Wednesday, January 6, 2010
கிஸ்..... கிஸ்.........
பதியைக் கொண்டாடும் பதிவரது அலுவலகத்தில் மாதாந்திரக் கொண்டாட்டத்தின் போது இந்தப் பதிவர் பரிந்துரைத்த விளையாட்டு என்ன தெரியுமா?
அவர் அடிக்கடி கலாய்க்கும் கவிஞரின் கவிதையைக் கொடுத்து ‘இதற்கு உங்களுக்குத் தெரிந்த பொழிப்புரை தாருங்கள்’ என்பதுதானாம்.
மிகவும் கிண்டலானதாக அந்த செஷன் போகுமென்று எதிர்பார்த்தவருக்கு ஏக அதிர்ச்சி!
அவர்கள் வியந்து, பல கோணங்களில் அந்தக் கவிதையை அர்த்தங்கள் பல சொல்லிப் பாராட்ட.. அசடு வழிந்தாராம் இவர்!
*****************************
பதிவுலகில் தீவிரமாக ‘இருந்த’ அந்த மூன்றெழுத்து பதிவருக்கு விரைவில் டும்டும். தனது சொந்த ஊருக்கும் தலைநகருக்கும் பயணித்துக் கொண்டே இருக்கிறாராம். இடையில் பத்திரிகை அசைன்மெண்டுக்காக வேறொரு ஊர் என்று வேறு அலைச்சலாம்.
ஆகட்டும்டா தம்பி ராசா........
************************************
2010ல் கொஞ்சமாவது உயரத்துக்குப் போவாய் என நண்பர்கள் வாழ்த்தியதில் சந்தோஷமாய் இருந்த பதிவருக்கு ஒரு நற்செய்தி வந்ததை அந்த வாழ்த்துக்களோடு ஒப்பிட்டு ‘உயரத்துக்கு போய்ட்டேன்ல’ என்கிறாராம் அவர்.
ஆம். 2வது ஃப்ளாட்டிலிருந்த சிங்கிள் பெட்ரூம் வீட்டை காலி செய்து மூன்றாவது ஃப்ளாட்டிலிருக்கும் டபுள் பெட்ரூமுக்கு குடிபோகிறாராம்!
உயரம்!
************************
ஒயர் பதிவர் ஏக சந்தோஷத்தில் இருக்கிறார்... ஒரு மார்க்கமான தலைப்பில் அவரது கதைகள் பதிப்பாக வரவிருக்கின்றன. அதுவல்ல அவரது சந்தோஷத்துக்கு காரணம்.. தனது நண்பர் கதைகளையும் சிபாரிசு செய்து அவருக்கு உதவியிருப்பதுதான் தனக்கு மகிழ்ச்சி என்கிறார். அவருக்கிருக்கும் ஒரே குழப்பம்:
என்ன பெயரில் எழுத என்பதுதானாம்.
வெட்கப்படாதீங்க பாஸு.. உங்க பேர்லயே போடுங்க!
****************************************
திருப்பூர்/ஈரோட்டைத் தொடர்ந்து எல்லா ஊர்களிலும் வலைப்பதிவர் குழுமம்/பேரவை என்று ஆரம்ப அமர்க்களங்கள் களை கட்டுகிறதாம்.
முத்தாய்ப்பான செய்தி என்னவென்றால் வெகுநாள் முன்பு திமுகவிலிருந்து பிரிந்த கட்சி தலைவரைத் திருப்பிப்போட்ட ஊரில் சங்கத்திற்கு தலைவர் இல்லையாம். தலைவியாம். சங்கத்தின் முக்கியமான மூன்று பொறுப்புகளையும் அந்தத் தலைவி வீட்டுப் பெண்களே ஆக்ரமிக்கிறார்களாம்.
பணக்காரதேவர்தலைவன் சொன்ன சேதி இது!
*********************************
ஏக ஏமாற்றத்தில் இருக்கிறார் அந்த பதிவர். தோழரின் ஃப்ளவர் புக்ஸ் தொகுப்பில் தனது படைப்பு இல்லையென்று.
‘குடுத்திருக்கலாம்ல’ என்று நண்பர் கேட்டதுக்கு ‘என்னோடதை வேற யாராவது பரிந்துரைப்பாங்கன்னு விட்டுட்டேன்’ என்கிறாராம்.
கான்ஃபிடென்ஸ் ஓகே... ஓவர் கான்ஃபிடென்ஸ் ஒடம்புக்கு ஆகாது மாப்ளே!
*****************************************
பிரச்சினைகளென்றால் தீர்க்கும் அந்தப் பதிவர் தனது நண்பரின் பிரச்சினையைத் தூக்கிக் கொண்டுவந்து பொதுவில் வைத்து நண்பர்களோடு வைத்து விவாதித்தபோது கிடைத்த ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும், ஆரோக்கியமான கருத்து மோதல்களும் அவரை மிக மகிழ்ச்சிக்குள்ளாக்கியதாம்.
‘ரொம்பவும் பிரமிப்பாவும் பெருமையாவும் இருக்குப்பா நம்ம நண்பர்களை நெனைச்சா’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறாராம்!
*****************************************
ஆரம்பப்பதிவர் கருப்புடையூருக்கு விஜயம் செய்கிறாராம். ‘நண்பனைப் பார்க்க’ என்று சொல்லப்பட்டாலும் வேறெதும் சர்ப்ரைஸ் இருக்கிறதா என வலையுளவுத் துறை கண்கொத்திப் பாம்பாய் நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறதாம்! இதற்கு நடுவில் இங்கே வா, அங்கே வா என்று ஏகப்பட்ட அழைப்புகளால் குழம்பிப் போயிருக்கிறாராம். இரண்டு நாளில் எங்கெங்கே செல்ல என்று.
இங்க வராமப் போனீங்க...... அவ்ளோதான்!
***************************************
நண்பர்களுக்கு இடையே இருந்த மின்னஞ்சல் குழுவிலிருந்து சிலசிறு சங்கடங்களால் பிரிந்துபோன அவரும், அவனும் மீண்டும் குழுவில் இணைந்ததில் குழுவே கலகலப்பாக இருக்கிறதாம். 2010ன் மகிழ்ச்சியான செய்தி அது என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களாம்.
இருந்தாலும் இவனழைத்து வராத அவன், சுவைப்பதிவர் அழைத்ததும் வந்ததேன் என விசாரணை நடக்கிறதாம்.
முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொர்ரி முஸ்தபா...
********************************
‘சும்மா வெளையாட்டா ஆரம்பிச்சேன் விளம்பரத்தை’ என்று ஆரம்பத்தில் சொன்ன அவர் இப்போது விளம்பரக் கட்டணத்தை உயர்த்துமளவு அதற்கு வரவேற்பு என்பதில் மகிழ்சியோடிருக்கிறார். சமீபத்தில் அழைத்து கேட்ட கஸ்டமருக்கு முன்பைவிட இருமடங்கு என கட்டணம் சொல்ல ‘அவ்ளோதானா.. ஓகே’ என அவர் சொல்லவும்.. துள்ளிக் குதித்தாராம் இவர்!
இப்போது தன் நண்பர்களையும் அழைத்து ‘வெளம்பரத்தைப் போடுங்க மச்சான்ஸ்’ என்று அறிவுறுத்திக் கொண்டிருக்கிறாராம்.
நோட் பண்ணுங்கப்பா... நோட் பண்ணுங்கப்பா...
***************************
.
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
me the first.........
http://www.rojavinkadhalan.blogspot.com
:)) ஒண்ணும் பிரியல :))
உண்மையிலேயே கிசு கிசு எழுதப் போகலாம்பா. புரியற மாதிரி இருந்தாலும்...புரியாத மாதிரியும் இருக்கு. அதானே கிசு கிசு.
அனுஜன்யா
கிருஷ்ணா,
இதத்தான் கும்மி அடிக்க ஏத்த பதிவுன்னு சொன்னீங்களா? கேபிளார் கதைத் தொகுப்பைத் தவிர ஒண்ணும் புரியல, உடனடியா கோனார் நோட்ஸ் ஒண்ணு போடவும்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ஒன்னுமே புரியல உலகத்தில...
கேபிள் மேட்டர் மட்டும்தான் புரிஞ்சது.. விடைகளை என் மெயிலுக்கு அனுப்பமுடியுமா?
;))
ஆஹா!!ஏன் இந்த கொலை வெறி ....:)))
கோனார் நோட்ஸ் வாண்டட் ப்லீஸ்......
கலக்கல் தல
தலைப்ப சரியா போடலாம்ல,
ஆர்வமா படிக்க ஆரம்பிச்சா
புஸ் புஸ்
மற்றபடி ஒண்ணுமே புரியலே உலகத்திலே
கடைசியிலாவது தலை கீழா பதில் போட்டிருக்கலாம்
போகட்டும்
அதிஷாவுக்கு டும் டும் டும்
இப்ராஹீம்
மயில்
அனுஜன்யா
ஸ்ரீராம்
செந்திலநாதன்
ராஜகோபால்
கண்ணகி
தராசு
நாய்க்குட்டி
குசும்பன்
:-)))))))))))))))))
1) வலையுலக எலிஜிபிள் பேச்சிலர்
2) த்ரிஷாவின் உறவினர்
3) தண்ணி பார்ட்டி
4) தற்போதைய ஹாட் பார்ட்டி
5) தல ரசிகர்
6) நார்த் பேங்க்
7) ஸ்டார்ட்டிங்
8) இவருக்கு ஏன் ரெண்டு கிஸ்?
9) இவருக்கும் ரெண்டா?
தல, தலை சுத்துது....
கோஷ்டி கானம்..
ரைட்டூ..
ஒன்னும் புரியலே. கொஞ்சம் வெளக்கமா சொல்லவும்.
@ கார்க்கி
1 - பாதி ஓகே
2 - ஓகே
3 - நோ
4 - ஓகே
5 - ?
6க்கு நீ விடை சொல்லாம் விட்டுட்ட.
7 - ம்
8 - சரி
9/10 - ?
@ ரோஸ்விக்
கூல்ல்ல்ல்ல்ல்ல்ல்....
@
கும்க்கி & குமார்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....
என்ன சொல்லி போட்டமுன்னு மெரட்டறீங்க கே.கே.
திருப்பூர் பக்கம் தல காட்ட முடியாதாட்ட போல..
ஒண்ணுமே புரியல. :o
அண்ணே பரிசல் அண்ணே...ஏன் இப்படி... நேரிடையா எழுதினாலே என்ன போல் உள்ள ஆளுங்க புரிஞ்சுகிறது கஷ்டம்...
இப்படி எல்லாம் எழுதி... ம் என்னத்த சொல்றது
பணக்காரதேவர்தலைவன் // யோவ்..........!
கிசு கிசு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
தெரியல எனக்கு தெரியல ...
முக்காவாசி புரியுதுங்க..
ரண்டு பேரு உண்மைய ஒத்துட்டாங்க..
இன்னும் பயிற்சி தேவையோ..??
நல்லா குடுக்குறாங்கய்யா டீட்டெய்லு..!
:)
வாழ்த்துக்கள் ‘பரிசல்’கிருஷ்ணா!
நமீதா ஒரு பின்னூட்டம் போட்ட சூப்பரா இருக்கும்..
//
நன்றி மச்சான்ஸ் :)
சினிமா கிசுகிசு, அரசியல் கிசுகிசு இதெல்லாம் தெரியும். இது பதிவர் கிசுகிசு... நடத்துங்க பரிசல்! :)
//‘உயரத்துக்கு போய்ட்டேன்ல’ என்கிறாராம் அவர்.//
:-)))
Post a Comment