ஆதிமூலகிருஷ்ணன் கூப்பிட்டிருந்தார் ‘ஒரு தொடர்விளையாட்டு இருக்கு.. உங்களைக் கூப்பிட்டிருக்கேன்’ ன்னு. போய்ப்பார்த்தா அது தொடர் விளையாட்டு அல்ல. தொடர் பதிவு. ஆதி இதைத் தொடர்பதிவுன்னே குறிப்பிட்டிருக்காரு! இதை ஏன் எல்லாரும் விளையாட்டுங்கறாங்க-ன்னு யோசிச்சப்போ ‘ஒருவேளை பிடிக்காதவங்க்கிட்டேர்ந்து ஆட்டோ வந்தா ‘ஹி..ஹி.. ச்சும்மா விளையாட்டுக்குச் சொன்னேங்க’ன்னு சொல்லித் தப்பிச்சுக்கறதுக்காகன்னு நெனைக்கறேன். நம்மதானே இந்தமாதிரியெல்லாம் பயப்படுவோம், மாதவராஜ் சாரெல்லாம் இந்த மாதிரி எத்தனை ஆட்டோ பார்த்திருப்பாரு.. அவரும் இதை விளையாட்டுன்னு ஏன் குறிப்பிட்டாருன்னா ஒருவேளை அவரே குறிப்பிட்ட மாதிரி குழந்தைத்தனமா யோசிக்கறதாலகூட இருக்கலாம். குழந்தைத்தனமானது எல்லாமே விளையாட்டுதானே!
ம்ம்..எப்படியோ ஒரு பாரா கடத்தியாச்சு.. இந்த மாதிரி ஏதாவது கிறுக்கீட்டே வந்து, டக்னு PASSன்னு இந்தப் பதிவைத் தள்ளிவிட முடியாதான்னு யோசிக்கறேன். என்னாத்துக்கு பிடிக்காதவங்க இவங்கன்னு சொல்லி ஒரு சிலர்கிட்ட வாங்கிக்கட்டிக்கணும்னு தோணுது. ஆனா ஆதி தெளிவா நாளைக்குப் பதிவு போடலைன்னா அப்பறம் பேச்சு வார்த்தையே கிடையாதுன்னுட்டாரு. அதுனால என்ன சல்ஜாப்பு சொன்னாலும் எழுதித்தான் தீரணும்...
இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.
என் பங்குக்கு எக்ஸ்ட்ரா ஒரு விதிமுறை: இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும். இல்லீன்னா பாரதிக்கப்புறம் கவிஞரே இல்லை, காமராஜருக்கப்புறம் தலைவரே இல்லைங்கற உண்மைகள் தொடர்ந்துட்டே இருக்கும். இருக்கறவங்கள்ல பெஸ்ட், வொர்ஸ்டைச் சொல்லுவோமே! (எப்படி மாட்டிவிட்டேன் பார்த்தீங்களா!)
1.அரசியல் தலைவர் (யாருங்க எடுத்த ஒடனே இந்தக் கேள்வியைக் கொண்டு வந்தது..? பாருங்க.. கைகாலெல்லாம் ஒதறுது.. ச்சே...)
பிடித்தவர் : நல்லகண்ணு. பிடிக்காதவர்: விஜய.டி.ராஜேந்தர்
2.எழுத்தாளர்
பிடித்தவர் : எஸ்.ராமகிருஷ்ணன் பிடிக்காதவர் : அனுராதா ரமணன்
3.கவிஞர்
பிடித்தவர் : வாலி பிடிக்காதவர் : ரமேஷ்வைத்யா
4.இயக்குனர்
பிடித்தவர் : கே.எஸ்.ரவிகுமார் பிடிக்காதவர் : பேரரசு (இதுல விக்ரமனுக்கும் இவருக்கும் பெரும் போட்டியே நடந்தது. .000001 மார்க்குல இவரு லிஸ்ட்ல வந்துட்டாரு!)
5.நடிகர்
பிடித்தவர் : ரஜினிகாந்த் பிடிக்காதவர் : ஸ்ரீகாந்த்
6.நடிகை
பிடித்தவர் : நயன்தாரா பிடிக்காதவர் : ஓய்.விஜயா
7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா பிடிக்காதவர் : எஸ்.ஏ.ராஜ்குமார் (ல...ல..ல.லா...)
8. தொழிலதிபர்
பிடித்தவர் : சக்தி ப்ராடக்ஸ் சாந்தி துரைசாமி பிடிக்காதவர் : சரவணா ஸ்டோர்ஸ் ராஜரத்தினம் (வாடிக்கையாளர்களை மதிக்காமைக்கு)
9. அரசு அதிகாரி
பிடித்தவர் : கலெக்டர். ராதாகிருஷ்ணன் பிடிக்காதவர் : வால்டர்.தேவாரம்
10. சின்னத்திரை நட்சத்திரம்
பிடித்தவர் : அனுஹாசன் பிடிக்காதவர் : பூஜா (எப்பவுமே பபுள்கம்மை மென்னுகிட்டே திரிவாங்களே அதுனாலயே பிடிக்காது)
இதைத் தொடர நான் அழைப்பது:
1. இனியவன் உலகநாதன்
2. துக்ளக் மகேஷ்
3. நர்சிம்
4. கார்க்கி
5. முரளிகுமார் பத்மநாபன்
.
32 comments:
என்னா தல,
நம்பளையும் ஆட்டத்துல சேர்த்து விட்டுட்டிங்க.
மலேசியாவுக்கு ஆட்டோ எல்லாம் அனுப்ப முடியாதுல்ல?
ரைட்டு, ஆரம்பிச்சுட்டாங்க
//ஓய்.விஜயா//
அது யாரு....
சொ.செ.சூ மிகவும் அருமை...
//VIKNESHWARAN said...
//ஓய்.விஜயா//
அது யாரு....//
ஒய். விஜயாவைத் தெரியாதா???
ஆவ்வ்வ்வ்வ்....
விஜய டி. ராஜேந்திரன் படங்களிலெல்லாம் அவரின் அப்பாவின்(பெரும்பாலும் செந்தாமரை) சின்னவீடாக(பெரும்பாலும் ஒய்.விஜயா) நடித்தவர்.
வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே...
ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. உலகம் அழிய போவுது.. பூமா தேவி பூமிய பொளக்க போறா அதுக்குள்ள இப்படி எதையாவது எழுதுங்கய்யா..:)
பதில்ல அவர் பெயர் இல்லையேன்னு நினைச்சேன்... ரைட்டு.
ஆரம்பிச்சுட்டாங்கய்யா, அடுத்த பத்து.
[[பிடிக்காதவர் : சரவணா ஸ்டோர்ஸ் ராஜரத்தினம் (வாடிக்கையாளர்களை மதிக்காமைக்கு)]]
இது 100% உண்மை
ரைட்டு, தல பேசாம உங்க பதிவை காப்பி பேஸ்ட் பண்ணிடலாம் போல நிறைய விசயங்கல்ல அவ்ளோ ஒத்துமை, சரி யோசிக்கிறேன்.
@ இனியவன் உலகநாதன்
ஒருவேளை எனக்கு ஆட்டோ வந்தா மலேசியா இல்லீன்னா சிங்கப்பூர் போயிடலாமேன்னுதான் உங்களையும், மகேஷையும் சேர்த்துகிட்டேன்! :-))
@ தராசு
எப்பவோ..
@ விக்கி
ஏன்யா இப்டி?
@ அப்பாவி.முரு
நோட் பண்ணினதுக்கு நன்னி!
@ கேபிள் சங்கர்
பூமாதேவியே எப்படி பூமியைப் பொளப்பா? நாமதான் பொறுப்பில்லாம் நடந்துகிட்டு பொளக்க வெப்போம்னு நெனைக்கறேன்!.
@ பீர்
அவர் பேரை எழுதி கடைசில மாத்தீட்டேன்!
@ சஹானா
மிக்க நன்றி.
@ முரளிகுமார் பத்மநாபன்
நீங்கள்லாம் இந்தப் பக்கம் வருவீங்களான்னு இப்பதான் மெயில்ல அனுப்ப நெனைச்சேன்.. பாத்துட்டீங்களா.. ஓகே!
//விஜய.டி.ராஜேந்தர்
இவர அரசியல்வாதி லிஸ்ட்ல சேர்த்து காமெடி பண்ணிட்டீங்களே. ஒ.கே.. சிம்பு 5 கோடி ரூபாய் காரு வாங்கிருக்காரு, அது உங்க வீட்டுக்கு வரணும்னு..ரைட்..
கிகிகிகிகி..
அன்பின் பரிசல்..
அழைத்தமைக்கு நன்றி.
ஆனால்.
பிடித்தது : பதிவுகள்
பிடிக்காதது : தொடர் பதிவுகள்
என்பதால்..எக்ஸ்க்யூஸ் மீ சார்.
//பீர் | Peer said...
பதில்ல அவர் பெயர் இல்லையேன்னு நினைச்சேன்... ரைட்டு.
//
ரைட்டு தல
6.நடிகை
பிடித்தவர் : நயன்தாரா பிடிக்காதவர் : ஓய்.விஜயா
:)))))))
@ பின்னோக்கி
ஆடி ஆடி வந்து அந்தக் காரை வீட்டுல விட்டுட்டுப் போகச்சொல்லுங்க!
@ கார்க்கி
என்ன சிரிப்பு?
@ நர்சிம்
தெரியும் பாஸு...இனிமே சத்தியமா கூப்பிடமாட்டேன்! அன்புக்கு ரொம்ப நன்றி!
பிடிக்காதவர் : சரவணா ஸ்டோர்ஸ் ராஜரத்தினம் (வாடிக்கையாளர்களை மதிக்காமைக்கு)
100 % உண்மை
Y விஜயா பிடிக்காது Y
@ அமித்து அம்மா
ஹிஹிஹி...
@ அசோக் ஜி
அதெல்லாம் வெளிய சொல்ல முடியுமா பாஸு...
செமத்தியா பண்ணியிருக்கீங்க..
ரமேஷ்வைத்யாவை பிடிக்காதுன்னு சொன்னதுக்கு காரணம் அவர் தொடர்ந்து எழுதாமலிருப்பதுதானே.!!
அப்புறம் அழைத்தவனுக்கும், அழைக்கப்படுபவர்களுக்கும் லிங்க் கொடுக்கப்பிடாதா? உங்களால ஒரு நாலு பேரு நம்ப கடைக்கும் வருவாங்கல்ல.? இல்லைன்னா திரும்பவும் எல்லாப்பதிவுக்கும் பின்னூட்டத்தில் விளம்பரம் பண்ண ஆரம்பிச்சிடவா?
தமிழ்ப் பதிவுலகில் முதல்முறையாக (சரி, இவ்வளவு விரைவாக-ன்னு ஒரு வார்த்தை சேர்த்துக்கறேன்) 500 ஃபாலோயர்களை தொட்டுக்கொண்டிருக்கும் பரிசல்காரனுக்கு என் முதல் வாழ்த்துகளை பதிவுசெய்கிறேன். வாழ்த்துகள் பரிசல்.!!
(அனுஜன்யா :
அதோ அந்த உச்சாணிக்கிளையில் நமக்கு எட்டாம தொங்குது பாருங்க அந்த திராட்சைப்பழம். அது பயங்கரமா புளிச்சுக்கொடுவும்..
ஆதி, மகேஷ் (கோரஸாக) : ஆமா அங்கிள், ஆமா.!!)
ஆமா அங்கிள் ஆமா..
pathivu ulagathai ethavathu seithu colourful aakka sila per irukkiranga ungala mathiri. paraparappum pathartamum niraintha engal ulagam malargirathu
என்று தணியும் இந்த தொடர் விளையாட்டு??
ஆட்டோ வந்தாச்சா???
(வீராசாமியின் வெறித்தனமான விசுவாசிகள்:-)
விஜய.டி.ராஜேந்தர்,அனுராதா ரமணன்,பேரரசு, ஸ்ரீகாந்த்,ஓய்.விஜயா,எஸ்.ஏ.ராஜ்குமார்,வால்டர்.தேவாரம்,பூஜா
ஆஹா.../ எவ்வளவு safe game!!!!!
எச்சரிக்கைக்கு வாழ்த்துக்கள்.
காணாமல் போனவர்களையெல்லாம் தேடி கண்டு பிடித்து இருக்கிறீர்கள்.!!!!!
@ ஆதி
//ரமேஷ்வைத்யா//
கரெக்ட்!!
உங்களுக்கு நான் விளம்பரம் தர்றதா.. சோக்கடிக்காதீக நண்பா...
@ அறிவிலி
அங்கிளா.. அதார அப்படிக் கூப்பிடறீங்க?
@ நாய்க்குட்டி மனசு
மனம் நெகிழ்கிறது நண்பரே.. மிக்க நன்றி.
@ ரோமியோபாய்
அது பதிவுலகோடவே பொறந்ததுங்க... தணியவே தணியாது..
@ கடைக்குட்டி
இன்னும் வர்ல.. சீக்கிரம் அனுப்புங்க. ஆஃபீஸுக்கு நேரமாச்சு!
@ மாதவராஜ்
ஹி...ஹி...ஹி..
ஆனா விஜய டி ராஜேந்தரெல்லாம் காணாமல் போனவர்னு சொல்லி, ஆட்டோவை பலபேர் அவங்கவங்க வீட்டுக்கு திருப்பி விட்டுக்கறீங்களே சார்...
இந்த சேஃப் கேம் அந்த விஐபி-க்களுக்குப் பயந்து அல்ல. அவர்களைப் பிடித்தவர்களாகச் சொல்லிக் கொள்ளும் நண்பர்களை மதித்துதான்...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
(எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டிருக்கு...!)
ரைட்டு... :)
பிடிக்காதவர் : சரவணா ஸ்டோர்ஸ் ராஜரத்தினம் (வாடிக்கையாளர்களை மதிக்காமைக்கு)...
ஜீ.ஜோ வையா மனசுல வச்சு சொல்றீங்க...?
பிடிக்காதவர் : பேரரசு (இதுல விக்ரமனுக்கும் இவருக்கும் பெரும் போட்டியே நடந்தது. .000001 மார்க்குல இவரு லிஸ்ட்ல வந்துட்டாரு!)
அவ்வளவுதான் வித்யாசமா...?ஏன் இந்த அநியாயம்..?
எந்த பூஜா??? thala..
//@ அறிவிலி
அங்கிளா.. அதார அப்படிக் கூப்பிடறீங்க?//
என் கமென்ட்டுக்கு மேல இருக்கும் பின்னூட்டத்தின் தொடர்ச்சி அது.
Post a Comment