புதன் இரவு. டெலிவிஷனில் சானல்களை மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது அந்த நிகழ்ச்சி.
ஓர் இளம்பெண் ஜீன்ஸ், டாப்ஸுடன் மாடர்னாக அந்த ஒளிபரப்புக் கூடத்தில் நுழைகிறாள். அவளை வரவேற்கும் நிகழ்ச்சி நடத்துனரான இளைஞன் ‘நீங்கள் தயார்தானே? ரிலாக்ஸாக இருக்கிறீர்களா?’ என்றெல்லாம் கேட்கிறான். அந்தப் பெண்ணும் தலையாட்டுகிறாள். அப்படி என்ன நிகழ்ச்சி என்று நானும் ஆவலாய்ப் பார்க்க ஆரம்பித்தேன்.
இருவருமாய் ஒரு பெரிய வெண்திரை முன் அமர்கிறார்கள். இளைஞன் ரிமோட்டை செலுத்த திரை ஒளிர்கிறது. அதில்..
ஒரு இளைஞன், இளம்பெண் ஒருத்தியுடன் காஃபி டே போகும் காட்சி. மறைந்திருந்து எடுக்கப்பட்டது போல தெளிவில்லாமல் தெரிகிறது. அவன் அந்த யுவதியுடன் பேசுவதில் குழைவும், நெருக்கமும் தெரிகிறது. அடுத்த க்ளிப்பிங்கில் அந்த இளைஞன், யுவதியுடன் கார் அருகே வருகிறான். காரில் ஏறும் முன் அவளை அணைத்து கன்னத்தில் முத்தமிடுகிறான்.
இங்கே ஸ்டூடியோவில் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண் லேசாக துணுக்குறுகிறாள். காரணம் திரையில் காண்பிக்கப்படும் இளைஞன் இவளின் பாய் ஃப்ரெண்ட். அவனுடன் இருக்கும் பெண், தொலைக்காட்சி நிறுவனத்தால் அவனது நேர்மையை சோதனை செய்ய அனுப்பப்பட்ட மாடல் பெண்.
இப்படியாக ஒவ்வொரு footage ஆக காண்பிக்கப்பட காண்பிக்கப்பட , பார்த்துக்கொண்டிருக்கும் பெண் கொஞ்சம் கொஞ்சமாக உணர்சிவசப்படுகிறாள். அழத் தொடங்குகிறாள் . நிகழ்ச்சி நடத்துனர் அவரை தேற்றுகிறார். இந்தப் பெண் கேவியபடி அழுதுகொண்டிருக்கிறாள் . சிறிது நேரத்துக்குப் பின் , இன்னும் கொஞ்சம் ஆதாரங்கள் இருக்கிறது .. காண்பிக்கவா என்று கேட்கிறார் நடத்துனர் . அவள் சரியென்று தலையாட்டுகிறாள்.
காரில், பெட்ரூமில் என்று அவர்கள் முத்தமிடுவதையும் , சல்லாபிப்பதையும் காண்பிக்கிறார்கள். (அப்படியாக நாம் கொள்ள வேண்டி இருக்கிறது . காரணம் அந்த காட்சிகள் மார்ஃபிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது)
மீண்டும் அவள் அழுகை , இவர் தேற்றல்…
நடுநடுவே அந்தப் பெண்ணிடம் இப்போது என்ன உணர்கிறீர்கள் என்று வேறு கேட்டுக் கொள்கிறார். அவள் அவரா இப்படி என்னதான் நினைத்துக் கொண்டிருந்தார் இத்தனை நாள் மனதில் என்றெல்லாம் புலம்பியபபடி இருக்கிறாள். அதன்பிறகும் காட்டப்பட்ட ஒளிபரப்பில் அவன் அந்தப் பெண்ணுக்கு எதையோ பரிசளிக்கிறான். அவள் ‘உங்கள் கேர்ள் ப்ரெண்ட் எப்படி இருக்கிறாள்’ என்று கேட்கும்போது கூடிய சீக்கிரம் அவளை வெட்டி விட்டு விடுவேன். நீ தங்கம், வைரம். அவள் பித்தளை என்பதுபோன்ற வசனங்கள் பேசுகிறான். அத்தனையும் தெளிவாக பதிவாகியிருக்கிறது மறைத்து வைக்கப்பட்ட கேமராக்களில்.
சில SMS களும் , உங்கள் பாய் Friend அவளுடன் பேசிய ரெகார்டிங்கும் இருக்கிறது. என்றுவிட்டு அதையும் கொடுக்கிறார். காதலும், காமமும் கலந்த SMSகள் பேச்சுகள் …
சிறிது நேரம் கழித்து இப்போது அவர் எங்கே என்று பார்க்கிறீர்களா என்று கேட்கிறார் நடத்துனர். ஆம் என இவள் சொல்ல திரை ஒளிர்கிறது...
அதில் இவளது காதலனும், அந்தப் பெண்ணும் காருக்குள் பின் சீட்டில் முத்தம் இட்டபடி இருக்கிறார்கள். நடத்துனர் சொல்கிறார் 'இது லைவ்' என்று. கூடவே 'நாம் இருக்கும் இந்தக் கட்டிடத்தின் பேஸ்மெண்டில் தான் இந்தக் கார் நிற்கிறது போய்ப் பார்க்க நீங்கள் தயாரா என்று கேட்கிறார். அவள் சரி என சொல்ல, கேமரா குழு தொடர அவர்கள் லிஃப்டில் இறங்குகிறார்கள்.
சடாரென இவள் கார் கதவு திறந்து காதலனை அட்டாக் செய்கிறாள். அவன் முதலில் தவித்து பிறகு தன் தரப்பை நியாயப் படுத்துகிறான். ஒரு கட்டத்தில் இவள் கோவமாய் மோதிரம், இடுப்பில் இருந்து ஒரு அரைஞாண் கயிறு இரண்டையும் கழற்றி அவனிடம் வீசுகிறாள். அவன் அதை கண்டே கொள்ளாமல் 'போ உன் வேலையைப் பார்த்துக்கிட்டு' என்ற முக பாவத்துடன் போகிறான். இந்தப் பெண்ணை இப்போது உங்கள் முடிவு என்ன என்று நிகழ்ச்சி நடத்துபவர் கேட்க ‘இனி அவனுக்கு என் வாழ்வில் இடமில்லை’ என்கிறாள் இவள்.
இறுதியில் நிகழ்ச்சியை நடத்துபவர் 'இது மாதிரியான ஏமாற்றுப் பேர்வழிகளை கண்டு பிடித்து தோலுரிப்பதே எங்கள் நிகழ்ச்சியின் நோக்கம்’ என்று உரை நிகழ்த்துகிறார்..
என்னாங்கடா இது!
UTN Bindass ன் “Emotional Atyachaar” என்னும் ரியாலிட்டி ஷோவாம் அது. எனக்கென்னமோ எல்லாமே ட்ராமாவாகத்தான் தோன்றியது. நேற்றைக்கு கூகுளாண்டவரிடம் இது பற்றி ஆராய, UTVயின் வெப்சைட்டில் இதற்கு REGISTRATION FORM எல்லாம் இருக்கிறது.. யாராவது அவர்களின் பார்ட்னரை சந்தேகப்பட்டால், அவர்களுக்கு எழுதிப் போடலாம். அவர்கள் வந்து பார்ட்னர் போகுமிடமெல்லாம் ஒரு மாடல் குட்டியையும் அனுப்பி, குட்டி குட்டி கேமராவையும் வைத்து அவரை தோலுரிப்பார்களாம். ‘ஆஹா பெண்ணினக்காவலர்களடா’ என்று சரியாக அஞ்சு நிமிஷம் புளகாங்கிதமடைந்தபோது இப்படி பிற ஆண்கள் பின்னால் அலைந்த பெண்கள் சிலரும் அந்த நிகழ்ச்சி மூலம் மாட்டியிருக்கிறார்களாம். அதுவும் ட்ராமாவாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. (காரணம் நிஜத்தில் இப்படிச் செய்பவர்கள் மாட்டிக் கொள்வதே இல்லை!)
இந்த நிகழ்ச்சி பற்றி வந்த செய்தி ஒன்றின்கீழ் பல வாசகர்கள் ‘இதில் எப்படி எங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்?’ என்று முட்டி மோதிக் கொண்டு கேட்டிருப்பதைப் பார்த்தபோது சமூகமாவது கலாச்சாரமாவது மண்ணாங்கட்டியாவது என்று தோன்றியது!
ஒன்றிரண்டாவது இதில் உண்மையாகவே ஸ்பை கேமராக்கள் வைத்து பதிவு செய்து ஒளிபரப்பினார்களா? சட்டம் அனுமதிக்குமா? யாருக்காவது இதுகுறித்த மேல் விபரங்கள் தெரியுமா?
.
31 comments:
விளங்கீரும். எப்படி இப்படில்லாம் யோசிகிறாய்ங்களோ ?
ஸ்ஸப்பா.. முடியல.. டைப் டைப் யோசிக்கிறாங்களே....
// (காரணம் நிஜத்தில் இப்படிச் செய்பவர்கள் மாட்டிக் கொள்வதே இல்லை!)//
ஹஹாஹா..
சிரிப்பு இதுக்கு மட்டுமில்லை.. உலகத்தில இப்டியும் நடக்குதேன்னு நினைச்சு சிரிச்சேன்.
எல்லாம் தொல்லைகாட்சி மாயமா இருக்கு....
அருமையான பதிவு வாழ்த்துகள்..!
உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html
அண்ணே அந்தக் கம்பேனி வெலாசம் கொஞ்சம் கொடுங்க! நாமலே ஒரு பொண்ண லவ்வருன்னு செட் பண்ணிக் கூட்டிட்டு போயிடலாம்போல, (டீவி கம்பேனி நமக்கு ஒரு மாடல் குட்டி கொடுக்கும்ல)
மேட்டரு எல்லாத்துக்கும் தெரிய முன்னாடி சீக்கிரம் வெலாசம் குடுங்கண்ணே! (உங்களுக்கு எதுவும் கமிசன் வேணுமின்னாலும் பிரச்சனையில்ல)
இப்படி ஒரு நிகழ்ச்சியா? நம்பவே முடியலைங்க.. நம்பிக்கை ங்கற விஷயமே ஆட்டம் கண்டுருச்சு போலிருக்கே !!
அமெரிக்கா டிவி நிகழ்ச்சி ஒன்னு கூட இதே மாதிரி இருக்கும் ண்ணே.... அதுல green green ஆ காட்டுவாங்க
"பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணே அந்தக் கம்பேனி வெலாசம் கொஞ்சம் கொடுங்க! நாமலே ஒரு பொண்ண லவ்வருன்னு செட் பண்ணிக் கூட்டிட்டு போயிடலாம்போல, (டீவி கம்பேனி நமக்கு ஒரு மாடல் குட்டி கொடுக்கும்ல)"
பாஸ் ...நம்ம கூட்டிட்டுகிட்டு போற பிகுரே ஒரு மொக்க figure இருக்கணும் ..... எப்புடியும் அவங்க ஒரு சூப்பர் figure தான் ஏற்பாடு பண்ணுவாங்க ....ஹி ஹி ஹி ஹி
எல்லாம் நாடகம் பாஸ் ....யாராச்சு சொந்த செலவுல சூனியம் வைச்சு பங்களா. தத்தேறிகள் தான் இந்த மாதிரி பண்ணுவாங்க. எப்பொழுது மனுஷன் சிந்தனையில் நுழைஞ்சுருச்சோ ..... அப்பவே அவன் காசு பண்ண என்னவேண்டுமானாலும் செய்வான் ...
அதே மாதிரி அடுத்தவர் அந்தரங்கம் பற்றி தெரிந்து கொள்ளும் இச்சை மக்களிடையே இருக்கும் வரை இந்த மாதிரியான நிகழ்சிகள் வந்து கொண்டே தான் இருக்கும்
டிஸ்கி (ஆன்மீகவாதிகளுக்கு) - கல்கி அவதாரம் வரும் முன் சில விஷயம் நடக்கும்ன்னு சொல்லிருப்பாங்க ...அதுல இதுவும் ஒன்னு
நமக்கு நாமே எழுதி போட்டுக்கொண்டால் மாடல் இலவசமா வருமா ?
பரிசல்,
இதை கேட்டு பாருங்க:
http://www.youtube.com/watch?v=3xzs-ibFMLQ
//குட்டி குட்டி கேமராவையும் வைத்து அவரை தோலுரிப்பார்களாம். //
துகிலுரிப்பார்களாம் என்று எழுதினா சரியோ???
இந்த சேவை இலவசமா?
அப்ளிக்கேசன் ஃபார்ம் பணம் கொடுத்து வாங்க வேண்டுமா?
நண்பரே,இதெல்லாமே ஜோடிப்பு தான்... நம்ம தான் முட்டாப்பசங்க..
நண்பரே,இதெல்லாமே ஜோடிப்பு தான்...
நம்ம தான் முட்டாப்பசங்க..
i agreed
இது அமெரிக்க கலாசாரத்தின் அடுத்த தாக்கம்.
அமெரிக்க தொலைகாட்சிகளில் "Cheaters" என்ற ஒரு தொடர் உண்டு. முதலில் இவர்கள் துப்பறியும் ஆட்களாகத்தான் தங்கள் கடையை தொடங்கினார்கள். ஆனால், இவர்களிடம் வந்ததெல்லாம் பெருவாரியாக இந்த சந்தேகப் பார்ட்டிகள்தான். என் பொண்டாட்டியின் நடத்தை சில நாடக்ளாக சரியில்லை, என்னவென பார்த்து சொல்லுங்கள். என் பாய் ஃபிரண்ட், என் பிசினஸ் பார்ட்னர் என மனிதர்களை துப்பறியச் சொல்லியே அதிகமான கேஸ்கள் வர ஆரம்பித்ததும், அதிலும் இந்த ஆம்பள பொம்பள மேட்டர்ல ஒரு கிளுகிளுப்பும் இருக்கும் என்பதால், அவர்கள் இதை ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சியாகவே மாற்றி பணம் பண்ணினார்கள்/பண்ணுகிறார்கள்.
ஆனா, நம்மூர்ல காமிக்கறதெல்லாம் சும்மா லுல்லுலாயிக்குத்தான்
இது இந்திய சானலா? அப்படியெனில்...........
நம் மக்களை ரசிக்க வைக்கிறேன் பேர்வழி என்று
புதுப்புது விதமாய் கல்லா கட்டும் இவர்கள்
நம் சமுகத்தின் ரசனை குறித்து என்ன மதிப்பீடு வைத்திருக்கிறார்கள்?
என்ன பொழைப்பு இது?
பணம் படுத்தும் பாடு என்று ஒதுக்கித்தள்ள முடியவில்லை.
ரியாலிட்டி ஷோ என்று நம் இளைஞர்களை குருடாக்கும்
வேலையை 99 % சானல்கள் செய்துகொண்டிருக்கின்றன.
காமம், காதல் எல்லாம் ஊரறிய வெளிச்சம் போட்டு காட்டுவதர்க்கில்லை.
அது ஒரு உணர்வு. அதுவும் அற்றுப்போய்விடின் மனிதன் இருப்பே போலியாகிவிடும்.
இதை வியாபாரம் ஆக்குவதன் மூலம் ஒரு சமூகத்தின் ரசனை தரத்தை மட்டமாக்குகிறோம் என இவர்களுக்கு உறைக்காதா?
அல்லது யார் உறைக்க வைப்பது?
சிறு வயதில் எதிர் பாலருடன் பேசுவதே குற்றம் என்று பார்க்கும் குடும்பத்தினரும்,தெருவும் பள்ளிக்கூடமும்...மறைந்து அதை செய்த சிலிர்ப்பூட்டும் தருணங்களும்........இந்த இளையோருக்கு அதைப்போல என்ன இருக்க முடியும்?
நிறைய சொல்வதற்கு இருக்கிறது.......ஒன்றுக்கும் பயன்படாது.....
நம் தமிழக சானல்களும் ஒன்றும் சளைத்தவை இல்லை.
வெகு சீக்கிரம் அவைகளும் துணியும்.
என் வருத்தமெல்லாம்.....எல்லாவற்றையும் திறக்காதீர்கள்...வாழ்வாதார உணர்சிகளை.........விட்டுவையுங்கள்......
உங்கள் பதிவு.....அருமை....அவசியம்......
அன்புடன் கபிலன்.
இன்னும் MTV-யோ அல்லது Channel-V-யோ truth, love and cash என்ற ப்ரோக்ராம் ஒளிபரப்புகிறார்கள் பாருங்கள், ஒரு முறை எங்க அம்மா வீட்டுக்கு போயிருந்தபோது பார்த்தேன். :(
இதெல்லாம் கூட பொழப்பா வச்சிருக்காங்க!
இதுவும் ஒரு பொழைப்பு . பகிர்வுக்கு நனறி. வாழ்த்துக்கள்
Ithellam dupe !
நாடு உருப்பட்டா மாதிரிதான்.... பரிசல் அது எத்தனை மணிக்க வரூது--??:))
நாடு உருப்பட்டா மாதிரிதான்.... பரிசல் அது எத்தனை மணிக்க வரூது--??:))
அட...இது REALITY TV ன்னு ஒரு சேனலில்...CHEATERS ங்கிற நிகழ்ச்சியா வந்து சக்கை போடு போட்டுக்கிட்டிருக்கு பல வருஷமா! இப்ப இந்தியாவுக்குள்ளயும் வந்துருச்சு...!!
ரூம் போட்டு யோசிப்பாங்களோ முடியலடா சாமி, உங்கள் புண்கள் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்துக்கள்
எதை நோக்கி போறோமோ?
முன்னேறுகிறது இந்தியா!!!!
நல்ல(!?) பதிவு பரிசல்!
இது மாதிரியும், இன்னும் பல நிகழ்ச்சிகளையும் நினைத்தாலே கடுப்பாவுது.
காரணம் நிஜத்தில் இப்படிச் செய்பவர்கள் மாட்டிக் கொள்வதே இல்லை!
/////
Kodumai
I give a suggestion. Try to find out Bribe, exploited, misuse and cheated person through this show.
Ivan,
Karthikeyan.V
i also watched that show. The total set up seems as a preplanned and well practiced drama.
Post a Comment