ருச்சிகா.
வளர்ந்து கொண்டிருந்த டென்னிஸ் வீராங்கனை. 1990ல் 14 வயதிருக்கையில் ரத்தோர் என்ற போலீஸ் அதிகாரியினால் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறாள். (ரத்தோரின் மகளும், ருச்சிகாவும் ஒரே பள்ளியில் படிப்பவர்கள்!) ருச்சிகாவின் தந்தை கிர்ஹோத்ரா நீதியின் கதவுகளைத் தட்டுகிறார். பதவியில் இருக்கும் ரத்தோர் வெவ்வேறு வழிகளில் கிர்ஹோத்ராவையும் அவரது குடும்பத்தாரையும் பழி வாங்குகிறான். ருச்சிகாவின் சகோதரரை பொய் வழக்குப் போட்டுத் தாக்கினார்கள். குடும்பமே சொந்த வீட்டை விட்டு அகதிகளாய் வீடு மாறித் திரிந்தார்கள். தனக்காத்தான்-தன்னால்தான் என்ற கவலை மேலோங்க சில வருடங்களுக்கு முன் ருச்சிகா தற்கொலை செய்து கொண்டாள்.
கடந்த வாரம் நீதி தேவதை கண்ணைத் திறந்துவிட்டாள். 19 வருடம் கழித்து! பாலியல் பலாத்காரம், ருச்சிகாவின் குடும்பத்தினருக்கு கொடுத்த தொல்லைகள் என்று ரத்தோர் செய்த அட்டூழியங்களுக்கு “மிகப்பெரிய” தண்டனையை நீதிபதிகள் அளித்தார்கள் ரத்தோர் எனும் வெறிநாய்க்கு.
ஆறு மாத சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம்!
தீர்ப்பு குறித்து கோர்ட்டுக்கு வெளியில் நிற்கும் பத்திரிகையாளர் அறியுமுன்னே பெயிலில் சிரித்தபடி வருகிறான் ரத்தோர்.
“என்னவோ உள்ளே தங்கமெடல் வாங்கிக் கொண்டு வந்ததுபோல சிரித்தபடி அவன் வரும்போது என்னால் இந்த நாட்டை, நீதியை, ஜனநாயகத்தை எண்ணி அழாமலிருக்க முடியவில்லை” என்று கதறுகிறார் ருச்சிகாவின் தந்தை.
பத்திரிகையாளர்கள் ரத்தோரை இடைமறித்துக் கேட்ட கேள்விகளுக்கு “அது பழைய விவகாரம். எதற்கு கிளறுகிறீர்கள்?” என்ற திமிரான பதிலுடன் போய்விட்டான்.
ஒரு கட்டத்தில் எல்லாமிழந்து தளர்ந்து போயிருந்த கிர்ஹோத்ராவை சமாதானப்படுத்தி, இந்த வழக்கை வேறொரு நண்பர் முன்னின்று நடத்துகிறார். தன் தோழிக்கு நடந்த அவலத்தின் போது உடனிருந்த ஆராதனா குப்தா இந்த வழக்கின் தீர்ப்பிற்காக வெளிநாட்டிலிருந்து வந்து, இந்தத் தீர்ப்பைக் கேட்டு கண்ணீர் விடுகிறார். ‘என் தோழியை என்னால் இறப்பிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. இந்தத் தீர்ப்புக்காகவா 19 வருடங்கள் என்று அவள் ஆன்மா கேட்குமே.. என்ன சொல்வேன்’ என்று அவர் புலம்புவது கண்ணோடு சேர்த்து காதையும் கட்டியிருக்கும் நீதி தேவதைக்கு எங்கே கேட்கப்போகிறது?
இப்போது எல்லா மீடியாக்களும் இந்த விவகாரத்தை கையிலெடுத்திருக்கின்றன.
ஒரு சேனல் 1993ல் பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்பட்டு, ரத்தோரின் முன்னிலையில் நிர்வாணமாகவும் இன்னபிற வகையிலும் துன்புறத்தப்பட்ட ருச்சிகாவின் சகோதரன் ஆஷூ, நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அஃபிடவிட்டின் நகலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறது.
அதில் அவர் சொல்லியிருக்கும் விஷயங்கள் உண்மையானால் குலைநடுங்க வைக்கிறது.
ரத்தோர் முழுக்க முழுக்க அரசியல்வாதிகளை தன்கைக்குள் போட்டுக் கொண்டு காய் நகர்த்தி விட்டார் என்று அரியானாவின் முன்னாள் உள்துறைச் செயலாளர் பேட்டி கொடுக்கிறார். இந்த வழக்கை விசாரித்த ரத்தோரின் மேலதிகாரி ‘ரத்தோர் இந்த வழக்கை விசாரிக்கும் என்னையே அடிக்கடி மிரட்டி இருக்கிறார்’ என்கிறார்.
இன்னொரு சேனல் ருச்சிகாவின் தந்தையை பேட்டி எடுக்கிறது. அழுது கொண்டும், ஆத்திரப்பட்டுக் கொண்டும் அந்த மனிதன் நாட்டையும், நீதியையும் நோக்கி கேட்கப்படும் கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை.
இருந்தாலும் சொல்லப்படுவதில்லை.
ஜெய்ஹிந்த்.
.
33 comments:
மண்டிகிட்டு வருது எரிச்சல்...
என்ன அநியாயம் பரிசல் இது????
இது இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் நடக்கும் அதிகார வர்கத்தின் அநியாயம் ..
தலைகுனிந்து நிற்கிறேன்.
கண்ணை கட்டிய நீதி தேவதைக்கு காதும் கேட்காது என்று நினைக்கிறேன்.. ஏழைகளின் கண்ணீர் என்று தான் துடைக்கப்படுமோ? அதிகார வர்க்கம் ஒழியவேண்டும்..
பொறம்போக்கு பாடுங்க...
நான் ரத்தோரை சொல்லவில்லை. தீர்ப்பளித்தவனை..
ஏற்கனேவே படிச்சுருக்கேன்..
என்ன பண்றதுன்னு தான் தெரியலை
:((((
கண்ணீரைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. பெற்ற தாயைக்கூட காசுக்காக விற்றுவிடுவார்கள்.
கே கே நான் கூட இது பற்றி எழுதலாம் என்று இருந்தேன்..
ஆத்திரம் தான் வருது அவர்களை நினைத்து .. என்னமோ போங்க!
//ஆறு மாத சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம்!//
ரத்ஹோரைவிட மோசமானவர்கள் திர்பளிதவர்கள்
இது போல அதிகாரவர்க்கத்தை எதிர்த்து மகனின் இறப்பிற்காக போராடி வென்ற நீலம் கட்டாராவிற்கு இப்ப தில்லியில் வேலையே இதே மாதிரி அதிகாரவர்க்கத்தால் பாதிக்கப்பட்டவங்களுக்காக நடக்கிற மெழுகுவத்தி போராட்டத்துல மெழுகுவத்தி ஏத்தறது தான்.. இண்டியா கேட்டில் அதான் நடக்குது அடிக்கடி. இது தொடர்கதையா நடந்துட்டே இருக்கு..:(
ஒருத்தன் ஒவ்வொரு நேர் வழியும் அடைத்தால் மாற்று பாதையில் நீதி கேட்கலாம் அல்லது தீர்ப்பு தரலாம்.
நானும் கார்க்கியை வழிமொழிகிறேன். அவ்ன் சரியாயிருந்தான் இந்த ராத்தோர் போன்றவர்கள் பயப்படுவார்கள்
ருச்சிகா குடும்பத்தில் ஒருத்தருக்கு கூட மூளை இல்லை. நான் அந்த குடும்பத்தில் ஒருத்தியா இருந்த அந்த ரத்தோர் என்ற போலீஸ் நாய்க்கு AIDS ரத்தம் உள்ள ஊசி போட்டு, AIDS முத்தின பிறகு அவன் கை, கால்கள் புண் ஆகும்படி செய்வேன். புண்களும் சீக்கிரம் ஆறது அவன் வாழும் காலம் முழுக்க உயிர் பயத்திலும், உறவுகளால் துரத்தி அடிக்கப்பட்டு தனிமையிலும் அவதி பட வைப்பேன். ருச்சிகா குடும்பமே ஒரு முட்டாள் குடும்பம்.
bastards!
இந்தியாவில் ஏழைக்கு ஒரு நீதி..! பணக்காரனுக்கு வேறொரு நீதி..!
இதுவொரு சிறந்த உதாரணம்..!
இது போன்ற வழக்குகளில் உண்மை குற்றவாளி ராம் ஜெத் மலானி தான். ஜெசிகா வழக்கிலிருந்து ருசிகா வரை! இன்னும் யார் கற்பழித்தாலும் மனுஷர்மா , ரத்தோர் போன்ற மஹாத்மாக்களுக்கு இவர் தான் ஆபத்பாண்டவர்.மனு ஷர்மா வழக்கில் நீதி பெற வருடங்கள் ஆகின. ருசிகாவிர்க்கு கிடைக்கவே இல்லை.
பணம் பாதாளம் வரைபாயும்... அதிகாரிகள் அலுவலகம் வரை பாய எவ்வளவு நேரமாகும்.
இதை படிக்கும் பொழுது என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை , இந்திய மீடியாவே ருச்சிக்கவிர்க்கு நடந்த கொடுமையை எங்களில் ஒருவருக்கு நடந்த்ததாக நினைத்து நாங்கள் எழுதியும் வருந்தியும் வருகிறோமே , எங்கள் இசைபிரியாவை பற்றி நீங்கள் வாயே திறக்காமல் இருப்பது ஏன்? மனிதத்தை புவியியல் தான் நிர்னையிக்கிறதா?
’சிபி சக்கரவர்த்தி’ பேரைச் சொல்லி புளகாங்கிதம் அடைகிறோம்.
‘கண்ணகி’ வரலாற்றைப் படித்துப் போற்றுகிறோம்.
உண்மை நிலையைப் பார்க்கும் போது....
பேய் அரசாள பிணந்தின்னும் சாத்திரங்கள்...its a faulty system. no one can do anything..
இவனுங்களை எல்லாம் நடு ரோட்டுல வெச்சு சுட்டு தள்ளணும்
சினிமால வர்ற மாதிரி கதாநாயகன் இந்த உலகத்துல ஒரு ஆள் கூட கிடையாது...ஆனால் வில்லனை மாதிரி லட்சம் பேர் இருக்கிறார்கள் உங்களின் இந்த எழுத்தும் பதிவும் என்றோ ஒரு நாள் இந்த உலகதிருக்கு இரட்சகனை கொண்டு வருகிறதோ இல்லையோ அவனுக்கான தீயை கொண்டு வரும்....
எனது கண்ணோட்டத்திலும் நீதி மன்றங்களை நம்பி வெம்பி காத்திருந்தது வீண் செயலே என படுகிறது...
வேறென்ன செய்ய என்கிறீர்களா....
தமிழ் படங்கள் நாலு பார்த்து அதும்படி செய்திருக்கலாம்தான்.
//பொறம்போக்கு பாடுங்க...
நான் ரத்தோரை சொல்லவில்லை. தீர்ப்பளித்தவனை..//
ஆம், அநியாமான தீர்ப்பு! அவன் பொண்ணுக்கு இது நடந்திருந்தா இப்படித்தான் தீர்ப்பு எழுதுவானா?
//பெற்ற (மகளையும்,மனைவியையும்)தாயைக்கூட காசுக்காக விற்றுவிடுவார்கள்//.)
நாய்க்கு தீர்ப்பு வழங்கியது ஓநாய்.bad words......
பெரும் வேதனை.
பரமண்டலத்தில் இருக்கும் பரமபிதாவே, இவர்களை மன்னியுங்கள்!
(நான் மன்னிக்கச் சொல்வது......இன்னமும் நியாயம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளவர்களை)
வாழ்க பண,பல "நாய"கம்.
//(ரத்தோரின் மகளும், ருச்சிகாவும் ஒரே பள்ளியில் படிப்பவர்கள்!) //
இப்பொழுது ரத்தோரின் மனைவி மகள்
எங்கு உள்ளனர்? அவர் மகள் இதை பற்றி என்ன நினைக்கிறார்?
வெட்ககேடான விஷயம்..
எனக்கு ரத்தோரின் மகள் மேல்தான் கடும் கோபம் வருது..
நம்ம நாட்டில இன்னும் இந்த மாதிரி கொடுமைகள் தொடர்ந்து வருது.
கண்டிப்பா இந்த நிலை மாறணும்.
நம்ம நாட்டில் நீதித்துறைக்கு அதிரடியான திருத்தம் தேவை.
கசாப் செய்கிற காமெடிகளைக் கேட்க நாம் கோடி கோடியாய் செலவு செய்கிறோம்
Post a Comment