Monday, November 30, 2009

காமன்மேன் – 25





ந்தக் காமன்மேனுக்கும், கமலஹாசனின் காமன்மேனுக்கும் சம்பந்தமில்லை. இவர் சம்பளத் தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சாமான்யன். ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஹீரோவாக ஆகிவிடுவார். அரசியல், சினிமா, விளையாட்டு, வாணிகம் என்று எந்த டாபிக் எடுத்தாலும், தெரிந்ததையோ தெரியாததையோ தைரியமாகப் பேசி எதிராளியை சமாளிப்பதில் வல்லவர்.

இந்த வாரம் இவரைப் பற்றிய 25 விஷயங்கள்...

************************

ந்த ஒரு அவசர வேலையாகப் போய்க் கொண்டிருந்தாலும் சரி, ஐந்துபேரைக் கொண்ட - ‘கூட்டம்’ மாதிரியாக - ஏதாவது சாலையில் தென்பட்டால் நின்று வேடிக்கை பார்த்துப் போவது இவரின் தலையாய பழக்கம். என்னவென்று தெரிந்துகொண்டு ஒரு ***ம் **ங்கப் போவதில்லையென்றாலும், வேடிக்கைப் பார்ப்பதில் இவருக்கிருக்கும் சுதந்திரத்தை என்றுமே விட்டுத் தரமாட்டார்.

ல்லா நாளுமே, அடுத்தநாள் பள்ளிக்கு/கல்லூரிக்கு/ஆஃபீஸுக்கு நேரமாகக் கிளம்பி, ரிலாக்ஸாகப் போகவேண்டுமென்று நினைப்பார். ஆனாலும் அந்த அடுத்தநாளும் அப்படியேதான் தொடரும் இவருக்கு.

ணமான ஆண்களுக்கு மனைவியைக் குறை சொல்லிப் பேசுவதில் ஒரு சிற்றின்பம். என்னதான் தன் திருமணவாழ்க்கை வெற்றிகரமாய்ப் போய்க் கொண்டிருந்தாலும், திருமணம் செய்துகொள்வதாய் சொல்பவர்களிடம் ‘மாட்டிக்கிட்டியா?’ என்று பயமுறுத்துவதில் ஆண் பெண் இருவருமே சரிசமம்தான்.

நாடு, அரசியல் தலைவர்கள், தன் குடும்ப மூதாதையர் பற்றித் தெரிந்து கொள்வதை விட, தனக்குப் பிடித்த நடிகரின் படங்கள், சாதனைகள்., பிடித்த விளையாட்டு வீரரின் ரெகார்டுகளை மனனம் செய்து வைத்திருப்பதில் இவருக்கு நிகர் இவர்தான்.

கிரிக்கெட்டில் தன் நாடு தோற்றால் கேவலமான ஒரு கமெண்ட்டும், ஜெயித்தால் அவர்களைக் கடவுளாக்கி ஒரு கமெண்ட்டும் கொடுக்கத் தவறமாட்டார். இது மாறி மாறி நடந்து கொண்டிருந்தாலும், இவர் மாறுவதில்லை.

ன் பிரச்சினைக்கு யாரும் வரவில்லையென்ற ஏக்கம் இவருக்கு எப்போதுமே இருக்கும். ஆனால் பிறருக்கொரு பிரச்சினையென்றால் 'நமக்கெதுக்கு வம்பு' என்று ஒதுங்குவதை நியாயம் கற்பிப்பார்.

ந்தக் கெட்ட பழக்கமுமில்லாமல் எந்தத் தவறும் செய்யாமல் நேர்மையாக, ஒழுங்காக வரி கட்டிக் கொண்டு உதாரணமனிதனாய் வாழ்ந்து வருபவர்கூட, காக்கிச் சட்டையைக் கண்டால் எட்ட ஒதுங்கிவிடும் பயந்தாங்கொள்ளி ஆகிவிடுவார். இந்த காமன்மேனுக்கு மட்டும், காவல்துறை என்றாலே ஆகாது.

ருடாவருடம் காலண்டர் வாங்கினால் விடுமுறை தினங்கள் எந்தக் கிழமையில் வருகிறதென்பதைப் பார்ப்பது இவரது தவறாத பழக்கம்.

‘எதற்காகவும் கவலைப்படமாட்டேன் நான்’ என்பவர் இவர். ஆனால் தன்னைப் பற்றிய கவலை உள்ளூர இருந்து கொண்டேயிருக்கும் இவருக்கு.

ந்தக் கணினி யுகத்தில் டைரி எழுதும் பழக்கத்தை விட்டவர். இருந்தாலும் ஓசி டைரி வராதா என வருடத் துவக்கத்தில் எதிர்ப்பார்க்கும் வழக்கத்தை இன்னும் கைவிடவில்லை.

ண்ணீர் பாட்டிலை குடித்துவிட்டு க்ரஷ் செய்ய வேண்டுமென்பதுதான் முறையென்றாலும், இதுவரை என்றுமே அப்படிச் செய்யாமல் மறக்காமல் வீட்டுக்கு எடுத்துச் செல்வார்.


துணிக்கடைகளில் பிக்‌ஷாப்பர் பைகளுக்கு சண்டை போடுவார். கொடுக்காத கடைகளுக்கு அடுத்த வருடம் போகவும் மாட்டாத ரோஷக்காரர் இவர்.

டம் பார்த்துவிட்டு, மீண்டும் பார்க்க வந்து முன்பின் இருக்கைகளுக்கு கேட்கும் வண்ணம் கதை சொல்லி கழுத்தறுப்பது இவரது பொழுதுபோக்குகளில் ஒன்று.



செல்ஃபோன் வைத்திருப்பது இவருக்கு பெருமையான ஒன்று. அதை அடுத்தவருக்குத் தெரியும்வண்ணம் வைத்திருப்பதும், உரக்கப் பேசுவதும் இவரது உடன்பிறந்த பழக்கம்.

ட்ராஃபிக் சென்ஸ் என்பது இவருக்கு சுட்டுப் போட்டாலும் வராது. அடுத்தவரைப் பற்றிய கவலையின்றி வாகனத்தைப் பார்க் செய்வதில் தொடங்கி, போக்குவரத்தின் போது இவர் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இருப்பதில்லை. வைத்திருப்பது பைக், கார், சைக்கிள் என்று எதுவாகவிருப்பினும் இதில் மாற்றமில்லை.

பொதுக் கழிவறைகளைச் சுற்றி சிறுநீர் கழிப்பது, குப்பைத் தொட்டிகளின் வெளியே குப்பைகளைக் கொட்டுவது என்று துவங்கி, செய்யாதே என்றறிவிக்கப்பட்டவற்றை செய்து பார்ப்பதில் இவருக்கு த்ரில் அதிகம்.

முன்னே செல்லும் பெண்ணை, பின்னாலிலிருந்து பார்த்தபிறகு அவரை முந்திச் சென்று முகம்பார்ப்பதில் இவருக்கிருக்கும் ஆர்வம் ஆண்டாண்டு காலமாய் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதுவே பெண்களுக்கோ ஆணைப் பார்த்துவிட்டாலும், பார்க்காதமாதிரி போவதில் ஒரு இன்பம்.

ஞ்சம் என்பதை ஏறக்குறைய அங்கீகரித்துவிட்டார் இந்தக் காமன்மேன்.

தான்போகும் பேருந்து மெதுவாகச் செல்வதாய்க் குறை பட்டுக் கொள்வார். அதுவே, ஏதாவது பேருந்து வேகமான தாண்டிச் சென்றால், ‘ஓவர்ஸ்பீடுப்பா’ என்று சபிப்பார்.

சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சிவசப்படுவது இவரது நெடுநாளைய பலவீனம்.

க்தி என்பது இவருக்கு சீஸனுக்கு மட்டும்தான் வரும். அப்போதெல்லாம் தன் தேவைக்குத் தகுந்த மாதிரி, ஆன்மிக விதிகளைத் தளர்த்திக் கொள்வார் இவர்.

வரது சமீபத்திய பழக்கம், ‘ஓட்டுப் போட எவ்வளவு கிடைக்கும்?’ என்று எதிர்ப்பார்ப்பது. ஆனால், வாங்கிய காசுக்கு சொன்னமாதிரி ஓட்டுப் போட்டு, தன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொள்வதால் அரசியல் கட்சியினரிடையே இவருக்கு டிமாண்ட் அதிகம்.

வாரிசுகள் பிறந்த உடனே ‘தன் மகன்/மகள் இப்படி ஆகவேண்டும்’ என்று ஏதாவதொரு கனவையும் கூடவே வளர்த்துக் கொள்வார். அதற்கு மாறாக நடந்துவிட்டாலும், ‘அவர்களுக்குப் பிடித்ததை தேர்ந்தெடுக்கிறார்கள்’ என்று விட்டுக் கொடுப்பதில் இவருக்கு எப்போதுமே நற்பெயர்.

றிவுரை சொல்வதும் இவருக்குப் பிடித்தமாதிரி பொழுதுபோக்குகளில் ஒன்று. ‘அதுபோல நீ நடந்து கொள்கிறாயா’ என்று கேட்டால் மட்டும் இவருக்குப் பிடிக்காது.

சொந்தக்காரர்கள், நண்பர்கள் என்று நெருங்கியவர்களாலும், அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் என்று தனக்குப் பிடித்தமானவர்களாலும் ஏமாற்றப்படும்போது மிகவும் உடைந்துபோய்விடுவார். அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டுமென்று எண்ணுவார். ஆனாலும், அவர்களை மன்னித்து மீண்டும் அவர்கள் பக்கம் நிற்பார்...உதவி செய்வார். இந்த விஷயத்தில் மனிதத்தை வாழவைத்துக் கொண்டிருப்பது இந்த ‘சோ கால்ட்’ காமன்மேன்தான்.


.

46 comments:

Mahesh said...

ம்ம்ம்....நான் ஒரு காமன்மேன்தான் ...

Cable சங்கர் said...

suuper parisal.. பல விஷயங்களை ”அனுபவித்து” எழுதியிருக்கிறீர்கள்..:)

செந்தில் நாதன் Senthil Nathan said...

oru காமன்மானிடம் இருந்து இன்னொரு காமன்மேனுக்கு வாழ்த்துக்கள்..

கேபிள் சொன்ன மாதிரி "அனுபவித்து" எழுதி இருக்க்கிங்க!!

பரிசல்காரன் said...

@ மகேஷ்

நன்றிங்க..

@ கேபிள் சங்கர்

‘உங்க’கிட்டேர்ந்து கத்துகிட்டதுதான் குருவே...

@ செந்தில்நாதன்

கி கி கி...

க‌ரிச‌ல்கார‌ன் said...

எல்லாருக்கும் பொருந்துகிற‌ விஷ‌ய‌ங்க‌ள் (உண்மைக‌ள்)
ந‌ல்லாருக்கு

கார்க்கிபவா said...

நான் கூட அந்த ”காமன்” மேன பத்தி குஜாலா எழுதி இருப்பிங்கன்னு நம்பி வந்து ஏமாந்த காமன்மேன்.

எம்.எம்.அப்துல்லா said...

நம்ப காமன்மேனைப் பற்றி முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லவிட்டுட்டீங்க. இங்க சொன்னா நல்லாருக்காது.ஃபோன் பண்ணுங்க சொல்றேன் :)

karishna said...

ம்...ரொம்ப சரி...

நல்லா இருக்கு பரிசல் ....

ரோஸ்விக் said...

காமன்-ஆ இப்படி ஒரு கூட்டம் நம்ம(நீங்க, நான்) தலைமையில இயங்குறது இயல்பு தானே தலை. :-)

ஸ்ரீ.கிருஷ்ணா said...

nice boss

ரமேஷ் வைத்யா said...

கடைசி காமன் மேன் எந்த ஊர்ல இருக்காரு..? போய்யா போ. போ....

இளவட்டம் said...

///இவரது சமீபத்திய பழக்கம், ‘ஓட்டுப் போட எவ்வளவு கிடைக்கும்?’ என்று எதிர்ப்பார்ப்பது. ஆனால், வாங்கிய காசுக்கு சொன்னமாதிரி ஓட்டுப் போட்டு, தன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொள்வதால் அரசியல் கட்சியினரிடையே இவருக்கு டிமாண்ட் அதிகம்.///

:-))))))

அன்பேசிவம் said...

தலைவரே சூப்பரு...
//வாரிசுகள் பிறந்த உடனே ‘தன் மகன்/மகள் இப்படி ஆகவேண்டும்’ என்று ஏதாவதொரு கனவையும் கூடவே வளர்த்துக் கொள்வார். அதற்கு மாறாக நடந்துவிட்டாலும், ‘அவர்களுக்குப் பிடித்ததை தேர்ந்தெடுக்கிறார்கள்’ என்று விட்டுக் கொடுப்பதில் இவருக்கு எப்போதுமே நற்பெயர்.
//
இது நல்லா இருக்கு

ப்ரியமுடன் வசந்த் said...

அசத்தல்ணா.. அத்தனையும் ...

Athisha said...

;-)

Anonymous said...

அடுத்தது காமன் வுமனா? :))

நர்சிம் said...

கமான்மேன்,பதிவு போடுங்க...என்று பதிவுலகம் உங்களை நோக்கி எழுப்பிய குரலை கேட்க இத்தனை நாளா பரிசல்..

காமன்மேன் சூப்பர்.

பின்னோக்கி said...

என்னையும் சேர்த்துக்கோங்க. 25 ல 20 தேறுது எனக்கு.

பரிசல்காரன் said...

@ கரிசல்காரன்

நன்றி! (உங்க பேரை ஏற்கனவே நான் ரிஜிஸ்டர் பண்ணி வெச்சிருக்கேனே...)

@ கார்க்கி

சத்தியமா இந்த கமெண்ட் உங்கிட்டேர்ந்தோ, குசும்பன்கிட்டேர்ந்தோ வரும்னு எதிர்பார்த்தேன் சகா... நீ முந்திகிட்ட..

@ எம்.எம்.அப்துல்லா

‘அது’வாண்ணே? கரெக்ட்தான்...

@ கரிஷ்ணா

நன்றிங்க... (உங்க பேரு கரெக்டா? னா’? வா ’ணா’? வா?)

@ ரோஸ்விக்

சரிதான் தல!

@ ஸ்ரீகிருஷ்ணா

நன்றி பாஸூ!

@ ரமேஷ்வைத்யா

நீங்களும் நானும் இருக்கறப்ப இப்படி ஒரு கேள்வி கேக்கலாமாண்ணா?

@ இளவட்டம்

நன்றி நண்பா.

@ முரளிகுமார்

நன்றி நண்பா..

@ பிரியமுடன் வசந்த்

நன்றி தம்ப்ரீ!

@ அதிஷா

உங்கள் பின்னூட்டம் கிடைத்ததில் தன்யனானேன் நண்பரே! உங்கள் படைப்புகள் நல்லா இருக்கு அச்சில்!

@ மயில்

அட! இதுகூட நல்ல ஐடியாவா இருக்கே.. யோசிப்போம்!

பரிசல்காரன் said...

@ நர்சிம்

இல்ல பாஸூ.. இனிமே அப்பப்ப எழுதறேன். (அப்பறம்... வாழ்த்துகள் பாஸ்! ரொம்ப சந்தோஷமா இருக்கு. எப்ப பார்ட்டி?)

@ பின்னோக்கி

நம்ம எல்லாருமே காமன்மேன்தாமே நண்பா!

Romeoboy said...

\\செல்ஃபோன் வைத்திருப்பது இவருக்கு பெருமையான ஒன்று. அதை அடுத்தவருக்குத் தெரியும்வண்ணம் வைத்திருப்பதும், உரக்கப் பேசுவதும் இவரது உடன்பிறந்த பழக்கம்.//


இந்த தொல்லையை பார்த்து எத்தனை எரிச்சல் ஆனேன் என்று எனக்கு தான் தெரியும்

இந்த link போய் பாருங்க நான் பட்ட அவஸ்தை தெரியும் http://ennaduidu.blogspot.com/2009/10/mp3-player.html

Jawahar said...

காமன் மேனின் இன்னொரு காமன் பழக்கம் காமத்தை வெல்ல முடியாதிருப்பது. ஆனால் அப்படி வெல்ல முடியாதவர்களை அன் காமன் என்கிற ரீதியில் விமர்சனம் செய்வது!

http://kgjawarlal.wordpress.com

damildumil said...

சமிபத்தில் காரை வாங்கினால் அதை கிட்ட தட்ட எல்லா பதிவிலும் ஒரு வரியையாவது வலுகட்டாயமாகவோ இல்லை எதார்த்தமாகவோ நுழைப்பது தான் கார் வாங்கியிருப்பதை எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதையும் சேர்த்து கொள்ளுங்க சார் :))


இப்படிக்கு
காமன்மேன்

மங்களூர் சிவா said...

haa haa
:)

யுவகிருஷ்ணா said...

மீ த 26த்!

Sanjai Gandhi said...

காமன்மேனை 25ல் அடக்கியது அராஜகம்.. :)

பரிசல்காரன் said...

@ ரோமியோபாய்

நீங்க மட்டுமா..

@ ஜவஹர்

சரியாச் சொன்னேள் போங்கோ!

@ டமீல்டுமீல்

அதை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிப் படித்து, இப்படி நக்கலாகப் பயன்படுத்துவதையும் சேர்த்துக் கொள்ளலாம்!

:-))) (நானும் ஸ்மைலி போட்டுட்டேன்!)

இப்படிக்கு
இன்னொரு காமன்மேன்

@ யோவாய்ஸ் யோகா

நன்றி

@ மங்களூரார்

ஹி ஹி ஹி

@ யுவா

மீ 28த்!

@ சஞ்சய்காந்தி

அவர் அடங்கமாட்டாதவர்.

ungalrasigan.blogspot.com said...

\\லஞ்சம் என்பதை ஏறக்குறைய அங்கீகரித்துவிட்டார் இந்தக் காமன்மேன்.// \\பக்தி என்பது இவருக்கு சீஸனுக்கு மட்டும்தான் வரும். அப்போதெல்லாம் தன் தேவைக்குத் தகுந்த மாதிரி, ஆன்மிக விதிகளைத் தளர்த்திக் கொள்வார் இவர்.// 25-மே கச்சிதம். மேலே கொடுத்திருக்கும் இரண்டும் கன கச்சிதம்!

பரிசல்காரன் said...

@ ரவிப்ரகாஷ்

சார்.. மிக்க நன்றி!

க.மு.சுரேஷ் said...

//எல்லா நாளுமே, அடுத்தநாள் பள்ளிக்கு/கல்லூரிக்கு/ஆஃபீஸுக்கு நேரமாகக் கிளம்பி, ரிலாக்ஸாகப் போகவேண்டுமென்று நினைப்பார். ஆனாலும் அந்த அடுத்தநாளும் அப்படியேதான் தொடரும் இவருக்கு.//
.
மிகவும் அருமை.

கிருபாநந்தினி said...

கலக்குறீங்களே பரிசல்! \\மணமான ஆண்களுக்கு மனைவியைக் குறை சொல்லிப் பேசுவதில் ஒரு சிற்றின்பம்.// மணமான பெண்களுக்குக் தங்கள் கணவனுக்குச் சாமர்த்தியம் பத்தாது என்று குத்திக் காட்டிப் பேசுவதில் ஒரு பேரின்பம்! (இதை எழுதுனதுக்கு நன்றியுபகாரமா தந்தைக்குலங்கள் எல்லாரும் என் பிளாகைப் படிச்சு ஆகா, ஓகோன்னு பாராட்டிப் பின்னூட்டம் போடணும்னு கேட்டுக்கறேன்.)

angel said...

"நாடு, அரசியல் தலைவர்கள், தன் குடும்ப மூதாதையர் பற்றித் தெரிந்து கொள்வதை விட, தனக்குப் பிடித்த நடிகரின் படங்கள், சாதனைகள்., பிடித்த விளையாட்டு வீரரின் ரெகார்டுகளை மனனம் செய்து வைத்திருப்பதில் இவருக்கு நிகர் இவர்தான்."


when comparing all them and especially this point most of the common men are in tamil nadu i hope so

பரிசல்காரன் said...

@ kmsuresh21

அனுபவமா நண்பா?

@ கிருபாநந்தினி

ஆஹா.. ஓஹோ...

@ angelintheheaven

//in tamil nadu //

Only?

செ.சரவணக்குமார் said...

மிகச்சரியாக உள்வாங்கி எழுதியிருக்கிறீர்கள்.

இரவுப்பறவை said...

எப்படிங்க... சரியா கவனிச்சு இருக்கீங்க...

Thamira said...

மனைவியைக் குறை சொல்லிப் பேசுவதில் ஒரு சிற்றின்பம்//

ஏதோ வம்புக்கு பேசுகிறார்கள் என்பது மாதிரி சொன்ன இந்த பாயிண்டைத்தவிர மற்ற 24ம் அட்டகாசம்.! :-)

பரிசல்காரன் said...

நன்றி சரவணகுமார் & இரவுப்பறவை

பரிசல்காரன் said...

@ ஆதி

நான் நெனைச்ச பின்னூட்டத்தைப் போட்டதுக்கு நன்றி ஆதி!

மாதவன் said...

நன்றாக சொன்னீர்கள். இந்த பன்புகள் ஓன்று கூட அமையப் பெறாதவரை எந்த கணக்கில் எடுத்துக்கொள்வது?

Kumar said...

Pathivu nalla irukku... Valthukkal..

Kumky said...

சின்ன வலைதான்...
ஆனாலும் சிக்காத மீன்களே இல்லையெனலாம்.

காமன் மேனில்லை காமன் ப்ராப்ளம்.

பரிசல்காரன் said...

நன்றி மாதவன், குமார் & கும்க்கியண்ணா

பெசொவி said...

//தண்ணீர் பாட்டிலை குடித்துவிட்டு க்ரஷ் செய்ய வேண்டுமென்பதுதான் முறையென்றாலும், இதுவரை என்றுமே அப்படிச் செய்யாமல் மறக்காமல் வீட்டுக்கு எடுத்துச் செல்வார்.
//
super!

"உழவன்" "Uzhavan" said...

எப்படி நடக்கனும்/ நடக்கக்கூடாதுனும் ரொம்ப தெளிவா சொல்லிட்டீங்க.

மஞ்சரி said...

அத்தனையும் உண்மை :-))

பட்டாம்பூச்சி said...

நல்லா இருக்கு :)