Friday, January 22, 2010

க்ரிக்கெட்டும் நானும்

நேற்று (இன்றெழுதப்பட்ட (21 ஜன. ‘10) இந்தப் பதிவு நாளை (22 ஜன) வருமானால் இந்த நேற்றை ‘நேற்று முன்தினம்’ என திருத்தி வாசிக்கவும்!) ஜெயா ப்ளஸ் சேனலில் க்ரிக்கெட் பற்றிய ஓர் அலசலில் ச.நா.கண்ணனுடன் நண்பர் முரளிகண்ணனும் பங்கேற்று சிறப்பாகப் பேசினார். முதலில் அவருக்கு வாழ்த்துகள்.

அழைத்துப் பாராட்டி ‘ஏங்க என்கிட்ட சொல்லவேல்ல? கார்க்கி சொல்லித்தான் தெரிஞ்சது’ என்றபோது உங்களுக்கு க்ரிக்கெட் பிடிக்குமான்னு தெரியல அதான் சொல்லல’ என்றார்.

இந்தா பிடி, அடுத்த பதிவுக்கான மேட்டரை என்று சொல்வது போல இருந்தது அவர் பதில். அதனால் இதோ எனக்கும் க்ரிக்கெட்டுக்குமான ஸ்னானப்ராப்தி:




ன் சித்தப்பா பையன் ராம்குமார் ஒரு க்ரிக்கெட் பைத்தியம். அவன் மூலமாகத்தான் எனக்கு க்ரிக்கெட் விளையாடும் பழக்கம் வந்தது.

விளையாடும் என்றால் விளையாடும் அல்ல. ஆரம்பத்தில் எல்லாரையும்போலவே பந்து பொறுக்கல். (அப்புறம் மட்டும் என்ன MRF Foundationலயா சேர்ந்தேன்? அதான் இல்ல) ஒரு கட்டத்துல சிங்கிள் பேட்ஸ்மேன் சிஸ்டம் இல்லாத ஒரு மேட்ச்ல ஒப்புக்குச் சப்பாணியா ரன்னரா நின்னேன். அப்போ, சிங்கிள் ரன் எடுத்து பிரபல கடைசி பேட்ஸ்மேன் (என்னைப் பொறுத்தவரை அப்போ அவன் பிரபல!) அந்தப்பக்கம் போக, நான் அடிச்ச – சாரி – என் பேட்ல பட்ட பந்து நாலுக்குப்போக ‘இவன் ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் போக பயப்படறவனாச்சே, இவன் அடிச்ச பால் எப்படி நாலுக்குப் போச்சு’ன்னு அவங்க ஆச்சர்யப்பட.. ஒரு மாதிரி டீம்ல எனக்கு நிரந்தர இடம் கிடைச்சது.

அடுத்ததா ஒரு மேட்ச்ல ஒரு மெய்ன் பேட்ஸ்மேன் (எட்டு ரன் எடுத்துட்டானாம்!) அடிச்ச பந்து தலைக்கு ரொம்ப உயரத்துல தலைக்கு மேல வர, ‘அது என் கைல விழும்னு இருந்தா யார் அதைத் தடுக்க முடியும்?’னு கையை விரிச்சு (அப்படியில்லைங்க.. உள்ளங்கையைத்தான்) வெச்சுட்டு சும்மா நின்னுட்டேன். அவனோட கெட்ட நேரம் அந்த பால் என் கையைப் புடிச்சுகிச்சு. உடனே என்னை நல்ல ஃபீலடர்னு அவங்களா நெனைச்சுட்டாங்க. அதே மேட்ச்ல என்னைவிட ஒரு கத்துக்குட்டி பேட் பிடிச்சப்போ, ‘நான் பௌலிங் போடவா’ன்னு கேட்கற மாதிரி பந்தை என் கைல வெச்சுட்டு எங்க கேப்டனைப் பார்த்து போஸ் குடுத்தேன். அந்த பந்தை நான் கைல வெச்சிருந்த விதம், கேப்டனுக்கு ஒரு தடவை நான் வாங்கிக்குடுத்த தேன்மிட்டாயோட ஷேப்ல இருந்ததால உணர்ச்சிவசப்பட்டு ஓகே குடுத்துட்டான். நான் போய் நின்னப்ப அம்பயன் (சின்னப்பையனா இருந்ததால) ‘க்ரீஸ் சொல்லு’ன்னான். நானும் சீரியஸா ‘கிரீஷ் இன்னைக்கு வரலைங்க. நான்தான் பௌல் பண்றேன்’னேன். ‘ச்சே’ன்னு தலைல அடிச்சுட்டவன், ‘போ போய்ப் பாலைப் போடு’ன்னான். ரொம்ப தண்ணி தாகமா இருக்கேன்னு பௌண்டரி லைன்ல இருந்த தண்ணிக் குடத்தை நோக்கிப் போனவனை எல்லாரும் பயந்துபோய்ப் பார்த்தாங்க. அப்புறம்தான் தெரிஞ்சது, ஃபாஸ்ட் பௌல் பண்ண, அவ்ளோ தூரம் போறேன்னு நெனைச்சுட்டாங்கன்னு. நம்ம பெருமையை நாமளே ஏன் இறக்கிக்கணும்னு அங்கிருந்து ஓடிவந்து நின்னு, மெதுவா பாலைப் போட்டேன். அவன் ஒரு பயந்தாங்கொள்ளி, டபுக்குன்னு பேட்டைத் தூக்க, ஸ்டெம்ப் விழ – நான் ஆலரவுண்டராய்ட்டேன். (ஒரு ஃபோர், ஒரு கேட்ச், ஒரு விக்கெட்டுக்கு ஆல்ரவுண்டரான்னு பெருமூச்சு விடக்கூடாது. அது அப்படித்தான்)

டிவி பார்த்ததும் இதே மாதிரி ஒரு கதைதான்: மொதமொதல்ல எங்க ஊர் அக்ரஹாரத்துல ஒரு ஆத்துல டிவி வந்திருந்தப்ப, வீட்டு ஜன்னல் வழியா காச்சு மூச்சுன்னு சத்தம் வர வெளில விளையாடிகிட்டிருந்த எங்களுக்கு ஒண்ணும் புரியல. அப்புறமா யாரோ நரேந்திர ஹிர்வானிங்கறவர் 16 விக்கெட் ஒரே டெஸ்ட்ல எடுத்துட்டார்னு பேசிக்கிட்டாங்க. அப்ப எனக்கு பதின்ம வயசு. (வயசச் சொல்லும்போது மட்டும் தமிழ் விளையாடுதுபா!)

அதுக்கப்பறமா நான் டிவில கிரிக்கெட் பார்த்ததும் ராம்குமாரோடதான். அவன் அப்பவே ஹர்ஷா போக்லே ரசிகர் மன்றத்து ஆளா இருந்தான். நான் சாரு ஷர்மா, ஹர்ஷா போக்லே ரெண்டு பேரையுமே ரசிப்பேன்.

அதுக்கப்பறம் கொஞ்சம் கொஞ்சமா க்ரிக்கெட் மேல ஆசை, ஆவல், ஆர்வம் (ஆ!) வந்து LORDS CRICKET CLUBன்னு ஒண்ணு நாங்களா ஆரம்பிச்சு அதுக்கு நான் கேப்டனாகினதெல்லாம் கல்வெட்டுல எழுதி வைக்க வேண்டிய வரலாற்றுக் குறிப்புகள். இங்க வேணாம்.

அதே மாதிரி உலகக்கோப்பை மாதிரியான முக்கியமான மேட்ச்களின்போது 15, 20 கேள்விகள் இருக்கற கொஸ்டினேர் ரெடி பண்ணி அலுவலகத்துல போட்டி நடக்கும். 3வது ஓவர், 4வது பால் என்னாகும்கறா மாதிரியான இண்ட்ரஸ்டிங் கேள்விகள் கூட அதுல இருக்கும். அந்த கேள்வித்தாளை ரெடி பண்றது மாதிரியான பெரிய பெரிய பொறுப்பெல்லாம் எனக்கு இருக்கு.

இன்னைக்கும் ஏதோ ஒரு மேட்ச் போட்டிருந்தாலே மெனக்கெட்டு உட்கார்ந்து பார்ப்பேன். (வேலையில்லைன்னா) இந்தியா ஜெயிக்கற மேட்சை இந்திய க்ரிக்கெட் ரசிகனாப் பார்ப்பேன். தோத்துச்சுன்னா, க்ரிக்கெட்டை ரசிக்கணும்ப்பா, எவன் ஜெயிச்சா என்னன்னு தத்துவம் பேசுவேன். நகம் குறைக்கும் கடைசி ஓவர் கொண்டாட்டங்களின்போது நாலைஞ்சு பேரோட கான்ஃப்ரென்ஸ் போட்டு லைவா த்ரில்லா பேசிகிட்டே பார்ப்பேன். சில மேட்ச்சோட போக்கு, மட்டையாளர், பந்துவீச்சாளர் எல்லாம் கணிச்சு இந்த பால் சிக்ஸர் பாரும்பேன். உடனேயே இன்னொருத்தனைக் கூப்டு இந்த பால் வெறும் டாட் பால்தான்ம்பேன். அடுத்த ஆள்கிட்ட விக்கெட்டும்பேன். எப்பவாவது யார்கிட்ட சொன்ன ஏதாவது நடந்துடுமா, எப்பவாச்சும் எல்லாருமா இருக்கும்போது க்ரிக்கெட் பத்தின பேச்சு வர, ஒருத்தன் ‘மேட்ச்க்கு நடுவுல கிருஷ்ணா டக்னு இதுதான் நடக்கும்பான். அதே மாதிரி நடக்கும் தெரியுமா’ன்னு சொல்ல, பாதி பேரு ஆமா ஆமாம்பாங்க, தலையாட்டாதவங்க முன்னாடி நான் போய் நின்னுட்டு டக்னு ‘டீ, காபி சொல்லவா?’ம்பேன். அவங்களும் தலையாட்டுவாங்களா... இப்படி க்ரிக்கெட்ல நானும் ஒரு ரௌடின்னு திரிஞ்சுகிட்டிருக்கேன்.

அவ்ளோதான் நம்ம புராணம்!


.

22 comments:

sriram said...

இது கலக்கல்..
நல்லாத்தான் விளையாடி இருக்கீங்க
புத்தகம் மறந்துடாதீங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

கார்க்கிபவா said...

தலைவா.. உங்க சிக்ஸர்ல நாங்க க்ளீன்போல்ட்.. செம பதிவு...

Unknown said...

சிரிச்சிக்கிட்டே படிச்சேன்..

Rajalakshmi Pakkirisamy said...

ha ha ha... Very nice :)

ILA (a) இளா said...

//க ‘இவன் ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் போக பயப்படறவனாச்சே, இவன் அடிச்ச பால் எப்படி நாலுக்குப் போச்சு///
இதான்யா சிக்ஸர்

பினாத்தல் சுரேஷ் said...

/படிக்குமனைவருக்கும் ஒரு புன்னகை இலவசம் / ன்னு ட்விட்டர்லே போட்டிருந்தீங்க.....

நல்லவேளை...

ஏமாத்தலை :-)

பினாத்தல் சுரேஷ் said...
This comment has been removed by the author.
எறும்பு said...

கார்க்கி said...
//உங்க சிக்ஸர்ல நாங்க க்ளீன்போல்ட்.. செம பதிவு...//

அண்ணே சிக்சர்ல எப்படி கிளீன் போல்ட் ஆக முடியும்.. ஆ... ஒ .... இன்னும்??!!!

taaru said...

ஊருக்குள்ள கொள்ளேயத்த பேரோட கதை மாதிரி இருக்கே..?!! பின்னிட்டீங்க பரிசல் சார்...
//15, 20 கேள்விகள் இருக்கற கொஸ்டினேர் ரெடி பண்ணி//
கிரவுண்டுல மட்டும் இல்ல தல நீங்க இங்ஙனக்குள்ளையும் ஆல்[ள்]-ரவுண்டர் தான்...

Kumar said...

//LORDS CRICKET CLUBன்னு ஒண்ணு நாங்களா ஆரம்பிச்சு அதுக்கு நான் கேப்டனாகினதெல்லாம் கல்வெட்டுல எழுதி வைக்க வேண்டிய வரலாற்றுக் குறிப்புகள்//


இன்னும் அந்த LCC கிளப் இருக்கா?.

இதே மாதிரி தான் நானும் விளையாடினேன். பந்து வீசுபவன் எனது தலையை குறி பார்த்து வீசினான். நானும் எதோ அடி வங்கே கூடாது என்று மட்டையை சுழற்றினேன்.(அப்றோம் என்ன ஆச்சுனு கேள்வி கேக்க கூடாது!!). அந்த அடி நான்கு ஓட்டங்களை பெற்று தந்தது.

செ.சரவணக்குமார் said...

அடிச்சு ஆடுங்க பரிசல். நல்ல பகிர்வு.

முரளிகண்ணன் said...

கல கல பதிவு பரிசல்

Unknown said...

:)) சிரிப்புக்கு நீங்க கேரண்டி? ம்ம் நடத்துங்க :))

அன்பேசிவம் said...

அடப்பாவமே! அன்னிக்கு ஆஸ்ரேலியா ஜெயிக்கும்ன்னு சொன்னது கூட இப்படித்தானா? தெரியாம போச்சே இந்த குத்து.......
ம்ம் தல அடிச்சி ஆடுங்க

பின்னோக்கி said...

நானும் ரௌடி தான்னு சொல்லாம சொல்லிட்டீங்க. ஜோக்கா எழுதுற மாதிரி, நீங்க ஆல்ரவுண்டர்ன்னு சொல்லிட்டீங்க. அது தான் உங்க திறமை :).

தண்ணி தாகம், பாஸ்ட் பௌலிங் - அருமை :-)

valli said...

என் சித்தப்பா பையனில் இருந்து அவ்ளோதான் நம்ம புராணம்! வரை ஒரு சிரிப்போட படிச்சு முடிச்சேன்...

சுவாரஸ்யம்!

கார்க்கிபவா said...

// எறும்பு said...
கார்க்கி said...
//உங்க சிக்ஸர்ல நாங்க க்ளீன்போல்ட்.. செம பதிவு...//

அண்ணே சிக்சர்ல எப்படி கிளீன் போல்ட் ஆக முடியும்.. ஆ... ஒ .... இன்னு/

எறும்பு.. என்ன நீங்க? பின்நவீனத்துவம் எல்லாம் தெரியாதா?

ந.ஆனந்த் - மருதவளி said...

என்ன பரிசல்...ஏமாத்திட்டீங்க.. எழுத்து நடை அருமை...ஆனால் டாபிக்? பெரிய பதிவரான தாங்கள் இம்மாதிரியான பதிவுகளை எல்லாம் போடலாமா? தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்..தோன்றியது, சொல்லி விட்டேன்!(ஒரு வேளை, நீங்கள் சிலேடையில் போட்டு எனக்குத் தான் புரியவில்லையோ?!)

பரிசல்காரன் said...

ஸ்ரீராம்
கார்க்கி
முகிலன்
ராஜலக்‌ஷ்மி
iLa
பினாத்தலார்
எறும்பு
டாரு
குமார் (இல்ல)
செ.சரவணா
முரளிகுமார்
ஸ்ரீமதி
முரளி
பின்னோக்கி
வள்ளி



ன்
றி

ள்

Unknown said...

//.. இன்றெழுதப்பட்ட (21 ஜன. ‘10) இந்தப் பதிவு நாளை (22 ஜன) வருமானால் இந்த நேற்றை ‘நேற்று முன்தினம்’ என திருத்தி வாசிக்கவும்!) ..//

ஆரம்பமே முடியல.. நாளைக்கு வாசிக்கறேன்..

Lakshmi Narasimhan said...

kalakkal !!!
enge team' oda bet match pottukkalammaa ????
:)

Thamira said...

எனக்கும் 'அதில்' ஆர்வம் ஜாஸ்திதான். டிவி முன்னால ஒக்காந்து பாக்கிறவங்களைக் கண்டாலே 'அந்த' மட்டையால மண்டையிலயே போடலாமானு தோணும். நான் 'அந்த'ப்பேரையே சொல்றதில்ல.. பம்மல் கே சம்பந்தம் மாதிரி.! நோ ஸ்மைலி, சீரியஸ்.!!