அங்கங்கே பலர் உதிர்த்த சில முத்துக்கள்........
சமீபத்தில் ஈரோட்டு சங்கமத்தின் போது பிரபலங்கள் சிலர் வலைப்பூ எழுதாமல் அடிக்கடி ட்விட்டரில் தென்படுகிறார்களே என்பது பற்றிய பேச்சு வந்தது.
“ட்விட்டர்ல 146 கேரக்டர் இருக்கு” என்று அப்துல்லா ஆரம்பித்தார்... நான் கேட்டேன்.. “அதுனால போய்ட்டீங்களா.. இல்ல ப்ளாக்கர்ல வால்பையன் மாதிரி கேரக்டரெல்லாம் இருக்கேன்னு பயந்து போய்ட்டீங்களா?”
********************
சென்னையில் இரண்டாம் தளத்தில் உள்ள அப்துல்லா அறைக்குச் செல்ல கீழே லிஃப்டிற்காகக் காத்திருக்கிறோம். ‘என்னா.. யூத் மாதிரி இருந்துகிட்டு, லிஃப்டுக்கு வெய்ட் பண்றீங்க? படியேற முடியாதா’ என்று கேட்கிறார் ஒரு நண்பர். உடனே சட்டென்று சொல்கிறான் சகா கார்க்கி..
“லேட்டஸ்ட் டெக்னாலஜியைப் பயன்படுத்தறவன்தான் யூத். படியேறிப் போய் எனர்ஜியை வேஸ்ட் பண்றதெல்லாம் ஓல்டு!”
************************
ஈரோடு நிகழ்ச்சில அனானி கமெண்ட்ஸ் பத்தி பேச்சு வந்தது. அனுமதிக்கலாமா, அனுமதிக்கக் கூடாதா.. சரியா தவறான்னு போட்டு கிழிச்சுட்டிருந்தாங்க.
திடீர்னு ஒரு பாவமான குரல் ஒலிச்சது..
“அனானி கமெண்ட் சரியா தப்பா, வேணுமா வேணாமான்னெல்லாம் பேசிகிட்டே இருக்கீங்களே... ஒரு கமெண்டும் வராம அனானியாவது கமெண்ட் போடமாட்டானான்னு காத்திட்டிருக்கற எங்களை மாதிரி ஆளுகளைப் பத்தி யோசிச்சீங்களா?”
திரும்பிப் பார்த்தா - தண்டோரா!
அவருக்கு ஒரு முப்பது கமெண்ட் பார்சேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏல்ல்ல்ல்..
**********************
விவேக், வடிவேலு பற்றிப் பேச்சு வந்தது.
“என்ன இருந்தாலும் விவேக் இண்டலெக்ச்சுவல்தானே?”
“மக்களோட மனசைப் படிக்கணும்டா. இல்லாம சும்மா அறிவுரையே சொல்லிகிட்டிருந்தா அது மெண்டலெக்ச்சுவல்!”
***************************
நாங்கள் போன ஆட்டோக்காரன், பஸ்ஸுக்கும், காருக்கும் இடையில் புகமுடியாத ஒரு இடைவெளியில் தன் ஆட்டோவைச் செலுத்தியபோது..
“அமிதாப்பச்சன் சென்னைல இருந்தா அவன் காலுக்கடில கூட ஓட்டீட்டுப் போவானுக”
***************************
ரமேஷ் வைத்யா ஒரு ஹோட்டலுக்குப் போய் பில் போடும் இடத்தில் ஒரு செட் இட்லி ஆர்டர் செய்திருக்கிறார்.
பில் போடுபவர்:- ‘சாப்பிடவா.. பார்சலா?’
ரமேஷ்:- “சாப்பிடத்தான். பார்சல்!”
முக்கியக்குறிப்பு: இந்த மொக்கையை நானும் பலதடவை சொல்லியிருக்கிறேன். ‘ஏங்க.. பார்சல்னாலும் சாப்பிடத்தானே’ என்றோ ‘பார்சல்ன்னா சாப்பிடக்கூடாதா?’ என்றோ கேட்பேன். இவர் அவன் கேட்டதையே திருப்பிச் சொல்வதுபோல் இரண்டே வார்த்தையில் நச்சென்று சொல்லியதில்தான் சூட்சுமம் இருக்கிறது. சிறுகதை எழுத இந்தச் சொற்பிரயோகம் மிகமுக்கியம்!
***************************
அறையில் அப்துல்லா தனது கணீர்க்குரலில் ஒரு பாடல் பாடுகிறார். தண்ணிலையிலும் எல்லோரும் தன்னிலை மறந்து கைதட்ட, சிலர் அவரைப் பாராட்டிப் பேச.. ஒருத்தர் ‘உன் காலைக் கொண்டா.. விழணும் அதுல’ என்று இடையிடையே சொல்கிறார். அவரது குரல் எங்கள் பாராட்டுக்கிடையே சரியாகக் கேட்கப்படவில்லை. இப்போது அவர் உரத்தகுரலில்.. ‘உன் காலைக் கேட்கறேன்.. காமிக்க மாட்டீங்கற?’ என்கிறார்.
உடனே அங்கிருந்த நண்பர்-குறும்பட இயக்குனர்- சாரதாகுமார் சொல்கிறார்..
“அவரே நாங்க பாராட்டற பாராட்டுல ‘தலைகால்’ புரியாம இருக்காரு..”
**************************
ராசி பட இயக்குனர் முரளிஅப்பாஸ் வந்தார். பெயர்க்காரணம் கேட்டோம். அதன் அப்பா பெயரான அப்பாசாமி-யின் சுருக்கம்தான் அப்பாஸ் என்றார். ‘நான் ரம்பாவின் ரசிகன். நீங்க ரம்பாவை வெச்சுப் படம் எடுத்திருக்கீங்க’ என்று கைகொடுத்தேன். கொஞ்ச நேரப் பேச்சின்போது ஒரு கவிதைக்கு தொடைதட்டி ரசிக்க நண்பர் சந்தோஷ் சொன்னார்..
“ரம்பா ரசிகருல்ல, அதான் தொடைல தட்டறீங்க”
(ஆனா நான் என் தொடைலதானே தட்டினேன்....)
***************************
ஒரு நண்பரிடம் கேட்கப்படுகிறது..
“நீங்க பொறந்து வளர்ந்தது எங்க?”
அவர்: “வேலூர்”
உடனே கார்க்கி: “எந்த செல்லுல?”
******************
கார்க்கியை ‘டா’ போட்டு ஒரு நண்பர் அழைத்தபோது, இன்னொருவர் சொன்னார்.
“எனக்கும் கார்க்கியை அப்படிக் கூப்பிடணும்ன்னு தோணுது. ஆனா அவர் தப்பா நெனைப்பாரோன்னு யோசனையா இருக்கு”
“ஒரு ரவுண்டு முடியட்டும். நீங்க எப்படிக் கூப்பிடப் போறீங்கன்னு பாருங்க”
இந்த நேரத்தில் குறும்பட இயக்குனர் (அடடா.. இத எத்தனை தடவைடா சொல்லுவ..) சாரதாகுமார் ஒரு விஷயம் சொன்னார்..
“மதுரைல ஒரு தியேட்டர் இருந்துச்சு. அந்தக்காலத்துல படம் பார்க்க வர்றவங்களை டிக்கெட்டோட மதிப்பை வெச்சுத்தான் கூப்பிடுவாங்க.
‘ஒண்ணாரூவாயெல்லாம் வாங்கடா.. ரெண்டாரூவாயெல்லாம் வாங்கய்யா.. அஞ்சு ரூவாயெல்லாம் வாங்கசார்’ இப்படித்தான் கூப்பிடுவாங்க..”
**************************
ஒரு நண்பர் தவறாக ‘இளநி, பீர்ன்னெல்லாம் சொன்னா உதடு ஒட்டாது. ப்ராண்டி, ரம்-னு சொல்லிப்பாருங்க. உதடு ஒட்டும்’ என்று சொன்னார்.
“அதெப்படி பீர்-ன்னு சொன்னா உதடு ஒட்டாதுன்னு சொல்றீங்க?”
நர்சிம்: “குடிச்சுட்டுப் பேசினா வாய் குழறி ஒட்டாமச் சொல்வாங்களே.. அதைச் சொல்றாரு போல..”
இந்த இடத்தில் ஒருத்தர் மேடைப் பேச்சின்போது அ.தி.மு.க-வுக்காக பேசும்போது பேசியதைக் குறிப்பிட்டார்...
“கலைஞர், கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், தயாளு, ராஜாத்தி என்ன சொன்னாலும் உதடு ஒட்டாது. ஆனா எம்.ஜி.ஆர், ராமச்சந்திரன், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல் இப்படி என்ன சொன்னாலும் உதடு ஒட்டும்”
உடனே யாரோ கேட்டார்கள்..
“இதச் சொன்னதுக்கு கைதட்டினாங்களா.. கையால தட்டினாங்களா...”
.
42 comments:
me the first??? ellame super..am a huge fan of such 'sweet mokkai's (sweet nothings mathri vechukkangalen)
en sarbula onnu: one of my friends recently had a mottai. I said "mattamana paya da avan". Adhuku innoru fren "illa, mottamana paya"
நீங்கள் தமிங்க்லிஷ் கமெண்டுகளை வெறுப்பவர் என்றறிவேன். பரிசல் ப்ளாகில் me the first -ஆ என்ற ஆசையில் அவசர அவசரமா தமிங்க்ளிஷ்ல அடிச்சுட்டேன். அட்ஜஸ்ட் மாடி..:)
என் சார்பில் இன்னொன்று: எங்கள் ஆபிசில் ஒரு ட்ரைனிங் செஷன். ஒருத்தன் நிமிடத்துக்கு ஒருமுறை தும்மி விட்டு "excuse me " என்றவாறு சொல்லிக்கொண்டே இருந்தான். பயங்கர distraction எல்லாருக்கும். என் நண்பன் "பாஸ், நாங்க excuse me சொல்ற வரைக்கும் தும்முவீங்க போலருக்கே"ன்னான். இப்போ யோசிச்சா அவன் சொன்னதுல லாஜிக் இல்ல. ஆனா சொன்னப்போ செம ரெஸ்பான்ஸ்.
பரிசல் கலக்கல் கற்பனை......
;))))))))))))
இம், காலைலேயே கொஞ்சம் சிரிச்சிட்டு வேலைய ஆரம்பிக்கறேன்...
தேங்க்ஸ் தலைவா
//பரிசல்காரன்//
ஒட்டுதே..,
//பரிசல் கலக்கல் கற்பனை..//
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
தலைப்பை மட்டும் படிப்போர் சங்கத்தின் நிரந்தர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர தலைவர் இவர்தாம்ப்பா
நச்..
இவ்வளவு சுவாரஸ்யங்களுக்கு நடுவே இனிஷியல் மேட்டர் உறுத்திக்கொண்டிருக்கிறது...வாசகியரும்உண்டல்லவா..?
தூக்கிவிடுவதே உசிதம்.
மீ த ஃபர்ஸ்ட்டு - தமிழ் மணம் ஓட்டுப் போடுறதுலங்க..
சில நேரங்கள்ல கேக்குறப்போ இருந்த அந்த டைமிங் திரும்ப அதை வேற யார்கிட்டயாவது சொல்லும்போது வராது. உங்களுக்கு வந்திருக்கு.
முரளி அப்பாஸை “சொல்ல சொல்ல இனிக்கும்” இயக்குநர்ன்னே சொல்லியிருக்கலா,.
பரிசல் எல்லா ரசங்களீலும் புகுந்து விளையாடியிருக்கிறீர்கள். பல விஷயங்கள் ரிமிக்ஸாக இருந்தாலும். எதையும் எடுட்துவிடாதீர்கள். நல்ல வந்திருச்சினா சில பேர் அப்படித்தான் சொல்வார்கள்
கேபிள் சங்கர்
ஒரே ரத்தம்! ரொம்ப கடிக்காதீங்க!
shortfilmindia.com said...
பரிசல் எல்லா ரசங்களீலும் புகுந்து விளையாடியிருக்கிறீர்கள். பல விஷயங்கள் ரிமிக்ஸாக இருந்தாலும். எதையும் எடுட்துவிடாதீர்கள். நல்ல வந்திருச்சினா சில பேர் அப்படித்தான் சொல்வார்கள்
கேபிள் சங்கர்
விபரீதமா அர்த்தம் வந்துச்சின்னா உங்களுக்கும் அதேதான் சோல்லுவோம்...
வந்தவர்: என் பையனுக்கு பெயர் “ஹ” வில் ஆரம்பிக்கணும், ஸ்வீட் அண்ட் சார்ட்டாக இருக்கணும்.ஒரு பெயர் சொல்லுடா...
என் பையன்: ஹல்வா....
லிப்ட் ஜோக் பாக உண்டி....
//ரமேஷ் வைத்யா ஒரு ஹோட்டலுக்குப் போய் பில் போடும் இடத்தில் ஒரு செட் இட்லி ஆர்டர் செய்திருக்கிறார்.
பில் போடுபவர்:- ‘சாப்பிடவா.. பார்சலா?’
ரமேஷ்:- “சாப்பிடத்தான். பார்சல்!”//
புது சட்டையைப் பார்த்து ரெடிமேடா, ஸ்டிச்சுடா என்று கேட்பது கூட இந்த ரகம்தான். ரெடிமேட் சட்டையெல்லாம் பசை போட்டு ஒட்டியா செய்கிறார்கள்?
http://kgjawarlal.wordpress.com
பரிசல்.....இதுக்கு "ச்சும்மா" ங்கறத விட, "நெசமா....."ன்னு பேர் வெச்சிருக்காலாம்.
நண்பர்களுடனான அரட்டைகளை பகிர்ந்தது ரசிக்கும்படி இருந்தது...
தொடருங்கள்
மீ த 2 ........
உங்களுக்கு தமிழிஷ்ல 2 வோட்டு நாந்தானுங்கண்ணா...
நண்பர்களோட நாம இருக்கும் போது கண்டதுக்கெல்லாம் ..”கண்டது”க்கெல்லாம் சிரிப்போம்.. அதை பதிவாக்கி அதே சிரிப்பை வரவழைப்பதற்க்கு தனி திறமை வேண்டும்..
உங்கள்ட அது நிறயவே இருக்கு.. நிறைவா இருக்கு.. :-)
தொடரவும்
சிரிப்பு முத்துக்கள் சிரிக்கும் வகையில் இருந்தது.
லிப்ட் லேட்டஸ்ட் டெக்னாலஜியா ?. கார்கி சொன்னாருன்ற ஒரே காரணத்துக்காக ஒத்துக்க வேண்டியிருக்கு :)
சும்மா நச்சுனு இருக்கு எல்லாமே.
இன்னுமாயா ஞாபகம் இருக்கு?
பல்வேறு சந்தர்ப்பங்கள் / கூட்டங்களிடையே வந்துவிழும் உறுமீன்களை கொத்தித்தரும் மீன்கொத்தி நீங்கள்.!
‘ஒண்ணாரூவாயெல்லாம் வாங்கடா.. ரெண்டாரூவாயெல்லாம் வாங்கய்யா.. அஞ்சு ரூவாயெல்லாம் வாங்கசார்’ இப்படித்தான் கூப்பிடுவாங்க..”// கலக்கல்.!
மீள்மிக்ஸிங் சூப்பர்.
கார்க்கியின் வேலூர் கேள்விக்குச் சிரிப்பை அடக்க முடியல :-)
எல்லாமே நன்கு ரசிக்கும் படி எழுதி இருக்கீங்க.
தல வைத்யா பற்றி நீங்க சொன்ன நத இன்னொரு துணுக்கயும் போட்டிருக்கலம்ல?
//
“ட்விட்டர்ல 146 கேரக்டர் இருக்கு” என்று அப்துல்லா ஆரம்பித்தார்... நான் கேட்டேன்.. “அதுனால போய்ட்டீங்களா.. இல்ல ப்ளாக்கர்ல வால்பையன் மாதிரி கேரக்டரெல்லாம் இருக்கேன்னு பயந்து போய்ட்டீங்களா?”//
தல எனக்கு மேல அவதாரம்லாம் இருக்காங்களாம்!
//“லேட்டஸ்ட் டெக்னாலஜியைப் பயன்படுத்தறவன்தான் யூத். படியேறிப் போய் எனர்ஜியை வேஸ்ட் பண்றதெல்லாம் ஓல்டு!”//
டுவிட்டர் லேட்டஸ்
ப்ளாக் ஓல்டு!
அப்துல்லா யூத்து
நீங்க ஓல்டு!
\\ரமேஷ் வைத்யா ஒரு ஹோட்டலுக்குப் போய் பில் போடும் இடத்தில் ஒரு செட் இட்லி ஆர்டர் செய்திருக்கிறார்.
பில் போடுபவர்:- ‘சாப்பிடவா.. பார்சலா?’
ரமேஷ்:- “சாப்பிடத்தான். பார்சல்!”//
இந்த மாதிரி பேசி ஒரு கடைல சண்டை வரமாதிரி ஆகிடுச்சு.
ok....nice
ennoda puthu blog kku vanga thala....
//சாப்பிடத்தான். பார்சல்!//
படிக்கத்தான் பரிசல்..
//படிக்கத்தான் பரிசல்.. //
பின்னூட்டத்தான் பிரசன்னா!
எழுத எழுத வந்துக்கிட்டே இருக்கும்போல இருக்கே!
கார்க்கி....ரமேஷ் வைத்யா..
last word freaks...!
சூப்பரு :))
//பரிசல்காரன்//
ஒட்டுதே.
கார்க்கி- ஒட்டவில்லை
நல்லாருக்கு boss!!
அப்புறம்,
ஏற்கனவே ரெண்டு தடவை என் பின்னூட்டங்களுக்கு
"முதல் வருகைக்கு நன்றி" ன்னு போட்டுட்டீங்க...
ப்ளீஸ்... இப்பவும் எழுதீறாதீங்க :))
மனம் விட்டுச் :-)த்தேன்
//அறையில் அப்துல்லா தனது கணீர்க்குரலில் ஒரு பாடல் பாடுகிறார். தண்ணிலையிலும் எல்லோரும் தன்னிலை மறந்து கைதட்ட, சிலர் அவரைப் பாராட்டிப் பேச.. ஒருத்தர் ‘உன் காலைக் கொண்டா.. விழணும் அதுல’ என்று இடையிடையே சொல்கிறார்//
எதுக்கு?....இனிமேல் பாடாமல் இருக்கவா?:))
உறவினர் ஒருவர் வீட்டுக்குப் போயிருந்தேன்!அவர்,இவ தான் என் சிஸ்டர்,ரொம்ப நல்லாப் பாடுவா என்றார்.நான் உடனே அப்போ,ட்ரான்சிஸ்டர்னு சொல்லுங்க என்றேன்..இன்று வரை அவரை எல்லோரும் ட்ரான்சிஸ்டர் என்று தான் அழைக்கிறார்களாம்!
நேசன் ‘டிரான்சிஸ்டர்’ கலக்கல்...
சூப்பரு பதிவு !
மற்றுமொன்று - உங்களுடைய முதல் புத்தகம் 2010 ஆ ?
நாட் பேட் டூட்,
பட் டோண்ட் ஸ்டிக் வித் திஸ் ஜெனர்,டரை டு மூவ் டு நெக்ஸ்ட் ச்டேஜ்.யூ கெட் லாட் ஆஃப் ஆப்ஷன்ஸ்
சரி சரி... அதான் 'தமிழ் தலைமகன்' பட்டம் கிடைத்தாயிற்றே..இப்போது உதடுகள் ஒட்டவில்லை என்று யார் சொல்ல முடியும்?
பேருந்திலும் இன்னும் பல இடங்களிலும் எனக்குத் தோன்றும் சிறு ஐயம்....உதடுகள் ஓட்டுவதால் என்ன பயன்?
ஹாஹாஹா... எல்லாமே டாப்புங்க.
Post a Comment