Monday, February 15, 2010

நன்றி... நன்றி.. நன்றி!!!

மகிழ்ச்சியாயும் நெகிழ்ச்சியாயும் இருக்கிறேன். புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்து வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.


அனைவரும் புத்தகத்தை வாங்கி, எழுத்தாளர்களையும் பதிப்பாளரையும் ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்...

பயணக்களைப்பிலும், மகிழ்ச்சித் திளைப்பிலும் இருக்கிறேன். ஓரிரு நாளில் பதிவிடுகிறேன்..

அப்புறம்........

பராக் ஒபாமா, டைகர் வூட்ஸ், குவைத் குசும்பன், அர்நால்ட் ஸ்வாஷ்செனகர், சங்கமம் இளா, ப்ரின்ஸ் சார்லஸ், சிங்கப்பூர் கோவி கண்ணன், மைக்கேல் ஷூ மேக்கர், சிங்கப்பூர் ‘மனசாட்சி’ கிரி, சிங்கப்பூர் ஜோசப் பால்ராஜ், ஹாலிவுட் பாலா, ஜெனிஃபர் லோபஸ், ஆசிப் அண்ணாச்சி, இலங்கை லோசன், ஹிலாரி க்ளிண்டன், மலேசியா விக்னேஷ்வரன், நைஜீரியா ராகவன், பில் கேட்ஸ், கத்தார் ஆயில்யன், குவைத் காயத்திரி, ஆஸ்திரேலியா கானா பிரபா, பான் கீன் மூன் உள்பட பல பேர் கேட்டுக் கொண்டதற்கிணங்க..

எங்களின் புத்தகங்களை வாங்குவதற்கான ஆன் லைன் லிங்க்:-

டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் புத்தகத்தை வாங்குவதற்கு இங்கே க்ளிக்குங்கள்:_
http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=121


லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டகீலாவும் புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக்குங்கள்:-

http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=122




.

42 comments:

CS. Mohan Kumar said...

உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி எழுத்தாளரே!! எனது பதிவில் போட்டிருக்கும் photo-க்கள் நீங்கள் பார்த்தீர்களா?

கார்க்கிபவா said...

வாங்கிய புத்தகத்தை இரண்டாம் கையில் விற்க எங்கே க்ளிக்க வேண்டுமென்றும் போடவும்..

butterfly Surya said...

வாழ்த்துகள் கிருஷ்ணா.

நன்றி.

ராஜ நடராஜன் said...

வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

Venkat M said...

வாழ்த்துகள் பரிசல் கிருஷ்ணா. Sorry i couldn't attend the function..

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

கார்க்கி கமெண்ட் சூப்பரூ

கிரி said...

வாழ்த்துக்கள் கே கே :-)

குசும்பன் said...

ரைட்டர் சார் முதலில் நீங்க செய்ய வேண்டியது

writerparisalkaaran.com அல்லது

parisalkaaranonline.com

என்று வாஸ்து படி உங்கள் வெப் அட்ரசை மாத்தவும்.

இனி எதுவும் புதுசா எழுதாமல் படித்ததில் பிடித்தது, கேட்டதில் பிடித்தது என்று ஒருவரி லிங் மட்டும் கொடுக்கவும்.

அந்த ஒரு வரி லிங்கையே நான் காலையிலிருந்து லட்சத்தி சொச்சம் தடவை பார்த்து பார்த்து ஜென்மசாபல்யம் அடைஞ்சேன் என்று வரும் 10000சொச்சம் கடிதத்தில் இருந்து தினம் ஒன்றை பதிவாக போடவும்.

அப்ப அப்ப தாங்கள் ஜட்டிவாங்கிய வகையில் செலவு ரூ....
நாய்க்கு பொறை வாங்கிய வகையில் செலவு ரூ.... என்று ஒரு அமவுண்ட் போட்டு எழுத்தாளனுக்கு நாட்டில் மதிப்பும் இல்லை கையில் காசும் இல்லை என்று திட்டவும்.

ரிஷி said...

600 -ku vazthukkal

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள் நண்பா.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

வாழ்த்துக்கள் அண்ணா..

sathishsangkavi.blogspot.com said...

வாழ்த்துகள்....

ஆர்வா said...

வாழ்த்துக்கள் நண்பா.. நிறைய புத்தகங்கள் படைக்க என் வாழ்த்துக்கள்

மோகன் said...

வாழ்த்துக்கள்...அடுத்தமுறை புத்தகங்கள் வாங்க செல்லும்போது வாங்கவேண்டிய லிஸ்டில் இவ்விரண்டு புத்தகங்களையும் சேர்த்தாயிற்று...by any chance பேங்களூரில் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறதா(apart frm online purchase?)?

கார்க்கிபவா said...

@குசும்பன்,
கடைசி 2 பாரா படிக்கும் வரை நீங்க இஷ்டப்பட்டு தாக்குவது அவரையோன்னு நினைச்சுட்டேன் :))

iniyavan said...

//மலேசியா விக்னேஷ்வரன், நைஜீரியா ராகவன், பில் கேட்ஸ், கத்தார் ஆயில்யன், குவைத் காயத்திரி, ஆஸ்திரேலியா கானா பிரபா, பான் கீன் மூன் உள்பட பல பேர் கேட்டுக் கொண்டதற்கிணங்க..//

மலேசியா லிஸ்டில் என் பெயரை சேர்க்காததால் உங்க கூட காஆஆஆஆஆஆஆஆ!

ராமலக்ஷ்மி said...

மீண்டும் வாழ்த்துக்கள்! நிச்சயம் வாங்கிப் படிக்கிறோம்.

கார்க்கிபவா said...

சகா 600 ஆயிடுச்சு...வாழ்த்து எல்லாம் வேண்டாம் 1000க்கு பண்னிக்கிறேன்

குசும்பன் said...

கார்க்கி said...
@குசும்பன்,
கடைசி 2 பாரா படிக்கும் வரை நீங்க இஷ்டப்பட்டு தாக்குவது அவரையோன்னு நினைச்சுட்டேன் :))//

நல்லவனே நான் நல்லா இருப்பது பிடிக்கவில்லையா?:)


// கார்க்கி said...
வாங்கிய புத்தகத்தை இரண்டாம் கையில் விற்க எங்கே க்ளிக்க வேண்டுமென்றும் போடவும்..
//

புது மருதம் புக்கை திரும்ப கொடுத்தாலும் 50 ரூபா புக்கை 15 ரூபாய்க்குதான் எடுத்துப்பான், அதுவும் திரும்ப புக்காதான் வாங்கி ஆகனும்:)))

காயத்ரி சித்தார்த் said...

"என்னது.. காந்தி செத்துட்டாரா???"

மொக்கைல வாழ்த்த மறந்துட்டேன்.. வாழ்த்துக்கள் அண்ணா! :)

காயத்ரி சித்தார்த் said...

//குவைத் காயத்திரி//

ஙே!

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் பரிசல்...

பழமைபேசி said...

வாழ்த்துகள் நண்பரே!

Kumky said...

:-))

நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்.

gulf-tamilan said...

வாழ்த்துக்கள்.!!!

Thenammai Lakshmanan said...

நன்றி பரிசல்காரன் உங்க புத்தகங்கள் அமோகமா விற்பனை ஆகட்டும்

Sukumar said...

வாழ்த்துக்கள்... தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.. தங்கள் அளவில்லா அன்பிற்கு நன்றி....!!!

மரா said...

வரலாற்றில் இடம்பிடித்த பரிசலுக்கு வாழ்த்துக்கள்....

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள்

www.parisal.com எப்போ ஸ்டார்ட்?

ப்ரியமுடன் வசந்த் said...

அய்யயோ அல்ரெடி parisalkaaran.com லதான் இருக்கீகளா?

அரவிந்தன் said...

வணக்கம் பரிசல்,

சொன்ன நேரத்தில் நாகரத்னா பதிப்பகத்திலிருந்து புத்தகங்களை அனுப்பிவிட்டனர்..

படித்த பின் என் கருத்துகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

ambi said...

வாழ்த்துக்கள் பரிசல்.

குசும்பன் சொன்னதில் விடுபட்டவை:

1)கண்டிப்பாக ஒரு உதவியாளரை (வலையேற்ற தான்) வைத்துக் கொள்ளவும். பெண் உதவியாளர் என்றால் சால சிறந்தது.

2)இனி யாராவது வலைப் பதிவர் சந்திப்புக்கு கூப்பிட்டால் நான் என்ன வெட்டியாவா இருக்கேன்?னு கன்னாபின்னாவென திட்டி ஒரு பதிவு கண்டிப்பாக போடவும். :)

என்ன குசும்பா, அடுத்த ரவுண்டுக்கு நீ வறியா..?

அகநாழிகை said...

வாழ்த்துகள் பரிசல்.

அகநாழிகை said...

கார்க்கி said...
வாங்கிய புத்தகத்தை இரண்டாம் கையில் விற்க எங்கே க்ளிக்க வேண்டுமென்றும் போடவும்.//

ஏன் இந்த கொலைவெறி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் கிருஷ்ணா.

வால்பையன் said...

வரமுடியாமைக்கு வருத்தம் தல!
கோவைக்கு வரும் போது புத்தகம் கொண்டுவாங்க!

சுரேகா.. said...

உங்கள் கையெழுத்துடன் அனைத்துப்புத்தகங்களையும் ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.
வெற்றி பெற்ற இளைஞர்கள் காத்திருக்கிறார்கள்.

வாழ்த்துக்கள் நண்பா!!

கேமராவை பத்திரமா வச்சிருந்த 'மகளுக்கு' ஸ்பெஷல் நன்றி!

அருமையான எருமை said...

வாழ்த்துக்கள்!! சில காலமாக உங்கள் பதிவுகளைப் படித்து வருகிறேன்..உங்க பதிவுகளைப் போல் புத்தகமும் சுவராஸ்யமாக, விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நீங்க கூறிய ezeebooks இல் இருந்து வெளிநாட்டிற்கு புத்தகங்களை அனுப்பும் வசதி உள்ளதா?

புலவன் புலிகேசி said...

தல நிச்சயம் விரைவில் விமர்சனம் வரும். இப்பத்தான் படிச்சிட்டிருக்கேன்..

Unknown said...

வாழ்த்துக்கள்..,

creativemani said...

பரிசல்... புத்தகம் பற்றிய எனது விமர்சனம் எழுதியிருக்கேன்.. வந்து பாருங்க..

Radhakrishnan said...

வாழ்த்துகள் பரிசல்.