Wednesday, June 16, 2010

தமிழ்மொழி தமிழ்மொழி தமிழ்மொழியாஆஆஆம்..

செம்மொழிப் பாடலை நேற்றுதான் முழுவதுமாகக் கேட்டேன். யூ ட்யூபில். எல்லாரும் சொல்வது போல் பிசிறில்லாமல் கணீரென்று ஆரம்பிக்கிறது டி எம் எஸ்ஸின் குரல். தொடர்ந்து ஏ. ஆர்.ஆர், ஹரிணி, சின்மயி என்று பயணித்து ஸ்ருதி ஹாசன் வரை - ஸ்ருதியின் அந்த ‘தமிழ்மொழி, தமிழ்மொழி, தமிழ்மொழியாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆம்’ - அபாரம். ஒவ்வொரு முறையும் புல்லரிக்க வைக்கிறது - அற்புதமான பாடலாக வந்திருக்கிறது. நடுவே ப்ளாசேயின் ராப்புக்கு முன் வரும் நாதஸ்வர பிட் கவர்கிறது. கடைசியில் வரும் அந்த பாட்டிம்மா குரலும் எக்ஸ்ப்ரஷனும் நன்றாக இருக்கிறது. ஆருங்க அது?

இந்த முக்கியமான வீடியோவில் எங்கே என் SPB?

வீடியோவில் ஒரு சிறுவன் பள்ளிக்குச் சேரும்போது அருகிலிருக்கும் மாணவன் பெயர் கேட்கிறான். உச்சரிப்பை வைத்துப் பார்க்கும்போது அவன் ‘ஆதவன்’ என்று பதில் சொல்வதாய் தெரிகிறது. நீங்கள் சரிபார்த்துச் சொல்லுங்களேன்...

கௌதம் மேனனின் டைரக்‌ஷன். ஆங்கிலம் இல்லாமலா? வீட்டுச் சுவற்றில் மகள் வரைந்து கொண்டிருக்க, உள்ளே வரும் மனைவியை ‘COME' என்றுதான் அழைக்கிறான் கணவன். அதையும் சரிபார்த்துச் சொல்லுங்கள்! (வீடியோவில் 4:06 டூ 4:07 நிமிடங்களில்)

இதெல்லாம் சும்மா சொல்கிறேனே தவிர அவ்வ்வ்வளவு பிடித்திருக்கிறது ஏ ஆர் ஆரின் இந்தப் பாடல். Hats off to you Brother!








இந்தப் பாடலின் வரிகளை பாடியவர்கள் யார் யாரென்ற விளக்கத்துடன் சரவணகுமரன் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். படியுங்கள்.

.

90 comments:

ஸ்வாமி ஓம்கார் said...

செம்மொழி பாடலில் பல அபத்தங்கள் இருக்கிறது என்றாலும் நீங்கள் விவரித்தது நன்றாக இருக்கிறது :)

// கடைசியில் வரும் அந்த பாட்டிம்மா குரலும் எக்ஸ்ப்ரஷனும் நன்றாக இருக்கிறது. ஆருங்க அது?
//

அன்பு உடன்பிறப்பே....

நாக்க முக்க என்ற திருப்பாடலை பாடிய அந்த தெய்வீகக்குரலை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா? கடைசியில் அவரும் முகம் காண்பிக்கிறாரே :)

அன்பேசிவம் said...

சரியா 4.55 ல ஒருத்தர் பாடுராரே அவரு யாரு தல? அவரை பத்தி ஒண்ணுமே சொல்லலையே.... எனக்கு அவரை பார்த்தமாதிரியாக இருக்கிறது சட்டெனெ நியாபகம் வரவில்லை. அந்த ஒரு மனுஷன் போதுமே... என்ன ரியாகஷன்?

தமிழனை பாத்த மாதிரிர்யே இருந்துச்சே?

Cable சங்கர் said...

எப்படியெல்லாம்பதிவு போடுறாய்ங்கப்பா..:)

taaru said...

ராஜா, பாலு இல்லாம!!!! மனசு என்னவோ போல இருக்கு பரிசல்... hm.... இருந்தாலும் பாடல் நன்று.

4:06 இல் COME னு சொன்னாலும், அவரு குழந்தையோட தமிழ் எழுத்த காட்டி குதூகலிக்கிறார் ...அதான் அண்ணே கான்செப்ட்...
பேர கேட்டதுக்கு "ஆத்தா வையும்" னு சொல்ற மாதிரி தான் இருக்கு.... என்ன உலகத்தவரே! சரி தானே?

கோவி.கண்ணன் said...

ஏற்கனவே தமிழ்மொழி மாநாடு நடத்திய முதல்வர்களைக் கட்டவில்லை, கருணாநிதி மட்டும் தான் வருகிறார். நல்ல விளம்பரப் பாட்டு.
:)

தராசு said...

சரி

கார்க்கிபவா said...

எனக்கு புடிக்கல...

அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே....இதுதான் என் சாய்ஸ் :)

Mahi_Granny said...

காணொளிக்கு நன்றியா பாராட்டா எதை சொல்வது எனத் தெரியவில்லை .

Thamira said...

சில குறைகள் இருந்தாலும் விழாவுக்கான ஒரு அடையாளம் என்ற வகையில் மட்டுமே இதை நான் காண்கிறேன். அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

விக்னேஷ்வரி said...

இன்னும் கேட்கலை கிருஷ்ணா.

☼ வெயிலான் said...

@ முரளி - எனக்கு அவரை பார்த்தமாதிரியாக இருக்கிறது சட்டெனெ நியாபகம் வரவில்லை.

கூத்துப் பட்டறையைச் சேர்ந்த முனைவர்.கே.ஏ.குணசேகரன்.

ஒன்றிரெண்டு படங்களில் நடித்திருக்கிறார்.

Anonymous said...

ஒன்று இந்த பாடலுக்கு தமிழ் பாடகர்களை மட்டும் உபயோகித்திருக்கலாம்.

முக்கியமாக நமது மண்ணின் மணத்தை இசையில் வடித்த தமிழன் இசைஞானியை ஏன் மறந்தார்கள் என்று தெரியவில்லை.

இல்லை ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றால் வேற்று மொழியை தாய் மொழியாய் கொண்டிருந்தாலும் தமிழ் மொழியின் தெளிவான உச்சரிப்புக்கு தனது பாடல்களில் பெரும் பங்களித்த பாலுவை (ஜேசுதாஸை இதில் சேர்க்கமாட்டேன்) காணோம் என்பது வருத்திற்குரியதே.

சுசி said...

ஒரு தடவை கேட்டேன்.. பாத்தேன்.. அவ்ளவா பிடிக்கலை..

நீங்க எழுதிய விதம் நல்லா இருக்கு..

வீட்டுக்கு போனதும் மறுபடி கேக்கணும்னு தோணுது.

சு.சிவக்குமார். said...

நம்ம தமிழ் மொழியில் மட்டும் ஒரு சிறப்பிருக்கிறது. எப்படீன்னா

யாவரும் கேளிர் : அப்படீன்னா எல்லாருமே உறவினர்கள் அப்படீன்னு அர்த்தம்.

யாவரும் கேளீர் : அப்படீன்னா “ here attention please" ன்னு அர்த்தம்.

இப்ப பாட்டை கேளுங்க.எனக்கிருந்த ஒரு சிறு உறுத்தல் உங்களுக்கு இருக்க கூடாதுன்னு வேண்டிக்கிறேன்.

முதன் முதலா கம்மாக் கரையிலேயும்...கழனியிலும் உழவர்களின் சேறில் ஊறிக் கிடந்த இசையை சிம்பொனி வரைக்கும் கொண்டு சென்றவரை விட..விருது வாங்கியவர் முக்கியமாய் போய்ட்டார்னா..எனக்கு கொஞ்சம் இல்லை,நிறையவே உறுத்தல் இருக்கிறது. நாட்டுப் புற இசையோட,கர்நாடக சங்கீதத்தையும்,மேற்கத்திய இசையையும் கலந்து அது எல்லாரும் ஏத்துக்கிற வகையில் கொடுத்தவர்.

திருவாசகத்திற்கு உருகார்;ஒரு வாசகத்திற்கும் உருகார்.அதை முதன் முதலில் சிம்பொனியில் முயற்சித்துப் பார்த்தவர்..

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போலாகுமா..அப்படீன்னு சொன்னவர்...

BBC யில் சில வருடங்களுக்கு முன்னாடி தொடர்ந்து ஒரு வாரம் தமிழ் பாடல்கள் ஒலி பரப்பி அதுல அனைவராலும் மிகவும் விரும்பட்ட பாடல் எதுன்னு கேட்டப்ப, முதல் இடத்தை பிடித்த பாடல் தளபதியில் இருந்து ”ராக்கம்மா கையத்தட்டு ” தான்.

பொதுவாக இசை மற்ற எல்லா கலைகளைக் காட்டிலும் நம்மை ரொம்ப எளிதாக கரைச்சுரும், ஆன்மீகத்தின் உச்சத்திற்கும் மிக எளிதாக நம்மை கொண்டு சேர்த்துவிடும். என்ன காரணம்னா ஆன்மா(soul). ஒரு நல்ல இசைக்கு பொதுவா ஒரு ஆன்மா உண்டு.


பத்துவருடத்திற்கு முன்னாடி வந்த ரகுமான் பாடலையும், இளைய-ராஜாவோட சில பாடல்களையும் நீங்களே உங்களுக்கு புடுச்ச மாதிரி செலக்ட் பன்னிங்கோங்கா..நல்ல மூடில் நீங்களே ரெண்டையும் கேளுங்க..பத்துவருடங்களுக்கு முன்னாடி நீங்க என்ன மூடில் கேட்டீங்களோ அதே மூட் இப்ப எந்த பாட்டில் அப்படியே இருக்குனு கம்பேர் பனனிப் பாருங்க....

sorry sir,நான் ரகுமானோட இசையைப் பற்றி குறை சொல்ல வர்ல..ஆனா நம்ம ஊரின்,மொழியின்,கலாச்சாரத்தின் முக்கிய கலைஞன் புறகணிப்பிற்கு ஆளாகிராரோ...அப்படீன்னு ஒரு வருத்தம் மட்டுமே...


கடைசியா ’பழசிராஜா’ படத்தில் வரும் ”அகிலமெல்லாம் ”எனத்தொடங்கும் ஒரு இஸ்லாமிய பாடல் வரும்...அதை மொழி புரியாமலே வெளிநாட்டுக்காரங்க ரசித்து கேட்டதை,திருவனந்தபுரத்தில் பஸ்சில் போய்க்கொண்டிருந்தபோது நான் நேரில் கண்டேன். அதனாலை எல்லோரையும் கவரும் விதத்தில்..ரகுமானுடைய இசை பயன்படுத்தப்பட்டிருக்கிறது,அப்படீன்னு சப்ப கட்டு கட்டுனா அதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..இரண்டு பாடல்கள் இடம்பெறும் விதமா ரெண்டு பேருக்கும் பிரிச்சுக்கொடுத்திருந்தால் கூட ஆறுதலாக இருந்திருக்கும்..

AvizhdamDesigns said...

"come " என்று அவர் சொல்வதை நான் மட்டும் தான் கவனித்தேன் என நினத்திருந்தேன் .

பரிசல் சார், fine sir ...!

சரி, என்ன இருந்தாலும்
நம்
தமிழ் தமிழ்தான்..
செம்மொழி செம்மொழிதான்...

அந்த குழந்தைக்கு,
தமிழ்ப்பால் நிச்சயமாக
தமிழ் காதலை குறித்த காலத்தில்
கொண்டு வரும்...

யாசவி said...

எனக்கு என்னவோ அவ்வளவு ஒர்த் இல்லாதது போல இருக்கு.

Just one more Rahman song.

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்னு தோணுது

Jack said...

நான் ரெண்டு மூணு முறை கேட்டுட்டேன். சுத்தமா புடிக்கல. அவனவன் ரெண்டாயிரம் வருஷம், மூணாயிரம் வருஷத்திற்கு முந்தைய எங்கள் இசை கருவிகள் அப்படின்னு பெருமையா சொல்லி அவர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை சிறப்பாக கூறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், நமது பெருமைகளை தெளிவாக எடுத்துக் காட்ட தவறிய ஒரு பாடல் மற்றும் படமாக்கம்.
பல குறைகளோடு , இவ்விழாவின் அடையாளமாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு பாடல். அப்படி இதுதான் விழாவின் அடையாளம் என்றால், விழாவும் இந்த பாடல் மற்றும் படமாக்கல் மாதிரி தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏற்கனவே கலைஞர் விளம்பரத்துக்கு தான் இந்த மாநாடே நடத்துறாரு. அதுல இது வேற. மேற்கத்திய நாட்டு மக்கள் பார்த்தால், தமிழ் இசையில் இருந்துதான் மேற்கத்திய இசை பிறந்தது போல என்று நினைத்து கொள்வார்கள்.

Anonymous said...

பரிசல்,

எனக்குப் பிடிக்கவில்லை. தமிழ்க் கலாச்சாரம் எங்குமே பெருமைப்படுத்தப் படவில்லை. ஏன் பாரதி ராஜா அல்லது வேறு எவரோ இதை இயக்கவில்லை? இளையராஜாதானே நாட்ட்புறப் பாடல்களை நகரமெங்கும் ஒலிக்கச் செய்தவர்? அசல் வாத்தியங்களை விடுத்து சிந்தசைசர் பாடல் இது. எஸ்பிபியை ஒதுக்கியதில் உள்ள அரசியல் என்ன?

உடல் பொருள் ஆவி அனைத்தையும் தமிழுக்காக ஈந்த தமிழறிஞர்களைக் காட்டாமல் ஜீன்ஸ் போட்ட பாடகர்களைக் காட்டிச் சொல்லுவது என்ன?

ஒரு மாற்றுக் கருத்தாக, இதே போல ஒன்று மலையாளத்தில் எடுக்கப் பட்டிருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள் இதன் அபத்தம் புரியும்.

பிரதீபா said...

பாட்டுன்னு கேட்டா, ஒரு நல்ல பாட்டு. SPB, சித்ரா, யேசுதாஸ், மனோ, ஜானகி இவங்க எல்லாமும் ரெண்டு வரி பாடியிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.

நிகழ்காலத்தில்... said...

இளையராஜா, SPB, பாரதிராஜா இவங்க ஏன் இல்லை :))

யாருக்கு தற்போது மார்கெட் இருக்கோ, அவங்க வருங்கால வியாபாரத்துக்கு தேவை, அதுக்கு அச்சாரம்தான் இது..

எல்லாமே பிசினஸ்தான், அதுபுரியமா
நிறைய பேர் புலம்பறீங்க, :))))

Mahesh said...

ஒரு விழாவுக்கான பாட்டுங்கற முறையில நல்ல இசையுடன் இருக்கு... ஆனா செம்மொழியை பெருமைப் படுத்தற மாதிரி இல்லை...
just short of another dmk party song !!

Bruno said...

சு.சிவக்குமார் சார்

தமிழர் ஒருவர் சிம்பொனி இசையமைத்திருக்கிறாரா

அந்த இசையை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா

ஏனென்றால் பலரும் ஆரட்டோரியா, ஓரட்டோரியா என்று ஏதோ சொல்கிறார்களே

எனக்கு தெரிந்து ஒருத்தர் அவரை விட திறமையானவர் வந்தாதால் பீல்ட் அவுட்டானவுடன் சிம்பொனி அமைத்ததாக ஊரை ஏமாற்றினார். இது வரை அந்த இசையை நான் கேட்கவில்லை

குறைந்த பட்சம் அந்த குறிப்புகளை கூட அந்த மேதாவி வெளியிடவில்லை

Bruno said...

//BBC யில் சில வருடங்களுக்கு முன்னாடி தொடர்ந்து ஒரு வாரம் தமிழ் பாடல்கள் ஒலி பரப்பி அதுல அனைவராலும் மிகவும் விரும்பட்ட பாடல் எதுன்னு கேட்டப்ப, முதல் இடத்தை பிடித்த பாடல் தளபதியில் இருந்து ”ராக்கம்மா கையத்தட்டு ” தான்.
//

ஆமாம்

அதே போல் Just Plain Folks Music Award For Best Music Album விருதில் அவர் மூன்றாவது பரிசு பெற்றதை நீங்கள் மறந்து விட்டீர்கள்

இங்க பாருங்க http://www.jpfolks.com/09albumwinners.html

எவ்வளவு பெரிய சாதனை அது

அது சரி

அதில் முதல் பரிசு பெற்றது யார் தெரியுமா

பாலா அறம்வளர்த்தான் said...

எனக்கும் பிடிக்கவில்லை பரிசல்!!!

இந்த பாடல் செம்மொழி மாநாட்டுக்கான பாடல் என்கிறபோது தமிழ் என்கிற மொழி, தமிழ்நாட்டின் கலாச்சாரம் என்று எதையுமே இது பிரதிபலிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. மலையாளம் அல்லது ஹிந்தியை புகழ்ந்து அந்த மொழியில் எழுதிய Lyrics ஐ இந்த ட்யூனில் பொருத்தி விடலாம். இது ஒரு நல்ல ரெஹ்மான் பாடலாக இருக்கலாம் - தமிழின் புகழ் பாடும் பாடலாக ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

ராஜா , ரெஹ்மான் இசையை இதை வைத்து விமர்சிக்க விரும்பவில்லை. இருந்தாலும் - வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் விழா (அண்மையில் கர்நாடகாவில் நடந்தது) அல்லது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான விழா/பாடல் என்கிறபோது ரெஹ்மானை கூப்பிடலாம்.. இதற்கு ராஜாதான் (இப்போதைக்கு) சரியான ஆளாக தோன்றுகிறார்.

Bruno said...

//sorry sir,நான் ரகுமானோட இசையைப் பற்றி குறை சொல்ல வர்ல..ஆனா நம்ம ஊரின்,மொழியின்,கலாச்சாரத்தின் முக்கிய கலைஞன் புறகணிப்பிற்கு ஆளாகிராரோ...அப்படீன்னு ஒரு வருத்தம் மட்டுமே...//

வேறு வழியில்லை சார்

ஒருவர் மட்டுமே இசையமைக்க முடியும் என்ற போது தற்சமயம் இருப்பதில் சிறந்த இசையமைப்பாளரைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்

உங்களுக்கு பிடித்தவர் வேறொருவர் இருக்கலாம்

ஆனால் உலகம் முழுவதும் பாலிவுட்டிலிருந்து ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா வரை யாரை கொண்டாடுகிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்

--

எனக்கு பிடித்தது என்பது வேறு
சிறந்தது என்பது வேறு

இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்

--

பரிசலுக்கு பிடித்த பாடகி அவர் மனைவி (அல்லது அம்மா அல்லது மகள்)
ஆனால் உலகின் சிறந்த பாடகி தன் மனைவி என்று அவர் அடம்பிடிக்கமாட்டார் என்றே நம்புகிறேன்

அப்படித்தானே சார்

Bruno said...

//தை மொழி புரியாமலே வெளிநாட்டுக்காரங்க ரசித்து கேட்டதை,திருவனந்தபுரத்தில் பஸ்சில் போய்க்கொண்டிருந்தபோது நான் நேரில் கண்டேன். //

அப்படி வெளிநாட்டுக்காரர்கள் ரசிப்பதினால் தான் ரஹ்மான் பல விருதுகளை பெற்றிருக்கிறார் என்று உங்களுக்கு புரியவில்லையா

--

நான் என்றுமே இளையராஜாவின் இசையை குறை கூறுவதில்லை

எனக்கு தெரிந்து எந்த ஒரு ரகுமான் விசிறியும் கூட அப்படி செய்வதாக தெரியவில்லை

ஆனால்

இளையராஜாவின் ரசிகர்கள் ஏன் இது போல் சம்மந்தமில்லாத பாடல்கள் குறித்த இடுகைகளில் வந்து நல்லாயில்லை என்று மெனக்கெடுகிறார்கள் என்று தெரியவில்லை

உங்களுக்கே அவர் இசை மேல் நம்பிக்கை இல்லையா

ரகுமானின் பாட்டு நல்லாயில்லை என்று கூற வேண்டிய நிர்பந்தம் உங்களுக்கு வந்தது ஏன் :) :) :)

Bruno said...

//அவனவன் ரெண்டாயிரம் வருஷம், மூணாயிரம் வருஷத்திற்கு முந்தைய எங்கள் இசை கருவிகள் அப்படின்னு பெருமையா சொல்லி அவர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை சிறப்பாக கூறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்//

அப்படிப்பட்ட கருவிகள் யாவை
ஒரு பட்டியல் தாருங்கள்

Bruno said...

// ஒரு மாற்றுக் கருத்தாக, இதே போல ஒன்று மலையாளத்தில் எடுக்கப் பட்டிருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள் இதன் அபத்தம் புரியும் //

தங்கள் அபிமான இசையமைப்பாளரை விட சிறந்த ஒருவர் இசையமைத்துவிட்டாரே என்ற வயிற்றெரிச்சலில் மலையாளிகள் பொது வெளியில் அந்த பாடலை குறை சொல்லியிருக்கமாட்டார்கள்

அபத்தம் என்னவென்று எனக்கு புரிகிறது

உங்களுக்கு புரிகிறதா அண்ணாச்சி :) :)

Bruno said...

அது சரி

இந்த பாடலில் வரும் பொய்க்கால் குதிரை ஆட்டம், மேளம், நாதஸ்வரம் எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா

--

இரு பழமொழிகள் நினைவிற்கு வருகின்றன

1. பூனை கண்னை மூடிக்கொண்டு உலகம் இருண்டது என்று நினைத்ததாம்

2. காமாலை காரருக்கு கண்டதெல்லாம் மஞ்சள்

--

ராவணன் said...

//புருனோ Bruno said...

அது சரி

இந்த பாடலில் வரும் பொய்க்கால் குதிரை ஆட்டம், மேளம், நாதஸ்வரம் எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா

--

இரு பழமொழிகள் நினைவிற்கு வருகின்றன

1. பூனை கண்னை மூடிக்கொண்டு உலகம் இருண்டது என்று நினைத்ததாம்

2. காமாலை காரருக்கு கண்டதெல்லாம் மஞ்சள்//

இந்த புருனேவிற்கு என்னய்யா கடுப்பு?
வாசனை பிடித்துக்கொண்டு பின்னாடியே வந்துடுவாரு!

இளையாராஜா மாதிரி ஒரு இசைஅமைப்பாளர் யாரும் இல்லை..இந்த ரகுமானெல்லாம் ஒரு தகர டப்பா...என் பின்னாடியும் வாசனை பிடித்து வரட்டும்...

Bruno said...

//இந்த புருனேவிற்கு என்னய்யா கடுப்பு?
வாசனை பிடித்துக்கொண்டு பின்னாடியே வந்துடு//

ஐயா பெரியவரே
இது ரகுமான் பாடல் இடுகை

//
இளையாராஜா மாதிரி ஒரு இசைஅமைப்பாளர் யாரும் இல்லை..இந்த ரகுமானெல்லாம் ஒரு தகர டப்பா...//

இளையராஜாவின் ரசிகர் என்பதை நிருபித்துள்ளீர்கள்

//என் பின்னாடியும் வாசனை பிடித்து வரட்டும்..//
மன்னிக்கவும்
எனக்கு நிறைய வேலை இருக்கிறது

தரிசு said...

என்னங்க ஒரு நாலு celebrates அய் காட்டுவது தான் கல் தோன்றி,மண் தோன்றா காலத்தில் தோன்றிய மொழியின் சிறப்பை, தொன்மையை, பழமையை விளக்குமோ?

S.Raman, Vellore said...

முதல் கோணல்





செம்மொழி மாநாட்டின் முதல் கோணலாக மிக அதிகமாக விளம்பரம் செய்யப்பட்ட செம்மொழிப்பாடல் அமைந்து

போனது. ரோஜாவில் தொடங்கி இன்று வரை தமிழ்

வார்த்தைகளை கடித்துக் குதறித் துப்பிக் கொண்டிருக்கும் ரஹ்மானின் புரியாத இன்னும் ஒரு பாடலாக செம்மொழிப் பாடல் உள்ளது

வருத்தமாகவே உள்ளது. தமிழக ஆட்சியில் நாடகங்கள்

நடக்கிறது, மக்களின் பணத்தில். அதுவும் இப்படி விரயமாகவே

போகிறது. இன்னும் எத்தனை கூத்துக்களோ

Anonymous said...

ஸ்வாமி ஓம்கார் said...

//அன்பு உடன்பிறப்பே....

நாக்க முக்க என்ற திருப்பாடலை பாடிய அந்த தெய்வீகக்குரலை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா? கடைசியில் அவரும் முகம் காண்பிக்கிறாரே :)//

சுவாமிஜி நம்மை விட லௌதீக விஷயங்களிலும், நித்தியை விட அதிகமாக டிவி நிகழ்ச்சிகள் பார்ப்பதிலும் கவனம் செலுத்துகிறார் போலிருக்கு :)

Anonymous said...

புருணோ,

முரட்டு வாதம் புரிகிறீர்கள்.

அது சிந்தசைசர் இசை என்பதில் உங்களுக்கும் உடன்பாடுதானா?

நான் சொல்ல வந்த அபத்தத்தை நீங்கள் அபத்தமாகப் புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்.

ராசாவா ரஹ்மானா என்பதில் இல்லை வாதம். தமிழின் சிறப்பை எடுத்துக் காட்டும் விதமாக அந்தப் பாடலோ பாடியவர்களோ அல்லது படப்பிடிப்போ இல்லை என்பது என் வாதம்.

Anonymous said...

பிடித்தவர் பிடிக்காதவர் என்பதைத் தாண்டி நேர்மையான் விமர்சன வைப்பவர்கள் மலையாளிகள்.

மேலும் எதை விட்டுக் கொடுத்தாலும் தங்கள் கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்காதவர்கள் அவர்கள்.

செம்மொழியான மலையாளம் என்று ஒரு வீடியோவை நம்ம ஊர் பாரதி ராஜாவை வைத்து எடுப்பார்களா? என்ன பேசுகிறீர்கள்?

தமிழ்க் கலாச்சாரம் பற்றி மேனனுக்கு என்ன தெரியும். அவர் இங்கே வியாபாரம் செய்து பிழைக்க வந்தவர்தானே? ஏன் தங்கர் பச்சானையோ அல்லது பாரதி ராஜவையோ எடுக்கச் சொல்லவில்லை? அவர்கள்தானே இந்த மண்வாசனையில் பிறந்து வளர்ந்தவர்கள்.

Jack said...

திரு. புருனோ அவர்களுக்கு, நான் இளையராஜா சிறந்தவரா இல்லை ரஹ்மான் சிறந்தவரா என்ற விவாதத்திற்கு போக விரும்ப வில்லை.
இந்த பாடல் மேற்கத்திய பாணி இசையை கொண்டுள்ளதா இல்லையா?

Jack said...

//அவனவன் ரெண்டாயிரம் வருஷம், மூணாயிரம் வருஷத்திற்கு முந்தைய எங்கள் இசை கருவிகள் அப்படின்னு பெருமையா சொல்லி அவர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை சிறப்பாக கூறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்//

அப்படிப்பட்ட கருவிகள் யாவை
ஒரு பட்டியல் தாருங்கள்///

http://en.wikipedia.org/wiki/Ancient_Tamil_music

Hope this link will give you a smaal idea.
I think 'parai' was not mentioned in that link. you can add that also.

///அது சரி

இந்த பாடலில் வரும் பொய்க்கால் குதிரை ஆட்டம், மேளம், நாதஸ்வரம் எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா////

நாய் சேகர் தான் ஞாபகத்துக்கு வருகிறார்.
பாத்துக்க பாத்துக்க நானும் ரவுடிதான்!

Jack said...

///இரு பழமொழிகள் நினைவிற்கு வருகின்றன
1. பூனை கண்னை மூடிக்கொண்டு உலகம் இருண்டது என்று நினைத்ததாம்
2. காமாலை காரருக்கு கண்டதெல்லாம் மஞ்சள்///

எப்படி உங்களுக்கும் அப்படியே பொருந்துகிறது?

Bruno said...

//என்னங்க ஒரு நாலு celebrates அய் காட்டுவது தான் கல் தோன்றி,மண் தோன்றா காலத்தில் தோன்றிய மொழியின் சிறப்பை, தொன்மையை, பழமையை விளக்குமோ? //

அந்த பாடலில் வந்த ஒரு குழந்தை பள்ளிக்கு செல்வது, அங்கு கற்பது, ஒரு பெண் வேலைக்கு செல்வது, ஒரு திருமணம், ஒரு ஆரத்தி, ஒரு கிராமத்து கொடை, அங்கு நடக்கும் கிராமிய கலைகள் எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா

உங்களுக்கு குறை பார்வையிலா, மனதிலா

Bruno said...

//ரோஜாவில் தொடங்கி இன்று வரை தமிழ்

வார்த்தைகளை கடித்துக் குதறித் துப்பிக் கொண்டிருக்கும் ரஹ்மானின் புரியாத இன்னும் ஒரு பாடலாக செம்மொழிப் பாடல் உள்ளது //

சின்ன சின்ன ஆசை பாடலில் எந்த வார்த்தை உங்களுக்கு புரியவில்லை

அல்லது வெள்ளை மழை பாடலில் எந்த வார்த்தை கடித்து குதறப்பட்டிருந்தது

சரி

இந்த பாடலில் (கம்பர் அவ்வை வரும் வரி தவிர) எந்த வார்த்தை தெளிவில்லை

என்று கூற முடியுமா

Bruno said...

//முரட்டு வாதம் புரிகிறீர்கள்.//

முரட்டு வாதமாக இருக்கலாம். ஆனால் சரியான வாதம் !!

//அது சிந்தசைசர் இசை என்பதில் உங்களுக்கும் உடன்பாடுதானா?//

உடன்பாடுதான்.

ஏனென்றால் நான் கணினியில், இணையத்தில் உங்களுக்கு இந்த மறுமொழியை கூறுகிறேன். உங்கள் பாஷையில் இது கூட சிந்தசைசர் தமிழ் வார்த்தைதான் !!

நீங்கள் வலைத்தளம் எழுதுவது கணினியிலா, அல்லது எழுத்தாணி கொண்டு ஓலைச்சுவடியிலா

---

குறை கூற வேண்டுமே என்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் கண்டுபிடிக்கும் காரணங்களை பார்த்து வியப்பின் உச்சத்திற்கே செல்கிறேன் சார்

Bruno said...

//நான் சொல்ல வந்த அபத்தத்தை நீங்கள் அபத்தமாகப் புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். //

சரி
அது என்ன அபத்தம் என்று தெளிவாக கூறுங்கள்

//ராசாவா ரஹ்மானா என்பதில் இல்லை வாதம். //

இதை இப்பொழுது கூறுகிறீர்கள். 16 June 2010 2:48 PM நீங்கள் கூறியதை பாருங்கள்

ஏன் தேவா, ஆதித்யன் பெயர்களை விட்டு விட்டீர்கள் :) :) :)

Bruno said...

//செம்மொழியான மலையாளம் என்று ஒரு வீடியோவை நம்ம ஊர் பாரதி ராஜாவை வைத்து எடுப்பார்களா? என்ன பேசுகிறீர்கள்?//


உங்கள் பிரச்சனை அது யாரால் எடுக்கப்பட்டது என்பது தான்
பாடல் எப்படி உள்ளது என்பது உங்கள் பிரச்சனையில்லை

உங்களுக்கு பிடித்த ஒருவரால் எடுக்க படாத ஒரே காரணத்திற்காக இதை குறை கூற வேண்டுமா

என்ன கொடுமை சார் இது

Bruno said...

//இந்த பாடல் மேற்கத்திய பாணி இசையை கொண்டுள்ளதா இல்லையா? //

பாடல் எவ்வளவு வினாடிகள் உள்ளது
அதில் எத்தனை வினாடிகள்

தமிழிசை உள்ளது
கர்நாடக இசை உள்ளது
ஹிந்துஸ்தானி உள்ளது
பாரம்பரிய மேற்கத்திய உள்ளது
நவீன மேற்கத்திய இசை உள்ளது

என்று கூற முடியுமா

--

எனக்கு தெரிந்த வரை இந்த அனைத்தும் இந்த பாடலில் உள்ளது

--

தமிழ் மொழியானது எவ்வகை இசைக்கும் ஈடு கொடுக்க வல்லது என்பதை பறைசாற்ற இப்படி எடுத்திருக்கலாம் என்பது என் கருத்து

எந்த வகை இசையென்றாலும் தமிழ் அதில் பொருந்தும் என்பதை காட்டியுள்ளதை சாதனையாகவே நினைக்கிறேன்

Bruno said...

//http://en.wikipedia.org/wiki/Ancient_Tamil_music

Hope this link will give you a smaal idea.
I think 'parai' was not mentioned in that link. you can add that also. //

நன்றி

இந்த கருவிகள் இந்த பாடலில் பயன்படுத்தப்படவில்லை என்கிறீர்களா

பாடலை மீண்டும் ஒரு முறை கேட்டுப்பாருங்கள்

Bruno said...

//எப்படி உங்களுக்கும் அப்படியே பொருந்துகிறது? //

மன்னிக்கவும்

நீங்கள் முற்றிலும் தவறான ஒரு வாதத்தை வைத்துள்ளீர்கள்.

Thamira said...

தமிழ் மொழியானது எவ்வகை இசைக்கும் ஈடு கொடுக்க வல்லது என்பதை பறைசாற்ற இப்படி எடுத்திருக்கலாம் என்பது என் கருத்து

எந்த வகை இசையென்றாலும் தமிழ் அதில் பொருந்தும் என்பதை காட்டியுள்ளதை சாதனையாகவே நினைக்கிறேன் //

இது சூப்பர் டாக்டர். ஐ லைக் தட்.!

Jack said...

///எந்த வகை இசையென்றாலும் தமிழ் அதில் பொருந்தும் என்பதை காட்டியுள்ளதை சாதனையாகவே நினைக்கிறேன்///

வேற எந்தெந்த மொழிகளில் எல்லா வகையான இசையும் பொருந்தாது என்று கூற முடியுமா? பெரும்பான்மை மேற்கத்திய பாணியிலேயே இப்பாடல் அமைந்துள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. நடுவுல கொஞ்சம் கொஞ்சம் தமிழ் இசையை சேர்த்து விட்டு நானும் ரவுடிதான் என்று குதித்தால் என்ன செய்வது?
தூங்குறவங்களை எழுப்பிடலாம். தூங்குற மாதிரி நடிக்கிரவங்களை மூஞ்சில சுடுதண்ணி ஊத்திக் கூட எழுப்ப முடியாது. எனக்கு இதில் கூற இனி ஒன்றும் இல்லை. உண்மையை ஏற்றுக் கொள்ளாத விதண்டா வாதங்களுக்கு ஒன்னும் செய்ய முடியாது, உங்களிடம் சிகிச்சை பெறுபவர்களை நினைத்து பரிதாபப் படுவதை தவிர.

Anonymous said...

டாக்டர்

சரியான வாதமாகத் தெரியவில்லை.

தமிழ்மொழியின் சிறப்பைப் பற்றிய பாடல் காணொளி இது. அதில் அதற்கான சிறப்பு ஏதுமில்லை என்பது என் வாதம்.

ஏன் இயக்குனரைச் சொல்கிறேன் என்றால் தமிழின் பாரம்பர்யத்தை உண்ராத ஒருவரை வைத்து எடுத்தால் எப்படி இருக்கும்.

தாலாட்டுப் பாட்டு, நாட்டுபுறப்பாடு, கூலி ஆட்களின் பாட்டு போன்றவற்றைக் காணவில்லை. மேலும் கரகாஆட்டம் காட்டப் பட்டிருக்கும் விதம் செயற்கைத் தனமானது. அது போலவே குதிரை ஆட்டமும்.

கிராமங்களை அதன் இயற்கைக் குணத்துடன் காட்டிய பாரதி ராஜா இதற்குப் பொருத்தமானவர் என்உ சொல்லுகிறேன். நீங்கள் உடனே ஏன் மற்றவர்களைச் சொல்லவில்லை என முரட்டு வாதம் செய்கிறீர்கள்.

என்னைப் பொருத்தவரை மேகி நூடுல்ஸ் சாப்பிட்ட உணர்வுதான் இருக்கிறதே தவிர நமது பாரம்பர்ய உணவு சாப்பிட்டது போல இல்லை.

யாவரும் கேளிர் என்றால் அனைவரும் உறவு என்று அர்த்தம். ரஹ்மான் யாவரும் கேளீர் எனப் பாடுகிறார். என்ன அர்த்தம் டாக்டர்?

உங்களுக்குப் புரியும் விதமாக எடுத்துச் சொல்ல என்னால் இயலவில்லை. மேலும் நீங்களும் எதையும் ஒத்துக் கொள்ளும் மன நிலையில் இல்லை. எனக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கு நீங்கள் அளிக்கும் பதிலும் அப்படியே இருக்கு. எனவே இதில் வாதம் செய்வது அர்த்தமில்லை.

எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்கான காரணத்தைச் சொன்னேன். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. நானும் என் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டியதுமில்லை.

Bruno said...

//லா வகையான இசையும் பொருந்தாது என்று கூற முடியுமா? //

எனக்கு தெரியவில்லை
தெரிந்தால் நீங்கள் கூறுங்கள்

தெரிந்து கொள்ள தயாராகவே உள்ளேன்


//பெரும்பான்மை மேற்கத்திய பாணியிலேயே இப்பாடல் அமைந்துள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. //
எனக்கு அப்படி தெரியவில்லை. என்னைப்பொருத்தவரை இந்த பாடலில் மேற்கத்திய பாணி மிக சிறிய அளவே உள்ளது

நான் ஏற்கனவே இது குறித்து ஒரு கேள்வியை கேட்டுவிட்டேன்

அதே கேள்வியை மீண்டும் கேட்கிறேன்
பாடல் எவ்வளவு வினாடிகள் உள்ளது
அதில் எத்தனை வினாடிகள்

தமிழிசை உள்ளது
கர்நாடக இசை உள்ளது
ஹிந்துஸ்தானி உள்ளது
பாரம்பரிய மேற்கத்திய உள்ளது
நவீன மேற்கத்திய இசை உள்ளது

என்று கூற முடியுமா

இதற்கு நீங்கள் பதிலளித்தால் அனைவருக்கும் உண்மை தெரியும்

Bruno said...

//தூங்குறவங்களை எழுப்பிடலாம். தூங்குற மாதிரி நடிக்கிரவங்களை மூஞ்சில சுடுதண்ணி ஊத்திக் கூட எழுப்ப முடியாது//

அதே அதே

எந்த இசை எவ்வளவு நேரம் வருகிறது என்று கூறினால் தூங்குவது போல் நடிப்பது யார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

உங்களுக்கு உதவ கே.ரவிசங்கரின் இடுகையை பரிந்துரைக்கிறேன்

Bruno said...

//எனக்கு இதில் கூற இனி ஒன்றும் இல்லை. உண்மையை ஏற்றுக் கொள்ளாத விதண்டா வாதங்களுக்கு ஒன்னும் செய்ய முடியாது, உங்களிடம் சிகிச்சை பெறுபவர்களை நினைத்து பரிதாபப் படுவதை தவிர. //

கருத்துடன் மோத முடியாமல் கருத்து கூறும் நபரை தாக்குவதன் மூலம் உங்கள் தரப்பில் எவ்வளவு நியாயம் உள்ளது என்று தெள்ளத்தெளிவாக எடுத்து கூறிவிட்டீர்கள்

மிக்க நன்றி.

உங்களின் (அ)நாகரிகத்தை வெளிப்படுத்தியதற்கும் மேலும் நன்றிகள்.

Bruno said...

//சரியான வாதமாகத் தெரியவில்லை.
//

எது சரியான வாதமாக தெரியவில்லை என்று குறிப்பிட்டு கூற வேண்டுகிறேன்

அப்படி அது ஏன் சரியாக் தெரியவில்லை என்றும் கூற வேண்டுகிறேன்

Bruno said...

//தமிழ்மொழியின் சிறப்பைப் பற்றிய பாடல் காணொளி இது. அதில் அதற்கான சிறப்பு ஏதுமில்லை என்பது என் வாதம்.//

சிறப்புகள் பல உள்ளன என்று நான் பட்டியலிட்டுள்ளேன்

எனவே சிறப்பு ஏதுமில்லை என்ற உங்கள் கருத்து தவறு என்று ஆணித்தரமாக பதிகிறேன்

Bruno said...

//தாலாட்டுப் பாட்டு, நாட்டுபுறப்பாடு, கூலி ஆட்களின் பாட்டு போன்றவற்றைக் காணவில்லை. //

தமிழுக்கு என்ற சிறப்புகள் பல உள்ளன

ஒரு 6 நிமிட பாட்டில் அனைத்தையும் கொண்டுவர முடியாது.

எனவே கண்டிப்பாக விடுபட்டவை பட்டியல் இருக்கும்

தாலாட்டும், நாட்டுப்புறப்பாடும், கூலியாட்களின் பாட்டும் இருந்தால் ஒப்பாரி இல்லை என்பீர்கள்

அதையும் சேர்த்தால் வில்லுப்பாட்டு இல்லை என்று குறை கூறலாம்

அதையும் சேர்த்தால் கூத்து, தப்பாட்டாம், என்று விடுபட்டவை பட்டியலை சேர்த்துக்கொண்டே செல்லலாம்

//மேலும் கரகாஆட்டம் காட்டப் பட்டிருக்கும் விதம் செயற்கைத் தனமானது. அது போலவே குதிரை ஆட்டமும். //

இது உங்கள் கருத்து
இதை மறுக்க முடியாது

ஆனால் முதலில் நீங்கள் கூறியது
அதில் அதற்கான சிறப்பு ஏதுமில்லை என்பது என் வாதம்.
இப்பொழுது கூறுவது
கரகாஆட்டம் காட்டப் பட்டிருக்கும் விதம் செயற்கைத் தனமானது. அது போலவே குதிரை ஆட்டமும்.

முன்னுக்கு பின் முரணாக கூறியுள்ளீர்கள் என்பதை சுட்டிக்காட்ட கடமைபட்டுள்ளேன்

:) :)

Bruno said...

//கிராமங்களை அதன் இயற்கைக் குணத்துடன் காட்டிய பாரதி ராஜா இதற்குப் பொருத்தமானவர் என்உ சொல்லுகிறேன்.//

அதை நான் மறுக்கவில்லை.

ஆனால் படைப்பை விமர்சிக்காமல் படைப்பாளியை விமர்சிக்கும் போக்கை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது

// நீங்கள் உடனே ஏன் மற்றவர்களைச் சொல்லவில்லை என முரட்டு வாதம் செய்கிறீர்கள்.//
என் வாதத்தை மீண்டும் வாசியுங்கள் சார்

Bruno said...

//
என்னைப் பொருத்தவரை மேகி நூடுல்ஸ் சாப்பிட்ட உணர்வுதான் இருக்கிறதே தவிர நமது பாரம்பர்ய உணவு சாப்பிட்டது போல இல்லை.
//

அது உங்கள் கருத்து
இதை நான் மறுக்க வில்லை

Bruno said...

//
யாவரும் கேளிர் என்றால் அனைவரும் உறவு என்று அர்த்தம். ரஹ்மான் யாவரும் கேளீர் எனப் பாடுகிறார். என்ன அர்த்தம் டாக்டர்?//

தெரியவில்லை சார்

நீங்களே கூறிவிடுங்கள்

Bruno said...

//உங்களுக்குப் புரியும் விதமாக எடுத்துச் சொல்ல என்னால் இயலவில்லை. //

ஏற்றுக்கொள்கிறேன்

//மேலும் நீங்களும் எதையும் ஒத்துக் கொள்ளும் மன நிலையில் இல்லை.//
மறுக்கிறேன்

நீங்கள் கூறியவற்றில் பலவற்றை ஏற்றுக்கொண்டுள்ளேன்

ஆனால் பலவற்றை மறுத்துள்ளேன்

ஏன் மறுத்துள்ளேன் என்ற காரணமும் அளித்துள்ளேன்

//எனக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கு நீங்கள் அளிக்கும் பதிலும் அப்படியே இருக்கு.//

அது அவர்களின் கருத்தைப்பொருத்தது

//எனவே இதில் வாதம் செய்வது அர்த்தமில்லை.//

வாதத்தை ஆரம்பித்தது நானல்ல என்பதை நினைவு படுத்துகிறேன்

சு.சிவக்குமார். said...

//உங்களுக்கே அவர் இசை மேல் நம்பிக்கை இல்லையா//

உங்களுக்கு A.R மேல் நம்பிக்கையிருக்கும் பட்சத்தில் ஏன் இங்கு பலபேர் அவரவர் தாங்களாகவே சொன்ன சுய அபிப்ராயத்திற்கு நீங்கள் ஒருவரே வரிந்து கட்டிக்கொண்டு பதில் கூறும் நிர்பந்தம் உங்களுக்கு ஏற்பட்டது ஏன்???

//தமிழர் ஒருவர் சிம்பொனி இசையமைத்திருக்கிறாரா

அந்த இசையை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா

ஏனென்றால் பலரும் ஆரட்டோரியா, ஓரட்டோரியா என்று ஏதோ சொல்கிறார்களே//

சாரி சார் உங்க அளவுக்கு எனக்கு புலமையில்லை. இப்ப இதை கேப்பீங்க..அப்புறம் அதுக்கு இலக்கணம் கேப்பீங்க..அப்புறம் வாத்தியங்களைப் பற்றி கேட்பீங்க..அப்புறம் பீத்தோவன்,மொசார்ட்,பாக்னர் அவர்களுடைய இலக்கணத்தை அவர்களுடைய பாசையிலேயே சொல்லி என்னை பிரமிக்க வைப்பீங்க...கொய்யால இதுக்கு நான் சிம்பொனியே கற்றுக்கொள்ளளாம்னு தோனும்...

//எனக்கு தெரிந்து ஒருத்தர் அவரை விட திறமையானவர் வந்தாதால் பீல்ட் அவுட்டானவுடன் சிம்பொனி அமைத்ததாக ஊரை ஏமாற்றினார்//

நான் பிறந்த முதல் இளையராஜா இசைக் கேட்டு வளர்ந்திருக்கிறேன். இப்போது எனக்கு 28 வயது இன்னமும் அவருடைய இசையை கேட்டுக்கொண்டிருக்கிறேன். என்னால் அழுத்தம் திருத்தமாக கூற முடியும்.இப்பொழுதே நான் சாகும் வரைக் கேட்பதற்கான இசையை அவர் அமைத்துவிட்டார். அதுவே எனக்கு போதுமானது. ஆனால் என்னுடைய 11வது வயதிலிருந்து A.R. கேட்டு வருகிறேன். இப்பொழுதே எனக்கு பெரும்பாலான பாடல்கள் சலித்துவிட்டது. கவனிக்க எனக்கு.
//BBC யில் சில வருடங்களுக்கு முன்னாடி தொடர்ந்து ஒரு வாரம் தமிழ் பாடல்கள் ஒலி பரப்பி அதுல அனைவராலும் மிகவும் விரும்பட்ட பாடல் எதுன்னு கேட்டப்ப, முதல் இடத்தை பிடித்த பாடல் தளபதியில் இருந்து ”ராக்கம்மா கையத்தட்டு ” தான்.//

இது ஜனநாயக முறைப்படி நடந்தது.தற்போது விஜய் டி.வியில் ரசிகர் வாக்கெடுப்பு போல...

//அதே போல் Just Plain Folks Music Award For Best Music Album விருதில் அவர் மூன்றாவது பரிசு பெற்றதை நீங்கள் மறந்து விட்டீர்கள்

இங்க பாருங்க http://www.jpfolks.com/09albumwinners.html

எவ்வளவு பெரிய சாதனை அது//

இது எப்படி என்று விளக்கினால் கேட்டுக்கொள்கிறேன்.

//சிறந்த இசையமைப்பாளரைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்//

எந்த தரவுகளின் அடிப்படையில் என்று விளக்கினால் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.

//ஆனால் உலகம் முழுவதும் பாலிவுட்டிலிருந்து ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா வரை யாரை கொண்டாடுகிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்//

சாரி சார் அவங்களுடைய பழக்கம் ரெண்டு கையிலும் சாப்பிடறது,தொடைக்கிறதுக்கு டிஸ்யூ பேப்பர்.சாவுக்கு கோட்சூட்.

நம்க்கு சில சம்யம் சட்டியைக் கவுத்து குடிக்கிறது.கம்மாரக் கரையில் வேப்பங்குச்சியை வாயில வெச்சுட்டு,குத்தவைச்சு ஊர்க்கதைப் பேசி அப்போதைக்கு கல்லுல தொடைச்சிட்டு,அப்புறமா பீச்சாய்கையில் அலம்பிக்கிறது.சோ என்னோட ரசனை இவங்களோட ஒத்துப்போகனும்னு அவசியமிலலை.

Bruno said...

//எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்கான காரணத்தைச் சொன்னேன். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. நானும் என் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டியதுமில்லை. //

இங்கு தான் பிரச்சனை

உங்களுக்கு பாடல் பிடிக்கவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்

அதில் எந்த சந்தேகமும் கிடையாது

ஒரு பாடலை உங்களுக்கு பிடிப்பதும், ஒரு பாடலை உங்களுக்கு பிடிக்காமல் இருப்பதும் உங்கள் உரிமை.

அதில் நானோ யாரும் தலையிட முடியாது

எனக்காக நீங்கள் உங்களுக்கு பிடிக்காததை பிடித்ததாகவோ அல்லது பிடித்ததை பிடிக்காததாகவோ மாற்ற வேண்டும் என்று அவசியமே இல்லை

அதே போல்

ஏன் பிடிக்கவில்லை என்பதற்கு காரணமே தேவையில்லை
ஏன் பிடித்தது என்பதற்கும் காரணமே தேவையில்லை


ஆனால்

நீங்கள் கூறும் காரணங்கள் தவறு என்றால் அதை சுட்டிக்காட்டி அந்த காரணங்களை மறுக்க எனக்கு உரிமை உள்ளது

அதைத்தான் நான் செய்தேன்

Bruno said...

உங்களுக்கு பிடிக்கவில்லை என்று நீங்கள் முதலில் கூறிய காரணம் என்ன

16 June 2010 2:48 PM

1. தமிழ்க் கலாச்சாரம் எங்குமே பெருமைப்படுத்தப் படவில்லை.

இது முற்றிலும் தவறான வாதம். இது குறித்து நான் விளக்கியுள்ளேன்.
நான் விளக்கியபின்னர் நீங்களும் கூட கரகம், பொய்க்கால் ஆட்டம் உள்ளன என்பதை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள்

பாடல் பிடிக்கவில்லை என்பது உங்கள் சொந்த கருத்து. அதை நாங்கள் மறுக்கவில்லை

ஆனால்

அதற்காக பாடலில் தமிழ்க் கலாச்சாரம் எங்குமே பெருமைப்படுத்தப் படவில்லை என்ற தவறான தகவலை பதிவதை ஏற்றுக்கொள்ள முடியாது

இது தான் பிரச்சனை

சு.சிவக்குமார். said...

எனக்கு பிடித்தது என்பது வேறு
சிறந்தது என்பது வேறு

இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்.

நன்றி சார். சிறந்தையோ உண்மையையோ சொல்றது என்னோட வேலையில்லை. நான் எதை நம்புகிறேனோ அதைச் சொல்றதுதான் எனக்குப் பிடித்தமானது.இந்தக் கருத்து என்னோட முடிஞ்சு போகுது.ஆனா நீங்க சொல்ற சிறந்தது அப்படியில்லை. இன்னிக்கு நீங்க,நாளை வேறொருவர்,அப்புறம் ஒரு குழு,அப்புறம் ஒரு அமைப்பு,அப்புறம் ஆராய்ச்சிக் குழு..இப்படி போய்கிட்டேயிருக்கும்.

சோ நான் தெளிவா சொல்றது எனக்கு மல்லிகைய இதனால பிடிக்கலை..கனகாம்பரம் இதனால பிடிச்சிருக்கு..அப்படீன்னுதான்...நீங்கதான் இப்ப ஊடால பூந்துட்டு அதை எப்படி நீ அப்படி சொல்லாம் என்னை கேக்காம அப்படீன்னு தொடையைத் தட்டீட்டு நிக்கிறீங்க...

Bruno said...

தவறான கருத்து 2

அசல் வாத்தியங்களை விடுத்து சிந்தசைசர் பாடல் இது.

இந்த கருத்தும் ஏன் தவறு என்று நான் விளக்கி விட்டேன்

தவறான கருத்து 3 மற்றும் 4

எஸ்பிபியை ஒதுக்கியதில் உள்ள அரசியல் என்ன?

தமிழ்க் கலாச்சாரம் பற்றி மேனனுக்கு என்ன தெரியும். அவர் இங்கே வியாபாரம் செய்து பிழைக்க வந்தவர்தானே?

இதிலும் ஒரு முரண் உள்ளது !!!! :) :) :)

தெரிகிறதா

அல்லது எதாவது உங்கள் கண்களை மறைத்து விட்டதா

தவறான கருத்து 5
தமிழின் சிறப்பை எடுத்துக் காட்டும் விதமாக அந்தப் பாடலோ பாடியவர்களோ அல்லது படப்பிடிப்போ இல்லை என்பது என் வாதம்.
இதற்கு பதில் 17 June 2010 5:07 PM
அளிக்கப்பட்டுள்ளது

ஆக என் பிரச்சனை உங்களுக்கு பாடல் பிடித்ததா அல்லது பிடிக்கவில்லையா என்பதல்ல

அதற்கு காரணம் கூறும் போது நீங்கள் பதியும் பல தவறான தகவல்களே (அதிலும் முன்னுக்கு பின் முரணாக) என்னை பதிலளிக்க வைத்துள்ளன


---

கருத்து, தகவல், நம்பிக்கை மூன்றும் வேறு !!

Bruno said...

தகவல் வேறு (fact)
கருத்து வேறு (opinion)
நம்பிக்கை வேறு (belief)

தகவல் என்பது தான் உண்மை தகவல் X பொய் தகவல் அல்லது
சரியான தகவல் X தவறான தகவல் என்று வகைப்படும்.


உதாரணம் :
சரியான தகவல் - பெட்ரோல் விலை 55 ரூபாய்
தவறான தகவல் - பெட்ரோல் விலை 25 ரூபாய்

கருத்து என்பதில் சரியான கருத்து, தவறான கருத்து என்று எதுவுமே கிடையாது. ஒருவருக்கு சரியானதாக தோன்றும் கருத்து அடுத்தவருக்கு தவறாக தோன்றலாம்

ஒரு கருத்து - தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் அரசுடமை ஆக்கப்பட வேண்டும்

வேறு ஒரு கருத்து - பெட்ரோலுக்கு ரேஷன் முறை கொண்டு வர வேண்டும்.

ஒரு கருத்து - பொது இடங்களில் புகைபிடிக்க தடை வேண்டும்
மாற்றுக்கருத்து - பொது இடங்களில் புகை பிடிக்க அனுமதிக்க வேண்டும்

இதில் (opinion) என்பது இடம், பொருள், நேரம், நபர் என்று வேறு படும்.

அடுத்தவர் கூறும் கருத்துக்களை எதிர்க்க வேண்டியது இல்லை. ஆனால் அவர்கள் தாங்கள் கூறும் கருத்துடன் ஏதேனும் தவறான தகவல்களை தந்தால் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். உதாரணமாக தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று கூற அனைவருக்கும் உரிமை உள்ளது. அது அவரவர் கருத்து. உங்கள் கருத்து வேறென்பதற்காக அவர் தனது கருத்தை மாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது

ஆனால் அப்படி தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று (கருத்து) கூறும் ஒருவர் தவறான புள்ளி விபரங்களை தந்தால் (தவறான தகவல்), அந்த புள்ளி விபரங்களுக்கு எதிராக நாம் பேசலாம். (உதாரணம் மருத்துவ கவுன்சில் தலைவர் / மருத்துவ கல்வி இயக்குனர் பெயரை மாற்றி எழுதுவது)

Bruno said...

//உங்களுக்கு A.R மேல் நம்பிக்கையிருக்கும் பட்சத்தில் ஏன் இங்கு பலபேர் அவரவர் தாங்களாகவே சொன்ன சுய அபிப்ராயத்திற்கு நீங்கள் ஒருவரே வரிந்து கட்டிக்கொண்டு பதில் கூறும் நிர்பந்தம் உங்களுக்கு ஏற்பட்டது ஏன்???//

காரணம் அப்படி கூறும் பலர் தங்கள் கருத்தை மட்டும் கூறிக்கொண்டு நிறுத்தவில்லை

தங்கள் கருத்துடன் பல தவறான தகவல்களையும் சேர்த்து கூறியுள்ளனர்

அந்த தவறான தகவல்களை சுட்டிக்காட்ட வேண்டிய நிர்பந்தம்

மேலே வடகரைவேலன் சார் அவர்களுக்கு விளக்கமாகவே பதிலளித்துள்ளேன்

சு.சிவக்குமார். said...

//எனக்கு தெரிந்து எந்த ஒரு ரகுமான் விசிறியும் கூட அப்படி செய்வதாக தெரியவில்லை

ஆனால்

இளையராஜாவின் ரசிகர்கள் ஏன் இது போல் சம்மந்தமில்லாத பாடல்கள் குறித்த இடுகைகளில் வந்து நல்லாயில்லை என்று மெனக்கெடுகிறார்கள் என்று தெரியவில்லை

உங்களுக்கே அவர் இசை மேல் நம்பிக்கை இல்லையா

ரகுமானின் பாட்டு நல்லாயில்லை என்று கூற வேண்டிய நிர்பந்தம் உங்களுக்கு வந்தது ஏன் :) :) :)//

நீங்க இங்க பின்னூட்டம் இடும்வரைக்கும் யாரும் யாருடைய கருத்தையும் கிராஸ் பன்னவில்லை.

சில பேர் நல்லாயிருக்கிறதுன்னாங்க.சில பேர் நல்லாயில்லை அப்படீன்னு..

இப்ப நீங்க தான் (எனக்கு தெரிந்து எந்த ஒரு ரகுமான் விசிறியும் கூட அப்படி செய்வதாக தெரியவில்லை)கிட்டத்தட்ட ஒரு நாலஞ்சு பேருக்கு வரிஞ்சுகட்டிக்கிட்டு பதில் சொல்லீடிடு இருக்கீங்க..எப்படீங்க..வைகோ..ராமதாஸ் கூட உங்ககிட்ட தோத்துருவாங்க...

Bruno said...

//தமிழர் ஒருவர் சிம்பொனி இசையமைத்திருக்கிறாரா

அந்த இசையை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா

ஏனென்றால் பலரும் ஆரட்டோரியா, ஓரட்டோரியா என்று ஏதோ சொல்கிறார்களே//

இந்த கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என்பதை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்

Bruno said...

//நான் பிறந்த முதல் இளையராஜா இசைக் கேட்டு வளர்ந்திருக்கிறேன். இப்போது எனக்கு 28 வயது இன்னமும் அவருடைய இசையை கேட்டுக்கொண்டிருக்கிறேன். என்னால் அழுத்தம் திருத்தமாக கூற முடியும்.இப்பொழுதே நான் சாகும் வரைக் கேட்பதற்கான இசையை அவர் அமைத்துவிட்டார். //

முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன்

இது உங்கள் கருத்து

இதில் உங்கள் என்பதும் முக்கியம். கருத்து என்பதும் முக்கியம்

//அதுவே எனக்கு போதுமானது. ஆனால் என்னுடைய 11வது வயதிலிருந்து A.R. கேட்டு வருகிறேன். இப்பொழுதே எனக்கு பெரும்பாலான பாடல்கள் சலித்துவிட்டது. கவனிக்க எனக்கு. //

எனக்கு (அதாவது உங்களுக்கு) என்பதை கவனித்துள்ளேன். நன்றி

Bruno said...

//இது ஜனநாயக முறைப்படி நடந்தது.தற்போது விஜய் டி.வியில் ரசிகர் வாக்கெடுப்பு போல...//

என்னது பி.பி.சி வாக்கெடுப்பு விஜய் டிவி போலவா....

புரியவில்லை

//இது எப்படி என்று விளக்கினால் கேட்டுக்கொள்கிறேன்.//

மூன்றாவது பரிசு பெறுவது சாதனையில்லையா

இதை கூட விளக்க வேண்டுமா

//எந்த தரவுகளின் அடிப்படையில் என்று விளக்கினால் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.//

சர்வதேசமும் அங்கீகரிக்கும் திறமை + பாடல்கள் என்ற ஒரு தரவை வைத்துக்கொள்ளலாம்

//நம்க்கு சில சம்யம் சட்டியைக் கவுத்து குடிக்கிறது.கம்மாரக் கரையில் வேப்பங்குச்சியை வாயில வெச்சுட்டு,குத்தவைச்சு ஊர்க்கதைப் பேசி அப்போதைக்கு கல்லுல தொடைச்சிட்டு,அப்புறமா பீச்சாய்கையில் அலம்பிக்கிறது.சோ என்னோட ரசனை இவங்களோட ஒத்துப்போகனும்னு அவசியமிலலை. //

உண்மைதான் சார்

உங்கள் ரசனை அவங்களோட ஒத்துப்போகனும்னு அவசியமில்லை

அதே போல

அவங்க ரசனை உங்களோட ஒத்துப்போகனும்னு அவசியமில்லை

!!

Bruno said...

//சோ நான் தெளிவா சொல்றது எனக்கு மல்லிகைய இதனால பிடிக்கலை..கனகாம்பரம் இதனால பிடிச்சிருக்கு..//

நீங்கள் காரனம் சொல்ல வேண்டும் என்று அவசியமே இல்லை

உங்களுக்கு எந்த மலரை வேண்டுமானாலும் பிடிக்கலாம்

ஆனால் எனக்கு மல்லிகையை பிடித்திருக்கிறது
கனகாம்பரம் வெள்ளை நிறத்தில் இருப்பதால் அதை பிடிக்க வில்லை என்று கூறினால் நாங்கள் அதை மறுப்போம். புரிகிறதா

சு.சிவக்குமார். said...

//தமிழர் ஒருவர் சிம்பொனி இசையமைத்திருக்கிறாரா

அந்த இசையை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா

ஏனென்றால் பலரும் ஆரட்டோரியா, ஓரட்டோரியா என்று ஏதோ சொல்கிறார்களே//

இந்த கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என்பதை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்

17 June 2010 5:18 PM

சார் நல்லா பாருங்க நான் பதில் அளித்துவிட்டேன்.

Bruno said...

கேள்வி 1. தமிழர் ஒருவர் சிம்பொனி இசையமைத்திருக்கிறாரா

இதற்கு பதில்கள் 1. ஆம் அல்லது 2. இல்லை அல்லது 3. தெரியாது என்று தானே இருக்க வேண்டும்

கேள்வி 2. அந்த இசையை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா

இதற்கு பதில்கள் 1. ஆம் அல்லது 2. இல்லை என்று தானே இருக்க வேண்டும்

//சார் நல்லா பாருங்க நான் பதில் அளித்துவிட்டேன். //

எந்த மறுமொழியில். தேதி, நேரம் ப்ளீஸ்

சு.சிவக்குமார். said...

ஆனால் எனக்கு மல்லிகையை பிடித்திருக்கிறது
கனகாம்பரம் வெள்ளை நிறத்தில் இருப்பதால் அதை பிடிக்க வில்லை என்று கூறினால் நாங்கள் அதை மறுப்போம். புரிகிறதா--->

என்னுடைய முதல் பதிவில் நான் எந்த இடத்தில் ரகுமானுடைய இசை சரியில்லை அப்படீன்னு சொல்லியிருக்கிறேன்னு சொல்ல முடியுமா???? என்னோட ஆதங்கம் இளையராஜா தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு இசையமைப்பதற்கு எந்த விதத்தில் அவர் மறுக்கப் படுகிறார் என்பதே. இது ஒரு ஆதங்கம்.

சு.சிவக்குமார். said...

கேள்வி 1. தமிழர் ஒருவர் சிம்பொனி இசையமைத்திருக்கிறாரா---->

அதை முதன் முதலில் சிம்பொனியில் முயற்சித்துப் பார்த்தவர்..இதற்கு அர்த்தம் சிம்பொனியில் அமைத்துள்ளார் என்று தான் பொருளா???

ஆமாம்.திருவாசக பாடல் வெளியீட்டின் போது அப்படித்தான் சொல்லப்பட்டது.

நீங்கள் இல்லவே இல்லை என்கீறீர்களா..????

இதற்கு பதில்கள் 1. ஆம் அல்லது 2. இல்லை அல்லது 3. தெரியாது என்று தானே இருக்க வேண்டும்

கேள்வி 2. அந்த இசையை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா.

திருவாசகம் கேட்டிருக்கிறேன்.அதன் இடையில் இதுதான் ”அடடே இதுதான் சிம்பொனியா..சரி இந்த இடத்தில் இந்தப் பாட்டு எப்படி வருதுன்னு பார்போம் அப்படீன்னு இளையராஜாவோட குரலில் கேட்டிருக்கிறேன்.

இதற்கு பதில்கள் 1. ஆம் அல்லது 2. இல்லை என்று தானே இருக்க வேண்டும்


17 June 2010 6:00 PM

சு.சிவக்குமார். said...

யாவரும் கேளிர் : அப்படீன்னா எல்லாருமே உறவினர்கள் அப்படீன்னு அர்த்தம்.

யாவரும் கேளீர் : அப்படீன்னா “ here attention please" ன்னு அர்த்தம்.

என்னோட முதல் பின்னூட்டத்தில் சொன்னது.இதுக்கு கூட நீங்க இன்னும் பதில் சொல்லவில்லை.ஏன்??


//முதன் முதலா கம்மாக் கரையிலேயும்...கழனியிலும் உழவர்களின் சேறில் ஊறிக் கிடந்த இசையை சிம்பொனி வரைக்கும் கொண்டு சென்றவரை விட..விருது வாங்கியவர் முக்கியமாய் போய்ட்டார்னா..எனக்கு கொஞ்சம் இல்லை,நிறையவே உறுத்தல் இருக்கிறது. நாட்டுப் புற இசையோட,கர்நாடக சங்கீதத்தையும்,மேற்கத்திய இசையையும் கலந்து அது எல்லாரும் ஏத்துக்கிற வகையில் கொடுத்தவர்.//

இதுக்கும் நீங்க பதில் சொல்லவில்லை.

Bruno said...

//என்னோட ஆதங்கம் இளையராஜா தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு இசையமைப்பதற்கு எந்த விதத்தில் அவர் மறுக்கப் படுகிறார் என்பதே. இது ஒரு ஆதங்கம். //

ஐயா. ஆதங்கப்பட உங்களுக்கு முழு உரிமை உள்ளது

அதை யாரும் மறுக்கவில்லை

//அதை முதன் முதலில் சிம்பொனியில் முயற்சித்துப் பார்த்தவர்..இதற்கு அர்த்தம் சிம்பொனியில் அமைத்துள்ளார் என்று தான் பொருளா???

ஆமாம்.திருவாசக பாடல் வெளியீட்டின் போது அப்படித்தான் சொல்லப்பட்டது.

நீங்கள் இல்லவே இல்லை என்கீறீர்களா..????//

நன்றி
தெளிவுபடுத்தியதற்கு

//திருவாசகம் கேட்டிருக்கிறேன்.அதன் இடையில் இதுதான் ”அடடே இதுதான் சிம்பொனியா..சரி இந்த இடத்தில் இந்தப் பாட்டு எப்படி வருதுன்னு பார்போம் அப்படீன்னு இளையராஜாவோட குரலில் கேட்டிருக்கிறேன்.//

நன்றி தெளிவுபடுத்தியதற்கு

Bruno said...

//முதன் முதலா கம்மாக் கரையிலேயும்...கழனியிலும் உழவர்களின் சேறில் ஊறிக் கிடந்த இசையை சிம்பொனி வரைக்கும் கொண்டு சென்றவரை விட..விருது வாங்கியவர் முக்கியமாய் போய்ட்டார்னா..எனக்கு கொஞ்சம் இல்லை,நிறையவே உறுத்தல் இருக்கிறது.//

உங்கள் கருத்தை யாரும் மறுக்கவில்லை

//நாட்டுப் புற இசையோட,கர்நாடக சங்கீதத்தையும்,மேற்கத்திய இசையையும் கலந்து அது எல்லாரும் ஏத்துக்கிற வகையில் கொடுத்தவர்//

இல்லை என்று யார் சொன்னது

சு.சிவக்குமார். said...

//ஒருவர் மட்டுமே இசையமைக்க முடியும் என்ற போது தற்சமயம் இருப்பதில் சிறந்த இசையமைப்பாளரைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்//

நீங்க இதை சொல்றதுக்கான ஆதாரம்..ஏன் இரண்டு பாடல் கூடாது...பொருளாதாரச்சிக்கலா??? அப்படீ தெரியவில்லையே!!!

Bruno said...

//நீங்க இதை சொல்றதுக்கான ஆதாரம்..ஏன் இரண்டு பாடல் கூடாது...பொருளாதாரச்சிக்கலா??? அப்படீ தெரியவில்லையே!!! //

நல்ல யோசனை !!!

இளையராஜா ரசிகர்கள் எல்லாரும் சேர்ந்து அவரிடம் கேட்டு ஒரு பாடல் வெளியிடச்சொல்லலாமே !!!

அதற்கு பாரதிராஜா காட்சியமைத்தால் இன்னும் நல்லாயிருக்கும் அல்லவா

நல்ல யோசனை
செயல்படுத்தலாமே

Jack said...

///கருத்துடன் மோத முடியாமல் கருத்து கூறும் நபரை தாக்குவதன் மூலம் உங்கள் தரப்பில் எவ்வளவு நியாயம் உள்ளது என்று தெள்ளத்தெளிவாக எடுத்து கூறிவிட்டீர்கள்

மிக்க நன்றி.

உங்களின் (அ)நாகரிகத்தை வெளிப்படுத்தியதற்கும் மேலும் நன்றிகள்///

டாக்டர் தம்பி, இந்த வியாக்கியானம் எல்லாம் நெறைய பாத்துட்டோம். பொதுவாக இந்தியாவில் மருத்துவர்களுக்கு ஒரு தலைக் கனம் மற்றும் எல்லாம் எனக்கு தெரியும் என்ற எண்ணம் கூடுதல். சரி, மூன்றாம் உலக நாடுகளின் நிலை இதுதான். உமக்கு 'நான் சொல்வது மட்டுமே சரி' என்ற கூடுதல் தகுதியும் உள்ளது.

Jack said...

////உங்களுக்கு உதவ கே.ரவிசங்கரின் இடுகையை பரிந்துரைக்கிறேன்///

இணைப்பிற்கு நன்றி. நெறைய பதில் அதிலேயே இருக்கிறது.
நேரமின்மையினால் பின்னர் வருகிறேன்.

Bruno said...

//டாக்டர் தம்பி,//
அனானி ஜாக் என்னை விட வயசானவர்

//இந்த வியாக்கியானம் எல்லாம் நெறைய பாத்துட்டோம்.//
இணையத்தில் அடிக்கடி உரையாடுபவர். அனேகமாக என்னிடம் ஏதோ விவாதத்தில் தோற்றவராக இருக்க வேண்டும்

// பொதுவாக இந்தியாவில் மருத்துவர்களுக்கு ஒரு தலைக் கனம் மற்றும் எல்லாம் எனக்கு தெரியும் என்ற எண்ணம் கூடுதல். சரி, மூன்றாம் உலக நாடுகளின் நிலை இதுதான்.//
முதலாம் உலக நாடுகளைப்பற்றியும் அறிந்தவர்

நன்றி

ஓ. அவரா நீங்கள். [வடிவேலு பாணியில் வாசித்துக்கொள்ளவும் :) :) ]


//உமக்கு 'நான் சொல்வது மட்டுமே சரி' என்ற கூடுதல் தகுதியும் உள்ளது. //
நான் கூறிய அனைத்திற்கும் ஆதாரம் அளித்துள்ளேன்

உங்கள் (அ)நாகரிகத்திற்கு நீங்களே ஆதாரம் தந்துவிட்டீர்கள்

நன்றி நன்றி

Jack said...

//லா வகையான இசையும் பொருந்தாது என்று கூற முடியுமா? //

எனக்கு தெரியவில்லை
தெரிந்தால் நீங்கள் கூறுங்கள்

தெரிந்து கொள்ள தயாராகவே உள்ளேன்///

என் இது ஒன்றுக்காவது பதில் சொல்லலாமே? கேள்வி மட்டும்தான் கேட்பீரோ? நீர்தானே சொன்னீர், தமிழ் வார்த்தைகள் மூலம் எல்லா வகை இசையையும் இணைக்க முடியும் என்று இப்பாடல் பறை சாற்றுகிறது. வேறு மொழி பற்றி தெரியாது என்றால்,இது தமிழின் தனி சிறப்பு என்று கூற முடியுமா? இதில திரும்பி நம்மள கேள்வி வேற கேக்குறீங்க? ஒன்று மட்டும் தெளிவா தெரியுது. நான் மனசுல பட்டத நேரிடையா சொல்றேன். நீங்க வார்த்தை ஜாலங்களினால் ரஹ்மான் போட்டதால் நல்லா இருக்குன்னு நிலை நிறுத்த முயற்சி பண்றீர்.

Bruno said...

//வேறு மொழி பற்றி தெரியாது என்றால்,இது தமிழின் தனி சிறப்பு என்று கூற முடியுமா?//

அப்படி நான் கூறியிருக்கிறேனா

//இதில திரும்பி நம்மள கேள்வி வேற கேக்குறீங்க?//
எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்திருந்தால் கூறுங்கள். தெரிந்து கொள்கிறேன்.

தெரிந்து கொள்ளவே கேள்வி கேட்கிறேன்

தெரியாததை தெரிந்து கொள்ள தயாராக இருப்பதாலேயே கேள்வி கேட்கிறேன்

தெரியாததை தெரிந்து கொள்ள நினைப்பது தவறா

Jack said...

//
யாவரும் கேளிர் என்றால் அனைவரும் உறவு என்று அர்த்தம். ரஹ்மான் யாவரும் கேளீர் எனப் பாடுகிறார். என்ன அர்த்தம் டாக்டர்?//

தெரியவில்லை சார்

நீங்களே கூறிவிடுங்கள்///

யாவரும் கேளீர் என்றால் எல்லாரும் கேளுங்கன்னு அர்த்தம்.

Bruno said...

//யாவரும் கேளீர் என்றால் எல்லாரும் கேளுங்கன்னு அர்த்தம். //

நன்றி சார்

இது போல் தெளிவாக விளக்கினால் எளிதில் புரிந்து கொள்ளலாம்

S.Raman, Vellore said...

கலைஞர் குடுமபத்தின் வாரிசுகள் எல்லாம் இன்று பட அதிபர்கள். ஓடுகிற

குதிரைகள்தாம் அவர்களுக்குத் தேவையே தவிர அது சரியான திசையில்

ஓடுகிறதா என்பது பற்றியெல்லாம் கவலை இல்லை. ராஜாவின் இசையில்

ஆன்மா இருந்தால் என்ன? பாரதி இயக்கத்தில் மண்ணின் மணம் இருந்தால்

என்ன? செம்மொழி மாநாடு ஒரு கொண்டாட்டம், அதிலே சொந்தத் தொழில்

லாபங்களுக்கான ஒரு பேரம் செம்மொழிப்பாட்டு. மொழிக்கான இடத்தை

சத்தங்கள் மூலம் அழிப்பதற்கான நாசகரப் பாதையை உருவாக்கியதே ரஹ்மான்தான். எல்லாப் பாட்டும் ஒரே பாட்டுதான் என்ற நிலையில் உள்ளதும்

அவர்தான். இன்று சந்தையில் இல்லை என்பதற்காக ராஜாவை அவரோடு ஒப்பிடுவது அபத்தம்.



ரஹ்மானின் பாடல்களில் குறைந்தபட்சம் அறுபது சதவிகிதத்திற்கு மேல்

தமிழ்க்கொலை செய்யப்பட்டவைதான்.

Jack said...

///அனானி ஜாக் என்னை விட வயசானவர்///

Account login க்கும் Anony க்கும் வித்தியாசம் தெரியாதா? orkutல jackdubaiநு போய் தேடுனா என் போட்டோவோட தகவல் இருக்கும்.

///அனேகமாக என்னிடம் ஏதோ விவாதத்தில் தோற்றவராக இருக்க வேண்டும்///

ஏதோ நீர் தினமும் பத்து பேருடன் விவாதத்தில் ஜெயிப்பது மாதிரியும், இதுவரை யாரும் என்னிடம் விவாதித்து ஜெயித்ததில்லை என்பது போலவும் தொனி ஒலிக்கிறது. நீர் என்ன பெரிய பரு**** ஆ என கேட்கத் தூண்டும் வார்த்தைகள். இந்திய மருத்துவர்கள் குறித்த என் பார்வை சரியே என நிருபித்து உள்ளீர்.

///முதலாம் உலக நாடுகளைப்பற்றியும் அறிந்தவர்///

தெரிந்ததனால் தான் ஒப்பிட்டு சொல்கிறேன்.

///ஓ. அவரா நீங்கள். [வடிவேலு பாணியில் வாசித்துக்கொள்ளவும் :) :) ]///

வாசித்தாயிற்று. ஒ எவரா நாங்கள்?
பயபுள்ள தானே சொல்லி, தானே சிரிச்சிக்குது, பாவம் யாரு பெத்த புள்ளையோ?

///நான் கூறிய அனைத்திற்கும் ஆதாரம் அளித்துள்ளேன்///

ஆதாரமா ???? எங்கே??? எங்கே???!!!! (இதை நீர் உம்முடைய பாணியிலேயே வாசித்து கொள்ளலாம்)

///உங்கள் (அ)நாகரிகத்திற்கு நீங்களே ஆதாரம் தந்துவிட்டீர்கள்///

லூசாப்பா நீ??? (இதை தயவு செய்து பிதாமகன் லைலா பாணியில் வாசிக்கவும்)