Saturday, October 31, 2009
கண்டேன் காதலை – விமர்சனம்
மிகப்பெரிய தொழிலதிபர் மகன் சக்தி (பரத்), காதல் தோல்வி காரணமாக மனது வெறுத்து கால்போன போக்கில் போகையில், இரயில் பயணத்தில் துறுதுறு அஞ்சலியை( தமன்னா)ச் சந்திக்கிறான். அவளது வீடு வரை சென்று தங்குகிறான்.
அவளது பேச்சும், எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் குணமும் அவனைக் கவர்கிறது. அவளுக்கு, முறைமாமனை திருமணம் செய்து வைக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது. ஆகவே சக்தியின் உதவியுடன் தன் காதலன் கௌதமை சந்திப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
வீட்டை விட்டு வந்ததுமே, அஞ்சலி தன் காதலன் கௌதமைத் தேடி ஊட்டி சென்றுவிட, சக்தி புத்துணர்ச்சியோடு திரும்ப சென்னை வந்து, சரிந்து கிடக்கும் தன் பிஸினஸை வெற்றிப் பாதை நோக்கித் திருப்புகிறான். அஞ்சலி எப்படி எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொண்டு முடிவெடுக்கிறாளோ அப்படி தன் தொழிலின் ஒவ்வொரு அடியையும் மிக ஸ்போர்டிவாக அதே சமயம் – சரியான முடிவுகளை எடுத்து முன்னேறுகிறான்.
அங்கே அஞ்சலி வீட்டில் எல்லாரும், அவள் சக்தியைக் காதலித்து அவனுடன் ஓடிவிட்டதாகக் கருதுகிறார்கள். ஒன்பது மாதங்களுக்குப் பின் தொலைக்காட்சி ஒன்றில் சக்தியின் பேட்டியை கண்டு, அவனைத் தேடி வந்து அஞ்சலியைப் பற்றிக் கேட்கிறார்கள். அப்போதுதான் அஞ்சலி, தன் காதலனுடன் வீட்டுக்குத் திரும்பவில்லை என்பதையே அறிகிறான் சக்தி.
பிறகு அஞ்சலியைத் தேடிப் போன சக்தி என்னவாகிறான், அஞ்சலி கௌதமுடன் சேர்ந்தாளா என்பதையெல்லாம் வெ.தி.கா.
பரத் இடைவேளை வரை அமைதியாய் இருக்கிறார். இடைவேளைக்குப் பின் சில காட்சிகளில் நடிக்கிறார். ஓகே.
இடைவேளை வரை பேசிக் கொண்டேஏஏஏஏஏ இருக்கிறார் தமன்னா. ஒருகட்டத்தில் இது போதும்டா சாமி எனுமளவு ஓவர்டோஸாகப் போய் விடுகிறது.
படத்தில் ஹீரோ, ஹீரோயினைவிட அதிக கைதட்டல்கள் வாங்குவது லொள்ளுசபா சந்தானம். ஏற்கனவே இவரை கவுண்டமணியின் அடுத்த வாரிசாக – சவுண்டுமணி- என்று ஒரு விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தேன். இந்தப் படத்தில் அதை அப்படியே நிரூபித்திருக்கிறார்.
பாடல்கள் அருமை. படத்தில் குறிப்பிட வேண்டிய இன்னொரு அம்சம் ஆர்ட் டைரக்ஷன். பாடல் காட்சிகளிலும், மற்ற சீன்களிலும் கண்ணுக்கு உறுத்தாத அழகான கலைநயத்தைக் காட்டியிருக்கிறார். சபாஷ்!
வசனம் – ஒரிஜினலின் அப்படியேயான தழுவலாவெனத் தெரியவில்லை. பல இடங்களில் நன்றாகவே வந்திருக்கிறது. சன் டி.வி-யின் உபயத்தால் வசனங்கள் வருமுன்னரே ரசிகர்கள் கைதட்டுவதைக் காண (கேட்க?) முடிகிறது.
படத்தின் மிகப்பெரிய மைனஸ் ஜவ்வாய் இழுப்பது. பல இடங்களில் ‘போதும் முடிங்கப்பா’ என்ற குரலைக் கேட்க முடிகிறது. கொஞ்சம் செதுக்கி இருந்தால் இன்னும் காணச் சுகமாயிருந்திருக்கும்!
கண்டேன் காதலை – தமன்னா + சந்தானத்துக்காக ஓடும். சன்.டி.வி- அதைச் செய்யும்.
பி.கு – 1: JAB WE MET ஒரிஜினல் டிவிடி வாங்கி வைத்து ஒரு மாதத்துக்கு மேலாகிறது. இந்தப் படம் வரப்போகிறது என்பதால் அதைப் பார்க்காமல் வைத்திருக்கிறேன். தியேட்டர் கமெண்டுகளில், ‘இந்தில நல்லா பண்ணியிருந்தாங்கப்பா’வைக் கேட்க முடிந்தது.
முக்கியமான பி.கு: 2:- உ.போ.ஒ – மாற்றுப்பார்வை விமர்சனங்களால் தாக்குண்டு, இதில் மாற்றுப்பார்வை பார்த்து ஏதேனும் நுண்ணரசியல் படத்தில் இருக்கிறதாவென ஆராய்ந்தேன். ஒன்று கிடைத்தது.
பரத்தும் தமன்னாவும் இரயிலைத் தவற விட்டு ஓர் ஊரில் மாட்டிக் கொள்கிறார்கள். அந்த ஊரில் நடுரோட்டில் மாருதி வேன் வைத்து, விபச்சாரிகள் கஸ்டமர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரௌடிகள் தமன்னாவைத் துரத்துகிறார்கள். லாட்ஜூகள் விபச்சார கஸ்டமர்களுக்காக வாடகைக்கு விடப்படுகிறது. இத்தனைத் தவறுகள் நடக்கும் ஊராக எதைக்காட்டியிருக்கிறார்கள் என்றால்... விருத்தாச்சலம்! ஏன் என்பதை நீங்களே யோசியுங்கள். நான் கெளம்பறேன்...!
.
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
போண்டா, பாப்கார்ன் நல்லாயிருந்ததா
வண்டியை இண்டிகேட்டர் உடையாமல் எடுக்க முடிந்ததா
"இத்தனைத் தவறுகள் நடக்கும் ஊராக எதைக்காட்டியிருக்கிறார்கள் என்றால்... விருத்தாச்சலம்! ஏன் என்பதை நீங்களே யோசியுங்கள். நான் கெளம்பறேன்...!"
என்ன ஒரு சாணக்கியத்தனம் !!!!!
//முக்கியமான பி.கு: 2///
ஆஹா... கிளப்பி விட்டுட்டியே சகா
karina நடித்து எனக்கும் பிடித்த படமென்றால் அதுஜப் வீ மெட் மட்டும்தான். தமிழில் ஸ்கிரின் பை ஸ்கிரின் பை மட்டுமல்ல உடை எல்லாமே காப்பி.. படம் இன்னும் தமிழில் பார்க்கலை.
ம்...ம்...ம்...ம்...ம்...
உங்கள் விமர்ச்சனம் சரியானதென்றுதான் தோன்றுகிறது. படத்தின் சிற்ந்த பங்களிப்பு ஒளிப்பதிவாளருடயது
@ டாக்டர் புரூனோ
என்னா ஒரு வில்லத்தனம்! மெமரி ப்ளஸ் சாப்டறீங்களா??
@ டம்பீமேவீ
அதுதானே!
@ கிருத்திகன்
வேற வேல வேணுமே சகா நமக்கு! (உங்க பேர் வித்யாசமா இருக்குப்பா!)
@ புதுகைத் தென்றல்
ஒப்புமையோட பார்க்காதீங்க. அத மறந்துட்டுப் பாருங்க..
@ தியாவின் பேனா
இதுக்கு என்ன பதில் போட? நன்றின்னா? இல்ல... நானும் ம்க்கும் ம்க்கும்ன்னு போடவா?
@ n
கரெக்ட்!
"ஜப் வி மெட்" நல்லாவே இருந்தது.
என்ன ஆனா, ஹீரோயின் ஹீரோவுக்கு அக்கா மாதிரி இருப்பாங்க.மத்தபடி படம் சூப்பர்.
தமிழ்ல..... பாத்துருவோம்...
மறுபடியும் SUN PICS இடமிருந்து ஒரு மொக்கை படம் "கண்டேன் காதலை"
கேபிளுக்கு முன்னாடியேவா! வெரி குட்.
//தமிழில் ஸ்கிரின் பை ஸ்கிரின் பை மட்டுமல்ல உடை எல்லாமே காப்பி.. படம் இன்னும் தமிழில் பார்க்கலை. //
வாழ்க தமிழ் சினிமா. வளர்க விமர்சகர்கள். பார்க்காமலே எழுதுறதுல நம்மாளுக பின்னுற நு.க.பி.நி!
மொக்கப் படம்னாலும் அவனுங்க ஒட்டிடுவானுங்க....
ஆர்ட் டைரக்ஷன் அருமைதான், அதற்காக லாட்ஜின் ஃப்ளஷவுட்டிலுமா, அவரது கலைவண்ணம், ம்ம்ம்ம்ம்... தாங்க முடியலைப்பா.....
உங்கள் கணிப்பு சரியே, வசனங்கள் அப்படியே தமிழ் படுத்தப்பட்டுள்ளன.
விருத்தாச்சலம், ..... ஆங், கண்டுபுடிச்சிட்டேன், தல ... என்னா ஒரு வில்லத்தனம்,....:-)
எங்க பார்த்தீங்க? இன்னைக்கு Thatis it? போறேன்.
டாப் டென்னின் முதலிடத்துக்கு இன்னுமொரு படம்.
நுண்ணரசியலெல்லாம் இருக்கா? அப்ப அடுத்த ஒரு வாரத்துக்கு பதிவுக்குப் பஞ்சமில்லை. நல்லா இருங்க நீங்க.
பரிசலு..
தே.மு.தி.க. ஆபீஸ்ல ஒரு வேலை காலியா இருக்காம்.. உடனே டிரை பண்ணுங்க..!
என்னனாலும் சந்தானதின் இரட்டை அர்த்த வசனங்கள் கண்ணனின் படத்திலா என்று தோண்ற்ரிறு பரிசல்
@ அறிவிலி
பாருங்க
@ உடகன்
:-))
@ வெங்கிராஜா
அப்டீன்னா???
@ புலவன் புலிகேசி
சரியான பேருங்க உங்களுது..
@ முரளிகுமார்
லாட்ஜ்ல சீன்ல நானும் இத நெனைச்சேன்.. அப்பறம் அந்த கட்டில்..
BTW, கூப்பிட்டுட்டே இருந்தேன்.. எஸ்ஸெம்மெஸ் அனுப்பினேன்.. எடுக்கல.. பதிலனுப்பல.. இப்ப கேள்வியப் பாரு..!
@ சுபாங்கன்
அதுல இது ஃபர்ஸ்ட், இதுல அது ஃபர்ஸ்ட்.. நல்லா நடத்தறாங்கப்பா..
@ உ.த..
ஏன்ணா.. எனை மாட்டி விடறதுலயே குறியா இருக்கீங்க?
@ தமயந்தி
வெ.ஆ.மூ + க.ம = சந்தானம்
///இத்தனைத் தவறுகள் நடக்கும் ஊராக எதைக்காட்டியிருக்கிறார்கள் என்றால்... விருத்தாச்சலம்! ///
நல்லா அரசியல் பண்றீங்க சார்.வருங்காலதுல இருக்கு .
//@ வெங்கிராஜா
அப்டீன்னா???//
என்ன பாஸ்! வாங்க ட்விட்டலாம்னு முதல் போர்டு வச்சிருக்கீங்க? ட்விட்டர் எண்ட்ரென்ஸ் எக்ஸாமுலலயே ஃபெயில் ஆயிருவீங்க போல!
http://10hot.wordpress.com/2009/07/30/tamil-bloggers-acronyms-twitter-shortforms-expansions/
@ இளவட்டம்
:-))
@ வெங்கிராஜா
அட! சூப்பர்ங்க.. நெசமாவே தெரியலங்க...
ஹிந்தி படத்தை பார்க்காமல் இதை பார்த்து விமர்சனம் எழுதியது என்னவோ ரொம்ப சரியா படுது.
////முக்கியமான பி.கு: 2///
ஹி..ஹி
//"இத்தனைத் தவறுகள் நடக்கும் ஊராக எதைக்காட்டியிருக்கிறார்கள் என்றால்... விருத்தாச்சலம்! ஏன் என்பதை நீங்களே யோசியுங்கள். நான் கெளம்பறேன்...!"//
என்னா ஒரு வில்லத்தனம்..........
ஆட்டோ வந்துரப்போகுது தல!!..
//மிகப்பெரிய தொழிலதிபர் மகன் சக்தி (பரத்), காதல் தோல்வி காரணமாக மனது வெறுத்து கால்போன போக்கில் போகையில்,
இவ்ளோ தான் படிச்சேன். ஜப் வீ மெட் படம் தானே? :-) ஷாஹித் இடத்துல பரத் வெச்சு யோசிக்க முடியல. முடிஞ்சா படிக்கிறேன். நான் முழுசா படிச்சேன்னா, (உங்க எழுத்து என்ன படிக்க வெச்சுதுன்னா) உண்மையில் நீங்க பெரிய எழுத்தாளர் தாண்ணே :-)
(அல்லது எனக்கு வேல வெட்டி எதுவுமே இல்லாம இருக்கணும் :-)
/
புருனோ Bruno said...
போண்டா, பாப்கார்ன் நல்லாயிருந்ததா
வண்டியை இண்டிகேட்டர் உடையாமல் எடுக்க முடிந்ததா
/
:)))
வெ.தி.காணமுடியாது. சின்னதிரைலயோ கம்ப்யூட்டர் திரைலயோ பாத்துடுவோம்.
எல்லா படமும் பாத்துடுவீங்களா பரிசல்? ரொம்ப தைரியம்தான் உங்களுக்கு.!
பாடல் ஏதேனும் கேட்கும்படி உள்ளதா?
உங்களை யாருங்க இந்தப்படத்துக்கெல்லாம் போகச்சசொன்னது. இந்தில பார்த்துட்டேன். தமிழ்ல இதுக்கு அப்புறமும் பார்ப்பேனு நினைக்கீறிங்க
படம் நல்லா இருக்குன்னு ஃப்ரண்ட் சொன்னான். எத்தன நாள் ஒடும்.
நல்ல விமர்சனம் கிருஷ்ணா...
க்ளைமக்ஸ் மட்டும் missing....
பரத்தும் தமன்னாவும் இரயிலைத் தவற விட்டு ஓர் ஊரில் மாட்டிக் கொள்கிறார்கள். அந்த ஊரில் நடுரோட்டில் மாருதி வேன் வைத்து, விபச்சாரிகள் கஸ்டமர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரௌடிகள் தமன்னாவைத் துரத்துகிறார்கள். லாட்ஜூகள் விபச்சார கஸ்டமர்களுக்காக வாடகைக்கு விடப்படுகிறது. இத்தனைத் தவறுகள் நடக்கும் ஊராக எதைக்காட்டியிருக்கிறார்கள் என்றால்... விருத்தாச்சலம்! ஏன் என்பதை நீங்களே யோசியுங்கள். நான் கெளம்பறேன்...!
/////
ஆங்கில படத்துல ஜோம்பி வைரஸ் பரவுற மாதிரி இந்த வியாதி எல்லாத்துக்கும் பரவுது.
//இத்தனைத் தவறுகள் நடக்கும் ஊராக எதைக்காட்டியிருக்கிறார்கள் என்றால்... விருத்தாச்சலம்! ஏன் என்பதை நீங்களே யோசியுங்கள். நான் கெளம்பறேன்...!//
இத்தனைத் தவறுகள் நடக்கும் ஊர்... விருத்தாச்சலம்...
நான் கெளம்பறேன்! :))
மொத்தத்தில் படம் மொக்கை என்பதைக் நாசூக்காக சொல்லியிருக்கீங்க...
பரத்த எல்லாம் தொழிலதிபரா கற்பனை பண்ணி கூட பார்க்க முடியலங்க... கவுண்டமணி இத எல்லாம் மனசுல வச்சிதான் அப்போவே இந்த தொழிலதிபர்கள் தொல்ல தாங்க முடியலடா சாமீ'ன்னாரோ?
Post a Comment