Thursday, December 24, 2009

புதிர்கள் இங்கே… விடைகள் எங்கே?


சரியான போர் – ங்க. தமிழ் ‘போர்’ இல்ல. இங்க்லீஷ் Bore. இந்த மாதிரி போரடிக்கும்போதெல்லாம் மூளையைக் கசக்கினா கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகும்ல?

அதுனால இன்னைக்கே – சில புதிர்கள். கண்டுபிடிங்க பார்க்கலாம்.

1) நூறு ரூவாய்க்கு சில்லறை மாத்தீட்டு வந்தான் ஒருத்தன். சில்லறை மாத்தினப்பறம் மொத்தம் பத்து நோட்டு இருந்தது அவன்கிட்ட. ஆனா அதுல பத்து ரூவா நோட்டே இல்லை! அப்ப அவன்கிட்ட இருந்த நோட்டுகளோட டினாமினேஷன் என்ன?

(அப்படியே ஓர் உப கேள்வி: டினாமினேஷனுக்கு தமிழ் என்ன?)

2) ஒரு மொதலாளி தப்பு பண்ணின தன்னோட தொழிலாளிகள் மூணு பேருக்கு, அவங்க தப்புக்கு தகுந்த மாதிரி ஒரு வித்தியாசமான தண்டனை விதிச்சாரு. அவரோட கல்லாவுல எவ்ளோ பணமிருக்கோ, அதை விட மூணு மடங்கு பணத்தை அவங்க கல்லாவுல கட்டணும்னு. கட்டிட்டு, ஒரு ரூவா அவன் திருப்பி எடுத்துக்கலாம்னு சொல்லீட்டார். அதன்படி முதல் ஆள் கல்லாவுல எவ்ளோ இருக்குன்னு பார்த்து, அதவிட மூணு மடங்கு வெச்சுட்டு, ஒரு ரூவா எடுத்துட்டுப் போனான். அடுத்தவன் வந்து இருக்கறத எண்ணிப் பார்த்துட்டு, மூணு மடங்கு கட்டிட்டு ஒரு ரூவா எடுத்துட்டுப் போனான். மூணாமவனும் அஃதே செய்தான்.

கடைசியா முதலாளி எண்ணிப் பார்க்கறப்போ சரியா 500 ரூவா இருந்துச்சு. அப்போ, கல்லாவுல முதல்ல இருந்த காசு எவ்ளோ?

3) ஒரு அரபுக்காரர் தன்னோட இரு மகன்களுமிடையே சொத்தைப் பிரிக்கறதுக்காக ஒரு போட்டி வைக்கிறார். ‘உங்க ஒட்டகங்களுக்கிடையே ஒரு போட்டி வைங்க. யாரோட ஒட்டகம் மிக மெதுவாய்ப் போகுதோ அவங்களுக்கு அதிக பங்கு’ –ன்னு சொல்லிடறாரு. இரண்டு மகன்களும் அவங்கவங்க ஒட்டகங்கள்ல ஏறி மெ-து-மெ-து-வாப் போறாங்க.

இது ரொம்ப நாளா நடந்துட்டே இருக்கறதால, வெறுத்துப் போயி அவங்க வழில ஒரு பெரியவரைப் பார்த்து ஐடியா கேட்கறாங்க. அவர் ஒரு ஐடியா சொல்றாரு. அடுத்த நிமிடம், இவங்களை ஏத்திகிட்ட ஒட்டகங்கள் வெகு ஸ்பீடா ஓடத் தொடங்குது.

அந்தப் பெரியவர் சொன்ன ஐடியா என்ன?

4) உங்களை வில்லன் ஒரு ரூம்ல அடைச்சு வெச்சிருக்கான். அந்த ரூமுக்கு ரெண்டு கதவு. ஒரு கதவைத் திறந்தா நீங்க முடிஞ்சிங்கீங்க. இன்னொண்ணு வழியா தப்பிக்கலாம். எது, எந்தக் கதவுன்னு உங்களுக்குத் தெரியாது.

ஆனா உங்களுக்கு உதவ உள்ள ரெண்டு ரோபோ இருக்கு. அதுல ஒரு ரோபோ உண்மையை மட்டும் பேசும். இன்னொண்ணு பொய் மட்டும் பேசும். எந்த ரோபோ, எந்த வகைன்னும் உங்களுக்குத் தெரியாது.

இப்ப, ஏதோ ஒரு ரோபோகிட்ட ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டு நீங்க தப்பிக்கணும். என்ன கேட்பீங்க? எப்படித் தப்பிப்பீங்க?

5) ராஜரத்தினம் ஒரு ஃபோட்டோவை வெச்சுட்டு பார்த்துட்டு இருந்தாரு. பக்கத்துல வந்த ஒருத்தரு, “யார் ஃபோட்டோவை இப்படிப் பார்த்துட்டு இருக்கீங்க?”ன்னு கேட்டார். ராஜரத்தினம் சொன்னாரு: “எனக்கு அண்ணனோ, தம்பியோ கிடையாது. ஆனா இந்த ஃபோட்டோல இருக்கறவனோட அப்பா, என் அப்பாவோட மகன்தான்”ன்னு சொல்றாரு. அப்ப அந்த ஃபோட்டோல இருக்கறது யாரு?

6) ஒரு ஜெனரல் நாலேட்சு கொஸ்டீனு! நெறைய கடைகள்ல 99 ரூவா, 199 ரூவான்னு ஐட்டங்களுக்கு விலை போட்டிருக்காங்க. நூறு, இருநூறுன்னு போடாம இப்படிப் போடறது கஸ்டமர்களுக்கு விலை கம்மியாத் தெரியணும்னு சொல்லப்படுது. ஆனா உண்மையா இந்த மாதிரி விலை போட என்ன அடிப்படைக் காரணமா ஆரம்பத்துல சொல்லப்பட்டுச்சுன்னு யூகிச்சு சொல்லுங்க பார்ப்போம்...

7) இது புதிரில்லை. ச்சும்மா...

கீழ உள்ளதுல என்ன கலர்ல எழுதிருக்குங்கறத விடுங்க.. எழுத்தை மட்டும் படிங்க... ஸ்பீடா...



வெரிகுட். இப்போ.. என்ன எழுதிருக்குங்கறத விடுங்க. என்ன கலர்ல எழுதிருக்குன்னு ஸ்பீடா சொல்லுங்க பார்ப்போம்...

***

கடைசியா வடகரை வேலன் அண்ணாச்சி எனக்கு அனுப்பின ஒரு எஸ்ஸெம்மெஸ்:-

I really appreciate your brain which is divided in 2 parts: Right & Left. In Right nothing is Left and in Left nothing is Right.


.

104 comments:

பரிசல்காரன் said...

சுவாரஸ்யம் குன்றாமலிருக்க இன்றொரு நாள் மட்டும் கமெண்ட் மாடரேஷன் செய்யப்படுகிறது.

எம்.எம்.அப்துல்லா said...

//அப்படியே ஓர் உப கேள்வி: டினாமினேஷனுக்கு தமிழ் என்ன?)

//

அலகுவரிசை.

இதையெல்லாம் என்னைய மாதிரி கணக்கப்பிள்ளைக்கிட்டதான் கேக்கணும்.ஒ.கே!

கோவி.கண்ணன் said...

//
வெரிகுட். இப்போ.. என்ன எழுதிருக்குங்கறத விடுங்க. என்ன கலர்ல எழுதிருக்குன்னு ஸ்பீடா சொல்லுங்க பார்ப்போம்...//

ஹிஹி
மனைவியை இருக்கும் போதே சைட் அடித்துவிட்டு அவளைப் பார்க்கல அவ புடவையைத்தான் பார்த்தோம்னு சொல்லி நிறைய இடி வாங்கி இருக்கோம்ல :)

கோவி.கண்ணன் said...

//5) ராஜரத்தினம் ஒரு ஃபோட்டோவை வெச்சுட்டு பார்த்துட்டு இருந்தாரு. பக்கத்துல வந்த ஒருத்தரு, “யார் ஃபோட்டோவை இப்படிப் பார்த்துட்டு இருக்கீங்க?”ன்னு கேட்டார். ராஜரத்தினம் சொன்னாரு: “எனக்கு அண்ணனோ, தம்பியோ கிடையாது. ஆனா இந்த ஃபோட்டோல இருக்கறவனோட அப்பா, என் அப்பாவோட மகன்தான்”ன்னு சொல்றாரு. அப்ப அந்த ஃபோட்டோல இருக்கறது யாரு?//

கண்ணாடியில் முகம் பார்பவர்களும் அப்படி சொல்லலாம் இல்லையா ?

கோவி.கண்ணன் said...

//6) ஒரு ஜெனரல் நாலேட்சு கொஸ்டீனு! நெறைய கடைகள்ல 99 ரூவா, 199 ரூவான்னு ஐட்டங்களுக்கு விலை போட்டிருக்காங்க. நூறு, இருநூறுன்னு போடாம இப்படிப் போடறது கஸ்டமர்களுக்கு விலை கம்மியாத் தெரியணும்னு சொல்லப்படுது. ஆனா உண்மையா இந்த மாதிரி விலை போட என்ன அடிப்படைக் காரணமா ஆரம்பத்துல சொல்லப்பட்டுச்சுன்னு யூகிச்சு சொல்லுங்க பார்ப்போம்...//

100ரூபாய் எடுத்துவருகிறவர்களுக்கு எதுனாலும் (ஒத்த ரூபாயாவது) திரும்ப கொடுக்கனுமே என்கிற நல்லெண்ணமோ !
:)

கோவி.கண்ணன் said...

/இது ரொம்ப நாளா நடந்துட்டே இருக்கறதால, வெறுத்துப் போயி அவங்க வழில ஒரு பெரியவரைப் பார்த்து ஐடியா கேட்கறாங்க. அவர் ஒரு ஐடியா சொல்றாரு. அடுத்த நிமிடம், இவங்களை ஏத்திகிட்ட ஒட்டகங்கள் வெகு ஸ்பீடா ஓடத் தொடங்குது.

அந்தப் பெரியவர் சொன்ன ஐடியா என்ன?/

ஒட்டகத்தை ஒருவருக்கொருவர் மாற்றிக்கச் சொல்லி இருப்பார்

கோவி.கண்ணன் said...

//4) உங்களை வில்லன் ஒரு ரூம்ல அடைச்சு வெச்சிருக்கான். அந்த ரூமுக்கு ரெண்டு கதவு. ஒரு கதவைத் திறந்தா நீங்க முடிஞ்சிங்கீங்க. இன்னொண்ணு வழியா தப்பிக்கலாம். எது, எந்தக் கதவுன்னு உங்களுக்குத் தெரியாது.

ஆனா உங்களுக்கு உதவ உள்ள ரெண்டு ரோபோ இருக்கு. அதுல ஒரு ரோபோ உண்மையை மட்டும் பேசும். இன்னொண்ணு பொய் மட்டும் பேசும். எந்த ரோபோ, எந்த வகைன்னும் உங்களுக்குத் தெரியாது.

இப்ப, ஏதோ ஒரு ரோபோகிட்ட ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டு நீங்க தப்பிக்கணும். என்ன கேட்பீங்க? எப்படித் தப்பிப்பீங்க?//

எதாவது ஒரு ரோபாவிடம் சென்று எதோ ஒரு கதவைத் திறக்கச் சொல்லலாம் !
:)

எறும்பு said...

vaalthukal

எறும்பு said...

1 question)
20rsx4 =80
5rsx3 = 15
2rsx2=4
1rsx1 = 1
total 100

எறும்பு said...

3rd question)


he asked to exchange the camel.. So that they drive fast to reach the target...

எறும்பு said...

4th question)

you go & ask a robo, is that a right door to escape?

எறும்பு said...

5th question)

rajarathinam photo

எறும்பு said...

6th question)

psychology

எறும்பு said...

7th question)

padichachu padichachu

எறும்பு said...

annachi anupuna sms...

superu...

குசும்பன் said...

ஒன்னு சொல்லட்டுமா!

கேள்விகேட்கிறது ரொம்ப ஈசி மாமா...பதில் சொல்லி பாருங்க கஷ்டம் தெரியும்.

பஞ்சதந்திரம் கமல்

குசும்பன் said...

//சரியா 500 ரூவா இருந்துச்சு. அப்போ, கல்லாவுல முதல்ல இருந்த காசு எவ்ளோ?
//

ங்கொயாலே மூனுபேரு மூனுமடங்கு பைன் கட்டியும் அவன் கல்லாவில் 500ரூபா இருந்ததுன்னா, அந்த கடைக்கு ஒரு முதலாளி, அவனுக்கு கீழ மூனு தொழிலாளி..இதுல தப்பு செஞ்சாங்கன்னு பைன் வேற...நல்ல பொழப்பு!

குசும்பன் said...

//அந்தப் பெரியவர் சொன்ன ஐடியா என்ன?//

ங்கொப்பனை போட்டுதள்ளிட்டு சொத்த நீங்க பிரிச்சுக்குங்க! சீக்கிரம் சொத்து கைக்கு வந்திடும்!

குசும்பன் said...

//என்ன அடிப்படைக் காரணமா ஆரம்பத்துல சொல்லப்பட்டுச்சுன்னு யூகிச்சு சொல்லுங்க பார்ப்போம்...
//

Bata காரன் 5 பைசா திரும்பி கொடுக்காம இருந்ததால் தான் அவன் கோடிஸ்வரன் ஆனதா சொல்லுவாங்க!

இப்படிக்கு
சில்லரைபய

குசும்பன் said...

//கடைசியா வடகரை வேலன் அண்ணாச்சி எனக்கு அனுப்பின ஒரு எஸ்ஸெம்மெஸ்:-//

திரும்ப அவரு ஊட்டுக்கு அந்த குடிகாரனை அனுப்பனுமய்யா, சும்மா உட்காந்துக்க்கிட்டு உனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புறாரா அவரு..

Prathap Kumar S. said...

1,2,- மேத்தமெட்டிக்ஸ் வீக்குங்க... 3 - சாய்ஸ்ல விட்டுரலாமே...
4. அந்தரோபோ கிட்ட நீ வெறும் ரோபோவா லாடுலபக்கு ரோபோவான்னு கேட்டா ஆளை விடுய்யா சாமின்னு சரியான கதவை காண்பிச்சுப்போது...நம்மகிட்டேயேவா...

5. அந்த போட்டோவுல இருக்குறது அவர் அப்பவோட ரெண்டாவது சம்சாரத்தோட மகன்...கரெக்ட்டா?
6. நான் நினைக்கிறேன்... ஒரு ரூபாய் சில்லறை கொடுக்கமுடியாம எல்லாரும் ரவுண்டா கொடுத்துருவாங்க...ஒருஒரு ரூபாவா ஆயிரம் பேர்கிட்ட வாங்கினா செம லாபம்... எப்பூடி.

7. ஆஹா...ஸ்ஸஸஸப்பா கண்ணைக்கட்டுதே....

சுடுதண்ணி said...

1. 20x2=40, 10x4=40,5x4 = 20

2. 19

3. தங்கள் ஒட்டகங்களை மாற்றி ஓட்டச் சொல்லியிருப்பார்.

4.ஏதோ ஒரு ரோபேவிடம், ' நான் தப்பித்துச் செல்லுவதற்கு எந்த கதவைப் பயன்படுத்தனும்னு மத்த ரோபோவைக் கேட்டா எந்தக் கதவைக் காட்டும்?" அப்படின்னு கேட்டா உண்மை சொல்லும் ரோபோவாக இருந்தாலும், பொய் சொல்லும் ரோபோவாக இருந்தாலும் தவறான கதவையே காட்டும். மற்ற கதவின் வழியாக தப்பிக்க வேண்டியது தான். ( இதுக்கு பேரு second-order questioning)

5. ராஜரத்தினத்தின் மகன்.

6. பொது அறிவு தற்போதைக்கு ஸ்டாக் இல்லை :(

anujanya said...

1. 4x20=80
1x10=10
5x2 =10
Total=100

உபகேள்விக்கு உபயோகமற்ற பதில்: 'எப்பிடி வேணும்'?
Denomination என்னும் வார்த்தைக்கு நேரிடியான, பொருத்தமில்லாத மொழியாக்கம்: 'அளவு' அல்லது 'மதிப்பு'. (அப்துல்லாவின் அலகு வரிசை (கூகிளில் முதலில் அழகு வரிசைனு வருது பாஸ்) கூட நல்லா இருக்கு).

2. 19 ரூபாய்கள்

3. ஒட்டகங்களை மாற்றிக் கொள்ளச் சொன்னார்.

4. ஏதாவது ஒரு ரோபோவிடம் இந்த கேள்வியைக் கேட்கணும்:
"நான் அந்த இன்னொரு ரோபோவிடம் தப்பித்துச் செல்லும் வழியைக் கேட்டால் அது எந்தக் கதவைக் காண்பிக்கும்?"

அதுக்கு நீங்க கேள்வி கேட்ட ரோபோ ஒரு வழியைக் காட்டும். அந்த வழியாகச் செல்லாமல், இன்னொரு கதவு வழியாகச் சென்றால் தப்பிக்கலாம். (Plus x Minus is always a minus)

5. ராஜரத்தினத்தின் மகன்

6. முதல் யூகம்: விற்பனை வரிகளுக்கு slab basis இருப்பதால் இருக்கலாம். Below 100, below 200 etc. may attract lower tax.

இரண்டாம் யூகம்: counting machine / computer இவற்றில் முதல் முதல் '0' key பழுதாகி இருக்கலாம்.

மூன்றாம் யூகம்: ஒரு ரூபாய் நாணயம்/தாள் அரசு தேவைக்கு மேல் புழக்கத்துக்கு விட்டு, இப்படி கடைக்காரர்களை கட்டாயமாக ஒரு ரூபாயை திருப்பிக் கொடுக்கச் சொல்லி இருக்கலாம்.

நான்காம் .....சரி சரி அடிக்க வராதீங்க.

7. இது ரொம்ப பிடிச்சிருக்கு. இப்ப நிறக்குருடு வந்துடும் போல இருக்கு.

அப்புறம் வேலன்......கிர்ர்ர்ரர்ர்ர்ர்

அனுஜன்யா

குசும்பன் said...

எம்.எம்.அப்துல்லா
அலகுவரிசை.

இதையெல்லாம் என்னைய மாதிரி கணக்கப்பிள்ளைக்கிட்டதான் கேக்கணும்.ஒ.கே!//

அவரு மட்டும் என்னா கீரிபிள்ளைக்கிட்டையா கேட்டாரு? காலையில் இருந்து எத்தனை பிள்ளைங்க (பிகரு) கிராஸ் செஞ்சுதுன்னு கணக்குபன்றதுக்கு பேருதான் கணக்கப்பிள்ளையோ...

பரிசல்காரன் said...

நன்றி பரிசல்..

(ச்சே... பழக்கதோஷம்!)

@ அப்துல்லா

நன்றி அண்ணே...

@ கோவி கண்ணன்

ரிலீஸ் செய்யாத உங்கள் பதில்கள் சரி!

@ ராஜகோபால்

ரோபோ பொய் சொல்ற ரோபோவா, உண்மையச் சொல்ற ரோபோவான்னு எப்படித் தெரியும்?

இந்த விடை தப்பு.

@ நாஞ்சில் பிரதாப்

நன்றி பிரதாப். சூப்பர். இப்படியே யோசிச்சுட்டு இருங்க!

பரிசல்காரன் said...

@ அனுஜன்யா

எல்லாம் சரி. அந்த 99 மேட்டர் தப்பு. (நான் சொன்னது ‘அந்தக் காலத்தில.. இந்த முறை வந்தது ஏன்’ அப்போ எங்க கம்ப்யூட்டர்?)

@ சுடுதண்ணி

சரி சரி!

@ ராஜகோவால் எறும்பு

அது ராஜரத்தினம் போட்டோ அல்ல. கேள்விய நல்லா படிங்க..!

Unknown said...

3 No'S X 5 Rs = 15 RS

2 No'S X 2 Rs = 4 Rs

1 No'S X 1 Rs = 1 Rs

4 No'S X 20 Rs = 80 Rs
------------------------
10 No'S also 100 Rs.

is it right or wrong?

உண்மைத்தமிழன் said...

பரிசலு..

பதில்களை உடனடியாகப் போடவும்..!

நான் எக்ஸாம் எழுதி ரொம்ப வருஷமாச்சுன்றதால.. இதுல கலந்துக்கல..!

பரிசல்காரன் said...

எல்லாருக்கும் இன்னொரு மேட்டர்:

மொத கேள்விக்கு இரண்டு விதமான பதில் இருக்கு.

ஒரு பதிலைச் சொன்னவங்க, ரெண்டாவது முறையையும் கண்டுபிடிங்க பார்க்கலாம்...

சிங்கை நாதன்/SingaiNathan said...

விடைகளுக்காக

;)

அன்புடன்
சிங்கை நாதன்

Unknown said...

denomination - நாணயவாரி // பாங்க்ல போட்ருந்தாங்கோ//
ஒரு ஐம்பது ருபாய் , ஒரு இருபது ருபாய் , ஐந்து ஐந்து ருபாய் , இரண்டு இரண்டு ருபாய் ,ஒரு ஒரு ருபாய்
கணக்கு சரியா தல...

Unknown said...

1) 4 * Re.1 = Rs.4
3 * Rs.2 = Rs.6
2 * Rs.20 = Rs.40
1 * Rs.50 = Rs.50
-------------------------
10 100


3) இருவரும் ஒட்டகங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் (Exchange)

5) ராஜரத்தினத்தின் மகன் ஃபோட்டோ

ஜெகதீசன் said...
This comment has been removed by the author.
தாரணி பிரியா said...

1) 50 ரூபாய் 1
20 ரூபாய் 2
2 ரூபாய் 3
1 ரூபாய் 4
‍‍‍

2)19 ரூபாய் இருந்து இருக்கும்

5) அவர் மகன் போட்டோ

மத்ததுக்கு எல்லாம் யோசிக்கிற அளவுக்கு அறிவு இல்லாத காரணத்தால பதிலை நீங்க சொல்லும் போது பார்த்துக்கிறேன்.

ஜெகதீசன் said...
This comment has been removed by the author.
ஜெகதீசன் said...

kirrrrrrrrrrrrrrrrrrrrrrr
10 rs noteee illaiyaa...
:(((((((((((((((
muthalla kelviyap padicittu vidai sollanum..

ஜெகதீசன் said...

2, 1 ரூபாய் நோட்டெல்லாம் கணக்குல இருக்கா...
:P

Unknown said...

2 ) பத்தொன்பது ருபாய்...

3 ) திரும்பி போக சொன்னாரா...

4 )சின்ன வயசுல படிச்சது மறந்துடுச்சு...

5 ) அவர் போட்டோவ தான பாக்குறார்

6 )வரியை மிச்ச படுத்தவா..(99 ரூபாய்க்கு பொருள் வாங்கினாலும் நூறு ருபாய் தானே கொடுப்பார்கள்...)

தாரணி பிரியா said...

1 ரூ 1
2 ரூ 2
5 ரூ 5
20 ரூ 1
50 ரூ 1

மொத கேள்விக்கு 2nd answer

பரிசல்காரன் said...

@ ஜெகதீசன்

கடகடன்னு விடையச் சொல்லி அதே ஸ்பீடுல அழிச்சுட்டீங்களே பாஸ்..

1ரூ 2ரூ - இருக்கு!

ஜெகதீசன் said...

1.1)
1*50 + 1*20 + 5*5 + 2*2 + 1*1
1.2)
4*20 + 3*5 + 2*2 + 1*1

ஜெகதீசன் said...

இந்த பதில் சரியா பாஸ்...
:)))

ஜெகதீசன் said...

2)கல்லாவில 19 ருபாய் வச்சிக்கிட்டுத் தான் இப்படி ஒரு தண்டனை தந்தாரா... நானாயிருந்தா ஒரு 1900 ஆவது வச்சிருந்திருப்பேன்... :)

ஜெகதீசன் said...

5)ஏன் பாஸ் அவரும் உங்கள மாதிரியேவா...நீங்க உங்க மகளை அறிமுகப்படுத்துற மாதிரியே அவரு மகனை அறிமுகப்படுத்துறார்....

Kvp said...

Answer for question 1

50 x 1
20 x 1
5 x 5
2 x 2
1 x 1

Answer for question 2

Rs.19

anujanya said...

2nd answer for 1st question:

Re. 1 x 4 = 4
Rs. 2 x 3 = 6
Rs.20 x 2 =40
Rs.50 x 1 =50
-- ---
10 100
-- ---

வெற்றி said...

1)
first method:
rs.50-1
rs.20-2
rs.2 -3
rs.1 -4
second method:

rs.20-4
rs.5-3
rs.2-2
rs.1-1

Subankan said...

2 - 19 ரூவா

5 - அது ராஜரத்தினத்தோட போட்டோதான்

வெற்றி said...

2)
finally he have 500.
500+1(took by worker)=501
501/3=167
167+1=168
168/3=56
56+1=57
57/3=19
ஆக முதலில் இருந்த தொகை 19..

என் நடை பாதையில்(ராம்) said...

1. நான்கு 20 ரூபாய் நோட்டுகள்....
மூன்று 10 ரூபாய் நோட்டுகள்....
இரண்டு 2 ரூபாய் நோட்டுகள்....
ஒரு 1 ரூபாய் நோட்டு

2. எட்டு ரூபாய் பதினைந்து பைசா...


3. ஹி.. ஹி... எனக்கு 21 வயசு தான் ஆகுது. 60 ஆகும் பொது சொல்றேனே...!

4. இரு ரோபோவிடமும் சென்று பின் வருமாறு கேட்க வேண்டும் "சரியான வழி எது என்று மற்றொரு ரோபோவிடம் கேட்டால் அது என்ன பதில் சொல்லும்? " இரண்டும் தவறான பாதையைத்தான் காண்பிக்கும். எனவே எதிர் திசையில் செல்ல வேண்டும்.

5. அது அவரோட போட்டோ(ராஜ ரத்தினம்) தான....

6. இது பெரும்பாலும் tax detection உக்காக... ஆனால் சிலர் இது நம்மை ஏமாற்ற என்கிறார்கள்; இரண்டும்தான்...

வெற்றி said...

5)போட்டோவில் இருப்பது ராஜரத்தினத்தின் மகன்...

வெற்றி said...

3 ) பெரியவர் ஒட்டகத்தை ஒருவருக்கொருவர் மாற்றி கொள்ள சொல்லி ஐடியா கொடுத்தார்...சோ இன்னொருவரின் ஒட்டகம் முதலில் செல்வதற்காக இருவரும் வேகமாகசெல்கின்றனர்.

பரிசல்காரன் said...

@ ஜெகதீசன்

கரெக்ட்

@ கேவிபி

கரெக்ட்

@ அனுஜன்யா

சரி.

@ சுபாங்கன்

ஒண்ணு கரெக்ட். அது ராஜரத்தினத்தோட ஃபோட்டோ அல்ல!

பரிசல்காரன் said...

@ என் நடைபாதையில் (ராம்)

நீங்க சொன்னதுல ரோபோ விடை மட்டும் சரி.

மத்ததெல்லாம் தப்பு.

(பத்து ரூவா நோட்டே இல்லைங்கறேன்ல...)

வெற்றி said...

4 )'இந்த கதவு வழியா போனா நான் தப்பிச்சிடலாம்னு நீ சொன்னா அது உண்மையா?'

என் நடை பாதையில்(ராம்) said...

நாங்க இப்படியும் பதில் சொல்லுவோம்


1. அஞ்சு 15 ரூபா நோட்டு, மூணு 7 ரூபா நோட்டு, ஒரு 4 ரூபா நோட்டு...
(என்னது இதெல்லாம் கள்ள நோட்டா? யாருங்க சொன்னது? நானு கோயம்புத்தூர்....)

2. ?????

3. maejki utthuo basendiya அப்டின்னு அரபு மொழில சொல்லிருப்பாரு...

4. robo படத்துல hero விஜய்னு சொன்ன எந்த ரோபோ காரி துப்புதோ அது தான் உண்மை சொல்லற ரோபோ...
அப்புறம் நான் ஈசியா கண்டுபுடிசிருவேன்...

5. ராஜரத்தினதோட அம்மாவோட பையன் போட்டோ தான அது?


6. என்ன நம்பியும் பொருள் வாங்கினையே நீ ரொம்ப நல்லவண்டான்னு டிப்ஸா தருவாங்களோ...?

என் நடை பாதையில்(ராம்) said...

நான் பத்து ரூபாய் நோட்டையே mention பண்ணவில்லையே...

Kodees said...

1. Rs 1 x 1 = 1
2 x 2 = 4
5 x 3 = 15
20 x 4 = 80

2. Rs. 19/-

3. Swapping the horses

4. வெளியே போகனும்னா எந்தக் கதவு வழியா போகனும்னு அந்த ரோபோவக் கேட்டா என்ன சொல்லும்னு கேட்டு எதிர் வழியா போலாம்.

5. ராஜரத்தினம்
6. இது கடையின் கேஷியர்கள் பணம் திருடுவதை குறைபதற்கு எடுக்கபட்ட நடவடிக்கை. கல்லாவிலிருந்து சில்லறை எடுக்க வேண்டுமென்றால் அதற்கு தகுந்த என்ட்ரிகள் போடனும், அதில் விற்பனை செய்த்து பதிவாகிவிடும். பணத்தை அப்படியே அபேஸ் பன்ன முடியாது - நன்றி - டோண்டு

7. முடியல!

Subankan said...

//ஒண்ணு கரெக்ட். அது ராஜரத்தினத்தோட ஃபோட்டோ அல்ல//

அப்ப அவரோட மகன். சரியா?

முதலாவதுக்கு 20 ரூபா நோட்டு 4, 5 ரூபா நோட்டு 3, 2 ரூபா நோட்டு 2, 1 ரூபா நோட்டு 1.

Kodees said...

1. 1 x 4 = 4
2 x 3 = 6
20 x 2 = 40
50 x 1 = 50

ஸ்ரீநி said...

1.

50 X 1 = 50
20 X 1 = 20
5 X 5 = 25
2 x 2 = 4
1 x 1 = 1
10 100

denomitation = adakkamadhippu

2.

19 => 57 -1
56 => 168 -1
167=> 501 -1
thodarum

ச ம ர ன் said...

1)

4X20 = 80
3X5 = 15
2X2 = 4
1X1 = 1

2) 19 rupees

5) His own foto.

Senthil said...

Answer for 1st Question
50 x 1 = 50
20 x 1 = 20
2 x 3 = 6
1 x 4 = 4
Total Value = Rs. 100
Total No of Bills = 10

ஸ்ரீநி said...

3. மிக மெதுவாக செல்லும் ஒட்டகம் - இரண்டு மகன்லும் இல்லையென்றால் ஒருவனாவது பின்னிருக்க
அதாவது தன பக்கத்தில் இருப்பவனுக்கு சொத்து அதிகம்
இதை அந்தப் பெரியவர் சபீனா போட்டிருப்பார் - ஒட்டகம் பரந்திருக்கும்


5. ஃபோட்டோல இருக்கறவனோட அப்பா, என் அப்பாவோட மகன்தான் - தன மகனின் போடோவோடு ராஜரத்தினம்

6. கணக்கில் வராம சில சில்லறைகளாக பணம் - Easy money and unaccounted money

still thodarum

Prabhu said...

1)4 இருவது, 3 அஞ்சு, 2 இரண்டு, 1 ஒன்று ரூபாய் நோட்டுகள்.
2) 19
3) ஒரே வேகம் சம பங்கு? அல்லது வேகமாய்ப் போய் ஊருகிட்ட போனதும் ஒண்ணா ஸ்லோ பண்ணிகோங்க?
4)psychological pricing னு சொல்லுறாங்க. த்ளிவாக சொல்ல இயல வில்லை.
5)ராஜரத்தினத்தின் பையந்தான்.
6)ஜி.கேல வீக்கு!
7)இந்த வெளாட்டு நமக்கு ஆகாது!

அங்கிள், சாக்லேட்டு!

ஸ்ரீநி said...

4. Surrender
7. pudhir illaenteenga

apparam


I really appreciate your brain which is divided in 2 parts: Right & Left. In Right nothing is Left and in Left nothing is Right.

yes right is intutive so the leftist aproach is in intution is not possible . so nothing is left ist in my right and

when it comes to the matter of my left nothing can be right , because left deals with logic, only when i feel it is not right then it comes to my left. so again there is nothing right in left.

ஸ்ரீநி said...

annaen

neenga potturukkuradhu moolayoda padamaa? illa kudalaa ?

moolainna naduvula vagidu maadhiri kodu varumaey?????

☀நான் ஆதவன்☀ said...

1. எட்டு 5 ரூவா நோட்டு, இரண்டு 20 ரூவா நோட்டு

2.34.50?

3.

பரிசல்காரன் said...

@ நீங்க ஆதவன்

//1. எட்டு 5 ரூவா நோட்டு, இரண்டு 20 ரூவா நோட்டு//

பாக்கி இருவது டிப்ஸா?

Unknown said...

1. 20+20+20+20+5+5+5+2+2+1 அல்லது 50+20+20+2+2+2+1+1+1+1
2. 8.14 அல்லது ௧௯
3. அந்தப் பெரியவர் ஒட்டகங்களை மாற்றிக்கொள்ளச் சொன்னார்.
4. "இந்த வழியா போனா தப்பிக்கமுடியுமானு அடுத்த காவல்காரனைக் கேட்டா, அவன் என்ன சொல்லுவான்?"-அப்படின்னு ஒரு காவல்காரனை கேட்ட்கனும். அவன் சொல்ற பதிலுக்கு நேர் எதிரா விடு ஜூட்.
5. அது ராஜரத்தினத்தின் மகன் புகைப்படம்.
6. விலையைக் குறைத்துக்காட்ட

அன்புடன்,
செங்கோவி

☀நான் ஆதவன்☀ said...

அவ்வ்வ்வ் ஆமால்ல :)

ஆரூரன் விசுவநாதன் said...

அய்யோ சாமி.....நா வரல இந்த விளையாட்டுக்கு.......

Kodees said...

அது ராஜரத்தினத்தின் மகன் படம்

☀நான் ஆதவன்☀ said...

1, 20-1 நோட்டு
50-1 நோட்டு
5- 5 நோட்டு
2-2 நோட்டு
1-1 நோட்டு

☀நான் ஆதவன்☀ said...

2. கல்லால 19 ரூவா இருந்துதா?

☀நான் ஆதவன்☀ said...

//5) ராஜரத்தினம் ஒரு ஃபோட்டோவை வெச்சுட்டு பார்த்துட்டு இருந்தாரு. பக்கத்துல வந்த ஒருத்தரு, “யார் ஃபோட்டோவை இப்படிப் பார்த்துட்டு இருக்கீங்க?”ன்னு கேட்டார். ராஜரத்தினம் சொன்னாரு: “எனக்கு அண்ணனோ, தம்பியோ கிடையாது. ஆனா இந்த ஃபோட்டோல இருக்கறவனோட அப்பா, என் அப்பாவோட மகன்தான்”ன்னு சொல்றாரு. அப்ப அந்த ஃபோட்டோல இருக்கறது யாரு?//

அவன் மகன் போட்டோவை அவனே பார்த்துட்டு இருந்தானா என்ன?

Kathir said...

1)2 x 50 Rs. and 8 x 500 Rs.

அவன் கிட்ட 100 ரூபாய் மட்டும் தான் இருந்ததுன்னு நீங்க சொல்லலை ல்ல..

RAMYA said...

//
1)நூறு ரூவாய்க்கு சில்லறை மாத்தீட்டு வந்தான் ஒருத்தன். சில்லறை மாத்தினப்பறம் மொத்தம் பத்து நோட்டு இருந்தது அவன்கிட்ட. ஆனா அதுல பத்து ரூவா நோட்டே

இல்லை! அப்ப அவன்கிட்ட இருந்த நோட்டுகளோட டினாமினேஷன் என்ன?
//

1.Ans
======
50
20
5
5
5
5
5
2
2
1
====
100
====

//(அப்படியே ஓர் உப கேள்வி: டினாமினேஷனுக்கு தமிழ் என்ன?)//

Ans: இலக்க வகைப்பாடு


//
2. கடைசியா முதலாளி எண்ணிப் பார்க்கறப்போ சரியா 500 ரூவா இருந்துச்சு. அப்போ, கல்லாவுல முதல்ல இருந்த காசு எவ்ளோ?
//

Ans: கல்லாவில் முதல்ல இருந்த காசு = Rs.19/-


//
3. அந்தப் பெரியவர் சொன்ன ஐடியா என்ன?
//

3. Ans: பெரியவர் சொன்ன ஐடியா, "இரண்டு பேருமே அண்ணன் தம்பி ஆகையால் சொத்திலே இருவருக்கும் சரிபாதி பங்கு கிடைக்கும். அதுனாலே சண்டை இல்லாமல் இருவரும் ஒரே மாதிரி சென்று இலக்கை அடையுங்கள்".


//
5) ராஜரத்தினம் ஒரு ஃபோட்டோவை வெச்சுட்டு பார்த்துட்டு இருந்தாரு. பக்கத்துல வந்த ஒருத்தரு, “யார் ஃபோட்டோவை இப்படிப் பார்த்துட்டு இருக்கீங்க?”ன்னு கேட்டார்.

ராஜரத்தினம் சொன்னாரு: “எனக்கு அண்ணனோ, தம்பியோ கிடையாது. ஆனா இந்த ஃபோட்டோல இருக்கறவனோட அப்பா, என் அப்பாவோட மகன்தான்”ன்னு சொல்றாரு.

அப்ப அந்த ஃபோட்டோல இருக்கறது யாரு?
//

5. Ans: ரெட்டை குழந்தைகளில் ராஜரத்தினம் ஒருவர், படத்தில் இருப்பவர் இன்னொருவர். (ரெட்டை குழந்தைகள்)

**********************************

நான் நாலாவது கேள்விக்கும் ஆறாவது கேள்விக்கும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். பதில் விரைவில் எழுதுகிறேன்.

இதுவரை எழுதிய கேள்விகள் சரியா எழுதினமாதிரி ஒரு நினைப்புதான் சகோ :)

குப்பன்.யாஹூ said...

denom count amt
50 1 50
20 2 40
2 3 6
1 4 4
10 100

parisal, thnaks to excel & bill gates MS

குப்பன்.யாஹூ said...

5. my brother's son is in photo

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

1 நாலு இருபது, மூணு அஞ்சு, ரெண்டு ரெண்டு, ஒரு ஒரு ரூபா
2 பதிமூன்று ரூபா ஐம்பது பைசா
3 தெரியல
4 ஏதோ ஒரு ரோபோகிட்ட இந்த வழில போன செத்துடலாமா? என்று கேட்கவேண்டும். பதில் என்னவா இருந்தாலும், ஆப்போசிட் கதவு வழியா வெளிய வந்துடலாம்
5 ராஜரத்தினதின் பையன் போட்டோ...
6 தெரியல

குப்பன்.யாஹூ said...

denom count amt
50 1 50
20 2 40
2 3 6
1 4 4
10 100


denom count amt
50 0
20 4 80
5 3 15
2 2 4
1 1 1
10 100

அண்ணன் வணங்காமுடி said...

1. Answer

ரூபாய் X எண்ணிக்கை = ரூபாய்
50 X 1 = 50
20 X 2 = 40
2 X 3 = 6
1 X 4 = 4
----
ரூபாய் 100

பெசொவி said...

1. He would have got two fifty notes for hundred rupees. The remaining 8 notes may be of any denomination. It is not necessary that the total should be Rs. 100 only.

2. Let it be x originally. The first person would have paid 3x and after taking 1 it would be 3x-1 now 2nd person pays 9x-3 after taking 1, it would be 9x-4 and the 3rd person would have paid 27x-12 after taking 1, it would be 27x-13 and this 27x-13 = 500
so, 27x = 513

or x = 19
Originally, Rs. 19 was there

3. The elder man asked to exchange their horses since the slower horse only will win so each would try to drive the horse with utmost speed.

4. You ask the Robot like this:
If I ask the other Robot which is the way to go out what way will he show?

On getting a reply from the Robot, choose the other way and you will be free.

5. It is his son's photo.

6. "In 1876, Melville E. Stone decided that what Chicago needed was a penny newspaper to compete with the nickel papers then on the stands. But there was a problem: with no sales tax, and with most goods priced for convenience at even-dollar figures, there weren't many pennies in general circulation. Stone understood the consumer mind, however, and convinced several Chicago merchants to drop their prices--slightly. Impulse buyers, he explained, would more readily purchase a $3.00 item if it cost "only" $2.99. Shopkeepers who tried the plan found that it worked, but soon they faced their own penny shortage. Undaunted, Stone journeyed to Philadelphia, bought several barrels of pennies from the mint, and brought them back to the Windy City. Soon Chicagoans had pennies to spare and exchanged them for Stone's new paper."

for further information, pl go thru http://www.straightdope.com/columns/read/720/why-do-prices-end-in-99

அண்ணன் வணங்காமுடி said...

தோராயமாய் 8 ரூபாய் 15 காசு

பெசொவி said...

எல்லா புதிர்களுக்குமே, எனக்கு விடை தெரியும், அனுப்பி இருக்கிறேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

முதல் கேள்விக்கு விடை

50*1=50

20*1=20

5*5=25

2*2=4

1*1=1

Unknown said...

4 x Rs.20, 3 x Rs.5, 2 x Rs.2, 1 x Rs. 1 = Rs.100

பெசொவி said...

denomination தமிழ் பொருள் - பெயர்த்தொகுதி
ஆதாரம் : http://ta.wiktionary.org/wiki/பெயர்த்தொகுதி

*இயற்கை ராஜி* said...

2. Rs14.25
5.rajaratnam's son's photo

*இயற்கை ராஜி* said...

1. 4 X 20Rs
3 X 5 Rs
2 X 2Rs
1 X1 Rs

*இயற்கை ராஜி* said...

ஒரு ரோபோ1 டம் போய்... " எந்த கதவு வழியா தப்பிக்கலாம்ன்னு கேட்டா ரோபோ2 என்ன கதவைக் காட்டும்ன்னு கேக்கணும்.அது சொல்ற கதவை விட்டு மற்றொரு கதவில் வெளியேறணும்

*இயற்கை ராஜி* said...

3.அண்ணன் ஒட்டகத்தில் தம்பியும்,தம்பி ஒட்டகத்தில் அண்ணனும் ஏறிக்க சொல்லி பெரியவர் யோசனை சொல்லியிருப்பார்

*இயற்கை ராஜி* said...

to make that product to lie in the lower price band

லதானந்த் said...

http://lathananthpakkam.blogspot.com/2009/06/blog-post_23.html

நாடோடி இலக்கியன் said...

1)
20 ரூபாய் 4,
5 ரூபாய் 3,
2 ரூபாய் 2,
1 ரூபாய் 1.

4)ஏதாவது ஒரு ரோபோவிடம்,
தப்பிப்பதற்கான வழி எது என்று கேட்டால் மற்றோரு ரோபோ என்ன சொல்லும் என்று கேட்டால் ரோபோ சொல்லும் வழியை விடுத்து மற்றொரு வழியில் சென்றால் தப்பிக்கலாம்.

5)அவரோட பையன் போட்டோ.

ungalrasigan.blogspot.com said...

எல்லாத்துக்கும் எனக்கு விடை தெரியும். சொன்னா மத்தவங்களுக்கு சுவாரசியம் போயிடுமேன்னு பார்க்குறேன். :)

Youngcrap said...

Ans for 1 question:

50Rs - 1 = 50
20Rs - 1 = 20
5 Rs - 5 = 25
2 Rs - 2 = 4
1 Rs - 1 = 1
--------------
10 --100
---------------

அன்பரசன் said...

சத்தியமா எனக்கு தெரியல தல

sriram said...

1. 50 ரூபாய் - 1
20 ரூபாய் - 2
2 ரூபாய் - 3
1 ரூபாய் - 4

2. 8.15 ரூபாய், MS Excel ல Gool Seek னு ஒரு ஆப்ஷன் இருக்கு, அத வெச்சித்தான் கண்டுபிடிச்சேன், சொந்த சரக்கல்ல.

3. குதிரையை மாற்றிக் கொள்ளச் சொல்லி இருப்பார்

4. ரோபோ A and B, கதவு X and Y ன்னு வச்சிப்போம். A ரோபோகிட்ட போயி B ரோபோ கதவு X தான் சரியான கத்வுன்னு சொல்லுது, அது சரியான்னு கேளுங்க

5. ராஜரத்தினத்தின் மகனின் படம்

6. எப்பவோ படிச்சதா ஞாபகம்: 1$ விலை வச்சா காஷியர் பணத்தை திருட வாய்ப்புண்டு ஆனால் 1c திருப்பிக் கொடுக்க cash register ஐ திறக்க வேண்டும், அப்படி திறந்தால் விற்பனை ரெஜிஸ்டர் ஆகி விடும், அதனால்தான் அப்படி

Romeoboy said...

இந்த பதிவு படிக்க நல்ல இருக்கு .. பதில் சொல்ல தான் தெரியல.

creativemani said...

1)
7x10
1x20
2x5

5)
ராஜரத்தினத்தின் மகன்.

ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டியது.. :)

என் நடை பாதையில்(ராம்) said...

மன்னிக்கவும் நான் 5 ரூபாய்க்குப் பதில் 10 ரூபாய் என டைப் செய்து விட்டேன்.

KAVITHA said...

YOU MUST TIED 50 COWS IN 9 TREES. BUT THEY IS IN THIS SERIES(1,3,5,7....) YOU MUST USE EVEN NUMBERS ONLY. GIVE YOUR ANSWER VERY QUICK