Monday, January 11, 2010

அவியல் 11.01.2010

‘கிரேஸி’ கிரி! ஜோதிட நம்பிக்கைகள் மீது நிறைய கேள்விகளை வைத்திருப்பவன். அவனது அம்மாவுடன் ஊருக்குச் சென்றிருந்தபோது, அவரது வற்புறுத்தலில் ஒரு ஜோதிடரைக் காணச் செல்கிறான். ‘இன்னும் வரன் அமையலை’ என்பதே குறை. அந்த ஜோதிடர் சில பல ஆராய்தல்களுக்குப் பின் சொல்கிறார். ‘கஷ்டகாலமா இருக்கு. அதான் இப்படி. பரிகாரம் பண்ணனும். 15000 ஆகும்’ என்கிறார். இவனது அம்மா அப்பாவியாய் ‘ஒரு அஞ்சு ரூபாய்ல முடிக்கக் கூடாதாங்க?’ என்று கேட்கிறார். ஜோதிடர் மறுபடி ‘கஷ்டகாலம்னு சொன்னேன்ல? ஐயாயிரத்துலயெல்லாம் முடிக்க முடியாது’ என்று மறுக்கிறார்.

கிரி கேட்டானாம்: “கஷ்டகாலம் உங்களுக்கா எனக்கா சாமீ?”

**********************************

சல் பாடல்கள். வரிகள் முழுதும் வைரமுத்து. நாயகன் துதிப்பாடலில் (காற்றை நிறுத்திக் கேளு) ‘நண்பரை மன்னித்தழுவான்’ என்று வருகிறது ஒரு வரி. மன்னித்ததிற்கெதற்கு அழவேண்டுமென்று தெரியவில்லை. சுனிதா மேனனின் குரல், மாடுலேஷன் எல்லாமே 007-ன் கோல்டன் ஐ பாடலை நினைவுபடுத்துகிறது. கேட்க சுகமாய்த்தான் இருக்கிறது. அதேபோல ‘அதிரிபுதிரி பண்ணிக்கடா’ பாடலின் ‘டொட்டொடய்ங்’ கமீனே-வின் ‘ஆஜா ஆஜா தில் ச்சோடே’ பாடலின் ‘டண்டடாய்ங் டடடாய்ங்’வை நினைவு படுத்துகிறது. பரத்வாஜ் இந்திப் பாடல்களின் ரசிகர் என்பது அவரது முந்தைய படப் பாடல்களிலும் தெரியும்.

படத்தை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் - ஷமீராவுக்காகவும்.

**************************************

சில விளம்பரங்கள். ஒரு வயதானவர் கேரம் விளையாடுகிறார். இந்தப் புறமிருந்து ஸ்ட்ரைக்கரைச் சுண்டி விட்டு மறுபடி அந்தப் புறம் சென்றமர்ந்து அவரே விளையாடுகிறார். மறுபடி இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்று ஒருவரே இருவருக்குமான ஆட்டத்தை ஆடுகிறார்.

விளம்பரம் சொல்கிறது: SILENCE IS NOT ALWAYS GOLD என்றுவிட்டு ‘உங்கள் பழைய மொபைல்களை முதியோர் இல்லங்களுக்கு பரிசளியுங்களேன்’ என்கிறது. அவர்கள் தனிமையை மறந்து நண்பர்களுடன் பேசவாவது செய்யலாமே. ஏர்செல்லின் விளம்பரம் இது.

இன்னொன்று: கண்பார்வையற்ற முதியவர் ஒருவர் ரேடியோவில் கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்டுக் கொண்டிருக்கிறார். எதற்கோ எழப்போனவர் ரேடியோவைத் தட்டிவிடுகிறார். கீழே விழுந்து பழுதாகிவிடுகிறது ரேடியோ. சத்தம் கேட்டு ஓடிவந்த அந்த அபார்ட்மெண்டின் இரு இளைஞர்களிடம் ‘என்னாச்சு’ என்று கேட்கிறார் தாத்தா. ‘ஒன்றுமில்லை’ என்ற ஒரு இளைஞன் அவனாகவே கமெண்ட்ரி சொல்ல ஆரம்பிக்கிறான். தொண்டை கரகரக்கிறது. நிறுத்துகிறான். மறுபடி தாத்தாவிடமிருந்து ‘என்னாச்சு’ கேள்வி. ‘விளம்பரம்க’ என்ற மற்றொரு இளைஞன் விக்ஸ் மாத்திரையைக் கொடுத்துக் கொண்டே விக்ஸுக்குண்டான விளம்பரப் பாடலைப் பாடுகிறான். மாத்திரை சாப்பிட்ட பிறகு இன்னும் பலமாக கமெண்ட்ரியைத் தொடர்கிறான் இவன். அபார்ட்மெண்டே கூடிநின்று க்ரிக்கெட் க்ரவுண்ட் ஆடியன்ஸ் போல கூக்குரலிடுகிறது. சச்சின் பவுண்டரி அடிக்க இந்தியா வெற்றி என்று முடித்துவிட்டு ‘வரேன் தாத்தா’ என்று கிளம்புகிறான் இளைஞன். வாசலை நெருங்கும் அவனிடம் சொல்கிறார் தாத்தா: “தம்பி... நியூஸ் வெச்சுட்டுப் போப்பா”

விக்ஸ் விளம்பரம்.

********************************

பொங்கல் ரிலீஸ்களில் ஆயிரத்தில் ஒருவன் டாப் எக்ஸ்பெக்டேஷனில் இருக்கிறதென்றாலும் பலபேர்களோடு பேசியதில் ‘போர்க்களம்’ சைலண்டாக பலரை கவர்ந்திருக்கிறதென்பது தெரிகிறது. எனக்கு இரும்புக் கோட்டை முரட்டு சிங்கமும் ஆயிரத்தில் ஒருவனுக்கு நிகரான ஆர்வத்தைத் தருகிறது. கார்ட்டூன் காலத்திலிருந்து சிம்புதேவனின் ரசிகன் நான். கௌபாய் காலத்துப் படம்.

ஆடியோ சி டி கவர் பார்த்தீர்களா?

***************************

பிரபல குறும்பட இயக்குனரும் பதிவருமான ஆதிமூலகிருஷ்ணன் திருப்பூர் வந்திருந்தார். சனிக்கிழமை இரவு வந்தவருடன் நீண்ட நேரம் நண்பர்கள் உரையாடினோம்.

வெயிலான் போல ஆதியும் அதிகம் பேசாமல் அதிகம் கவனிப்பவர். அதேபோல செல்வேந்திரனிடமும், ஆதியிடமும் நான் வியக்கும் விஷயம்: இவர்கள் இருவரும் பேசுவது அப்படியே எழுதும் வடிவிலேயே இருக்கும். கொஞ்சமாக ஆனால் தீர்க்கமாகப் பேசுவது ஆதியிடம் நான் ரசிக்கும் அம்சம்.

அதே போல ஆதி ஒரு புகைப்படம் எடுக்க, எடுத்துக் கொள்ளும் (வாக்கியம் கரெக்டா?) சிரமங்களை குறும்படமாக எடுக்கலாம். (கேபிள் சங்கர்ஜி: நோட் திஸ் பாய்ண்ட். நீங்க பண்ணலாம்)

எங்களை புகைப்படம் எடுக்க அவர் மேற்கொண்ட வித்தைகளைப் பாருங்கள். கடைசிப் புகைப்படத்தில் அவர் நினைத்த ரிசல்ட் கிடைத்ததென்பதை அவர் புன்னகை சொல்லும்.







ஆதியுடனான சந்திப்பின்போது எங்களைக் கவர்ந்தவர்கள் இருவர். ஈரோட்டிலிருந்து வந்திருந்த நண்பர் பூபதி. திருப்பூர் பதிவர் பேரரசன் செந்திலின் தம்பி தினேஷ். இருவருமே வலைப்பதிவராகக் கூடிய அத்தனைத் தகுதிகளையும் கொண்டிருக்கிறார்கள். தினேஷ் வலைப்பதிவு ஆரம்பித்து விட்டாரென நினைக்கிறேன். சந்திப்பில் அவர் கேட்ட ஒரு கேள்வி, கேள்வியை விட அவர் கேட்ட விதத்தில் எல்லாரையும் கவர்ந்தது. (ஐ ஏ எஸ் தேர்வுகளுக்கு கேள்வித்தாள் தயாரிக்கும் பணியை இவருக்குக் கொடுக்கலாம்.)

பூபதி போன்ற உற்சாகமான மனிதரை நான் சமீபத்தில் சந்தித்ததில்லை. பார்த்த மாத்திரத்தில் நண்பராகிறார் எல்லோரிடமும். இவருடன் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி கலந்துரையாடி பதிவிட இருக்கிறேன். வெய்ட்டீஸ்ஸ்ஸ்....

அடுத்தநாள் பூபதி இரண்டு எஸ்ஸெம்மெஸ் அனுப்பியிருந்தார். ஒன்று ஏ ரகம். அப்புறம் சொல்கிறேன். இன்னொன்று ஆஹா ரகம்.

அதாவது ஹெல்மெட்டின் முக்கியத்துவத்திற்காக அசத்தலான விளம்பர ஐடியா என்று ஒன்று அனுப்பிருந்தார். விநாயகர் படத்தைப் போட்டு அருகில் வாசகம்:


“உங்கள் தலையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். எல்லாருக்குமே என்னைப் போல Replacement கிடைக்காது”

************************************

இந்த (சென்ற?) வருடத்தின் புத்தகக் கண்காட்சி நிறைவடைந்துவிட்டது. நண்பர்கள் அழைப்பால் எல்லா நாளும் நானும் அங்கிருந்தேன்.

இனி யாரிடமிருந்தும் பா.ராவைப் பார்த்தேன். எஸ்.ராவைப் பார்த்தேன், பஜ்ஜி சாப்ட்டேன், அதை வாங்கினேன் இதை வாங்கினேன் பதிவுகளை எதிர்பார்க்க முடியாது. பு.கா.பதிவுகளில் டாப் ஜ்யோவ்ராம் சுந்தருடையது. அவர் எழுதியதால் மட்டுமே அது டாப். அதையே நான் எழுதியிருந்தால் ‘ஏதோ ஒண்ணு குறையுதே’ என்றிருப்பார்கள். ஒருவிதமான பகடிப் பதிவு அது!

நிற்க.

ஏழுகோடி புத்தகங்கள் விற்பனை என்கிறார்கள். பிரமிப்பாய் இருந்தது. ஏறக்குறைய தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் ஒரு புத்தகம் வாங்கியதான கணக்கு.

என் கேள்வி: என் வீட்டில் நாலுபேர். எங்களுடைய புத்தகங்களை வாங்கியது யாராக இருக்கும்?


.

52 comments:

அத்திரி said...

போட்டொவுல ஆதி அண்ணன் ரொம்ப அழகா இருக்கார்..யார் புடிச்சா இந்த படத்தை

வெள்ளிநிலா said...

பரிசல், இன்று இரவு திருப்பூர் வரும் பொழுது ( கோவை எக்ஸ்பிரஸ். அநேகமாக இரவு 9 .30 மணிக்கு வரும்னு நினைக்கிறன்., தண்டோரா கொடுத்த புத்தகத்தோடு வருகிறேன், 2 நிமிடம் கால அவகாசம் இருக்கும், அதற்குள் 5 நிமிட செய்திகளை பறிமாறிவிடுவோம் ( நாம என்ன "ஆதி" தாமிராவ என்ன? )

தராசு said...

//கடைசிப் புகைப்படத்தில் அவர் நினைத்த ரிசல்ட் கிடைத்ததென்பதை அவர் புன்னகை சொல்லும்.//

அது புன்னகையா தலைவா???

தராசு said...

யோவ் அத்திரி,

என்ன சொல்ல வர்றீரு? அப்ப எங்க அண்ணன் நேர்ல அழகா இருக்க மாட்டாரா??

வரதராஜலு .பூ said...

சுவையான அவியல்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அவியல் சுவையாக இருந்தது.

//ஏழுகோடி புத்தகங்கள் விற்பனை என்கிறார்கள். பிரமிப்பாய் இருந்தது. ஏறக்குறைய தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் ஒரு புத்தகம் வாங்கியதான கணக்கு.//

ஏழு கோடி ரூபாய்க்கு புத்தகம் விற்றதாக, இன்று காலை செய்திகளில் கூறினார்கள். எது சரி?

கார்க்கிபவா said...

//‘ஆஜா ஆஜா தில் ச்சோடே’ பாடலின் ‘டண்டடாய்ங் டடடாய்ங்’//

அட சூப்பரா இருக்குமே சகா!!!!

//படத்தை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் - ஷமீராவுக்காகவும்//

காங்கிரஸ் ஆட்சியின் மாபெரும் கேவலம் 377

ஆ.ஒ, இ.கோ.மு.சி இரண்டுமே பொஙகலுக்கு அவ்ருவது உறுதியில்லை.என் சாய்ஸ் தமிழ்படம்

பச்சை.. பச்சை மஞ்சள் ஆரஞ்சு தமிழன் நான்..

உலகத்தை ரட்சிக்க வந்த கடவுளும் நான்

கேட்டிஙக்ளா சகா?

கண்ணகி said...

அவியல்:

கிரி கேட்டானாம்: “கஷ்டகாலம் உங்களுக்கா எனக்கா சாமீ?”


இசையை இந்த அளவுக்கு ரசிக்க உங்களுக்கு நேரம் கிடைகிக்றதா?

விக்ஸ் விளம்பரம்: நல்ல கவனிப்பு.
நான் இன்னும் பார்க்கலே.

அதாவது ஹெல்மெட்டின் முக்கியத்துவத்திற்காக அசத்தால விளம்பர ஐடியா என்று ஒன்று அனுப்பிருந்தார். விநாயகர் படத்தைப் போட்டு அருகில் வாசகம்:


“உங்கள் தலையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். எல்லாருக்குமே என்னைப் போல Replacement கிடைக்காது”

அசத்தல்.....

என் கேள்வி: என் வீட்டில் நாலுபேர். எங்களுடைய புத்தகங்களை வாங்கியது யாராக இருக்கும்?

ஹ.ஹா....ஹா.....

கண்ணகி said...

திருப்பூரார்கள் எத்தனை வேலை இருந்தாலும் எதையும் ஆழ்ந்து கவனிப்பார்கள் என்பது தெரிய வருகிறது.

அன்பேசிவம் said...

//ஆதியுடனான சந்திப்பின்போது எங்களைக் கவர்ந்தவர்கள் இருவர். ஈரோட்டிலிருந்து வந்திருந்த நண்பர் பூபதி. திருப்பூர் பதிவர் பேரரசன் செந்திலின் தம்பி தினேஷ். //

ஓ தினேஷா? குட் குட்

//பூபதி போன்ற உற்சாகமான மனிதரை நான் சமீபத்தில் சந்தித்ததில்லை. பார்த்த மாத்திரத்தில் நண்பராகிறார் எல்லோரிடமும்.//
தல நானே சொல்லனும்ன்னு நினச்சேன், (யாருக்கு அனுப்புறேனோ இல்லையோ, அவ்ருக்கு என்னுடைய பின்நவீனத்துவ தேநீர் சட்டையை அனுப்பிடுவேன்)

//இவருடன் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி கலந்துரையாடி பதிவிட இருக்கிறேன். வெய்ட்டீஸ்ஸ்ஸ்....//
யெஸ் தல வெயிட்டிங்

ஆதியை போட்டொகிராபர் என்று விளக்கம் கொடுக்கும்சாக்கில் தங்களையும் நிருபித்துக்கொண்டீராக்கும்.... என்னா ஒரு வில்லத்தனம்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அவியல் அருமை ...

Prabhu said...

ஷமீராவா?
ஹிந்திலயே அவங்கள ‘நிறைய’ பாத்தாச்சு!

KARTHIK said...

// என் கேள்வி: என் வீட்டில் நாலுபேர். எங்களுடைய புத்தகங்களை வாங்கியது யாராக இருக்கும்? //

தல ஒருவேள கும்க்கியா இருக்குமோ
அவர்தான் 15 புத்தகம் வாங்குனாராமா

தினேஷ் பிளாக் என்னான்னு சொல்லுங்க

KARTHIK said...

//(யாருக்கு அனுப்புறேனோ இல்லையோ, அவ்ருக்கு என்னுடைய பின்நவீனத்துவ தேநீர் சட்டையை அனுப்பிடுவேன் //

தல மொதல்ல கேட்டது நானு நானு நானு

பெசொவி said...

//என் கேள்வி: என் வீட்டில் நாலுபேர். எங்களுடைய புத்தகங்களை வாங்கியது யாராக இருக்கும்?//

என் ஒருவனுடைய புத்தகத்தை வாங்கியவர்தான் உங்கள் வீட்டுக்கான புத்தகங்களை வாங்கியிருக்கக் கூடும்.

வெண்பூ said...

பரிசல்,

விற்பனை, ஏழு கோடி ரூபாய்க்கு நடந்திருக்கிறது..

பரிசல்காரன் said...

@ அத்திரி

நாந்தான்!

@ வெள்ளிநிலா

நன்றி. வர்ரேன்!

@ தராசு

கொஞ்சம் பெரிய புன்னகைன்னு வெச்சுக்கங்களேன்.. (அனுபவிங்கப்பா.. ஆராயாதீங்க)

நன்றி வரதராஜுலு.

@ செந்தில்வேலன்

//ஏழு கோடி ரூபாய்க்கு புத்தகம் விற்றதாக, இன்று காலை செய்திகளில் கூறினார்கள். எது சரி?//

அதுதான் சரி வடகரைவேலனும் அழைத்து இதைச் சொன்னார்.நேற்று சன் நியூஸ் ஸ்க்ரோலிங்கில் ஏழுகோடி புத்தகங்கள் என்றுதான் போட்டார்கள். ஆதி சாட்சி. ரூபாயை விட்டுவிட்டார்கள்.

@ கார்க்கி

ஐயையோ. தமிழ்படத்தை நானும் மறந்திட்டேன்பா. செமயா இருக்கும்போல..

@ கண்ணகி

ரொம்ப புகழறீங்க.

:-))

@ முரளி

நீங்க மிஸ் பண்ணீட்டீங்க நண்பா!

அவதாரை ரசிச்சீங்களா?

நன்றி ஸ்ரீகிருஷ்ணா

பரிசல்காரன் said...

@ பப்பு

நானும் பாக்கணும்ல

@ கார்த்திக்

கும்க்கியாஆஆஆ?

தினேஷ் ப்ளாக் ஐடி இதோ: இளைய இளவல்

@ பெ சொ வி

கரெக்ட்!

@ வெண்பூ

ஆமா பார்ட்னர். பதில் சொல்லீட்டேன்.

நர்சிம் said...

அருமை.

பரிசல்காரன் said...

@ நர்சிம்

நன்றி பாஸ். என்னாச்சு?

திருவாரூர் சரவணா said...

//ஹெல்மெட்டின் முக்கியத்துவத்திற்காக அசத்தலான விளம்பர ஐடியா என்று ஒன்று அனுப்பிருந்தார். விநாயகர் படத்தைப் போட்டு அருகில் வாசகம்:


“உங்கள் தலையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். எல்லாருக்குமே என்னைப் போல Replacement கிடைக்காது”//

மதம் சம்மந்தப் பட்ட வடிவத்தை முன்னிறுத்தி மனம் புண்படாமல் மக்களுக்காக ஒரு யோசனை. எந்த தகவலுக்குள்ளும் விநாயகரை அழகாக நுழைத்து விடலாம். அதுதான் விநாயகரின் எளிமை.

CS. Mohan Kumar said...

அவியல் நல்லா டேஸ்டா இருந்தது

கா.கி said...

//அந்தப் பக்கம் என்று ஒருவரே இருவருக்குமான ஆட்டத்தை ஆடுகிறார்//

அடடா, காப்பி அடிச்சிட்டாங்களே. இது, pixar எடுத்த, ஆஸ்கர் அவார்ட் வாங்கின, geris gameனு ஒரு short animated film படத்தோட கான்செப்ட்... முடிஞ்சா youtubela பாருங்க...

அப்பாவி முரு said...

விக்ஸ் விளம்பரம்...

நம்மாளுங்க, என்னமா யோசிக்கிறாங்க :))))

அதையே பதிவாக்கியதில்...

என்னமா யோசிக்கிறாங்க, நம்மாளுங்க:))))

Unknown said...

//எங்களை புகைப்படம் எடுக்க அவர் மேற்கொண்ட வித்தைகளைப் பாருங்கள். கடைசிப் புகைப்படத்தில் அவர் நினைத்த ரிசல்ட் கிடைத்ததென்பதை அவர் புன்னகை சொல்லும்.//

அவரோட புன்னகையை மட்டும் வச்செல்லாம் ஒத்துக்க மாட்டோம். எடுத்த புகைப்படத்தையும் போடுங்க.

மீசக்கார நண்பரை ஒரு குட்டி ட்ரைபோட் வாங்கிக்கச் சொல்லுங்க, இவ்ளோ சிரமமெல்லாம் படவேண்டாம்ல.

உண்மைத்தமிழன் said...

அந்த எஸ்.எம்.எஸ். கமெண்ட்டுக்கு உடனே பேடண்ட் வாங்கச் சொல்லுங்க..

கோடி ரூபாய் பெறும் கிரியேட்டிவ் வேர்டு..!

அமுதா கிருஷ்ணா said...

வெள்ளந்தியா சிரிக்கும் இவரா ரமா கிட்ட அடி வாங்குறார்..
தமிழ் படத்திற்கு தான் நாங்கள் வெய்ட்டிங்...

யுவகிருஷ்ணா said...

//ஏழுகோடி புத்தகங்கள் விற்பனை என்கிறார்கள்.//

எனக்கு தெரிந்து அதிகமாக விற்ற புத்தகம் ‘செட்டிநாட்டு அசைவ சமையல்'

நிஜமாகவே மக்களுக்கு இலக்கியப்பசி தான்!

குசும்பன் said...

//அதே போல ஆதி ஒரு புகைப்படம் எடுக்க, எடுத்துக் கொள்ளும் (வாக்கியம் கரெக்டா?) சிரமங்களை குறும்படமாக எடுக்கலாம். ///

அதிலும் உன்னை போட்டோ எடுக்கனும் என்றால் அவர் படும் சிரமங்களை உண்மை தமிழன் குறும்படம் போல் எடுக்கலாம்!:))

செல்ல நாய்க்குட்டி மனசு said...

என் வீட்டில் நாலுபேர். எங்களுடைய புத்தகங்களை வாங்கியது யாராக இருக்கும்?//
என் புத்தக்கத்தை வாங்கியது நீங்கள் தானா?

குசும்பன் said...

//ஆதியிடமும் நான் வியக்கும் விஷயம்: இவர்கள் இருவரும் பேசுவது அப்படியே எழுதும் வடிவிலேயே இருக்கும். //

பேச்சும் "அப்படிதானா"


எப்படிதானா? என்பதை வாசகர்கள் யூகிக்க:))

Thuvarakan said...

//உங்கள் தலையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். எல்லாருக்குமே என்னைப் போல Replacement கிடைக்காது//
ஆயிரத்தில் ஒரு வார்த்தை சூப்பர் அண்ணா.....

பரிசல்காரன் said...

@ சரண்

சரியாகச் சொன்னீர்கள். நன்றி.

@ மோகன்குமார்

நன்றி.

@ கார்த்திக் கிருஷ்ணா

அட.. அப்டியா!

@ அப்பாவி முரு

உங்க பின்னூட்டத்துக்கும்: என்னமா யோசிக்கறீங்க!!

@ கே வி ஆர்

வாங்கிடலாஆஆம்ம்ம்..

@ உண்மைத்தமிழன்

இருங்கண்ணா. சொல்லிடறேன்ன்..

@ அமுதாகிருஷ்ணா

ரொம்ப நம்பறீங்க நீங்க!

@ யுவகிருஷ்ணா

ஏ இ கொ வெ?

@ குசும்பன்

நான் கருப்புண்ணே... லைட்டிங் சரியா வரணும்ல???


@ துவாரகன்

நன்றி!

பரிசல்காரன் said...

@ நாய்குட்டி மனசு

மன்னிச்சுக்கோங்க. ரெண்டு குசும்பனுக்கு நடுவுல மாட்டினதால விட்டுப்போச்சு!

நான் அவன் இல்லைங்க..

Kumar said...

வாழ்த்துக்கள். அவியல் அருமையாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் நக்கல்,நையாண்டி அனைத்தும்..

விக்னேஷ்வரி said...

Aadi is smart. ;)

எம்.எம்.அப்துல்லா said...

அந்த விநாயகர் விளம்பரத்தை பல மாதங்குளுக்கு முன்பே பார்த்துவிட்டேனே!

பரிசல்காரன் said...

@ Kumar

//தொடரட்டும் உங்கள் நக்கல்,நையாண்டி அனைத்தும்..//

என்னங்க சொல்றீங்க? நான் யாரை நக்கல் பண்ணினேன்?

@ விக்னேஸ்வரி

Great Men Looks Alike!

@ அப்துல்லா

ஆனா எங்ககிட்ட பகிர்ந்துக்கலயே நீங்க? ஏன் இப்படி?

☼ வெயிலான் said...

// ஆதியை போட்டொகிராபர் என்று விளக்கம் கொடுக்கும்சாக்கில் தங்களையும் நிருபித்துக்கொண்டீராக்கும்.... என்னா ஒரு வில்லத்தனம் //

எப்படி இப்படியெல்லாம் முரளி?..... :)

பரிசல்காரன் said...

@ வெயிலான்

அண்ணன் பேச்சு ஒன்வே. அந்தப் பக்கத்துலேர்ந்து எதிர்பேச்சு வரக்கூடாது ஆமா..

வால்பையன் said...

//விளம்பரம் சொல்கிறது: SILENCE IS NOT ALWAYS GOLD என்றுவிட்டு ‘உங்கள் பழைய மொபைல்களை முதியோர் இல்லங்களுக்கு பரிசளியுங்களேன்’ என்கிறது. அவர்கள் தனிமையை மறந்து நண்பர்களுடன் பேசவாவது செய்யலாமே. ஏர்செல்லின் விளம்பரம் இது.//

நான் இதை யோசிக்கவேயில்ல!,
வீட்ல சும்மா ரெண்டு கிடக்கு!

Romeoboy said...

\\சுனிதா மேனனின் குரல், மாடுலேஷன் எல்லாமே 007-ன் கோல்டன் ஐ பாடலை நினைவுபடுத்துகிறது//

பாடலை முதலில் கேட்கும் போதே எனக்கு இது தோன்றியது. அப்படியே நடுவுல தல போல வருமான்னு வர கொராஸ் சூப்பர்..

அண்ணாமலையான் said...

மிக சுவாரஸ்யமாக இருக்கிறது பதிவு.. வாழ்த்துக்கள்.....(வெற்றிகரமான பதிவுகள் எழுதவது எப்படி என்று உங்கள் பதிவுகளை படித்து கற்றுக்கொள்ள வேண்டும்)

Saminathan said...

எனதருமை நண்பர் திரு வால்பையன் அவர்களின் வருகையை இருட்டடிப்பு செய்தமைக்காக நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் !

வால்பையன் said...

//எனதருமை நண்பர் திரு வால்பையன் அவர்களின் வருகையை இருட்டடிப்பு செய்தமைக்காக நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் !//

வந்து, என்ன என்ன பண்ணான்னு அடுத்த கேள்வி வரும்ணே!
எதுக்கு வம்புன்னு விட்டுருப்பார்!

பரிசல்காரன் said...

@ வால்பையன்

எது?

@ ரோமியோபாய்

நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் புதுசா யோசிச்சிருக்கலாமேன்னு ஓர் ஆதங்கமும் வர்றதைத் தவிர்க்க முடியல.

@ அண்ணாமலையான்

என்னங்க.. 55 ஓட்டு, 155 கமெண்டுன்னுக் கலக்க்ற நீங்க இப்படிச் சொல்லலாமா..

@ ஈரவெங்காயம்

அவர் டாப்லெஸ்ஸா இருக்கற ஃபோட்டோகூட இருக்கு பொருளு.. போட்டுடவா...?

வால்பையன் said...

//அவர் டாப்லெஸ்ஸா இருக்கற ஃபோட்டோகூட இருக்கு //

என்னை கவர்ச்சி நடிகனா ஆக்காம ஓயப்போறதில்லைன்னு சொல்லுங்க!

கா.கி said...

@parisal
அப்பிடியே...
link - http://www.youtube.com/watch?v=1c4X5zOlAeA

vanila said...

ayyayyoo .. rendu naalaai kovai (AAR.Vee) la thaan thangi irundhen.. innikku thaan madurai' kku poren..

Unknown said...

/--*** புத்தகக் கண்காட்சி ***
என் வீட்டில் நாலுபேர்
எங்களுடைய புத்தகங்களை
வாங்கியது யார்...! --/

உங்களுடைய கடைசி வரி ஹைக்கூ மாதிரி ஓசையுடன் இருந்தது... அதனால் கொஞ்சம் மாற்றிப் பார்த்தேன்.

பனித்துளி சங்கர் said...

நல்ல வார்ப்பு வாழ்த்துக்கள் நண்பரே !

Prathap Kumar S. said...

////என் கேள்வி: என் வீட்டில் நாலுபேர். எங்களுடைய புத்தகங்களை வாங்கியது யாராக இருக்கும்?//
எலக்ஷனுக்கு ஒட்டு போடமுடியாத மாதிரி கேட்கிறீங்க? அந்த ஓட்டை யார்போட்டதுங்கற மாதிரி.