Wednesday, December 23, 2009

சேட்டைக்காரன்

நான் ஆசையாய் மறுபடி ஒருமுறை கண்ணாடியில் என் மீசையைப் பார்த்துவிட்டு - மழிக்கத் துவங்கினேன்.

இத்தனை அழகான மீசையை எதற்கு எடுக்கிறாய் என்று கேட்கிறீர்கள் தானே?

அந்த விபரம் கூறுமுன் - என்னைப் பற்றிக் கொஞ்சம்...

சார்லி. சிறுவயதில் முதல் மகனாய் என்னைப் பெற்ற உடன் இறந்துவிட்ட அம்மா, நான் கல்லூரியில் படிக்கும்போதே கிராமத்தில் இறந்த அப்பா... இதெல்லாம் உங்களுக்கு போரடிக்கும்.

நான் கல்லூரிப்படிப்பு முடிந்து எத்தனையோ இண்டர்வ்யூக்களுக்குப் போயும் வேலை கிடைக்கவில்லை என்றுதான் தொழிலதிபர் கார்வண்ணனைச் சந்திக்க முடிவெடுத்தேன். வெளியே அவர் அந்தத் தொழில் செய்கிறார், இந்தத் தொழில் செய்கிறார் என்று பெயர் கொஞ்சம் ரிப்பேரானவர்தான் என்றாலும் அவரிடம் சென்று என் நிலையை எடுத்துக் கூறினால் அவருக்கிருக்கும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் ஏதாவதொரு வேலை தருவாரென்ற நம்பிக்கையில் நேற்று அவர் பங்களாவிற்குப் போனேன்.

வாட்ச்மேன், தோட்டக்காரனுடன் சமையல்காரியைப் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருக்க டபாய்த்துவிட்டு உட்புகுந்தேன்.

வேலை கேட்பது போல பவ்யமாய்ப் போனால் மதிப்பிருக்காதென்பதால், நான்கைந்து பேர் அமர்ந்திருக்கும் பெரிய போர்டிகோவில் நின்று கொண்டிருந்த வீட்டு வேலைக்காரன் ஒருவனிடம் ‘சார் இருக்காரா?’ என்று கேட்டேன்.

யாருடனோ பேசிக் கொண்டிருப்பதாகவும், அவர் வெளியே வந்தபிறகு பார்க்கலாமென்று அவன் சொல்லவே, சும்மா அந்தக் கட்டத்தில் உலாவினேன்.

அப்போதுதான் - ஒரு அறையின் கொஞ்சமாய்த் திறந்த ஜன்னலூடே அந்த சம்பாஷணை கேட்டது.

“மிஸ்டர் கார்வண்ணன்.. இது எட்டு லட்ச ரூபாய் விவகாரம். நாளைக்கு கோல்டன் ஹார்வெஸ்டுக்கு யாரை அனுப்பறீங்க?”

“நீங்க கவலையே படாதீங்க பெரிய நாயகம். நான் காலைல எட்டு மணிக்கு மணிமாறனை அனுப்பறேன். கழுத்துல நங்கூரம் டிசைன் செஞ்ச தங்க செய்ன் போட்டிருப்பான். மீசை இருக்காது. அதுவுமில்லாம நாந்தான் சொன்னேனே... ஆள் வந்த உடனே ‘வெல்கம்’ ன்னு நீங்க சொல்லுங்க. அவன் உடனே வேறெதுவும் சொல்லாம ‘யெஸ் வி கேன்’ன்னு சொல்லுவான். அதான் நமக்குள்ள கோடிங். வழக்கம்போல ரூம் நம்பர் நூத்தி ஒண்ணுதானே.. பணத்தை குடுங்க. சரக்கு அடுத்த நாளே வந்து சேரும்”

-அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை நான். நங்கூர டாலருடன் செய்ன் ரெடி பண்ண வேண்டுமே!

புரிந்ததல்லவா என் திட்டம்? வேலையத் தேடி வேட்டைக்காரனாக இருப்பதை விட, ஒரே நாள் சேட்டைக்காரனாகி எட்டு லட்சத்தை கைப்படுத்த முடிவெடுத்தேன். இரவோடிரவாக செய்ன் ரெடி செய்துவிட்டேன். இதோ காலை ஏழு மணி. மீசையையும் எடுத்தாயிற்று. அவன் எட்டு மணிக்குத்தானே போவான்.. கொஞ்சம் முந்திச் சென்று எட்டு லட்சத்தை லபக்கி வரலாமென்று புறப்பட்டேன்.

***

ஹோட்டல் கோல்டன் ஹார்வெஸ்ட் பணக்காரத் திமிருடன் இருந்தது. ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் இருந்த நூற்றி ஒன்றைத் தேடிப் போய்த் தட்டினேன்.

கதவு திறந்து ‘வெல்கம்’ என்றார் அந்த யாரோ.

உடனே ஞாபகமாய் ‘யெஸ் வி கேன்’ என்றேன்.

“நீதான் மணிமாறனா? கார்வண்ணனோட ரைட் ஹாண்ட்?”

“யெஸ்” பந்தாவாய் சொல்லியபடி நங்கூர டிசைன் செய்னை காஷுவாலாக எடுத்து டீ ஷர்டின் வெளியே விட்டேன். ‘இந்தா எட்டு லட்சம்’ என்று பெட்டியைத் தருவாரென எதிர்பார்த்தேன்.

ஆனால் அவரோ-




“யுவார் அண்டர் அரெஸ்ட்” என்றார் சினிமா க்ளைமாக்ஸ் போல.

திடுக்கிடலோடு ஓட நினைத்துத் திரும்பினேன்.

போட்டிருந்த காக்கி உடைக்கு விசுவாசமாய் கறுப்பு ராட்சஷனை கையிலேந்தி இருவர் நின்றிருந்தனர்.

***

“சொல்லுடா.. எங்களுக்குத் தெரிஞ்சு இதுவரைக்கும் நீ ஏழு கொலை பண்ணிருக்க... அது போக கார்வண்ணனோட சேர்ந்து வேற என்னென்ன சமூக விரோதம்லாம் செஞ்சிருக்க?”

என்னைப் பிடித்த அதிகாரி பின்மண்டையில் தட்டியவாறே கேட்டுக் கொண்டிருக்க, எதிரிலிருந்த மற்றொரு போலீஸ் அதிகாரி விளக்கம் கொடுத்தார்... “நேத்து எங்களுக்குக் கிடைச்ச நியூஸ்படி நாங்க அவசரமா நைட்டே கார்வண்ணனை வீட்டுல வெச்சு விசாரிக்கற விதத்துல விசாரிச்சுட்டோம். ஏழு கொலையையும் உன் மூலமா அவர் செஞ்சதை இன்னைக்கு அதிகாலைலதான் ஒப்புகிட்டார். கடைசியா அவர் சொன்னது நீ இன்னைக்கு இந்த ஹோட்டலுக்கு வர்ற விஷயம் பத்தித்தான். அதுனாலதானே உன்னைப் பிடிக்க முடிஞ்சது?”

நான் ஈனமான குரலில் கதறினேன்..

“நான் கார்வண்ணனைப் பார்க்கணும். இல்லைன்னா நீங்களே அவர்கிட்ட என்னைக் கூட்டீட்டுப் போங்க. ‘இவன்தான் மணிமாறனா?’ன்னு கேளுங்க” என் குரல் உடைந்திருந்தது.

“ஏண்டா.. அவர்தான் ஜீப்லேர்ந்து குதிச்சு லாரில அடிபட்டு இறந்துட்டாரே.. டாரே என்ன இறந்துட்டானே.. அவன என்ன கூப்டறது? நீ சொல்டா நாயே..”

அவர் அடித்த அடியில் என் டீ ஷர்ட் சிவப்பானது.

ஸார்.. நீங்களாவது சொல்லுங்க சார் நான் மணிமாறனில்லை, சார்லீன்னு....


.

(நான் எத்தனையோ வருடங்களுக்கு முன்னெழுதி பத்திரிகையொன்றில் வந்த கதை. கொஞ்சம் பட்டி-டிங்கரிங் பார்த்து டாபிகல் தலைப்போடு.. இங்கு.
)

.

49 comments:

கோவி.கண்ணன் said...

கலக்கல் !

பேராசை பே(பெ)ரு நட்டம் !

பரிசல்காரன் said...

@ கோவி கண்ணன்

அண்ணே.. உங்க வார்த்தை விளையாட்டு அதவிட கலக்கல்! (பெரு-பேரு)

sriram said...

நச் கதை கிருஷ்ணா..
அப்போ பில்லாவோட மூலக்கதை உங்களோடதுன்னு சொல்லுங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்....

ஸ்வாமி ஓம்கார் said...

சிறுகதை எழுதறவங்க பெயரையே தலைப்பா வைக்கும் புதுமை எனக்கு பிடிச்சிருக்கு... :)

ஜெகதீசன் said...

:)))))))))))))))

Nat Sriram said...

நல்லா இருக்குன்னு சம்பிரதாயமா சொல்ல ஆசை தான்...சரி ரைட்டு விடுங்க..

மணிஜி said...

குத்தாட்ட வீடியோவை அப்லோடு பண்ணுய்யா..கதை சேட்டைதான்

creativemani said...

நான் சொல்றேன் பரிசல்.. சார் அவன் சார்லீ தான்.. பாவம்.. அவன விட்டுடுங்க.. :)
(தலைப்பு தான் இந்த த்ரில்லர் கதைக்கு அவ்வளவா செட்-ஆவ மாட்டேங்குது.. )

கோவி.கண்ணன் said...

//(நான் எத்தனையோ வருடங்களுக்கு முன்னெழுதி பத்திரிகையொன்றில் வந்த கதை. கொஞ்சம் பட்டி-டிங்கரிங் பார்த்து டாபிகல் தலைப்போடு.. இங்கு.)//

அப்ப இது (மறுபடியும்) விகடனில் வராதா ?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் !

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கவலைப் படாதீங்க சார்லீ.., மீசை முளைச்சிட்டா அடையாளம் மாறிடும். தப்பிச்சிடலாம்

Cable சங்கர் said...

ookeee...

பரிசல்காரன் said...

@ ஸ்ரீராம்

கோர்த்து விடாதீங்க பாஸு..

@ ஸ்வாமி ஓம்கார்

இந்தப் பின்னூட்டம் மூலம் தலைப்பை உங்களுக்கும் பொருத்திக் கொண்ட சாமர்த்தியம் கண்டு வியக்கிறேன்!

@ ஜெகதீசன்

:-))

@ நடராஜ்

சம்பிரதாயமில்லாமலும் சொல்லலாம்...

@ தண்டோரா

நண்பர் ஈரவெங்காயம், தனது பதிவில் போடுவிட்டாரே... லிங்க் இங்கே


@ அன்புடன் - மணிகண்டன்

//தலைப்பு தான் இந்த த்ரில்லர் கதைக்கு அவ்வளவா செட்-ஆவ மாட்டேங்குது..//

அப்ப இதுக்கு வெச்ச தலைப்பு ‘இதுவரை ஏழு கொலை’

@ சுரேஷ்

நீங்க ரொம்ப நல்லவருங்க..

@ கேபிள்

கே கே...! (வீடியோ பார்த்தாச்சா?_

Prabhu said...

நல்லாருக்கான்னு தெரியல. இன்னும் கொஞ்சம் வயலண்ட்டா அல்லது போல்டா இருக்கலாமோ? சிறு கதையெல்லாம் ஏன் இப்படி பெட்டி மாதிரியே எழுதுறீங்க. சும்ம 7,8 பக்கத்துக்கு எழுதுறதுதான? எங்களுக்குதான் அதெல்லாம் பிரச்சனை. நீங்க எழுதினா படிப்பாங்க.

பரிசல்காரன் said...

@ பப்பு

//நல்லாருக்கான்னு தெரியல. இன்னும் கொஞ்சம் வயலண்ட்டா அல்லது போல்டா இருக்கலாமோ? //

இருக்கலாம். லாம்.

//சிறு கதையெல்லாம் ஏன் இப்படி பெட்டி மாதிரியே எழுதுறீங்க. சும்ம 7,8 பக்கத்துக்கு எழுதுறதுதான? எங்களுக்குதான் அதெல்லாம் பிரச்சனை. நீங்க எழுதினா படிப்பாங்க.//

கிழிஞ்சது போங்க. எனக்கென்னமோ அவ்ளோ பெரிசா இருந்தா பிடிக்கறதில்ல...

அன்பேசிவம் said...

டட்டடேன்......டடட்... டடட்...
செம ஃபாஸ்ட்டு தல....
:-)

Unknown said...

//இத்தனை அழகான மீசையை எதற்கு எடுக்கிறாய் என்று கேட்கிறீர்கள் தானே?//

இல்ல கேட்கல. உங்கள பத்தியே அடுத்த வரில தான் தெரியும். அதுக்குல்ல உங்க மீசைய பத்தி என்ன தெரியும் எங்களுக்கு? பழைய தலைப்புக்கு இந்த தலைப்பு எவ்ளோவோ பரவால்ல.

Prabhu said...

கிழிஞ்சது போங்க. எனக்கென்னமோ அவ்ளோ பெரிசா இருந்தா பிடிக்கறதில்ல...///

அப்ப ஒண்ணும் செய்ய முடியாது. :)

குசும்பன் said...

இந்த கதையை இன்னும் கொஞ்சம் டிங்கரிங் செஞ்சிருந்தா வேட்டைக்காரனாகவே எடுத்திருக்கலாம் போலவே:))

(விஜய் படத்துக்கு நல்லகதை எதுக்கு என்ற அடிப்படியில் சொன்னது அல்ல:)))

குசும்பன் said...

//நண்பர் ஈரவெங்காயம், தனது பதிவில் போடுவிட்டாரே... லிங்க் இங்கே//


தேவநாதன் வீடியோ குவாலிட்டியை விட ரொம்ப புவரா இருக்கே பரிசல் பார்த்து ஏதும் செய்யுங்க:)

உண்மைத்தமிழன் said...

ஓகே.. டிவிஸ்ட்டுகளுக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாம்..!

Kodees said...

//அப்போ பில்லாவோட மூலக்கதை உங்களோடதுன்னு சொல்லுங்க//

பரிசல்!, ரொம்பப் பழைய கதை! என்னாச்சு!

Kumar said...

vettaikaran padatha dabaichi irupinganu vantha, oru kathai ye pottutel.. nice one

மேவி... said...

நீங்கள் மணிமாறனும் இல்லை ......

சார்லீ நீங்க தானே பரிசல்காரன் ...கார்க்கி தானே அந்த மணிமாறன்

creativemani said...

//அப்ப இதுக்கு வெச்ச தலைப்பு ‘இதுவரை ஏழு கொலை’//

அந்த தலைப்பே அட்டகாசமா இருக்கு சார்.. :)

வால்பையன் said...

இது மாதிரி கதையில் சினிமா கூட வந்துருக்கு!


வர்ணனை நல்லாயிருக்கு!

MADURAI NETBIRD said...

தோழரே அருமை ..................... புலி உறுமுது புலி உறுமுது கொடி பறக்குது கொடி பறக்குது சேட்டைக்காரன் கொடி பறக்குது.................................

Unknown said...

கதை என்ற அளவில் பார்த்தா நல்லா இருக்கு பரிசல். ஆனால், சார்லிங்கிற ஒருத்தனை ஏழு கொலை செய்த மணிமாறன்னு நம்பி போலீஸ் நொங்கெடுக்கிறதெல்லாம் கதைல மட்டும் தான் நடக்கும்.

பரிசல்காரன் said...

@ முரளிகுமார்

நன்றி பாஸ்...

@ ஸ்ரீமதி

ரொம்ப நாளைக்கப்பறம் இவ்ளோஓஓஓஓஓ பெரிய பின்னூட்டத்துக்கு நன்றி ஸ்ரீ!

@ பப்பு

ஒண்ணும் பண்ண வேணாம்..

@ குசும்பன்

சாமியைத்தான் கேட்கணும்!

அத எடுத்தது தேவநாதன்.. இத எடுத்தது சாமிநாதன். ச்சே.. என்ன ஒற்றுமை!

@ உண்மைத்தமிழன்

//ஓகே.. டிவிஸ்ட்டுகளுக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாம்..!//

நீங்களே ‘அழுத்து’ங்க. இன்னொரு வாட்டி மானிட்டரை மாத்தணுமில்ல...

@ கோடீஸ்

//பரிசல்!, ரொம்பப் பழைய கதை! என்னாச்சு!//

அதத்தாங்க நானும் சொல்லிருக்கேன்...

@ குமார்

நன்றி.

@ டம்பீமேவி

அவரை ஏங்க இழுக்கறீங்க?

@ மணிகண்டன்

மேல ஸ்ரீமதி சொல்லிருக்கறத படிச்சீங்களா?

@ வால்பையன்

நன்றி.

பரிசல்காரன் said...

@ மதுரை நண்பன்

பட்டிதொட்டி பளபளக்க

பறந்துவரான் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன்...

@ கேவியார்

சரிதான் ஜி. ஆனாலும்
நெசத்துல செய்யாத தப்புக்கு சாவடி வாங்கிட்டு இருக்கற ஆளுகளோட பேட்டி எத்தனையப் பார்க்கறோம் நாம? அதுவுமில்லாம இது உடனடி சந்தேகத்துல விழுந்திட்டிருக்கற அடி. மத்யானத்துக்குள்ள சார்லிய ரிலீஸ் பண்ணீடுவாங்கன்னு நெனைக்கறேன்.. ஹி ஹி ஹி..

கார்க்கிபவா said...

தலைப்ப பார்த்து என்னவோ ஏதோன்னு ஓடி வந்தேன்..

ம்ம்..எனக்கு பிடிச்சிருக்கு

பரிசல்காரன் said...

@ கார்க்கி

இந்தத் தலைப்புக்கு போன மாசம் ஒரு மேட்டர் எழுதி ட்ராஃப்ட் வெச்சிருந்தேன். ப்ச்.. நல்லால்லை. அதால விட்டுட்டேன்..

எறும்பு said...

//நண்பர் ஈரவெங்காயம், தனது பதிவில் போடுவிட்டாரே... லிங்க் இங்கே//

நீங்க குடுத்த லின்க்ல அந்த படத்த பார்த்தேன்... கொஞ்சம் நஞ்சம் தெரிஞ்சிட்டு இருந்த என் கண் இப்போ நொள்ளையா போச்சு....
;))

ஆரூரன் விசுவநாதன் said...

விறு விறுப்பான நடையில் ஒரு நல்ல கதை....வாழ்த்துக்கள் பரிசல்

கார்க்கிபவா said...

//இந்தத் தலைப்புக்கு போன மாசம் ஒரு மேட்டர் எழுதி ட்ராஃப்ட் வெச்சிருந்தேன். ப்ச்.. நல்லால்லை. அதால விட்டுட்டேன்.//

ஆரம்பத்தில் இருந்து இப்படி செஞ்சிருந்தா டிராஃப்ட்ல 406 பதிவு இருந்திருக்கும்..












ஹலோ..என் டிராஃப்டுல சொன்னேன்

ungalrasigan.blogspot.com said...

ராஜேஷ்குமார் கதை போன்று விறுவிறு சுறுசுறுவாக இருந்தது! சூப்பர்!

Kumky said...

சுவாரஸ்யம்..

பட் லாஜிக்..?
இன்னுமா அங்க அடையாளங்களை நம்பி 8லகரம் கொடுப்பவர்கள் இருக்காங்க...

சாரி..கே.கே.
டெம்ப்ளேட் பின்னூட்டங்களை போட்டுட்டுபோக மனசு வரதில்லை.

Unknown said...

கதை சூப்பரு ..தல.... நீங்க ஏன் சினிமா எடுக்க முயற்சி செய்ய கூடாது....?

யாழிசை said...

மிக மிக அருமையான பதிவு.படிக்க மிக விருவிருப்பான கதை.வாழ்த்துக்கள் நண்பரே !

பரிசல்காரன் said...

@ எறும்பு

செல்ஃபோன்ல எடுத்ததுங்க...

@ ஆரூரன் விசுவநாதன்

நன்றி.

@ கார்க்கி

ஏஏஏஏஏஏய்ய்ய்..

@ ரவிபிரகாஷ்

மிக்க நன்றி சார்.

@ கும்க்கி

//இன்னுமா //

அதான் டிஸ்கில போட்டிருக்கோம்ல? அப்ப அப்படி.. ஹி ஹி ஹி...

@ பேரரசன்

எடுக்கலாம்தான். யாரு கீழ வெச்சுட்டுப் போறான்னு சொல்லுங்க..

@ யாழிசை

நெசமாத்தான் சொல்றீகளா...

Kumky said...

தல.... நீங்க ஏன் சினிமா எடுக்க முயற்சி செய்ய கூடாது....?

என்ன இருந்தாலும் இம்புட்டு கோவம் ஆகாதுங்க.....

கா.பழனியப்பன் said...

வேட்டைக்காரன் ஊத்திக்கிட்டாலும் சேட்டைக்காரன் ஜெயிச்சுட்டான்.
பில்லா வடிவேலு காமெடி நினைவிற்க்கு வந்துவிட்டது

அன்பரசன் said...

பிரமாதமா இருக்கு தல

நிலாமதி said...

கதை நல்லாயிருக்குங்க. பாராட்டுக்கள்.

பெசொவி said...

//SUREஷ் (பழனியிலிருந்து)
said:
கவலைப் படாதீங்க சார்லீ.., மீசை முளைச்சிட்டா அடையாளம் மாறிடும். தப்பிச்சிடலாம்
//

இது சூப்பர்!

சுரேகா.. said...

சூப்பர் கதை!

ஒரு தவறுக்கு அடிகோலும்போது
சூழல் மொத்தமும் சுத்தி அடிச்சால்..

சேட்டைக்காரன் பாடு டண்டணக்காதான்!

நல்லா கிளப்புறாங்கப்பா பீதியை!

RAJAPPA said...

parisal sir
super story na..

RAJAPPA said...

parisal sir
super story
looks like billa-3
rajappa william

Thamira said...

நல்லாருந்தது.

'பரிவை' சே.குமார் said...

சிறுகதை எழுதறவங்க பெயரையே தலைப்பா வைக்கும் புதுமை எனக்கு பிடிச்சிருக்கு...

கலக்கல்...