Monday, March 8, 2010

அவியல் 08.03.2010

முதல்வருக்கு பாராட்டு விழா நடந்துகொண்டிருந்தது. தம்பி கிரேஸி கிரி ‘யாருண்ணா தமன்னா?’ என்று கேட்டான். ‘என்னடா.. தமன்னாவைத் தெரியலங்கற?’ என்றேன். ‘நான் வேட்டைக்காரன் பார்க்கல’ என்றான்.

அனுஷ்காவையும் தெரியாது போல அவனுக்கு.

****************************************

தோசை செய்யவா.. உப்புமாவா என்று கேட்டார் மனைவி.

மனைவி செய்யும் தோசை அவ்வளவு பிடிக்கும். இருந்தாலும் ‘உப்புமா’ என்றேன்.

“ஏன்.. அதிசயமா உப்புமா-ங்கறீங்க? எனக்கு வேலை கம்மியா ஆகும்னா?” என்றார்.

“அதுவும் ஒரு காரணம். இன்னொண்ணு அதோட முதல் & கடைசி எழுத்துகள்” என்றேன்.

அன்னைலேர்ந்து நாலு நாளைக்கு டெய்லி உப்புமாதான்!

************************************

கிரேஸிகிரியின் அண்ணன் மகேஷுக்கு ஒரு சந்தேகம் வந்ததாகச் சொன்னான் கிரி. தன்னம்பிக்கையை அதிகப்படுத்த எத்தனையோ புக்ஸ் வருதுல்ல... அவரோட ஃப்ரெண்ட் ஒருத்தர் ஓவர் தன்னம்பிக்கைல ஆடிகிட்டிருக்காராம். சொன்னாலும் கேட்கறதில்லையாம். அந்த மாதிரி ஓவரா இருக்கறவங்களுக்கு அதைக் குறைக்க ஏதாவது புக்ஸ் இருக்கான்னு கேட்டாரு.

தெரியலயேப்பா-ன்னு சொன்னேன்.

****************************************

நண்பரின் நண்பர் ஒருவர் மனைவிக்கு நகை வாங்கியிருக்கிறார். நேரடியாக மனைவியிடம் கொடுக்காமல், தனது அம்மாவிடம் நகையைக் காட்டியிருக்கிறார்.

“எவ்ளோடா?” - அம்மா

“நாப்பத்தஞ்சு ரூவா ஆச்சும்மா”

“ஏண்டா இதப் போய் வாங்கின? நம்ம கணேசன் கடைல ஆயிரத்து நூறுரூவாக்கு ஒரு செய்ன் பார்த்தேன். ஆறு மாசத்துக்கு கறுக்காது. இது ரெண்டே மாசத்துல பல்ல இளிச்சுடுமேடா”

“ஐயோ.. அம்மா... நாப்பத்தஞ்சுன்னா நாப்பத்தஞ்சாயிரம்மா. சுத்தத் தங்கம்மா”

சடாரென நகையை டேபிள் மேல் வைத்துவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாராம் அம்மா!

************************************

நேற்றைக்கு விஜய் டிவி நீயாநானாவில் கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள் தத்தம் கணவர்களை வாங்கு வாங்கு என வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதுவும் 9000 சம்பாதிக்கும் ஒரு மனைவி, தன் 8000 சம்பாதிக்கும் கணவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தபோது காமராமேன் கருமமே கண்ணாக அந்தக் கணவனின் முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தார். அவர் கொஞ்ச நேரம் பேந்தப் பேந்த முழித்துவிட்டு ‘ஈகோதான் சார். சட்னு ஏத்துக்க முடியல. மாறறதுக்கு டைம் வேணும்’ என்றார்.

முழுவதும் பார்க்கவில்லை. என் வீட்டில் மான்குட்டீஸும், மயிலும் சண்டைபோட இடையிடையேதான் பார்த்தேன். இருந்தாலும் அந்த நிகழ்ச்சி ஒளி/ஒலிப்பதிவு செய்யப்பட்ட பின் தம்பதியினர் வீட்டுக்குச் செல்வதையும், வீட்டில் என்ன ஆச்சோ என்பதையும் நினைக்க பதைபதைத்தது.

ஒன்றுமாகாமல், சரவணபவனில் ரோஸ்ட், காஃபி சாப்பிட்டுவிட்டு ஜாலியாகப் பேசிக் கொண்டே போன தம்பதிகள் புண்யாத்மாக்கள்!

**********************************************

கலைஞர் டிவியில் திங்கள்-டூ வியாழன் இரவு 10 மணிக்கு விசாரணை தொடர் தவறாமல் பார்க்கிறேன். ராஜேஷ்குமார்! வாரம் ஒரு கதை.




9.30க்கு சன் டிவியின் ‘செல்லமே’வில் ராதிகாவை வீட்டை விட்டுத் துரத்திவிட்டு, 10 மணிக்கு கலைஞர் டிவியில் வந்து கலக்கும் சாக்‌ஷிசிவா, விவேக் கதாபாத்திரத்துக்கு கனகச்சிதம்! (கொஞ்சம் கனம் - ஆனாலும் கச்சிதம்!). எல்லா சீரியலிலும் முக்கியக் கதாபாத்திரத்திற்குக் கணவராய் வந்து கொண்டிருக்கிறார். நிறைய பெண் ரசிகர்களை சம்பாதித்திருப்பார். அதனால்தானோ என்னவோ, சென்ற வாரம் விஜய் டிவியில் நம்ம வீட்டுக் கல்யாணம் நிகழ்ச்சியில் இவரது திருமணத்தை ஒளிபரப்பி, தன்னைக் காத்துக் கொண்டார்!

பேசியதில் நிறைய பேருக்கு ராஜேஷ்குமாரின் இந்தத் தொடர் பற்றித் தெரியவில்லை என்பதால், இந்த வெளம்பரம்!

*****************************************************

கொஞ்சம் ட்விட்டர் அப்டேட்ஸ்:-


ஸ்கூலிலிருந்து குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வரும்போது மறக்காமல் டிவியில் சன் நியூஸை Child Lock செய்துவிட்டு வந்தேன். #நித்யானந்தபயம்


மறுபடியும் கலைஞருக்கு விழாவாம். எதற்கு என்று கேட்டேன்: கலைஞர் டிவிக்கு அடுத்த மாசம் ரெண்டு சண்டேக்கு ப்ரோக்ராம் எதும் கிடைக்கலையாம்!

இன்றைக்கு பின் தேதியிட்ட காசோலை ஒன்றைக் கொடுத்தால் அதை முன் தேதியிடப்பட்ட காசோலை என்று ஏன் சொல்கிறார்கள்? #டவுட்டு


ஆஃபீஸ் வந்தவுடன் ஒரு நண்பர் ‘நான் வந்த பஸ் செம ஸ்பீடு. எங்கயுமே நிக்கல’ என்றார். குதிக்கும்போது அடிபடலையா என்றேன். அவருக்குப் புரியவில்லை.


//செம்மொழி மாநாட்டை ஒட்டி ஒரு மலர் வெளியிடுகிறார்கள். // ஒட்டி விட்டா எப்படிப் படிப்பாங்க? #லொள்ஸ்


ஷாரூக்கான் My Name Is Khan என்பதற்கு பதிலாக My Name Is Ram என்று வைத்திருந்தால் ‘மோர் உதைக்கறே’ என்ன பண்ணிருப்பார்?


விஜய் டிவில நடந்துட்டே பேசற கோபிநாத் ஒரு நிகழ்ச்சில மட்டும் நின்னுகிட்டு பேசறாரு.. ஏன்னு பார்த்தேன்.. நிகழ்ச்சி பேரு ‘நடந்தது என்ன?’வாம்..


பலருடைய பதிவுகளைப் படிக்கும்போதுதான் மௌஸில் ஸ்க்ரோல் பட்டன் வைத்தவனைப் பாராட்டத் தோன்றுகிறது! #வாய்க்கொழுப்பு


நண்பரின் ப்ரொஃபைலில் Business என்றிருந்தது. என்ன பிஸினஸ் என்று கேட்டதுக்கு மெட்ரிக் பள்ளி வைத்திருப்பதாய் சொன்னார். வருத்தமாக இருக்கிறது.


முன் செல்லும் பைக்கின் பின்னிருக்கும் ஃபிகரை ரசிக்கும்போதுதான், என் மனைவியுடன் செல்கையில் அவர் வேகமாப் போங்க என்பதன் அர்த்தம் புரிகிறது


KINGSXI PUNJABஐ HEROHONDA வாங்கியாச்சு. மொதல்ல அதை PREETY ZINTA வெச்சிருந்தாங்க என்றான் நண்பன். எனக்கு கரகாட்டக்காரன் நினைவுக்கு வந்தது.

*****************************************

மிக ரசித்த எஸ்ஸெம்மெஸ்:-

ஏதாவது தப்புதண்டா செய்கிறீர்கள் என்றால் சச்சின் விளையாடும்போது அதைச் செய்யுங்கள். அந்த நேரத்தில்தான் எதையும் கவனிக்காமல் கடவுள் மேட்ச் பார்த்துக் கொண்டிருப்பார்.

.

மகளிர்க்கு மகளிர் தின வாழ்த்துகள். ஆடவர்க்கு, மகளிரை வாழ்த்தியமைக்கு நன்றிகள்.


.

62 comments:

☼ வெயிலான் said...

அவியல்ல தொலைக்காட்சி வாடை அதிகம்.

ப்ரியமுடன் வசந்த் said...

உப்புமா மேட்டர் செம்ம...

உங்களின் இந்த பதிவுக்கு அண்ணியின் கமெண்ட் என்ன?

ரிஷி said...

உப்புமா சூப்பர் மா!!

அவியல் அட்டகாசம் !!

Vijayashankar said...

டிவி ஜாஸ்தி பார்க்குறீங்க போல இருக்கு. அடுத்தது என்ன? தொடர் எழுதறீங்களா?

கார்க்கிபவா said...

//அன்னைலேர்ந்து நாலு நாளைக்கு டெய்லி உப்புமாதா/\\

அப்பவாது உங்க ஒல்லி உடம்பு உப்புமான்னு பார்த்திருப்பாங்க

Santhappanசாந்தப்பன் said...

அண்ணே, கலக்கல்!

ஒவரா டிவி பாக்குறீங்க!

"ந‌டந்த‌து என்ன.." செம‌ ந‌க்க‌ல்

gulf-tamilan said...

அவியல் நல்லாயிருக்கு!!!

Unknown said...

//அன்னைலேர்ந்து நாலு நாளைக்கு டெய்லி உப்புமாதான்!
//

சொசெசூ

//சடாரென நகையை டேபிள் மேல் வைத்துவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாராம் அம்மா!//

இது சொந்த சரக்குன்னு நினைக்கிறேன். பொதுவாக பெண்கள் ஒரு நகையைப் பார்த்தாலே அது தங்கமா கவரிங்கா என்று கண்டுபிடித்துவிடுவார்கள்.

Unknown said...

//அப்பவாது உங்க ஒல்லி உடம்பு உப்புமான்னு பார்த்திருப்பாங்க//

ROTFL :-)))))))))))))))))

அகல்விளக்கு said...

//மோர் உதைக்கறே//

சூப்பரு...

Balakumar Vijayaraman said...

முதல் பத்தியும் அசத்தல் :)

அப்புறம் ட்விட்டர் அப்டேட்ஸில் #நித்யகானங்கள் முழுதையும் போடாம விட்டீங்களெ, தப்பிச்சோம். (இதுக்கும் ஒரு சிரிப்பான்)

AvizhdamDesigns said...

அனைத்துமே மிக வித்தியாசமாக இருந்தது...

கடந்த ஆண்டு மகளிர் தினத்தை,
தங்களின் இல்லத்தில் கொண்டாடியதை
நினைவு கூர்கிறேன்...!

மகளிர் அனைவருக்கும்
" இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் "

AvizhdamDesigns said...

"ஸ்கூலிலிருந்து குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வரும்போது மறக்காமல் டிவியில் சன் நியூஸை Child Lock செய்துவிட்டு வந்தேன்.
#நித்யானந்தபயம் "
.
.
.
"சன் நியூஸ்" மட்டுமல்ல... இன்றைய காலகட்டத்தில் பல சேனல்களை நாம் மிக கவனமாக பார்த்த பின்புதான்,
சிறு பிள்ளைகளுக்கு
அவற்றை அனுமதிக்க வேண்டி இருக்கிறது...

இதுபோன்ற நிகழ்வுகள் தொலைகாட்சியில் அடிக்கடி காண்பிக்கப்படும் போது,
அதை குழந்தைகளுக்கு தெரியாமல் மறைக்க,
மிக மிக சிரமப்பட
வேண்டியதாயிருக்கிறது.


இன்றைய காலகட்டத்தில் தொலைகாட்சி குறித்த விஷயத்தில்
பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய ஒன்றாகும்...

Unknown said...

ரசித்தேன்.

ஷர்புதீன் said...

:)

பரிசல்காரன் said...

@ வெயிலான்

ஆக்ஸீடெண்ட் ஆகி ஒரு வாரம்பூரா வுட்ல படுத்துட்டு டீவி பார்க்கறதத்தான பாஸ் பண்ணினோம்?

@ ப்ரிய வசந்த்

இதக் காமிச்சு வேற அடிவாங்கணுமா?

நன்றி ரிஷி

விஜய்ஷங்கர்

வெயிலானுக்கான பதிலைப் பார்க்கவும்.

@ கார்க்கி

ஏறக்குறைய இதே மாதிரி ஒரு வரி சேர்த்து டிலீட் பண்ணினேன். ஆனா அதவிட இது சூப்பர்.

@ பிள்ளையாண்டான்

//ஒவரா டிவி பாக்குறீங்க//

க்ரிக்கெட் பார்க்கறதச் சொல்றீங்களோ? அதத்தான் ‘ஓவரா’ பார்ப்பேன்!

நன்றி கல்ஃப் தமிழன் (அதை ஏன் ஆங்கிலத்துல....?)

@ கேவிஆர்

//இது சொந்த சரக்குன்னு நினைக்கிறேன். //

இல்ல பாஸ். என் நண்பர் சௌந்தருக்கு நண்பரான சுந்தர் என்பவரின் அண்ணன் கிரி வீட்டில் நடந்தது இது. கிரி வொர்க்‌ஷாப் மெக்கானிக்.(இனிமே யாராவது பேசினா/சொன்னா ரெகார்ட் பண்ணிக்கணும் போல..)

@ அகல்விளக்கு

நன்றி! (அத எங்க படிச்சீங்க??)

@ வி.பாலகுமார்

ஹிஹிஹி..

@ தேவபிரபு

நன்றி!!

பரிசல்காரன் said...

நன்றி செல்வராஜ் ஜெகதீசன் & ஷர்புதீன்.

ராம்ஜி_யாஹூ said...

முன் பே தேதியிட்ட காசோலை
The correct word for PDC (post dated cheque)

its not mun its Munbe.

கண்ணா.. said...

//முன் செல்லும் பைக்கின் பின்னிருக்கும் ஃபிகரை ரசிக்கும்போதுதான், என் மனைவியுடன் செல்கையில் அவர் வேகமாப் போங்க என்பதன் அர்த்தம் புரிகிறது
//


அருமை... ரசித்தேன்....

:))

பரிசல்காரன் said...

@ ராம்ஜி

அருமை. நன்றி. இதற்கு பதில் சொல்வதற்கென்றே ‘ தமிழில் டைப்ப வசதியில்லாத போதும் கட்பேஸ்ட்டி என் ஐயம் தெளிவித்தமைக்கு கைகுலுக்கலோடு என் அன்பு!

நன்றி கண்ணா!

அத்திரி said...

இதுக்குத்தாம்ணே கொஞ்சம் வாய அடக்கனும்றது,....ஓகே உப்புமா சாப்பிட்டாவது உங்க உடம்ப்பு தேறுதான்னு பாப்போம்

Indian said...

//நண்பரின் ப்ரொஃபைலில் Business என்றிருந்தது. என்ன பிஸினஸ் என்று கேட்டதுக்கு மெட்ரிக் பள்ளி வைத்திருப்பதாய் சொன்னார். வருத்தமாக இருக்கிறது.//

I did a back-of-the-envelope calculation on knowing my nephew's **pre-K.G** admission (Rs 20,000) and term fees (Rs 3,200).

If you run a school upto 10th standard, you may get a monthly profit of Rs 5,00,000 (term fees + bus fees + this/that fees - teachers' salary - admin staff salary - bus fuel - other expenses) besides yearly profit of Rs 40,00,000 (building donation fund).

This makes a tidy sum of Rs One Crore per year(mostly unaccounted I suppose).

No wonder your friend treat it as a "business".

Methinks, should I stay back in my IT profession or quit the job and start a "matriculation/convent" school.

Indian said...

//admission (Rs 20,000) //

It is un-receipted "building donation" fund.

பரிசல்காரன் said...

@ Indian

கசக்கும் உண்மை.

இன்று காலை என் மகளுக்கு term fees கட்டப்போனேன். நான் போனபிறகுதான், அலுவலர் வந்தார். மாணவர்கள் சிலரும் பணம் கட்ட வந்திருந்ததால், “அவர்களிடம் முதலில் வாங்கிவிட்டு உங்களிடம் வாங்குகிறேன். அவர்கள் க்ளாஸுக்குப் போக வேண்டுமல்லவா?” என்றார். சரி என்றேன்.

நான் காத்திருந்த இருவது நிமிஷத்தில் அவர் எழுதி வாங்கிக் கொண்டது 49500. (மெனக்கெட்டுக் கணக்குப் போட்டேன்)

சொல்லுங்க.. எப்ப ஆரம்பிக்கலாம்?

பரிசல்காரன் said...

@ அத்திரி

உப்புமா எனக்கு நிஜமாவே பிடிக்கும்ணே.. என் ஃப்ரெண்ட் ஒருத்தன் 20 வருஷமா காலைல உப்புமா+தயிர்தான்!

Venkat M said...

//விஜய் டிவில நடந்துட்டே பேசற கோபிநாத் ஒரு நிகழ்ச்சில மட்டும் நின்னுகிட்டு பேசறாரு.. ஏன்னு பார்த்தேன்.. நிகழ்ச்சி பேரு ‘நடந்தது என்ன?’வாம்..//

Nice....

//ஸ்கூலிலிருந்து குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வரும்போது மறக்காமல் டிவியில் சன் நியூஸை Child Lock செய்துவிட்டு வந்தேன். #நித்யானந்தபயம்.//

No chance for us... always dominated by my kid... either POGO or CHUTTI TV.

Unknown said...

உங்கள் பதிவுகளை கவனித்து வருகிறேன். தற்புகழ்ச்சி அதிகமாக இருக்கிறது உங்களிடம். உங்களுக்கே புரியும் என்று நினைக்கிறேன்.

Unknown said...

//பரிசல்காரன்
8 March 2010 7:01 PM
@ Indian

கசக்கும் உண்மை.

இன்று காலை என் மகளுக்கு term fees கட்டப்போனேன். நான் போனபிறகுதான், அலுவலர் வந்தார். மாணவர்கள் சிலரும் பணம் கட்ட வந்திருந்ததால், “அவர்களிடம் முதலில் வாங்கிவிட்டு உங்களிடம் வாங்குகிறேன். அவர்கள் க்ளாஸுக்குப் போக வேண்டுமல்லவா?” என்றார். சரி என்றேன்.

நான் காத்திருந்த இருவது நிமிஷத்தில் அவர் எழுதி வாங்கிக் கொண்டது 49500. (மெனக்கெட்டுக் கணக்குப் போட்டேன்)

சொல்லுங்க.. எப்ப ஆரம்பிக்கலாம்?
//

பாஸ், நானும் நானும்...

அமெரிக்க முறைக் கல்வி அப்பிடின்னு விளம்பரம் போட்டுடலாம்..

கதிரவன் said...

‘மோர் உதைக்கறே’ :-) மும்பைல இருந்து ஆட்டோ வரப்போகுதுங்க

ny said...
This comment has been removed by the author.
ny said...

twitter matters tasty... (uff.. 7 't's :)

பரிசல்காரன் said...

@ Venkat M

அதையெல்லாம் ச்சைல்ட் லாக் பண்ணா நம்மளை ஒதுக்கி வெச்சுடுவாங்க பாஸ்!

@ Hamitha

// உங்கள் பதிவுகளை கவனித்து வருகிறேன். தற்புகழ்ச்சி அதிகமாக இருக்கிறது உங்களிடம். உங்களுக்கே புரியும் என்று நினைக்கிறேன்.//

நமீதாவோ என்று கொஞ்சம் சந்தோஷப்பட்டுவிட்டேன். பார்த்தால் ப்ரொஃபைலே இல்லாத ஆசாமி.

எதைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் கவலையில்லை. எனக்கு தற்புகழ்ச்சி இல்லையென்று சொல்லவில்லை. அதே சமயம் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பெயர்களில் வராமல், உங்களை அறிவித்துக் கொண்டு வந்தால் மகிழ்வேன். இல்லையென்றால் புறந்தள்ளுவதைத் தவிர No way boss!

Btw, ஒரு வேண்டுகோள். என் பதிவுகளை கவனிப்பதை விடுத்து உருப்படியாக வேறு ஏதேனும் செய்யுங்கள் ஸ்வாமி!

@ முகிலன்

பார்ட்னர் நெ.3! சீக்கிரமே ஆரம்பிச்சுடலாம் போல!

@ கதிரவன்

கண்டுபிடிச்சுடுவாங்களா பாஸ்? கொஞ்சம் உதறலாத்தான் இருக்கு..

@ kartin

8! (Incl. ur name!)

புலவன் புலிகேசி said...

//அனுஷ்காவையும் தெரியாது போல அவனுக்கு.
//

தம்பிக்கு அனுஷ்கா செவ்வாய் கிரக ரசிகர் மன்றம் சார்பில் எதிர்ப்புகளைத் தெரிவிக்கிறோம்..

செந்தில் நாதன் Senthil Nathan said...

//ஒன்றுமாகாமல், சரவணபவனில் ரோஸ்ட், காஃபி சாப்பிட்டுவிட்டு ஜாலியாகப் பேசிக் கொண்டே போன தம்பதிகள் புண்யாத்மாக்கள்!
//

நிறைய பேர் இத தான் பண்ணிருப்பாங்கனு நினைகிறேன்...

எல்லாமே சூப்பர்...

பரிசல்காரன் said...

@ புலவன் புலிகேசி

அனுஷ்காவுக்கு நிலாவுல மன்றம் வைக்காம, செவ்வாய்ல ஏன் வெச்சீங்கன்னு கேட்கலாம்னு நெனைச்சேன். நிலாவுக்கே நிலாவுல மன்றம் வைக்கறதாங்கறதாலயும், அவங்க செவ்வாய் உங்களுக்குப் பிடிச்சதாலயும்னு நானே பதில் சொல்லிகிட்டேன்!

@ செந்தில்நாதன்

ஆமெனும் பட்சத்தில் மகிழ்ச்சி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அட்டகாசம்

பரிசல்காரன் said...

டி வி ராதாகிருஷணன்

அப்பா... இந்த கமெண்ட் கார்க்கிக்குப் பிடிக்காது... ஏன்னு சொல்லுங்க...

Unknown said...

ப்ரொஃபைல் இருப்பது முக்கியமில்லை. எனக்கு ப்ரொஃபைலே கிடையாது. கருத்து தான் முக்கியம். தற்புகழ்ச்சி பதிவர் என்று உங்களை மட்டும் சொல்லவில்லை. அநேக பதிவர்கள் அப்படி இருக்கிறார்கள். அந்த அநேக பதிவர்களில் உங்களுக்கு தற்புகழ்ச்சி கொஞ்சம் அதிகம். அவ்வளவு தான். உங்களது பதிவுகளை ஒரு முறைக்கு இருமுறை படித்து பாருகள். உங்களுக்கே புரியும். நல்லதுக்கு தான் சொல்கிறேன். புரிந்தால் நலம். புரியாவிட்டால் எனக்கொன்றுமில்லை.

புறந்தள்ளுவதும் அனுமதிப்பதும் உங்கள் இஷ்டம். இது உங்கள் பதிவு. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். No Tension, Relax.

திருவாரூர் சரவணா said...

பத்து வருஷம் ஒரு சீரியலை எடுத்து அதை அங்க ஆரம்பிச்சோம், எந்த வழியா போனோம்னு தெரியாம தயாரிப்பாளரும் ரசிகர்களும் (?!) குழம்புறதுதான் வழக்கம். ஆனா நாளே நாளுக்குள்ள ஒரு கதை ஆரம்பிச்சு முடியுறது மெகா சீரியல் ஒப்பாரி ரசிகைகளுக்கு வருத்தமாத்தான் இருக்கும். ஆனா இதுதான் பாஸ் நம்ம நேரத்தை வீணடிக்காத சீரியல். ஓரளவு அறிவியல் உண்மைகளையும் அவர் நாவல் மாதிரியே சீரியலும் விளக்குது. ஆனா விஷ்ணுவோட லூட்டி ராஜேஷ்குமாரோட எழுத்தை விட சீரியல்ல செம காமெடியா இருக்கு.

சில நாட்களுக்கு முன்னால இது பத்தி ஒரு பதிவு போட்டேன். ஆனா என் பிளாக்ல ரெண்டு பேர்தான் படிச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.


http://ilaiyabharatham.blogspot.com/2010/02/blog-post_14.html

பரிசல்காரன் said...

@ Hamitha

உங்களுக்கு என்ன விளக்கம் சொல்வதென்று தெரியவில்லை. உண்மையான அக்கறை என்றால் நன்றி.

//உங்களது பதிவுகளை ஒரு முறைக்கு இருமுறை படித்து பாருகள். உங்களுக்கே புரியும்.//

எனக்கே புரியும்ன்னா, புரியற அளவு மண்டைல மசாலா இருக்குல்ல. அப்ப நான் பெருமைப்பட்டுக்கலாம்லன்னு தோணும்... அதுனால புரியவில்லை என்றே சொல்லிக் கொள்கிறேன். நிஜமாகவே புரியவில்லை என்பது பரங்கிமலை ஜோதியம்மன் மீது சத்தியம்.

நிஜமாகவே டென்ஷனெல்லாம் ஆகவில்லை. அதைவிடவும் பொறுப்பாக மறுபடி வந்து எனக்காக அட்வைஸியிருக்கும் உங்களின் தோள் மீது கைபோட்டு நடந்துபோய் ஒரு காபி சாப்பிட்டு வரலாம் என்று தோன்றுகிறது. (இதையும் திமிராச் சொல்றான் என்று எண்ணினீர்களென்றால் அதற்கும் சாரி!)

@ திருவாரூர் சரவணன்

ஏழு பேர் நிச்சயமா படிச்சிருக்காங்க பாஸ்.. நல்லா எழுதிருக்கீங்க...

Unknown said...

புறந்தள்ளாமல் அனுமதித்ததற்கு மிக்க நன்றி. புத்திமதி என்று தவறாக நினைக்க வேண்டாம். நல்லெண்ணத்தில் தான் கூறினேன்.

இன்னொன்று. கருத்தை கூறத்தானே இந்த Comments Section வைத்துள்ளீர்கள். Positive Feedbacks மட்டும் தான் எதிர்பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், உங்கள் கவிதை பற்றி நான் கூறிய கருத்துகளை அகற்றிவிட்டீர்களே. நான் தவறாகவோ, ஆபாசமாகவோ, திட்டியோ எந்த கருத்தையும் கூறவில்லையே. உங்கள் கவிதை பற்றிய என்னுடைய நேர்மையான கருத்தை தானே கூறினேன். உங்களை பற்றி உயர்வாக மட்டும் தான் கருத்து கூற வேண்டுமென்றால் Comments Section அருகில் Positive Feedbacks only என்று குறிப்பிட வேண்டியதானே?

உங்கள் வலைத்தளம் மேன்மேலும் புகழ்பெற வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் said...

@ Hamitha

நன்றிக்கு நன்றி. புத்திமதியா இருந்தாலும் இந்த தில்லுதுர ஏத்துக்குவான் என்பதை பணிவன்புடன் சிரம்தாழ்த்தி கரம்கூப்பிச் சொல்லிக் கொள்கிறேன். (எதப் பேசினாலும் தலைக்கனம்பீங்களொன்னு பயம்ம்ம்மா இருக்கு!)

கவிதை பற்றிய கமெண்டை நீக்கியதற்கு நேர்மையான மற்றொரு காரணம் விகடனின் தரத்தை குறை கூறியிருந்ததுதான். என் பக்கத்தில் வேறோருவரைப் பற்றி அவதூறாக எழுதியதை நான் அனுமதிப்பது எனக்கு சரியாகப் படவில்லை.

மேலும் கார்க்கியின் பதிவொன்றில் நான் போகிற போக்கில் போட்ட கமெண்டை, ‘ஏன் உங்களுக்கு ஈகோவா பரிசல்?’ என்று தேவையே இல்லாமல் என்னைச் சீண்டினீர்கள். அதை என்னவென்று சொல்வதென்று சிரித்துவிட்டுப் போய்விட்டேன். எனக்கும் கார்க்கிக்கும் ஈகோ என்பதை புழு பூச்சி கூட பேசாது. எங்களுக்குள்ளான நட்பை அறிந்தால்.

ஆழமாக யோசித்தால் என்மீது உங்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு ஏதோ உங்கள் ஆழ்மனதில் மண்டிக்கிடக்கிறது.

ஒரு காஃபியோ, பீரோ சாப்பிட்டுக் கொண்டே பேசினால் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.

எப்போது வெளிச்சத்துக்கு வருவீர்களோ, அப்போது அழையுங்கள்... வருகிறேன்!

பரிசல்காரன் said...

@ Hamitha

அவசர வேலையாக பெங்களூர் செல்கிறேன். இனி உங்கள் பின்னூட்டங்களுக்கு வெள்ளிதான் பதில் சொல்ல இயலுமென நினைக்கிறேன். மன்னிக்கவும்.

Unknown said...

விகடனைப்பற்றி நான் எதுவும் கூறவில்லையே பரிசல். இது கவிதையா என்று தானே கேட்டிருந்தேன். நன்றாக சப்பை கட்டுகிறீர்கள்.

உங்களுக்கு கார்க்கியுடன் ஈகோ என்று நான் சொல்லவே இல்லை பரிசல். தான் எழுதிய ஒன்றை மற்றவர் உபயோகப்படுத்தும்போது அதை பெருந்தன்மையாக விட்டுவிட்டு போகாமல், அது என்னுடையது என்று பறைசாற்றுவதையே ஈகோ என்று சொன்னேன். உங்களுக்கு கார்க்கியிடம் ஈகோ என்று நான் ஏன் சொல்லப்போகிறேன். சரியாக புரியாமல் எழுதி விட்டீர்கள். ஒருவேளை, நீங்கள் புரிந்துகொள்ளும்படி நான் எழுதவில்லை என்று நினைக்கிறேன். மன்னிக்கவும்.

உங்களின் மீதெல்லாம் எனக்கு ஏனுங்க அடிமனசுல வெறுப்பு இருக்க போகுது? காமெடி பண்ணாதீங்க.

என்னையும் மதிச்சி பதில் கூறியமைக்கு மிக்க நன்றி. உங்களின் பயணம் நலமாக அமைய வாழ்த்துக்கள்.

இனி எனக்கெல்லாம் பதில் எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

விக்னேஷ்வரி said...

ட்விட்டர் அப்டேட்ஸ் நல்லாருக்கு.

நர்சிம் said...

என்னப்பா நடக்குது இங்க????

selventhiran said...

ஓவர் தன்னம்பிக்கைல // அதுக்குப் பேரு தலைக்கணம்டே!

அப்புறம் ட்வீட்டர் - நாளுக்கு நாள் உம் நகையுணர்வு அதிகரித்துக்கொண்டே இருக்கிறதய்யா...

Unknown said...

//.. க்ரிக்கெட் பார்க்கறதச் சொல்றீங்களோ? அதத்தான் ‘ஓவரா’ பார்ப்பேன்! ..//

பின்னூட்டதுலயுமா..?? :-)

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

(இது முந்தய இடுகைக்கான பின்னூட்டம்...)

Anonymous said...

அருமை அற்புதம் அட்டகாசம்...வாவ்!

Giri Ramasubramanian said...

அருமை அற்புதம் அட்டகாசம்...வாவ்!

Vidhoosh said...

டீ.வீ. மட்டும்தான் பாக்கிறீங்க போலருக்கு.
அடிபட்டது சரியா போயிடுத்தா..?

அமுதா கிருஷ்ணா said...

namitha-வுக்கும் பரிசலுக்கும் பிரச்சனை...ஓ ஹமிதாவா..சாரி நான் நமீதானு படிச்சுட்டேன்...

பரிசல்காரன் said...

@ விக்னேஸ்வரி,பட்டிக்காட்டான், நர்சிம், வெற்றி, கதிர், அமுதாகிருஷ்ணா, blog. கிரி, விதூஷ்

நன்றி

@ hamitha

’உங்கள் கவிதையை வெளியிட்டதிலிருந்தே விகடனின் தரம் பற்றித் தெரிந்துவிட்டது’ - இதுதான் நீங்கள் சொன்னது. ஸ்க்ரீன்ஷாட்டெல்லாம் இல்லை என்னிடம். ஆகவே நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். சப்பைக் கட்டு கட்ட அவசியமில்லை.

இது சம்பந்தமாக மேல் விளக்கங்களை என் மெயிலுக்கு அனுப்பினால் பேசலாம்.

நாமக்கல் சிபி said...

எலாவற்றிலும் பரிசலின் நளபாகம் தெரிகிறது! அவியல் அருமை!

அருவி said...

உங்களுடைய வலைப்பூ பார்த்தேன். நன்றாக உள்ளது. பிந்தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிரேன். எனது வலைப்புவை பார்த்து கருத்து சொன்னால் மிகவும் மகிழ்வேன்

sweet said...

vettai kaaran entra oscar winning movie-ai vimarsanam panra neenga vinnai thaandi varuvaaya padatthai pannadhadharkku karanam ennavo? mokkai padam entru ninachadhaala???

ilike simbu
madhumidha

கொல்லான் said...

தில்லு தொர,

அவியல் பிரமாதம். அளவான சூட்டுல நல்ல சுவை.

//ஸ்கூலிலிருந்து குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வரும்போது மறக்காமல் டிவியில் சன் நியூஸை Child Lock செய்துவிட்டு வந்தேன். #நித்யானந்தபயம்//

பாம்பின் கால் பாம்பறியும்.

//மோர் உதைக்கறே//

தயிர் குத்துது.

அருவி said...

உங்களை ஒருவர் மளிகைக் கடை வைக்க நினைத்த எலி என்று பகடி செய்திருக்கிறாரே?

Thamira said...

எனக்கும் பிடிச்சது 'உப்புமா'தான். ஏன்னா அதோட சரியான முழு பேர் 'ரவாஉப்புமா'.! ஹிஹி

A Simple Man said...

//நிறைய பேருக்கு ராஜேஷ்குமாரின் இந்தத் தொடர் பற்றித் தெரியவில்லை என்பதால், இந்த வெளம்பரம்!//
Boss, I'm also watching
"Pulan visaranai" reqularly.
pls visit http://iamverysimple.blogspot.com/
for daily predictions of IPL 2010 matches.
Thanks,
ASM

Anonymous said...

//எனக்கும் பிடிச்சது 'உப்புமா'தான். ஏன்னா அதோட சரியான முழு பேர் 'ரவாஉப்புமா'.! ஹிஹி //

ஆதி, இந்த கமெண்ட் சூப்பர்