‘ஓடுங்க.. ஓடுங்க... அது நம்மளை நோக்கித்தான் வேகமா வருது’ - அப்படீங்கற ஆங்கிலப்பட விளம்பரம்போல கடைசியா (முதலா?) அது வந்தேவிட்டது அல்லது வரப்போகிறது! கேபிள் சங்கர் மற்றும் என்னுடைய சிறுகதைத் தொகுப்பு. ஆனா இங்க நீங்க ஓடவேண்டியது அதை நோக்கி.... அதை அள்ளிக் கொள்ள.. ஆதரவளிக்க! ரொம்ப நாள் உங்களை விட்டு பிரிஞ்சிருக்கற குழந்தை உங்களைப் பார்த்து ஓடிவந்தா எப்படி அள்ளி அணைச்சு அன்பு காட்டுவீங்களோ. .. அந்த உணர்வோடு வாருங்கள். வாங்குங்கள்!
விபரங்களுக்கு: கேபிள் சங்கரின் இந்தப் பதிவைப் படிக்கவும். (பார்க்கவும்ன்னா பார்த்துட்டு ஓடிடறாங்க!)
வழக்கம்போல எல்லாருடைய ஆதரவையும், அன்பையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்!
*******************************************
சமீபத்துல குடும்ப நண்பர்களோடு ஒரு ஹோட்டலுக்கு உணவருந்த போயிருந்தோம். பத்தொன்பது பேர் இருந்தோம். குடும்பமாக உணவருந்த அமைக்கபட்டிருந்த அறை மூடப்பட்டிருந்தது. ‘திறக்கலாமே’ என்று கேட்டுக்கொண்டபோது மேலாளர் சொன்னார்:
“அங்க உட்கார்ந்தீங்கன்னா சர்விஸ் பண்றது கஷ்டம் சார்”
நான் சொன்னேன்: “கஷ்டமா இருந்தாலும் நீங்க பண்ணணும். அதுதான் சர்வீஸ்”
திறக்கலாம் என்று கொஞ்ச நஞ்சம் இருந்த எண்ணத்தையும் அவர் மூட்டை கட்டியிருப்பார்.
அதே போல எங்களோடு வந்த ஒரு நண்பர், மற்றொரு நண்பரிடம் ஒரு தொகை கொடுத்து (பயணத்தின் போது நடுவில் அவசரத்தேவைக்கு வாங்கியிருந்தார் போலும்) ‘எண்ணிப்பார்த்துக்கோங்க’ என்றார்.
இந்த நண்பர் எண்ணாமலே பாக்கெட்டில் வைத்தார். அவர் ‘எண்ணிப் பார்க்கலியா?’ என்று மறுபடி கேட்க நான் இடைமறித்துச் சொன்னேன்: ‘அவர் உங்ககூட பழகின பழக்கத்தை எண்ணிப் பார்த்ததால, எண்ணிப் பார்க்காம உள்ள வெச்சுட்டாரு”
அடுத்த ட்ரிப்புக்கு இவனைக் கூப்பிடவே கூடாதுன்னு முடிவு பண்ணிருப்பாங்க!
***********************************
பல கடைகளில் பில் கொடுக்காமல் வரி ஏய்ப்பு நடத்துகிறார்களல்லவா? சென்னை சென்ட்ரலில் ஒரு கடை முன் அறிவிப்பு ஒன்று பார்த்தேன். ‘இந்தக் கடையில் வாங்கும் பொருளுக்கு பில் தரப்படவில்லை என்று மேலாளரிடம் புகார் அளித்தீர்களானால் நீங்கள் வாங்கிய பொருளுக்குரிய பணம் திருப்பித் தரப்படும்’ என்று.
அரசாங்கத்தை ஏமாற்றக் கூடாதென்று செய்கிறாரா, தன்னை வேலை செய்பவன் ஏமாறக் கூடாது என்று செய்கிறாரா எனத் தெரியவில்லை.
***************************************
கார்க்கி இன்றைக்கு பெண்களை ப்ரபோஸ் செய்ய புதிய வழி என்றொரு பதிவு போட்டிருந்தார். அதில் எனக்கு வந்த ஒரு எஸ்ஸெம்மெஸ் தேடினேன். இல்லை.
அது..
ஒரு பெண்ணிடம் இளைஞன் சொல்கிறான்:
“ஒரு நிமிஷம் அப்படியே நில்லுங்க. ஒரு ஸ்டில் எடுத்துக்கறேன்”
அவள்: “எதுக்கு?”
“நாளைக்கு நம்ம குழந்தை ‘அம்மாவை நீங்க மொதமொதல்ல பார்க்கறப்போ எப்படி இருந்தாங்க?’ன்னு கேட்டா காட்டணுமில்ல?”
வெரி நைஸ்! இவனுக்கு காதல் கைகூடாமலா இருக்கும்?
***************************************
நான்கைந்து நாட்களாக உடல்நிலை சரியில்லை. உள்ளுக்குள் ஃபீவர் என்கிறாற்போல ஏதோ சோர்வாகவே உணர்கிறேன். ட்விட்டர் என்னை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. 140 வார்த்தைகளில் விளையாடுகிறார்கள் மக்கள். டக்ளஸோடு நடத்திய அந்தாதி ட்விட்டும் நன்றாக பொழுதுபோக உதவியது! டக்கென்று சொல்லும் வார்த்தை விளையாட்டுகள் கவர்கின்றன. ட்விட்டர் பற்றி தனிப் பதிவே எழுதலாம். இப்போதைக்கு நான் சமீபத்தில் ட்விட்டிய முத்துக்கள்:-
“நான் என்ற நினைப்பே கூடாதென நினைக்கிறேன். ஆனாலும் தினமும் டின்னருக்கு ’நான்’ தான் சாப்பிடுகிறேன். நான் நானை விட்டொழிப்பது எப்போது?”
“உங்களுக்கு சர்க்கரை இல்லை” என்று டாக்டர் சொன்னால் சந்தோஷம். ரேஷன் கடைக்காரர் சொன்னால் சங்கடம்! என்ன உலகமடா இது!”
“பார்சல் ஆர்டர் செய்தால் லேட்டாகுது? சீக்கிரம் கொண்டு வா என “ஆர்டர்” செய்தால் உடனே வருது!”
“பாஸிடம் திருப்பதி போக லீவு கேட்டேன். “என்ன வேண்டிக்கப்போற?” என்றார். நீங்க லீவு தரணும்னு வேண்டிக்க பாஸ்’ என்றேன். லீவு சாங்க்ஷன்!”
“தமிழில் நடித்தபோது பிடிக்காத ப்ரியங்காவை கமீனேவிலிருந்து ரசிக்கிறேன். மாற்றான் தோட்டத்திலிருந்தால்தான் ரசிக்கத் தோன்றுமோ?”
“கடையில் என்ன வேண்டுமென்ற பேரரிடம் சொன்னேன்:- “ஐஸ்க்ரீம்” வரலேட்டானது. I Scream!!!. உடனே வந்தது.”
“கோவா பார்த்தவர்கள் தமிழ்ப்படம் பார்த்தேன் என சொல்லலாம். ஆனால் தமிழ்ப்படம் பார்த்தால் கோவா பார்த்தேன் என்று சொல்லிக் கொள்ள முடியாது!”
“கண்ணுக்கு போட்டாலும் அதை மூக்குக் கண்ணாடி என்பதேன்? கண்ணுக்காக அந்தக் கண்ணாடியைத் தாங்குவதால்தான்!”
இதுக்கு மேலயும் என்னை http://twitter.com/parisalkaaran - இங்கே ஃபாலோ செய்ய ஆசைப்படுபவர்கள் படலாம்!
**********************
.
48 comments:
புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்..
SMS மேட்டர் ரொம்ப நல்லா இருந்தது.. :)
அந்த மெசேஜ் எனக்கும் வந்துச்சு.. அதையெல்லாம் சொன்னா முந்திரிக்கொட்டைன்னு பொண்ணுங்க ரிஜெக்ட் பண்ணிடுவாங்க பாஸ்..
பரிசலின் இடுகையில் மீ தி ஃபர்ஸ்டா.... வாவ்.. நம்ப முடியவில்லை.. இல்லை.. இல்லை.. ;)
//இந்த நண்பர் எண்ணாமலே பாக்கெட்டில் வைத்தார். அவர் ‘எண்ணிப் பார்க்கலியா?//
ஒரு வேளை போன முறை 5000ன்னு சொல்லி 4900 மட்டும் கொடுத்ததை “எண்ணி” பார்க்கலியான்னு கேட்டிருப்பாரோ?
அச்சிலும் எழுத்தாளராக ஜொலிக்கப் போவதற்கு வாழ்த்துகள் :)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
வாழ்த்துக்கள் பாஸ்!
வாழ்த்துக்கள் பரிசல்.
போற இடத்துல நல்லா தான் நக்கல் வுடுறீங்க.
சென்னையில் இப்படி ஒரு கடையா?
ஆச்சரியமாகீது.
அடங்கோய்யால , காதல சொல்றதற்கு இப்படி ஒரு வழியா?
டிவிட்டர் உலகம் iphone ல் வேகமாக போகுது.
மருத்துவர் ஷாலினி மதுரை கருத்தரங்கம்-தொகுப்பு--புகைப்படங்கள்.
www.kaveriganesh.blogspot.com
Best wishes to you and Cableji
வாழ்த்துக்கள் பரிசல்
வாழ்த்துக்கள்...
:)
வாழ்த்துகள்
//இதுக்கு மேலயும் என்னை http://twitter.com/parisalkaaran - இங்கே ஃபாலோ செய்ய ஆசைப்படுபவர்கள் படலாம்!//
இம்மாம் பெரிய ப்ளாகையே பாலோ பண்றோம், தம்மாதுண்டு ட்வீட்டர் அதை பண்ண மாட்டோமா :))
// இங்கே ஃபாலோ செய்ய ஆசைப்படுபவர்கள் படலாம்! //
Super.. + வாழ்த்துக்கள்..
//கோவா பார்த்தவர்கள் தமிழ்ப்படம் பார்த்தேன் என சொல்லலாம். ஆனால் தமிழ்ப்படம் பார்த்தால் கோவா பார்த்தேன் என்று சொல்லிக் கொள்ள முடியாது!”
//
அருமை தல.
வாழ்துக்கள்ஜி!
கேபில்ஜி!
:-)
புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் நண்பரே.
வாழ்த்துக்கள் தல!...
//“கடையில் என்ன வேண்டுமென்ற பேரரிடம் சொன்னேன்:- “ஐஸ்க்ரீம்” வரலேட்டானது. I Scream!!!. உடனே வந்தது.”//
Awesome :)
ezhuthaalaru(kaLu)ku vaazhthukal
வாழ்த்துக்கள் பரிசல்..
வாழ்த்துகள் பரிசல்
//“உங்களுக்கு சர்க்கரை இல்லை” என்று டாக்டர் சொன்னால் சந்தோஷம். ரேஷன் கடைக்காரர் சொன்னால் சங்கடம்! என்ன உலகமடா இது!”//
சூப்பரு:)
எழுத்தாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.:)
உங்களுக்கும் போட்டோகிராபருக்கும் ஏதும் கொடுக்கல் வாங்கல் தகறாரா....
கேபிள் யூத்தை நல்லா போட்டோ எடுத்தவரு...உங்க போட்டோல கொஞ்சம் மிஸ் பண்ணிட்டாரே....
பல பதிப்புக்கள் பெற
வாழ்தத வயதில்லை.... அதனால்
வேண்டிக்கும்...
எழுத்தாளர் கிருஷ்ணகுமார்...!
வாழ்த்துகள்
புத்தக வெளியீட்டுக்குப் பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் பரிசல்!!!
வாழ்த்துக்கள் எழுத்தாளர். பரிசல் கிருஷ்ணா!
வாழ்த்துக்கள் பரிசல்.
SMS , GREAT.
வாழ்த்துக்கள் :)
வாழ்த்துகள் கிருஷ்ணா....
நீங்களும் கேபிளும்.... நல்ல காம்பினேஷன்....
ஞாபகம் வெச்சுக்கோங்க :)
Wishes to you!!!
ரொம்ப நாள் உங்களை விட்டு பிரிஞ்சிருக்கற குழந்தை உங்களைப் பார்த்து ஓடிவந்தா எப்படி அள்ளி அணைச்சு அன்பு காட்டுவீங்களோ. .. அந்த உணர்வோடு வாருங்கள். வாங்குங்கள்!//
இதை விட சிறந்த மார்கெட்டிங் இருக்க முடியாது.
கண்டிப்பா வாங்கிருவோம். என்ன கொஞ்சம் லேட்டா வாங்குவோம்.
புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்
பரிசல்,
இந்த நூல் ஒரு ஆரம்பம் மட்டுமே.
மேலும் பல படைப்புகள் நூல்களாக நீள வாழத்துகள்
வாழ்த்துக்கள் கே.கே..
அப்படியே கேபிளுக்கும்..
வாழ்த்துகள்
இருவருக்கும் நல்வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
1)வாழ்த்துக்கள்
2)அவியலில் ஓரிடத்தில் “தன்னை வேலை செய்பவன்” என எழுதியிருக்கிறீர்கள். அதனை இரு விதமாகக் கையாளலாம்.
அ) ”தன்னை”க்குப் பக்கத்தில் ஒரு கமா போட்டிருக்கலாம்.
ஆ) வேலை செய்பவன் தன்னை என்று போட்டிருக்கலாம்.
தன்னை வேலை செய்பவனைவிட இவை பரவாயில்லையா?
வாழ்த்துக்கள் பரிசல்!
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
வாழ்த்துக்கள் பரிசல்.
வாழ்த்துக்கள் பரிசல்.. நான் விழாவுக்கு வருவேன். அன்று நீங்களும் சென்னை வருகிறீர்கள் தானே? பார்க்கலாம் நேரில்.. (ஏற்கனவே ஜுரம்னு சொல்லிருந்தீங்க பாவம்:)))
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்..., தல
ஓரு செட் புக்கு பார்சல்! இது அன்புதான்..'ஆர்டர்' இல்லை! :))
ட்விட்டர்லயும் பின்றீங்க போல!
வாழ்த்துக்கள் நண்பா!
வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..
வாழ்துக்கள் தலைஸ் :-)
ரொமாண்டிக் sms.!
வாழ்த்துகள் இருவருக்கும்.
Post a Comment