Thursday, December 31, 2009

2009 - சொல்லாததும் உண்மை!

நாளைக்கு நியூ இயர். போன நியூ இயர்ல என்னென்ன நடந்ததுன்னு திரும்பிப் பார்க்கிறேன்.

முக்கியமா சொல்லணும்னா – பெரிசா எதுவும் நடந்துடல. ஆனா பெரிசா சொல்லணும்னா முக்கியமா பலவிஷயம் நடந்தது.

அதுல ஒரு நாலு மேட்டரை வரிசைப்படுத்தறேன். படிக்கற நெருங்கிய நண்பர்கள் இதை ஏன் இவ்ளோ நாளா என்கிட்ட சொல்லலன்னு திட்டாதீங்க.. ப்ளீஸ்...

*************************************

யுவன் ஷங்கர் ராஜாவைச் சந்திச்சது:

அரவிந்தன் பட இசை வெளியிட்டப்போ என் நண்பன்கிட்ட சொன்னேன்: “டேய்.. கார்த்திக் ராஜாவை விட யுவன் பெரிய ஆளா வருவாரு பாருடா”ன்னேன். (சந்தேகமிருக்கறவங்க எனக்கு மெயில் அனுப்பினா அந்த நண்பனோட நம்பர் தர்றேன். ஆமாம்பான் அவன்.) அதே மாதிரி எங்கெங்கயோ போயி இதோ பையா வரைக்கும் கலக்கீட்டு இருக்காரு.

எப்படியாவது அவரைச் சந்திக்கணும்னு பலமுறை முயற்சி பண்ணி போன மே மாசம் சென்னை போயிருந்தப்ப அது நடந்துச்சு. ஆனா சரியா பேசமுடியல. அவர் ஸ்டுடியோவுக்கு ராத்திரி நேரம்தான் வருவாருன்னு நம்ம நண்பர் சொல்ல, காத்திருந்து சரியா 11.45க்கு சிரிச்சுட்டே வர்றாரு. ‘ஹாய் கிருஷ்ணா.. ஸாரி கொஞ்சம் லேட்’ங்கறாரு. என்கிட்ட இல்ல. வேறொரு கிருஷ்ணாகிட்ட. எங்களைக் கூட்டீட்டு போனவரைப் பார்த்து சிரிக்கறாரு. அவரும் என்னைக் காமிச்சு ‘உங்களோட ஃபேன்’ன்னு சொல்றாரு. ‘ஓ’ன்னு சிரிச்சுட்டு கை குடுத்தாரு. அப்புறம் உள்ள போய்ட்டாரு. நான் ரெண்டு வார்த்தை பேசலாம்னு நெனைச்சேன். ஆனா முடியல. விடிய விடிய ரெகார்டிங் நடக்கும்னாங்க. நான் தூரத்திலேர்ந்து அரைமணி நேரம் பார்த்துட்டு வந்துட்டேன்.

*****

ச்ச்சின் டெண்டுல்கர் - ஒரு பயணமும், ஆட்டோக்ராஃபும்


என்னதான் சொல்லுங்க. சச்சின் சச்சின்தான். அந்தாளுமேல என்ன விமர்சனக் கணையை செலுத்தினாலும் சிக்ஸருக்கும், ஃபோருக்கும் அனுப்பீட்டே இருக்காரு. அந்த வகைல நான் சச்சினோட மிகப்பெரிய ஃபேன். அவரு கொச்சின் வந்திருந்தார் ஏதோ ஒரு விளம்பர ஷூட்டிங்குக்கு. எனக்கு அந்த விளம்பர கம்பெனியோட ப்ரொடக்‌ஷன் மேனேஜர் பயங்கர ஃப்ரெண்டு. சின்ன வயசுல 25 ரூபா கடன் வாங்கிட்டு இன்னமும் தர்ல. ‘அந்த நன்றிக்கடனை எப்படியாவது அடைக்கறேண்டா’ன்னு சொல்லீட்டே இருப்பான். அத இந்த காரியம் மூலமா செஞ்சும் காமிச்சுட்டான்!




ச்ச்சின் கொச்சின் (என்னா ரைமிங்கு) வர்றதுக்கு ரெண்டு வாரம் முன்னாடியே எனக்கு தகவல் சொல்லீட்டான். “டேய் நண்பா... ரொம்ப ரகசியமான மேட்டர். நீ மட்டும் வந்துடு. யார்கிட்டயும் சொல்லிடாத”ன்னு. அதே மாதிரி ‘ரொம்ப எதிர்பார்த்துட்டும் இருக்காத. ஒருவேளை டூப் வெச்சு எடுக்கறா மாதிரி இருந்தா அவர் வர்றது கேன்சலாகறதுக்கும் சான்ஸ் இருக்கு’ன்னான்.

நமக்கென்ன, போலாம் முடிஞ்சா பார்க்கலாம்.. இல்லையா கேரளால பார்க்கறதுக்கு ஃபிகரா இல்ல? ரசிச்சுட்டு ரிட்டர்ன் அடிக்கலாம்னு முடிவு பண்ணி போனேன். ஹோட்டல்ல தங்கியிருந்தேன். அந்த நாளும் வந்தது. என் நண்பன் சொன்னான்: ‘சச்சின் வர்றது ஆல்மோஸ்ட் கன்ஃபர்ம் ஆயிடுச்சு. ஏழரைக்கு ஃப்ளைட்”ன்னு. டைமே ஏழரையா? அதுசரின்னு நெனைச்சுட்டேன். ஏழரை, எட்டு, எட்டரை, ஒம்பது.. ம்ஹூம். என் ஃபெரெண்டுகிட்டேர்ந்து ஒரு ஃபோனும் வர்ல. ரெண்டு மூணு வாட்டி ஃபோன் பண்ணினேன். ரிங் போகுது எடுக்கல. திடீர்னு சுவிட்ச் ஆஃப். ஆஹா’ன்னு கமுந்தடிச்சு படுக்கப் போனா, ஹோட்டல் ரூமுக்கு ஃபோன். எடுத்தா அவன்தான். ‘சீக்கிரம் கீழ வாடா. ரிசப்ஷன்லதான் இருக்கேன்’ன்னு.

அவசர அவசரமா ஓடினா அவன் என்னை இழுத்துட்டு வெளில நின்னுட்டிருந்த காரைப் பார்த்து ஓடி, கார்க்கதவைத் திறந்து என்னை தள்ளி, அவன் முன்னாடி ஏறிட்டான். “எங்கடா இப்படி அவசரமா கூட்டீட்டு போற? சச்சின் வந்தாச்சா வர்லியா”ன்னு கேட்டேன். “உஷ்ஷ்ஷ்ஷ்”ன்னு கத்தினவன் பின்சீட்ல என் பக்கத்துல இருந்தவர்கிட்ட “ஸாரி ஸார்”ன்னு சொல்லும்போதுதான் அவரைப் பார்த்தேன்.

சச்சின்!


ஏர்போர்ட்டுக்கு அவருக்கு அனுப்பின கார் ப்ரேக் டவுன் ஆகவும், இவனை கார்ல் அனுப்பிருக்காங்க. போற வழிலதான் என் ஃப்ரெண்ட் தங்கீருக்கற ஹோட்டல் இருக்கு’ன்னுருக்கான். அதுக்கு சச்சின் ‘வரட்டும் நோ ப்ராப்ளம்”னுருக்காரு, அதுமட்டுமில்லாம “டோண்ட் டெல் நவ். வி வில் பிக் அப் ஹிம் அண்ட் லெட்டஸ் கிவ் ஹிம் எ சர்ப்ரைஸ்”ன்னிருக்காரு.



என்ன ஒரு மனுஷன். அந்த இருவது நிமிட கார் பயணமும் விடிய விடிய ஷூட்டிங்கில் அவரோடு இருந்த அனுபவமும். அவர்கிட்ட வாங்கின ஆட்டோக்ராஃபும்.... மறக்கமுடிகிற விஷயமா என்ன!

***********************************

ப்ரகாஷ்ராஜ் எனும் அற்புதக் கலைஞன் சந்திப்பு


ஈஷா யோக மையம் சார்பாக திருப்பூரில் 25000 மரக்கன்றுகள் நடும்விழா. சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் எங்கள் முதலாளியின் கெஸ்ட் ஹவுசில் தங்குவதாக ஏற்பாடு. சத்குரு அவர்கள் இங்கே தங்கியிருக்கும் விஷயமறிந்த பிரகாஷ்ராஜ் அதிகாலை அந்த கெஸ்ட் ஹவுசுக்கு வருகிறார். உடன் வந்தவரிடம் நான்தான் முகவரி சொல்கிறேன். வாசலுக்கு வந்து வரவேற்கிறேன். ‘ஹாய் செல்லம்’ என்றபடி இறங்குகிறான் அந்த மகா கலைஞன். உடன் ஸ்ரேயா. அந்த வாரம்தான் கந்தசாமி வந்த வாரம்.




’யார் வீடு இது.. இவ்வளவு அழகாய்.. நேர்த்தியாய் என்று கேட்கிறார். நான் ஆங்கிலத்தில் பேச் ஆரம்பிக்கிறேன். “உங்களுக்கு தமிழ் தெரியும்னா அதுலயே பேசலாம். எனக்கு அதுதான் பிடிக்கும்” என்கிறார். சந்தோஷமாய் பேசுகிறேன்.



இரண்டு மணிநேரம் அந்த விழாவுக்குப் போய் வந்ததுபோக, மற்ற நேரம் முழுவதும் எங்களோடு கழித்தார்கள். பழகுவதற்கு இனியவராய் இருந்த அந்தக் கலைஞன் தேசியவிருதுகளுக்கு அப்பாற்பட்ட கலைஞன் என்பதை மட்டும் அறிந்தேன்.

*******************

இளையராஜாவுடன் ஒரு அலைபேசிப் பாடல்


இது நெஜமா நடந்ததான்னு இப்பவரைக்கும் என்னால நம்பவே முடியல. மூணு நாலு மாசத்துக்கு முந்தி ஒரு நாள். என் சென்னை நண்பர் கூப்டாரு. “கிருஷ்ணா.. அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே’ இந்தப் பாட்டை பாடமுடியுமா?” ன்னு கேட்டாரு. உடனே நாலைஞ்சு வரி பாடினேன்.

உடனே அவரு ‘இப்ப இல்லை. கரெக்டா காலைல ஏழரைக்கு. (இங்கயுமா ஏழரை?) சார் ஏழு மணிக்கு ஸ்டுடியோ வருவாரு. அரைமணி நேரம் கழிச்சு பாடிக்காமி. ஃபோன்ல”ன்னார். “யாருக்கு பாடிக்காட்டணும்? அவரென்ன இளையராஜாவா பாடிக்காட்ட?’ன்னு கிண்டலா கேட்டேன். அவர் “ஆமா ராஜா சாருக்குத்தான்”ன்னாரு பாருங்க. தூக்கி வாரிப்போட்டுது எனக்கு! ரெண்டு மாசம் கழிச்சு துபாய்ல ஏதோ ஷோ இருக்காம். அதுக்கு இந்தப் பாட்டை மட்டும் பாட ஒரு புது வாய்ஸ் கேட்கணும்னாரு”ன்னார். சும்மா சொல்றாரு போலன்னு நெனைச்சேன்.

ஆனா கரெக்டா அடுத்த நாள் கூப்டுட்டார் அந்த நண்பர். ரொம்ப மரியாதையா – மெல்லிசா - பேசினாரு. “இரு சார்கிட்ட தர்றேன்னான்” எனக்கு ஒரு மண்ணும் புரியல. பேசாம இருந்தேன். திடீர்னு அவரோட கரகர மேஜிக் வாய்ஸ்..“பாடு தம்பி”ன்னுது. அவ்ளோதான்.. தொண்டைலேர்ந்து வெறும் காத்துதான் எனக்கு வந்தது. சமாளிச்சுட்டு ‘அமுதே தமிழே’ன்னு ஆரம்பிச்சேன். ரெண்டே வரிதான். ‘சரணம் பாடு’ன்னாரு. ‘தேனூறும் தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம்...’ன்னு ஆரம்பிச்சேன். ‘போதும் போதும்ப்பா’ன்னுட்டு இந்தான்னு என் ஃப்ரெண்டுகிட்ட ஃபோனைக் குடுத்துட்டாரு.

ரெண்டு மணிநேரம் கழிச்சு என் ஃப்ரெண்டு ஃபோன் பண்ணி “ஸாரிப்பா. ராஜா சாருக்கு திருப்திப்படல”னாரு. போய்த் தொலையுது. எப்பேர்ப்பட்ட கலைஞன்கிட்ட பேசினேன் நான்-ங்கற சந்தோஷம் போதாதா எனக்கு!


2010ல?

ஒரே ஒரு ஆசைதான்.

இப்படி நாலுல மூணு புருடாங்கற நிலை மாறி, எல்லாமே சொல்லிக்கறா மாதிரி நடக்கணும். அவ்ளோதாங்க!


.

73 comments:

கோவி.கண்ணன் said...

//நான் ரெண்டு வார்த்தை பேசலாம்னு நெனைச்சேன். ஆனா முடியல. விடிய விடிய ரெகார்டிங் நடக்கும்னாங்க. நான் தூரத்திலேர்ந்து அரைமணி நேரம் பார்த்துட்டு வந்துட்டேன்.//

முன்னே பின்னே தெரியாதவர்களிடம் நாமும் 4 வார்த்தை பேசுவதே மிகுதி தானே.

********

மீ த பர்ஸ்ட் !

Anonymous said...

//இப்படி நாலுல மூணு புருடாங்கற நிலை மாறி//

நல்லா யோசிக்கறீங்க :)

பரிசல்காரன் said...

@ கோவி கண்ணன்

வாங்க ஜி!

புத்தாண்டு வாழ்த்துகள்.

பரிசல்காரன் said...

@ சின்ன அம்மணி

ரகசியம் காப்போம். இப்படி ஒடச்சிட்டீங்களே.. பதிவைப் படிக்காம பின்னூட்டம் மட்டும் படிக்கறவங்க இருக்காங்கள்ல?

ஹாப்பி நியூ(ஸ்) இயர் மேடம்!

sriram said...

யோவ்...
படிக்க படிக்க எவ்வள்வு சந்தோஷமா இருந்தது தெரியுமா?? இன்னிக்குத்தான் ஆதியோடு பதிவும் படிச்சேன், ஆகா நம்ம இன்னொரு நண்பரும் பல முக்கியப் புள்ளிகள (அதுவும் எனக்கு பிடிச்சவங்கள)சந்திச்சிருக்கிறாரே என்று மகிழ்வா இருந்த போது.. இப்படி போட்டு உடைச்சிட்டியே.....

எனி வே, புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,
ஆசைகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

புத்தாண்டு வாழ்த்துகள்.

ஆரூரன் விசுவநாதன் said...

படிக்கும்போதே ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது....பரிசல்.

இந்த ஆண்டும் இதுபோல், உங்கள் அனைத்து ஆசைகளும் நிறைவேற வாழ்த்துக்கள்

ILA (a) இளா said...

கடைசி வரி படிச்சுட்டு திட்டலாம்னா புது வருசமாம்ல. தொலையுது, புதுவருசத்துல உங்ககிட்ட எல்லாரும் ஆட்டோ கிராஃப் வாங்குமளவிற்கு வளர வாழ்த்துக்கள்!

செந்தில் நாதன் Senthil Nathan said...

//இப்படி நாலுல மூணு புருடாங்கற நிலை மாறி//

கொன்னுட்ட தலைவா ..

புத்தாண்டு வாழ்த்துகள்...

மேவி... said...

பிரகாஷ் ராஜ் உடன் போட்டோ எடுத்திங்க ரைட்டு ...... அவர் கூட வந்த ஸ்ரேயா உடன் என்ன பண்ணுனிங்க ?????? ஹி ஹி ஹி ஹி

போட்டோ ...ஆட்டோ கிராப் ஏதும் வாங்க வில்லையா ???


(இந்த பதிவிற்கு தான் நேத்து நைட் அவ்வளவு பில்ட் அப் அஹ ?????)

மேவி... said...

2009 ல மறக்க முடியாதுன்னா உங்களோடு செல்போன் ல பேசியது தான் ....பிறகு இரண்டு முறை சாட் செய்தது .....

ஏன்ன நீங்களும் ஒரு உயர்ந்த மனிதன் இல்லையா ????

தராசு said...

Happy New Year Thala

மேவி... said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் .........

2010 ல பல நடிகைகளின் அறிமுகம் கிடைக்கவும் வாழ்த்துக்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஆட்டோ.. கிராஃபா...........,

சீமாச்சு.. said...

புருடாவே எழுதிக்கிட்டிருக்கிறவங்க மத்தியிலே.. அட்லீஸ்ட் நாலுக்கு ஒண்ணாவது உண்மையை எழுதறவங்களே அபூர்வம்..

புத்தாண்டு வாழ்த்துக்கள்..

அன்புடன்
சீமாச்சு..

Unknown said...

//(சந்தேகமிருக்கறவங்க எனக்கு மெயில் அனுப்பினா அந்த நண்பனோட நம்பர் தர்றேன். ஆமாம்பான் அவன்.)//

அதுக்கு எவ்வளவு காசு குடுத்து வச்சிருக்கிங்க?

Unknown said...

//என்ன ஒரு மனுஷன். அந்த இருவது நிமிட கார் பயணமும் விடிய விடிய ஷூட்டிங்கில் அவரோடு இருந்த அனுபவமும். அவர்கிட்ட வாங்கின ஆட்டோக்ராஃபும்.... மறக்கமுடிகிற விஷயமா என்ன!

//

பொறாமையா இருக்கு பாஸு உங்களப் பாக்க..

Unknown said...

//’யார் வீடு இது.. இவ்வளவு அழகாய்.. நேர்த்தியாய் என்று கேட்கிறார். நான் ஆங்கிலத்தில் பேச் ஆரம்பிக்கிறேன். “உங்களுக்கு தமிழ் தெரியும்னா அதுலயே பேசலாம். எனக்கு அதுதான் பிடிக்கும்” என்கிறார். சந்தோஷமாய் பேசுகிறேன்.
//

இதற்காகவாவது பிரகாஷ் ராஜை வணங்குகிறேன்

Unknown said...

//அவரோட கரகர மேஜிக் வாய்ஸ்..“பாடு தம்பி”ன்னுது. அவ்ளோதான்.. தொண்டைலேர்ந்து வெறும் காத்துதான் எனக்கு வந்தது. சமாளிச்சுட்டு ‘அமுதே தமிழே’ன்னு ஆரம்பிச்சேன். ரெண்டே வரிதான். ‘சரணம் பாடு’ன்னாரு. ‘தேனூறும் தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம்...’ன்னு ஆரம்பிச்சேன். ‘போதும் போதும்ப்பா’ன்னுட்டு இந்தான்னு என் ஃப்ரெண்டுகிட்ட ஃபோனைக் குடுத்துட்டாரு.//

இது போதுமே உங்களுக்கு ஜென்ம சாபல்யம் அடைஞ்சாச்சு

Unknown said...

//ஒரே ஒரு ஆசைதான்.

இப்படி நாலுல மூணு புருடாங்கற நிலை மாறி, எல்லாமே சொல்லிக்கறா மாதிரி நடக்கணும். அவ்ளோதாங்க!
//

அப்பிடி நடக்கும்போது நானும் மேல போட்ட பின்னூட்டம் எல்லாம் போடணும்னு நானும் ஆசப்படுறேன்.

எறும்பு said...

//இப்படி நாலுல மூணு புருடாங்கற //


அண்ணே நல்லா இருங்கண்ணே

;))

anujanya said...

அடப்பாவி, பால வார்த்த. பொறாமையில் பொசுங்கி, கடோசி வரியில் பால வார்த்த. நல்லா இருப்பா.

இளா சொன்னதுதான். இந்த புது வருஷத்தில் உங்க கிட்ட ஆட்டோகிராப் வாங்கும் அளவுக்கு நீங்க உயரவும், எனக்கு அதிர்ஷ்டம் இருக்கவும் ......சீக்கிரமே பிராப்திரஸ்து.

அனுஜன்யா

Anonymous said...

கிருஷ்ணா,

நீ எதுக்கு அடுத்தவங்க ஆட்டோ கிராபுக்கு ஆசைப் படுறே. எங்க குழந்தககிட்ட இதோ போறாரு பாரு கிருஷ்ணா அவரு என் பிரண்டு பெருமையாச் சொல்லுகிற நாள் வரும்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

மேவி... said...

600 followers adaiya valthukkal

ஸ்வாமி ஓம்கார் said...

இத்தனை வி.ஐ.பிக்களை சந்திக்கும் பாக்கியம் ஏப்ரல் 14ல் ஒரு வி.ஐ.பியை சந்திர்த்த பிறகு தான் அமைந்ததாக ரகசிய தகவல் :) உண்மையா?

எம்.எம்.அப்துல்லா said...

யோவ் லூசு.. இந்த வருஷம் ஒரு பெரிய மனுஷன் உங்க மில்லுக்கு வந்துட்டு போனதும், ஆன்டுவிழாவுக்கு திரும்ப வர்றேன்னு சொன்னதும்...

இதெல்லாம் மறந்துட்டியேய்யா..

புத்தாண்டு வாழ்த்துகள்ணா :)

எம்.எம்.அப்துல்லா said...

//நீ எதுக்கு அடுத்தவங்க ஆட்டோ கிராபுக்கு ஆசைப் படுறே. எங்க குழந்தககிட்ட இதோ போறாரு பாரு கிருஷ்ணா அவரு என் பிரண்டு பெருமையாச் சொல்லுகிற நாள் வரும்.

//

அண்ணாச்சி நீங்க அவுட்டேட்டட் :)))

இந்த பின்னூட்டத்தை ரொம்பக் காலத்துக்கு முன்னாடியே நான் பரிசலுக்கு போட்டுட்டேன் :)

Jerry Eshananda said...

போன மாசம் பின்லேடனை மீட் பண்ணின போது,உங்களை ரொம்ப கேட்டதாக சொல்ல சொன்னாருங்கோ

taaru said...

//அவரோட கரகர மேஜிக் வாய்ஸ்..“பாடு தம்பி”ன்னுது. அவ்ளோதான்..//
ஓர் இசைச் சித்தனிடம் பேசி விட்டீர்கள் தல...என் பெருமை எல்லாம் அந்த சுயம்புவுடன் பேசியவரிடம் நானும் பேசுகிறேன்...!!!!!!!!

//சச்சின்....//
பொறாமைப்புகை என் காதுகளில்...

இனியதோர் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

sathishsangkavi.blogspot.com said...

2010ல் உமது ஆசைகள் அனைத்தும் நிறைவேற எனது மனமார்ந்த
வாழ்த்துக்கள்......

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே......

இரவுப்பறவை said...

முடியலீங்க இதுலயுமா...
எவ்ளோ ஆசையா படிச்சேன் ச்சே..
சரி, சரி எல்லாம் நல்லபடியா இந்த வருஷம் நடக்கட்டும்!

Cable சங்கர் said...

வரும் ஆண்டில் புருடாக்கள் நிஜமாக வாழ்த்துகிறேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

ஏனுங் இப்டி ஏமாத்துனிங்...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

butterfly Surya said...

கிருஷ்ணா, ரொம்ப ஆர்வமா படித்து வந்தேன். அவ்வ்வ்..

இனி வரும் புத்தாண்டில் எல்லா ஆசைகளும் நிறைவேற வாழ்த்துகள்.

பரிசல்காரன் said...

@ Sriram

நன்றி ஸ்ரீ!

ப்ளீஸ் நோ ஆங்க்ரி. ஈட் ஜாங்கிரி!!

@ டி வி ஆர்

20பத்தாண்டு வாழ்த்துகள்.

@ ஆரூரன் விசுவநாதன்

படிக்காமயே பின்னூட்டம் போடறதுல பிஹெச்டி வாங்குவீங்க பாஸூ!

@ இளா

நன்றி நண்பா. நெம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு!

@ செந்தில்நாதன்

நன்றி பாஸ்!

Unknown said...

// இப்படி நாலுல மூணு புருடாங்கற நிலை மாறி, எல்லாமே சொல்லிக்கறா மாதிரி நடக்கணும். அவ்ளோதாங்க!//

ச்சே .., கடைசில இப்படி ஒரு ட்விஸ்ட்-ஆ .., இவையாவும் உண்மையாக வாழ்த்துக்கள் .., இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

கார்க்கிபவா said...

சகா,

கூடிய சீக்கிரத்தில் ஏதாவது ஒரு புத்தகத்தில் ”இந்தப் புத்தகத்தை பரிசல்காரனுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று இருப்பதை பார்க்கனும்ன்னு எனக்கு ஆசையா இருக்கு :)))

பரிசல்காரன் said...

@ டம்பீமேவி

//2009 ல மறக்க முடியாதுன்னா உங்களோடு செல்போன் ல பேசியது தான்//

திஸ் பீஸ் ஐ லைக்!!

@ தராசு

நன்றி பாஸ். உங்களுக்கும்!

@ சுரேஷ்

ஆமாமா..

@ சீமாச்சு

நன்றிங்க.

@ முகிலன்

கி கி கி.

நீங்க ஏமாறலைன்னு நெனைக்கறேன். வருகைக்கு நன்றி பாஸு!

@ ராஜகோபால்

எல்லாம் உங்க ஆசீர்வாதம்க...

@ அனுஜன்யா

நன்றி. 2009ல என் வளர்ச்சில (அப்படீன்னு ஒண்ணு இருந்தா) நீங்களும் வடகரை வேலன் அண்ணாச்சியும் முக்கியப் பங்கு வகிச்சீங்க சாரே.. அதுக்கும் பெர்சனல் நன்றிகள்!

@ வடகரைவேலன்

நூறாயிசு உங்களுக்கு.

@ டம்பீமேவி

நன்றிங்க..

@ ஸ்வாமி ஓம்கார்

நன்றி ஸ்வாமி. அதுவும் உண்மை...

@ எம் எம் அப்துல்லா

நீங்களும் ஒரு விஐபிதானே.. அதுலென்ன டவுட்டு உங்களுக்கு!

@ ஈசானந்தா

இந்த மேட்டர் எஃப்பிஐக்கு தெரியுமா?

@ டாரு

கி கி கி..

பரிசல்காரன் said...

@ சங்ககவி

நன்றிங்க.

@ சௌந்தர்ராஜன்

நன்றி சார்.

@ கேபிள்சங்கர்

2010ல நீங்க படம் பண்றீங்கன்னு கேள்விப்பட்டேன். அப்ப நிச்சயமா நான் இவங்களை சந்திக்க வருவேன்ல?

@ வசந்த்

விடுங்க விடுங்க...

நன்றி.

@ பட்டர்ஃப்ளை சூர்யா

நன்றிங்க. அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்க ஜி...

@ பேநாமூடி

இனிய ட்விஸ்ட் தானே.. பொறுமை ப்ளீஸ்..

@ கார்க்கி

நடக்கும்ப்பா. வாழ்த்துகள்!! (உன் புக் வரத்தான் போகுது. சமர்ப்பிக்கறயான்னு பார்க்கத்தனே போறேன்...)

@

அமுதா கிருஷ்ணா said...

ஏப்ரல் மாதம் போட வேண்டிய பதிவு....புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Prabhu said...

தலையில அடிச்சுகிட்டேன்!

யோ வொய்ஸ் (யோகா) said...

முடியல

Thamira said...

ரொம்ப ஓவரா பண்றீங்கன்னு மட்டும் எச்சரித்துக்கொள்ள விரும்புகிறேன். :-)

கடைக்குட்டி said...

உங்க அளப்பற தாங்கலியே...

2010ல இன்னும் நெறயா கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள் .:-)

ப்ரியா கதிரவன் said...

இளையராஜா மேட்டர் வர்ற வரைக்கும் உண்மைன்னே நெனச்சு படிச்சேன்......நான் அப்பாவின்னு புரியுது.

பரிசல்காரன் said...

@ அமுதா கிருஷ்ணா

புத்தாண்டு வாழ்த்துகள்!

@ பப்பு

யார் தலைல?

@ யோகா

ஆமாமா... இன்னும் இருக்கு...

@ ஆதிமூலகிருஷ்ணா

ஏன் இ வயித்தெரிச்சல்? நீங்க நெஜமாவே மீட் பண்ணும்போது நான் கற்பனைல நான் பண்ணக்கூடாதா...

@ கடைக்குட்டி

தாங்கித்தானே ஆவணும்..

ஹி ஹி ஹி..

@ ப்ரியா

நோ பீலிங்கு. சாரிங்க..

ஹாப்பி நியூ இயர்!

திருவாரூர் சரவணா said...

ரொம்ப சந்தோசம்...ரீல் விட்டதுக்கும், ரியல சொன்னதுக்கும்.

பின்னோக்கி said...

எனக்கொன்னவோ பிரகாஷ்ராஜ் பக்கத்துல நிக்குறது கிராபிக்ஸ் மாதிரி தெரியுது.

புத்தாண்டு வாழ்த்துக்கள். 2010 உங்கள் ஆசை நிறைவேறட்டும்.

பரிசல்காரன் said...

@ சரண்

நன்றி.

@ பின்னோக்கி

அது நாந்தான். அதே மாதிரி மேல இருக்கற ஸ்ரேயா/பிரகாஷ்/சத்குரு ஃபோட்டோவை எடுத்ததும் நான்தான்!

ஓகே.. ஒரு கேள்வி - அப்படி இல்லைன்னா, நான் சொல்றது (நாலுல ஒண்ணு நிஜம்) எதுன்னு நீங்க நெனைக்கறீங்க?

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நான் சொல்றேன் ;நான் சொல்றேன் எது உண்மையின்னு. பிரகாஷ் ராஜ் நிகழ்ச்சி தான். ஏன்னா அவரை பற்றி அறிந்தவரையில் so சிம்பிள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

mahendran said...

என்னங்க இது..
நான் ரொம்ப சிலிர்த்துபோயி படிச்சிட்டு இருக்கேன்..
கடைசியில இப்படி..
நிஜமாவே நீங்க ராஜாகிட்ட பாடலைன்னாலும்,
படிக்குறப்பவே அவ்வளோ சுகமா இருக்கு..
அப்படி ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கு அமைய வாழ்த்துக்கள்..
புத்தாண்டு வாழ்த்துக்கள் கிருஷ்ணா..!!

தாரணி பிரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))))

பரிசல்காரன் said...

@ நாய்க்குட்டி மனசு

ச்சே.. கண்டுபிடிச்சுட்டீங்களே.. சூப்பருங்க! (வாலி அஜித் எக்ஸ்ப்ரஷனை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு படிக்கவும்)

@ மகேந்திரன்

நன்றி ஜி!

@ தாரணிப்ரியா

நன்றி. உங்களுக்கும் அதே புத்தாண்டு வாழ்த்துகள்.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

யோவ்....(செல்லமா, கோவிச்சுகாதீங்க), வருட பிறப்புக்கு பதிவு போடா சொன்னா, ஏப்ரல் ஒன்னுக்கு போட வேண்டிய பதிவ போட்டு இருக்கீங்க....

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

வெற்றி said...

இந்த புத்தாண்டில் நீங்கள் பரிசலில் இருந்து கப்பலுக்கு முன்னேற வாழ்த்துக்கள் :)

வெற்றி said...

எனது வலைப்பக்கம்..
http://www.nenjinadiyil.blogspot.com/

பாண்டி-பரணி said...

நான் கூட உண்மையின்னு நெனெச்சேன்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

வால்பையன் said...

செம பல்பு எனக்கு!

ஆனா பிரகாஷ்ராஜுடன் சேர்ந்து எடுத்த போட்டோ தான் லாஜிக்கில் இடிக்குது, இவையெல்லாம் உண்மையாக இருக்குமோ, நம்மாள் தன்னடக்கத்தில் சொல்றாரோன்னு!

குசும்பன் said...

சச்சின் மேட்டரை படித்ததும் கொஞ்சமா பொறிதட்ட நேரா கீழே வந்து பார்த்துட்டேன், ஆகையால் சேதாரம் கம்மி:)

இந்த நாலுபேரும் உன்கிட்ட ஆட்டோகிராப் வாங்கும் படி நீ பெரிய கேடி கில்மாவா வர வாழ்த்துக்கள்:))

creativemani said...

பதிவுலேயே ட்விஸ்ட்டா???
ஹ்ம்ம்.. :)
புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிசல்..

அக்னி பார்வை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

ரைட்டு!

ARV Loshan said...

எவ்வளவு பெருமையுடன் வாசித்துக் கொண்டு போனேன்..
அடப்பாவி பரிசல் அண்ணே.. வரும் கோபத்தில் இந்தியாவுக்கே வந்து நாலு சாத்து சாத்தினா என்ன எனும் ஆத்திரம் வருது..
பிரகாஷ் ராஜ் சந்திப்பு மட்டுமே உண்மையா? ;)

RaGhaV said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிசல்.. :-)))

சுரேகா.. said...

எல்லா புருடாவும் உண்மையாகிடும் தலைவா..
என்ன ஒரு மாற்றம்னா..

யுவன்..நான் பரிசலைப்பார்த்தபொழுதுன்னும்..

இளையராஜா..பரிசல் எனும் பாடகன் ன்னும்

சச்சின்...என் திருப்பூர் நண்பன் கிருஷ்ணான்னும் கட்டுரையோ, பேட்டியோ குடுக்குறமாதிரி ஆகப்போவுது..!

கண்ணகி said...

அய்யோ.... ஏன் இப்படி.ஹ. ஹா...கா.....புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கண்ணகி said...

உங்கள் கனவுகள் புத்தாண்டில் நனவாகட்டும்.

குப்பன்.யாஹூ said...

these people are not great people. If you spend 50,000 you can meet all these 4 people.

new year wishes.

கோபிநாத் said...

அட போங்க தல...எம்புட்டு ஆசையாக படிச்சிக்கிட்டே வந்தேன்...இப்படி ஆப்பு வச்சிட்டிங்க !!

மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ;)

பரிசல்காரன் said...

@ பாலகுமாரன்

ஹி ஹி ஹி/.. டேங்சுங்க..

நன்றி வெற்றி

நன்றி பாண்டிபரணி

நன்றி வால்பையன் (அது உண்மைதாம்பா!)

@ குசும்பன்

கேடி கில்மாவா? அதுசரி! மீ த டீசண்டு!

@ அன்புடன் மணிகண்டன், அக்னிபார்வை, அன்புடன் அருணா

மிக்க நன்றி!

@ லோஷன்

அப்படியாச்சும் வாங்கய்யா.. நானும் ஒரு விஐபியைப் பார்த்தேன்னு சொல்லி்க்குவேன்ல...

@ ராகவ்

நன்றி.

@ சுரேகா

தேங்க்ஸ்ப்பா.. அதுக்காக தலைவான்னா கூப்டறது? கி கி கி!!!

@ கண்ணகி

நன்றி

@ குப்பன் யாஹூ

ஒருத்தரைப் பார்க்க 50000 ரூவா செல்வு பண்ணனும்னா அவங்க க்ரேட் பீப்பிள்தானே பாஸு?

பட், உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

@ கோபிநாத்

நன்றி கோபி. உங்களுக்கும்...

தேசாந்திரி-பழமை விரும்பி said...

பரிசல், நல்ல எழுத்து நடை. பாராட்டுகள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பின்னோக்கி said...

ஹீ..ஹீ..எங்களை வெறுப்பேத்தினதால 3 பொய்யோட, நாலாவது பொய்யா, 1 நிஜம்னு சொன்னது பொய்ன்னு சொல்றத்துக்காக கிராபிக்ஸ்னு சொன்னேன்