Monday, January 4, 2010
விஜய்: ரசிகனும் விமர்சகனும்
சமீபத்தில் (அல்லது) சென்ற வருடம் ஈரோடு சங்கமம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது நான்கைந்து பேர் கொண்ட கொலைவெறிக் கும்பல் ஒன்று “நீ எப்படி வேட்டைக்காரன் பாஸ்ன்னு எழுதலாம்” என்று என்னைத் தாக்க முற்பட்டது குறித்து திரைத்துறையிலிருக்கும் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவரைச் சந்திக்க வந்த மற்றொரு நண்பர் (இவரொரு விஜய் ரசிகர் என்பதறிக) அவரோடு உரையாடினார். அந்த உரையாடலின் சிறு பகுதி:-
**************************************
“நானும் விஜய்க்கு கதை சொல்லிருக்கேன்.. ஒப்பனிங் லைன் மட்டும்தான் சொன்னேன். ஒலகத்தரம்னெல்லாம் சொல்ல வரல.. பக்கா மசாலாதான். ஒரு ஆளு ஊர்லேர்ந்து சென்னைக்கு வந்து பெரிய தாதாகிட்ட அடியாளா சேரணும்னு ட்ரை பண்றான். அவனை காமெடி பீஸாவே எல்லாரும் பார்ப்பாங்க.. ஒரே ஒரு கட்டத்துல, அந்த தாதாவோட குருவா இருக்கறவரை இவன் காப்பாத்தறான். அப்பறம் ரெண்டு தாதா க்ரூப்புக்கும் சண்டை. யாராலன்னு பார்க்கறப்ப, ஹீரோ! க்ளைமாக்ஸ் என்னான்னா, “நீ ரௌடியா இருக்கறதுன்னா இரு. இல்லையா ஒண்ணு நாங்க உன்னை காலி பண்ணீடுவோம், இல்லையா ரெண்டு க்ரூப்ல ஒருத்தர் உன்னைப் போட்டுவாங்க”ன்னு போலீஸ் சொல்லுது. ஹீரோ என்ன முடிவெடுக்கறாங்கறதுதான் க்ளைமாக்ஸ்!” இப்படிதான் ஆரம்பிகிறார் அந்த விமர்சகர் உரையாடலை. எதிரில் விஜய்யின் ரசிகர் இதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
“இது நான் கண்டுபிடிச்சேன்னு சொல்ல மாட்டேன். பாட்ஷாவோட வேற ட்ரீட்மெண்ட்ல ஆன ஸ்க்ரிப்ட். அவ்ளோதான். ஆனா அதுக்குள்ள ப்ரகாஷ்ராஜ் விஜய்யைப் பார்த்து போக்கிரியைப் பத்தி பேசி, நம்ம கழண்டுக்க வேண்டியதாச்சு” குரலில் வருத்தமில்லாமல் சொல்வதை ரசிகர் ஆர்வமாய்க் கேட்கிறார்.
“விஜய்க்கு தேவை சாதாரண கதைதான். ஆனா பவர்ஃபுல் ஸ்கிர்ப்ட் தேவை. அத ஏன் யாரும் பாக்கறதில்லைன்னுதான் எனக்கு வருத்தம்”
“கரெக்ட் சார். என் வருத்தமும் அதுதான். ஒரு விஜய் ரசிகனா நான் பார்க்கறது என்னான்னா ஒரு படத்துல கதை மத்த மேட்டரெல்லாம் என்னான்னு பார்ப்பேன்.. அப்பறம் விஜய் ரசிகனான எனக்கு அவர் என்ன தர்றாருன்னு பார்ப்பேன்.. அப்படி பிரிச்சுதான் பார்ப்பேன். மத்த படங்களை நான் பார்க்கறதுக்கும் விஜய் படத்தை பார்க்கறதுக்கும் இதுதான் வித்தியாசம்”
“ஆனா ஒண்ணுப்பா... நடிக்கறதுக்குன்னு வந்துட்டா விஜய்யோட டெடிகேஷன் யாராலயும் அடிச்சுக்க முடியாது”
“எப்படிச் சொல்றீங்க?”
“நான் 27 நாள் இருந்தேன். போக்கிரி ஷூட்டிங்க்ல. நானும் நடிக்க போயிருந்தேன். மூணு சீன் நடிச்சும் ஒரு ஃப்ரேம்ல கூட வர்ல அதுவேற விஷயம். ஆனா ஸ்பாட்ல விஜயோட இன்வால்வ்மெண்டும், டெடிகேஷனும் பார்த்து அசந்துட்டேன்.”
“ஆமாமா.. நானும் கேள்விப்பட்டிருக்கேன். ஸ்க்ரிப்ட் செலக்ட் பண்றதுக்கு முன்னாடி ஆயிரத்தெட்டு குத்தம் குறை சொல்லுவாரு. கௌதம்மேனன் கூட சொல்லிருந்தார். ஆனா ஒத்துகிட்டு ஃபீல்டுக்கு வந்தா ஒரு கேள்வி கேட்காம நடிப்பாராமே?”
“ஆமாமா”
“திருமலை, கில்லி, மதுரை, திருப்பாச்சின்னு கலெக்ஷன்ல பெரிய நாலு படம் நடிச்சு அடுத்ததா ச்ச்சின்ல நடிக்கறாரு. அதுல மாஸ் ஹீரோன்னு எதுவும் காமிச்சுக்காம ஜாலியா நடிப்பாரு. வசீகராவுலயே சின்னப்பொண்ணு கால்ல விழுந்தெல்லாம் நடிச்சாரு. அதுமாதிரி விஜய்ட்ட பிடிச்சது அவர் டைரக்டருக்கு கொடுக்கற மரியாதை”
ரசிகர் தொடர, இடை மறிக்கிறார் விமர்சகர்: “மரியாதையெல்லாம் ஒண்ணும் கிடையாது.விஜய் படத்துல டைரக்டர் ஒண்ணும் கிடையாது. விஜய் கோவிச்சுட்டு செட்டை விட்டு போய்ட்டா மொத்தமும் காலி. அந்த பயத்தோடவேதான் வேலை செய்யணும். பிரபுதேவாவே ஒண்ணும் பண்ண முடியாது. விஜய்யை திட்டறதுக்கு பதிலா பக்கத்துல நிக்கறவனைத் திட்டலாம். அவ்ளோதான்”
“மரியாதையே இல்லைன்னா அப்பறம் எப்படி மறுபடி விஜய்கூடவே பண்றாங்க?”
“காசுதான். மத்தவங்க படம்னா 1000ஆ.. விஜய் படம்னா 5000!. பண்ணமாட்டாங்களா?”
“ஆனா என்னதான் கிண்டல் பண்ணினாலும் விஜய் படம் ஓப்பனிங் பிரமிக்க வைக்குதா இல்லையா? 2000ல என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சாரக்கண்ணா, கண்ணுக்குள் நிலவு நாலு ஃப்ளாப்புக்கப்பறம் ‘குஷி’க்கான ஓப்பனிங் எல்லாரையும் பிரமிக்க வெச்சுது. அதே மாதிரி புதிய கீதை, வசீகரா, பகவதி எல்லாம் ஃப்ளாப். திருமலைக்கு சரியான ஓப்பனிங்”
“கரெக்ட்தான். விஜய்யும் அஜீத்தும் இன்னைக்கு டாப் லிஸ்ட்ல இருக்காங்கன்னா எத்தனை ஃப்ளாப் குடுத்தாலும், மொத நாள் ஒப்பனிங் உலகம் பூரா இருக்குங்கறதுதான்”
“ஆமாம். அதுவும் என்கூட முதல்நாள் ஷோ பார்த்துட்டு வெறுத்து வித்தியாசமா விமர்சனம் எழுதினவர், அவரோட மகன் அடம்பிடிச்சான்னு அடுத்த நாளே குடும்பத்தோட போயிருக்காரு. நானும் தனியாப் பார்த்தேன். அடுத்த நாள் என் ரிலேஷன் பையனோட போய்ப் பார்த்தேன். இந்த ஃபேமலி ஆடியன்ஸ் மத்தவங்களுக்கு இல்லைங்கறதுதான் உண்மை. அதுதான் விஜய் படம் நூறு நாள் ஓடறதோட காரணம்”
“நூறுநாள், நூத்தம்பதுநாள் ஓட்டறதுக்கு பின்னாடி வேற ஒரு பெரிய கதை இருக்கு. அது நடிகனுக்காகன்னு நம்பீட்டிருந்தா உங்களைப் பார்த்து சிரிப்புதான் வருது”
“அப்பறம்?”
“தியேட்டர் வாடகை தயாரிப்பாளர்தான் குடுக்கணும் பார்த்துக்கங்க.. அதெல்லாம் சினிமா ரகசியம்பா”
-என்றவர் மேற்கொண்டு இதைப் பற்றி பேசமறுக்கிறார்.
அந்த அரைமணி நேரத்தில் இவர்களிருவரும் பேசியதிலிருந்து ஒன்று புரிந்தது...
அது....
நீங்களே சொல்லுங்களேன்..
.
Subscribe to:
Post Comments (Atom)
34 comments:
right right
//ஒலகத்தரம்னெல்லாம் சொல்ல வரல.. பக்கா மசாலாதான்//
சகா,எல்லா ஊரிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வகைதான் மசாலா படங்கள்.. :))
சார்லீஸ் ஏஞ்செல்ஸை உலகப்பட வரிசையில் பார்க்கும் அறிவுஜீவிகளுக்கு மசாலாப் பட ரசிகர்கள் எவ்வளவோ தேவலை..
என்ன அது ?...
விஜய் படம் நூறு நாள் ஓ(ட்டப்)டுது.
பதிவுலகத்தைப் பொறுத்தவரையில் சாருவும், விஜயும் சமம் தான்.
பாராட்டியோ இல்லை திட்டியோ பதிவேளுதிக்கிட்டே இருக்க இந்த ரெண்டு பேரு போதும் நமக்கு.
மன்னிக்கவும்,
//பதிவேளுதிக்கிட்டே//அல்ல
எழுதிக்கிட்டே
இதை விட பெரிய பெரிய கதை இருக்கு நைனா...ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம். தங்க முட்டை போடுற வாத்தை அறுத்த மாதிரி சிலர் தமிழ் சினிமா தயாரிப்புல புகுந்து குட்டையை குழப்பிகிட்டு இருக்காங்க. இன்னும் கொஞ்ச நாள்ல அவங்களைத் thavira யாருமே தயாரிப்புல இருக்கப் போறது இல்லை. அப்படியே இருந்தாலும் அவங்க .....................................விஷயத்துக்காக மட்டும்தான் இருப்பாங்க. இதுதான் உண்மை.
aahaa.. ஒன்லைனை ரிலீஸ் பண்ணிட்டீங்களே.
நிஜமாகவே நல்ல படம், ஒலக தரப் படம் எல்லாம் வசூலில் ப்படமாய்தாய் போயிருக்கிறது.
@ எஸ்கே
நன்றிங்க பாஸ்...
@ கார்க்கி
அது!
@ ஸ்டார்ஜன்
தெரிஞ்சா நான் ஏன் இங்க வந்து குத்தவெச்சிருக்கேன்?
@ அரங்கப்பெருமாள்
:-)
@ முரு
:-))
@ சரண்
ஓ! இதுவேறயா!!
@ Cable சங்கர்ஜி
அஹு எங்கீங்க ஒன் லைன்? 9 லைன் வருதுங்க...
சச்சினி, வசீகரா போன்றவை தோல்விப் படமாக இருந்தாலும் அந்தப் படத்தின் நகைச்சுவையும் பாடல்களும் இன்றைக்கும் பேசப்படுகின்றன. ஆனால் திருமலைக்குப் பின்னர் விஜய் ஒரே விதமான படங்களில் நடிப்பதைக் குறைத்து காதலுக்கு மரியாதை, ப்ரியமானவளே, ப்ரண்ட்ஸ், ப்ரியமுடன் போன்ற வித்தியாசமான படங்களிலும் நடிக்கவேண்டும், செய்வாரா? அடுத்த படத்தின் பெயரே சுறா என அதே சேம் பிளட் படமாகத் தான் இருக்கபோகின்றது.
//சச்சினி, வசீகரா போன்றவை தோல்விப் படமாக இருந்தாலும் அந்தப் படத்தின் நகைச்சுவையும் பாடல்களும் இன்றைக்கும் பேசப்படுகின்றன//
சச்சின் நான் பார்க்கவில்லை..,
வெற்றிப் படமான திருமலையைவிட வசீகராவை பல ஆண்டுகளுக்கு பார்த்து ரசிக்க முடியும்..,
பெரும்பாலான உலகப் படங்களின் ஒன்லைன் வேறொரு ட்ரீட்மெண்ட் கொடுத்தால் ஷகீலா படமாகிவிடும் வாய்ப்பு தெரியும்
:)
ஏங்க நீங்க இன்னும் விஜய விடலையா.......
//அந்த அரைமணி நேரத்தில் இவர்களிருவரும் பேசியதிலிருந்து ஒன்று புரிந்தது...
அது....
நீங்களே சொல்லுங்களேன்..
//
ஊர்ல ஒரு பயபுள்ளையும் உருப்படியான விசயம் பேசுவதே இல்லை!
@ போட்ட கமெண்டை டிலீட் பண்ணவருக்கு
நன்றி!
@ வந்தியத்தேவன்
கரெக்ட்! வசீகரா என் ஆல்டைம் ஃபேவரைட் விஜய் மூவி!
@ சுரேஷ்
நீங்க சொன்ன ரெண்டுமே சரிங்க!
@ ராஜலக்ஷ்மி
:-)
@ சங்ககவி
ஹி ஹி ஹி!!
@ குசும்பன்
:-)
ஏன்யா இப்படி!
என்னங்க, ‘மச்சி, நீ கேளேன்’ ரகத்துல பேசுறீங்க!
ஈரோடு மேட்டர விடலயா இன்னும்?
உரையாடல் ஓக்கே..அதிகாரத்தின் உரையாடலாக இல்லியே.
//
“நானும் விஜய்க்கு கதை சொல்லிருக்கேன்.. ஒப்பனிங் லைன் மட்டும்தான் சொன்னேன். ஒலகத்தரம்னெல்லாம் சொல்ல வரல.. பக்கா மசாலாதான். ஒரு ஆளு ஊர்லேர்ந்து சென்னைக்கு வந்து பெரிய தாதாகிட்ட அடியாளா சேரணும்னு ட்ரை பண்றான். அவனை காமெடி பீஸாவே எல்லாரும் பார்ப்பாங்க.. ஒரே ஒரு கட்டத்துல, அந்த தாதாவோட குருவா இருக்கறவரை இவன் காப்பாத்தறான். அப்பறம் ரெண்டு தாதா க்ரூப்புக்கும் சண்டை. யாராலன்னு பார்க்கறப்ப, ஹீரோ! க்ளைமாக்ஸ் என்னான்னா, “நீ ரௌடியா இருக்கறதுன்னா இரு. இல்லையா ஒண்ணு நாங்க உன்னை காலி பண்ணீடுவோம், இல்லையா ரெண்டு க்ரூப்ல ஒருத்தர் உன்னைப் போட்டுவாங்க”ன்னு போலீஸ் சொல்லுது.//
அடக்கடவுளே! இதை வெச்சுதான் லிங்குசாமி பீமா எடுத்துட்டாரோ? :-(
யோவ்.. ஒனக்கு வேற வேலையே இல்லையா.?
பாவங்க விஜய்.. பொங்கலுக்கும் அவ்ர்தானா...
ரொம்ப பொங்குறீங்களே..
அப்பாவி முரு வழி மொழியப் படுகிறார்.
மொத்தத்துல..ஒரு விஜய் படத்தோட கதையை சொல்லிட்டீங்க!!
இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா..
அதையும் நீங்களே சொல்லிடுங்களேன்
//
அந்த அரைமணி நேரத்தில் இவர்களிருவரும் பேசியதிலிருந்து ஒன்று புரிந்தது...
அது....
//
லூசுங்க எல்லா வேசத்துலயும் இருக்கும்னா ?!?!
ஏங்க நீங்க இன்னும் விஜய விடலையா
கார்க்கியே மறந்து இருந்தார்
”என்னைத் தாக்க முற்பட்டது குறித்து ” மிஸ்ஸிங்
அட்டகாசமான பதிவு பரிசல்.. :-))
ஏங்க நீங்க இன்னும் விஜய விடலையா.......
//agreed
வேணாம் விட்ருங்க அழுதிருவேன்
தலைவரே.. வேறொன்னும் வேணாம்... பொதுவா தம்பதிகள் ஜாலியா இருக்கிறப்போ நடுவில மைக்கை நீட்டி ‘உங்களுக்குப் பிடிச்ச நடிகர் ‘ யாருன்னு கேட்கிற ப்ரோகிராம் பாருங்க.... 100க்கு 95 சதவீதம் பெண்கள் மற்றும் குழந்தைகள்கிட்ட வர்ற பதில் விஜய்தான். வெறும் காலேஜ் ஸ்ட்டுடண்ட்ஸ் பார்க்கிறதால மட்டும் படம் ஓடிறப் போவதில்லை.(உ.ம்) வாரணம் ஆயிரம்.. ஃபேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வந்தாத்தான் ஹிட்டு. அது விஜய் படங்கள்ல சரியாவே போய்க்கிட்டிருக்கு...
இப்பவும் எம்.ஜி.ஆர்., ரஜினியோட ஹிட் படங்களை எடுத்தோம்னா கேவலமா விமர்சனம் பண்ணலாம்.. ஆனா அது எல்லாமே அன்னைக்கும், இன்னைக்கும் ஹிட்...
இப்போ இருக்க நடிகர்கள்ல அந்த ஃபேமிலி ஆடியன்ஸ் பலம் இருக்கிறது விஜய் மட்டும்தான்...அத அவர் மெயிண்டைன் பண்றார்ங்கிறதுக்கு முதல் உதாரணமே அவர் படத்தின் பாடல்களின் ஹிட்தான். அதன் ரீச்சே படத்திற்கு இழுத்து விடுகிறது.... மற்றபடி விஜய்க்கு ஆஸ்கார் தேவையில்லை...வர்ற வருமானத்துல ஆடி கார் மட்டும் போதும்...
@ pappu
:-)
@ நர்சிம்
:-))
@ யுவா
அட! ஆமால்ல!
@ ஆதிமூலகிருஷ்ணன்
ஏன்? வொய் வாட் ஹேப்பண்ட்?
@ கடைக்குட்டி & தராசு
டேங்க்ஸு!
@ சுரேகா
ஒரு மண்ணுமில்ல!
@ அப்துல்லா
தேசத்திலயும்!
@ சி.வேல்
:-)
@ ராகவ்
அதெல்லாம் சரி.. அதெதுக்கு நக்கலா ரெண்டு ஸ்மைலி?
@ நாய்க்குட்டி மனசு
நோ பீலிங்!
@ தமிழ்பறவை
அக்ரீட் யுவர் ஹானர்!
//எப்படி வேட்டைக்காரன் பாஸ்ன்னு எழுதலாம்”//
சிவாஜி த பாஸ் தான் தெரியும், இது புதுசா இருக்கேன்னு கேட்டிருப்பாங்க தல!
Post a Comment