பெங்களூர் செல்லும்போது சேலத்தில் ஏறிய பெரிய மனிதருக்கு 45 வயதிருக்கலாம். ஏறியதுமே அமைதியாக படுத்துறங்க ஆரம்பித்தார். பெங்களூர் எட்டுவதற்கு அரைமணி நேரம் முன்னதாக எழுந்தவர் பேச்சுக் கொடுத்தார். காஃபி பிஸினஸ் செய்வதாகச் சொன்னார்.
எனக்கு காஃபி என்றால் கொள்ளை இஷ்டம். நடுவில் 2007 பிப்ரவரியிலிருந்து 2009ன் ஏதோ ஒரு மாதம் வரை காஃபி, டீ எதுவுமே சாப்பிடவில்லை. காரணம் ஏதுமில்லை. காஃபி குடிக்கும் பழக்கத்தை என்னால் விட முடியாதோ என்று ஒரு பயம் வந்தபோது நிறுத்தி, அப்படியெல்லாம் இல்லை என்று எனக்கு நானே சமாதானப்படுத்திக் கொள்ள இரண்டரை ஆண்டுகள் ஆனது. மீண்டும் ஆரம்பித்தேன்.
சரி.. சுயபுராணம் போதும். அவர் காஃபி சம்பந்தப்பட்ட தொழில் என்றதும் உற்சாகமாய்ப் பேசினேன். காஃபி பற்றி அவர் சொன்ன சில தகவல்கள்.
இன்ஸ்டண்ட் காஃபி உடம்புக்கு நல்லதே அல்லவாம். ருசியான காஃபி குடிப்பதில் தமிழர்கள் கெட்டிக்காரர்கள். நரசுஸ் ஒரு உதாரணம் என்றார். கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் காஃபி சாப்பிடுங்கள் என்றார். காரணம், காஃபி மிஷன் சூடாக சூடாகத்தான் சுவைமிக்க காஃபி உருவாகும் எனவும், கூட்டம் அதிகமென்றால் மிஷின் இயங்கிக் கொண்டே இருக்கும் எனவும் சொன்னார்.
உலகத்திலேயே இத்தாலிதான் காஃபி பிரியர்களின் சொர்க்கம் என்றார். இத்தாலியில் ஒரு கடைக்கு, கடை திறக்கும்போது சென்றாராம். மிஷினை சூடாக்குவதற்காக 30, 35 காஃபிகளை உருவாக்கி அதை வெறுமனே கொட்டி, பிறகுதான் இவருக்கு காஃபி கொடுத்தார்களாம்.
இத்தாலியின் LAVAZZA காஃபிதான் சுவை மிகுந்தது என்றார். (BARISTA விடம் தான் அதற்கான உரிமம் இருக்கிறது)
கண்டோண்ட்மெண்டில் இறங்கியவருடன் பேச்சுக் கொடுத்தபடியே அவர் வீட்டுக்குப் போய் காஃபி சாப்பிடும் திட்டம் இருந்தது. இறங்கித் திரும்பி ஒரு ஃபிகரைப் பார்க்கும் இடைவெளியில் எஸ்கேப்பாகி விட்டார்.
*************************************************
சீதோஷ்ண நிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரின் உஷ்ணம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. வால்மார்ட், நைகி உட்பட பிரபலமான பல ப்ராண்டுகளின் கூட்டு முயற்சியில் உருவான Environment, Health & Safety Summit 2010 க்கு சென்றிருந்தேன். ‘ஒருமுறை துணியை வாஷிங் மிஷினில் போட்டெடுக்க 65 லிட்டர் தண்ணீர் செலவு செய்கிறீர்கள் தெரியுமா’ என்பது போன்ற பலதும் பேசி எதிர்காலத்தைக் குறித்த பயத்தை விதைத்துக் கொண்டிருந்தனர். ஏதாச்சும் செய்யணுமே என்ற உந்துதல் எல்லாரிடமும் விதைக்கப்பட்டது. மேஜையில் வைக்கப்பட்ட சாக்லெட் பேப்பரை, பிரித்து கவரைக் கீழே போடாமல் சாக்லெட் சாப்பிட்டு, நாசூக்காக கைகள் குலுக்கி, புன்னகைகளைப் பரிமாறிக் கொண்டிருந்த மனிதர்கள் உலகமெங்கிலுமிருந்தும் வந்திருந்தனர். மெய்ல்களில் விரல்கள் மூலம் சந்தித்தவர்களின் முகங்களைப் பார்க்கும் ஆவல் எல்லோரிடமும் இருந்தது. ‘ஓ.. நீங்கதானா அது?’ என்ற குரலை எல்லா பாஷைகளிலும் கேட்க முடிந்தது. இரண்டு நாட்களிலும் எல்லார் குரலிலும் மென்மையும் நளினமும் தவழ்ந்தது.
அங்கு வந்திருந்த நான்கைந்து பேரையாவது, MG ரோடில் ஏதாவது ஒரு பப்பில் சந்திக்க ஆசைப்பட்டேன். முடியவில்லை.
**********************
பட்டிக்காட்டான் என்றெழுதும் திருஞானசம்பந்தம், மற்றும் பதிவுகள் படிக்க மட்டுமே செய்யும் கோபிநாத் இருவரையும் அங்கே சந்தித்தேன். திருவை வலுக்கட்டாயமாக FORUM Shopping Mallக்கு அழைத்துச் செல்லச் சொல்லி வன்முறை செய்தேன். இம்மியளவும் புன்னகை மாறாமல் அழைத்துச் சென்றார். என்னை விட்டுவிட்டு அவர் அறைக்குச் செல்ல நள்ளிரவாவது ஆகியிருக்கும். அடுத்த நாள் அதிகாலை எழுந்து பெங்களூரின் ட்ராஃபிக்கில் ஊர்ந்து அவர் ஆஃபீஸ் செல்ல வேண்டும். பாவம். அன்புதான் மிகப் பெரிய வன்முறை!
அடுத்த நாள் மாட்டியவர் கோபிநாத். தேவனின் மாலதி கதை முதற்கொண்டு வீட்டில் புத்தகங்களாகச் சேர்த்து வைத்திருக்கிறாராம். ‘நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா வீட்டுக்கு வரணும்’ என்றார் என்னைப் பற்றித்தெரியாமல். இலவசப் புத்தகக் கண்காட்சிக்கு போகாமல் இருப்பேனா நான்?
தனது காரில் பெங்களூரை இரண்டே மணிநேரத்தில் சுற்றிக் காட்டினார். வியப்பாக இருந்தது.
இறங்கும்போது, என் புத்தகத்தில் ஆட்டோகிராஃப் கேட்டார். அவர் பாக்கெட்டில் இருந்த பேனாவையே உரிமையோடு எடுத்து கையொப்பமிட்டேன்.
‘நல்லாருக்கே பேனா?’ என்றேன் லவட்டும் நோக்கில்.
‘அது யு.எஸ். போனப்ப ஒரு கொழுப்புல வாங்கினது’ என்றார்.
ரொம்பவும் வெய்ட்டாக இருந்தது. ‘3000 ரூவா இருக்கும்போல’ என்றேன். அதிகமாகவே சொல்லிவைப்போமே என்று.
‘இல்லைங்க.. பதினாலாயிரம்’ என்றார்.
என் வாழ்க்கையில் பதினாலாயிரம் ரூபாய்ப் பேனாவைத் தொட்டு எழுதிய பேறைத் தந்தமைக்கு நன்றி சொல்லி விடைபெற்றேன்.
******************************************
‘என்னங்க செல்வேந்திரன் இப்படி எழுதிட்டாரு’ என்று எனக்கும் ‘நீங்க சொன்னது கரெக்ட் செல்வா.. சரியா எழுதிருக்கீங்க’ என்று செல்வாவுக்கும் ஃபோன் கால்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. அப்படிச் சொல்வது ஒரே ஆட்கள்தானா என்பதை நானும் செல்வாவும் பகிர்ந்து கொள்வதில்லை.
நண்பன் லக்கிலுக்கைத்தான் துணைக்கு அழைக்க வேண்டியிருக்கிறது. இதோ அவர் ஒருமுறை எழுதிய பதிவு:
“ஒரு படைப்பாளிக்கு இருக்கும் மிகப்பெரிய சங்கடம் தன் படைப்பு சரியானதுதான் என்று நிரூபிக்க வேண்டிய நிலையே. யாரும், எதையும், யாருக்காகவும் நிரூபிக்க வேண்டியதில்லை. தன்னுடைய குறிப்பிட்ட ஒரு படைப்பின் நியாயத்தை, பரிணாமத்தை மற்றொருவருக்கு எடுத்துச் சொல்லிக் கொள்ளும் நிலையில் இருக்கும் படைப்பாளி, தனது அடுத்த படைப்புக்கான நேரத்தையும், உழைப்பையும் செலவழிக்கிறான், வீணடிக்கிறான்.
ஆசிரியன் செத்துவிடும் பின்நவீனத்துவ சூழலில் ஒரு படைப்பை வாசகனிடம் வைத்துவிட்டபின், அதை விமர்சிக்கும், நியாயப்படுத்தும் உரிமை வாசகனுக்கே உண்டு. ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு படைப்பாளி வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். இல்லை நானும் வாசக மனோபாவத்தில் என் கருத்துகளை முன்வைக்கிறேன் என்று படைப்பாளி கிளம்பிவிட்டால், அவனது எதிர்கால படைப்புகளை எழுதுவது யார்?
எதையும் நிரூபிக்காமல் சும்மா இருப்பதே சுகம்.”
எழுதியபின் ஆசிரியன் செத்துவிடுகிறான்.. அதுசரி.. உன்னோடதப் படிச்சா வாசகன் சாவறானேய்யா என்று கேட்பீர்களானால்....
ஹி...ஹி...ஹி...
.
34 comments:
தகவல், சந்திப்பு, விளக்கம் :)
வாவ் ...கவிதை அருமைய இருக்கு. உங்களை விட்டால் வேறு யாராலும் இந்த மாதிரி எழுத முடியாது.
டிஸ்கி - பதிவை முழுசா படித்து விட்டேன்
/எழுதியபின் ஆசிரியன் செத்துவிடுகிறான்.. அதுசரி.. உன்னோடதப் படிச்சா வாசகன் சாவறானேய்யா என்று கேட்பீர்களானால்..../
இது சூப்பரு!
sweet..
என்னடா பதிவே காணுமேன்னு காலைலதான் நினைச்சேன்..!
பெங்கள் ஊர் சுத்தலா?
மகிழ்ச்சி!
:)
:)))
book varuvatharkku mube,kanimozi kaiyala vida poren.thamizhachi thaliyila vida poren.. thamiz ilakiya ulagame ennai kondaapothun soldrathu rightu pola.
eennaa, velivanthapiraguthaanee aasiriyan sethu pokiraan
நல்ல எழுத்து நடை.
படிக்கும் ஒவ்வொரு வரியிலும் அடுத்த வரிக்கு படிக்க சுவராசியம் வருகிறது.
செல்வாவை பற்றிய புரிதல் , விமர்சகனின் எழுத்துகளை நண்பரின் எழுத்துக்களாக பார்க்க கூடாது என்ற உங்க நேர்மை பிடித்திருக்கு.
மொத்தத்தில் பரிசல் காரன் -- சுவராசியகாரன்.
வாழ்த்துக்கள்
வந்ததற்கு ப்ரசெண்ட் போட்டுக்கறேன்.
ரூ. 14,000 பேனாவில் கையெழுத்துப் போட்டதற்கு வாழ்த்துகள்.
சிலவற்றின் மதிப்புத்தெரியாமலே நாம் பயன்படுத்துகிறோம். மதிப்பு என்பது அவரவர் பயன்பாட்டைப் பொறுத்து , பல லட்சம் மதிப்பெண் கார்கள் பெட்ரோலுக்கு பயந்து பயன்படுத்தாமலே இருப்பதால் மதிப்பு மிக்கதாக ஆகிவிடுமா?பலர் புதிது அதனால எடுக்காமலே இருக்கேன் என்று கூறுவதை பார்த்திருக்கிறேன். நல்ல பதிவு.திரும்ப திரும்ப உங்கள் பதிவு படிக்கத்தோன்றுகிறது. வாழ்த்துக்கள்
நேர்மை = பரிசல்காரன் னு மறுபடியும் நிரூபித்த நீ(ங்கள்) எனக்கு நண்பனாக இருப்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்...!
படைப்பு வேறு - படைப்பாளி வேறு!
விமர்சகன் வேறு - விமர்சனம் வேறு.!
இது தெளிவாகத் தெரிந்து வாழ்வதால்.. நீ(ங்கள்) நிறைய சாதிப்பாய் நண்பா!
தலைப்பில் ...
காப்பி எப்போதும் போல இப்போதும் பிடிக்கும்.
பெங்களூரு இப்போதும் பிடிக்கும் எப்போதும் போல
செல்வா .... அப்போது பிடித்தது ... இப்போது ...அவருக்கு பெல்டுக்குக் கீழே அடிப்பது பிடித்திருக்கிறது போலும் :(.
Found it way below the belt. But dont feel like commenting further.
அனுஜன்யா
:) அருமை
//
ஆசிரியன் செத்துவிடும் பின்நவீனத்துவ சூழலில் ஒரு படைப்பை வாசகனிடம் வைத்துவிட்டபின், அதை விமர்சிக்கும், நியாயப்படுத்தும் உரிமை வாசகனுக்கே உண்டு. ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு படைப்பாளி வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். இல்லை நானும் வாசக மனோபாவத்தில் என் கருத்துகளை முன்வைக்கிறேன் என்று படைப்பாளி கிளம்பிவிட்டால், அவனது எதிர்கால படைப்புகளை எழுதுவது யார்?
//
இது உண்மைதான். ஆனால் விமர்சனங்கள் என்ற ஒன்று இல்லாவிட்டால், அந்த படைப்பாளியின் அடுத்த படைப்பு எப்படி தன் முதல் படைப்பில் செய்த தவறுகளை களைய இயலும். படைப்பாளி விமர்சகர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதே சமயம், விமர்சனங்களை பாஸிட்டிவாக எடுத்து கொள்வது படைப்பாளியின் இரத்த கொதிப்பிற்கும் அவருடைய அடுத்த படைப்பிற்கும் நல்லது.
Hi KK,
We have LAVAZZA coffee machine in office.
Reply to Selva - Very nice and positive way. Keep it up.
Regards - Venkat M
முதலில், படைப்பை விமர்சிக்கும் உரிமை வாசகனுக்கு உண்டு என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.
அடுத்து,எல்லாக் கலைஞர்களின் எல்லா படைப்புகளும் வானுயரம் எட்டுவதில்லை. (உ.ம் - நடிகர் சிவாஜி)
ஆனால், வானுயரம் எட்டும் படிக்கட்டுத் தொடரில் தன்னுடைய படிக்கட்டு எங்கிருந்தாலும் அது முக்கியத்துவமானது தான் என உணர்ந்து கலைஞர்கள் பெருமை கொள்ளவும் வேண்டும்.
//அனுஜன்யா said...
தலைப்பில் ...
காப்பி எப்போதும் போல இப்போதும் பிடிக்கும்.
பெங்களூரு இப்போதும் பிடிக்கும் எப்போதும் போல
செல்வா .... அப்போது பிடித்தது ... இப்போது ...அவருக்கு பெல்டுக்குக் கீழே அடிப்பது பிடித்திருக்கிறது போலும் :(.
Found it way below the belt. But dont feel like commenting further.
அனுஜன்யா
//
அனுஜம்யா..
முதல் இரண்டு மேட்டரும் நல்லா எழுதி இருக்கீங்க பரிசல்.
//.. திருவை வலுக்கட்டாயமாக ..//
:-)))
nice
காபி - அதுவும் துருக்கிய காபி, ரசித்து குடிக்கலாம்.
படைப்பாளி - விமர்சகன் ....
//தன்னுடைய குறிப்பிட்ட ஒரு படைப்பின் நியாயத்தை, பரிணாமத்தை மற்றொருவருக்கு எடுத்துச் சொல்லிக் கொள்ளும் நிலையில் இருக்கும் படைப்பாளி, தனது அடுத்த படைப்புக்கான நேரத்தையும், உழைப்பையும் செலவழிக்கிறான், வீணடிக்கிறான்.//
கரீக்ட்டு நைனா.....
//அன்புதான் மிகப் பெரிய வன்முறை!//
:-))
இங்க ஒரு படைப்பாளியே செத்துக்கிடக்கிறான். என்ன ஏதுன்னு கேட்க ஒரு நாதியில்லை..
(ஹிஹி.. நேத்து நான் எழுதுன பதிவை கும்முகும்முனு கும்மிட்டாங்க)
காஃபி மிஷன் சூடாக சூடாகத்தான் சுவைமிக்க காஃபி உருவாகும் எனவும், கூட்டம் அதிகமென்றால் மிஷின் இயங்கிக் கொண்டே இருக்கும் எனவும் சொன்னார்.//
சுவையான தகவல்.
14000/- ரூபாயில ஒரு பேனாவா?
அமம்ம்ம்மா !
//எழுதியபின் ஆசிரியன் செத்துவிடுகிறான்.. அதுசரி.. உன்னோடதப் படிச்சா வாசகன் சாவறானேய்யா என்று கேட்பீர்களானால்....
ஹி...ஹி...ஹி...//
:))
..//இங்க ஒரு படைப்பாளியே செத்துக்கிடக்கிறான். என்ன ஏதுன்னு கேட்க ஒரு நாதியில்லை..
(ஹிஹி.. நேத்து நான் எழுதுன பதிவை கும்முகும்முனு கும்மிட்டாங்க)//..
ஏன் நாதி இல்லை நண்பா..?
இதோ நான் கேட்கிறேன்.
என்ன ?
ஏது ??
அதெல்லாம் சரி கேட்ட விஷயம் என்னாச்சு..?
கேபிள் சங்கர்
அரோக்கியமான விவாதத்தின் ரசிகன் என்ற முறையில் செல்வேந்திரனின் இரண்டு பதிவிற்கும் எனது வலைப்பூவில் லிங்க் தத்துள்ளேன்(குவியலில்)
படைப்பாளி அனைத்து வாசகர்களின் கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றாலும், கருத்தில் கொள்ளவில்லை என்றால் படைப்பு திறன் இடம் விட்டு நகராது என்பது என் தாழ்மையான கருத்து!
நான் சொல்ல நினைத்ததை இவர்களே சொல்லி விட்டார்கள்.
செந்தழல் ரவி : sweet..
Venkat M : Reply to Selva - Very nice and positive way. Keep it up.
பிரசன்னா இராசன் : விமர்சனங்களை பாஸிட்டிவாக எடுத்து கொள்வது
காவேரி கணேஷ் : மொத்தத்தில் பரிசல் காரன் -- சுவராசியகாரன்.
very nice...
But what about your Environment, Health & Safety Summit 2010.
we want the resolutions.
we do some good things for our forth coming generations..!
any how nice thought.
/////////உலகத்திலேயே இத்தாலிதான் காஃபி பிரியர்களின் சொர்க்கம் என்றார். இத்தாலியில் ஒரு கடைக்கு, கடை திறக்கும்போது சென்றாராம். மிஷினை சூடாக்குவதற்காக 30, 35 காஃபிகளை உருவாக்கி அதை வெறுமனே கொட்டி, பிறகுதான் இவருக்கு காஃபி கொடுத்தார்களாம்.////////
அப்படியா மேட்டர் .பகிர்வுக்கு நன்றி
பரிசல்,
{ரொம்பவும் வெய்ட்டாக இருந்தது. ‘3000 ரூவா இருக்கும்போல’ என்றேன். அதிகமாகவே சொல்லிவைப்போமே என்று.
‘இல்லைங்க.. பதினாலாயிரம்’ என்றார்.
என் வாழ்க்கையில் பதினாலாயிரம் ரூபாய்ப் பேனாவைத் தொட்டு எழுதிய பேறைத் தந்தமைக்கு நன்றி சொல்லி விடைபெற்றேன்}
மாண்ட் ப்ளாங்க் பேனாக்கள் 2.5(ஆம்,இரண்டரை)லட்சம் ரூபாய் வரை இருக்கின்றன..ஆனா யாரு வாங்குவான்னுதான் தெரியல.
தகவல், சந்திப்பு, விளக்கம் :))
யானும் அவ்வண்ணமே கோரும்..
சென்னை வந்துபோனதை எப்ப எழுதப்போறீரு??
Hi there.
Very nice story. I had a great time with you (hope the feeling is mutual) and look forward to meet you again soon (again hope the feeling is mutual).
Cheers
Gopi
உங்கள் புத்தகத்தை படிக்கவில்லை.. செல்வேந்திரனின் விமர்சனம் படித்தேன். இப்போது உங்களின் பதிலையும் படிக்கிறேன். இந்த உலகில் பின் நவீனத்த்வமும் இருக்கிறது, என்றாலும் எல்லாவற்றிற்கும் அதையே கரணம் சொல்லி தப்பிக்க முடியாது. படைப்பு என்று எழுதும்போது அது சமூகத்திற்காக படைக்கபடுவது, எனவே நீங்கள் எழுதும் எழுத்துகள் ஒவ்வொன்றும் சமூகத்தின் போதுஸ் சொத்துக்களாகின்றன. அந்த நிலையில் உங்கள் எழுத்துகளின் கண்ணியம், உண்மைத்தன்மை ஆகியவை குறித்த விவாதம் எழுவது இயல்பு, அதற்கு பதில் சொல்வது ஒரு படைப்பாளியின்கடமை.
தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருப்பதே ஒரு எழுத்தாளனின் வேலை என்றால், தமிழகத்தில் உள்ள அத்தனை அரசு ஊழியர்களும், கணக்கர்களும் மிகப்பெரிய எழுத்தாளர்களாக இருப்பார்கள். அது சரியானபார்வையில்லை.
எனவே செல்வேந்திரனின் விமர்சனனம் குறித்து பதில் சொல்லுங்கள் .. மீண்டும் பேசலாம்.
Post a Comment