******************************************
தமிழ் நம் ஆதித் தாய்.
தமிழ் நமக்கு அகிலத்தை
அறிமுகம் செய்த தந்தை.
தமிழ் நம் அறிவை
விரிவு செய்த ஆசான்.
தமிழ் நாம் தினமும்
வழிபடும் தெய்வம்!
தமிழ் நம்மை நனைக்கும் மழை.
தமிழ் நம்மைத் தாங்கும் பூமி.
தமிழ் நாம் சுவாசிக்கும் காற்று.
தமிழ் நம்மைக் காக்கும் வானம்.
தமிழ் நம் உணர்வின் நெருப்பு.
தமிழ் உலகெங்கும் விதைத்துச்
செழிக்கும் விதை.
தமிழ் உலகெல்லாம்
கிளை விதித்த வேர்.
தமிழ் உலகெல்லாம்
கிளை விதைத்த வேர்.
தமிழ் உலகெங்கும்
பறக்க வைக்கும் சிறகு.
தமிழ் உலகையே
ஒன்றுபோலாக்கும் உறவு.
ஓலைச் சுவடிகளில் ஓய்வெடுத்த
நம் தமிழ்
அச்சுச் சிறகசைத்து
அகிலமெல்லாம் பறக்கிறது.
உயிர்பொருளாய் கருதும்
நம்மொழி
மென்பொருளாய் மாறி
மேதினியில் சிறக்கிறது.
இலக்கியங்களை
அடுக்கி வைத்தால்
இமயம்வரை உயர்கிறது.
இலக்கணங்கள் மாறாமல்
இளமையுடன் வளர்கிறது.
எம்மொழி என்றாலும்
நட்புக்கொடி படர்கிறது.
செம்மொழி என்றாகி
சீர் பயணம் தொடர்கிறது.
அறிவியலை வளர்க்கிறது
எம் தமிழில்
அத்தனையும் இருக்கிறது.
புவியியலைக் கடந்தும்
பூலோகம் முழுதும் பரவி
புது வரலாறு படைக்கிறது.
திருக்குறக்குளாய் சூல் கொண்டு
இன்று ஹைக்கூவாய் மலர்கிறது.
திருப்புகழாய் ஒலித்து
இன்று திசையெல்லாம் ஜொலிக்கிறது.
ஆயகலைகள் அறுபத்தி நான்கோடு
அத்தனை கலைகளும்
கருக் கொண்டது தமிழில்தான்.
உருக்கொண்டு உலகெல்லாம்
கலை வளர்த்தது அதன் பின்தான்.
தமிழ்த் தாய்க்கு
ஆயிரம் கருப்பைகள்.
அதனால்தான் இலக்கியப் பிள்ளைகள்
அன்றாடம் பிறந்தபடி இருக்கின்றனர்.
தமிழ்த் தாய்க்கு லட்சம் கரங்கள்.
அதனால்தான்
நாடுகளைக் கடந்து
மதங்களை இணைத்து
மனங்களை அணைக்கிறது.
தமிழ்த் தாய்க்கு கோடிவிழிகள்.
அதனால்தான்
உலக வரைபடத்தின்
பூமிப் பரப்பெங்கும்
புத்தொளியாய்ச் சுடர்விடுகின்றது.
அன்னை மண்ணைவிட்டு
அயல் மாநிலம் சென்றாலும்
அயல் தேசம் சென்றாலும்
யாரொருவர் தமிழ் பேசி வந்தாலும்
நமக்குத் தாய்ப் பாசம் பொங்குகின்றது.
அன்பு நதி அங்கேயே தங்குகின்றது.
நிறங்கள் வேறு வேறு
மதங்கள் வேறு வேறு
வாழ்க்கை வேறு வேறு
வசிப்பிடம் வேறு வேறு
மொழி மட்டும் ஒன்றே ஒன்று.
அந்த மொழிதான் நம்மை இணைக்கிறது
ஒரே மழையில் நம்மை நனைக்கிறது.
உதடுகளில் தமிழ்
உட்கார்ந்து கொண்டால்
இதயத்தில் ஈரம் கசிந்து
அன்பு வெள்ளம்
பெருக்கெடுத்து ஓடுகின்றது.
இரத்த நாளங்களில்
பாச மொழி பாய்கின்றது.
நாம் இருக்கிறோம்
வேறு வேறாய்.
நம்மை இணைக்கிறது தமிழ்
ஆணி வேராய்.
தாய்த் தமிழ்
வேர்களாய் இருக்கட்டும்.
நாம்
விதைகளாய்
விழுதுகளாய்
கிளைகளாய்
மலர்களாய்
காய்களாய்
கனிகளாய்
இலைகளாய்ப்
புதுத் தளிர்களாய்
வேர்களைக் காத்திடுவோம்.
பூக்கும் ஒவ்வோரு பூவையும்
வேர்களுக்கே பரிசளிப்போம்.
விழுதுகளுக்கு
விருதுகள் குடுப்போம்.
விதைகளைக் காத்து
புதுப்புது இடங்களில்
தாவிடுவோம்.
காய்,கனிகளை
ஒருவொருக்கொருவர்
பரிமாறிக் கொள்வோம்.
தளிர்களைத் தாலாட்டித்
தமிழ்ப்பாலைத் தாய்ப்பாலாய்க்
கொடுப்போம்.
வேர்கள் தமிழில்தான்
விரிந்து இருக்கின்றன.
விழுதுகளாய் உலகமெங்கும்
விளைந்து இருக்கின்றோம்.
வித்தியாசம் இல்லாமல்
விழுதுகள் நான் ஒன்றிணைவோம்
வேர்களை வனங்குவோம்.
வேர்களை
பலப்படுத்துவோம்
வேர்களுக்கு
நீர் பாய்ச்சி
உயிர்போல்
அதைக் காத்திடுவோம்.
தமிழ் எங்கள்
உயிருக்கு நேர் மட்டும் அல்ல
வேர்!வேர்!வேர்!
வாழ்க தமிழ்!வெல்க தமிழ்!!
.
34 comments:
வாழ்க தமிழ்!வெல்க தமிழ்!
நிறங்கள் வேறு வேறு
மதங்கள் வேறு வேறு
வாழ்க்கை வேறு வேறு
வசிப்பிடம் வேறு வேறு
மொழி மட்டும் ஒன்றே ஒன்று.
அந்த மொழிதான் நம்மை இணைக்கிறது
ஒரே மழையில் நம்மை நனைக்கிறது.
அப்துல்லா குரலில் வாசிக்கக் கேட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.
//நாம் இருக்கிறோம்
வேறு வேறாய்.
நம்மை இணைக்கிறது தமிழ்
ஆணி வேராய்.//
அருமை....அருமை.
செந்தமிழே நறுந்தேனே.....
செயலினை மூச்சினை உனக்களித்தோமே....
நைந்தாயெனில் நைந்துபோவோம்....
நன்னிலை உனக்கெனில்
எமக்கும் தானே...
தமிழ் வேரின் பிடிமானத்தில்..
எம் இனம் கிளை பரப்பட்டும் விருட்சமாய்.
நன்றி..அப்துல்லா....பரிசல்....
அன்புடன் கபிலன்.
அப்துல்லா அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
நல்ல கவிதை...வாழ்க தமிழ்...
அப்துல்லாவிற்கு வாழ்த்துக்கள்.
\\அப்துல்லா குரலில் வாசிக்கக் கேட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.\\
repeatttttttttuuuuuu
ஏதோ சொல்ல வர்றாருன்னு தெரியுது..
கவிதை அழகு. அது ஒலித்த இடம் இன்னும் சிறப்பு. அப்புவுக்கு நன்றி, வாழ்த்துகள்.
//தமிழ் எங்கள்
உயிருக்கு நேர் மட்டும் அல்ல
வேர்!வேர்!வேர்!
//
அருமை.
அப்துல்லா அண்ணனுக்கு வாழ்த்துகள்
அருமை
///ஓலைச் சுவடிகளில் ஓய்வெடுத்த
நம் தமிழ்
அச்சுச் சிறகசைத்து
அகிலமெல்லாம் பறக்கிறது.///
வாழ்த்துகள்... அப்பு...!
வெல்க தமிழ்!
எட்டுத் திக்கும்
ஒலிக்கிறது தமிழ்!
அருமையான கவிதையை அமெரிக்காவில் பாடிய அண்ணண் அப்துல்லாவுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
வாழ்க தமிழ்..
மிகச்சிறப்பான கவிதை... இசைகோர்த்து பாடலாகவே மாற்றலாம் போலுள்ளது!!! அப்துல்லா அவர்களுக்கு வணக்கங்கள்... பரிசலாருக்கு நன்றிகள்....
//வேர்களை வனங்குவோம்.//
வேர்களை தவறாக வ'ண'ங்கிவிட்டதாய் எண்ணுகிறேன்..
//விதைகளைக் காத்து
புதுப்புது இடங்களில்
தாவிடுவோம்.//
இது 'தூவிடுவோம்' தானே!!!
நீன் தமிழ் கவி அருமை...
வாழ்த்துக்கள் அப்துல்லா !!
அப்துல்லாவுக்கு ஒன்றும் பகிர்ந்த உங்களுக்காக ஒன்றுமாய் ரெண்டு பூங்கொத்து!
நல்ல கவிதை நன்றி பரிசல் :)
//
நாம் இருக்கிறோம்
வேறு வேறாய்.
நம்மை இணைக்கிறது தமிழ்
ஆணி வேராய்.
//
கவிதை முழுவதுமே அற்புதமா இருந்தாலும் இனிப்பான பொங்கல் சாப்பிடுறப்ப வாயில் தட்டுப்படும் நெய் முந்திரி மாதிரி இந்த வரிகள் அவ்வளவு சுவை...
பகிர்ந்ததற்கு நன்றி பரிசல்..
வாழ்த்துக்கள் நம் தமிழுக்கு அமுது என்றும் பெயர். கவிதாவரிகள் மேலும் அழகூட்டுகிறது
மிக நன்று. வாழ்த்துக்கள் அப்துல்லா.
பகிர்வுக்கு நன்றி பரிசல்காரன்.
வாழ்த்துகள் அப்துல்லா!
பகிர்விற்கு நன்றி பரிசல்!
//////விதைகளைக் காத்து
புதுப்புது இடங்களில்
தாவிடுவோம்.
காய்,கனிகளை
ஒருவொருக்கொருவர்
பரிமாறிக் கொள்வோம்.
//////
கவிதை மிகவும் சிறப்பு ! வாழ்த்துக்கள் அப்துல்லா
வாழ்த்துக்கள் அப்துல்லாவுக்கு.
நன்றிகள் உங்களுக்கு.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
ரெண்டு பேருத்துக்கும் தான்
அண்ணன் அப்துல்லாவிற்க்கு வாழ்த்துக்கள்.
annan abdulla kavithai arumai.parisalkaaranukku nandri.-meerapriyan
அண்ணன் அப்துல்லா, வெகு அருமையா இலக்கிய விநாடி வினாடி நிகழ்ச்சியிலும் பங்களித்து வெற்றிச் சான்றிதழ் ஈட்டியிருக்கிறார்!
வாழ்த்துகள்!!
//நாம் இருக்கிறோம்
வேறு வேறாய்.
நம்மை இணைக்கிறது தமிழ்
ஆணி வேராய்.//
அருமை....அருமை.-ரிப்பீட்டு.
:) இந்தச் சிரிப்பான்ல பல விசயங்கள் அடங்கியிருக்குங்க. அது தனியா சொல்றேன்
Post a Comment