Friday, October 30, 2009

ஒன்... டூ... த்ரீ...

தீபாவளிக்கு நான்கு நாட்கள் முன். திருப்பூரின் சாலைவழி ஒன்றில் அலுவலக நண்பரோடு காரில் சென்று கொண்டிருந்தேன். அந்த சாலையில் இன்னும் டிவைடர்கள் போடப்படவில்லை. தீபாவளி நெரிசல். வாகனங்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. திடீரென பயணிகள் யாருமில்லாத கல்லூரிப் பேருந்து ஒன்று வலதுபுறமாக - வாகனம் எதிரில் வரும் பாதையில் நுழைந்து - முந்திச் செல்லப் பார்த்தது. அதற்குள் எதிரில் தனியார் பேருந்து ஒன்றும் வரவே, சடாரென அங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கும் மேலானது சரியாக.

போக்குவரத்து சரியாவதற்கு சற்று முன், நான் இறங்கி அந்த அத்துமீறிய பேருந்தில் ஏறினேன். நேரே டிரைவரிடம் சென்றேன். டிரைவர் சுற்றியிருப்பவர்கள் திட்டிக் கொண்டிருப்பதைப் பொருட்படுத்தாமல், எப்படியாவது முந்தி தன் வாகனத்தை நுழைப்பதில் மும்மரமாக இருந்தார். அருகில் இன்னொருவர் இருந்தார். இருவரையும் பார்த்த நான் “R.T.O. கார் பின்னாடி நிக்குது. நீங்க ராங் ரூட்ல உள்ள நுழைஞ்சத பார்த்துட்டாரு அவரு. உங்களை நாளைக்கு ஆர்.டி.ஓ. ஆஃபீஸ்ல வந்து பார்க்கச் சொல்லியிருக்காரு. நம்பரை நோட் பண்ணி வெச்சிருக்காரு. மறக்காமப் போய்ப் பார்த்துடுங்க” என்று மட்டும் சொல்லிவிட்டு இறங்கிவிட்டேன்.

பிறகு ஆர்.டி.ஓ ஆஃபீஸில் தெரிந்த நண்பரை அழைத்து அந்த வாகன எண்ணைச் சொல்லி, ‘நாளைக்கு வந்து பார்ப்பாரு' என்று சொல்லிவிட்டேன்.

“அவன் போனா என்னாகப் போகுது? எதுனா சம்திங் வாங்கீட்டு விடுவாங்க. அவ்ளோதான்” என்றார் உடன் வந்த நண்பர்.

“அது இப்ப செஞ்ச தப்புக்கு தண்டனையா இருக்கட்டுமே. இனிமே இந்த மாதிரி ஓவர்டேக் பண்ணும்போது கொஞ்சமாவது யோசிப்பான்ல” என்றேன்.

என்றேன்தான்.... என்றேனே தவிர, எனக்கும் அவன் போன்றவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

’உச்’ கொட்டுவதைத் தவிர, வேறென்ன செய்ய முடியும்!

*********************************

மீபத்தில் ஒரு பயணத்தின்போது பார்த்தது.

ஒரு மொபைல் ஃபோன் கடையில் ‘இவ்விடம் குறைந்த விலை சைனா ஃபோன்கள் விற்பனைக்கு உள்ளது’ என்று எழுதப்பட்டிருந்தது.

ஐம்பதடி தூரத்தில் (‘அளந்துட்டே போனீங்களா’ன்னு கேட்கப்படாது!) இன்னொரு கடையில் ‘இவ்விடம் விலை குறைந்த சைனா மொபைல்கள் விற்கப்பட மாட்டாது’ என்றெழுதி வைத்திருந்தார்கள்.

‘அசத்தல்டா!’ என்று மனதில் பாராட்டிவிட்டுப் போனேன்.

**************************

ண்பன் ஒருவன் வேலை அவனுக்குத் தெரிந்த நண்பனுக்கு கேட்டு அழைத்திருந்தான். வரச் சொல்லு என்றேன். வந்தான். நான்தான் இண்டர்வ்யூ எடுத்தேன். என்னை அந்த இளைஞன் பார்த்ததில்லை. ஆகையால் வந்து அமர்ந்தவுடனேயே ‘எனக்கு கிருஷ்ணகுமார் சாரைத் தெரியும்’ என்றான். ‘சரி இருக்கட்டும்’ என்று சொல்லிவிட்டு, வழக்கமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்தேன். ஆனால் அவனுக்கு எப்படியாவது கிருஷ்ணகுமாரைப் பார்க்க வேண்டும் என்ற intention இருந்து கொண்டே இருந்தது. அதனால் அவனால் எதற்கும் சரிவர பதில் சொல்ல இயலவில்லை. நானும் ‘நான்தான் நீங்கள் கேட்கும் கிருஷ்ணகுமார்’ என்று சொல்லவும் இல்லை.

யோசித்த நான் இன்னொரு அலுவலக நண்பனை அழைத்து - சொல்லிவைத்து - ‘இவர்தான் கிருஷ்ணகுமார்’ என்று அறிமுகப்படுத்தினேன். இவன் அவருடன் கைகுலுக்கி இன்னார் சொல்லிவிட்டார்’ என்றான். அலுவலக நண்பர் ‘சரி’ என்றுவிட்டு என்னைப் பார்த்து ‘பார்த்து பண்ணுங்க சார்’ என்றுவிட்டு போனார்.

அந்த இளைஞன் பிறகு பதில் சொல்லும்போது கம்ஃபர்டபிளாக உணர்ந்தான். வேலையிலும் சேர்ந்து விட்டான்.

ஒருவாரம் முன்பு என்னை வந்து சந்தித்தான். “சாரி சார்.. நீங்கதான் அவர்னு ரெண்டு நாள் முந்திதான் தெரியும்” என்றான். ‘பரவால்ல.. உனக்கு தகுதி இருந்ததாலதான் சேர்ந்த. ஆனா அன்னைக்கு நான்தான் அதுன்னு தெரிஞ்சா கொஞ்சம் அசால்டா பதில் சொல்லுவன்னுதான் சொல்லல’ என்றேன்.

நான் செய்தது ஒருவிதத்தில் சரி.. இன்னொரு விதத்தில் தவறு.

என்னவென்று யோசியுங்கள்!


.

39 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

மாறுபட்ட ....
வித்யாசமான.........
சரியான ........
அணுகுமுறைகள் நண்பரே.....

தராசு said...

//நான் செய்தது ஒருவிதத்தில் சரி.. இன்னொரு விதத்தில் தவறு.//

சரி - அவனை பதட்டத்தில் இருந்து விடுவித்தது.

தவறு - நீங்கள் யார் என்று கடைசி வரை சொல்லாதது.

உண்மைத்தமிழன் said...

தப்பு பரிசல்..!

மனிதர்களின் குணம் தினம்தோறும் மாறிக்கொண்டேயிருக்காது.. இயல்பான குணம் அவரையறியாமலேயே வெளிப்பட்டுவிடும்.

நீங்கள் நீங்களாகவே வெளிப்பட்டு அவரிடம் பேசியிருந்தால் அதுதான் மரியாதை..

ஒருவருடைய வேலை செய்யும் திறனை ஆராயும் நேரத்தில் தனி மனித பழக்க வழக்கங்களைப் பயன்படுத்தக்கூடாது..!

தராசு said...

//ஐம்பதடி தூரத்தில் (‘அளந்துட்டே போனீங்களா’ன்னு கேட்கப்படாது!)//

கார்கி கூட சேராதீங்கன்னா கேக்கறீங்களா?????

கார்க்கிபவா said...

தராசண்ணே, அவரு நம்ம்ளையே வித்துடுவாரு.. அவர போய்...

ஜெனோவா said...

//நான் செய்தது ஒருவிதத்தில் சரி.. இன்னொரு விதத்தில் தவறு.//

சரி - அவனை பதட்டத்தில் இருந்து விடுவித்தது.

தவறு - நீங்கள் யார் என்று கடைசி வரை சொல்லாதது.//

இதையே தான் நானும் நினைக்கிறேன்.

நான் உங்களுக்கொரு பரிசு தந்திருக்கேன் இங்க வந்து பாருங்க , பிடிச்சிருந்தா அசல் பிரதி வீட்டுக்கு வரும் ;-))

http://joemanoj.blogspot.com/2009/10/blog-post_30.html

நன்றி

தமயந்தி said...

ப‌ரிச‌ல்...சைக்கால‌ஜி ஏதும் ப‌டிச்சிக‌ளோ

ரோஸ்விக் said...
This comment has been removed by the author.
ரோஸ்விக் said...

எங்களுக்கு யோசிக்கவெல்லாம் நேரம் இல்லப்பூ...:-)) நெக்ஸ்ட் மீட் பண்றேன்..என்னோட resume-ஓட.... ஏன்னா எனக்கு கிருஷ்ணகுமாரைத் தெரியும்....யாரு வேணும்னாலும் வந்து கை கொடுக்கட்டும்....நீங்க வேலை கொடுத்துருங்க....:-)

RTO குசும்பு நல்லாத் தான் இருக்கு...வாழ்த்துக்கள்

பின்னோக்கி said...

ராங் சைட் வந்தவனை, கவுண்டமணி சொன்ன மாதிரி 11 போட சொல்லனும். திருந்தவே மாட்டனுங்க

விக்னேஷ்வரி said...

பிறகு ஆர்.டி.ஓ ஆஃபீஸில் தெரிந்த நண்பரை அழைத்து அந்த வாகன எண்ணைச் சொல்லி, ‘நாளைக்கு வந்து பார்ப்பாரு' என்று சொல்லிவிட்டேன். //
நீங்க மட்டும் எப்படிங்க இப்படி எதுனா செய்றீங்க?

நிஜமாவே அசத்தல் தான்.

எனக்கும் கிருஷ்ணகுமாரைத் தெரியும். வேலை கிடைக்குமா...

மின்னுது மின்னல் said...

‘இவ்விடம் விலை குறைந்த சைனா மொபைல்கள் விற்கப்பட மாட்டாது’ என்றெழுதி வைத்திருந்தார்கள்.
//


விலை அதிகமான சைனா போன் மட்டும் தான் விப்பாங்களா...?


எப்பூடீ..?

குப்பன்.யாஹூ said...

பரிசல் நீங்கள் அந்த நேர்முகத் தேர்வில் செய்தது தவறே.

பதிவு எழுத , மனித வள மேம்பாடு பற்றி அதிகம் படித்து உள்ள நீங்கள் மனிதம் பற்றி படிக்க வில்லையே இன்னும். அதுதான் எனக்கு வருத்தம்.

சக மனிதனின் அறியாமையோடு விளையாடுதல் மனித உரிமை மீறலுக்கு சமமே.

நீங்கள் மட்டும் அல்ல பெரும்பாலான மனிதர்கள் (குறிப்பாக அலுவலகத்தில் வேலை பார்க்கும் மூத்த ஊழியர்கள், புதிதாக சேரும், சேர உள்ள மனிதரின் அறியாமையோடு விளையாடல் நடக்கிறது.


வேலை வாய்ப்பை விட்டு தள்ளுங்கள், இந்த நிறுவனம் இல்லா விடல் வேர்யு ஒரு நிறுவனத்தில் அந்த மனிதருக்கு வேலை கிடைக்கும்.
சக மனிதரின் அறியாமையை நையாண்டி செய்ய வேண்டாம்,. அடுத்தவரின் அறியாமையை நம் வெற்றிக்கு பயன் படுத்தினால் அந்த வெற்றி நிலைக்காது.

பரிசல்காரன் said...

நன்றி முனைவரே

@ தராசு

:-))

நன்றி கார்க்கி, பின்னோக்கி, ஜெனோவா, தமயந்தி, ரோஸ்விக், பின்னோக்கி, விக்கி & மின்னுது மின்னல்

☼ வெயிலான் said...

உங்களுக்கு தெரிந்த நபரின் பரிந்துரையின் பேரில் வந்தவருக்கு வேலை கொடுத்தது தவறு.

வேலைக்கு தகுதியானவராக இருந்ததால், வேலைக்கு சேர்த்தது சரி.

சரி தானே?


// சக மனிதரின் அறியாமையை நையாண்டி செய்ய வேண்டாம்,. //

மிகச்சரியான வரிகள் குப்பன்.

பரிசல்காரன் said...

@ உண்மைத்தமிழன் & குப்பன் யாஹூ

சிரிப்புதான் வருது.

வந்த நண்பரை நேரடியா எனக்குத் தெரியாது. அவ்ளோ தெரிஞ்சவரா இருந்தா எனக்கு மேல இருகக்றவர்கிட்டதான் நேர்முகத்துக்கு அனுப்புவேன்.. நான் பண்ணமாட்டேன். எனக்கு தெரிஞ்சவரை நானே எப்படி இண்டர்வ்யூ பண்ணமுடியும்?

//பதிவு எழுத , மனித வள மேம்பாடு பற்றி அதிகம் படித்து உள்ள நீங்கள் மனிதம் பற்றி படிக்க வில்லையே இன்னும். அதுதான் எனக்கு வருத்தம்.//



இதுக்கும் மனிதத்துக்கும் சம்பந்தமே இல்லை நண்பரே.. நான் தொண்டு நிறுவனத்தில் பணி புரிந்து இதைச் செய்துகொண்டிருந்தால் தப்புதான். வேலைக்கு வந்தவரின் திறனறிய சிபாரிசாய்ச் சொன்ன ஆளைக் காட்டாதது எந்த விதத்தில் மனிதத்தோடு சம்பந்தப்படுகிறது?

இன்னொன்று..

நீங்கள் சொன்ன சீனியர், ஜூனியர் ஒப்புமைக்கும் நான் செய்ததுக்கும் சம்பந்தமே இல்லை. அவர் இன்னும் பணியிலே சேரவில்லை.

பரிசல்காரன் said...

// ☼ வெயிலான் said...

உங்களுக்கு தெரிந்த நபரின் பரிந்துரையின் பேரில் வந்தவருக்கு வேலை கொடுத்தது தவறு.

வேலைக்கு தகுதியானவராக இருந்ததால், வேலைக்கு சேர்த்தது சரி.

சரி தானே?


சரி!

// சக மனிதரின் அறியாமையை நையாண்டி செய்ய வேண்டாம்,. //

மிகச்சரியான வரிகள் குப்பன்.//

சரிதான் தலைவரே.. ஆனா இங்க ஆளைத் தெரியாதது அவ்ளோ பெரிய அறியாமையெல்லாம் இல்லையே...

எறும்பு said...

/////நீங்கள் நீங்களாகவே வெளிப்பட்டு அவரிடம் பேசியிருந்தால் அதுதான் மரியாதை..

ஒருவருடைய வேலை செய்யும் திறனை ஆராயும் நேரத்தில் தனி மனித பழக்க வழக்கங்களைப் பயன்படுத்தக்கூடாது..!
///////

இந்த விசயத்தில் அண்ணன் உ.தவை வழி மொழிகிறேன்....

Truth said...

RTO மேட்டர் நல்ல ஐடியா. இதைப் போல நானும் பல முறை பாத்திருக்கேன். சிக்னல் போட்டா கோட்டுக்கு பின்னாடி நிக்காம கோட்டை தாண்டி முன்னாடி வந்து நிற்பதும் எனக்கு பிடிக்காத ஒன்று. ஒரு நான்கு அடி முன் நிற்பதனால் அவர்கள் ஒரு ஐந்து வினாடிகளுக்கு முன் வீடு சேரலாம். ஆனால் இந்த ரீசன் நல்லாவா இருக்கு? :-)

சைனா மேட்டர் - இதை பத்தி நான் ஒன்னு எழுதியிருக்கேன். சின்ன பதிவு தான். டைம் இருந்தால் (இருக்கும் தானே?) படிங்க

கடைசி மேட்டர் - உண்மைத் தமிழன் சொன்ன மாதிரி தான் எனக்கும் தோனுது.


ரொம்ப நாள் கழிச்சு உங்களுடைய பதிவிற்க்கு விளக்கமா பின்னுட்டம் போட்டிருக்கேன் :-)

கார்க்கிபவா said...

//வேலை வாய்ப்பை விட்டு தள்ளுங்கள், இந்த நிறுவனம் இல்லா விடல் வேர்யு ஒரு நிறுவனத்தில் அந்த மனிதருக்கு வேலை கிடைக்கும்.
சக மனிதரின் அறியாமையை நையாண்டி செய்ய வேண்டாம்,. அடுத்தவரின் அறியாமையை நம் வெற்றிக்கு பயன் படுத்தினால் அந்த வெற்றி நிலைக்காது.//

இவர் அறியாமையை பத்தி இப்ப நான் பின்னூட்டம் போடலாமா வேண்டாமா?

selventhiran said...

ஆர்.டி.ஓ மேட்டர் அருமை...

☼ வெயிலான் said...

// ஆனா இங்க ஆளைத் தெரியாதது அவ்ளோ பெரிய அறியாமையெல்லாம் இல்லையே.. //

அதுவும் அறியாமை தான். அவ்ளோ பெரியது இல்லை. :)

உங்களின் நண்பனாக இருப்பதால் சொல்லுகிறேன். உங்கள் பழைய பதிவுகளைப் படிக்கும் போது எனக்கு தோன்றியதும், சொல்ல விரும்பியதும், சொல்லாது விட்டதும் இது தான் - சக மனிதரின் அறியாமையை நையாண்டி செய்ய வேண்டாம்

பரிசல்காரன் said...

நன்றி ட்ரூத், எறும்பு ,கார்க்கி & செல்வா

@ வெயிலான்

ஏன் இப்டி??? மெதுவா சொல்லுங்களேன்....

☼ வெயிலான் said...

நண்பன் தான் மென்மையாவும், உரிமையாவும் சொல்ல முடியும்/சொல்லுவார்கள் :)

எல்லாவற்றிலும் உண்மை இருக்கும், நன்மையும் இருக்கும்.

நிலாமதி said...

நண்பன் ஒருவன் ,அவனுக்கு தெரிந்தநன்பனுக்கு வேலை...கேட்டு என்று திருத்தி எழுதினால் கருத்து விளங்கும் வசன நடை நன்றாய் இருக்கும். நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

Rajalakshmi Pakkirisamy said...

//பிறகு ஆர்.டி.ஓ ஆஃபீஸில் தெரிந்த நண்பரை அழைத்து அந்த வாகன எண்ணைச் சொல்லி, ‘நாளைக்கு வந்து பார்ப்பாரு' என்று சொல்லிவிட்டேன். //
நீங்க மட்டும் எப்படிங்க இப்படி எதுனா செய்றீங்க?//

:) :) :)

செ.சரவணக்குமார் said...

பயணங்களில் இதுபோன்ற பல விசித்திரங்களைப் பார்க்கமுடியும்தான். பகிர்வுக்கு நன்றி பரிசல்

Thamira said...

குப்பன் : சக மனிதரின் அறியாமையை நையாண்டி செய்ய வேண்டாம்,. அடுத்தவரின் அறியாமையை நம் வெற்றிக்கு பயன் படுத்தினால் அந்த வெற்றி நிலைக்காது.//

ஏற்கனவே சில பின்னூட்டங்கள் பேசிவிட்டாலும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை. பரிசலின் பதிவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு புரியவில்லை.

இந்த லட்சணத்தில் வெயிலானின் சப்போர்ட் வேற.. சரிதான்.!

வெயில் : பரிசலின் முந்தைய எந்தப்பதிவை குறிப்பிடுகிறீர்களோ எனகுத் தெரியாது. ஆனால் இந்தப்பதிவில் "சக மனிதரின் அறியாமையை நையாண்டி செய்ய வேண்டாம்" என்று சொல்லுமளவில் அப்படி என்ன எழுதினார் என்று விளக்கினால் வசதியாக இருக்கும். வியப்பாக இருக்கிறது.

இராகவன் நைஜிரியா said...

ஒன்...டூ...த்ரீ... சூப்பர்.

ரொம்ப பிடிச்சு இருக்கு.

// ஆகையால் வந்து அமர்ந்தவுடனேயே ‘எனக்கு கிருஷ்ணகுமார் சாரைத் தெரியும்’ என்றான். //

ஆள் யாருன்னே தெரியாமல், எனக்கு கிருஷ்ணகுமார் சாரைத் தெரியும் என்று சொல்லுவது தவறுதானே.

இங்கு அவருடைய படிப்பையோ, வேலைத் திறமையையோ நினைத்துப் பார்க்காமல், எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என சொல்வது எந்த விதத்தில் சரி என எனக்குப் புரியவில்லை.

என்னைப் பொருத்தவரை, நீங்க அவருடைய பதட்டத்தை தணிக்க முயற்சி செய்து இருக்கின்றீர்கள் அது சரியானதுதான்.

மேலும் நண்பருடைய நண்பர் என்பதற்காக எந்த விதமான சலுகைகளும் காட்டாமல், சரியாக உங்க வேலையைச் செய்து இருக்கின்றீர்கள்.

இடுகையில் // வேலையிலும் சேர்ந்து விட்டான். // என்றுப் போட்டு இருக்கின்றீர்கள். பின்னூட்டத்தில் // அவர் இன்னும் பணியிலே சேரவில்லை// என்று போட்டுள்ளீர்கள். கொஞ்சம் கன்பூயஷன். :-)

Subha said...

Krishna,
If he is well qualified, then he doesn't need reference....if i was you, i wouldn't have entertained him, his cv must speak for himself...
This could be right on a HR perspective but not going in to my mind yet

Romeoboy said...

இன்டேர்வியு கலக்கல் தல ..

பரிசல்காரன் said...

நன்றி நிலாமதி, ராஜலக்‌ஷ்மி பக்கிரிசாமி, சரவணா, ஆதி, சுபா ரோமியோ பாய்..

@ இராகவன் (நைஜீரியா)

//இடுகையில் // வேலையிலும் சேர்ந்து விட்டான். // என்றுப் போட்டு இருக்கின்றீர்கள். பின்னூட்டத்தில் // அவர் இன்னும் பணியிலே சேரவில்லை// என்று போட்டுள்ளீர்கள். கொஞ்சம் கன்பூயஷன். :-)//

குப்பன் சீனியர், ஜூனியரை கிண்டல் செய்வதாய்ச் சொல்லியிருந்தார். அதைப்பற்றி எழுதுகையில், இண்டர்வ்யூ செய்யும்போது நடந்தது இது.. அப்போது அவர் - அதுவரை - சேரவில்லையே என்பதைத்தான் அப்படிக் குறிப்பிட்டேன்.

ஒருவேளை அவரை நேர்முகம் செய்கையில் வேறு என்னுடன் பணிபுரியும் யாராவது தகுதிக்குறைவாய் நடத்தியிருந்தால், அதை நான் அனுமதித்திருந்தால் அது தவறானதாயிருக்கும்.

அப்போதைக்கு அவருக்கு என்னைப் பார்க்க வேண்டும் என்பது - நேர்முகத்தை சரிவர எதிர்கொள்ள வேண்டும் என்பதைவிட முக்கியமாய் இருக்கிறதே என்ற வருத்தம்தான் எனக்கு இருந்தது. அதைத் தணிக்கவே அவ்வாறு செய்தேன். அவரை கிண்டல் செய்து சிரிக்கும் நோக்கமெல்லாம் இதிலில்லை!

வெயிலான் சொன்னதுபோல, வேறு பதிவுகளின் மூலம் எனக்கு அந்தக் குணம் இருப்பதாக அவர் உணர்ந்திருக்கலாம். இருந்தால் திருத்திக்கொள்கிறேன்..
பதிவை அல்ல... என்னை!

Rajan said...

நாட்டுக்கு இப்போ ரொம்ப தேவையான பதிவு

☼ வெயிலான் said...

// வெயில் : பரிசலின் முந்தைய எந்தப்பதிவை குறிப்பிடுகிறீர்களோ எனகுத் தெரியாது. ஆனால் இந்தப்பதிவில் "சக மனிதரின் அறியாமையை நையாண்டி செய்ய வேண்டாம்" என்று சொல்லுமளவில் அப்படி என்ன எழுதினார் என்று விளக்கினால் வசதியாக இருக்கும். வியப்பாக இருக்கிறது. //

ஆதி, நான் சொன்னது 'சக மனிதரின் அறியாமையை நையாண்டி செய்ய வேண்டாம்' என்பது மட்டும் தான்.

வேறு எந்த வரிகளையும் நான் மேற்கோள் காட்டவில்லை. வேறு எந்த வரிகளுக்கும் ஆதரவு தெரிவிக்க வில்லை. பரிசலின் நெருங்கிய நண்பனாய் தோள் தொட்டுத் தான் சொன்னேன். பழைய பதிவுகளைப் படித்துப் பாருங்கள், பலவற்றில் அந்தப் படிமமிருக்கும்.

வெகு நாளாய் சொல்ல விழைந்தது இந்த வரிகள். எந்தப் புள்ளியில்/கோட்டில்/எழுத்தில் ஆரம்பிப்பது எனத் தெரியாதிருந்தேன்.

குப்பனின் வரிகள் என்னுடைய கோணத்தோடு ஒத்துப் போனது. சொன்னேன்.

எனக்கும் கிருஷ்ணகுமாரைத் தெரியும். :)
க்ருஷ்ணாவுக்கும் என்னைத் தெரியும்.

விளக்கம் கேட்டதற்கு நன்றி ஆதி!

☼ வெயிலான் said...

// வெயிலான் சொன்னதுபோல, வேறு பதிவுகளின் மூலம் எனக்கு அந்தக் குணம் இருப்பதாக அவர் உணர்ந்திருக்கலாம். இருந்தால் திருத்திக்கொள்கிறேன்..
பதிவை அல்ல... என்னை! //

:))))

நன்றி பரிசல். மகிழ்ச்சி!

வழக்கம் போல் பரிசல் டச் பதில்!

மங்களூர் சிவா said...

பாவம்யா நம்பி வந்த பச்சை புள்ளைய போய் ஏமாத்தியிருக்க
:))

எனக்கு கிருஷ்ணகுமாரை தெரியாது வேலையும் வேணாம்
:)))

RTO மேட்டர் சூப்பர்!

குப்பன்.யாஹூ said...

பரிசல் , நான் சொல்ல விரும்புவதை எழுத்தில் சொல்ல முடியுமா என்று தெரிய வில்லை. போன் என்றால் எளிதில் விளக்கலாம்.

நான் சொன்னது இந்த பதிவை (அதிலும் கடைசி பார்வை பற்றி மட்டும்தான்).

என்னுடைய கருத்து, ஒருவரின் அறியாமையை நாம் நையாண்டி செய்ய வேண்டாம் என்பதே, சக மனிதர் அறியாமையில் இருந்தால் அவருக்கு தெரிந்த விசயங்களை சொல்ல வேண்டும், அதை விடுத்து அவரின் அறியாமையோடு விளையாடல் விரும்ப தக்கது அல்ல என்பதே என் கருத்து

என் கருத்தை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் உங்கள் விருப்பம், இதை ஒரு விவாதமாக நான் ஆக்க விரும்ப வில்லை.
whether u recruited him or not is a matter for me. My concern is when a person does not know a thing which I know, I should 1st share that known info to him,

Thamira said...

எனக்கும் கிருஷ்ணகுமாரைத் தெரியும். :)
க்ருஷ்ணாவுக்கும் என்னைத் தெரியும்.
//

எனக்கும் பூஷிணிக்காயும் தெரியும், புடலங்காயும் தெரியும்.. நான் அதைப்பற்றியெல்லாம் விளக்கம் கேட்கவேயில்லையே.

இந்தப் பதிவில் இந்தக்கமென்ட் பொருத்தமாக இல்லையே என்றுதான் சொல்லவந்தேன். :‍))

Prabhu said...

என்றேன்தான்.... என்றேனே தவிர, எனக்கும் அவன் போன்றவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
///////

உங்களுக்கு வயசாயிட்டு இருக்கு. மத்திம வயதை எட்டிப் பிடிக்க இருக்கிறீங்கள் எனத் தெரிகிறதா? :)

நீங்க பாட்டுக்கு சரி,தவறுன்னு சொல்லிட்டு போய் இங்க எல்லாரும் பொங்கல் கிண்டுறாங்களே. (அல்வா தமிழக உணவு இல்லையாமே)