Tuesday, July 6, 2010
அவியல் 06.07.2010
கோவை. உறவினர் ஒருவரின் அண்டை வீட்டுக்காரப் பெண்மணி. தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியிருக்கிறார்கள். காரணத்தை என் உறவினர் சொன்னபோது நம்புவதா என்றே தெரியவில்லை. சென்ற வாரம் கோவை சென்றிருந்தபோது அவர் சொன்னது உண்மை என்று உறுதியாக அறிந்ததும் எரிச்சலும் கோவமும் கலந்து வந்தது.
சன் டி.வி-யில் டீலா நோ டீலா ஓடிக் கொண்டிருந்திருக்கிறது. கணவன் இந்தியா-பாகிஸ்தான் க்ரிக்கெட் மேட்ச் பார்க்க சேனலை மாற்றியிருக்கிறார். மனைவி மாற்றச் சொல்லும் சமயத்தில் மாற்றாமல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். கோவத்தில் அதிக அளவில் தூக்க மாத்திரையை சாப்பிட்டாராம் மனைவி.
இதில் எனக்கு எரிச்சலூட்டிய விஷயம், கணவனின் மனப்போக்குதான். மாத்தித் தொலைச்சுட்டு போகவேண்டியதுதானே.. வீணா அந்தப் பெண்ணின் மனதை ஏன் இவ்வளவு வேதனைப்பட வைக்க வேண்டும் என்று தோன்றியது.
(இதுக்கெல்லாம் தற்கொலைக்கு முயற்சிக்கலாமான்னு அந்தம்மாவை திட்டி ஆணாதிக்கவாதியாகறது பிடிக்கல...)
*******************************
நாட்டரசன்கோட்டையில் கவியரசர் கம்பரது வீடு பராமரிக்கப்படாமல் கண்டுகொள்ளப்படாமல் முள்ளும், செடிகளும் மண்டி இருக்கிறதாம். அதே சமயம் கொச்சியில் வாஸ்கோடகாமாவின் கல்லறையில் இருந்து அவரது உடலை எடுத்துக் கொண்டு போய் போர்ர்சுகல்லில் பெரிய அளவில் கல்லறை எழுப்பி, தகுந்த பராமரிப்புகளுடன் பாதுகாத்து வருகிறார்களாம்!
இன்னொரு விஷயம்:
அமெரிக்காவில் Death Poet Society என்றொரு அமைப்பு 2008லிருந்து இயங்கி வருகிறது. இறந்துபோன கவிஞர்களையெல்லாம் ஒவ்வொரு கூட்டத்திலும் நினைவுபடுத்தி பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்களாம்.
-------------------------
அந்த நண்பர் சில மாதங்களுக்கு முன் அழைத்தார்.
‘சாரு நிவேதிதாவோட புக்ஸ் படிக்கலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க?’
‘ஒண்ணும் சொல்றதுக்கில்ல. படிங்க...’ன்னேன்.
‘சில புக்ஸ் பேர் சொல்லுங்க’ன்னார்.
‘கோணல் பக்கங்கள் எல்லா தொகுதிகளையும் படிங்க..’ என்று ஆரம்பித்து இருக்கட்டும் என்று ஸீரோ டிகிரியையும் சொல்லிவைத்தேன்.
‘சரி வாங்கிப் படிக்கறேன்...’ என்று வைத்துவிட்டார்.
சென்ற வாரம் அழைத்தார்.
‘கிருஷ்ணா.. அந்த புக்கு மட்டும் கிடைக்கல’ என்றார். அதெப்படி கிடைக்குமே.. இல்லைன்னா நான் வாங்கி அனுப்பறேன் என்று நினைத்தவாறே பேசிக் கொண்டிருந்தேன்.. நடுவே அவர் யாரு அந்த கிரி, எதுக்கு அவரைப் பத்தி சாரு எழுதினார்-என்று கேட்டபோது புரியாமல் முழித்து தொடர்ந்து பேசியபோதுதான் தெரிந்தது. நான் சொன்ன ஸீரோ டிகிரியை அவர் வேறு விதமாகப் புரிந்துகொண்டு கடைகளில் விசாரித்திருக்கிறார் இப்படி..
‘சாரு எழுதின ‘ஈரோடு கிரி’ இருக்கா?’
**************************************
அலுவலகத்தில் இரண்டு கடிகாரங்கள். ஒன்று ஃபாஸ்டாகவும், ஒன்று ஸ்லோவாகவும் நேரம் காட்டிக் கொண்டிருந்தது. யாரோ என்னது இது என்று கேட்க தோழி ஒருவர் சொன்னார்:
‘ஃபாஸ்டா ஓடற வாட்ச் நீங்க ஆஃபீஸுக்குள்ள வர்றப்ப டைம் பார்க்கறதுக்கு. மெதுவா ஓடறது வீட்டுக்குப் போறப்ப டைம் பார்க்கறதுக்கு...’
************************************
கீழே படத்தில் பெரிய சைஸில் இருக்கும் நண்பன் ரங்கராஜ். ஒரு வருடங்களாகப் பழக்கம். அலைபேசியில், மின்னஞ்சலில். வாடா போடா பழக்கம்! ஆனால் இரு வாரங்களுக்கு முன்தான் அவனை நேரில் பார்த்தேன். படத்தில் உடனிருப்பது கார்க்கியின் பப்லுபோல - இவனது தங்கை மகன் சூர்யா.
காமிக்ஸுகளின் ரசிகன். வீடு முழுவதும் வோட்கா பாட்டில்களில் பூச்சாடி வைத்திருக்கிறான். நேரில் பார்த்தபிறகுதான் தெரிந்தது... மனுஷன் செம பிஸி மேன். வாரத்தில் ஆறு நாட்களில் நான்கு ஊரில் இருக்கிறான். ரங்க்ஸுக்கு பெரிய தொழிலதிபராக வேண்டுமென்பது லட்சியம், ஆசை, அவா.
வாழ்த்துகிறேன் நண்பா.. உனக்குள் இருக்கும் தீயை அப்படியே அணையாமல் வைத்திரு!
(பதினைஞ்சு வருஷமா தம்மடிக்கறன்னு கேள்விப்பட்டேன்.. அந்தத் தீயை மட்டும் அணைச்சுடேன்.. ப்ளீஸ்...)
*******************************************
ட்விட்டர் அப்டேட்ஸ்:
# பெண்ணை ஆதிக்கம் செய்வது பெண்ணாதிக்கம்தானே.. அதில்கூட ஆணாதிக்கம் என்று தன்பெயர் வருமாறு ஆண்கள் எழுதுவது ஆணாதிக்கத்தின் உச்சம்!
# க்ரிக்கெட் ஸ்கோர் ஒவ்வொரு நிமிடத்துக்கும் அப்டேட் ஆகும். இதென்னடான்னா அரை மணி நேரமா ஒரே ஸ்கோரா இருக்கு.. போரிங்பா! #FIFA
# நான் போயிருந்தால் ஃபெட்னாவுக்குப் போன கிட்னா என்ற தலைப்பில் ஒரு வாரம் எல்லாரையும் அறுத்துத் தள்ளியிருக்கலாம்.. மிஸ்ஸிங்... #Fetna
# உதட்டில் அழுத்தமாய் முத்தம் கொடுத்தால் இரக்கமே இல்லையா என்கிறாள் தோழி. ர எனக்கு ற எனக் கேட்கிறது. #ஃபீலிங்ஸ்
# சிங்கம் ரிலீஸான சில நாட்களிலேயே சூர்யா-ஜோவுக்கும் சிங்கம் ரிலீஸ் ஆனது. (மகன்) ஒருவேளை மகள் என்றால் பெண் சிங்கம் என்று ட்வீட்டியிருக்கலாம்.
# நகைக் கடையில் காசாளரிடம் பணம் கொடுக்க நீண்ட க்யூவைக் கண்டேன். கடைக்காரர்களின் வாங்கும் திறன் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
# //இன்றுடன் சொம்மொழி மாநாடு நிறைவு// பாதில இருக்கற ரோடு வேலை இன்னபிற-க்களை இனிமே என்ன பண்ணப்போறீங்கன்னு பார்க்கறோம் - கோவை மக்கள்.
# ஓரன் பாமூக்கின் ம்யூசியம் ஆஃப் இன்னொசன்ஸ், ஓஷோவின் த ந்யூ டா(வ்)ன், எஸ்.எல்.பைரப்பாவின் பருவம், ஜெயந்தன் கதைகள், ராஸலீலா,வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள், பஞ்சதந்திர கதைகள், கலைஞரின் தொல்காப்பியம் போன்ற பெரிய சைஸ் புத்தகங்களை இன்று எடுத்தேன். மகள்களின் ஸ்கூல் புக்கிற்கு அட்டைபோட்டேன். வெய்ட் வைக்க தேவைப்பட்டது... (மூன்று ட்விட்களின் தொகுப்பு)
# ஆணின் வெற்றிக்கு முன் பெண் இருக்கிறாள் எனலாமா இனிமேல்? பின்னால் என்றால் அதுவும் ஆணாதிக்கம் ஆகிவிடுமே?
# நமீதா தினமும் செலக்ட் செய்யும் நபரில் நான் இருக்க வாய்ப்பே இல்லை. அவர் தெளிவாகச் சொல்லிவிட்டார். Only Non Celebrity என்று.
# ரொம்ப நேரமாக ஒரு கடையில் நின்று கொண்டிருந்தேன். என்ன வேண்டும் என்றார். ஒரு ட்விட்டுகாக நின்று கொண்டிருக்கிறேன் என்றேன். கிடைத்துவிட்டது.
**************************
Subscribe to:
Post Comments (Atom)
44 comments:
அவியல் சுவை.ரங்க்ஸுக்கு வாழ்த்துக்கள்.
கலக்கல் அவியல்.
//(பதினைஞ்சு வருஷமா தம்மடிக்கறன்னு கேள்விப்பட்டேன்.. அந்தத் தீயை மட்டும் அணைச்சுடேன்.. ப்ளீஸ்...)//
அருமை.
raittu
போற போக்கை பார்த்த ..உங்களை பரிசல் கிருஷ்ணா ன்னு சொல்லுறதுக்கு பதிலா அவியல் குமார் ன்னு சொன்னாலும் சொல்லுவாங்க பாஸ் .....
எழுத்தாளர்களின் கதாபாத்திரம் மேலை நாடுகளில் கொண்டாட படுவது போல நம்ம நாட்டுல அந்த மாதிரி எதுவும் நடக்கலையே ....
அந்த நிகழ்ச்சிய பார்த்ததால கொடுமை தாங்காம தற்கொலை பண்ணிகரது வேணா ஞாயம் :)
ஒரு வருடங்களாகப் பழக்கம். //
ஒரு 'வருடமாக' னு மாற்றுங்க பரிசல்,
கார்க்கி கூட சேர்ந்து 'தோழி' காய்ச்சல் வந்திடுத்துனு நினைக்கிறேன், பார்த்து அதுவாவது பாவம் சின்ன புள்ளை,
கலவையாய் கலக்குறீங்க பரிசல் (இந்த ஆதிக்க பிரச்னை தான் எனக்கு பிடிக்கல)
/கவிஞர்களையெல்லாம் ஒவ்வொரு கூட்டத்திலும் நினைவுபடுத்தி பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்களாம்.//
அது அமெரிக்கா பரிசல்... இங்க நமக்கு பாராட்டு விழா நடத்துறதுக்கு நேரம் இல்லை... இதுல இறந்து போன கவிஞர்களை எங்க ஞாபகம் வச்சுக்கறது...
இடியட் பாக்ஸ் எந்த அளவிற்கு மக்களை ஆட்டுவிக்கிறது என்பதற்கு இது ஒன்றே எடுத்துக்காட்டு, கலைஞர் டிவி ரூ. 1500/- க்கு பிளாட்பாரத்தில் விற்கிறார்கள் ஒரு வீட்டில் 2 டிவி ஆக வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்
அன்புடன்
ராகவேந்திரன்,
http://thurvasar.blogspot.com
//‘ஈரோடு கிரி’// கொடி பறக்குது ஞாபகத்துல ('ஈரோடு சிவகிரி'!) கேட்டிருப்பாரோ?!
அந்த ர,ற மேட்டர் செம சுவாரசியம்!
அன்புடன்
வெங்கட்ரமணன்
அவியல் நல்ல ருசி
ஆணாதிக்கம்...
:-)))
மறைமுகமாய் எழுதப்பட்ட ஆணாதிக்கத்தின் உட்சபட்ச பதிவு.. உடனே பெண் காவலர்களை கொண்டு நடவடிக்கை எடுக்க சொல்ல வேண்டியதுதான்..
அட! இது நம்ம ரங்க்ஸ் தானே!
அந்த நிகழ்ச்சிய பாத்து கொடுமை தாங்காம தற்கொலை முயற்சி பண்ணினாலும் ஒரு ஞாயம் இருக்கு :)
கிருஷ்ணா... நான் கமென்ட் போடறேன்னு எனக்கே ஆச்சரியமா இருக்கு!!
யாரு சொன்னா? :)உண்மதான்.. பதினாலு வருஷம்!! வெக்கமா இருக்கு!!
இந்த இன்டல்ஜன்ஸ் எல்லாம் இனிமே வேலைக்காவாதுன்னு தோணுது! கண்டிப்பா விட்டுடறேன்.. பொறுப்புகள் இப்ப அதிகம் ஆய்ருச்சு..
நீயும் சொன்னது சந்தோஷமா இருக்கு.
நன்றி...சொல்ல மாட்டேன்..
மிக்க அன்புடன்..
ரங்ஸ்..
சுவாரசியமான பகுதிகள். மூன்றாவது பகுதி உங்கள் சொந்தக்கற்பனையா? இல்லை நடந்ததா? ஹிஹி..
முதல் ட்விட்.! இப்பிடி சிந்திக்கிற மூளையை எங்கேய்யா வச்சிருக்கீங்க.?
1. டிவிட் ஒரு அழகான இலக்கிய வடிவம். பிளாகைப் போலவே அல்லது எல்லாவற்றையும் போலவே ட்விட்டுகளிலும் மொக்கையின் ஆட்சி.
2. கவிதையை விடவும் சிறப்பான, சுதந்தரமான, அடர்த்தியான வடிவம் ட்விட்.
3. கவிதைகளை விடவும் அதிக ரசனையையும், உழைப்பையும் கேட்கிறது ட்விட்.
4. முன்பு ஒரு நிகழ்வைக் கண்டால் பதிவுக்காக எப்படி இதை சுவாரசியமாக வளர்த்தெடுப்பது என எண்ணுவேன். இப்போது ட்விட்டுக்காக எப்படி அடர்த்தி குறையாமல் சுருக்கி எழுதுவது என எண்ணுகிறேன்.
மூணாவது பின்னூட்டத்தை 4 ட்விட்டாக மாற்றிவிட்டேன் பாஸ். (ஒரு அப்டேட்டுக்காக) 4வதை எப்படி மாற்றியிருக்கிறேன் பாருங்களேன்.
testing...
//உதட்டில் அழுத்தமாய் முத்தம் கொடுத்தால் இரக்கமே இல்லையா என்கிறாள் தோழி. ர எனக்கு ற எனக் கேட்கிறது//
SUPERB!
சரியா சொல்லிருக்கீங்க பாஸ்.
ஆனா விருப்பப் பட்டு தூக்க மாத்திரை சாப்பிடப் பெண்மணியின் விருப்பத்துக்கு மாறாக காப்பாற்றியது ஆணாதிக்கத்தில் வராதா ?
me the first?
ஏதுடா இது பரிசல் இடுகைக்கு வந்த சோதனை... இவ்வளவு ஓட்டு வாங்கியும் ஒரு பின்னூட்டம் கூட இல்லை...
மீ த ஃபர்ஸ்ட்??
போட்டாச்சி போட்டாச்சி.. பின்னூட்டம் போட்டாச்சி..
//
இதுக்கெல்லாம் தற்கொலைக்கு முயற்சிக்கலாமான்னு அந்தம்மாவை திட்டி ஆணாதிக்கவாதியாகறது பிடிக்கல...//
//
பெண்ணை ஆதிக்கம் செய்வது பெண்ணாதிக்கம்தானே.. அதில்கூட ஆணாதிக்கம் என்று தன்பெயர் வருமாறு ஆண்கள் எழுதுவது ஆணாதிக்கத்தின் உச்சம்!
//
ஏதோ இடிக்குதே!
சூடான ..
சுவையான..
அவியல்!
:)
இந்தா பாருங்க, 'தோழி'ங்கற சொல் கார்க்கியால் அவருக்கென ரிசர்வ் செய்யப்பட்டு விட்டது.. நீங்க உபயோகித்தால் செல்லாது செல்லாது.. :)
//யாரோ என்னது இது என்று கேட்க தோழி ஒருவர் சொன்னார்//-கண்டிக்கிறேன்..
-தம்பி கார்க்கி ரசிகர் மன்றம்,
லண்டனாய்க்கம்பட்டி கிளை
ட்விட்டர்' ல் சில நன்றாக உள்ளது..
‘ஈரோடு கிரி’ இருக்கா?’
நல்லவேளை 'ஈரோடு சிவகிரி' யை கேட்காம விட்டாரே..
இன்றைய அவியல்
கொஞ்சம் காரம் கம்மி சாரே..!
வாழ்த்துக்கள்...
கலக்கல் சகா!!!
//வீணா அந்தப் பெண்ணின் மனதை ஏன் இவ்வளவு வேதனைப்பட வைக்க வேண்டும் என்று தோன்றியது//
எல்லாம் ஒரு நிமிடம் யோசிக்காததன் விளைவு.
நீங்கள் சொன்னது ஒரு சம்பவம். நாட்டில் நடப்பது எவ்வளவோ.
:)
//இதுக்கெல்லாம் தற்கொலைக்கு முயற்சிக்கலாமான்னு அந்தம்மாவை திட்டி ஆணாதிக்கவாதியாகறது பிடிக்கல...)
//
அண்ணே ரொம்ப உஷாரா இருக்கீங்க
I don't agree with the first post in the avial. You don't become a dominating person if you point out a mistake made by a woman.
Regards
R Gopi
பல வீடுகளில் இன்று இரண்டு தொலைகாட்சி பேட்டிகள், இரண்டு மடிக்கணினிகள் வந்து விட்டனவே.
அதிலும் அரசு கொடுக்கும் சிறிய வண்ண தொலை காட்சி பெட்டி தான் பெரும்பாலும் கணவர்களுக்கு.
//அதே சமயம் கொச்சியில் வாஸ்கோடகாமாவின் கல்லறையில் இருந்து அவரது உடலை எடுத்துக் கொண்டு போய் போர்ர்சுகல்லில் பெரிய அளவில் கல்லறை எழுப்பி, தகுந்த பராமரிப்புகளுடன் பாதுகாத்து வருகிறார்களாம்!//
இங்கே உயிரோட இருக்கும் போதே கண்டுக்க ஆள் இல்ல.
செத்ததுக்கு அப்புறமும் அதே கதை தான்.
பாரதியார் செத்தப்போ எத்தனை பேர் வந்தாங்க?
இது எல்லாம் யார் எழுதின ட்வீட் ? சிலது சுவாரசியமா இருக்கே ! follow பண்ணலாம்ன்னு கேக்கறேன். ரிப்ளை பண்ணுங்க.
//இதில் எனக்கு எரிச்சலூட்டிய விஷயம், கணவனின் மனப்போக்குதான். மாத்தித் தொலைச்சுட்டு போகவேண்டியதுதானே.. வீணா அந்தப் பெண்ணின் மனதை ஏன் இவ்வளவு வேதனைப்பட வைக்க வேண்டும் என்று தோன்றியது.//
என்னோட எண்ணமும் அதேதான் பாஸ். நான் சினிமா தியேட்டரிலும் வேலை செய்திருக்கேன். கேபிள் டி.வி. ஆப்ரேட்டராகவும் வேலை செய்திருக்கேன். அதனால் இப்போ படமும் பிடிக்கலை.(அந்த அளவுக்கு படங்கள் இல்லைன்னும் சொல்லலாம்.) தொலைகாட்சி நிகழ்ச்சிகள்லயும் ஆர்வமில்லை.
மக்கள் ஒன்றுமில்லாத விஷயத்தைப் பிடித்து தொங்கி வாழ்க்கையை அல்லது உறவுகளை இழக்கத் துணிந்து விட்டதைப் பார்க்கும்போது நாம் இன்னும் புரிந்துகொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று நினைக்கிறேன்.
ஒரு "வருடங்களாகப்" பழக்கம். ???
Wat Cable said is 100% true. Erichal adaindhadhu andha kanavan mela.. Sari.. Kovam yaar mela? Ipadi vilakam sollama vituvitadhu evalavu periya kutram.. Andha lady suicide attend panadhu avanga ishtam. Adha ipadi public panathu nee oru miga periya aanadhikavadhi nu kattudhu..
Twits super..
:) :)
இங்கேயும் தோழியாஆஆஆஆ..
..ஆஆஆஆஆஆ..
ஒரு பரிசல் அவியல் பார் சே.......ல்.............
Post a Comment