Tuesday, February 9, 2010

வாழ்நாள் இதழ்...!

அனஸ்தீஷியா கொடுக்க
அரசு அனுமதி வேண்டுமாம்.
பெண்ணே..
கண்ணை மூடிக் கொண்டு நட...

******************************************
வார மாத இதழ்களை
வாசிப்பதில்லை நான்...
வாழ்நாள் இதழை ருசித்தபின்..

*******************************************

இதய மாற்று அறுவை சிகிட்சைக்கு
எந்த மருத்துவமனை பிரபலம்?
வா போகலாம்...

*************************************

பிடித்த பெயர் எதுவென்றாய்
என் பெயர் என்றேன்
வியந்தாய்
அதுதானே
உன்பெயருக்குப் பின்னால் இருக்கிறது!

****************************************

உலக கோடீஸ்வரன் என்று
யார் யாரையோ சொல்கிறார்கள்
நீ என் சொத்து என்பதறியாமல்!

***************************************

மூன்றாம் உலகப் போர்
மூளுமென்கிறார்கள்
இளைஞர்களைக்
கடந்து செல்லாதே தேவதையே...

***********************************
யாராவது நினைத்துக் கொண்டால்
புரையேறுமாமே...
அப்படியானால் நீ
எப்போதும்
இருமிக்கொண்டே அல்லவா இருப்பாய்!

************************************
காலையில் உன் கையால்
காபி குடிப்பதில் இன்பம்.
கனவில் நீ இருப்பதால்
எழுந்திருப்பதே இல்லை தினமும்!

*************************************
கோயில் குளத்தில்
மீன்களில்லையாம்.
பாவம் கொக்குகள்
தாண்டும்போது எதற்கும்
உன் கண்களை மறைத்துச் செல்.

***************************************

இதற்கு மேல் கவிதை சொன்னால்
உதைப்பேன் என்கிறார்கள்
அப்படியானால்
இனி நான் உன்பெயர் சொல்லக் கூடாதா?

*********************************************


.

31 comments:

Mohan said...

எல்லாக் கவிதைகளுமே நன்றாக இருந்தன.

Athisha said...

வாரமலர் கடைசி பக்கம்.?

Vidhoosh said...

வாலண்டைன்ஸ் டே வெயில் நாளா பாத்து வருது பாருங்க.. அதான்..
:))

கண்ணகி said...

அட...அட...அடடா...அட்டகாசம்..
எங்கே ஒளித்துவைத்தீர்கள் இத்தனி நாளாய் கவிஞரே...

ஸ்வாமி ஓம்கார் said...

பரிசல் உங்கள் பலம் வேறு.. நீங்கள் ஏன் கிரிகெட் மைதானத்தில் கிட்டிப்புல் விளையாடுகிறீர்கள்?

பரிசல்காரன் said...

@ மோகன்
அதிஷா
விதூஷ்
கண்ணகி

நன்றி

@ ஸ்வாமிஜி

அப்படியெல்லாம் இல்லைங்க. ரொம்ப தூக்கி வெச்சு தூக்கி வெச்சு, எத எழுதினாலும் அதவிட எதிர்பார்க்க ஆரம்பிக்கறாங்க. :-))

Unknown said...

//பரிசல் உங்கள் பலம் வேறு.. நீங்கள் ஏன் கிரிகெட் மைதானத்தில் கிட்டிப்புல் விளையாடுகிறீர்கள்?
//

ரிப்பீட்டேய்..

கார்க்கிபவா said...

அடடா... வாங்க சகா....

இவையெல்லாம் கவிதையின்(?) குழந்தை பாரட்டிய வரிகள் என்பதை அறிவார்களோ? :))

DR said...

"இதற்கு மேல் கவிதை சொன்னால்
உதைப்பேன் என்கிறார்கள்"

உதைக்கிறதா ? சேச்சே...
வீட்டுக்கு ஆட்டோ அனுப்பலாம்னு தான இருக்குறோம்.

taaru said...

//இருமிக்கொண்டே அல்லவா இருப்பாய்!//
நெம்ப பழக்கப் பட்டது தான்.. ஆனாலும் நெம்ப அருமை அய்யா...

கார்க்கி said
//இவையெல்லாம் கவிதையின்(?) குழந்தை பாரட்டிய வரிகள் என்பதை அறிவார்களோ?//
நானறிவேன் சகா.. நீங்கள் பாராட்டியது தானே...?!! நன்றாக அறிவேன்..

pudugaithendral said...

வாலண்டைன்ஸ் டே வெயில் நாளா பாத்து வருது பாருங்க.. அதான்..
:))//

என்னத்த சொல்ல :))

iniyavan said...

//இதற்கு மேல் கவிதை சொன்னால்
உதைப்பேன் என்கிறார்கள்
அப்படியானால்
இனி நான் உன்பெயர் சொல்லக் கூடாதா?//

இது அருமை பரிசல்.

Unknown said...

கடைசி கவித தான் சூப்பர்.., பின்னிட்டீங்க போங்க..

Unknown said...

//.. இதற்கு மேல் கவிதை சொன்னால்
உதைப்பேன் என்கிறார்கள் ..//

:-))

மணிஜி said...

14 ஆம் தேதி இங்கதானே இருக்க?

செல்ல நாய்க்குட்டி மனசு said...

superb, especially the last one
keep rocking

பரிசல்காரன் said...

@ முகிலன்

நன்றி

@ கார்க்கி

:-))

@ தினேஷ்

அனுப்புங்க. மீட்டருக்கு மேல கேட்காத ஆளாப் பார்த்து...

@ taaru

நன்றி நண்பரே...

@ புதுகைத்தென்றல்

பாராட்டலாம்ம்...!

@ உலகநாதன்

எதுனால அத அருமைங்கறீங்கன்னு புரிஞ்சது.. ரைட்டு...

@ பேநாமூடி

நன்றி

@ பட்டிக்காட்டான்
:-)

@ தண்டோரா

வன்முறை வேண்டாம்ணா.. பாவம் நானு...

@ நாய்க்குட்டி மனசு

உங்களுக்கு நல்ல மனசு.

விக்னேஷ்வரி said...

இங்கேயுமா... கலக்குங்க.

Anonymous said...

அருமை நண்பரே

Damodar said...

அழகா எழுதியிருக்கறீங்க...

சங்ககிரி ரமேஷ் said...

கடைசியா கலக்கிட்டிங்க தல ....

வெற்றி said...

சூப்பர் :)

மதுரை சரவணன் said...

anaiththum atuththatuththu vanthu nalla kavithai ithaivida ethuvum illai ena sollavaikenrana.

Cable சங்கர் said...

ரைட்டு.. அடுத்தது என்ன..?

ப்ரியமுடன் வசந்த் said...

இதய மாற்று அறுவை சிகிட்சைக்கு
எந்த மருத்துவமனை பிரபலம்?
வா போகலாம்...
//

இப்`போதை`க்கு காலேஜ்ன்ற ஹாஸ்பிடல்மட்டும்தான் இருக்கு ஒரு ஸ்பெசல் என்னான்னா ஒரு இதயத்துக்கு பதிலா ரெண்டு இதயம் வச்சு தைக்கிறார்களாம் பரவாயில்லியா?

ILA (a) இளா said...

சொக்கன் அத்தனை சொல்லியும் நீங்களும் பதிவா போட்டுட்டீங்களா>? சரி, நமக்கும் மேட்டர் வேணுமில்லே

மறத்தமிழன் said...

பரிசல்,

நல்லாயிருக்குங்க...

பார்த்திபனின் "கிறுக்கல்கள்" சாயலோடு..

புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் !

Guna said...

கடந்த இரண்டு வருடங்களாக உங்களை படித்துகொண்டிருக்கிறேன். உங்கள் லெவலே வேறே

Thamira said...

கடைசிக் கவிதை டைமிங் கலக்கல்.!

சுரேகா.. said...

சரி..சரி..! 14ம் தேதி டபுள் ட்ரீட்டுக்கு தயாராகிடுங்க! :)

selventhiran said...

கிஸகாலாதி!