Friday, October 23, 2009

கார்க்கி - 25


கார்க்கி. இளையதளபதியின் இனிய ரசிகன். இணைய தளபதி. என்ன விமர்சனங்களையும் எதிர்கொண்டு எழுதி எழுதி மேற்சென்று கொண்டிருப்பவர்.
இணைய எழுத்தால் நிறைய வாசகர்களைப் பெற்றவர்கள் பலர். இவர் ரசிகர்கள் - குறிப்பாக - ரசிகைகளைப் பெற்றிருக்கிறார். புட்டிக் கதைகள், காக்டெய்ல் இவர் ஸ்பெஷாலிடி. காதல் சம்பந்தப்பட்ட பதிவுகளில் ரசனைக்காரர். கேட்டல் ‘எல்லாம் இன்வால்வ்மெண்ட்தான் சகா’ என்பார். இந்த வாரம் கார்க்கி - 25.


மீபகாலமாக அந்த சிரிப்பு பதிவருக்கு ஃபோன் செய்து குட் நைட் சொன்ன பின்பே தூங்க செல்கிறார். ஹைதையில் ஃபோனும், காதுமாக அலைபவர், சென்னையில் இருந்தால் மட்டும் ஃபோனையே எடுப்பதில்லை.

டம், பொருள் பார்க்காமல் மொக்கை போடுவது கார்க்கியின் வழக்கம். பேசுபவர் எத்தனை கஷ்டத்தில் இருந்தாலும் அவர் சொன்னதுக்கு பதிலாக மொக்கைப் போட்டு பிரச்சினையை இலகுவாக்க பார்ப்பார். பல நேரங்களில் பூமராங் ஆனாலும் விடாமல் செய்வார். இதை மொக்கை என்று இவர் சொல்லிக் கொண்டாலும், ‘அவன் இருந்தா கலகலன்னு இருக்கும்பா’ என்று கார்க்கி இல்லாதபோது நண்பர்கள் சொல்லிக் கொள்வதுண்டு.

ஜினியை மட்டுமே தலைவர் என்று அழைப்பார். விஜயின் தீவிர விசிறி என்றாலும் தலைவன் அல்ல என்பதே கார்க்கியின் ஸ்டேட்மெண்ட். மற்ற பிடித்தவர்கள் லிஸ்ட் பெரியது.ஆனால் பிடிக்காதவர்கள் லிஸ்ட்டில் பிரசாந்த், அஜித், ஸ்ரீகாந்த் என்று ஒரு சிலரே உள்ளார்கள்.

பைக், ஷ்ர்ட், கார் என எதுவானாலும் சிவப்பு மற்றும் அந்த ஷேட் நிறங்களே விரும்புவார். ஆரஞ்சு ஷேடில் மட்டும் 10க்கும் மேற்பட்ட சட்டைகள் வைத்திருக்கிறார். பைக் கூட சிவப்புதான். கார் மட்டும் அம்மாவின் சாய்ஸ் என்பதால் க்ரே நிற i10. ஆரஞ்சு நிறத்தை இவர் ரசிப்பதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய கிசுகிசு இருக்கிறது!

பைக்கில் ஸ்டிக்கரிங் ஒர்க் செய்வது கார்க்கியின் passion. அடிக்கடி மாற்றினாலும் முகப்பு கண்ணாடியில் இருக்கும் கீழ்கண்ட வாசகம் மட்டும் மாறவேயில்லை

K

A

R U L E S

K

I

க்கா மகன் பப்லு என்றால் மட்டும் கார்க்கி அடங்கிவிடுவார். சிறுவயதிலே அம்மா, அப்பா எப்போதும் உடன் இல்லாமல் போனதால் அவன் மீது அளவில்லா பாசம். இப்போதும் கார்க்கி சொல்வதே பப்லுவுக்கு வேதம். அதனாலோ என்னவோ ஏழு வயதிலே மாமாவைப் போல் மொக்கை மன்னன் ஆகிவிட்டான்,

கிரிக்கெட் பைத்தியம் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்வார். எப்போது அழைத்தாலும் கிரிக்கெட் விளையாட மட்டும் நோ சொல்ல மாட்டார். இண்டோர் கேம்ஸில் கேரம், செஸ் விளையாடுவார். கார்ட்ஸும் கார்க்கியின் ஃபேவரிட். இன்னொரு இண்டோர் கேம்... எனக் கேட்டால் ‘வேணாம் சகா எழுதாதீங்க’ என்கிறார்.

ரு முறை வித்யாதர் என்ற அமைப்புக்கு 5000 நன்கொடை தருபவர்களுடன் விஸ்வனாத் ஆனந்த் செஸ் ஆடினார். ஒரே நேரத்தில் 25 பேருடன் அவர் ஆடுவார் என்பதால் குறிப்பிட்ட நேரத்துக்குள் மூவ் செய்து விட வேண்டும். எப்படியோ ஆனந்தின் முக்கிய காய்களை சரிக்கு சமமாக வெட்டி மேட்ச்சை டிரா செய்ததை பெருமையாக சொல்லிக் கொள்வார்.

சிகரெட் பிடிக்கும் பழக்கம் கிடையாது. யாராவது பிடித்தாலும் விலகி விடுவார். நண்பர்கள் வாங்கி வர சொன்னாலும் மறுத்துவிடுவார். ஏனோ சிகரெட் மட்டும் கொடுத்து வைத்திருக்கிறது.

ல்லா நடிகைகளையும் சைட் அடித்தாலும் மூன்றே மூன்று பேர்தான் கார்க்கியின் ஆல்டைம் ஃபேவரிட். நதியா, ஷாலினி, மாளவிகா.

ரொம்ப உரிமை இருக்கும் ஆட்களிடம் மட்டுமே சத்தம் போட்டு பேசுவார். இதனாலே அம்மாவுக்கும் இவருக்கும் அடிக்கடி சண்டை வருவதுண்டு. ‘அவங்க சொன்னா கம்முன்னு போற, நான் சொன்னா மட்டும்தான் இப்படி கத்துவ’ என்று அம்மா சொல்லும்போதெல்லாம் அமைதியானாலும், அடுத்த நாள் மீண்டும் கத்திவிடுவார்.

குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால் கைக்குழந்தைகளை தூக்குவது கார்க்கிக்கு பிடிக்காத ஒன்று. ஏடாகூடமா தூக்கி ஏதாவது ஆகிவிடுமோ என்று பயப்படுவார்.

த்ரியில் தொடங்கி வில்லு வரை விஜயின் எல்லாப் படங்களையும் முதல் நாளே பார்த்திருக்கிறார். சிங்கப்பூரில் இருந்த போதும் இந்தப் பழக்கத்தை விடவில்லை.சென்னை உதயம் தியேட்டர் தான் விஜய்க்கு கோட்டை என்பார்.

லுவலகத்தில் டென்ஷனான சம்யங்களில் யுட்யூபில் வடிவேலு காமெடியை பார்த்து சிரிப்பது கார்க்கியின் வழக்கம்.சமீபத்திய ஃபேவரிட் காட்சி இதோ. மற்ற சமயங்களில் முக்கிய கிரிக்கெட் மேட்ச்களை பார்ப்பார்.

வெளியே தெரியாத இன்னொரு விஷயம் கார்க்கி wrestling ரசிகர். இரவு 12 ஆனாலும் பார்த்துவிட்டுதான் தூங்குவார். undertaker,stone cold, hitman, rock எல்லாம் இவரின் ஆல்டைம் ஃபேவரிட்ஸ். இப்போதைய சாய்ஸ் John cena.

சை என்றால் சோறு தண்ணி வேண்டாம் கார்க்கிக்கு. டீ.ஆர் மகாலிங்கத்தில் தொடங்கி ஸ்ரீகாந்த் தேவா வரை அனைவரது பாடல்களும் கேட்பார். கிடார் கார்க்கியின் ஸ்பெஷல் என்பதால் அதை நிறைய பயன்படுத்தும் ஆட்களுக்கு ரசிகர் ஆகிவிடுவார். பாப் ஆட்களில் மைக்கேல் ஜேக்ஸனும், எல்விஸ் பிரெஸ்லியும் இவரது ஃபேவரிட். ஷகீராவின் இடுப்பும் இவருக்கு பிடித்தமானதே.

ங்கம் அணிவதே பிடிக்காது. அம்மாவின் வற்புறுத்தலால் ஒரே ஒரு செயின் அணிந்திருக்கிறார். செப்புலதான் மோதிரம் போட வேண்டுமென்பார். சொக்கத்தங்கம் வேலைக்காவாதாம். அதனால் செப்பு கலக்க வேண்டுமென்பார்

காதியபத்தியத்தை தீவிரமாக எதிர்ப்பவர் என்றாலும் கோக், KFC, pizzaa என பன்னாட்டு உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவார். ‘வேலை செய்றதே அமெரிக்கா கம்பெனி அப்புறம் எதுக்குடா நான் பேசணும்’ என்று சொல்வார்.

ஜீன்ஸீல் Levis தான் அவரின் சாய்ஸ். சில மாதம் முன் சற்று குண்டான போது ஓரங்கட்டப்பட்ட ஜீன்ஸுகள் மீண்டும் புழக்கத்தில் வந்திருப்பதை எண்ணி மகிழ்கிறார். இன்னும் கொஞ்சம் குறைக்க மீண்டும் டான்ஸ் கிளாஸ் போக முடிவெடுத்துள்ளார்.

காரை விட பைக் ரைடிங்கை விரும்புவார். நேரம் கிடைக்கும் போது, ஹெட்ஃபோனில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேளச்சேரியில் இருந்து பெசண்ட் நகர் பீச்சுக்கு செல்வார். அங்கே ஒரு பியரோடு (நன்றாக படிக்கவும். ‘ய’ - ‘க’ அல்ல!) சில மணி நேரங்களை கடத்திவிட்டு ஒரு லாங் ரைடு போவது கார்க்கிக்கு பிடித்தமான ஒன்று.

நாய்கள் மற்றும் பெட் அனிமல்கள் கார்க்கிக்கு அலர்ஜி. நாய் வளர்ப்பவர்கள் வீட்டுக்கு செல்லவே மாட்டார்.

வீட்டில் கடைசிப் பிள்ளை என்பதால், என்ன சொன்னாலும் நீ சின்னப்பையன் சும்மா இரு என்று மற்றாவர்கள் சொல்வதை வெறுப்பார். முக்கிய முடிவகளில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு.

ன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்கள் என்று யாராவது சொன்னால் கோவப்படுவார். அப்படிப்பட்ட புத்தகங்கள் படிப்பது சுத்த வேஸ்ட் என்பார். இருந்தாலும் Alchemist மட்டும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்பார்.

வைரமுத்துவின் பாடல்களுக்கு இவர் அடிமை. இடையில் அட்டகாசம் படத்தில் உனக்கென்ன பாடலை எழுதிய போது “இவருக்கு ஏன் இந்த சின்னப்பசங்க வேலை” என்று ஒதுக்கினாலும் விடமுடியாமல் போனது. இன்றும் யாராவது வைரமுத்துவை குறைத்து பேசினால் முடிந்தவரை விவாதம் செய்வார்.

லைப்பதிவுகள் எழுத வந்த பின்பு நிறைய நல்ல மாற்றங்கள் தனக்குள்ளே வந்திருப்பதாக நம்புகிறார். எனவே பிளாக் மூலம் தொடர்பு கொள்ளும் அனைவரையும் நெருங்கிய நண்பர்களாகவே வைத்திருக்கிறார். என்ன வேலை இருந்தாலும் மெயில் அனுப்பும் வலையுலக நபர்களுக்கு மட்டும் பதில் அனுப்புவதை முக்கிய வேலையாக வைத்திருக்கிறார். வலைப்பதிவு, வலைப்பதிவாளர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கு என்ன செய்யலாம் என்ற யோசனையிலேயே எப்போதும் இருப்பார்.


*********************

கார்க்கி 25ஐ நான் எழுதியபிறகு பரிசல் 25ஐ எழுதி பரஸ்பர முதுகு சொறிதலை செய்வது வேறு யாராக இருக்கும்? கார்க்கியேதான். பரிசல் - 25 படிக்கத் தவறாதீர்கள்!


.

37 comments:

கார்க்கிபவா said...

ஓ! வாட் எ கோ இன்சிடென்ஸ்

Truth said...

// கார்க்கி said...
ஓ! வாட் எ கோ இன்சிடென்ஸ்

அப்புறம்... :-)

நர்சிம் said...

நடத்துங்க..அல்லது நடக்கட்டும்..அல்லது நடக்குது.

சுவாரஸ்யமான இடுகை பரிசல் ஸார்.

வெண்பூ said...

கொய்யால.. இவங்க ரெண்டு பேரும் அடங்க மாட்டேன்றாங்க..

M.G.ரவிக்குமார்™..., said...

எனக்கு ரொம்பப் பொறாமையா இருக்குங்க!........உங்க ரெண்டு பேருக்குள்ளயும் எவ்வளோ புரிதல்!......கிரேட்!

Unknown said...

சூப்பர்...ரொம்ப நாள் கழிச்சு... ஒரு நல்ல இடுகை... என்னா... நான் படிச்சு ரொம்ப நாள் ஆச்சு..... வாழ்த்துக்கள்...

பொறாமையா இருக்கு....தல...

ஜெனோவா said...

பரிசல், ரொம்ப நாளா அவரோட பதிவுகளை படித்துவருகிறேன். ரொம்ப நல்ல சுவாரஸ்ய தகவல்கள் ,நன்றிங்க !

வாழ்த்துக்கள்

அன்பேசிவம் said...

ஓவ்வ்! வாட் எ கோ இன்சினென்ஸ்! (எனக்கும் நடக்கும்போது ஒருகால் முன்னாடி இருந்தா ஒருகால் பின்னாடி இருக்கு தல). எப்டியெல்லாம் கிளம்புறாய்ங்க...!!!!!

இறக்குவானை நிர்ஷன் said...

சுவையான தகவல்கள்.
சுருக்கமான பரிமாறல்

Unknown said...

ஹ்ம்ம்ம் :))

ப்ரியமுடன் வசந்த் said...

கிருஷ்ணா அண்ணே பேசிவச்சு போட்டதா...

கல கல...

இதுக்கு உடுமலைக்கு வரும்போது ஸ்பெசல் கிஃப்ட் இருக்கு...

யோ வொய்ஸ் (யோகா) said...

நம்ம சகாவுக்கு நல்ல பழக்கம் பல இருக்கு..

அறிவிலி said...

//கார்க்கி
23 October, 2009 1:53 PM ஓ! வாட் எ கோ இன்சிடென்ஸ் //

எழுதியிருக்கற மேட்டடர்லாமும் இதே அளவுக்கு நம்பலாமா?????

Unknown said...

அடா... அடா...அடா...!! இதுல கோப்பெருஞ்சோழர் யாரு... பிசுராந்தையார் யாருன்னே தெரியலப்பா....??? யாருக்காச்சும் தெருஞ்சா கொஞ்சம் சொல்லுங்கப்பா ...???



முடியல.....

☼ வெயிலான் said...

நல்லாருக்கு பரிசல்!

ஆனா, இது கார்க்கி எழுதிக் கொடுத்தது.

ஆங்! எப்படியா?

போன் பண்ணுங்க. சொல்றேன்.

தராசு said...

//என்ன வேலை இருந்தாலும் மெயில் அனுப்பும் வலையுலக நபர்களுக்கு மட்டும் பதில் அனுப்புவதை முக்கிய வேலையாக வைத்திருக்கிறார்.//

உண்மை, உண்மை.

கார்க்கி, வாழ்த்துக்கள்.

Mahesh said...

//இது கார்க்கி எழுதிக் கொடுத்தது//

வெயிலான் முந்திக்கிட்டாரு :)

ஸ்வாமி ஓம்கார் said...

புதுசா வாங்கின காருக்கு 25 கீ-யானு சந்தேகப்பட்டேன்.

நல்ல ரைட் அப்.

நேசமித்ரன் said...

உங்கள் இருவருக்குள்ளும் இழையும் புரிதல் பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி நண்பர்களே

கோபிநாத் said...

\\கார்க்கி said...
ஓ! வாட் எ கோ இன்சிடென்ஸ்
\\

ம்க்கும் முதல் பின்னூட்டம் கூடவா!! ;))

நல்லாயிருக்கு ;)

RAMYA said...

நண்பர்களுக்குள் இருக்கும் புரிதலை உணர்ந்து பிரமித்துப் போனேன் சகோதரா!!

நட்பு என்ற சொல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அந்த நட்பு பாலம் இருக்கிறதே எண்ணிலடங்கா தொலைவுகளுக்கு நம்மை ஆனந்தமாக இழுத்துச் செல்லும் வலிமை மிகுந்தது.

அந்த நட்பு இங்கே கச்சிதமாக அரங்கேறி உள்ளது.

மேலும் உங்கள் நட்பு சிறக்க வாழ்த்துக்கள்!!

RAMYA said...

நண்பர்களுக்குள் இருக்கும் புரிதலை உணர்ந்து பிரமித்துப் போனேன் சகோதரா!!

நட்பு என்ற சொல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அந்த நட்பு பாலம் இருக்கிறதே எண்ணிலடங்கா தொலைவுகளுக்கு நம்மை ஆனந்தமாக இழுத்துச் செல்லும் வலிமை மிகுந்தது.

அந்த நட்பு இங்கே கச்சிதமாக அரங்கேறி உள்ளது.

மேலும் உங்கள் நட்பு சிறக்க வாழ்த்துக்கள்!!

சுசி said...

ஒரு நல்ல மனிதரை பற்றி அறிய தந்ததுக்கு நன்றி பரிசல்காரன்.

உங்கள் நட்புக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

ம்ம்ம்...நல்ல Coincidence!!!!

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

வாவ்.. கிரேட் கார்க்கி...

பகிர்விற்கு நன்றி பரிசல்.. :))

பீர் | Peer said...

ம்... இருக்கட்டும் இருக்கட்டும்.

Prabhu said...

ஓ! வாட் எ கோ இன்சிடென்ஸ்////

யப்பா! இதெல்லாம் ஓவரா தெரியல?

மேவி... said...

"கார்க்கி said...
ஓ! வாட் எ கோ இன்சிடென்ஸ்"


nambitten

Kumky said...

:-))

நல்லது...கே.கே.
வாழ்த்தும்...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//நேசமித்ரன் said ...

உங்கள் இருவருக்குள்ளும் இழையும் புரிதல் பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி நண்பர்களே//

அதே! அதே!

Anonymous said...

//எப்படியோ ஆனந்தின் முக்கிய காய்களை சரிக்கு சமமாக வெட்டி மேட்ச்சை டிரா செய்ததை பெருமையாக சொல்லிக் கொள்வார்.//

இது புதுசு சகா

//சிகரெட் பிடிக்கும் பழக்கம் கிடையாது.//

இது ரொம்ப நல்ல பழக்கம் சகா. குடி கூட அளவோட இருந்தா ஒண்ணும் பிரச்சனை இல்லை. ஆனா இது அப்படி இல்லை.

//தங்கம் அணிவதே பிடிக்காது. //

சொக்கத்தங்கமா தானே இருக்கும்போது இது எதுக்குன்னா :)

நல்லா இடுகை

Unknown said...

சில விஷயங்கள் எனக்கும் கார்க்கிக்கும் ஒத்துப்போகுது (ஹிஹி விஜய் இல்லை). சிகிரெட், தங்கம், லெவிஸ், john cena இப்படி சில.

சக பதிவரைப் பற்றி சில சுவாரசியமான விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. கார்க்கி 25ல் எனக்குப் பிடித்தது சக பதிவர்களை மதித்து அவர்களுக்கு பதில் மடல் எழுதுவது - நல்லப்பழக்கம் கார்க்கி - பாராட்டுகிறேன்.

Thamira said...

ஓ! வாட் எ கோ இன்சிடென்ஸ்

//டாய்.. இன்னாங்கடா இது.?

Romeoboy said...

கார்க்கி பற்றி கொஞ்சம் அதிகபடியாக தெரிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி சகா

Ariv said...

ஹலோ....!!! அது என்ன பிடிக்காத லிஸ்டில் அஜித் பெயர்.....??? நீங்க இதுக்கு உங்க பிடிக்காத லிஸ்டை சொல்லாமலே இருந்திருக்கலாம்... சரி விடுங்க இப்போ வருந்தி என்ன பயன்..... எப்படியோ எங்களுடைய "ஹைதை தல அஜித் சாப்ட்வேர் ரசிகர் மன்றத்தின்" கண்டனத்தை பெற்றுவிட்டீர்கள்...!! கடைசியாக... எங்களுடைய மன்றத்தின் சார்பாக நீங்கள் சென்று வரும் கம்பெனிக்கு எதிரில் நாளை ஆர்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்... இதனை தொடர்ந்து நாளை மறுநாள் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும்.. இதற்கும் நீங்கள் இப்படியே தொடர்ந்தால்... சண்டே கூட பாக்காமல் உங்களுக்கு ஒரு லட்சம் தந்திகள் அனுப்பப்படும்.. கடைசியாக எங்களுடைய மன்றத்தின் சார்பாக எங்களுடைய தலைவர் உங்களுக்கு அவசர எழுதுவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்...!!!


கடைசியாக இதை படித்தவுடன் கண்டிப்பாக சிரித்துவிடவும்....

ஹைதரபாத்திலிருந்து அஜித் ரசிகன்.....

விக்னேஷ்வரி said...

எங்கப்பா, முக்கியமான நபரோட கமெண்ட்ட காணோம்...

ARV Loshan said...

ஆகா அகா.. இதுவல்லவோ நட்பு.. கலக்கல்.. சின்ன சின்ன விஷயங்களைக் குறிப்பிட்டதும் க்ளாஸ்.