கதிர் ஈரோடு சங்கமம் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்த போதும், சென்று சேரும் வரையிலும் இப்படி ஓர் அதிர்ச்சி காத்திருக்கும் என்று நினைக்கவே இல்லை. போய்ச் சேர்ந்தது முதல் முடியும் வரை அடி மேல் அடி என்பது போல அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருந்தார்கள் ஈரோட்டார்கள்.
திருப்பூரிலிருந்து பத்து பேர் கொண்ட குழு மூன்று காரில் சென்று இறங்கும்போது நின்று கொண்டிருந்த பத்து பதினைந்து லக்ஸுரி கார்களைப் பார்த்ததும் ‘ஙே’ என விழித்துவிட்டு சத்தமில்லாமல் அப்துல்லாவின் இன்னோவாவுக்குப் பக்கத்தில் யாருக்கும் தெரியாமல் நிறுத்தி வைத்துவிட்டு (இதுல ஏதோ கட்சி மாநாட்டுக்குப் போறா மாதிரி திருப்பூர் வலைப்பதிவர் பேரவைன்னு ஸ்டிக்கர் வேற... ஹூம்!) நிகழ்ச்சி நடக்கும் அரங்கு நோக்கி நடந்தோம்.
அரங்கிற்கு முன் இருபதுக்கும் மேற்பட்ட டூ வீலர்கள். ‘பதிவர் சந்திப்புதானா.. இல்லை ஏதாவது ஏதாவது கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஃபோட்டோ எடுக்கற இடத்துக்கு வந்துட்டமா’ன்னு குழப்பமாவே இருந்துச்சு.
ஆனா, ஈரோட்டுக்காரங்கதான் ஃப்ளக்ஸ்ல பேனரெல்லாம் கட்டி, ஃபுல் மப்புல இருக்கற வாலுகளுக்கும் தெரியறா மாதிரி நேர்த்தியா அமைச்சிருந்தாங்களே. அதுனால சரியாத்தான் போனோம்.
போனதுமே ‘வாங்க வாங்க’ன்னு வரவேற்றார் அகநாழிகை. உள்ளே போனோம். குளீரூட்டப்பட்ட உள்ளரங்கு. நான் போகும்போது (நாம எப்ப நேரத்துக்கு போயிருக்கோம்?) ஐம்பதுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அமர்ந்திருக்க, மேடையில் சிறப்பு விருந்தினர்கள் அமர்ந்திருக்க, உபசரிப்பு குழு (இதுலயே பத்து பேருக்கு மேல இருந்தாங்க!) உள்ளேயும் எங்களை வரவேற்றது.
மேடையில் வசந்தகுமார் பேசிக் கொண்டிருக்க, கீழிருந்து வால்பையன் அவரை கேள்விகளால் டரியலாக்கிக் கொண்டிருந்தார். ஆரூரான் இது மாதிரியான சந்தேகங்களை இறுதியில் நடக்கும் கலந்துரையாடலின் போது கேட்டுக் கொள்ளலாம்’ என்று சொன்னார். இதையே திரும்பத் திரும்பச் சொல்லி, கலந்துரையாடலின் போதும் யாரோ ஏதோ கேட்க ‘எந்த விஷயமாக இருந்தாலும் கலந்துரையாடலின்போது கேட்கலாமே’ என்பாரோ என்று நினைத்தேன். நல்லவேளை அப்படியெல்லாம் ஆகவில்லை!
வசந்தகுமாருக்கு முன்பே ஆரூரன் பேசியதாகவும், சுவையான ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டாரென்றும் நண்பர்கள் சொன்னார்கள்.
சுமஜ்லா தொழில்நுட்பம் குறித்து நுட்பமாகப் பேசினார். உலகத் திரைப்படங்கள் குறித்து பட்டர்ஃப்ளை சூர்யா பேசும்போது 18ம்தேதி ஒரு புயல் அபாயம் கரை கடந்ததாய்க் குறிப்பிட்டார். (வேட்ட வேட்ட வேட்ட வேட்ட வேட்டைக்காரண்டோய்ய்!) கணினிப் பட்டறை குறித்துப் பேசிய செந்தில் விக்கிபீடியாவில் தமிழர்கள் தகவல்களை ஆவணமாக்குவதில் எவ்வளவு சோம்பேறிகளாக இருக்கிறார்கள் என்று ஆதங்கப்பட்டார். சமூகத்தில் நம் பங்கு பற்றி ரம்யா பேசிக் கொண்டிருந்தபோது, அந்தப் பங்கை கீழிருந்து செவ்வனே செய்து கொண்டிருந்தார் வால்பையன். இறுதியாக அகநாழிகை வாசுதேவன் வந்து பேசினார். பேச ஆரம்பிக்கும்போது ‘என்ன தலைப்பு?’ என்று கேட்டார். யாரோ சொன்னார்கள்.. ‘நீங்க பாட்டுக்கு பேசுங்க.. முடியும்போது நாங்க தலைப்பு வெச்சுக்கறோம்’ என்று.
பேச்சில் என்னைக் கவர்ந்தவர்கள் இருவர்: ‘நச்’சென்று பேசிய பழமைபேசி. அவரிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது. மிகமிக உயரத்திற்குப் போவாரென்பதை அவரது நடவடிக்கைகள் காட்டின. (செல்ஃபோன் டவருக்கா-ன்னு கேட்கப்படாது!). அதேபோல வால்பையனின் அட்டாக்குகளுக்கு கவுண்டர் அட்டாக் கொடுத்து க்ளாப்ஸ் வாங்கிய வலைச்சரம் சீனா ஐயா.
அது முடிந்ததும் ‘ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்’ என்ற அமைப்பை சில பிரபலங்கள் துவங்கி வைத்தார்கள்.
இறுதியாக முனைவர் இராசுவும், தமிழ்மணம் காசி ஐயாவும் சில நல்ல தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.
அதன்பிறகு அரை மணி நேரம் கலந்துரையாடல் – களை கட்டியது. அனானி கமெண்டுகள் குறித்து இருபத்தி எட்டு நிமிடமும், பிற விஷயங்கள் குறித்து இரண்டு நிமிடமும் கலந்துரையாடினோம். பொதுவாக மேடையில் மைக் கிடைத்தால் விடமாட்டார்கள் என்பார்கள். ஆனால் மைக்கை எல்லாரிடமும் கொடுத்து கருத்து கேட்ட லதானந்தின் பண்பை பாராட்டியே ஆகவேண்டும். (நோட் பண்ணுங்கப்பா! நோட் பண்ணுங்கப்பா!!)
விழாவின்போது வாசகர் பகுதியிலிருந்து ஒருவர் எழுந்து வலைப்பதிவுகள் எல்லோராலும் வெகுவாகக் கவனிக்கப்படுவதாகக் கூறி ஒரு உதாரணம் சொன்னார். அவரது வேலையே வலைப்பதிவுகளைப் படிப்பதுதானாம். வலைப்பதிவுகளைப் படித்து, எதாவது ப்ராடக்ட்ஸைப் பற்றி பதிவர்கள் எழுதியிருந்தால் அது நெகடீவாக எழுதப்பட்டிருக்கிறதா, பாஸிடிவாகவா.., அதற்கு வரும் பின்னூட்டங்கள் அந்த ப்ராடக்டைப் பற்றி என்ன கருத்து சொல்கின்றன என்றெல்லாம் கவனித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அக்கருத்துகளைத் தெரிவிப்பதுதான் அவரின் வேலையே என்றும் சொல்லி கைதட்டலை அள்ளிக் கொண்டார்.
இதைப் பற்றிப் பேசும்போது அப்துல்லாவும் அரசின் முக்கியத் துறைகளில் இருக்கும் பலராலும் வலைப்பதிவுகள் விரும்பிப் படிக்கப்படுவதாய்க் குறிப்பிட்டார்.
வலைப்பதிவுகளில் யாரையேனும் அவதூறாக எழுதினால், சம்பந்தப்பட்டவர் வழக்குத் தொடுக்கும் பட்சத்தில் பதிவர் கம்பி எண்ணும் அபாயம் இருப்பது பற்றியும் பேசினார்கள். ஒரு பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கும், பின்னூட்டம் போட்டவரை விட பதிவர்தான் பொறுப்பு என்றும் விளக்கினார்கள். (என்ன கொடுமை சரவணன் இது!) இதுபற்றிச் சொல்லும்போது இடைமறித்த பழமைபேசி, “அதற்காக பயந்து கொண்டு உங்கள் கருத்துகளை பதிவாக்காமல் இருக்காதீர்கள். ‘அவதூறாக எழுதவேண்டாம்.. ஆனால் ஆணித்தரமாக எழுதுங்கள்’” என்றது இங்கே குறிப்பிட வேண்டிய வாக்கியம்!
விழாவில் என்னைக் கவர்ந்தவர்கள் இரண்டு பேர்:
நந்து & வால்பையன்!
நந்து அவ்வளவு சீனியர் பதிவராக இருந்தும் அது குறித்து எந்த பந்தாவும் இல்லாமல் ‘நான் ஈரோட்டுக்காரன். எனக்கென்ன மரியாதை செய்தீர்கள்’ என்றெல்லாம் கர்வமில்லாமல் ஓடி ஓடி உழைத்துக் கொண்டும், எல்லாரையும் கவனித்துக் கொண்டும், ‘இந்தாள்கிட்டேர்ந்து நெறைய கத்துக்கணும்யா’ என்று வெட்கப்பட வைத்தார். (இவருக்கு ‘பக்கா’பலமாய் இருந்து கமெண்டுகளை அள்ளி விட்டுக் கொண்டிருந்த சஞ்சயையும் பாராட்ட வேண்டும்!) நந்துவிடம் நான் வியந்த மற்றோர் விஷயம் - எங்கள் தலைவர் வெயிலான் போல - எந்தப் பதிவு, பதிவர் சம்பந்தப்பட்ட விஷயமென்றாலும் விரல் நுனியில் வைத்திருக்கிறார் மனுஷன்! க்ரேட்!!
அடுத்தது வால்பையன். நானெல்லாம் சமூகம், கலாச்சாரம், பண்பாடு, வெங்காயம் என்று நல்லவன் வேஷம் போட்டுக் கொண்டு, மீட்டிங் முடிந்ததும் கட்டிங் போட்டுக் கொண்டு நண்பர்களோடு பாட்டுப் பாடி டான்ஸ் ஆடிவிட்டு வந்தேன். ஆனால் வால்பையன் சந்திப்பின் ஆரம்பத்திலே இருந்து அவர் எப்படி இருப்பாரோ அப்படித்தான் இருந்தார். அவர் அப்படி நடந்து கொண்டதுதான் வருத்தமாக இருந்தது என்றெல்லாம் ஒவ்வொருத்தர் சொன்னார்கள்தான். சரி, அவர் அப்படித்தான் என்பதை ஏற்று அவரை ரசிக்க முடிந்தவர்களுக்கு (உதாரணம்: சீனு ஐயா) அவர் விருந்து கொடுத்தாரென்றே சொல்ல வேண்டும்! வால் மட்டும் இல்லாவிட்டால் ரொம்பவும் இறுக்கமாக – ஃபார்மலாக – அந்தச் சந்திப்பு இருந்திருக்கும்.
நிகழ்ச்சி முடிந்ததும் ஈரோடு குறித்த வரலாற்று புத்தகத்தை இலவசமாகக் கொடுத்தார்கள். (வரலாறு முக்கியம் அமைச்சரே!) நான் அகநாழிகையிடமிருந்து நர்சிம்மின் புத்தகத்தை வாங்கினேன். (10% டிஸ்கவுண்ட்!)
சந்திப்பு முடிந்ததும் சைவ – அசைவ விருந்தும் நடைபெற்றது. விருந்தின் போது வலைப்பதிவர்களை அடுத்த கட்டத்திற்கு – ஸாரி.. அடுத்த கட்டடத்திற்கு - நகர்த்திக் கொண்டிருந்தார்கள் சிலர். அங்கேயும் ஒரு விருந்து நடந்து கொண்டிருந்தது. விருந்து முடிந்தது புறப்படும் சமயம் சாமிநாதனின் காரிலிருந்து இளையராஜாவின் ஃபாஸ்ட் பீட் பாடல் ஒன்று வரவே, அப்துல்லாவும் நானும் கூட சேர்ந்து பாட, கேபிள் சங்கரும் தண்டோராவும் ஆட – அடுத்தடுத்த பாடல்களால் அந்த அரைமணி நேரம் மறக்க முடியாத நேரமாக அமைந்தது.
மொத்தத்தில் இந்தப் பதிவர் சந்திப்பு மூலம் வலைப்பதிவர்கள் தங்களை மேல் நகர்த்திச் செல்ல கோடு போட்டுக் காட்டியிருக்கிறார்கள் ஈரோட்டார்கள்.
சபாஷ்!
.
64 comments:
நிகழ்வுகளில் உங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி..
நிகழ்வின் மகுடமே நீங்களும் அப்துல்லாவும் நடத்திய "ஜுகல்பந்தி" தான்......
உங்கள் இசைப் பயணத்திற்கு வாழ்த்துக்கள்.....
விரைவில் சந்திப்போம்...
அன்புடன் ஆரூரன்
திருப்பூர்ல எப்பங்க எப்படி நடக்கும் :) ?
@ ஆரூரன் விசுவநாதன்
சார்.. கோவிச்சுக்கப்படாது.. ஏதாவது பின்னூட்ட சாஃப்ட்வேர் வெச்சிருக்கீங்களா? சங்கமம் பத்தின பதிவுன்னா ஒடனே வந்து இந்தப் பின்னூட்டத்தைப் போட்டுத் தாக்கறீங்களே?
@ ஸ்வாமி ஓம்கார்
மார்ச் அல்லது ஏப்ரல்.
மிஸ் பண்ணிட்டேன்
தல, எங்கடா உங்க டைமிங் இல்லாமா ஒடிட்டிருக்கிங்களேன்னு பார்த்தேன்.
//அடுத்த கட்டடத்திற்கு//
ம்ம்ம். ஆச்சு.......
நந்து, வால் மற்றும் பழமைபேசி இவர்களைப் பற்றிய உங்கள் பார்வை முற்றிலும் சரி.
பிரபல பதிவாளர் மேவி அங்கு வரவில்லையே .......ஏன் அதை பற்றி எழுத வில்லை .......
(இது தான் உண்மையான அடுத்த கட்டத்திற்கு போவது .....)
சாரி ...நேற்று ஈரோடு பதிவர் சந்திப்பை பற்றி கேட்க தான் உங்களை அழைத்து இருந்தேன்...பேசுவதற்குள் கொஞ்சம் வேலை வந்துருச்சு ..... மாலையில் உங்களை அழைக்காமல் இருந்ததற்கு மன்னிக்கவும்
நீங்கள் சொல்லி இருக்கும் பல பதிவாளர்களின் பதிவிற்கு லிங்க் தந்து இருக்கலாமே
யாராச்சு ஈரோடு சந்திப்பை வீடியோ எடுத்து இருக்காங்களா ???? அதை யூ டுப் ல upload பண்ண சொல்லுங்க
பெரிய ஆளுங்க, அறிவாளிங்க எல்லோரையும் பார்க்க முடியமா போச்சு .... இன்னொரு வாட்டி சான்ஸ் கிடைச்ச மிஸ் பண்ண மாட்டேன்
நீங்கள் புகைப்படம் எடுக்கவில்லையா
ரைட்டு..
அன்பின் பரிசல்
அருமையான இடுகை - நடந்ததை அப்படியே எழுதி விட்டீர்கள் - கடைசி குத்தாட்டங்கள் காணக் கொடுத்து வைக்க வில்லை. சீக்கிரமே கிளம்பி விட்டோம் - திருப்பூரில் சந்திப்பில் காண்போம்
நல்வாழ்த்துகள்
கேபிள்ஜி ஆடினாரா? காணக் நாலு கண்ணாவது வேணும்.
நல்ல தொகுப்பு நம்மூர்க்கார அண்ணே.. திங்களன்று கடவுச்சீட்டு தொடர்பான வேலைகள் இருந்ததால் சீக்கிரம் கிளம்பிவிட்டேன். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி!!
@ கார்க்கி
நானும் உன்னை.
@ முரளிகுமார்
நன்றி முரளி!
@ டம்பீமேவி
சூரியனுக்குப் போய் டார்ச் அடிக்கச் சொல்றீகளே நண்பா.. (இந்த பதில் உங்க எந்தப் பின்னூட்டத்துக்குன்னு நீங்களே கண்டுபிடிச்சுக்கோங்க!)
@ கேபிள் சங்கர்
என்னாது ரைட்டு? ரைட்டா.. டைட்டா?
@ சீனா
//கடைசி குத்தாட்டங்கள் காணக் கொடுத்து வைக்க வில்லை//
ஐயா.. குத்தாட்டமெல்லாம் இல்லை. இசை இரவு.
@ பப்பு
ஆமாம்மா..
@ செந்தில்வேலன்
நீங்க பேசின விஷயங்கள் மிகவும் பயனுள்ளது செந்தில். அதைப் பற்றி தனியாக பதிவிடும் ஆவலில் உள்ளதால் இங்கே விவரமாகக் குறிப்பிடவில்லை. என் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள இயலுமா...
ரொம்ப நாளைக்கப்புறம் ரியல் பரிசல் ட்ச் !
அனத்து நடன வீடியோ காட்சிகளும் என்னிடம் இருக்கிறது, அவற்றை வெளியிட்டால் கோடம்பாக்கத்தில் பலமான போட்டி ஏற்படும் என்பதால் பயமாக இருக்கிறது...
//ஃபுல் மப்புல இருக்கற வாலுகளுக்கும்//
யாருங்க அது எனக்கு பங்காளி!
@ ஈரவெங்காயம்
ஒண்ணுந்தெரியாத புள்ள மாதிரி பம்மும்போதே தெரியுமைய்யா நீரு அதையெல்லாம் ஆவணப்படுத்திருக்கீருன்னு... ம்ம்ம்.. நாம அப்படியா பழகிருக்கோம்.. ஏதோ.. பாத்து செய்ங்க ராசா..
நெகிழவைத்துவிட்டீர்கள் நண்பரே!
மிக்க நன்றி!
அதகளமாக்கி இருக்கீங்க. ப்ச்.
[[[வால் மட்டும் இல்லாவிட்டால் ரொம்பவும் இறுக்கமாக – பார்மலாக – அந்தச் சந்திப்பு இருந்திருக்கும்.]]]
உங்களை மாதிரி ரெண்டு பேர் இருந்தா போதும் பரிசலு..
திருந்தலாம்னு நினைக்கிறவங்களும் திருந்த மாட்டாங்க..!
kandupidichachu....
nanga ellam yaaru....
suryanukke sun tv yai kattinavanga
திரும்ப வந்ததிலிருந்து ........ சூப்பரா இருக்கு. இப்படியே தொடரணனும் பாசு.
அனுஜன்யா
தங்களை சந்தித்ததிலும் பெருமகிழ்ச்சியடைகிறேன் அன்பரே...நன்றிகள்...
@ பரிசல்காரன்
வரலாறு முக்கியம் செயலாளரே...
மேலும் நமது சங்க நிர்வாகிகளை பத்திரமாக திருப்பி அழைத்து வரவேண்டிய பொறுப்பில் இருந்தமையால், அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயம் !
அழகான தொகுப்பு.........
தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.........
//கேபிள்ஜி ஆடினாரா? காணக் நாலு கண்ணாவது வேணும்//
எனக்கும் கண்ணு வேணும். அதனாலத்தான் நான் பார்க்க மாட்டேன்
வாழ்த்துக்கள் .....
@ வால்பையன்
நன்றி நண்பா..
@ நர்சிம்
உங்களை மிஸ் பண்ணினோம் பாஸு! ஆனா எங்க உரையாடல்ல நீங்க தொடர்ந்து இருந்தீங்க...
@ உண்மைத்தமிழன்
//உங்களை மாதிரி ரெண்டு பேர் இருந்தா போதும் பரிசலு..
திருந்தலாம்னு நினைக்கிறவங்களும் திருந்த மாட்டாங்க..!//
தமிழா! குறைகளை நேரில் சொல்வோம், நல்லதைப் பொதுவில் வைப்போம்!
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
@ அனுஜன்யா
நன்றி சாரே...
@ க.பாலாசி
எனக்கும்... நன்றிகள்..
@ ஈரவெங்காயம்
//சங்க நிர்வாகிகளை பத்திரமாக திருப்பி அழைத்து வரவேண்டிய பொறுப்பில் //
ஏங்க.. நாங்க நல்லாத்தானே இருந்தோம்....
@ சங்கவி
நன்றி. எனக்கும் மகிழ்வே.
@ கார்க்கி
ஏய்ய்ய்ய்...
@ மகா
நன்றி
நம்பள பத்தி பேசும் போது, அதும் நாலு நல்ல வார்த்தை பேசும் போது நன்றி சொல்லலைன்னா.எப்புடிங்ணா....
கொங்கு மண்ணுல வளர்ந்தம்ங்ணா..
மனசுல வேர் புடிச்சாப் போதுங்ணா.......
சாப்ட்வேரும் தேவையில்லை ஒன்னும் தேவையில்லீணா.....
பல இடங்களில் பரிசல் ”டச்”
திருப்பூர்ல பதில் மரியாதை செஞ்சுடுங்க!
இப்பிடி ஆளாளுக்கு பதிவு போட்டு கலந்துக்க முடியாத வருத்தத்தை அதிகரிக்கிறீர்களே... நல்லா இருங்க தல. மார்ச்ல திருப்பூர்லயா? ரைட்டு
என்ன அனுப்பி வச்சுட்டு ஆட்டம் போட்டிங்களா?
திருப்பூர்ல பாத்துக்கறேன்..
//நந்து அவ்வளவு சீனியர் பதிவராக இருந்தும் அது குறித்து எந்த பந்தாவும் இல்லாமல் ‘நான் ஈரோட்டுக்காரன். //
பரிசல் அவரு எப்ப பதிவர் ஆனாரு? யோவ் அவரு பிட்டுக்கு (PIT) படம் எடுப்பவருய்யா?:)) அவரை போய் பதிவர் அதுவும் சீனியர் பதிவருன்னு சொல்லிக்கிட்டு! என் முறை பொண்ணு பேரை அவரு வெச்சதலா அவரு பிளாக்கர் ஆயிடுவாரா? இது எல்லாம் ரொம்ப தப்பு பரிசல்:)
//அப்துல்லாவும் நானும் கூட சேர்ந்து பாட, கேபிள் சங்கரும் தண்டோராவும் ஆட//
சாத்தான்கள் பாட, பூதங்கள் ஆட.. அய்யகோ நினைச்சு பார்க்கவே பயமா இருக்குப்பா:)))
முதல் கொடுமை அப்துல்லா பாடி கேட்பது, அடுத்த கொடுமை நீங்க பாடுடியது.. பெரும் கொடுமை குங்பூ பாண்டா மாதிரி வயிறு உடைய கேபிள் பெல்லி டான்ஸ் ஆடியது... இது போன்ற நிகழ்ச்சியை பார்த்துட்டுதான் பெருசுங்க கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடினது என்று சொல்லியிருப்பார்களோ?:))
சகோதரர் பரிசல்! உங்களின் பதிவு,
விளக்கமான, நேரடி ஒளிபரப்புபோல் அமைந்திருந்தது.
திருப்பூரில் நடக்கவிருக்கும் பதிவர் சந்திப்பிற்கு கண்டிப்பாக வருவேன்.
லவ் டேல் மேடி திருமணத்திலேயே உங்களை சந்திக்க வேண்டுமென இருந்தேன். ஆனால் நீங்கள் வந்துவிட்டு சென்று விட்டாதாகக் கூறினார்கள்.
உங்கள் அனைவரின் அறிமுகத்திற்கும் மிக்க மகிழ்ச்சி சகோதரா :)
//இவருக்கு ‘பக்கா’பலமாய் இருந்து கமெண்டுகளை அள்ளி விட்டுக் கொண்டிருந்த சஞ்சயையும் பாராட்ட வேண்டும்!) //
ம்கும் அவருக்கிட்ட கேட்டு பாரும்...பக்கபலமா இல்ல இம்சையான்னு...
@ ஆரூரன் விசுவநாதன்
சரியாச் சொன்னீங் போங்...
@ சூர்யா
நன்றிங்க
@ ஈரோடு கோடீஸ்
பண்ணீடலாமுங்க!
@ செ. சரவணகுமார்
நன்றி நண்பா..
@ பட்டிக்காட்டான்
பார்ப்போமே...
@ குசும்பன்
வாய்யா.. வா... ஒன்னத்தான் தேடிக்கிட்டிருந்தேன்..
@ ரம்யா
நன்றிக்கா..
வரும்போது பார்த்த பரிசலுக்கும்... புறப்படும் போது பார்த்த பரிசலுக்கும் நிறைய வித்யாசங்களைக் கண்டேன்..
அதுவே நிகழ்ச்சி நிறைவாக இருந்ததாக உணர்த்தியது எனக்கு...
உண்மையில் திருப்பூர், சென்னை, மதுரை, வெளிநாட்டு நண்பர்கள் கலந்து கொண்டதுதான் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது..
//யாரோ சொன்னார்கள்.. ‘நீங்க பாட்டுக்கு பேசுங்க.. முடியும்போது நாங்க தலைப்பு வெச்சுக்கறோம்’ என்று.//
ஹிஹி.. நாந்தான் நாந்தான்..( ஹப்பாடா.. விளம்பர போர்ட் வச்சாச்சி)
//நந்து அவ்வளவு சீனியர் பதிவராக இருந்தும்//
சீனியர் ஓகே.. அதென்ன சீனியர் பதிவர்? உங்களுக்கு ரொம்ப தான் டமாசு மாம்ஸ்.. :)
//எந்த பந்தாவும் இல்லாமல் ‘நான் ஈரோட்டுக்காரன். எனக்கென்ன மரியாதை செய்தீர்கள்’ என்றெல்லாம் கர்வமில்லாமல் ஓடி ஓடி உழைத்துக் கொண்டும்,//
ஏன் ’மரியாதை செய்தீர்களா’ என்று கேட்கனும்? அப்போ அவருக்கு எந்த மரியாதையும் செய்யலைனு சொல்ல வரீங்களா? ( நாராயண நாராயண ) :))
//இதைப் பற்றிப் பேசும்போது அப்துல்லாவும் அரசின் முக்கியத் துறைகளில் இருக்கும் பலராலும் வலைப்பதிவுகள் விரும்பிப் படிக்கப்படுவதாய்க் குறிப்பிட்டார்.//
சும்மா சொல்லலை.. படிப்பது உளவுத்துறை என்றெல்லாம் பீதியைக் கிளப்பினார். ”தினமும் படிக்கிறது சரிதான். ஒரு கமெண்டு கூட போட மாட்டேங்கறாங்களே”ன்னு தண்டோரா மாமன் கவலை பட்டுக்கிட்டார். :))
//நந்துவிடம் நான் வியந்த மற்றோர் விஷயம் - எங்கள் தலைவர் வெயிலான் போல - எந்தப் பதிவு, பதிவர் சம்பந்தப்பட்ட விஷயமென்றாலும் விரல் நுனியில் வைத்திருக்கிறார் மனுஷன்! க்ரேட்!!//
ஒருத்தர் வெளிப்படையா சொல்லிட்டார். என் வேலையே பதிவு படிக்கிறதுதான்னு. இவங்க 2 பேரும் மனசுக்குள்ளையே வச்சிக்கிட்டாங்க. அவ்ளோ தான். :))
வழக்கறிஞ்சர் ராஜதுரை பதிவைப் பற்றிக் குறிப்பிட்டு எல்லாருக்கும் அது தெரியனும்னு பெரிவா நந்தண்ணா சொன்னார். அந்தப் பதிவை இங்கே குறிப்பிட்டால்
ஏழரை கோடி வாசகர்களுக்கும் சென்றடையும் என்பதால் குறிப்பிட்டுவிடுகிறேன்.
http://marchoflaw.blogspot.com/2009/09/blog-post_23.html
நந்தண்ணா சொன்னது இந்த பதிவு தான் என்று நினைக்கிறேன்.
//வாய்யா.. வா... ஒன்னத்தான் தேடிக்கிட்டிருந்தேன்..//
ஏன் ரெண்டு மூனாத் தேடறது? ஒன்னு போதுமா?
// வரும்போது பார்த்த பரிசலுக்கும்... புறப்படும் போது பார்த்த பரிசலுக்கும் நிறைய வித்யாசங்களைக் கண்டேன்.. //
உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் வித்யாசம் தெரிந்தது :)
நல்ல வாய்ப்பு. நான் வெளி நாட்டில் வசிப்பதால் தவறவிட்டுவிட்டேன். உங்கள் பதிவுகள் மூலம் நிகழ்ந்தவை அறிந்து மகிழ்ந்தேன்.
நன்றி.
நிகழ்வுகளை நன்கு தொகுத்திருக்கிறீர்கள் பரிசல்!
உங்களுக்கான அய்யனார் கம்மா என்னிடமிருக்கிறதென்பதுங்களுக்கும் தெரியும்.
இருந்தும், நண்பருக்காக இன்னொரு கம்மாவா?
நல்லது.
நானும் வரலாறைப் பதிஞ்சுக்கிறேன்.
@ ஈரோடு கதிர்
நீங்க சொல்றதன் அர்த்தத்தை எங்க தலைவர் திரிக்கிறார் பாருங்க..
@ சஞ்சய்காந்தி
வாவ்! அந்த லிங்குக்கு நன்றி மாப்ஸி!
@ வெயிலான்
//உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் வித்யாசம் தெரிந்தது :)//
நன்றி தலைவரே.. நானும் உங்களிடம் நிறைய வித்தியாசங்களை சமீபமாய்ப் பார்க்கிறேன்! பாராட்டுக்கள்!!!
@ ரோஸ்விக்
நன்றி.
@ மறுபடி வெயிலான்
//இருந்தும், நண்பருக்காக இன்னொரு கம்மாவா?//
ஆம் தலைவரே... ஒரு பதிவுலக நண்பர் புத்தகம் வெளியிட்டதில் நமக்கெல்லாம் மிக மகிழ்ச்சி. அதை காசு கொடுத்து வாங்கினால் தானே பதிப்பாளரும் மகிழ்வாரென்பதால் வாங்கினேன்.
சபாசு சபாசேய்ய்
நல்ல சுவையான நடையில் இருந்தது பரிசல்! ஏக்-தம்மில் படித்தேன்.
@ இளா
நன்றி நண்பரே!
@ செல்வேந்திரன்
நன்றி செல்வா..
படிக்கும் போதே மிஸ் பண்ணிட்டோம்ன்னு ரொம்ப வருத்தமா இருக்கு , சென்னைல இந்த மாதிரி எதாவது நடக்குமான்னு தெரியல. கேபிள் பதிவர் சந்திப்புன்னு ஒரு பதிவ எழுதினா சொல்லி வச்சா மாதிரி மழை ஜோரா கொட்டுது அன்னிக்கு. இப்பத்திக்கு எங்க ஏரியால கும்மி அடிக்கமுடியாது போல இருக்கு. அடுத்து எங்க பதிவர் சந்திப்பு நடந்தாலும் கலந்துக்கனும் பாஸ் .
@ Romeoboy
அடுத்தமுறை உள்ளரங்கில் நடத்த சென்னைப் பதிவர்கள் ஏற்பாடு செய்வதாகக் கேள்வி. அதனால் மழை பற்றிய பயமிருக்காதென எண்ணுகிறேன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பரிசல் டச்சுடன் ஒரு பதிவு. நன்றி கிருஷ்ணா.
@ வடகரை வேலன்
நன்றி அண்ணாச்சி.
படிக்க படிக்க மிஸ் பண்ணிட்டோமே என்ற எண்ணம் வருது. நல்லா எழுதிருக்கீங்க.
குசும்பனின் உரிமையான கமெண்டும் ரசித்தேன்
தல வழக்கம் போல உங்க பார்வையே வேற விதம் தான் :-))
நச் பதிவுங்க :-))
// அவரை போய் பதிவர் அதுவும் சீனியர் பதிவருன்னு சொல்லிக்கிட்டு! என் முறை பொண்ணு பேரை அவரு வெச்சதலா அவரு //
:-((
படித்ததும், நிறைவாக இருக்கிறது, வாழ்த்துகள்.
ஜஸ்ட் மிஸ்ஸு !
எங்க சார்பா அப்துல்லா வந்ததுதான் மகிழ்ச்சி!
அடுத்த கட்டடத்துக்கு அன்பாய் செய்த பாஸ் கார்த்திக்கை மறந்தது ஏனோ...?
ஏசி ஹால், மைக்கில் பேச்சு, உணவு.. இதெல்லாம் என்ன புதுமையா இருக்குது? எனக்குப் புடிக்கலை, நாங்க சென்னையில் இப்படியெல்லாம் பண்ணமாட்டோம். பீச்சுல ஆளாளுக்கு ஒவ்வொரு திசையில பராக்கு பார்த்துட்டு சொல்லாம கொள்ளாம ஓடிப்போயிருவோம். அவ்வ்வ்வ்வ்வ்..
சென்னையில் இருந்து இத்தனை டிக்கெட்டா, அப்ப நான் மட்டும்தான் பல்பா.? அவ்வ்வ்வ்..
Post a Comment