நேற்றைக்கு என் நண்பன் கார்க்கிக்கு பிறந்தநாள். AM, PM குழப்பத்தால் முந்தினநாள் நள்ளிரவில் ஒலிக்க வேண்டிய அலாரம் நேற்று மதியம்தான் ஒலித்து எனக்கு நினைவூட்டியது.
இரவு திடீரென, கலைஞரும் அவரைச் சுற்றி கவிஞர்கள் அமர்ந்து கவியரங்கம் பாடுவதும் நினைவுக்கு வரவே, படுக்கையிலிருந்து குதிகாலை கீழ்வைத்திறங்கி, அதிகாலை நேரத்தில் அவசர அவசரமாய் என் நண்பனுக்காக எழுதிய கவிதையிது. கவிதையில் உயர்வு நவிற்சி இருக்கலாம். பொருத்தருள்க!
*********************************
எனக்கான விஷயம் எல்லாவற்றையும்
எப்போதுமே தள்ளிப் போடுகிறேன் நான்.
உனக்கான வாழ்த்தையும்
ஒருநாள் தள்ளிப் போட்டது
உன்னையும் நானாய் எண்ணியதால்தானோ?
எனக்கு ஏழுலட்சம் வாசகர்கள்
என்று நான் சும்மா சொல்வதுண்டு. – ஆனால்
உன் ‘ஏழு’வுக்கு லட்சம் வாசகர்கள் என்பதை
ஊரறியும் நண்பா!
ஆம்.. ஆறும் அஞ்சும் உனக்குப் பிடித்தாலும்
எட்டுத் திக்கும் உனைக் கொண்டு சேர்த்ததென்னவோ
‘ஏழு’தானே?
முட்டி முட்டி என்ன எழுத என்று நாங்கள்
யோசித்துக் கொண்டிருக்க – நீ
புட்டிக் கதைகள் எழுதி எங்களை
முந்திக் கொண்டிருக்கிறாய்.
எழுதப் பொருளேதுமின்றி
எனைப் போன்றோர் தவித்திருக்க
எழுதப் பொருளில்லை என்பதே - உனக்கு
எழுதுபொருளாகிவிடுகிறது.
பலர் சொல்லலாம்
உன்னை மொக்கையென்று
நான் சொல்வேன் நீ விடாதே
உன் நம்பிக்கையென்று!
வாரத்தில் ஆறுநாள் ஹைதையில் இருப்பாய்
மீதிநாள் சென்னையில் இருப்பாய்
எல்லா நாளும்
எங்கள் இதயத்தில் இருப்பாய்.
உனக்கு
இணையத்தை கையாளவும் தெரியும்
நண்பர்களின்
இதயத்தைக் களவாடவும் தெரியும்.
இசையென்றால் உனக்கிருக்கும்
ஆர்வம் நானறிவேன்.
நண்பர்களுக்கு எவரிடமிருந்தாவது
வசையென்றால் உனக்கு வரும்
கோவமும் நானறிவேன்.
எனக்கு நாசரை மிகப் பிடிக்கும்
உன்னையும் மிகப் பிடிக்கும்
நாசர் வில்லனாய் தன் பெரிய மூக்கில்
குத்துவாங்கிப் பிரபலமானார்.
நீ உன் பெரிய மூக்கில்
முத்தம் வாங்கிப் பிரபலமானாய்.
ஆதி
கேமராவையெடுக்கும்போதெல்லாம்
உன்னை நினைத்துக் கொள்கிறார்.
நீ நடித்தால் மட்டும்
குறும்படம் வெறும் படமாய் இல்லாமல்
பெரும் படமாய் ஆகும் ரகசியமென்னவோ?
‘ஆடுவது கண்டு விஜயின் ரசிகனானேன்’
என்பாய் நீ.
பல நேரங்களில் நீ
ஆடாமல் இருப்பதால்தான்
உன்னையும் நாங்கள் ரசிக்கிறோம்.
எவரோடும் சண்டைபோடத்
தயங்காதவன் நீ.
ஆனால் உன்னை அடக்கும் ஆயுதம்
அன்பென்பதை ஒரு சிலரே அறிவர்.
நான்
சமீபத்தில் மிகச் சந்தோஷப்பட்டது
கார் வாங்கியதற்குத்தான்.
அதனால்தால்தானே
எப்போதும் என்னோடிருக்கிறது CAR KEY!
.
35 comments:
:)
உன்னையும் நானாய் எண்ணியதால்தானோ? //
அட!!!
எழுதப் பொருளில்லை என்பதே - உனக்கு
எழுதுபொருளாகிவிடுகிறது. //
கரெக்ட்.
உனக்கு
இணையத்தை கையாளவும் தெரியும்
நண்பர்களின்
இதயத்தைக் களவாடவும் தெரியும். //
ஓ...
நீ உன் பெரிய மூக்கில்
முத்தம் வாங்கிப் பிரபலமானாய். //
மூக்குல குடுத்தா முத்தமா என்னும் கார்க்கியின் குறும்பட டயலாக்கை உங்களுக்கு நியாபகப்படுத்த விரும்புகிறேன் :P
அதனால்தால்தானே
எப்போதும் என்னோடிருக்கிறது CAR KEY! //
Nice Finishing.
KALAKKAL KAVITHAI.................... HAPPY BIRTH DAY MY SAKA
சகாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!!!!!
வெரி நைஸ்
கார்க்கிக்கு வாழ்த்துக்கள்!
பரிசல்...நீங்க கார் வாங்கினதுக்கு இரட்டிப்பு வாழ்த்துக்கள்..!
அவர் பாணியிலேயே வார்த்தை விளையாட்டா..?
தூள்!
வார்த்தை விளையாட்டு கலக்கல்.
ஆமா, கவிதை எழுதியிருக்கேன்னு சொல்லீட்டு போக வேண்டியது தான, அதுக்கெதுக்கு
//படுக்கையிலிருந்து குதிகாலை கீழ்வைத்திறங்கி, அதிகாலை நேரத்தில் அவசர அவசரமாய் என் நண்பனுக்காக எழுதிய கவிதையிது.//
இப்பிடி ஒரு பில்டப்பு
\\சமீபத்தில் மிகச் சந்தோஷப்பட்டது
கார் வாங்கியதற்குத்தான்.
அதனால்தால்தானே
எப்போதும் என்னோடிருக்கிறது CAR KEY!\\
காருக்கும் வாழ்த்துக்கள்
CAR KEY - க்கும் வாழ்த்துக்கள்
அட்ராசக்க, அட்ராசக்க,அட்ராசக்க, அட்ட்ட்ர்ர்ர்ர்ர்ராஆஆஆஅ சக்க்கை
வாழ்த்துக்கள்.
நன்றி விக்கி!
நன்றி அத்திரி
நன்றி சகா.
நன்றி சின்ன அம்மணி
@ சுரேகா
நீங்க ‘அவர்’னு சொல்றது எவர்?
@ தராசு
அப்பறம் அதிகாலை, குதிகாலைங்கறத எதுகைமோனையை வேறெங்க பயன்படுத்தறது?
@ நிகழ்காலத்தில்
நன்றி சிவா-ஜி!
@ முரளிகுமார் பத்மநாபன்
என்னாதுக்கு இவ்ளோ அடி...?
@ நர்சிம்
என்னாச்சு?
ஐஸ்.... ஐஸ்...... :)
முடியல... ;))))))))
car key...excellent sir...
அடாடா, உங்க கிட்ட இவ்வளவு திறமையா! அன்னிக்கு வாலி தலைமையில், கலைஞர் பத்தி நீங்களும் பேசி இருக்கணும் :)
அனுஜன்யா
@ வெயிலான்
கார்க்கிக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் என்ன சம்பந்தம்.. அவரை ஏன் இழுக்கிறீர்கள்?
@ ஸ்ரீமதி
முடியலன்னா..?
ஓ... நீங்க தொடரப் போறீங்களா?
@ அமுதா கிருஷ்ணா
நன்றிங்க.
@ அனுஜன்யா
அது தினமும் பாடிகிட்டுதான் இருக்கேன் ஜி!
சரிங்க..
புல்லரிக்குதுங்க!
வாழ்த்துக்கள்
தல 7 வாழ்க வாழ்க
@ பட்டிக்காட்டான்
சரிங்க
@ பப்பு
சொறிங்க...
@ பாண்டி-பரணி
வாழ்க..வாழ்க!! (தலன்னா அவரு கோவிப்பாரேங்க...)
கார் கீ, சூப்பரா முடிச்சிருக்கீங்க.
//எழுதப் பொருளேதுமின்றி
எனைப் போன்றோர் தவித்திருக்க
எழுதப் பொருளில்லை என்பதே - உனக்கு
எழுதுபொருளாகிவிடுகிறது.//
சூப்பர்.
ரூம்போட்டு யோசிச்சீங்களோ?
காருக்கும் வாழ்த்துக்கள்
CAR KEY - க்கும் வாழ்த்துக்கள்
கவிதை நல்லா இருக்கு பரிசல்.
CAR KEY! ??!!
எப்படி பாஸ்.... இப்படி லாம் யோசிக்குறீங்க???!!!!!
கலைஞருக்கு வாலி!.....
கார்க்கிக்கு பரிசல்!.......
நல்லாத் தாங்க இருக்கு!.......
அன்பான நண்பர் திரு பரிசல்,
ஏதோ என்னால முடிஞ்சது, உங்கள மாதிரி வந்து ஒரு ரௌண்டு - ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!
-------------------------------
எனக்கு தெரியாத விடயம் எல்லாவற்றையும்
எப்போதும் எழுதிக்கொண்டே இருப்பேன் நான்
ஒரு நாள் என்னை நீ போட்டுத்தள்ள நினைத்தது
உன்னைப்போல நானும் எழுதியதால்தானே
என்னை ஏசும் வாசகர்கள் சில லட்சம் உண்டு
என்று நான் நிஜமாக சொல்வதுண்டு
உன் ஏசல்களுக்கும் அதில் இருப்பது என்பதை
ஊர் அறியும் நண்பா
ஆம் key board உம் monitor உம் உன்னைப்பிடித்துக்கொண்டாலும்
எட்டு திக்கும் உன்னை கொண்டு சேர்த்ததேன்னவோ
அந்த ஏழு பக்க மொக்கைதானே
keyboard ஐ தட்டி தட்டி என்ன எழுதுவது என்று நாங்கள் யோசிக்க
நீ மட்டும் யோசிக்காமல் கண்டதை எழுதி எங்களை முந்திக்கொண்டாய்
எழுதப்பொருள் இலைஎன்றாலும் கோவி அண்ணன் போல நாங்கள் இல்லாததை எழுத
எழுத பொழுதில்லை என்று சொல்லிக்கொண்டே தினம் நீயும் எழுதி தள்ளினாய்
பலர் உண்மையாக சொனார்கள் உன்னை மொக்கைஎன்று
நான் சொன்னேன் கோவி அண்ணனை பார்த்து கத்துக்கொள் என்று
வாரத்தில் ஆறுநாள் கண்டதையெல்லாம் எழுதுவாய்
மீதி நாள் கண்ணைமூடி எழுதுவாய்
எல்லா நாளும் மொத்தத்தில் எங்கள் உயிரை வாங்குவாய்
உனக்கு இணையத்தை சிதைக்கவும் தெரியும்
நண்பர்களின் பொறுமையை சோதிக்கவும் தெரியும்
Blogging என்றால் உனக்கிருக்கும் ஆர்வம் நானறிவேன்
அதனால் எங்களுக்கு ஏற்ப்படும் mental clogging பற்றியும் நானறிவேன்
எனக்கு எங்க வீட்டு நாய் Ceasar ஐ மிகப்பிடிக்கும்
உன்னையும் மிகப்பிடிக்கும்
Ceaser எங்க தெருக்கோடியில் கல்லடிப்பட்டு பிரபலமானது
நீ கண்டபடி எழுதி சொல்லடி பட்டு பிரபலமானாய்
PC Sriram கேமரா எடுக்கொம்போதேல்லாம்
உன்னை நினைத்துக்கொள்கிறார்
நீ கேமராவின் முன் முதல் ஷட்டில் இருக்கவேண்டும் என்று
திரிஷிடியாக உன்னை வைத்தால் வெறும் படமும் பெரும் படமாக ஆகுமென்று
வாயை திறக்காத விஜயைக்கண்டுதான் அவரின் ரசிகனானேன் என்பாய் நீ
வாய் திறந்தாலே உளராமல் விடமாட்டேன் என்ற உன்னையும் நாங்கள் ரசிக்கிறோம்
எதைப்பற்றி வேண்டுமானாலும் வாய்க்கு வந்ததை எழுத தயங்காதவன் நீ
ஆனால் உன்னை அடக்கும் ஆயுதம் அதைப்போன்ற உளறல்கள் மட்டுமே என்பதை ஒரு சிலரே அறிவார்
நான் சமீபத்தில் மிக சந்தோஷப்பட்டது உன் blog கினை பார்த்துத்தான்
அதனால்தான் எப்போதும் என்னோடிருந்த ஒன்றை தூக்கி எறிந்தேன் - தூக்க மாத்திரை!!!!!
நன்றி
(Just a joke - No hard feelings)
பரிசலண்ணே,
இதை விட சிறப்பாய் யாரும் சகாவை வாழ்த்தமுடியாது...
வாழ்த்துக்கள் உங்களுக்கும், சிறப்பாய் என் சகாவை வாழ்த்தியதற்கு...
பிரபாகர்.
அட! ரசிகர் மன்றம் ஒன்று ஆரம்பிககலாமே!!!:)
OK OK.....எல்லா நண்பர்களும் கோவி அண்ணன் site இற்கு வாங்க.....
உன்னைப்போல் ஒருவன் பகுதி ஒன்று தொடங்கிவிட்டது.....................
கமல்: கோவி அண்ணன்
மோகன்லால்:டோண்டு சார்
லக்ஷுமி : வால்பையன் அண்ணன்
மற்றும் சில அரை டிக்கெட்டுகள்
All are welcome
சற்றும் தனது முயற்சியில் மனம் தளராத விக்ரமாதித்யன்....இப்படி போகிறது கதை.
அப்புறம் கடேசி பாரா மட்டும் கே.கே...நச்.
//பலர் சொல்லலாம்
உன்னை மொக்கையென்று
நான் சொல்வேன் நீ விடாதே
உன் நம்பிக்கையென்று!//
//நான்
சமீபத்தில் மிகச் சந்தோஷப்பட்டது
கார் வாங்கியதற்குத்தான்.
அதனால்தால்தானே
எப்போதும் என்னோடிருக்கிறது CAR KEY!//
சபாஷ்! டி.ராஜேந்தருக்கு ஒரு வாரிசு உருவாகிவிட்டார்!
- கிருபாநந்தினி
///எனக்கான விஷயம் எல்லாவற்றையும்
எப்போதுமே தள்ளிப் போடுகிறேன் நான்.
உனக்கான வாழ்த்தையும்
ஒருநாள் தள்ளிப் போட்டது
உன்னையும் நானாய் எண்ணியதால்தானோ?
///
சமாளிபிக்கேஷன்ஸ்.... ஹா ஹா ஹா
//எனக்கு ஏழுலட்சம் வாசகர்கள்
என்று நான் சும்மா சொல்வதுண்டு.//
ஏழு தப்பில்லை!
ஏழேமுக்காலும் தப்பில்லை!
ஏழ்ரை தான் தப்பு!
Post a Comment