40 நிமிஷம் நின்னேன். ஸ்டாலின் கடந்து போனார். முன்னும் பின்னும் பாதுகாப்போட.
அவர் முன்னால பல கார்கள், பின்னால பல கார்கள் போச்சு.
ஓகே... இப்ப என் சந்தேகம்:-
சரியா அவர் காருக்கு முன்னால ரெண்டு காரும், பின்னால ரெண்டு காரும் போச்சு.
* *
*
* *
இப்படி.நடுவுல இருக்கறது ஸ்டாலின் கார்னு வெச்சுக்கோங்க.
இந்த ஸ்டார்கள்ல மேல ஆரம்பிச்சு ஒண்ணுக்கொண்ணு இடிக்காம ஒரு கோடு இழுத்தா, Z மாதிரி வருதா? அதுனால இதுதான் Z பிரிவு பாதுகாப்போ?
****************************************
வின்னர் படத்துல ஒரு கோவில்ல கிரணைப் பார்க்க பிரசாந்தும் வடிவேலுவும் போவாங்க. கல்லெறியறப்போ குண்டர்கள் வடிவேலுவைத் துரத்துவார்கள்.
மலைக்கோயிலிலிருந்து ஓடும் இவர், கீழே நீரில் விழுந்து தப்பிப்பார்.
அப்படி விழும்போது குதிச்சுடுடா கைப்புள்ள’ என்று சொல்லியபடி வேட்டியைக் கழட்டிகுதிப்பார்.
என் சந்தேகம்..
தண்ணீல விழும்போது வேட்டிய ஏன் கழட்டறாரு?
**********************************
சமீபத்துல குடும்ப நண்பர்களோட ஊருக்குப் போயிருந்தோம். நடுவுல நின்னு, ஒரு டீக்கடைல டீ குடிச்சோம். நல்லா இருந்தது. மாலை மயங்கும் நேரம் ஆட்கள் அதிகமில்லாம வயல்வெளிகளைப் பார்த்துட்டு சுத்தமான காத்தை சுவாசிச்சுட்டு தேநீர் அருந்தும் சுகம் - நல்ல அனுபவம்.
ஐயையோ.. பேச்சு எங்கயோ போகுது..
அங்க டீ சாப்பிடறப்போ எங்க க்ரூப்ல ரெண்டு பேர் ‘எங்களுக்கு சர்க்கரை இல்லாம குடுங்க’ன்னு வாங்கி சாப்டாங்க. மொத்தமா காசு எவ்ளோ கேட்டு குடுத்தோம். ‘ரெண்டு ரூவா சில்லறை இருந்தா குடுங்க’ன்னு கடைக்காரர் சொன்னார். நான் கேட்டேன்: ‘ரெண்டு டீ சர்க்கரை இல்லாமத்தானே குடுத்தீங்க? அப்ப ரெண்டு ரூபாய் கம்மியா வாங்கிக்கக் கூடாதா’ன்னு.
அவ்ளோதான்! என்னமோ ஆயிரத்தில் ஒருவன் நல்லா ஓடுதுன்னு சொன்னதுக்கு சிரிக்கற மாதிரி அப்படிச் சிரிக்கறாங்க!
என் சந்தேகம்:-
அப்படி என்னங்க தப்பா கேட்டுட்டேன்? சர்க்கரையெல்லாம் விலை ஏத்தீட்டாங்கன்னுதான் டீக்கும் விலை ஏத்தறாங்க? அப்ப சர்க்கரை போடாத டீக்கு ஏன் விலை கம்மியா வாங்கிக்கக் கூடாது? இதை ஏன் யாரும் கேட்கறதில்ல?
******************************************************
ஜனவரி 26 வந்ததில்லையா? குடியரசு தினம். எல்லாருக்கும் தெரியும்னு நெனைக்கறேன்.. ஆகஸ்ட் 15க்கு முன்னாடி இதுதான் வெள்ளையர்களுக்கு எதிரா நாம சுதந்திரமா இருக்கணும்னு சுதந்திர தினமா கொண்டாடப்பட்டு வந்தது. அன்னைக்கும் எனக்கு சில பல குடியரசு வாழ்த்து எஸ்ஸெம்மெஸ்கள் வந்தது.
ஓகே. என் சந்தேகம்...
காதலர் தினம், தீபாவளி, நியூ இயர்க்கெல்லாம் எஸ்ஸெம்மெஸ்ஸினா அம்பது காசுன்னு மிரட்டி, அதிகமா சம்பாதிக்கற அலைபேசி நிறுவனங்கள், குடியரசு தினத்தை விட்டுவெச்சது தேசப்பற்றா இல்லை ‘இதுக்கெல்லாம் இவனுக அனுப்பவா போறாங்க’ங்கற எண்ணமா?
**********************************
ரொம்ப வருஷம் முன்னாடி பைக்ல வீட்டுக்கு போய்ட்டிருந்தேன். ஒன்வே. ஆனா எதிர்ல வண்டி வருது. என்னடான்னு விசாரிச்சா ‘பத்து மணிக்கு மேல ஒன்வே - டூவே ஆகிடும். காலைல 7 வரைக்கும்’கறாங்க.
அதே இன்னொரு ஊர்ல கேட்டப்போ இங்க 11 டூ காலை 6ன்னாங்க.
இதுவரைக்கும் எத்தனையோ ஊர்கள்ல, சாலைப் பாதுகாப்பு வழிமுறை, Traffic Sign Boardsல பார்த்துட்டேன். எங்கயுமே ஒன்வே ரோட்ல ‘இந்த சாலை இத்தனை மணிலேர்ந்து இத்தனை மணிவரை இருவழிச் சாலையாக செயல்படும்’ அப்படீங்கற அறிவிப்பே இல்லை.
அப்படி ஒண்ணு அதிகார பூர்வமா இருக்கா? இருந்தா ஏன் அறிவிப்புப் பலகைகள்ல அதைக் குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை?
***********************
இப்போதைக்கு இவ்ளோதான்.
# ‘சின்னச் சின்ன மழைத்துளிகள்’ பாட்டுல ‘இவள் கன்னி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது’ வரிக்கு அர்த்தம் என்ன? கன்னி என்பதை மழைத்துளி அறிகிறதுங்கறத கவிப்பேரரசு என்ன பொருள்ல சொல்றாரு?
# விண்ணைத்தாண்டி வருவாயா ஹொசானா பாட்டுல ‘மறுஇதயம் தருவேன் உடைக்கவே’ன்னு வருதே.. அதுக்கு என்ன அர்த்தம்? ஒருத்தனுக்கு ரெண்டு இதயமா?
# பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை எஸ்.பி.பின்னு சொல்றோம். அவர் மகன் ஏன் SPB சரண்னு போடாம SP சரண்னு போட்டுக்கறாரு?
இந்த மாதிரி வேறு சில டவுட்ஸ் எல்லாம் இருக்கு. அங்கங்கே எழுதிட்டேன்.. இதுவரைக்கும் யாரும் பதில் சொல்லல!
பார்க்கலாம்..
.
43 comments:
உங்க பாஸையும் .. உமாவையும் சொல்லனும்..
உங்கள ஏன் உக்காந்து யோசிக்கவிட்டாங்க.. ;))
இதுல இருந்து என்ன தெரியுதுன நீங்க வெட்டியா உட்காந்து யோசிச்சு கிட்டு இருகிங்கனு
@ மு.க
உமாதாங்க என் பாஸ்!
@ ப்ரபு
:-)))
பிரபுவை வழிமொழிகிறேன்
அவள் உடைக்க
ஆயிரம் இதயங்கள்
வாங்கிவந்தது
வரம்!
அ’ ஆ, வா’வ சரியா வருதே இது கவிதையா? தல.
ஒரு வேளை டூப் வடிவேலு முந்தின சீன் தெரியாம டவுசரோட குதிச்சிட்டரோ? அப்புறமா சிங்க் பண்றதுக்காக வேட்டிய கழட்டி இருப்பாரு. [நாங்களும் உ[ஒ] க்காந்து தான் யோசிச்சோம்] ஒரு சின்ன வேண்டுதல்.... இதே மேறி கவிதை [கார்க்கி மாதிரி]ஒன்னு உக்காந்து எழுதி பதிவு போடவும்..
ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
முதல்ல யாரோட இதயத்தை உடைச்சாங்கன்னு சொல்லுங்க பாஸ்
கதா?நாயகன் இதயத்தைன்னா
என் இதயம் நொறுங்கவேன்னு தானே வந்திருக்கணும்... ஏன் எதுக்கு வந்துச்சு?
எனக்கும் தெரில
:)
//‘இவள் கன்னி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது’ வரிக்கு அர்த்தம் என்ன? //
ரெட் படத்தின் ஒல்லிகுச்சி உடம்புக்காரி பாட்ல " நீ சமஞ்சத, சாமி வந்து என் காதில் சொல்லுச்சுன்னு" ஒரு வரி வரும். சாமிக்கு இதுதான் வேலையா?!?!. எந்த சாமி இந்த டேட்டா வச்சிருக்கு...
:((
வெட்டியா உட்காந்து யோசிச்சா இப்படிதான்...
mudiyala....
Balu pathina kelviku mattum pathil irukku.
SP (Sripathi Panditaradhyula) appadingarathu avanga family name (TELUGU)
NTR family la thaathavum , peranum NTR than , NTR , NTR_R illa
1. தப்பா புரிஞ்சுகிட்டீங்க. அப்படி கோடு போட்டா வரது 2. அவர் இன்னி டேட்டுக்கு தமிழ்நாட்டுல ரெண்டாம் நம்பர் இடத்துல இருக்காருன்றதுக்கான குறியீடு அது.
2. பத்திரமா கரையில வைக்கறதுக்காக அனிச்சைச் செயலா வேட்டியைக் கழட்டினாரு, ஆளுங்க வர விபரீதம் புரிஞ்சதும் கையிலேயே எடுத்துகிட்டு குதிச்சுட்டாரு.
3. அப்ப ஸ்ட்ராங்கா போட்டா, இலை மாத்தி போட்டா லைட்டா போட்டா அதுக்கு அதிக விலை கொடுக்கத் தயாரா?
ஒரு ரூம் போட்டதுக்கு இவ்ளோதான் யோசிக்க முடிஞ்சது.மேல் விவரங்களுக்கு அடுத்த ரூம் போடணும். ரொக்கமாக அனுப்பவும்.
இனிமேலும் பதில் தெரியவில்லை என்று சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள்.
11 டூ காலை 6ன்னாங்க.//
சரியான நேரம்தானே டூவேக்கு...
:))))))
//40 நிமிஷம் நின்னேன்.//
கார்ல தானே போனீங்க அப்புறம் ஏன் நின்னீங்க?
//தண்ணீல விழும்போது வேட்டிய ஏன் கழட்டறாரு?
//
வேட்டி நனைஞ்சிடும்ல, குளிக்கும் போது பின்ன நாம என்ன டிரஸ் போட்டுட்டா குளிப்போம்
//அப்ப சர்க்கரை போடாத டீக்கு ஏன் விலை கம்மியா வாங்கிக்கக் கூடாது? //
உங்க வண்டியில நீங்க தனியா போகும் போது ஒரு லிட்டருக்கு 15 கிலோ மீட்டர் கொடுத்தா, குடும்பத்தோட போகும் 60 கிலோ மீட்டர் கொடுக்கனும்ல, கொடுக்குதா
//‘இதுக்கெல்லாம் இவனுக அனுப்பவா போறாங்க’ங்கற எண்ணமா?
//
புது படத்துக்கும் முதல் நாள் விமர்சணம் பன்ற பதிவர்கள் எத்தனன பேர் சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் பதிவிடுகிறார்கள்.
//அப்படி ஒண்ணு அதிகார பூர்வமா இருக்கா? //
ஆம். 10ல் இருந்து காலை ஏழு மணி வரை ஒன் வே கிடையாது. ஆனால் இதில் பிஸியாக இருக்கு சில சாலைகளுக்கு விதி விலக்கு உண்டு. அது போன்ற சாலைகளில் No entry 24hrsன்னு போட்டிருப்பாங்க
//ரொம்ப வருஷம் முன்னாடி பைக்ல வீட்டுக்கு போய்ட்டிருந்தேன்//
இப்போ கார்ல போறீங்கறதற்காக கன்பர்ம் பண்றதுக்கு ரொம்ப வருசம் முன்னாடி பைக்ல போய்ட்டிருந்தேன் சொல்லறீங்களெ, கொஞ்சம் ஓவரா தெரியல ;) நல்லா பாருங்க ஸ்மைலி போட்டிருக்கேன்
//‘சின்னச் சின்ன மழைத்துளிகள்’ பாட்டுல ‘இவள் கன்னி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது’ வரிக்கு அர்த்தம் என்ன? கன்னி என்பதை மழைத்துளி அறிகிறதுங்கறத கவிப்பேரரசு என்ன பொருள்ல சொல்றாரு?
#விண்ணைத்தாண்டி வருவாயா ஹொசானா பாட்டுல ‘மறுஇதயம் தருவேன் உடைக்கவே’ன்னு வருதே.. அதுக்கு என்ன அர்த்தம்? ஒருத்தனுக்கு ரெண்டு இதயமா?//
பரிசல்!
தங்களின் மேலதிக கவனத்திற்கு!
மனசெல்லாம் மார்கழிதான் இரவெல்லாம் கார்த்திகைதான், எனக்குள்ளே குளித்தவன், கால்கள் நாலாச்சு, கைகள் எட்டாச்சு
இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?
அன்புடன்
வெங்கட்ரமணன்
For the first 'X' can also come. :-)
Typical Politicians of India. They should travel in divided highways and bullet + mine proof cars. They should not trouble the poor people. I have seen in Washington DC, Bill Clinton's convoy pass in the next lane ( total 4 lanes ) in the Washington DC Beltway. Only inside city, they announce the closing of roads, well in advance, if there is a major function like inauguration, etc.
***
Vesti - can trip you, and you cant swim. So Vadivelu might have understood!
***
One way rule is illogical - typical of Tiruppur! I am from there.... Never anywhere I have seen it. Just a guess in your style, if the length of the road 'one-way' is one kilometer, and it takes 10 minutes to cross to the other end, wont they need to stop traffic at the wrong side at 5.50 AM itself? ( 11 Pm to 6 Am )
damildumil கமெண்ட்ஸ் எல்லாத்துக்கும் ஒரு ரிப்பீட்டேய்
//‘மறுஇதயம் தருவேன் உடைக்கவே’ன்னு வருதே.. அதுக்கு என்ன அர்த்தம்? ஒருத்தனுக்கு ரெண்டு இதயமா?//
இவன் ஒருத்திக்கு கொடுத்த மாதிரியே வேற பக்கம் இருந்து இவனுக்கு ஒண்ணு வந்திருக்குமாக்கும்...
விடறா விடறா சூனா பானா..
மன்னிச்சு விட்டுடு.. பெரிய மனுஷன்... புக்கெலலம் போடறாரு...
ஆனா சகா, இன்னொரு தரம் இப்படி யாச்சு.. அவ்ளோதான்..
@ வெள்ளிநிலா
சரிங்க
@ முரளி
சந்தேகமே இல்ல. இது அதுதான்!!
@ டாரு
சீக்கிரமே எழுதிடறேன்!
@ பி.வசந்த்
சபாஷ். கைடுங்க பாஸ். சரியான கேள்வி.நல்லா யோசிச்சிருக்கீங்க. ரசிச்சேன்!!!
@ எறும்பு
சிரிச்சேன்!!
நன்றி மாதவ்ஜி!!
@ பினாத்தல்
அது சரிங்க பாஸ்!
@ டமால்டுமீல்
சூப்பர்!
அப்பறம் இப்பவும் பைக்லதான் ஆஃபீஸ் வர்றேன் தல. அந்த சம்பவம் எப்ப நடந்ததோ அதைத்தானே எழுத முடியும்!
ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா,, முடியல
பாஸ் - உங்க ஊரு ஒன் வே எல்லாம் ஒன்றுமே இல்லை. எங்க ஊர் - பெங்களூரு - கதையை கேளுங்க
Eg 1: ஒன் வே யில் பேரூந்து மட்டும் எதிர் பக்கமிருந்து வரலாம் - இப்படி வரலாம்கிறதை ஒன் வே யின் முடிவில் சொல்றாங்கோ.
Eg 2: பல இடங்களில் கனரக வாகனங்கள் மட்டும் செல்லக் கூடாது என்று சிக்னல் இருக்கும். எங்க ஊரில் கனரக வாகனங்கள் மட்டுமே செல்லலாம்னு ஒரு ரோடு இருக்கு. அந்த சிக்னலை மரத்துக்கு பின்னாடி ஒளிச்சு வச்சுக்கிட்டு என்கிட்டே fine ம் கேட்டாங்கோ.
சரி..என்னோட கேள்வி: உங்களுக்கு சிலர் 'வாழ்த்துக்கள்' என்றும் சிலர் 'வாழ்த்துகள்' (நான் உட்பட) என்றும் சொல்லி இருக்கிறார்களே - வித்தியாசம் புரிந்ததா? :-)
இந்தப் பக்கத்தை படித்து உங்கள் கருத்துரை இடவும் ...
http://dyfitiruppur.blogspot.com/
அன்புடன்,
இரா.சிந்தன்.
//‘மறுஇதயம் தருவேன் உடைக்கவே’ன்னு வருதே.. அதுக்கு என்ன அர்த்தம்? ஒருத்தனுக்கு ரெண்டு இதயமா?//
இது பைபில் ரீ-மேக்... ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு...,
ஆழ்ந்த சிந்தனை. அற்புதமான கருத்துகள். தீர்ந்தது சந்தேகம்.
ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா,, முடியல //
இதை நாங்கல்லா சொல்லணும்
நீங்க ஒக்காந்து யோசிச்சத, யோசிச்சு யோசிச்சு.இன்னும் முடியல...
அப்புறம் அந்த எஸ்பிபி சரண் மேட்டர்..ஆந்திரால குடும்பப் பேரத்தான் இனிஷியலா போடுவாங்க.
நீங்க தெரிஞ்சே கேக்கறீங்களா, தெரியாம கேக்கறீங்களான்னு தெரியலை.. ஆனாலும் எனக்கு தெரிஞ்சவரை....
பல தெலுங்கு மக்கள்ஸ் அவங்க குடும்பப் பெயரைத்தான் இனிஷியலா போட்டுக்குவாங்க. அது பூர்வீக கிராமப் பெயர்கள் மாதிரி இருக்கும் (Sripathi Panditaradhyula Balasubrahmanyam)
SP சரணுக்கு ஒரு மகன் ஒருந்தால் அவருக்கும் SP தான் இனிஷியல்...
தெலுங்கு மக்கள்ஸ்.. தப்பா இருந்தா திருத்தவும் ப்ளீஸ்
omagasiyaa maagiyaaaa maagiyaaya...
//ஆதிமூலகிருஷ்ணன்
5 February 2010 4:27 PM ஆழ்ந்த சிந்தனை. அற்புதமான கருத்துகள். தீர்ந்தது சந்தேகம். //
இங்க பாருங்களேன்... உங்க சந்தேகத்துக்கெல்லாம் பதில் கேட்டா அவருக்கு சந்தேகம் தீர்ந்துருச்சாம் !!!!
எப்டிங்க இப்புடி。。。 :))))
'டாஸ்மாக்ல' உக்காந்து யோசிக்கிறவங்களே பரவாயில்லை போல.
creative & interesting.
என்னது ஒரு சந்தேகமா?
அய் யாம் எஸ்கேப்.
ஏன் ஷேர் மார்கெட் மாதிரி அம்பு கீழ எறங்குது...?
அவசரத்துல போட்ட பதிவோ...
இதெல்லாம் வயசான வர்ற பிரச்சனை.... வேற வழி இல்லை...
பொழச்சு போங்க :))
Z+ category has a security cover of 36 personnel.
Z category has a security cover of 22 personnel.
Y category has a security cover of 11 personnel.
X category has a security cover of 2 personn
ஏற்கெனவே ரெண்டு பேர் சொல்லியிருந்தாலும் SPB மேட்டர் மட்டும் சொல்லிடறேன் (ஏன்னா எனக்கு மத்ததுக்கு பதில் தெரியது)
இப்படி போடுறதுதான் ஒலக வழக்கம் (தன் பேர் + குடும்பப் பேர் = First name + last name). சச்சின் டெண்டுல்கரின் மகன் பேர் அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஜுன் சச்சின் அல்ல.
Sripathi Panditaradhyula சாம்பமூர்த்தியின் மகன் Sripathi Panditaradhyula பாலசுப்ரமணியம், அவர் மகன் Sripathi Panditaradhyula சரண். SP ய பின்னாடி போடாம முன்னாடி போட்டதால இந்த குழப்பம்.
ஜாதிகளை ஒழிக்காம Surname போடுற வழக்கத்தை மட்டும் நாம (தமிழ் நாட்டில்) ஒழிச்சிட்டோம். அதனால என்னை பல பேர் Mr.நாராயணன்னு கூப்பிட்டுத் தொலைக்கிறாங்க..
டெல்லியில் வசித்த போது, ஸ்ரீராம்னு சொன்னா, முழுப்பேரு என்னான்னு கேப்பாங்க, முழுப்பேரே அதுதான்னு வெளக்கறதுக்குள்ள தாவு தீரும்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
தண்ணீல விழும்போது வேட்டிய ஏன் கழட்டறாரு?//
அதுசரி... ஏன் ஹீரோயின் மட்டும்தான் கவர்ச்சி காட்டணுமா? நம்ம ஹீரோ கவர்ச்சி காட்டினா என்ன தப்பு.
வாவ் ...சட்டை மேல எத்தனை பட்டன் ....
(ஒண்ணுமில்லை ...உங்க புத்தகம் வெளி வர போகுது ல ....அதான் )
kudiyarasu sinthanai nalla sinthanai thundum . nijam ...itha ellaam kondaatavaa porangka ?
மொக்கையில பதில் சொல்ல சொன்னதுக்கு நீங்க சொல்லலை. அதுனால கொலைவெறியோடு உங்க கூட டூ.
மேலிருந்து குதிப்பதால் வேட்டி சிக்காமல் இருக்க கைப்பிள்ளையின் தந்திரம் அது. வேட்டிக்கும் தண்ணிக்கும் சம்பந்தம் இல்லை.
-கககபோ லாஜிக் சொல்வோர் சங்கம் :)
வேட்டியைக் கழட்டனா கழட்டனா பறந்து போயிடும் தலைவா
வேட்டி காத்துல பறந்து போயிடும் அதனால் தலைவா
கடுமையா உக்காந்து யோசிச்சிருக்கீங்க பாஸு!
ஆனா எல்லாமே உண்மையான சந்தேகம்.!
வின்னர் .. வேட்டியோட ப்ரீயா நீச்சலடிக்கமுடியாதுல்ல! அதான்! :))
>>பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை எஸ்.பி.பின்னு சொல்றோம். அவர் மகன் ஏன் SPB சரண்னு போடாம SP சரண்னு போட்டுக்கறாரு?
>>
நானும் யோசிச்சிருக்கேன்..பதில் தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்
Post a Comment