திருமணம் = 11
கல்வி, வேலைவாய்ப்பு = 16
வேறு கவலைகள் = 18
குழந்தையின்மை = 21
கணவன் மனைவி ஒற்றுமைக்கு = 28
இதெல்லாம் என்ன? கடைசியில் பார்ப்போம்.
************************************************************
சின்னவளுக்கு ஒரு ட்ரெஸ் எடுத்தோம். போட்டுப் பார்த்து ‘பிடிச்சிருக்கா.. பிடிச்சிருக்கா’ என்று மனைவி பலமுறை கேட்டார். அவளும் ஆமாமென்றாள். அடுத்தநாள் போட்டுக் கொள்ளச் சொன்னபோது முகம் சுழித்தாள். உனக்குப் பிடிச்சதாலதானே வாங்கினோம் என்றதற்குச் சொன்னாள்: “கைகிட்ட ரொம்ப பிடிச்சிருக்கும்மா”
******************************************************
அவசரத்திற்கு ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க வேண்டி வந்தது. உமாவிடம் ஏ.டி.எம். கார்டு கேட்டேன். பின் நம்பர் சொல்லி் - கொடுத்தார். பணம் எடுத்து வந்தேன்.
ஏ டி எம் கார்டை திருப்பிக் கொடுக்கும்போது கேட்டார். “பின் நம்பர் உங்களுக்குத் தெரிஞ்சிடுச்சே..”
“அதுனாலதான் பின் நம்பரை மாத்தீட்டேன். ஓகேவா?” என்றேன்.
“அப்படின்னா சரி” என்றவர் பத்து நிமிடங்கள் கழித்து “அதெப்படி சரியாகும்?” என்று யோசித்து முதுகில் குத்தினார்.
**************************************************
கொஞ்சம் சோகமான படங்களென்றால் தவிர்த்துவிடும் மிடில்க்ளாஸ் சராசரி நான். அந்தக் காரணத்திற்காகவே அங்காடித் தெருவை தவிர்த்து வந்தேன். ஆனால் ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’ பாடலும், ‘உன் பேரைச் சொல்லும்போதே’ பாடலும் மனதை விட்டு அகலாமல் படத்தைப் பார்க்கப் போறியா இல்லையா என்று மிரட்டிக் கொண்டே இருக்கிறது.
படத்தைப் பார்க்காமல் தவிர்க்க இன்னொரு காரணம், சில வாரங்களுக்கு முன் விகடனில் அந்தப் பட ஹீரோ மகேஷின் பெற்றோருடனான ஒரு பேட்டிக் கட்டுரை வந்திருந்தது. என்னவோ... படிக்கப் படிக்க தொண்டையெல்லாம் அடைத்து, கண்ணில் நீர் தளும்பி விட்டது.
அவர்களுக்காகவாவது நிச்சயமாக பார்க்க வேண்டும்.
***************************************
பள்ளிக் கூடம் திறந்தாகி விட்டது. ஃபீஸ் கட்டப் போனால் உட்கார்ந்திருப்பவர்கள் கைகளில் துப்பாக்கியோடும், முகமூடியோடும் இருப்பதாகவே கற்பிதம் செய்து கொள்ள வேண்டியதாயிருக்கிறது. நேற்றைய தினகரன் நாளிதழை கையில் வைத்துக் கொண்டே ‘ஃபீஸ் எவ்வளவு’ என்று கேட்டேன். (நாளிதழின் தலைப்புச் செய்தி: ‘அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளியின் அங்கீகாரம் ரத்தாகும்’) அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் காது குடைந்தவாறே வழக்கமான ஃபீஸையே சொன்னார். தயங்கித் தயங்கி பேப்பரை அவர்கள் கண்ணில் படுமாறு டேபிளில் வைத்து ‘இன்னும் முடிவாகலைன்னு சொல்றாங்களே?’ என்றேன்.
’கம்மியாச்சுன்னா அடுத்தடுத்த டேர்ம் ஃபீஸ்ல கழிச்சுக்கறோம்’ என்றார் அலட்சியமாய். அப்படி ஒரு நெனைப்பு வேற இருக்கா ஒனக்கு என்ற தொனி அதில் இருந்தது.
சரி என்று கட்ட முன்வந்தபோது காது குடையும் பேப்பரை விரித்து கீழே போட்டார். அப்போதுதான் கவனித்தேன். அதே தினகரனின் தலைப்புச் செய்தியின் ஒரு பகுதி!
***********************************
முதல் பத்தியில் பார்த்தது கும்பகோணத்தில் ஒரு கோயிலில் கண்ட அறிவிப்பு. ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஏற்றவாறு குறிப்பிட்ட அளவு விளக்குகள் ஏற்ற வேண்டும் என்று இருந்தது. இரண்டு விஷயங்கள் புலனாயிற்று. ஒன்று - லஞ்சம் எங்கே ஆரம்பித்திருக்கிறது என்பது. இன்னொன்று - இருப்பதிலேயே அதிக விளக்கு எதற்கு என்று பாருங்கள். கடவுளுக்கே ஹை ரிஸ்கான விஷயம் அது என்பது தெரிந்திருக்கிறது!
*********************************
குறிப்பு: அந்தப் பள்ளிக்கூட காது குடைந்து பேப்பரை கீழே போடும் சீன் மட்டும் கற்பனை!
***
73 comments:
//கடவுளுக்கே ஹை ரிஸ்கான விஷயம் அது என்பது தெரிந்திருக்கிறது!//
ஹி ஹி...
அக்மார்க் அவியல்!!
அங்காடி தெரு -> கண்டிப்பா பாருங்க..
சூப்பரு.. நானும் இப்பத்தான் கக்கூஸ் சாரி ஸ்கூல் போய்ட்டு வநதேன்....
தோழர்!
welcome back
Welcome back Boss!!!
பரபரப்பான விஷயங்களை தவிர்த்து விட்டீர்களோ?
வாங்க.. வாங்க..!! :)
----
நம்ம ரவி கேக்கறதுக்கு முன்னாடியே நான் கேட்டு வச்சிடுறேன்.
பிரச்சனையை திசை திருப்பத்தான் இந்த அவியலா?? ;)
பல நாட்களாய் உங்கள் பதிவு காணவில்லை என்று உங்கள் அலைபேசி எண்ணை தேடினேன். மீண்டும் உங்கள் பதிவு கண்டு மகிழ்ச்சி.
நல்ல பதிவு. ஆமா நர்சிம் கிட்ட என்னங்க ப்ராப்ளம்? கிண்டலுக்கு எதிர்வினையா எழுதினார்?
அங்காடி தெரு பார்க்க வேண்டாம்!
என்ன தல, எங்க போனீங்க ஏன் எழுதலைன்னு ஒரு வரி எழுதக் கூடாதா???
Welcome Back!
Welcome back KK, visit your page daily but endup with diappt... atlast today.... Good start & All the best...
Do you think the fee will be revised????? !!!! NEVER.
@ செந்தில் நாதன்
நன்றி. பார்க்கறேன்.
@ இளையகவி
ஹி ஹி..
@ அதிஷா
கூ கெ கு!
@ மஹி
:-)
@ பாலா
ஆமாம்.
@ பாலா
அப்படியெல்லாம் இல்லைங்க.
@ விஜய்
நன்றி நண்பா.
@ சவிதா
உங்க ப்ரொஃபைல் சூப்பர்ங்க!
@ தராசு
வேலைதான் காரணம். ஒண்ணு ரொம்ப வேலை. இல்லைன்னா வேலையே இல்ல!
@ கோடீஸ்
நன்றிங்க.
@ வெங்கட்
நிச்சயமா மாறப்போறதில்லைங்க. பள்ளி முதல்வர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் “சுமுகமா” முடியறதுக்காக இழுத்தடிக்கறாங்க! அவ்ளோதான்.
செல் நம்பர் மாறிடுச்சா?
சொல்ல மாட்டீங்களா???
Welcome back.......
நான் மதிச்ச பதிவர் நீங்க. ஆனா ப்ரெண்ட் தப்பு செஞ்சா தப்பு இல்லைதானே கிருஷ்ணா. நர்சிம் என்ன உங்க வீட்டு பொண்ணுங்களையா திட்டினார் இல்ல கார்க்கி உங்க வீட்டு குழந்தையா மிரட்டினார் :) நாம ஷேப் சாமி :).
முகம் காட்ட பிடிக்கலை. அதுதான் இப்படி ஒரு புரொபைல் :(
//“அதுனாலதான் பின் நம்பரை மாத்தீட்டேன். ஓகேவா?” என்றேன்.
//
enna oru puththisaalithanam
வாங்க நண்பா..
நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்கள் பதிவு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து எழுதுவீர்கள்தானே?
என்ன சார் இது ? இவ்வளவு கேப் விட்டு திரும்பி வரும் போது குடும்ப புராணம் தானா. புதுசா ஒருத்தன் உங்க அவியலை படிச்சா என்ன புரியும்?
//கடவுளுக்கே ஹை ரிஸ்கான விஷயம் அது என்பது தெரிந்திருக்கிறது!//
:)
welcome back thalaivaa...naan inthe ella blog'eyum silentaa padichittu varen...neenge illaama evenge kodume thaange mudiyele !!! :)..ini kelappungal !!!!
என்னங்க திரும்பி வந்துட்டீங்க !!! புது படம் எதாவது ரிலீஸ் ஆயிடுச்சா??
இதுக்கு ரெண்டு மாசமா!?
//நான் மதிச்ச பதிவர் நீங்க. ஆனா ப்ரெண்ட் தப்பு செஞ்சா தப்பு இல்லைதானே கிருஷ்ணா. நர்சிம் என்ன உங்க வீட்டு பொண்ணுங்களையா திட்டினார் இல்ல கார்க்கி உங்க வீட்டு குழந்தையா மிரட்டினார் :) நாம ஷேப் சாமி :).
முகம் காட்ட பிடிக்கலை. அதுதான் இப்படி ஒரு புரொபைல் :(//
friend ஆ!!! நர்சிமா??? பிராபகரன் தாயாரை திருப்பி அனுப்பிச்சாங்களா? என்னங்க நடக்குது இங்க? நான் ஆணி புடிங்குறதுல பிஸியா இருந்ததுனால இதை பத்தி எல்லாம் எனக்கும் ஒன்னுமே தெரியலை(தெரிஞ்சா மட்டும்), ஒரு பத்து நிமிசம் கண்டனம் தெரிவிக்கிறதுக்கு நேரமுமில்லை.
நான் எல்லார் கிட்டையும் நல்லவன் பேரெடுக்க வந்தவனுங்க? யார் மனசையும் புண்படுத்துவது எனக்கு புடிக்கவே புடிக்காது.
என்னோட எழுத்தை எல்லாரும் வாசிக்கனும், என்னோட புத்தகத்தை எல்லாரும் படிக்கனும். பரிசல்காரன் ரொம்ப சாப்டான ஆளுடான்னு நாலு பேர் சொன்னா போதும்.
சமுக அக்கறை உள்ள பதிவர்ன்னு பேர் வாங்கி நமக்கு என்ன கிடைக்க போகுது
Welcome Back Boss!
Good Post!!
//High Risk....// Ultimate one!! :-)))
நெடுநாள் ஆனாலும் அவியல் ஊசிப்போகாமல் இருக்கிறது . :))
//திருமணம் = 11
கல்வி, வேலைவாய்ப்பு = 16
வேறு கவலைகள் = 18
குழந்தையின்மை = 21
கணவன் மனைவி ஒற்றுமைக்கு = 28
//
முதலில் 11 விளக்கு ஏற்றாமல் இருந்தால் 28 விளக்கு ஏற்ற வேண்டிய அவசியமில்லை. ;)
/திருமணம் = 11
கல்வி, வேலைவாய்ப்பு = 16
வேறு கவலைகள் = 18
குழந்தையின்மை = 21
கணவன் மனைவி ஒற்றுமைக்கு = 28
//
//முதலில் 11 விளக்கு ஏற்றாமல் இருந்தால் 28 விளக்கு ஏற்ற வேண்டிய அவசியமில்லை. ;) //
முதலில் 11 விளக்கு ஏற்றாமல் இருந்தால் 18,21,28 எதுவுமே தேவையில்லை :)))
@ தராசு
மாத்தல தல.
@ கணேஷ்
நன்றி.
@ K
அப்படியெல்லாம் இல்லைங்க. அவர் எழுதின பூக்காரி பதிவுல எனக்கு எள்ளளவும் உடன்பாடில்லை. அதற்கு கண்டனங்கள். வேறெதுவும் எங்கிட்டேர்ந்து எதிர்பார்க்காதீங்க. நான் அவ்ளோதான். நான் என்னைக்குங்க கருத்து சொல்லிருக்கேன். இன்னைக்கு சொல்றதுக்கு?
@ ரமேஷ்
நன்றி.
@ சரவணக்குமார்
அப்படித்தான் நெனைக்கறேன். விடமாட்டாங்க போல!
@ சதீஷ்
அட... ஆமால்ல... ஸாரிங்க..
@ பாலகுமார்
நன்றி சார்.
@ லக்ஷ்மி நரசிம்மன்
நன்றிங்க..
தங்கள் வருகைக்கு நன்றி!..நீங்க திரும்பி வந்ததை சொன்னேன் பாஸ்!...
அவியல் பட்டும் படாம இருக்கு!...
@ வால்பையன்
வேலை பாஸூ!
@ டமீல்டுமீல்
இவ்வளவு சரியாக என்னைப் புரிந்து கொண்டமைக்கு நன்றி நண்பா!
@ பிள்ளையாண்டான்
:-)
@ ஸ்வாமி ஓம்கார்
ஜி, உங்ககிட்டதான் கேட்கணும்னு இருந்தேன். சேல்ஸ் ரேட் கம்மி, சர்வீஸ் ரேட் ஜாஸ்திங்கற மாதிரி அதென்ன திருமணத்துக்கு 11 விளக்கு, மன ஒற்றுமைக்கு 28 விளக்கு?
ஆனாலும் உங்க விளக்கம் சூப்பர்ங்க!
@ பரிதிநிலவன்
ஆமால்ல...
@ நேசன்
நன்றி பாஸ்
welcome back boss. Nice aviyal :)- Write often.
எவ்ளோ நாளாச்சு உங்க பதிவ பாத்து.
பிரபாகரன்
Don's miss ANGAADI THERU
welcome back தோழரே !
// அப்படி ஒரு நெனைப்பு வேற இருக்கா ஒனக்கு என்ற தொனி அதில் இருந்தது. //
உங்க அனுபவத்தை எழுதினீங்க போல.. ஆனா ஒரு நிமிட கதை மாதிரி இருந்தது..
ஏன் ஒய் கண்ட கண்ட கழிசடை படத்தை எல்லாம் பார்த்து அதுக்கு ஒரு நாலு பக்க விமரிசனம் செஞ்சுட்டு, அங்காடித் தெரு போன்ற நல்ல படங்களை பார்க்காமல் இருகுரீகலே இது உமக்கே நல்ல இருக்கா?
வாங்க தலைவரே (சும்மானாச்சுக்கும் சொன்னேன்,
ரொம்ப நாள் ஆச்சு போல?
வழமை போலவே உங்க கருத்து கேட்க போவதில்லை இந்த பதிவுலக நாராச அரசியல் பற்றி....
நிறைய எழுதுங்க
வாங்க பாஸ்....! எங்க..எங்க.ன்னு தேட வச்சுட்டீங்களே....!
வாங்க பரிசல். அருமை! :-)
//திருமணம் = 11
கல்வி, வேலைவாய்ப்பு = 16
வேறு கவலைகள் = 18
குழந்தையின்மை = 21
கணவன் மனைவி ஒற்றுமைக்கு = 28
//
//முதலில் 11 விளக்கு ஏற்றாமல் இருந்தால் 28 விளக்கு ஏற்ற வேண்டிய அவசியமில்லை. ;)//
:-))
ஊரே ரத்தக் களரியாக் கெடக்கு இங்க என்னடான்னா அவியல் பொரியல் கூட்டுன்னு விருந்தா? ஒழுங்கா வந்து ஆட்டத்துல கலந்துக்குங்க!
Krish, engaeyya poi iruntheer?? Post Singam review.. Karki sura thaan hitnu solraaru
28 விளக்கை ஏற்ற வேண்டிய அவசியமில்லை, இருக்கிற ஒரு விளக்கை அணைத்தாலே போதுமே, பிரச்னை தீர்ந்து விடுமே :-)
மீண்டு வந்தமைக்கு நன்றி பரிசல்,
உங்களைப் போன்ற அன்பு எழுத்தாளர்
இவ் வலையுலகுக்குத் தேவை.
Welcome back :) வேலை இன்னும் நிறைய இருக்கா, இல்ல தொடர்ந்து எழுதுவீங்களா..
என் ப்ரோபையில் பத்தி என் புருஷனே கேட்கலே.... கமன்ட் பண்ணலே! :-)
நீங்க என்னை கோவிலிலே 28 வெளகேத்த வச்சிருவீங்க போல?
ஆமா எந்த கோவில்?
நல்வரவு
WELCOME BOSS!!
:)udeen78
welcome back sir.. Expecting more post from you in future..
Do u know one thing.. when i came to tamil bloggers..i followed you as a first person and i liked your simple narration..
Please avoid narsim matter and write your own post..
வெல்கம் பேக் பரிசல்.
வாங்க வாங்க!
வருக பரிசல் அண்ணே
வெல்கம் பேக்..
கேபிள் சங்கர்
வெல்கம் பேக்..
கேபிள் சங்கர்
ரெண்டு மூணு நாளா சில ஆளுங்களுக்கு மைனஸ் ஓட்டு குத்தியே வழக்கம் ஆயிடுச்சு போல. இங்க யாருய்யா மைனஸ் ஓட்ட போட்டது.
வருக... வருக..
கிருஷ்ணா நலமா..?
நன்றி மணிகண்டன், பிரபாகரன், நாஞ்சில் பிரதாப் & பாண்டி பரணி
நன்றி ஜெய். உசுப்பேத்தீட்டீங்க!
@ ராம்ஜி சார்
சார்.... சிங்கம் விமர்சனம் ரெடியா இருக்கு.. :-)))
@ தமிழ் உதயன்
நன்றி. புரிந்துணர்வுக்கு!
@ தேவா
வந்துட்டோம்ல!
@ பா ரா
நன்றி சார்
@ ராஜன்
ஏன் இந்தக் கொலவெறி???
@ மதுரைமல்லி
சுறா நான் பார்க்கல. சிங்கம் பார்த்தேன். எனக்கு ஓகே! (மனசாட்சி:- ஒனக்கு எதுதாண்டா நாட் ஓகே??!!??)
@ அரபுத்தமிழன்
நன்றிங்க!
@ பிரசன்னா
எழுதுவேங்க
@ சவிதா
சாரிங்க.. நான் வேற அர்த்தத்துல கேட்டேன்! :-))
அது சுவாமிமலைக்குப் பக்கத்துல வெள்ளைவிநாயகர் கோவில்ல படிச்சது!
@ சபரிநாதன், ஷர்புதீன்
நன்றீ
@ மதன் இளங்கோ
மிக்க நன்றி நண்பரே... & சரி.
@ இராமசாமி
நன்றி
@ இளா
மிக மிக மிக மிக மிக மிக
நன்றியும் அன்பும் இளா உங்களுக்கு! உங்களைப் போன்ற அமைதியாக சாதிக்கும் நபர்களால்தான் உலகம் இன்னும் சுழன்றுகொண்டிருக்கிறது!
@ அத்திரி , கேபிள் சங்கர்
நன்றி பாஸ்!!
@ இராமசாமி கண்ணன்
அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்க!
@ சூர்யா
நலம் ஜி!!
தினமும் உங்க ப்ளாக் வந்து பார்த்துட்டு என்ன ஆச்சு இந்த ஆளுக்குன்னு தோனுச்சு.
இப்போதான் தெரியுது. ஸ்கூல் பீஸ் கட்ட பெரிய வரிசையோ? :)
// “கைகிட்ட ரொம்ப பிடிச்சிருக்கும்மா”//
குழந்தை தங்கம்.
என்னென்னவோ கேள்விப்பட்டேன். உண்மையாவா?
தெங்குமராட்டா வரீங்களா?
வருக !!! வருக !!!
Thanks for coming back after a long time !!!
தினமும் எப்போ பரிசல் வருவாருன்னு எதிர்பாத்து நம்பிக்கையோட இருந்த நிறைய பேர்ல நானும் சேத்தி.வாங்க, வாங்க.(எது, உங்க பதிவுக்கே வந்து உங்களையே வாங்கன்னு கூப்பிடறேனா? ஹி ஹி..)பாருங்க, நீங்க மறுபடி வந்ததுக்கு எவ்ளோ பேரு சந்தோஷப்படறாங்கன்னு !! நிறைய எழுதுங்க மறுபடியும்.
பாத்துங்க - அடுத்த ப்ளாக் encounter உங்களுக்குத்தான் அப்படின்னு ஊரெலாம் பேச்சு. இப்ப போய் போஸ்ட் அது இதுன்னு :)
Srini
@ விமல்
:-)
@ கொல்லான்
அதெங்க இருக்குங்க? மெய்ல் பண்ணுங்க கண்டிப்பா வர்றேன்..
@ சீனு
நன்றி
@ பிரதீபா
உங்க ஆட்டோ/லாரிக்கு பயந்துதாங்க மறுபடி எழுத வந்தேன்..!
@ sri
வரட்டுங்க. மூடீட்டு போய்ட்டே இருப்பேன்... ப்ளாக்கை.. வேறென்ன செய்யறது!
ரொம்ப நாள் ப்ரேக் எடுத்துட்டீங்க!
இனியாவது நெறைய பதிவப் போடுங்க!
சம்மர் வெக்கேஷன் முடிந்ததா?? பையா பார்த்துட்டு தான் ஓடி போய்ட்டீங்கன்னு நினைக்கிறேன். .
தெங்குமராட்டா கேள்விப்பட்டதில்லையா நீங்க? எங்கூரு பக்கத்துல தானுங்க!! (எல்லா ஊரும் எங்கூருன்னு சொல்லிக்குவேன். ஹி ஹி) பவானிசாகர் டேம் ரோடு இல்ல பண்ணாரி ரோடு புடிச்சீங்கன்னா ஒரு அரை மணி நேரத்துல போய்டலாம்ங்க. அங்கேர்ந்து ஆசனூர் பக்கம்ன்னு நினைக்கிறேன் . ஒரே காடு காடு காடு தான்..மான், மங்க்கி நிறைய சுத்திட்டு இருக்கும்.யானை, நரி கூட இருக்கும், நான் பாத்ததில்லைங்க. வேற ஒன்னும் இல்லைங்க அங்க..மாயாறு ன்னு ஒரு ஆறு இருக்கும். மழைக்காலத்துல வெள்ளம் நேரா வரும்.வீரப்பன் அங்க கொஞ்ச காலம் சுத்திட்டு இருந்தாரு !! இவ்ளோ தாங்க எனக்கு தெரிஞ்சது. மத்தபடி கொல்லான் அவர்கள் கிட்ட கேட்டீங்கன்னா அவரு நெறைய சொல்லுவாருன்னு நினைக்கிறேன்.
வாங்க! வாங்க!
ஒரு தடவை 28 விளக்கேத்தி ஒர்க் அவுட் ஆகாம...மறுபடியும் 11 விளக்கு ஏத்த ஆரம்பிச்சா, என்ன ஆகும்..? :)
:)
//ஸ்வாமி ஓம்கார்...ஸூப்பர் பஞ்ச்!!//
@ HVL
நிச்சயமா!
@ அமுதா கிருஷ்ணா
என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க.. பையா ஹிட்டுங்க..
@ பிரதீபா
நன்றி.
கொல்லான் மெய்ல் போட்டுட்டாருங்க!
@ சுரேகா
ஒத!
நீங்கள் ஒரு COURTESY குக்கூட விபரம் எதுவும் சொல்லாமல் இரண்டு மாதங்கள் பதிவு ஏதும் போடவில்லை.அதைப்பற்றி ஒருவரும் கேட்கவும் இல்லை.இப்போ திரும்பி வந்து பதிவு போட்டதும் பலர் விசாரிக்கிறார்கள்!!
ஒரே விநோதமாக உள்ளது!!
@ கண்பத்
இதில என்ன விநோதம் பாஸூ?
நான் அப்பப்ப எழுதுவேன், வேலை, குடும்பம்னு பிஸியாய்ட்டா விட்டுடுவேன். தட்ஸ் ஆல்.
எதுவும் தப்பா நினைக்காதீங்க ப்ளீஸ்..
வருக பரிசல்!
ம்..பரிசலைக் கிளப்பூங்கள்!!!!
:)
parisal sir,
Oru chinna request unga pathivuku naanga yellam rasigarkal la.. so atleast for courtesy ku pathivu poda late achuna blog la update pannunga.... Hope u will take this in the right sense..
Nandri,
Arun
Welcome back sir...........
Post a Comment