Friday, December 18, 2009
வேட்டைக்காரன் - பார்டரில் பாஸ்!
ரஜினி படத்திற்கு தான் இப்படி ஒரு ஓபனிங்கைப் பார்த்திருக்கிறேன். ரஜினியின் அடுத்த வாரிசாக தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டாலும், விஜய்யின் இந்த உயரம் நிஜமாகவே பிரமிக்க வைக்கிறது! தியேட்டருக்கு போகும்போது இன்னோரு தியேட்டரைக் கடக்க வேண்டி வந்தது. பத்து நிமிடம் ட்ராஃபிக் ஜாமாகுமளவு கூட்டம். தியேட்டரின் எல்லா பக்கங்களிலும் நீஈஈஈஈள நீஈஈஈஈள ஃப்ளக்ஸ் பேனர்கள். பேனர்களில், எஸ்.ஏ.சி, விஜய், சஞ்சய் என்று தலைமுறைகள்! ஹாட்ஸ் ஆஃப் டு யூ விஜய்!
வேட்டைக்காரன். வெகுநாள் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படம். எதிர்பார்ப்பை எந்த அளவு பூர்த்தி செய்திருக்கிறது...?
வழக்கமான விஜய் படம். போலீஸ் ஆகும் ஆசையில், சென்னைக்கு படிக்க வரும் விஜய் தோழி ஒருத்திக்கு நேரும் கொடுமை கண்டு பொங்குகிறார். அதனால் வில்லன் & கோ-வால் பழிவாங்கப்படுகிறார். படிப்பு, பிழைப்பு எல்லாம் போய்விட தான் ரோல் மாடலாக நினைத்துக் கொண்டிருக்கும் போலீஸ் அதிகாரி தேவராஜுடன் சேர்ந்து இவரும் தாதா ரேஞ்சுக்கு மாறி... ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
முன்பாதி காமெடி, பின்பாதி ஸ்பீடு என்று நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு முன் பாதியின் காமெடி ஸ்பீடாகவும், பின்பாதியின் ஸ்பீடு, காமெடியாகவும் தெரிந்தது.
விஜய் ஒரே பாணி கதையில் நடிப்பது என்று முடிவு கட்டி விட்டார். அவருக்கும் வேறு வழியில்லை, நமக்கும்.
அனுஷ்கா இந்த மாதிரியான படத்தில் ஹீரோயின் என்ன செய்வாரோ அதைச் செய்கிறார். நல்ல அழகி. நடிப்பும் வருகிறதுதான். ஆனாலும் என்னமோ ஒண்ணு மிஸ்ஸிங்!
முதல் பாதியில் சத்யன் காதலியின் கல்யாணத்தை நிறுத்தும் ஐடியா அருமை. அதேபோல, விஜய்யைக் காப்பாற்ற போலிஸ் அதிகாரி தேவராஜைத் தேடி அனுஷ்கா போகும்போது அங்கே நடக்கும் திருப்பமும் நம்மை எதிர்ப்பார்ப்பிற்குள்ளாக்குகிறது.
படத்தில் என்னைக் கவர்ந்தவர் அந்த வில்லன் வேதநாயகம். வெற்றிவிழாவின் ஜிந்தா! குரலே கலக்கலாய் இருக்கிறது. ‘சிவனும் நானும் வேறில்லை’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறார். சொல்லிக் கொண்டே இறக்கிறார். விஜயின் கல்லூரி நண்பராக வரும் (பேரு மறந்து போச்சு!) நடிகரும் கவர்கிறார். நன்றாகவே காமெடி வருகிறது அவருக்கு!
விஜய்?
ஒரு பெரிய கருங்கல்லை கையாலேயே உடைக்கிறார். பட்டு வேட்டியில் சட்டை, லுங்கியில் பேண்ட். காஸ்ட்யூம்ஸ் சொதப்பல். வழக்கமான விஜய் ஸ்பெஷலான டான்ஸ் ஸ்டெப்ஸ், இதில் மிஸ்ஸிங். ஏதோ புது முக நாயகனுக்கு போட்டிருப்பது போல அமைத்திருக்கிறார்கள். இருந்தாலும்....
சீனுக்கு சீன் கவர்கிறார் விஜய். இந்தப் படத்தில் விஜயின் டயலாக் டெலிவரி - க்ளாஸ்! அனுஷ்காவின் பாட்டியிடம் ஒருமாதிரி, அனுஷ்காவிடம் ஒரு மாதிரி, வில்லனிடம் ஒரு மாதிரி என்று மாடுலேஷனில் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். அனுஷ்காவோடு லிப்-டு-லிப் கிஸ் வேறு இருக்கிறது!
வசனங்கள் - பல இடங்களில் நன்றாகவே இருக்கிறது.
இசை: பாடல்கள் ஏற்கனவே பலமுறை கேட்டு ஹிட்டாகிவிட்டது. (ஆனாலும் சின்னத்தாமரை பாடலில் விஜய்க்கு மேக்கப் போட்டவரை கையெடுத்துக் கும்பிடலாம்! தாங்கல!) பின்னணி இசையைப் பொறுத்த வரை ஆக்ஷன் சீன்களில் பெப் ஏற்றும் விஜய் ஆண்டனி, வசன காட்சிகளின் பின்னணியின் டிஜிட்டல் எஸ்.ஏ.ராஜ்குமாராக மிரட்டுகிறார். இரைச்சலும் அதனால் காதுவலியும்தான் மிச்சம்.
இடைவேளைக்குப் பின் கொஞ்சம் செதுக்கியிருந்தால் எல்லார் மனதையும் வேட்டையாடியிருக்கலாம். இந்த வேட்டைக்காரன் - விஜய் ரசிகர்களை மட்டுமே வேட்டையாட எடுக்கப்பட்டிருக்கிறான். ஆனாலும் சலிக்காமல் போவதால் ஓரளவு ஓடுமென்றே சொல்லலாம்!
வேட்டைக்காரன் - 42%
.
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
Cable Sankar said...
வேட்டைக்காரன் – எலி வேட்டை
parisal sir am u r regular log reader.
"வேட்டைக்காரன் - பார்டரில் பாஸ்!"
avare padathula +2 ,4 time attempt
enna kodumai sir ... sura kathai vimarsanam pol iruku thala ithu...
vidunga kuruvi la kalagnar tv , ippo sun tv ellam namma money thane ....
சின்ன தாமரை பூச்சாண்டி வேஷத்துக்கே பசங்களை கூட்டி போகக்கூடாது...
அது சரி எவ்வளவு தேறிச்சு.>>??:)
தல சூப்பரான சூடான யாரையும் நோகடிக்காத விமர்சனம் ...!
நடுநிலையான விமர்சனம்.
//வேட்டைக்காரன் - 42%
நீங்க நம்பரை திருப்பி எழுதுற பழக்கம் உள்ளவரா? உண்மைய சொல்லுங்க பாசு, 42ஆ அல்லது 24ஆ?
இப்போ தான் பாத்துட்டு வர்றேன்.
முடியல.
படத்தை முடிச்சுட்ட பிறகு, ஓடு ஓடு ஓடு ஓடு, வர்றான் பாரு வேட்டைக்காரன்... அப்படின்னு பாடுறது, டாப்பு... சிச்சுவேஷன் சாங்க்
ஒரு பன்ச் டயலாக்கூட இல்லாம விமர்சனமா..?
'அவதார்' பார்த்தாச்சா?
@ vaasudevan
சுறா கதை விமர்சனமா.. அதுக்கப்பறம் நடிக்கற ஒரு பத்து படத்துக்கும் இதே கதைதான் இருக்கும். ஒண்ணும் பண்ண முடியாது.
@ கேபிள் சங்கர்
காசு வாங்கிக் கொண்டு பாட்டெழுதும் புலவனென்று என்னை நினைத்து விட்டீரோ! (ஆமா க்ரூப்பா கெளம்பிப் போனீங்களே.. மத்தவங்ககிட்டேர்ந்து ஒண்ணும் சத்தத்தையே காணோம்?)
btw, விஜய் படத்துக்கு குழந்தைகளோட போய்ப் பாருங்க. எஞ்சாய் பண்ணலாம். அத விட்டுட்டு ஒலக சினிமா பார்த்த அதே நெனைப்புல போகாங்தீங்க பாஸு...
@ பிரியமுடன் வசந்த்
நன்றி நண்பா.
@ துபாய் ராஜா
நன்றிங்க. (ராசா.. உங்க நாட்டுல என் நண்பன் குசும்பன் இருக்கான்.. அவனை நல்லா பார்த்துக்கங்க ராசா..)
@ ட்ரூத்
அங்க கார்க்கிக்கு எடுத்துக் குடுக்கறது. இங்க வந்து ஒப்பாரியா? அடி பின்னீடுவேன்.. ஓடிப்போய்டுங்க..
@ தென்றல்
பார்க்கணும். சண்டே.
‘என்னத்த எழுத’ என்றெண்ணாமல் எண்ணத்தை எழுதுபவன்....wow bantastic varaikal ,
குருவி வில்லு வை விட படம் நல்ல தான் இர்ருக்கு சிங்கப்பூர் லேயே மிக சிறந்த ஓபனிங் கிடைத்து உள்ளது.
//நல்ல அழகி. நடிப்பும் வருகிறதுதான். ஆனாலும் என்னமோ ஒண்ணு மிஸ்ஸிங்!//
மானட மயிலாட எபெக்ட்!!!
பதுங்கியிருந்த புலியை பதிவு போட வைத்த வேட்டைக்காரனுக்கு நன்றீ
இத்தனை நாள் இதுக்குத்தான் காத்துட்டு இருந்தீங்களோ, பழைய ஃபார்ம்முக்கு வாங்க தல.
@ malli
//bantastic varaikal //
பண்டாஸ்டிக்? சரி சரி!
@ சேவியர்
அதத்தான் நானும் சொன்னேன்..
@ கரிசல்காரன்
அதே! அதே!
@ தராசு
புலி வருகுது.. புலி வருகுது.. பட படங்குது நடு நடுங்குது...
//ஆனாலும் சின்னத்தாமரை பாடலில் விஜய்க்கு மேக்கப் போட்டவரை கையெடுத்துக் கும்பிடலாம்! தாங்கல//
செந்தில் ஒரு படத்துல ஒண்டிபுலி போட்டு வருவரே அந்த வேஷம் தானே
ஆமா தல, ஒரு மாதிரி மெளத் டாக் நல்லாவே வந்திருக்கு, வேட்டைக்காரன் பத்தி. சக்க மொக்கன்னு சொன்ன குருவியே எக்கச்சக்கமா பறந்துச்சு.. ஆக வேட்டைக்காரன் செம வேட்டைதான்போல,,,,
வணக்கம் பரிசல்
ம் ம் , க க போ,
தல எனக்கு வந்த தகவல்களும் ஓடிரும்னு தான் சொன்னாங்க...
படம் பார்த்துட்டு என் நண்பர்கள் , ஆசுவாசமடைய... தியேட்டரில் இருந்து பி என் ரோடு வரைக்கும் நடந்தே வந்தாங்கன்னா...பாருங்க,,,,
அவதார் சூப்பர் தல,,,கூட்டமும் ஓவெர்
பார்டர்ல பாஸ் கொடுத்து போனா போகுதுன்னு பாஸ் போட்டுக் கொடுத்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்..!
அனுஷ்காவை பார்த்ததினாலா..?
க = கண்டபடி
கா = காரிதுப்பலாம்
போ =போலிருக்கு
பார்டர்ல பாஸ்னு சொன்னதும் 35 அல்லது 36 போட்டுருப்பீங்கன்னு நினச்சேன்.
சென்னையில் ஓபனிங் அவ்வளவாக நல்லா இல்லை. ரசிகர்கள் ஆரவாரம் தியேட்டருக்குள் குறைவே. இடைவேளைக்கு அப்றம் கப்சிப். (ஆல்பர்ட்டில் பார்த்தேன்)
உங்களுடைய விமர்சனத்தில் ஒரு சில விசயங்கள் மட்டும் ஏற்கும்படி உள்ளது, மத்ததெல்லாம் அந்த படம் பார்ப்பது போலவே இருக்கிறது. மொத்தத்தில் உங்கள் விமர்சனம் பார்டரில் கூட பாசாகாது.
@ நாஞ்சில் நாதம்
அதே! அதே!!
@ முரளி
செம’ன்னு சொல்ல முடியாது... ஓகே.
@ வெட்டிப்பையன்
வணக்கங்க..
@ பேரரசன்
ஜோதில 3-டி நல்லாருக்கா?
@ உ.த
அனுஷ்காவுக்கெல்லாம் மயங்கற ஆளா நாங்க?
@ சுப்ரா
க க போ
@ அதி பிரதாபன்
//உங்களுடைய விமர்சனத்தில் ஒரு சில விசயங்கள் மட்டும் ஏற்கும்படி உள்ளது, மத்ததெல்லாம் அந்த படம் பார்ப்பது போலவே இருக்கிறது.//
புரிஞ்சுது சாமி!
அதெல்லாம் கெடக்குது விடுங்க
நாளைக்கு பரிசல்லே வர்றீங்களா
அல்லது பேருந்துலே வர்றீங்களா
சொல்லுங்க.. .
நாளை சந்திப்போம்.
நன்றி, வாழ்க வளமுடன்.
விமர்சனம் ரொம்ப நல்லாருக்கு
வேட்டைக்காரன் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்
//முன்பாதி காமெடி, பின்பாதி ஸ்பீடு என்று நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு முன் பாதியின் காமெடி ஸ்பீடாகவும், பின்பாதியின் ஸ்பீடு, காமெடியாகவும் தெரிந்தது.//
தளபதி அங்கேயும் இல்லாம இங்கேயும் இல்லாம நடுவாந்திரமா ஆகிடக் கூடாது. உங்கள மாதிரி பெரிய ஆளுங்க எடுத்து சொல்லக் கூடாதா.
விசிட் மை http://www.venthayirmanasu.blogspot.com
செல்லம் உங்க பேரும் படம் பேரும் “காரன்” என்று முடிவதால் எல்லாம் படத்துக்கு பார்டரில் பாஸ் போட்டா நாங்க நம்பிடுவோமா?:)
இந்த ”காரன்” அந்த “காரன்” என்று பெயர் முடியும் ஆட்களை எல்லாம் நம்பவே கூடாதுப்பா! :)
யோவ் வேட்டைகாரனப்பத்தி கொஞ்சமாவது நல்லா எழுதினது நீங்கதானய்யா. அதுக்கு பொய் கொதிக்குறானுகளே.!
http://ashwin-win.blogspot.com/2009/12/blog-post_17.html
இதையும் கொஞ்சம் பாருங்கோ.
@ வி என் தங்கமணி
கார்ல!
சந்திப்போம்!
@ ஸ்டார்ஜன்
நன்றிங்க.
@ நாய்க்குட்டி மனசு
//உங்கள மாதிரி பெரிய ஆளுங்க //
புல்லரிக்குதுங்க. நன்றி!
@ குசும்பன்
ஒன்ன...
@ அஸ்வின்
நான் மனசுல பட்டதத்தான் சொல்லுவேன் பாஸு! அது பொறுக்கல பாருங்களேன்...
படத்தில கதை இருக்கா ?
வேட்டைக்காரன் - 42%
.
..
.
.
.
.
..
வேட்டைக்காரன் - -4.2%
படம் பாக்க டைம் இருக்கு, விமர்சன பதிவு
போட டைம் இருக்கு, ரெகுலர் பதிவு போட்டு
கடைய தொறக்க மட்டும் டைம் இல்லை.
ம்....... ம் நடக்கட்டும்,நடக்கட்டும்
படம் பாக்க டைம் இருக்கு, விமர்சன பதிவு
போட டைம் இருக்கு, ரெகுலர் பதிவு போட்டு
கடைய தொறக்க மட்டும் டைம் இல்லை.
ம்....... ம் நடக்கட்டும்,நடக்கட்டும்
அம்மணி படம் ஜுப்பரு....
என்னது கமெண்டா?? பதிவை படிக்கவே இல்ல இன்னும்..அம்மணியைத்தான் பார்த்துனுருந்தேன்...
படிச்சுட்டு கமெண்டு போடுறங்ணா....
அரைத்த மாவையே திரும்ப அரைக்கும் வேட்டைக்காரன் உலக கொடுமை.
வில்லு,குருவி லிஸ்டுல வேட்டைக்காரன்.
விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
படமும் ஓட போவதில்லை
ஆனா நாங்க மாறி விட்டோம்.
டப்பா படம்.
42 மார்க் கொடுத்ததுக்கு தேங்க்ஸுங்ணா!
தெளிவான விமர்சனம் பக்க சார்பில்லாமல் உள்ளதை உள்ளபடி விமர்சித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் !! நாங்களும் படம் பார்த்தோம் எதிபார்த்தளவு இல்லை . ம்ம்ம் படம் ஓகே ..
பரிசல் சார்.. விஜய்யைப் பிடிக்கும் எவருக்கும் வேட்டைக்காரன் ஒரு சிறிய பின்னடைவு தான்.. உங்கள் பதிவுகளில் மட்டுமே எவர் மனமும் புண்படுத்தா எழுத்துக்களைத் தொடர்ந்து காண முடிகிறது.. வாழ்த்துக்கள்..
ரசிகர்களின் பார்வையில் வேட்டைக்காரன்
விஜய் ரசிகன்: படம் செம சூப்பர். விஜய் நோ சான்ஸ். விஜய் பண்ற காமெடி எல்லாம் பட்டய கிளப்புது. ஐநூறு நாள் கண்டிப்பா ஓடும்.
அஜித் ரசிகன்: என்னய்யா படம் இது? கையால குத்தி கல் உடைக்கிறார்??? அந்த அருவியில் குதிக்கிற சீன் நல்ல காமெடி!!! சாமிகிட்ட மட்டும் தான் சாந்தமா பேசுவாராம். எனக்கு என்னமோ போன படங்களில் கிடைச்ச ஆப்பு தான் இப்போ அவரை சாந்தமா பேச வச்சு இருக்குனு தோணுது. அசல் வரட்டும். வேட்டைக்காரன் சட்னி ஆகிடுவான். பாருங்க.
ரஜினி ரசிகன்: தலைவரை காப்பி அடிக்குறதை இவர் நிறுத்த போவது இல்லை என்பதை நிரூபிக்கும் இன்னொரு படம். விஜய் தம்பி ஆட்டோ ஓட்டினா பாட்ஷா ரஜினி ஆகிட முடியுமா? கால கொடுமை.
கமல் ரசிகன்: எலி வேட்டைக்கு சாரி, புலி வேட்டைக்கு போறவன் எல்லாம் மருத நாயகம் ஆகிட முடியுமா? வரட்டும். அப்போ தெரியும் யார் மாஸ் என்று?
சூர்யா ரசிகன்: டான்ஸ் மட்டும் ஆடினால் போதுமா? நடிக்க வேண்டாமா? அரைச்ச மாவு புளிச்ச வாசம் அதான் இந்த வேட்டைக்காரன்
சராசரி சினிமா ரசிகன்: படம் மொக்கை தான். ஆனால் வில்லு, குருவிக்கு எவ்வளவோ மேல்.
போக்கிரி படம் கிளைமாக்ஸ் தவிர்த்து பத்து தடவை பார்த்து இருக்கேன். அது நல்லா இருந்தது. ஆனால் இதுல ஏதோ ஒண்ணு பெருசா குறைஞ்சு போச்சு. முதல் பாதி போர் அடிக்காம போச்சு. ரெண்டாம் பாதி காதுல மட்டும் இல்லை காலுக்கும் சேர்த்து பூ சுத்துறாங்க.
ஆனா படம் நல்லா ஓடும். தெனவாட்டு படத்தை ஓட வச்ச சன் டிவிக்கு இதை ஓட வைக்கிறது என்ன பெரிய கஷ்டமா?
Post a Comment