Friday, December 25, 2009

புதிர்களின் விடைகள்

1) நூறு ரூவாய்க்கு சில்லறை மாத்தீட்டு வந்தான் ஒருத்தன். சில்லறை மாத்தினப்பறம் மொத்தம் பத்து நோட்டு இருந்தது அவன்கிட்ட. ஆனா அதுல பத்து ரூவா நோட்டே இல்லை! அப்ப அவன்கிட்ட இருந்த நோட்டுகளோட டினாமினேஷன் என்ன?


1 ரூபாய் x 4 = 4
2 ரூபாய் x 3 = 6
20 ரூபாய் x 2 = 40
50 ரூபாய் x 1 = 50

இன்னொரு முறை:

1 ரூபாய் x 1 = 1
2 ரூபாய் x 2 = 4
5 ரூபாய் x 3 = 15
20 ரூபாய் x 4 = 80

இன்னொரு முறை:

1 ரூபாய் x 1 = 1
2 ரூபாய் x 2 = 4
5 ரூபாய் x 5 = 25
20 ரூபாய் x 1 = 20
50 ரூபாய் x 1 = 50


(இந்த மூணாவது முறை தாரணிபிரியா சொன்னப்பதான் எனக்கும் தெரிஞ்சது. நன்றி தாரணி!)

இதோட உபகேள்வியான டினாமினேஷனுக்கு வந்த தமிழ்ப்பதங்கள்:-

அலகுவரிசை
பெயர்த்தொகுதி
நாணயவாரி


(எதுதாங்க கரெக்ட்?)

2) 2) ஒரு மொதலாளி தப்பு பண்ணின தன்னோட தொழிலாளிகள் மூணு பேருக்கு, அவங்க தப்புக்கு தகுந்த மாதிரி ஒரு வித்தியாசமான தண்டனை விதிச்சாரு. அவரோட கல்லாவுல எவ்ளோ பணமிருக்கோ, அதை விட மூணு மடங்கு பணத்தை அவங்க கல்லாவுல கட்டணும்னு. கட்டிட்டு, ஒரு ரூவா அவன் திருப்பி எடுத்துக்கலாம்னு சொல்லீட்டார். அதன்படி முதல் ஆள் கல்லாவுல எவ்ளோ இருக்குன்னு பார்த்து, அதவிட மூணு மடங்கு வெச்சுட்டு, ஒரு ரூவா எடுத்துட்டுப் போனான். அடுத்தவன் வந்து இருக்கறத எண்ணிப் பார்த்துட்டு, மூணு மடங்கு கட்டிட்டு ஒரு ரூவா எடுத்துட்டுப் போனான். மூணாமவனும் அஃதே செய்தான்.

கடைசியா முதலாளி எண்ணிப் பார்க்கறப்போ சரியா 500 ரூவா இருந்துச்சு. அப்போ, கல்லாவுல முதல்ல இருந்த காசு எவ்ளோ?


19 ரூபாய்.
(இருக்கறதைவிட மூணு மடங்கு-ன்னுதான் கேள்வில இருக்கு. இருக்கற பணம் + மூணு மடங்குன்னு இல்லை)


3)ஒரு அரபுக்காரர் தன்னோட இரு மகன்களுமிடையே சொத்தைப் பிரிக்கறதுக்காக ஒரு போட்டி வைக்கிறார். ‘உங்க ஒட்டகங்களுக்கிடையே ஒரு போட்டி வைங்க. யாரோட ஒட்டகம் மிக மெதுவாய்ப் போகுதோ அவங்களுக்கு அதிக பங்கு’ –ன்னு சொல்லிடறாரு. இரண்டு மகன்களும் அவங்கவங்க ஒட்டகங்கள்ல ஏறி மெ-து-மெ-து-வாப் போறாங்க.

இது ரொம்ப நாளா நடந்துட்டே இருக்கறதால, வெறுத்துப் போயி அவங்க வழில ஒரு பெரியவரைப் பார்த்து ஐடியா கேட்கறாங்க. அவர் ஒரு ஐடியா சொல்றாரு. அடுத்த நிமிடம், இவங்களை ஏத்திகிட்ட ஒட்டகங்கள் வெகு ஸ்பீடா ஓடத் தொடங்குது.

அந்தப் பெரியவர் சொன்ன ஐடியா என்ன?

ஒட்டகத்தை மாத்திக்கச் சொன்னார். (இதுக்கு ரம்யாக்கா ஒரு அருமையான பதிலைச் சொல்லிருக்காங்க! பின்னூட்டத்துல போய்ப் பாருங்க!)

4) உங்களை வில்லன் ஒரு ரூம்ல அடைச்சு வெச்சிருக்கான். அந்த ரூமுக்கு ரெண்டு கதவு. ஒரு கதவைத் திறந்தா நீங்க முடிஞ்சிங்கீங்க. இன்னொண்ணு வழியா தப்பிக்கலாம். எது, எந்தக் கதவுன்னு உங்களுக்குத் தெரியாது.

ஆனா உங்களுக்கு உதவ உள்ள ரெண்டு ரோபோ இருக்கு. அதுல ஒரு ரோபோ உண்மையை மட்டும் பேசும். இன்னொண்ணு பொய் மட்டும் பேசும். எந்த ரோபோ, எந்த வகைன்னும் உங்களுக்குத் தெரியாது.

இப்ப, ஏதோ ஒரு ரோபோகிட்ட ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டு நீங்க தப்பிக்கணும். என்ன கேட்பீங்க? எப்படித் தப்பிப்பீங்க?

ஏதோ ஒரு ரோபோகிட்ட போய், ‘நான் தப்பிக்க வழியைக் கேட்டா, அந்த ரோபோ எந்தக் கதவைக் காட்டும்?’ன்னு கேட்டுட்டு அதுக்கு எதிர்க் கதவுல போகணும்.

5) ராஜரத்தினம் ஒரு ஃபோட்டோவை வெச்சுட்டு பார்த்துட்டு இருந்தாரு. பக்கத்துல வந்த ஒருத்தரு, “யார் ஃபோட்டோவை இப்படிப் பார்த்துட்டு இருக்கீங்க?”ன்னு கேட்டார். ராஜரத்தினம் சொன்னாரு: “எனக்கு அண்ணனோ, தம்பியோ கிடையாது. ஆனா இந்த ஃபோட்டோல இருக்கறவனோட அப்பா, என் அப்பாவோட மகன்தான்”ன்னு சொல்றாரு. அப்ப அந்த ஃபோட்டோல இருக்கறது யாரு?

அவர் மகன் ஃபோட்டோ.
(இதுக்கும் அவசரப்பட்டு ‘ராஜரத்தினம் ஃபோட்டோ’ன்னு சிலர் சொல்லிடறாங்க. அதுதான் இந்தக் கேள்வியோட கூக்ளியே.. டக்னு கண்டுபிடிச்சாலும் சரியா சொல்லணும்!)

6) ஒரு ஜெனரல் நாலேட்சு கொஸ்டீனு! நெறைய கடைகள்ல 99 ரூவா, 199 ரூவான்னு ஐட்டங்களுக்கு விலை போட்டிருக்காங்க. நூறு, இருநூறுன்னு போடாம இப்படிப் போடறது கஸ்டமர்களுக்கு விலை கம்மியாத் தெரியணும்னு சொல்லப்படுது. ஆனா உண்மையா இந்த மாதிரி விலை போட என்ன அடிப்படைக் காரணமா ஆரம்பத்துல சொல்லப்பட்டுச்சுன்னு யூகிச்சு சொல்லுங்க பார்ப்போம்...

இதுக்கு ஈரோடு கோடீஸ் ஸ்ரீராம் ரெண்டு பேர்தான் சரியா சொல்லிருந்தாங்க.

200 ரூ, 100 ரூ-ன்னு விலை வச்சா காஷியர் பணத்தை திருட வாய்ப்புண்டு ஆனால் 1 ரூ திருப்பிக் கொடுக்க cash register ஐ திறக்க வேண்டும், அப்படி திறந்தால் விற்பனை ரெஜிஸ்டர் ஆகி விடும், அதனால்தான் அப்படி.


7) பச்சை-சிகப்பு-நீலம்-மஞ்சள்-நீலம்-கறுப்பு-சிகப்பு-நீலம்-பச்சை-கறுப்பு-சிகப்பு-மஞ்சள்-பச்சை-நீலம்-கறுப்பு-நீலம்-சிகப்பு-பச்சை

கரெக்டா?


.

13 comments:

Prabhu said...

200 ரூ, 100 ரூ-ன்னு விலை வச்சா காஷியர் பணத்தை திருட வாய்ப்புண்டு ஆனால் 1 ரூ திருப்பிக் கொடுக்க cash register ஐ திறக்க வேண்டும், அப்படி திறந்தால் விற்பனை ரெஜிஸ்டர் ஆகி விடும், அதனால்தான் அப்படி.///

இது கல்லாட்ட... ரூபான்னு சொன்னீங்க. கேஷ் ரிஜிஸ்டர் மேட்டர நானும் நெட்ல கண்டுபிடிச்சேன். இந்தியாவுக்கு ஒத்து வராது. இதுல ரூபான்னு போட்டிருக்கேன்னு அறீவாளித்தனமா யோசிச்சுட்டேன்!

பெசொவி said...

பரவாயில்ல, நானும் சில சரியான பதிலைத் தான் சொல்லியிருக்கேன்.
புதிர் பகுதி நல்லா இருக்கு. கண்டின்யு பண்ணுங்க.

சிவக்குமரன் said...

ஒட்டகப் பந்தயத்துல குதிரைய எதுக்குங்க மாத்திக்கணும்?

Unknown said...

//1 ரூபாய் x 1 = 1
2 ரூபாய் x 2 = 4
5 ரூபாய் x 5 = 25
20 ரூபாய் x 1 = 20
50 ரூபாய் x 1 = 50

(இந்த மூணாவது முறை தாரணிபிரியா சொன்னப்பதான் எனக்கும் தெரிஞ்சது. நன்றி தாரணி!)
//

ஹையோ.. நானும் இந்த முறைல தான சொன்னேன்...

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

{உங்களை வில்லன் ஒரு ரூம்ல அடைச்சு வெச்சிருக்கான். அந்த ரூமுக்கு ரெண்டு கதவு. ஒரு கதவைத் திறந்தா நீங்க முடிஞ்சிங்கீங்க. இன்னொண்ணு வழியா தப்பிக்கலாம். எது, எந்தக் கதவுன்னு உங்களுக்குத் தெரியாது.

ஆனா உங்களுக்கு உதவ உள்ள ரெண்டு ரோபோ இருக்கு. அதுல ஒரு ரோபோ உண்மையை மட்டும் பேசும். இன்னொண்ணு பொய் மட்டும் பேசும். எந்த ரோபோ, எந்த வகைன்னும் உங்களுக்குத் தெரியாது.

இப்ப, ஏதோ ஒரு ரோபோகிட்ட ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டு நீங்க தப்பிக்கணும். என்ன கேட்பீங்க? எப்படித் தப்பிப்பீங்க?

ஏதோ ஒரு ரோபோகிட்ட போய், ‘நான் தப்பிக்க வழியைக் கேட்டா, அந்த ரோபோ எந்தக் கதவைக் காட்டும்?’ன்னு கேட்டுட்டு அதுக்கு எதிர்க் கதவுல போகணும். }
இது ரொம்ப நல்லா இருக்கு.லாஜிக் தியரி ப(பி)டிப்பவர்களுக்கு இவ்வகை புதிர்கள் மிகவும் பிடிக்கும்.

Prathap Kumar S. said...

/இரா.சிவக்குமரன் said...
ஒட்டகப் பந்தயத்துல குதிரைய எதுக்குங்க மாத்திக்கணும்?//

அதானே...என்னங்க குழப்புறீங்க...

// 1 ரூ திருப்பிக் கொடுக்க cash register ஐ திறக்க வேண்டும், அப்படி திறந்தால் விற்பனை ரெஜிஸ்டர் //

ஒரு ரூபாய் சில்லறை இல்லன்னு சொன்னா, யாராவது ஒருரூபாய்க்காக சண்டைபோடுவாங்களா... போனா போகுதுன்னு விட்ருவாங்க...
ஆனா அந்த லாஜீக் நல்லாருக்குங்க...

எல்லா பதிலுமே நான் தப்பாத்தான் சொன்னேன். ரொம்ப டாக்ஸ்

Unknown said...

அதெல்லாம் சரி. நான்
ஒரு புதிர் சொல்றேன். பதில் சொல்லுங்க பார்ப்போம்.

http://somayanam.blogspot.com/2009/12/blog-post.html

பரிசல்காரன் said...

ஏதோ வேகத்துல ஒட்டகத்துக்கு பதிலா குதிரைன்னு டைப்பீட்டேன்.

மன்னிச்சிக்கங்,...

Desperado said...

/மூணு மடங்கு பணத்தை அவங்க கல்லாவுல கட்டணும்னு/

அதவிட மூணு மடங்கு "வெச்சுட்டு" ஒரு ரூவா எடுத்துட்டுப் போனான். மூணு மடங்கு "கட்டிட்டு" ஒரு ரூவா எடுத்துட்டுப் போனா

if you pay something that adds up to the total.

rephrase the question please.

your 'explanation?' on this one is very very lame (it annoys)

பரிசல்காரன் said...

@ desparado

:-))

Desperado said...

its not funnnnnnnneeeeeiiiiiiiiiiiiiiii
http://www.youtube.com/watch?v=i9WmKre5O2I

பரிசல்காரன் said...

@ Desperado

வெரி இண்ட்ரஸ்டிங்....

Thamira said...

நல்லவேளை எல்லாம் முடிஞ்சபிறகு வந்தேன். இல்லேன்னா மண்டை காஞ்சிருக்கும்.

ரோபோ கேள்வி சுவாரசியம். அதில் ஒரு வார்த்தை வருகிறதே? //முடிஞ்சிங்கீங்க//

என்ன அர்த்தம் பரிசல்?