![](http://2.bp.blogspot.com/_3BA7KTgeENE/Sqon5fnwmkI/AAAAAAAAAyI/Vt6NBDutPFU/s400/questionsandanswers.jpg)
நான் மிக கடுமையான பணிநெருக்கடியில் இருக்கிறேன். சூழல் காரணமாக அலுவலகத்தில் வேறு சில பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டிருப்பதால் அழைக்கும் நண்பர்களிடத்தில் முன்பு போல கதைக்க முடிவதில்லை. சில சமயம் பேசிக் கொண்டிருக்கும்போதே, வேறு வேலைகளையும் செய்வதால் அவர்களை உதாசீனப்படுத்துவதாய் அழைக்கும் நண்பர்கள் எண்ணும் நிலையை நானே உருவாக்கிக் கொள்கிறேன்.
சில நண்பர்கள் ஒரு சில பிரச்சினைகளின் ஆலோசனைக்காக (நம்புங்கப்பா) அழைக்கையில் மட்டும் சில நிமிடங்கள் பேச முடிகிறது. மற்றபடி வழக்கமான குசல விசாரிப்புகள், ஹாய் ஹலோக்களுக்கு நேரமின்றிப் போகிறது.
வேலைப்பளுவின் காரணமாக மனது எழுத எண்ணுவதை எழுத்தில் கொண்டு வருவதில் தடங்கல் ஏற்படுகிறது. அதனால் ‘ஏண்டா இப்படி எழுதிருக்க' என்று என்னை நானும், என்னை மற்றவர்களும் கேட்கும் நிலை வ்ருகிறது. அதன் காரணமாக ஏதாவது எழுதத் தோன்றினால் தோன்றுவதை எழுதிமட்டும் வைத்துக் கொண்டு, எப்போதாவது முயலும்போது திருத்தி வெளியிடுவதற்காக கிடப்பில் வைத்திருக்கிறேன். இருந்தாலும் இருப்பைக் காட்டிக் கொள்ள எப்போதாவது எதையாவது எப்படியிருந்தாலும் சரி என்று பதிவிடவும் செய்கிறேன்.
ஒரு காலத்தில் ‘எப்பப் பார்த்தாலும் செல்ஃபோன்ல நண்பர்களோடு பேச்சா... குறைச்சுக்க' என்று சொல்லப்பட்ட நான், ஏன் கூப்பிடறதே இல்ல என்று கேள்விக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறேன்.
இதற்கிடையில் அழைக்காத நண்பர்களும், என்னால் அழைக்கப் படாத நண்பர்களுக்கும் இடையில் ஒரு வசந்தி... ச்சே.. வதந்தி உலவுவதாய் உறுதிப் படுத்தப் படாத வட்டாரங்களிலிருந்து தகவல் வருகிறது. அதாவது அவர்களைப் பற்றி தவறானதாக என்னிடம் யாரோ எதுவோ சொல்லிவிட்டதாலும், அதை நான் நம்பிவிட்டதாலும் அவர்கள் மீது கோவமும், வருத்தமும் இருப்பதால்தான் நான் அழைப்பதில்லை என்ற வதந்திதான் அது.
அவர்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்...
அப்படியெதுவுமே இல்லை. யாரும் யாரைப்பற்றியும் எதுவும் சொல்லவில்லை. அப்படியே சொன்னாலும் அதை நம்பிவிடவும் நான் தயாரில்லை. எதுவானாலும் அழைத்துப் பேசி சரி செய்து கொள்வேன். அன்பும், நட்பையும்தவிர வேறெதுமில்லாத உலகில் அவையிரண்டையும் எதன் காரணமாகவும் இழக்க நான் தயாரில்லை.
இப்போதைக்கு இவ்வளவுதான்!
பி.கு. 1: ஒரு நண்பருக்கு தனிப்பட்ட முறையில் சொல்ல நினைத்தது.. அவரிடம் இருந்த கேள்வி, பிறரிடமுமிருக்குமென்பதால் விளக்கத்தை பொதுவில் வைக்க வேண்டியதாயிற்று.
பி.கு. 2: சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் புரிந்து கொண்டு ‘போடா மச்சான்.. விடு..' என்றுவிட்டுப் போகவும். மற்றவர்கள் புன்னகையோடு கடந்துவிடலாம்!
.
39 comments:
போடா மச்சான் விடு
இதெல்லாம் ரொம்ப ஓவரு..
இதென்ன கலாட்டா? :-)
ஜூப்பர் பதிவு
புல்லரிக்க வச்சீட்டீன்கோ
மழைகாலம் ஆரம்பிக்கும் முன்னேரே பரிசலுக்கு வேலை அதிகமோ.....
இடையில் ஒரு வசந்தி... ச்சே.. வதந்தி உலவுவதாய் உறுதிப் படுத்தப் படாத வட்டாரங்களிலிருந்து தகவல் வருகிறது.
///////////
இதுக்கு பெயர் தான் சுண்டலா... ச்சே.. கிண்டலா
போடா மச்சான் விடு
// அவர்களைப் பற்றி தவறானதாக என்னிடம் யாரோ எதுவோ சொல்லிவிட்டதாலும், அதை நான் நம்பிவிட்டதாலும் //
அப்போ நான் சொன்னதை நீங்க நம்பலை
இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து
http://www.srilankacampaign.org/form.htm
அல்லது
http://www.srilankacampaign.org/takeaction.htm
என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!
ம் !!!
!@#$%!#@$%$^&^**&^%$#@!!@##$%^&^%$#@!!@#$%^&**&^%$#@!
அட, அதாங்க புன்னகையோடு கடந்து போகிறேன்.
நான் போன் பண்ணும் போது மட்டும் எப்படி 40-45 நிமிஷம் பேச முடிஞ்சுது கிருஷ்ணா?
அப்பாடா நல்லா பத்த வெச்சாச்சு, இன்னிக்கு சாப்பாடு நல்லா எறங்கும்...
:)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
பக்கத்த நிரப்பருதுன்னா இதுதானோ
பக்கத்த நிரப்பருதுன்னா இதுதானோ
!@#$%!#@$%$^&^**&^%$#@!!@##$%^&^%$#@!!@#$%^&**&^%$#@!
ஙே ஙே ஙே ஙே ஙே ஙே
ஒரு எளவும் புரியமாட்டேங்குது போங்க :)
திருப்பூர் தொழில் சிரமம் புரிந்தவன் என்கிற முறையில் பரிசலை பலமாக ஆதரிக்கிறேன்:)
சிரமம் குறைய வாழ்த்துகிறேன்
நோக்கியாவே உங்க பழைய போனை ஆராய்ச்சிக்கு எடுத்துட்டுப் போயிட்டதா தகவல்.
வதந்தீ அல்ல........
!!!!!!????
போடா போடா மச்சான் மச்சான் விடு விடு !
U know better than me but still a friendly advise is:
spend time on blog and chat (may be 15 to 30mins) especially when you have stress and pressure in the work. These blog and chats will reduce/postpone the work related stress level little bit.
☼ வெயிலான் said...
நோக்கியாவே உங்க பழைய போனை ஆராய்ச்சிக்கு எடுத்துட்டுப் போயிட்டதா தகவல்.
அது......
நெறய பேரு சிக்குவாங்க போல!
;)
பரிசல்..நீங்க கில்லாடிங்க!
:))
:) ங்க!
மரியாதையோடு புன்னகைக்கிறாராம்!
மாப்பிள்ளை விட்ருங்க!
எல்லோரும் பாவம்! திருப்பூர் பிசினஸ் பத்தி கொஞ்சம் விரிவா பத்தி போட்டால் எல்லோருக்கும் புரிஞ்சிடும்!
//மற்றவர்கள் புன்னகையோடு கடந்துவிடலாம்!
//
Done :)
போடா மச்சான் விடு
:) -----> :) ------>
:)
ஹய்யா...கை குடுங்கண்ணே...
முடியல..
:-)
புன்னகையோடு கடந்துவிட்டேன்..
போடா..போடா..போட்டா.. மச்சான்..மச்சான்.. மச்சான்.. விடு.. விடு.. விடு..
:-)
‘போடா மச்சான்.. விடு..'
தல..
உங்களுக்கும் இந்தப் பிரச்சினை இருக்கா..???
.
.
life-ம் கொஞ்சம் ஸ்பீடா தான்
போயிட்டு இருக்கு..!
.
.
.
friends முக்கியம் தான்.
ஆனா அவங்களும் நம்மை புரிஞ்சிக்கணும்..
.
.
anyway
.
.
அனைத்தும் இலகுவாக வாழ்த்துக்கள்.
//எதுவானாலும் அழைத்துப் பேசி சரி செய்து கொள்வேன். //
ஆமா கொஞ்ச நாளா நமிதாவோடு பேசுவது இல்லையாமே நீங்க!, என்ன பிரச்சினை?
(இப்ப எப்படி அழைத்து “பேசி” சரி செய்யுறீங்கன்னு பார்க்கிறேன்)
//சில நண்பர்கள் ஒரு சில பிரச்சினைகளின் ஆலோசனைக்காக (நம்புங்கப்பா) அழைக்கையில் மட்டும் சில நிமிடங்கள் பேச முடிகிறது. //
பாஸ் ரொம்ப நாளா பக்கத்துவூட்டு பிகர் மடியவே மாட்டேங்குது பாஸ் கொஞ்சம் ஆலோசனை சொல்லுங்களேன்!
போடா மச்சான் விடு
கதை அப்படி போகுதா?!
Post a Comment