Monday, January 4, 2010

அளவில்லா அன்போடு...



தூரத்தில் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருக்க, செய்யும் வேலைக்கு துரோகமாக வேலை நேரத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன் இந்தக் கடிதத்தை.

பழைய ஞாபகங்கள் விடாமல் துரத்துகின்றன வெயிலைத் துரத்தும் நிழலாய்.

ஒரு கதையோ, எதுவோ எழுத எழுதப்படாத நாட்குறிப்பு எடுத்து, எழுதிப் படித்து, படித்து எழுதி, அடித்துத் திருத்தி மறுபடி எழுதி ஒரே அமர்வில் நான்குமுறை அதை கூறுபோட்டு மனதிலேயே லே அவுட் அமைத்து முடித்து நாடார் கடைக்குச் சென்று பேப்பர் வாங்கி கோடு போடாமல் மார்ஜின் மடக்காமல் வைத்து -ஆனாலும் நேராக- ஒவ்வொரு பத்தியின் ஆரம்ப வரிகளை நீலத்திலும் மீதமுள்ளதை கருப்பிலும் வித்தியாசப் படுத்தி எழுதி, படித்துப் பார்த்து கவருக்குள் போட்டு அனுப்பி முடித்துக் கொண்டிருந்தாய்.

இப்போது இந்தக் கடிதத்தை எம்மெஸ் வேர்டில் தட்டச்சிக் கொண்டிருக்கிறாய். தவறுகள் எதுவும் வந்தால் Back Space. வண்ணம் கொடுக்க Text Color Editor. அது மட்டுமில்லாமல் Margin, Header, Footer, Page Layout என்று எல்லாவற்றிற்கும் பில்கேட்ஸ் துணைக்கு வருகிறார். இருந்தாலும் ஏதோ ஒன்று குறைகிறதே என்று புலம்புகிறாய். அது உன் எழுத்தின் உயரமென்பதை அறியாதவனாய்.

ஞாபகமிருக்கிறதா உனக்கு? ஒரு பத்திரிகை அந்த மாதத்தின் சிறப்பு வாசகராய் ஒருவரைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், ஆகவே வாசகர்கள் அதிலுள்ள கூப்பனில் பெயர் விலாசமெழுதி அனுப்பச் சொல்லியும் அறிவித்திருந்தார்கள். குறிப்பிட்ட அந்த வாசகரே கலந்து கொள்ளும் பட்சத்தில் அவருக்கு பரிசு. இல்லையேல் கலந்து கொள்பவர்களில் அவர் பெயரைக் கொண்டவருக்குப் பரிசென்று. நீ அதில் கலந்து கொள்ளவில்லை. அடுத்தமாதம் இதழ் வந்தபோதுதான் தெரிந்தது – கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் ஜெயித்திருந்தார். காரணம் அவர்கள் தேர்ந்தெடுத்தது உன்னை. நீ அனுப்பாததால் அந்த கிருஷ்ணகுமாருக்கு பரிசு.

ஏற்கனவே நீ ஒரு சுயதம்பட்டக்காரனென்ற பெயருண்டு. இதைச் சொல்லி அதை உறுதிப்படுத்த இங்கே குறிப்பிடவில்லை. அப்போது இதழில் வெளியான அந்த கிருஷ்ணகுமாரின் முகவரிக்கு நீ ஒரு கடிதமெழுதினாய். அவர் பதிலெழுதினார். பிறகு நீ தொடர்ந்தாய். அவர் அவனாய் மாறி தொடர்ந்தான். எத்தனை கடிதங்கள். எத்தனை பகிர்தல்கள். பிறிதொரு மழை நாளில் பேருந்துகள் சில மாறி அவன் வீடு கண்டுபிடித்து அவனோடு உரையாடி, உண்டு, பேசி மகிழ்ந்து…

இப்போது தொடுதிரை அலைபேசியில் ஒரு விரல் அசைவில் நூறு நண்பர்களை அழைக்கிறாய். கதைக்கிறாய். சிரிக்கிறாய். அழுகிறாய். பாடுகிறாய். படுத்துகிறாய். கேட்கிறாய். வியக்கிறாய். பாராட்டுகிறாய். பாராட்டுப் பெறுகிறாய்.


எதிலும் மேலே இருந்த கடிதங்கள் தந்த அந்நியோன்யத்தை உணர்கிறாயா? ஏன்?

மின்னஞ்சல் பரிமாற்றங்கள் ஏன் உனக்கு இந்த மகிழ்வைத் தர மறுக்கிறது? நீ மாற்றத்தை ஏற்க மறுக்கிறாயா நண்பா… இல்லை., எல்லோர்க்கும் இப்படித்தானா?

வேலை முடிந்து வீட்டுக்கு வந்து செஸ் அல்லது கேரம் எடுத்து தம்பியோடு விளையாடுவாய். ஒரு மணிநேரமோ, இரண்டு மணி நேரமோ ‘வந்து சாப்பிடப் போறீங்களா இல்லையா’ என்ற அன்னையின் விளி கேட்கும் வரை அது தொடரும். பிறகும் அது தொடரும்.

இப்போது அலைபேசியின் அப்ளிகேஷனில் நீயும் அதே விளையாட்டில் எங்கோ வெளிநாட்டில் இருக்கும் உன் முகம் தெரியா நண்பனும் மோதிக் கொள்கிறீர்கள். ‘என்ன இருந்தாலும் அந்த மாதிரி இல்லை’ என்று புலம்புகிறாய். உன் வீட்டில் இப்போதும் சதுரங்க அட்டையும், கேரம் போர்டும் இருக்கிறதென்பதை மறந்து.

கோவிலுக்குச் செல்கிறாய். ஆராதனையின் போது ஒலிக்கும் இயந்திர மணியோசை உன்னைக் கொன்றெடுக்கிறது. நீ ஒவ்வொரு முறை கோயிலுக்குச் செல்ல வேண்டுமென்று நிர்பந்தப்படுத்தப்போதும் அந்த டமடம சத்தம் உன்னை துரத்தியடிக்கிறது. மணியோசை தரும் நாதம் அதிலில்லையே என மனதோடு அழுகிறாய். அதை ஏற்காத உன் மனது கோவிலிலும் இல்லாமல், உன்னிடமும் இல்லாமல் எங்கெங்கோ அலைகிறது.

நீ விட்டு விடுதலையாகி வர வேண்டியது உன் நினைவுகளிலிருந்துதான். இதே கடிதத்தை இப்படி உன் மகளெழுதக்கூடும்: ‘அப்போதெல்லாம் கணினியைத் திறந்து யோசித்து யோசித்து எழுதி அதைத் திரையில் பார்த்து மகிழ்ந்து அனுப்பி பிரசுரித்து.. இப்போது நான் நினைப்பது நினைத்து முடிக்குமுன் எழுத்தில் வருகிறது. அதிலிருந்த உணர்வு இதிலில்லை’ என்று. மாற்றங்களால் ஆனது உலகு.

இன்னும் எத்தனை காலத்திற்குதான் அம்மியில் அரைத்த சுகம் மிக்ஸியில் இல்லை, ஆக்கிப்போடும் சாப்பாட்டுச் சுவை OVEN சமையலில் இல்லை என்றெல்லாம் புலம்பப் போகிறாய்? அவை எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை இனி நீ அவற்றைத் தவிர்க்கவியலாதென்பதும்.



அதே கடல் . வேறு அலைகள். அதே நிலா. அதே வானம். வேறு விமானங்கள். அதே பாதை. வேறு வேறு வாகனங்கள். எல்லாவற்றையும் எப்போதும் எல்லாரும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் நண்பா..

ஏற்கத்துவங்கு. புன்னகை தானாய் வரும். எல்லாம் மாறும்.


அளவில்லா அன்போடு
-கிருஷ்ணா


.

40 comments:

sriram said...

நெஜமாவே மீ த ஃபர்ஸ்ட்டா...
படிச்சிட்டு மறுபடி வர்றேன்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

என்னாச்சு கிருஷ்ணா?? ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் இந்தியாவா இருக்கு?
வயசாயிடுச்சுன்னு நெனைக்கிறேன் (உங்களுக்கு), new year celebration க்கு உஷா உதூப் கச்சேரி (அதுவும் கூட சில பெரிசுங்க - நல்லா கவனிங்க - நான் எல்லாரையும் சொல்லல) - யூத்து மாதிரி எப்படி நடிக்கறதுன்னு கேபிளார்கிட்ட டியூஷன் எடுத்துக்கோங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

shortfilmindia.com said...

/யூத்து மாதிரி எப்படி நடிக்கறதுன்னு கேபிளார்கிட்ட டியூஷன் எடுத்துக்கோங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//

அதுக்கெலலாம் நிஜமாவே யூத்தா இருக்கணும்..:))

sriram said...

கேபிள், அப்போ நீங்க நெஜமாவே யூத்துதானா????
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பரிசல்காரன் said...

@ ஸ்ரீராம் & கேபிள்

உருகி உருகி எழுதிருக்கேன்
வந்து கிண்டல் பண்ணீட்டு

ஓடிப்போய்டுங்க ஆமா..

சிவக்குமரன் said...

miles to go

சிவக்குமரன் said...

miles to go

shortfilmindia.com said...

/miles to go//

எவ்வளவு மைல்..?:))

கேபிள் சங்கர்

sriram said...

//உருகி உருகி எழுதிருக்கேன்
வந்து கிண்டல் பண்ணீட்டு

ஓடிப்போய்டுங்க ஆமா//

இத இத இதத்தான் ஒரு பெருசிகிட்டேயிருந்து எதிர் பார்த்தேன்..

கிருஷ்ணா - உங்க பதிவில் கும்மி அடிக்க சான்ஸ் கெடைக்கிறதே அபூர்வம், விடுவோமா நாங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

//miles to go//

way to go தெரியும், அது என்னங்க மைல்ஸ் டு கோ??

sriram said...

//உருகி உருகி எழுதிருக்கேன்//

ரொம்ப சூடா இருக்கீங்களோ??

சிவக்குமரன் said...

miles to go - அப்பிடின்னா பெருசுங்களுக்கு புரியாது. யூத் -ஆ இருந்தா புரியும்.

sriram said...

//miles to go - அப்பிடின்னா பெருசுங்களுக்கு புரியாது. யூத் -ஆ இருந்தா புரியும்.//

அப்படியா சித்தப்பு...

பாலா said...

///miles to go - அப்பிடின்னா பெருசுங்களுக்கு புரியாது. யூத் -ஆ இருந்தா புரியும்.///

என்னக் கொடுமை சரவணா இது??? :(

பாலா said...

பரிசல் நேத்துகூட நல்லாதாங்க... போய்ட்டு இருந்துச்சி.

இன்னைக்கு... எதுவொ பிரச்சனை. ஓட்டை எதுனா விழுந்துடுச்சா... ஸ்ரீராம்???

சிவக்குமரன் said...

///என்னக் கொடுமை சரவணா இது??? :(///

சரோஜா சாமான் நிக்காலோ!!!!

பாலா said...

மிஸ்டர் ஷார்ட்ஃபில்ம் இந்தியா.

இப்பல்லாம்... எந்த ப்லாகில் போனாலும்.. உங்க க்ளோஷப் ஷாட்டை போட்டுடுறாங்க.

இந்த யூத்து மேட்டரை தக்க வைக்கணும்னா... அந்துமணி மாதிரி ஆய்டணும்! :) :)

---

இங்கே கும்மி அலவ்டா???

sriram said...

பாலா, இந்த பரிசல் செம ஸ்ட்ராங்.. ஓட்டை எல்லாம் விழுவதற்கு சான்ஸே இல்ல..
552 and counting தெரியுமா??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பாலா said...

இப்ப கண்டுபிடிச்சிட்டேன்.

‘எப்படி பாஸ் ஆச்சி’ -ன்னு யோசிச்சி கன்பீஜ் ஆய்ட்டாரு. இல்ல ‘பாஸ்’-ன்னு சொன்ன குற்ற உணர்வா?? :) :)

--

பரிசல் நோ ஃபீலிங்ஸ்..!! இந்த ஸ்ரீராம் எப்பவும் இப்படித்தான்.

பாலா said...

எம்புட்டு நேரந்தான்.. பேஜை ரிஃப்ரெஷ் பண்ணிகிட்டே இருக்கறது? யாரும் இல்லையா???

நோ கும்மி????
--

ஓகே.. மீ கோயிங். திருப்பி கம்மிங் டுமாரோ?
--

பரிசல்.., ஸ்ரீராம் எதுனா சொன்னா என்னாண்டை சொல்லுங்க.

கையேடு said...

ஏதோ குறையுதுங்க.. என்னன்னு தெரியலை.

வெற்றி said...

அடடா! கும்மிய மிஸ் பண்ணிட்டேனே..சரி..நாளைக்கு பாப்போம் :)

sriram said...

பாலா
பரிசலோட ரியாக்சன் பாத்துட்டு நாளைக்கு கண்டினியூ பண்ணலாம்..
அனேகமா நம்ம ரெண்டு பேரையும் இனிமே உள்ளார விடமாட்டாருன்னு நெனைக்கிறேன்..
Moderation status பாத்து தெரிஞ்சிக்கலாம்..

ஜிகர்தண்டா Karthik said...

அருமையான பதிவு...
இந்தியாவிலிருக்கும் உங்களுக்கே இந்த பீலிங்க்சா...
இங்கே எனக்கு அந்த பீலிங்க்ஸ் ரெம்ப இருக்குங்க....

திருவாரூர் சரவணா said...

மின்சாரம், வாகனம் உள்ளிட்ட பல வசதிகளை ஏற்காமல் கற்காலம் போல் வாழத்தயாரா என்று அந்தக் காலம் என்று புலம்புவர்களிடம் நான் அதிரடியாக கேட்பேன். நீங்கள் பொறுமையாகத்தானே உள்ளதை சொல்லி இருக்கிறீர்கள்.

Kumky said...

நினைவுகளையும், அது தந்த அந்த நேரத்து சுகங்களையும் எப்போதும், மறக்கவியலாது கே.கே.

அறிவியல் கண்டு பிடிப்புக்கள் நமது சவுகரியங்களை எளிதில் பூர்த்தி செய்தாலுமே, காலமெல்லாம் கஷ்டப்பட்டபின் ஆட்கள் செய்யும் அறுவடையின்போது ஒரு சந்தோஷம் வருமே அது எத்தனை எச்.பி ட்ராக்டராலும் கொடுக்க முடியாதல்லவா?

பழகித்தொலைக்கலாம்...வேறு வழியில்லை...

நினைவுகள் இனிது இனிது.

Kumky said...

இங்கயும் டமார அடிச்சிட்டாங்க போலருக்கு..
:-))

செந்தில் நாதன் Senthil Nathan said...

//இப்போது தொடுதிரை அலைபேசியில் ஒரு விரல் அசைவில் நூறு நண்பர்களை அழைக்கிறாய். கதைக்கிறாய். சிரிக்கிறாய். அழுகிறாய். பாடுகிறாய். படுத்துகிறாய். கேட்கிறாய். வியக்கிறாய். பாராட்டுகிறாய். பாராட்டுப் பெறுகிறாய்.


எதிலும் மேலே இருந்த கடிதங்கள் தந்த அந்நியோன்யத்தை உணர்கிறாயா? ஏன்?
//

இல்லை. ஆனால் நான் கடிதம் எழுதி இருந்தால் நூறு பேருக்கு எழுதி இருக்க மாட்டேனே...அதனால் கொஞ்சம் அந்நியோன்யம் குறைவா இருந்தாலும் பரவாயில்லை, இன்று என் நண்பர் வட்டம் பெரிதல்லவா?

அடடா! கும்மிய மிஸ் பண்ணிட்டேனே.... :(

கார்க்கிபவா said...

//இல்லை. ஆனால் நான் கடிதம் எழுதி இருந்தால் நூறு பேருக்கு எழுதி இருக்க மாட்டேனே...அதனால் கொஞ்சம் அந்நியோன்யம் குறைவா இருந்தாலும் பரவாயில்லை, இன்று என் நண்பர் வட்டம் பெரிதல்லவா? //

நான் சொல்ல வந்ததும் இதுதான். இணையம்மட்டும் இல்லாவிட்டால் பரிசலுக்கு இப்படி அறிவாளியான, அடக்கமான, அழகான, புத்திசாலியான தேர்ந்த எழுத்துக்கு சொந்தக்காரரான நர்சிம் நண்பராக கிடைத்திருப்பாரா?

அன்பேசிவம் said...

தல செம டச்சிங் தல

நர்சிம் said...

ஒன்னும் புரியல அல்லது என்ன ஆச்சு?

//அதே கடல் . வேறு அலைகள். அதே நிலா. அதே வானம். //

யார் சொன்னது. அதே அலைகளாகவும் இருக்கக் கூடும்..ஆனால் இன்னமும் கூடுதல் வேகத்துடன் மீண்டும் வந்திருக்கலாம் அல்லவா? பழைய அலை..அதிக வேகம்.

அதே நிலா..இல்லையே பரிசல் தேய்ந்து ஓய்ந்து பின் மீண்டும் கிளர்ந்தெழுந்து ஒவ்வொரு மாதமும் புதிதாய்த் தானே இருக்கிறது..
பழைய நிலா புதிய பிறப்பு..தினமும்

பழைய பரிசல் புதிய வேகம்.. இது தான் உண்மை..வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் said...

நன்றி சிவகுமரன்
பாலா
கையேடு
வெற்றி
ஜிகிர்தண்டா
சரண்
கும்க்கி
செந்தில்நாதன்
கார்க்கி
முரளி

@ நர்சிம்

நன்றி பாஸ். (உங்ககிட்ட இவ்ளோ பெரிய பின்னூட்டம் வாங்கறது எவ்ளோ சந்தோஷம்!)
ஒரே நதியில் இருமுறை கால்நனைக்க முடியுமா நண்பரே?

கார்க்கிபவா said...

//ஒரே நதியில் இருமுறை கால்நனைக்க முடியுமா நண்பரே//

பெட்ரமாக்ஸ் லைட்டே வேணுமா? இந்த பந்தமெல்லாம்ம்..

லைட் கொடுகிறது இல்ல.500க்கு மேல ஃபாலோயர்ஸுக்கு வச்சுக்கிறவங்களுக்கு எல்லாம் கொடுக்கிறது இல்ல..

Unknown said...

good thought parisal

கடைக்குட்டி said...

கார்க்கி said...
//ஒரே நதியில் இருமுறை கால்நனைக்க முடியுமா நண்பரே//

பெட்ரமாக்ஸ் லைட்டே வேணுமா? இந்த பந்தமெல்லாம்ம்..

லைட் கொடுகிறது இல்ல.500க்கு மேல ஃபாலோயர்ஸுக்கு வச்சுக்கிறவங்களுக்கு எல்லாம் கொடுக்கிறது இல்ல..
//


போங்கண்ணே சும்மா.. இது எப்படிண்ணே எரியும்..???

அய்யோ.. என்ண்ணே .. ஒடச்சுபுட்டீங்க..

குப்பன்.யாஹூ said...

pazayana kazithalum pudiyana pukuthalum

வெண்பூ said...

கார்க்கி, ரொம்ப மெர்சலாவாதா!!! இப்ப தெர்தா? இதெல்லாம் நர்சிம் மாரி ஆளுங்களுக்கு எழுதுனது.. அதனாலதான் பாத்தியன்னா பதிவும் பிரியல.. நர்சிம் பின்னூட்டமும் பிரியல... என்னவோ போப்பா.. பரிசலு, மேலுக்கு சொகமில்லியா.. கவுர்மென்ட்டு ஆசுபத்திரியில காட்டி மாத்துரை கீத்துரை வாங்கி துன்னக்கூடாது??

selventhiran said...

உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள் மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில்
இது எவனோ அனுப்பும் ஆறுதலா

கண்ணகி said...

என்ன ஆச்சு...2நாள் எங்காவது வெளியில் போய் வாங்க..புத்துணர்ச்சி கிடைக்கும்

Thuvarakan said...

என்னவென்று சொல்லத் தெரியவில்லை. உங்கள் வார்த்தை வாள் கிழித்துப் போகிறது............