Monday, January 18, 2010

குட்டி – திரை விமர்சனம்




தான் காதலிக்கும் பெண் தன்னைக் காதலிக்காவிட்டால் காதலன் என்ன செய்வான்?

அமைச்சரின் மகன் அர்ஜூன்(புதுமுகம் தியான்) மேலிருந்து கீழே குதிப்பேன் என்கிறான். கீதாவும் (ஸ்ரேயா – ஸாரி – ஸ்ரியா) ஐ லவ் யூ சொல்லிவிடுகிறாள். ஆனால் குட்டி (தனுஷ்) அதைப்பற்றியெல்லாம் கவலையே படாமல் தன் காதலைத் தொடர்கிறான்.

இடையில் குட்டியால் எரிச்சலடையும் அமைச்சர் மகன், அவனை மிரட்ட ‘நான் என்ன பண்ணினா உனக்கென்ன? உன் லவ் மேல உனக்கு நம்பிக்கையில்லா’ என்று கேள்விகேட்டு, அவன் வாயை அடைத்துவிடுகிறான் குட்டி. ‘அன்போ, வெறுப்போ ஏதோவொரு வழியில் என் காதலை நீ உணர்ந்தால் அதுபோதுமெனக்கு’ என்று கீதாவிடம் சொல்கிறான்.

இறுதிவரை அவர்களோடே திரியும் குட்டியின் காதல் என்னவானது, கீதாவிற்கு அவன்மீது ஏதாவது FEEL வந்ததா என்பதைச் சொல்லும் படம்தான் குட்டி.


இது தெலுங்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆர்யாவின் ரீ மேக் என்றார்கள். ‘ரீ மேக் எல்லாம் ஓகேங்க.. அதுக்காக அதே சைக்கிள், அதே WRIST BAND எல்லாத்தையும் கேட்டு வாங்கீட்டு வர்றதா?’ என்றார் நர்சிம். நான் இதன் மூலத்தைப் பார்க்கவில்லை. ஆனால் அந்த அமைச்சர் மகன், ஸ்ரியா எல்லாருமே வசனத்துக்கு லிப் சின்க் ஆகாமல் பேசுவதும், பாடல்களில் தெறிக்கும் தெலுங்கிசையும் டப்பிங்கா, ரீமேக்கா என்று யோசிக்க வைக்கிறது.

ஸ்ரியா, தான் காதலிக்கிறோமா இல்லையா என்ற குழப்பத்திலேயே படம் முழுவதும் இருக்கிறார் என்பதை அவர் நடிப்பின் மூலம் காட்டிக் கொள்கிறார். அமைதியான நடிப்பு. புதுமுகம் தியான் தனுஷுக்கு முன் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறாரென்றாலும், ஒரு சில இடங்களில் தன் காதலை இவன் ஜெயித்து விடுவானோ என்று பதைபதைப்பதை நன்றாகவே வெளிக்காட்டியிருக்கிறார்.

படம் முழுவதும் வியாபித்து பின்னி பெடலெடுத்திருக்கிறார் தனுஷ்.



இந்த மாதிரி கேரக்டரென்றால் மனுஷன் ஜஸ்ட் லைக் தட் அநாயாசமாகச் செய்துவிடுகிறார். ஊரிலிருந்து திரும்பி வந்த அர்ஜுன் நண்பர்களோடு சேர்ந்து மிரட்ட வரும்போது, பேசியே அவர்களை சமாளிப்பதாகட்டும், காம்படிடர் தியானை ‘பாஸ்’ என்று அழைப்பதாகட்டும், எம்.பி. ராதாரவியின் வீட்டில் சென்று அவரிடம் சரிக்கு சமமாக பேசுவதாகட்டும் எல்லா இடங்களிலும் தனுஷ் சபாஷ் வாங்குகிறார். அதில் அதிகபட்ச க்ளாப்ஸ் திருமண கோலத்தில் இருக்கும் ஸ்ரியாவுடன் அவர் பேசும் காட்சி.


தியானின் நண்பனாக வரும் ஸ்ரீநாத்தின் காமெடி ரசிக்க வைக்கிறது. போலவே அவருடன் வரும் அந்த குண்டு மொட்டை கேரக்டரும். (நான் சொன்னேன்ல?) ‘காமெடி டைம்’ ஆர்த்திக்கு தனுஷின் நண்பன் (ஆமாம், நண்பன்!) கேரக்டர். அவருக்கும் இது ஒரு நல்ல படம்.

இசை – தெலுங்கு வாடை அதிகம். ஆனால் திரையில் நெளிய வைக்கவோ, கேண்டீன் போகவோ தேவையில்லாமல் உட்கார வைக்கிறது. அது போதுமே.


சரியான மாஸ் ஸ்டோரி. அதற்கான அழகான வசனங்கள். நிறைவான பாத்திரங்கள். இவையிருக்கும் ஒரு படம் மக்களைக் கவராமல் போகுமா என்ன?

குட்டி – கெட்டி!


.

17 comments:

பாலராஜன்கீதா said...

:-)))

பா.ராஜாராம் said...

நல்லது.பார்த்துருவோம்.

என் நடை பாதையில்(ராம்) said...

ரஜினி பேர காப்பாதிடாரா....!

Cable சங்கர் said...

நர்சிம் கேட்டதுல அவரு தெலுங்கு படம் பாத்துட்டாருன்னு தெரியுது.. ரீமேக் எடுக்கிறவங்க எல்லாருக்கும் ஒரு நம்பிக்கை அந்த படத்தில எதெல்லாம் இருந்திச்சோ.. அதெல்லாம் தமிழ்லேயும் இருக்கணும்ங்கிறது.. ஐவஹராவது பரவாயில்லை.. நிறைய லொகேஷன்களை மாத்தியிருக்காரு.. அண்ணன் ராஜா இருக்காரு பாருங்க.. அவரு இன்னும்பர்பெக்‌ஷன்.. ஷாட்ஸ் மொதக்கொண்டு வேற் வழியேயில்லியானாதான் மாத்துவாரு..

பீல்டுல தப்பா ஓடுன நாய் இருந்தா கூட அதை ஓட விட்டு எடுப்பாங்க..

மேவி... said...

பதிவை விட கேபிள்ஜியின் பின்னூட்டத்தை ரசித்தேன் .....

Unknown said...

// பீல்டுல தப்பா ஓடுன நாய் இருந்தா கூட அதை ஓட விட்டு எடுப்பாங்க..//

ஹா ஹா..,

போக்கிரி படத்துல விஜய் போலீஸ் டிரஸ் போட்டுட்டு விரைப்பா நிப்பரே அந்த சீன்ல தலைக்கு மேல ஹெலிகாப்ட்டர் பறக்கும் தெலுங்கு படத்துல வருவது போலவே அதை கவனிச்சு இருக்கீங்களா...

மகா said...

interesting review ........

குசும்பன் said...

இங்க இந்த படம் ரிலீஸ் ஆகியிருக்கு பாஸ், ஆனா பார்க்கனும் என்று தோனவே இல்ல, ஏன்னு தெரியல?

தராசு said...

வர வர வெறும் சினிமா விமர்சகரா மாத்திரம் தான் இருக்கீங்க.

நர்சிம் said...

பார்க்கணும்..ஆமா ஷோபனா ரவி ஸ்டைல்ல ஸ்ரேயா பேர எழுதி இருக்கீங்களே..என்ன மேட்டர்?

பரிசல்காரன் said...

@ பாலராஜன் கீதா & பா ரா

நன்றி

@ ராம்

ம்

@ கேபிள்

ரசிச்சு சிரிச்சேன் பாஸ். ஷார்ட்ஸ்ன்னு படிச்சுட்டேன்!!!

@ மேவி

ஆமா

@ பேநாமூடி

நன்றி..

@ மகா

நன்றி.

@ குசும்பன்

பாரு ராசா.

@ தராசு

ஏ இ கொ வெ? மாசம் 2 தப்ப்பா?

@ நர்சிம்

படத்துல அப்படித்தான் போடறாங்க பாஸூ.

சி.வேல் said...
This comment has been removed by the author.
சி.வேல் said...

கேபிள்ஜி


” பீல்டுல தப்பா ஓடுன நாய் இருந்தா கூட அதை ஓட விட்டு எடுப்பாங்க.. ”

செம முடுல் இருக்கிங்கபோல

போக்கிரி விஜய் டயலாக் மாடுலேசன் கூட மகேஸ் போலவே எல்லா சீனும் பேசியிருப்பார்
ம் என்ன செய்வது படம் ஒடனமே

முரளிகண்ணன் said...

\\அமைச்சரின் மகன் அர்ஜூன்(புதுமுகம் தியான்) மேலிருந்து கீழே குதிப்பேன் என்கிறான்.\\

\\இடையில் குட்டியால் எரிச்சலடையும் அமைச்சர் மகன்\\

\\காம்படிடர் தியானை ‘பாஸ்’ என்று அழைப்பதாகட்டும், எம்.பி. ராதாரவியின் வீட்டில் சென்று அவரிடம் சரிக்கு சமமாக பேசுவதாகட்டும் \\

parisal, Ratharavi M.P thaanee? Minister - ceylon Manohar

அத்திரி said...

நல்ல விமர்சனம்

மாதேவி said...

"குட்டி – கெட்டி!" நன்றி. பார்த்திடுவோம்.

Nat Sriram said...

நல்ல கிறிஸ்ப் விமர்சனம் கிருஷ்ணா... உங்கள் ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் மேல் எழுந்த கிரிட்டிசிசம்க்கு (cryticism ) சேர்த்து வைத்து இதில் கொடுத்து விட்டீர்கள். கேபிளாரின் குட்டி விமரிசனம் படித்து சற்று தலையை சொரிந்து கொண்டு இருந்தேன், படம் எப்படி என்று? You have given a clear picture about the picture :)

மற்றும், நீங்கள் சொன்னது போல் பாடல்களிலேயே தெலுங்கு வாடை தாங்க முடியவில்லை. லிரிக்ஸ் கூட மருதகாசி வகையறாக்கள் வைஜயந்தி IPS படத்திற்கு டப்பிங் வரிகள் எழுதியது போல இருந்தது.