண்டிருந்தார். நல்ல கேரம் ப்ளேயர். என்னையும் பல சமயம் வங்கிக்கு அழைத்துச் சென்று அங்கே இருக்கும் போர்டில் விளையாடச் சொல்லிக்கொடுப்பார். எனக்கு கேரம் மீது ஆர்வம் வரவும், ஓரளவு நன்றாக விளையாடுவதற்கும் அவர்தான் காரணம். காலையில் குளித்ததும் சந்தனப் பொட்டும், குங்குமும் வைத்துக் கொள்வார். அவரைப் பார்த்துதான் சந்தனம் வைக்கும் பழக்கம் எனக்கு வந்தது என்பதை இதுவரை பலரிடமும் சொல்லியதுண்டு.

கோயில் குளங்களுக்கு தவறாமல் செய்வார். யாருக்கும் எந்தத் துன்பமும் தர விரும்பமாட்டார். அதிர்ந்து பேசமாட்டார். இரண்டு மூன்று மாதங்களாக கால் வலியாலும், சரியாக சாப்பிட முடியாமலும் அவதிப்பட்டு வந்தார்.

கார் வாங்கிவிட்டேன் என்ற சந்தோஷச் செய்தியை அவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், அவரை உட்கார வைத்து ஒரு ரவுண்டு வரலாமென்றும் ரொம்பவும் ஆசைப்பட்டு ஊருக்குப் (உடுமலைப்பேட்டை) போனேன். என் வீட்டுக்குச் சென்று எல்லாருமாய்க் கிளம்பும்போது என் மாமா மகனிடமிருந்து மாமாவை கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அட்மிட் செய்திருப்பதாகச் செய்திவந்தது. 'ரொம்ப முடியாம இருக்கார்டா.. யாரைப் பார்த்தாலும் அழறாரு’ என்றார் அம்மா. எனக்கு அவரை அந்தக் கோலத்தில் பார்க்கும் திராணி இருக்கவில்லை. ஆகவே போகவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தேறிவருகிறார் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள், திடீரென்று வெள்ளி இரவு அவர் இறந்துவிட்டார் என்றார்கள்.

செய்தியைக் கேட்ட சிலநிமிடங்களுக்கு மௌனமானேன். சனி காலை ஊருக்குப் போனபோது உள்ளே கிடத்தியிருந்த அவருடலைப் பார்க்கச் செல்லத் தோன்றவேயில்லை. முற்றத்தில் அமர்ந்து ஆகவேண்டிய வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன்.

‘ஆஸ்பத்திரில கட்டின வேட்டியை கழட்டி, இதைக் கட்டிவிடுங்க’ என்று யாரோ என்னிடம் புது வேட்டியைத் திணித்தபோது உள்ளே போனேன்.’

“வாடா.. குமார். கொழந்தைக எங்க” என்று எப்போதும் கேட்கும் பாலுமாமா கண்மூடிப் படுத்திருந்தார். ஒரே செகண்ட் நின்று பார்த்துவிட்டு, நானும் இன்னிருவரும் வேட்டியை மாற்றிவிட்டோம். விபூதியைப் பூசிவிட்டோம். ‘மாமா எப்பவுமே சந்தனமும், குங்குமும் வைப்பாரு. வெச்சுவிடுடா’ என்றார்கள். சந்தனம் வைக்கும்போது மட்டும் ஒருமாதிரி இருந்தது. வைத்துவிட்டேன்.

பூஜைகள் எல்லாம் முடித்து ஆம்புலன்ஸில் ஏற்றி, எரியூட்டிவிட்டு வந்தோம்.

இரண்டு நாட்களாகிவிட்டது. இதுவரை ஏனோ அழத் தோன்றவில்லை. அழுகை வரவுமில்லை.

யாரையும் அழவைத்துப் பார்க்காத மனுஷன் அவர். அவருக்காக அழாததும் அவருக்காகத்தானே.

மாமா, ஐ லவ் யூ.. ஐ மிஸ் யூ. உங்களுக்கு என் அஞ்சலிகள்.

:-(


.

27 comments:

யுவகிருஷ்ணா said...

:-(

பாலு மாமாவுக்கு எனது அஞ்சலிகள்!

சங்கரராம் said...

எனது அஞ்சலிகள்!

Cable சங்கர் said...

:( பாலுமாமா மறையவில்லை உங்களில் இருக்கிறார்.

சி.வேல் said...

.........................
ம் ........

Unknown said...

:(

அப்பாவி முரு said...

நல்ல ஞாபகங்களை விதைத்துத் தானே போயுள்ளார்.

அழத்தேவையில்லை...

எப்போதும் உடனிருப்பார், ஞாபகங்களாக.

நாஞ்சில் நாதம் said...

அவர் உங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்துள்ளார்

பாலு மாமாவுக்கு எனது அஞ்சலிகள்!

நாடோடிப் பையன் said...

Sorry to hear about your uncle Balu.

I am sure that he did not remember about your midsadventure and is proud of your affection and accomplishments.

Unknown said...

:((

Vinitha said...

பாலு மாமாவிற்கு எனது அஞ்சலிகள்!

ஸ்வாமி ஓம்கார் said...

புனரபி மரணம் , புனரபி ஜனனம், புனரபி ஜனனீ ஜடரே சயனம்...!

-ஆதி சங்கரர்.

கார்க்கிபவா said...

:(((

Thamira said...

விரைந்து ஆறுதல் பெறுங்கள் பரிசல்.!

☼ வெயிலான் said...

:( ஆழ்ந்த இரங்கல்கள்.

இளவட்டம் said...

ஆழ்ந்த அஞ்சலிகள்.....

SurveySan said...

hm! :(

Anonymous said...

எல்லொரது பால்யமும் இது போன்ற நேசமிக்கவர்களால் ஆளப்பட்டிருக்கிறது.

அவருக்கென் அஞ்சலியும் உனக்கென் ஆறுதலும்.

Mahesh said...

பாலு மாமா என்றாலே ஒயிட் & ஒயிட், சந்தன - குங்குமப் பொட்டு என்று மனதில் பதிவாகி இருக்கிறது....

ஸ்டேட் பாங்கில் அவர் மட்டும் தனித்து தெரிவார்....

நேற்று என் அப்பாவிடமும் இந்த துக்க செய்தியைச் சொன்னபோது ரொம்பவே வருத்தப்பட்டார்.

அன்னாரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

தராசு said...

ஆழ்ந்த அனுதாபங்கள் தல.

anujanya said...

அஞ்சலிகள் :(

Truth said...

பாலு மாமவுக்கு எனது அஞ்சலிகள்!.

:(

Unknown said...

:-( என் மாமாவின் பெயரும் பாலு தான். அவங்களும் இப்போ இல்லை. பாலு மாமாவுக்கு என் அஞ்சலிகள்.

iniyavan said...

மாமாவிற்கு என் அஞ்சலிகள் பரிசல்.

சிவக்குமரன் said...

:(

நிலாமதி said...

பாலுமாமவுக்கு என் அஞ்சலிகள். அவரது வழிகாட்டல் என்றும் உங்களில் அழியாது இருக்கும் . உள்ளத்தை தொட்ட கதை. நட்புடன் நிலாமதி

சூர்யா said...

எனது அஞ்சலிகள்!

Kumky said...

பாலு மாமாவுக்கு எனது அஞ்சலிகள்..