Friday, February 19, 2010

மூன்று கடிதங்கள்...

முன்குறிப்பு:- கதைத் தொகுப்பு வெளியிட்டாயிற்று. அடுத்தது என்ன? வாசகர் கடிதம்தானே?

இதோ எனக்கு வந்த மூன்று கடிதங்கள்........

************************************
1)


அன்புள்ள உங்களுக்கு..

வாழ்த்துகள் பரிசல். உங்களுடைய சிறுகதைகள் எப்போதுமே எனக்குப் பிடிக்கும். கிருஷ்ணகதா என்று புராணக்கதைகளையும் தவறாமல் படிப்பேன். சில மொக்கைகளும் தாங்கக்கூடியவையாய் இருந்தது. பிற்பாடு மொக்கைகளே முழுதுமாய் ஆக்ரமித்தது.

கவிதை உங்களுக்கான களம் அல்ல. என்னைப் பொறுத்தவரை நான் அப்படித்தான் நினைக்கிறேன். கவிதைகளில் நீங்கள் என்னைக் கவரவில்லை.

சிறுகதைதான் உங்கள் ஆடுகளம். கதையை ஆரம்பிக்கும் பாங்கு, விவரணைகள், கொஞ்சம் கொஞ்சமாக கதை மாந்தர்களை அறிமுகப்படுத்தும் விதம் எல்லாவற்றையும் விட எளிய - அதிசுவாரஸ்யமான மொழி நடை. இதுதான் கதைகளில் நீங்கள் வெற்றிகரமாய் இயங்குவதற்குக் காரணம்.

இப்போதும் ‘இன்றாவது ஒரு சிறுகதை இருக்காதா’ என்று உங்கள் வலைப்பூவைத் தேடி தினம்வருகிறேன் நான்.

அன்புடன்
........................................

பி.கு: லக்கியின் விமர்சனத்தோடு ஒத்துப்போகிறேன் நான். நல்லவன் இமேஜை அப்படியே வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கொஞ்சம் எல்லை தாண்டியும் எழுதலாம்! :-)

அன்புடன்
XXXX


**********************************************************

2)


டியர் பரிசல்


காலையில் இருந்து மாலை வரை உங்கள் வலையையே திறந்துவெச்சுக்கிட்டு ஏதும் புதுசா வந்திருக்கா வந்திருக்கான்னு F5 அமுக்கி அமுக்கி பார்த்துக்கிட்டு இருப்பேன், இதோ இந்த இரண்டு வரி டைப் செய்யங்காட்டியும் இரண்டு முறை F5 இதே பக்கத்தை பழக்க தோசத்தில் அமுக்கி இரண்டு முறையும் டைப் செஞ்ச மெயில் காணாமல் போய்விட்டது. உங்கள் எழுத்துக்கள் என்றால் எனக்கு உயிர். காலையில் எழுந்து கக்கூஸ் போகும் முன்பு உங்க எழுத்தை படிச்சால் தான் பீரியா போய் வயிறு கிளீன் ஆவுது. இன்னும் எனக்கு தெளிவாக நினைவு இருக்கு. உங்கள் எழுத்தை முதன் முதல் நான் வாசித்தது வீட்டுக்கு அருகில் இருக்கும் டீக்கடையில் வடை மடிச்சுக்கொடுத்த பேப்பரில் இருந்துதான். ஒரு பக்கம் படித்ததும் நான் வாழ்கையில் இவ்வளோ நாள் வீண் அடித்துவிட்டோமே தெரிஞ்சிருந்தால் 1வது படிக்கும் முதல் உங்க புத்தங்களை படிச்சிருக்கலாமே என்று வருந்தினேன். பிறகு மீதி பக்கங்களை படிக்க அன்று மட்டும் ஒரு 50 வடை சாப்பிட்டு இருப்பேன். கடைக்காரனுக்கு தெரிஞ்சு போய் பிறகுதான் சொன்னான் "ஏன்டா லூசு முன்னாடியே சொல்லியிருந்தால் அந்த புக்கையே கொடுத்திருப்பேனே" என்று. ஏன்னா அவருதான் உங்கள் புக்கை போட்ட புண்ணியவான் என்று தெரிஞ்சது.

அன்புடன்
உங்கள் உயிர் வாசகன்
XXXXX


***********************************************

3)


பதிவர்கள் புத்தகம் எழுதுவது அதிசயம் இல்லை. ஆனால் அவற்றை சேல்ஸ்
பிரமோஷன் செய்வது மிகவும் முக்கியம். நம் பதிவர்கள் இலக்கியத்தில்
பரிச்சியம் இருக்கும் அளவுக்கு மார்கெட்டிங்கில் பவர் இல்லாமல்
இருக்கிறார்கள். உங்கள் புத்தகத்தை விற்க நான் ஐந்து ஐடியாக்கள்
தருகிறேன். இதை நான் பதிவாக எழுதினால் என் வலைப்பூவில் வரும் இரண்டு
பேரும் வரமாட்டார்கள் என்பதால் மெயிலில் இதை மொழிகிறேன்.

ஐடியா ஒன்று :

வேறொரு எழுத்தாளரின் புத்தகம் வெளியிடும் வரை காத்திருந்து, வெளியிட்டவுடன் அதை பிடுங்கி நாலாக கிழித்து காறி உமிழவேண்டும். இது எல்லாம் ஒரு புத்தகமா என ஏக வசனத்தில் பேச வேண்டும். அப்பொழுது வாசக ஜன்மங்கள், ”நீ இப்படி விமர்சனம் செய்யும் அளவுக்கு என்ன எழுதி கிழிச்சே?” என உங்கள் புத்தகத்தை வாங்கி படிப்பார்கள்.



ஐடியா இரண்டு :

புத்தக வெளியீட்டுக்கு வரும் வெண்பூவின் குழந்தை, கேபிளாரின் குழந்தை
ஆகியோர்களுடன் நின்று புகைபடம் எடுத்து அதை இணையத்தில் போட்டு, நான் இளைய தலைமுறைக்காக எழுதுகிறேன் என சவடால் விடலாம். பிறகு எல்.கே.ஜி பாடமாக உங்கள் சிறுகதை தொகுப்பை வைக்கச் சொல்லலாம்.

ஐடியா மூன்று :

புத்தக வெளியீட்டுக்கு தங்கமணி மற்றும் குடும்ப சகிதம் சென்று
கொண்டாடிவிட்டு,பிறகு இணையத்தில் என் எழுத்தை தங்கமணி படிப்பதே இல்லை எனலாம். இதனால் உங்கள் தங்கமணி படிக்காத கண்றாவியை பிறர் படிக்க முயற்சிப்பார்கள்.

ஐடியா நான்கு :

சிறுகதை தொகுப்பு வெளியிடுவதற்கு நான் தினமும் 20 மணி நேரம் எழுதினேன் ,
கக்கா மூச்சா கூட போகவில்லை. எழுத்து என் தவம், எழுத்து என் ஜபமாலை என
ஏதாவது தத்து பித்து என உளரலாம். புத்தகத்தில் இருக்கும் கதை படித்து
புரியாதவர்களுக்கு உங்கள் உளறல் புரிய வாய்ப்புண்டு.

ஐடியா ஐந்து :

ஏதாவது ஒரு சாமியாரைச் சந்தித்து பிறகு இரண்டு தினங்களில் உங்கள் வலைத்தளத்தில் பின்வருமாறு எழுதலாம், “ ஸ்வாமி XXXXஐ சந்தித்த பிறகு எனக்குள் ஒரு அதிர்வு ஏற்பட்டது, அதற்கு காரணம் நான் மெபைல் போனை வைபிரேஷன் மோடில் வைத்திருந்தேன். அவரை சந்தித்த பிறகு எனது புத்தகத்தை அண்டார்ட்டிக்காவில் உள்ள ஒஃந்ச்ஃஅஹ்ச்தி என்ற பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் ஏற்றுக்கொண்டார்கள். படுகர் மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடியினர் மொழியில் என் நூல் மொழி பெயர்க்கப்படுகிறது. இம்மொழிகளுக்கு எழுத்து வடிவமே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது......”என்ற நீண்ட கட்டுரை எழுதலாம். ஸ்வாமிகளின் பெயரை பயன்படுத்துவதற்கு கட்டணம் தனி ;) அதை அவரிடம் கொடுத்து விடலாம்.


இப்படிக்கு
XXXX


பின்குறிப்பு:- XXXX என்பது யாரையும் குறிப்பிடுவது அல்ல. அப்படிக் குறிப்பிடுவது போல் தோன்றினால் அது தற்செயலானதே தவிர, வலிந்து மேற்கொள்ளப்பட்டது அல்ல!



.

54 comments:

ரிஷி said...

ரைட்டு !! நடத்துங்க பாஸ் !!!

Mohan said...

இனிமேலும்,இது போல் தொடர்ந்து உங்கள் வாசகர்கள் கடிதங்களை வெளியிடவும்!

iniyavan said...

பரிசல்,

மூன்றாவது கடிதம் தேவையா? யோசியுங்கள். உங்களுக்கே காரணம் புரியும்.

Venkat M said...

பரிசல், கடிதங்களில் ஏதோ உள் குத்து இருக்கோ.

பரிசல்காரன் said...

@ ரிஷி

ம்ம்

@ மோகன்

வந்தாத்தானே...

@ என் உலக்ஸ்

மூணுமே தேவையில்லைதான். பொழுது போகணுமில்ல? எப்பவுமே சீரியஸாவே யோசிக்காதீங்க பாஸ்.. லூஸ்ல விடுங்க..!

பரிசல்காரன் said...

@ வெங்கடேசன்

குத்து இருக்கு. அது எனக்குத்தான்!! இன்னமும் வலிக்குதுன்னா பார்த்துக்கங்களேன்....

செ.சரவணக்குமார் said...

என்ன தல நல்லாதான போய்ட்டு இருந்துச்சி..

அன்புடன் நான் said...

அந்த கடிதங்களில் இருந்த நேர்மை பிடிச்சிருந்தது.

Thenammai Lakshmanan said...

யார் எழுதியது... என்ன ஆச்சு பரிசல்

Vijay said...

பரிசிலு....ம்ம்ம்... அடுத்த தளத்துல இயங்கறீங்க... வாழ்த்துக்கள்.

Sure said...

விஜய் said

"பரிசிலு....ம்ம்ம்... அடுத்த தளத்துல இயங்கறீங்க... வாழ்த்துக்கள்".

பரிசல் அண்ணா, என்னதான் நடக்குது இங்க.

அறிவிலி said...

எல்லை தாண்டுவதற்கான முஸ்தீபு போல தெரியுது.

சீக்கிரம் தாண்டுங்க.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பரிசல்,

மூன்றாவது கடிதத்தின் கடைசி பகுதி என்னை குறிப்பிடுவது போல உள்ளது.

வலையுலகில் ஸ்வாமி என்ற பெயரிலும், நீங்கள் சந்திக்கும் தொலைவிலும் நான் மட்டும் தான் இருக்கிறேன்.

இதை எழுதிய பதிவர் யார் என எனக்கு தனிமடலிலாவது கூறவும்.

நன்றி.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

தாக்குதல் தொடங்கியாச்சா! இனி சீக்கிரம் பெரிய ஆளா ஆயிடுவீங்க.
இனிமே நீங்க நின்னா நியூஸ் , நிமிர்ந்தா நியூஸ் தான்.

கார்க்கிபவா said...

//
இதை எழுதிய பதிவர் யார் என எனக்கு தனிமடலிலாவது கூறவு//

கலிகாலம்...

மரா said...

மூன்றாவது கடிதத்தை எழுதுனது நானில்லை.நானில்லை.....
அண்ணே ஒரு சூப்பர் ஐடியா:- உங்க வெளிநாட்டு வாசகர்கள விட்டு இப்புத்தகத்தை விட்டு அவிங்கவிங்க மொழில மொழிபெயர்க்க சொல்லுங்கண்ணே.நன்றி.

சுரேகா.. said...

நாங்கூட உண்மையான கடிதங்களோன்னு ஆசையாப் படிச்சேன்.

:)

:))

:)))

Prabhu said...

//"பரிசிலு....ம்ம்ம்... அடுத்த தளத்துல இயங்கறீங்க... வாழ்த்துக்கள்".///

வஞ்சப் புகழ்ச்சியில அடுத்த தளத்துல இயங்குறாங்கப்பா!

Prabhu said...

நாலு xன்னா கார்க்கியா?

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... ஆரம்பிச்சுட்டாங்கய்யா ... ஆரம்பிச்சுட்டாங்க...

அருமையான எருமை said...

கலக்குங்க பரிசல்! இந்த கடிதம் எல்லாம் உண்மைலயே வந்தது தானே.. :-) :-)
இல்லை, சமீபத்துல வந்த வாசகர் கடிதங்கள்ன்னு சொல்லி நாமளே எழுதுறதும் இப்ப புது ட்ரண்டு போல இருக்குதே!
:-))

thiyaa said...

m....

Kumky said...

என்னாதிது...சின்னப்புள்ளத்தனமா....

ees said...

http://www.behindindia.com/india-news-stories/feb-10-03/cable-shankar-16-02-10.html

Vijay said...

//Sure said...
விஜய் said

"பரிசிலு....ம்ம்ம்... அடுத்த தளத்துல இயங்கறீங்க... வாழ்த்துக்கள்".

பரிசல் அண்ணா, என்னதான் நடக்குது இங்க.//


அதானே?........சொல்லுங்க பரிசலு...சொல்லுங்க.....:))

Vijay said...

// pappu said...
//"பரிசிலு....ம்ம்ம்... அடுத்த தளத்துல இயங்கறீங்க... வாழ்த்துக்கள்".///

வஞ்சப் புகழ்ச்சியில அடுத்த தளத்துல இயங்குறாங்கப்பா!//

@ pappu,

அது சரி....

creativemani said...

பரிசல்..
அனானி கம்மண்ட்ஸ் மாதிரி அனானி ஈமெயிலும் வர ஆரம்பிச்சாச்சா???
;)

Prabhusankar said...

சாரு அடிக்கடி கூறி வருவது போல , தமிழ் எழுத்தாளனுக்கு எதிரி மற்றொரு எழுத்தாளன்தான். இது போன்ற பதிவுகள் சராசரி வாசகர்களாகிய எங்களை அருவெறுப்பு கொள்ள செய்கின்றன. மேன் மேலும் பல புத்தகங்களை வெளியிட வாழ்த்துக்கள் . Pl avoid this krishna..

எம்.எம்.அப்துல்லா said...

வாசகர் கடிதம் போடுறது பெரிய விஷயம் இல்லை. அதுக்கப்புறம் யாரும் சண்டை போடாம இருக்கணும்.அதுதான் பெரிய விஷயம் :))

Venkat M said...

//குத்து இருக்கு. அது எனக்குத்தான்!! இன்னமும் வலிக்குதுன்னா பார்த்துக்கங்களேன்....//

I object those letters/emails KK... (if those are in negative nature)

பரிசல்காரன் said...

@ செ.சரவணகுமார்

இப்பவும் நல்லாத்தான் போய்ட்டிருக்கு..

@ கருணாகரசு

பேர் வித்தியாசமா இருக்கே.. ரெண்டு பேரை மிக்ஸ் பண்ணா மாதிரி...

@ தேனம்மை

அக்கா.. நோ சீரியஸ்... மூணுமே எனக்கு வந்ததுதான். மூணு பேருமே என் உண்மையான நண்பர்கள்தான்..

@ விஜய்

களமா.. அது சரி..

@ sure

ஒண்ணுமில்லைங்க.. ச்சும்மா..

@ அறிவிலி

பாஸ்போர்ட்டே இல்லாம எங்க தாண்டறது! :-)

Cable சங்கர் said...

நான் எழுதின கடிதத்தை ஏன் போடலை..?

பரிசல்காரன் said...

@ ஸ்வாமி ஓம்கார்

108 வயசாச்சேன்னு பார்க்கறேன் ஸ்வாமி... (நற நற...)

@ நாய்க்குட்டி மனசு

நிமிந்தா நியூஸ் இல்ல. தலைல பல்ப் இடிச்சு ஃப்யூஸ்!

@ கார்க்கி

நல்ல்லா கேளு..

@ மயில்ராவணன்

எல்லாஞ்சரி.. அதென்ன சந்தடி சாக்குல “அண்ணே” ..? அடிங்...

@ சுரேகா

யோவ்.. உண்மையா வந்த கடிதங்கள்தான் நண்பா... ப்ரூஃப் இருக்கு!

@ பப்பு

உத...

@ இராகவன்

:-)

@ அருமையான எருமை

நிஜமா வந்ததுதாங்க...

@ தியாவின் பேனா

:-)

@ ees

நன்றி!!!!!!!

@ கும்க்கி

ஹிஹிஹி்!!!!!!!

@ விஜய்

:-) நன்றி..

@ அன்புடன் மணிகண்டன்

இல்ல பாஸ். இது எல்லாமே நம்ம நண்பர்கள்தான்...

@ பிரபு ஷங்கர்

எழுத்தாளனா யாரு நானா? அதுவும் சாருகூட கம்பேரிசனா? சரியாப்போச்சு! சிப்பு சிப்பா வருதுங்க பாஸ்... இதுக்கெல்லாமா சீரியஸ் ஆவிங்க?

@ எம் எம் அப்துல்லா

எனக்குத்தான் நீஙக் இருக்கீங்களேண்ணே..

@ வெங்கடேசன்

//I object those letters/emails KK... (if those are in negative nature)//

எனக்கு நீங்க ஒருத்தராவது இருக்கீங்களே பாஸ்.. அது போதும்! (இது என் நண்பர்கள் எழுதியவைதான்)

பரிசல்காரன் said...

@ கேபிள் சங்கர்

போட்டுடவா? :-)

பரிசல்காரன் said...

அனைத்து நண்பர்களுக்கும் -

2, 3ம் கடிதங்கள் என் நண்பர்கள் நகைச்சுவைக்காக எழுதி அனுப்பியவைதான். எனது கோடிக்கணக்கான வாசகர்கள் இதை எனக்கெதிரான கடிதமாக நினைத்துக் கொண்டு வன்முறையில் இறங்கிவிட்டதாக பிபிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனக்காக அனைவரும் பொறுமை காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Vijay said...

//@ விஜய்

களமா.. அது சரி..//

களம் இல்ல தல....தளம்.:))

Unknown said...

நான் கண்டுபிடிச்சிட்டேன்.

மூணு கடிதத்தையும் கண்டுபிடிச்சது யாருன்னு...

X = ப
X = ரி
X = ச
X = ல்

பரிசல்காரன் said...

@ முகிலன்

ஏன்ய்யா இந்தக் கொலவெறி??? :-)

மு - கி - ல - ன்.... இப்படியும் வருதே....!

@ புலிகேசி

:-)

CS. Mohan Kumar said...

முதல்ல ஏன் இப்படியெல்லாம் போடுரார்னு நினைச்சேன். ம்ம்.. இதுவும் ஒரு மார்கடிங் technique-ஆ? ம்ம் நமக்கு இன்னும் பயிற்சி வேணும் போலிருக்கு !!

அகநாழிகை said...

பரிசல், நகைச்சுவைக்கு வேண்டுமானால் இதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த மூன்று கடிதங்களும் உண்மையானவை இல்லை என்பதால் அதோடு என்னால் ஒத்துப் போக முடியவில்லை. மேலும், ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டு விட்டால், பெரிய எழுத்தாளர் என்ற நினைப்பில் கடிதம் வெளியிடுகிறார் பரிசல் என்ற அவப்பெயரையே இது உங்களுக்குத் தரும். ஒவ்வொரு கடிதமும் யாரைக்குறிக்கும் என்பதை நம்மில் பலரும் அறிவார்கள். இது போல ஆயிரம் கடிதங்கள் எழுதலாம். அது சினிமாவில் கதாநாயகன் அநீதியைக் கண்டு கொதித்தெழும்போது, அதைப்பார்த்து திருப்தியுற்று தன்னைத் தேற்றிக்கொள்ளும் பார்வையாளனின் மனநிலையை ஒத்தது. இதையே இந்த பதிவின் வாயிலாக உங்க்ள் வாசகர்களாகிய எங்களுக்கு நீங்கள் தந்திருக்கிறீர்கள் என கருதுகிறேன். இது என்னுடைய கருத்து மட்டுமே. இதற்கு மாற்றுக்கருத்துகள் இருக்கலாம். நீங்கள் எழுதியது சரிதான் என வலுவான நீரூபணம் செய்தால் மாற்றுக்கருத்துடன் உடன்படுகிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மனதில் தோன்றியதைச் சொல்லியிருக்கிறேன்.

நட்புடன்,
பொன்.வாசுதேவன்

அகநாழிகை said...

//Cable Sankar said...
நான் எழுதின கடிதத்தை ஏன் போடலை..?//

ஆம்மா... வெளியிட்டுட்டாலும்...

கேபிள், எழுத்தாளர் ஆனதிலயிருந்து ரொம்பதான் பண்றீங்க.

அகநாழிகை said...

பரிசல்,
முக்கியமான விஷயம்..
நான் முதலில் பதிவை மட்டுமே படித்தேன். பின்னூட்டம் போட்டு விட்டேன். பெரும்பாலும் இப்படித்தான். இப்போதுதான் உங்கள் பதிவிற்கான பின்னூட்டங்களை வாசித்தேன். பலரும் தெரிவித்த கருத்துகளையே நானும் தெரிவித்திருக்கிறேன்.

- பொன்.வாசுதேவன்

Ashok D said...

மூன்றாவது கடிதம் எனக்கு பிடிக்கல

Ashok D said...

அதிலிருக்கும் தனி மனித கிண்டல் ஒரு காரணம்

கார்க்கிபவா said...

ஆஹா....

ஏம்ப்பா.. லேபிளாச்சும் மொக்கைன்னு வச்சிருக்க கூடாதா? பதிப்பாளரே டென்ஷன் ஆயிட்டாரே

தலைப்பு இப்படி வச்சிருந்தா பிரச்சினையே இல்ல

மூன்று கடி’தங்கள்

AvizhdamDesigns said...

ஐயா.. அம்மா... இன்னும் யாரவது வணக்கம் வாங்கதவங்க இருந்தீங்கன்னா
வந்து வணக்கம் வாங்கிக்கங்க.. அப்புறம் கபாலி வணக்கம் வைக்கலன்னு
சொல்லக்கூடாது....

கண்ணா.. said...

தல நகைச்சுவை, மொக்கைன்னு லேபில் போடு தல...

இதையும் சீரியஸா எடுத்துகிட்டு நிறைய பேர் உணர்ச்சி வசப்படுறாய்ங்க...

ஏன் கேபிளின் கடிதத்தை வெளியிடவில்லை..??!!!!

:))

Anbu said...

Raittu..

அருவி said...

புதிதாக பிளாக் எழுத தொடங்கியுள்ளேன். எனது முதல் பின்னூட்டம் இது.

கௌதமன் said...

ஐடியா ஐந்து - படித்து, வாய் விட்டுச் சிரித்தேன். நன்றி.

திருவாரூர் சரவணா said...

பரிசல் அண்ணே...உங்க புத்தகத்த படிச்ச யாரோதான் அதுல தான் ஒண்ணும் இல்ல...உங்க.......... எதாச்சும் இருக்கான்னு பார்க்க முயற்சி பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.புத்தகம் படிச்ச பலரோட கொலை வெறி அடங்குற வரைக்கும் காரை பத்திரமா பார்த்துக்குங்க...

அப்புறம் ஒரு விஷயம்....எனக்கு நாலுவயசுலையே அஞ்சு தையல் போடுற அளவுக்கு கிழிச்சுகிட்டு நின்னேன் தெரியுமா? உங்க திறமைக்கு பத்து தையல் பத்தாதே....

சீக்கிரம் தையல் நூலுக்கு விடுதலை கொடுங்கன்னே...அதுவும் பாவம்தானே...ஒண்ணுமில்லாத இடத்துல எவ்வளவு நாள்தான் இருக்கும்.?

பரிசல்காரன் said...

//ஆனால் இந்த மூன்று கடிதங்களும் உண்மையானவை இல்லை என்பதால் //


கற்பூரம் அடித்து சத்தியம் செய்யவா?

உண்மையாய் எனக்கு வந்த கடிதங்கள்தான் இவை என்று?

எல்லாருடைய பின்னூட்டத்தையும் படித்த நீங்கள் என் விளக்கத்தை மட்டும் சாய்ஸில் விட்டுவிட்டீர்களா?

இது வெறும் மொக்கை சார். நீங்க கோவப்படற அளவுக்கு வொர்த் இல்ல!

பாபு said...

//இதையும் சீரியஸா எடுத்துகிட்டு நிறைய பேர் உணர்ச்சி வசப்படுறாய்ங்க...
//

repeattu

Aranga said...

நீங்க பெரிய வாசகர்தான் பரிசல் :)