Thursday, February 11, 2010

நான் ரெடி.. நீங்க ரெடியா?

சுஜாதா சொல்லுவாரு.. நாலைஞ்சு கதை எழுதின உடனே வடக்கு பார்த்து முகவாய்க்கட்டைல கை வெச்சுட்டு போஸ் குடுக்கறதும், தொகுப்பு வெளியிடறதும் தவிர்க்கவே முடியாதுன்னு.

ரெண்டையும் தவிர்க்கணும்னு நான் நெனைச்சேன்.. கேமராவை வெச்சுட்டு நோண்டீட்டே இருக்கறவங்க அழகான பசங்களைக் கண்டா சும்மாவே இருக்க மாட்டாங்கள்ல.. அப்படிதான் நம்ம ஆதியும். ஒரு நாள் அப்துல்லா வீட்ல வெச்சு நான் எதையோ சிந்திச்சிட்டிருக்கற தருணத்துல (ம்க்கும்!) க்ளிக்கிட்டார். என் ட்விட்டர் பேஜ்ல உலக மக்கள் ரசிச்சிட்டிருக்கற புகைப்படம்தான் அது.

சரி ஒண்ணு நடந்துடுச்சு. அது என்னோட போகட்டும். கதைத் தொகுதிங்கறது என் தனிப்பட்ட விஷயமில்லை. ஒட்டுமொத்த தமிழ் உலகத்தையும் பாதிக்கற விஷயம். அதுனால அப்படி ஒண்ணு நடக்கறதா இருந்தா யோசிச்சுதான் பண்ணனும்ன்னு நெனைச்சுட்டே இருந்தேன். பலதடவை பல பேர்கூட கேட்டிருக்காங்க.. (ப்ரூஃப் கேட்க மாட்டீங்கள்ல?) ‘எப்ப உங்க கதைகள் தொகுப்பா வருது’ன்னு. உலகம் எப்போ அழியும்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்கறாங்கன்னு நானும் ‘தெரியலயேப்பா’ன்னு சிவாஜி ஸ்டைல்ல சொல்லிகிட்டே இருந்தேன். ஏற்கனவே ஜோசியர் வேற 2010ல கண்டம் இருக்குன்னு சொல்லிருந்தாரு. எனக்கா, என்னைப் படிக்கறவங்களுக்கான்னு கேட்காம விட்டுட்டேன்.. இப்பத்தான் பதில் தெரிஞ்சது!

என்ன மொக்கை போட்டாலும் கடைசில விஷயத்துக்கு வந்துதானே ஆகணும்... ஆனா கடைசில வராம நான் நடுவுலயே விஷயத்துக்கு வர்றேன்... நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த என்னுடைய சிறுகதைத் தொகுப்பு வரும் பிப்ரவரி 14 அன்று வெளிவருகிறது. இந்த புத்தகம் அச்சில இருக்கும்போது பதிப்பாசிரியர் குகன் அலைபேசினார்:

‘உங்க புத்தகம் போடறது தெரிஞ்சவுடனே நிறைய ஃபோன் கால் வருது’

‘எதுக்கும் கொஞ்ச நாள் தலைமறைவா இருங்களேன்’ - இது நான்.

‘ஐயோ அதில்லைங்க.. வாங்கறதுக்குதான் கேட்கறாங்க’

நாளிதழ்கள்ல ஏதாவது பிடிக்காத நியூஸ் வந்தா அன்னைக்கு ஒரு பேப்பர், கடைல கிடைக்காது. எல்லாரும் வாங்கி, தீ வெச்சு எரிச்சிருப்பாங்க. அதுதான் எனக்கு சம்பந்தமில்லாம நினைவுக்கு வந்தது. சொன்னேன்.

‘அதெல்லாம் இல்லைங்க.. நிறைய பேர் உங்களைப் படிக்கறாங்க’ன்னாரு.

சார்லி ஜோசியரா இருக்கற ஒரு படத்துல ‘நான் சொன்னேன் பார்த்தியா’ன்னு அப்பா மகனைப் பார்த்து கேட்டுட்டே இருப்பார்ல.. அதுமாதிரி நிறைய பேர் வாங்கீட்டுப் போயி ‘பாரு.. இவன் புக்கெல்லாம் வர்றப்ப ஒனக்கென்னடா ராசா..’ன்னு கேட்டாலும் கேட்பாங்கன்னு நெனைச்சுட்டேன்.

எப்படியோ ஒரே புக் சிறுகதைத் தொகுப்பாகவும், இந்த மாதிரி மத்தவங்களுக்கு தன்னம்பிக்கை தர்றதால தன்னம்பிக்கை புத்தகமாகவும் வர்றது சரித்திரத்துல (இலக்கியத்துலன்னு வெச்சுக்கலாமா? வேணாம்.... அடிக்க வருவாங்க) இதுதான் முதல் தடவை!

*** *** ***

இதுக்கு நடுவுல நம்ம கேபிள் சங்கர் வேற ஸ்லைடு, விளம்பரம், பதிவுன்னு போட்டு கலக்கீட்டிருக்காரு. அதை பார்க்கும்போதெல்லாம் எனக்கு மறுபடி ஒரு கதை ஞாபகத்துக்கு வருது.

ஒரு காட்டுல ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் போய்ட்டிருக்கறப்போ, ரொம்ப தூரம் பின்னாடி புலி ஒண்ணு ஓடி வர்றதைப் பார்த்தாங்க. உடனே ஒரு ஃப்ரெண்ட் ஓடறதுக்கு தயாரானான். மத்தவன் கேட்டானாம்: ‘ஏண்டா.. புலியை விட வேகமா உன்னால ஓட முடியுமா’ன்னு. நம்மாளு சொன்னானாம்: ‘நான் ஏன் புலியை விட வேகமா ஓடணும்? உன்னை விட வேகமா ஓடினாப் போதாதா?’

ஆக.. எப்படியோ என்னை முந்தி ஓடிப் போய்.. என்னை மாட்டிவிடப்போறாரு கேபிள்ஜின்னு நான் சொன்னா அது நல்லா இருக்காது. ஏன்னா என் புத்தகத்துக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது கேபிள் சங்கர்தான். இப்ப வரைக்கும். அதே மாதிரியே அச்சிடப்பட்ட அனைத்து பிரதிகளையும் வித்துத் தர்றேன்னிருக்காரு. இந்த அன்பு யாருக்கு வரும்? (‘அப்ப புக் படிச்சா நாங்க அடிக்க வேண்டியது அவரையா’ன்னு கேட்காதீங்க. அதுக்கு நான் பொறுப்பு!)

சாக்ரடீஸ் ஒரு ரேடியோ ப்ரோக்லாம்ல பேச நேரமாச்சுன்னு டாக்ஸி (அப்ப இருந்துச்சான்னு தெரியல.. கைவண்டின்னு கூட வெச்சுக்கங்க!) பிடிச்சாராம். அந்த ட்ரைவர் சொன்னாராம்: ‘இன்னும் பத்து நிமிஷத்துல ரேடியோல சாக்ரடீஸ் பேசப்போறாரு. அதக் கேட்கணும். அதுனால எங்கயும் வரமாட்டேன்’னாராம். அதே மாதிரி ட்ரெய்ன்ல எனக்கும் திருப்பூர் நண்பர்களுக்கும் டிக்கெட் புக் பண்ணலாம்னா ‘அன்னைக்கு சென்னைல ஏதோ புக் ரிலீஸ் ஃபங்ஷனாச்சே.. அதுனால சென்னை ட்ரெய்ன் ஃபுல்’ன்னாங்க. சென்னைல என் புக் ஃபங்ஷன்னா சென்னைலேர்ந்து வர்ற ட்ரெய்ன்தானே ஃபுல்லாகணும்ன்னு நெனைச்சுட்டேன்.

சரி... என்னதான் ரொம்ப ஜாலியா, சிரிச்சுட்டே இத எழுதினாலும் அப்பப்ப பதிப்பாளர் குகனோட அப்பாவியான முகம் வந்து ‘என்னைப் பத்தி கொஞ்சமாவது நெனைச்சுப் பார்த்தீங்களாடா’ன்னு கேட்குது. அவரோட அன்புக்கும், துணிச்சலுக்கும் மறுபடி நன்றி.

ஆகவே... அன்பர்களே நான் சொல்ல வர்றது என்னன்னா.. (இன்னும் சொல்லவே இல்லையா நீ?) வரும் ஞாயிறு சென்னைக்கு குடும்பத்தோட வர்றேன்! சென்னை நண்பர்கள் ‘உங்க குட்டீஸை (குழந்தைகள் எனப் பொருள் கொள்க!) கூட்டீட்டு வந்தாத்தான் தங்க இடம். இல்லைன்னா பித்தளை இடம்கூட கிடையாது’ன்னுட்டாங்க. அதுனால நிச்சயமா, கண்டிப்பா, மறக்காம, மறுக்காம, தவறாம.. இன்னும் என்னென்னவோ அதெல்லாம் போட்டுக்கங்க.. பிப்ரவரி 14ம்தேதி சென்னை மேற்கு கே.கே. நகர் (அட.. கிருஷ்ண குமார் நகர் இல்லைங்க.. இது வேற..) வந்துடுங்க. உங்க கூட உட்கார்ந்து நானும் நிகழ்ச்சியை ரசிக்கப் போறேன்.

















தேதி : 14.02.10

நேரம் : மாலை 5.30

சிறப்பு விருந்தினர்கள் : நீங்கள்... மற்றும்

பிரமிட் நடராஜன் - நடிகர், தயாரிப்பாளர்,
சி.எஸ்.அமுதன் - இயக்குனர் தமிழ்ப்படம்
அஜயன் பாலா - எழுத்தாளர்
பொன்.வாசுதேவன் - பதிப்பாளர், அகநாழிகை பதிப்பகம்.


இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6.முனுசாமி சாலை
முதல் மாடி, மஹாவீர் காம்ப்ளெக்ஸ்
பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்,
மேற்கு கே.கே.நகர்
சென்னை –78

பரிசல் காரன் : 9894747014
கேபிள் சங்கர் : 9840332666
குகன் : 9940448599

(பாருங்க.. என் பதிவுல என் பேருதானே முதல்ல வரணும்? அப்ப நான் கட் பேஸ்ட் பண்ணல.. ஓகேவா?)

இணைத்துள்ள சிலைடுக்கு நன்றி: தலைவர் வெயிலான்!


.

66 comments:

கார்க்கிபவா said...

வாழ்த்துகள் சகா

புக் வறதுக்குள்ள 600 பேர் ஆயிடுவாங்க.. ஆளுக்கொன்னு வாங்கினாலே புக் ஹிட்

ப்ரியமுடன் வசந்த் said...

நாளிதழ்கள்ல ஏதாவது பிடிக்காத நியூஸ் வந்தா அன்னைக்கு ஒரு பேப்பர், கடைல கிடைக்காது. எல்லாரும் வாங்கி, தீ வெச்சு எரிச்சிருப்பாங்க. அதுதான் எனக்கு சம்பந்தமில்லாம நினைவுக்கு வந்தது. சொன்னேன்.//

குறும்பு...

Anonymous said...

வாழ்த்துக்கள் நண்பரே

Raju said...

மூன்றவதற்கு வாழ்த்துகள் தல..!

செ.சரவணக்குமார் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா.

பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள் கிருஷ்ணா

உண்மைத்தமிழன் said...

வாங்க பரிசலு..!

வெல்க பரிசலு..!

வாழ்க பரிசலு..!

iniyavan said...

வாழ்த்துக்கள் அண்ணா.

மோனி said...

வாழ்த்துகள் பரிசல்...

வெள்ளிநிலா said...

நேரிலே வாங்கனும்னு தான் பாங்குல போடல... சீக்கிரம் வாங்க, காலயில் இண்டர்சிட்யிலே வந்துட்டு , ராத்திரி சேரன்ன்ல போயிடக்கூடாது .....

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்!

அகநாழிகை said...

வாழ்த்துகள் பரிசல்காரர் (எழுத்தாளர்னா மரியாதை தர வேணாமா?) அதான்.

சென்ஷி said...

:)

மகிழ்வான தருணம் பரிசல்.. வாழ்த்துகள்

தஞ்சாவூர்க்காரன் said...

Congrats Parisalkaran

Ganesan said...

பரிசல்,

எழுத்தாளருக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

கே.என்.சிவராமன் said...

வாழ்த்துகள் பரிசல் :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஒரு அழைப்பிதழையே இவ்வளவு சுவாரசியமாக எழுத முடியுமா என்று தோன்ற வைத்தது.

கலக்கல் பரிசல்.

gulf-tamilan said...

வாழ்த்துகள்!!!

Karthick Chidambaram said...

வாழ்த்துக்கள்
Karthick
http://eluthuvathukarthick.wordpress.com

ambi said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் பரிசல் :)

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் பரிசல். நான் உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் செய்கிறேன்.

எறும்பு said...

தலைவா நான் போன் பண்ணி சொன்னத மறந்துராதீங்க...
வாழ்த்துக்கள்
:)

Unknown said...

வார்ழ்த்துக்கள் சார்

நர்சிம் said...

வாழ்த்துக்கள் பரிசல். மிக சுவாரஸ்ய அழைப்பு.

Thamira said...

என்னதான் நீங்க ரிவர்ஸ்ல எழுதியிருந்தாலும் ரொம்ப நாள் கழிச்சு (ஆப்பு?) சுவாரசியமான ஒரு பதிவு உங்களிடமிருந்து. வாழ்த்துகள் பரிசல்.!

Xavier said...

வாழ்த்துகள் பரிசல். காதலர் தினத்தன்று சும்மா அதிர போகுது கே.கே. நகர் (கிருஷ்ண குமார் நகர் அல்ல).

taaru said...

கார்க்கி said...
//ஆளுக்கொன்னு வாங்கினாலே புக் ஹிட்//
அப்போ confirm ஆ புக் ஹிட்...
அன்பு வாழ்த்துக்கள் அண்ணே...
அன்புடன்
அய்யனார்.

ஆடுமாடு said...

கேபிள் புக் கொடுத்தார். படித்துவிட்டு சொல்கிறேன்.

வாழ்த்துகள்.

Unknown said...

வாழ்த்துகள் பரிசல்..

வரதராஜலு .பூ said...

//ப்ரூஃப் கேட்க மாட்டீங்கள்ல?//

சே சே

//‘எதுக்கும் கொஞ்ச நாள் தலைமறைவா இருங்களேன்’ - இது நான்.//

//அதே மாதிரி ட்ரெய்ன்ல எனக்கும் திருப்பூர் நண்பர்களுக்கும் டிக்கெட் புக் பண்ணலாம்னா ‘அன்னைக்கு சென்னைல ஏதோ புக் ரிலீஸ் ஃபங்ஷனாச்சே.. அதுனால சென்னை ட்ரெய்ன் ஃபுல்’ன்னாங்க. //

செம குறும்பு
ரொம்பவே ரசிச்சி படிச்சேன் பரிசல்

:-))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துகள் பரிசல்.. ஊரிற்கு வரும் பொழுது தொடர்பு கொள்கிறேன்.

பாபு said...

வாழ்த்துகள் கிருஷ்ணகுமார்

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள் பரிசல்

Unknown said...

i am also ready but it bit far 4 me to come there

Cable சங்கர் said...

அலோ.. உங்களுக்கு நான் என்ன தப்பு செஞ்சேன்.. :)

ஸ்வாமி ஓம்கார் said...

எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.

பல இலக்கிய நூல்கள் வெளியிட ஆசிகள்.

GHOST said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்

AvizhdamDesigns said...

வாழ்த்துக்கள்!

பெசொவி said...

அழைப்புக் கடிதத்துலையே, நீங்க பெரிய எழுத்தாளர் என்பதை உறுதி செய்துட்டீங்க.....வாழ்த்துகள் பரிசல்காரர் அவர்களே!

Anonymous said...

வாழ்த்துக்கள் கிருஷ்ணா :))

selvanambi said...

வாழ்த்துகள்

Radhakrishnan said...

இனிய வாழ்த்துகள்.

Athisha said...

அழைப்பிதளே இவ்ளோ ஸ்வாரஸ்யமா இருக்கே புக்கு எப்படி இருக்கும்!

மேவி... said...

valthukkal ......

மணிஜி said...

திருஷ்டி கழிச்சேன்!!

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்களூடன் வாழ்த்துகள் பரிசல்...

Venkat M said...

Congrats Parisal.... and convey my wishes to Cable too.... Add one more count in your sales..
Venkat M - Chennai.

anujanya said...

வாழ்வின் பல 'முதல் தருணங்களில்' இதுவும் முக்கியமான ஒன்று. ரொம்ப மகிழ்ச்சியான நிகழ்வு. உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள். இன்னும் நிறைய சாதிக்கவும் வாழ்த்துகள்.

அனுஜன்யா

Kavi said...

விழா சிறப்பாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Prabhu said...

புக்கு, விழான்னு வெள்ளை ஜிப்பா வேல ஜோரா நடக்குது போல?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\\ஒரு அழைப்பிதழையே இவ்வளவு சுவாரசியமாக எழுத முடியுமா என்று தோன்ற வைத்தது.//
அதே தாங்க :)
வாழ்த்துக்கள்..

Sanjai Gandhi said...

ரை ரைட்ட்ட்ட்ட்ட்...

Kumky said...

மனம் நெகிழ்ந்த வாழ்த்தும், அன்பும் கே.கே.

Ashok D said...

அப்பா... எவ்வளவு பெரிய மாத்தற...

வாழ்த்துகள்ணா :)

Sabarinathan Arthanari said...

வாழ்த்துகள் நண்பரே...

Rajalakshmi Pakkirisamy said...

வாழ்த்துகள்

valli said...

வாழ்த்துக்கள்

Guna said...

விழா சிறப்பாக அமையவும்

இதுபோல் மேலும் பல விழாக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

Prabhakaran said...

தங்களுடைய இலக்கிய பணி தொடர வாழ்த்துக்கள்

பிரபாகரன்

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள் பரிசல்.. மகிழ்ச்சியில் எனக்கே கொஞ்சம் குறுகுறுப்பா இருக்கு.. :-)

மதன் said...

congrats parisal..
Expecting more book release from you ans cable.

லதானந்த் said...

வாழ்த்துக்கள்!
திருப்பூர் நிகழ்ச்சியில் அவசியம் கலந்துகொள்கிறேன்.

ஸ்ரீ.... said...

வாழ்த்துக்கள் பரிசல். விழாவில் சந்திப்போம்.

ஸ்ரீ....

Unknown said...

இந்த இடுகையிலே உங்க மென்மையான அழகான மனசு வெளிப்படுது பரிசல். புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள்

vanila said...

இப்படியே எல்லோரும் ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு புக் வெளியிட்டா ஓவர் டைம் வேலை பார்க்க வேண்டும்.. பாஸ்,. வாழ்த்துகள்.

Suresh said...

hahaha ...socrates kaalathula taxi illai..radio mattum irunthuchaa.. arumaiyana blogs.. last 4 days im reading all your blogs...