இன்றைக்கு: ஜோசப் பால்ராஜ். பள்ளி கல்லூரிப் படிப்பில் முதல் பெஞ்ச் மாணவன். பகுதி நேரப்படிப்பில் மேற்படிப்பு முடித்து சிங்கையில் பணி புரிந்து கொண்டிருக்கிறார். நண்பர்களுக்கு மட்டுமின்றி நாடுபவர்களுக்கெல்லாம் உதவும் கர்ணன். (எனக்கே கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு.... )
இருவாரங்களுக்கு முன் திருப்பூர் வந்திருந்த ஜோசப் பால்ராஜுக்கு கோவை செல்ல வழி காட்டும்விதமாக அவருடன் காரில் சென்றவாறே கண்ட பேட்டி..
நீங்க பதிவெழுத வந்தது எப்படி?
2007ல விகடன் வரவேற்பறையில ஆசிப் மீரான் அண்ணாச்சியோட வலைப்பூ அறிமுகத்த படிச்சுட்டு ஒரு வலைப்பூ ஆரம்பிச்சேன். மாரநேரிங்கற பேர்ல.
மாரநேரி?
என் ஊரு. தஞ்சாவூர் பக்கத்துல. ஆரம்பிச்ச புதுசுல தமிழ்மணம் போன்ற திரட்டிகளைப் பத்தியெல்லாம் தெரியாது. நானே எழுதி, மெய்ல் மூலமா இரண்டொரு நண்பர்களுக்கு ஃபார்வர்ட் பண்ணுவேன். அப்பறம் சில பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் வர்றதப் பார்த்து பரவால்ல என்னோடத எல்லாரும் படிக்க ஆரம்பிச்சுட்டாங்க போல’ன்னு நெனைச்சுட்டேன்.. அப்பறமா சிங்கப்பூர்ல புதிய பதிவர்களைக் கண்டா ஆதரிச்சு, அரவணைச்சு வழிகாட்டற கோவி. கண்ணணோட பதிவுல பதிவர் சந்திப்பு குறித்து படிச்சுட்டு அவர் கூட போன்ல பேசினேன். அடுத்த வார இறுதியில என் வீட்டுக்கு வந்தாரு. திரட்டிகள் பத்தியும் எப்படி ப்ளாக்கை மார்கெட்டிங் பண்றதுன்னும் சொல்லிக் கொடுத்தார்... அதுக்கு அப்பறம் தொடர்ந்து சிங்கைப் பதிவர் சந்திப்புகள்ல கலந்துகிட்டு ஜோதியில ஐக்கியமாயிட்டேன். அந்த சமயத்துல அபிஅப்பாவுக்கு சில கேள்விகள்னு கலைஞரை விமர்சிச்சு பதிவு போட்டேன். செம ஹிட்டாச்சு. அதுக்கு லக்கிலுக் பதில் போட்டிருந்தாரு. உடனே லக்கிலுக்குக்கு சில கேள்விகள்னு எழுதினேன். அதுலதான் அப்துல்லா வந்து பதில் சொல்ல, நான் எதிர் கேள்விகேட்கன்னு ரெண்டு பேருக்கும் பயங்கர சண்டை வந்துச்சு...
என்னது அப்துல்லா சண்டைபோட்டாரா?
‘ஆமா... சண்டை முடிவுல அப்துல்லாவோட நட்பை முறிச்சுக்கற அளவுபோய். இப்ப அப்துல்லா என் நண்பர் இல்லைங்கறன்னு நிலைமைக்கு வந்தாச்சு..
நண்பர் இல்லைன்னு ஆய்டுச்சா? அப்பறம்??
அவர் இப்போ என் குடும்பத்துல ஒருத்தர். நானும் அவருக்கு அப்படியே. இதோ சென்னைல வந்து இறங்கினதுமே ஏர்போர்ட்ல என்னை ரிசீவ் பண்ணி இந்த காரைக் குடுத்தாரு. நாந்தான் வெச்சுட்டு சுத்திகிட்டிருக்கேன்.
இந்த மாதிரி சண்டை போட்டுக்கறவங்கள்லாம் நெருக்கமாய்ட்டா எவ்ளோ நல்லாருக்கும்.. இல்லையா ஜோசப்?
ஆமாண்ணா... கருத்து வேற்றுமைகளை மீறி நட்பு வளரணும். அதானே நட்பு? ஒரே கருத்துள்ள இரண்டு பேர் நட்பா இருக்கறதுல என்ன ஸ்பெஷல் இருக்கு?
(ஜோசப் பால்ராஜை புகைப்படம் எடுக்க பதிவர்கள் போட்டா போட்டி)
(ஆட்டோக்ராஃப் வாங்கும் கூட்டத்தின் ஒரு பகுதி)
பதிவுலகத்துக்கு வந்தது மூலம் நீங்க சம்பாதிச்சது என்ன?
என்னை மாதிரி நாடு விட்டு நாடு போறவங்களை அதிகமா பாதிக்கறது தனிமைதான். அது எனக்கு இல்லை. நான் தனியாளில்லைன்னு எனக்கு உரக்கச் சொன்னது பதிவுலகம்தான். அதேமாதிரி எந்த நாடு, எந்த ஊர் போனாலும் இறங்கின உடனே என்னை வரவேற்கறது என் பதிவுலக நண்பர்கள்தான். அதைவிட வேறென்ன வேணும். சொல்லுங்க?
நீங்க சாதிச்சது?
தனியா நான் எதையும் சாதிச்சேன்னு சொல்ல மாட்டேன். நண்பர்கள் கூட சேர்ந்து மணற்கேணி-2009ஐ சிங்கைல நடத்தினதுல பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது.
நான் இடைமறிக்கிறேன்.. ‘சிங்கைநாதனுக்கு நீங்க செஞ்ச உதவியை குறிப்பிட மறந்துட்டீங்களே...?’
‘இல்ல அண்ணா.. அத நான்மட்டுமில்ல.. அதுல பங்குவகிச்ச எல்லாருமே பெருமையா குறிப்பிட்டுக்கலாம். இன்னைக்கு அவர் நல்ல உடல்நலத்தோட, அதைவிட உறுதியான மனபலத்தோட இருக்காரு. அதுக்கு எல்லா பதிவர்களும் நேரடியா, மறைமுகமா அவருக்கு பக்கபலமா இருந்திருக்காங்க. எல்லாருக்கும் நன்றி சொல்லி அந்நியப்படுத்த விருப்பமில்ல. அவர் இப்போ மாற்று இதயத்துக்காக வெயிட்டிங்ல இருக்காரு.
சிங்கைநாதனுக்கு உதவினப்ப உங்களுக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைச்சதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதுல சிறந்ததா எதை நினைக்கறீங்க?
எனக்கு கிடைச்ச பாராட்டு இல்லை, ஒட்டு மொத்த பதிவுலகத்துக்கும் கிடைச்சது அது. குசும்பன் சொன்னது... சிங்கைநாதன் ஓரளவு தேறிவந்த சமயம் ஒருநாள் ஃபோன்ல கூப்பிட்டான் குசும்பன். ‘டேய் ஜோசப்... இனி எனக்கு கவலையில்லைடா.. ஏதாவது ஒண்ணுன்னா நீங்க எல்லாம் இருக்கீங்கடா’ன்னுட்டு ஃபோனை வெச்சுட்டான். எனக்கு பேச்சே வர்ல. இந்த செக்யூர் ஃபீலிங்கை ஒருத்தனுக்கு குடுக்க வெச்ச பதிவுலகுக்கு நன்றின்னு நினைச்சுட்டேன்.
பதிவுலக சண்டை சச்சரவுகள் குறித்து...
ரெண்டே வகைதான். ஒண்ணு எவனாவது மேல போறான்னா அவனை அமுக்கறது.. இல்லை தான் மேல வரணும்னா வேணும்னே பண்றது.. தான் புகழ் பெறனும்னோ, இல்ல அடுத்தவன் புகழ கெடுக்கனும்னோ செய்யிறது தான்.
இந்தியாவை விட்டுப் போய் வெளிநாட்டுல வேலை செய்யறோமேன்னு வருத்தம் உண்டா?
இல்லைங்க. உண்மை என்னான்னா நான் இந்தியாவில் வேலை தேடும்போது என் கூட இண்டர்வ்யூ அட்டண்ட் பண்ணினவங்ககூட நான் போட்டி போட முடியல. அதே வெளிநாட்டுல ஈஸியா செலக்ட் ஆகி செட்டில் ஆய்ட்டேன். ஆக, என்னைவிட புத்திசாலிகள் இந்தியாவுலதான் வேலை செஞ்சுட்டு இருக்காங்க’ - சிரிக்கிறார்.
புதுசா வர்ற பதிவர்களுக்கு என்ன சொல்ல வர்றீங்க?
கிண்டலா? நான் என்ன அவ்ளோ பெரிய ஆளா? இருந்தாலும் ‘நிறைய படிங்க. நிறைய எழுதுங்க. நட்பு வட்டத்தை பெரிசாக்கிங்கோங்க. வலையை எழுதிப் பழக ஒரு சிறந்த களமா உபயோகப்படுத்தொக்கோங்க’-இந்த மாதிரி என் சீனியர்ஸ் எனக்குச் சொன்னத சொல்லிக்கலாம்’
பேட்டி நிறைவுறுகிறது.
********************************************
நான் ஜோசப் பால்ராஜுடன் கோவையில் சஞ்சய் வீட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு கல்லூரியின் முகவரி கேட்கிறார் ஜோசப். உள்ளே சென்று லேடீஸ் ஹாஸ்டலில் ஒரு பெண் பெயரைச் சொல்லி அந்தப் பெண்ணை சந்திக்க வேண்டும் என்கிறார். நாங்கள் காரில் காத்திருக்கிறோம். இறங்கி ஒரு கவரில் பார்க்கர் பேனா ஒன்றும் சில ஆயிரம் ரூபாய் தாள்களும் வைத்து அந்தப் பெண்ணுக்கு அளித்துவிட்டு வருகிறார்.
நான் கிண்டலாகக் கேட்கிறேன்.. ‘என்னய்யா லேடீஸ் ஹாஸ்டலுக்கெல்லாம் விசிட் போறீங்க??’
ஜோசப் சிரித்துக் கொண்டே சொன்னார்: ‘இந்தப் பொண்ணுக்கு யாரும் இல்லைண்ணா. சிங்கப்பூர்ல இருக்கறப்ப எங்க க்ரூப் மூலமா கேள்விப்பட்டு முழு படிப்புச் செலவும் நான் ஏத்துகிட்டிருக்கேண்ணா.. ‘இந்தியா வந்தா வந்து பார்த்துட்டுப் போங்கண்ணா’ன்னு சொல்லீட்டே இருக்கும். அதான் பார்த்துட்டு வந்தேன்’
காரில் இருந்த யாருமே கொஞ்ச நேரத்துக்கு பேசவே இல்லை.
.
82 comments:
பேட்டின்னாலே வேட்டி அவிழ்ந்து ஓடுவது போல் காட்சி தெரிகிறது.
:)
//ஜோசப் பால்ராஜை புகைப்படம் எடுக்க பதிவர்கள் போட்டா போட்டி//
ஓ இதைத்தான் போட்டோ போட்டின்னு சொல்லுவாங்களோ !
//(ஆட்டோக்ராஃப் வாங்கும் கூட்டத்தின் ஒரு பகுதி)//
அப்படியே ரேசன் கடைப்பக்கம் மண்ணென்னை ஊற்றும் நேரத்திற்கு போனால் மறுபகுதியையும் காட்டி இருக்கலாம்
ரொம்ப பிடிச்சு இருக்கு...
//‘டேய் ஜோசப்... இனி எனக்கு கவலையில்லைடா.. ஏதாவது ஒண்ணுன்னா நீங்க எல்லாம் இருக்கீங்கடா’ன்னுட்டு ஃபோனை வெச்சுட்டான்.//
நானும் சாட்சி, குசும்பன் என்கிட்ட கூட அடிக்கடி சொல்லுவான், 'அண்ணே தொப்பை எப்ப வெடிக்கும்னு பயமா இருக்குண்ணே'ன்னு, இப்ப பயம் போய்விட்டதாம்
யூசுப் ஐய்யங்காரின் சியூஓ பதவி பற்றி எதுவும் குறிப்பிடாதது அவரோட தன்னடக்கத்தைக் காட்டுது
//ஒரே கருத்துள்ள இரண்டு பேர் நட்பா இருக்கறதுல என்ன ஸ்பெஷல் இருக்கு?//
எதுவும் பேசாம மண்டையை மட்டும் ரெண்டு பேரும் ஆட்டிகிட்டே இருக்க வேண்டியது தான்!
அதான் ஸ்பெஷல்!
கல்வி தந்தை ஜோசப் வாழ்க!
//
எதுவும் பேசாம மண்டையை மட்டும் ரெண்டு பேரும் ஆட்டிகிட்டே இருக்க வேண்டியது தான்!
அதான் ஸ்பெஷல்!//
:)
என்னா நாஞ்சொல்றது ? ன்னு ஆமாம் போடச் சொல்வதற்கும்,
என்ன கையைபிடிச்சி இழுத்தியா ? ன்னு திருப்பிக் கேட்கறத்துக்கும் வேறுபாடு இருக்கே !
//காரில் இருந்த யாருமே கொஞ்ச நேரத்துக்கு பேசவே இல்லை./
கார்க்கியும்... ஜோசப்.. நல்லா இருப்பிங்க.
கிருஷ்ணா,
ஜோ பகுதி னேரப்படிப்பில் மேற்படிப்பு முடித்தவர்.
அச்சகத்தில் வேலை செய்துகொண்டே பகுதிநேர டிப்ளொமா முடித்தவர். பின் சென்னையில் பகுதிநேர என்ஜினியரிங் முடித்தார். அவரது சொந்தச் செலவிலேயே படித்திருக்கிறார். அதனால்தான் படிப்புச் சம்பந்தமான உதவிகளுக்கு உடனே சரி என்கிறார்.
இதைப் பதிவில் பதிவு செய்தால் நான் மகிழ்வேன். இன்றைய இளைஞர்களுக்கு மிக முக்கியமான தூண்டுதலாக இருக்கும்.
ஏதோ பேட்டியாம் ! விஜியக்காவ்வ்வ் வாங்க இங்க :)-
////அச்சகத்தில் வேலை செய்துகொண்டே பகுதிநேர டிப்ளொமா முடித்தவர். பின் சென்னையில் பகுதிநேர என்ஜினியரிங் முடித்தார். அவரது சொந்தச் செலவிலேயே படித்திருக்கிறார்//
அது ஜோசப் இல்லை.
இதையெல்லாம் உங்களிடம் சொன்னவர் வேறொருவர் :)
அண்ணாச்சிக்கு வயசாகிவிட்டது !
கல்விக் காவலர் யூசுப் பால்ராஜ் ஐயங்கார் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!
feel proud abt u, Joseph Anna.....
விசேட(சிறப்பு) விமானம்(வானூர்தி) மூலமாக(ஊடாக)யூசுப் பால்ராஜ் ஐயங்காரை அனுப்பி வைக்காதது எங்களுக்கு ஆற்றொணாத் துயரை அளிக்கிறது!
:)))
ரைட்டு ! யாராவது இத மெட்ராஸ் தமில்ல மொழி பெயர்த்து நக்கல் அடிங்கப்பா...
ஆட்டத்த ஆரம்பிக்க்லாம்; பரிசல் நீங்க புனைவுன்னு எழுதாதீங்க வேற பேர் புடிக்கலாம்: அப்பிடியே 4 மணிக்கா ரமணாஸ் ஹோட்டல் வாசல்கா வந்தா டிச்கஸ் பண்ணலாம்!
படிக்கறவங்களுக்கு தான் ஹெல்ப்பா?
நாங்கூட காலேஜ் முடிச்சு மூணு வருசம் தான் ஆவுது! பேனா கூட வேண்டாம் காசு மட்டும் ஏற்பாடு பண்ணுங்க எசமானே!
யோவ் வாலு! உம்ம பேட்டி எடுத்து போட்டு மாசம் ரெண்டாச்சு! இன்னைக்கி வரைக்கும் என்ன ஒரு பேட்டி எடுக்கணூம்னு உனக்கு தோணி இருக்கா?
இதான்யா பெரிய மனுசனுக்கும் சல்லிப் பயலுக்குமான டிப்பரன்ஸு!
vazhthukkal joshap
சோஜப்பு தலைக்கு தொப்பிகள் கழட்டப் படுகின்றன.
ஹலோ எல்லாரும் எதாவது கற்பனை பண்ணிக்காதீங்க.
I said Hats off to you Joseph.
திருப்பூர் வந்து அனைவரையும் சந்தித்தமைக்கு நன்றி ஜோ!
நல்ல பதிவு! நன்றி பரிசல்!
பால்ராஜ் அவர்களுடைய தலையிலிருந்து தொப்பி கழட்டும் வேலையில் Mr.தராசு உடன் நானும் சேர்ந்துகொள்கின்றேன்.
பொறவு பரிசலண்ணாச்சி,அவங்க கேட்பாங்களாம், இவரு சொல்லுவாராம்னு ஒன்னு போடப் போறதா சொன்னீங்களே என்னாச்சு?
கல்வி கற்க உதவுவது ஒரு தலைமுறைக்கே உதவுவது போல் ஆகும்..வாழ்க ஜோ...
:)
வாழ்த்துகள் ஜோசப். நாளைக்கு சமூகம் நம்மைப் பார்த்து கேலி செய்யாம வாழனும்னு நினைக்கறவன் நான். ஆனா நாளைய சமுதாயத்துக்கும் உதாரணமா இருக்கிறவன் நீ. நீ என் நண்பன்னு சொல்லிக்கறதுலெ பெருமையா இருக்குடே...
அருமையான பேட்டி. நெகிழவைத்த பேட்டி! ஜோவுக்கு என் அன்புகள்!
இந்த பேட்டியை என்டிடிவி யில் வரும் வாக் தி டாக் மாதிரி கானோளியோடு போட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.
அடுத்து நீங்கள் பதிவரை பேட்டி எடுக்கும் பொழுது விமானத்திலோ, காரிலோ பேட்டி எடுத்து காணோளியாக வெளியிட வேண்டுகிறேன் (edit illamal appdiye veliyida venum..)
வணங்குகிறேன் ஜோசப் சார்.
அறிவுக் கொடை வள்ளல் தம்பி ஜோசஃப் பால்ராஜ் அவர்களின் பேட்டியை வெளியிட்டதற்கு உங்களுக்கு பாராட்டுகள்.
ஜோ வின் மேல் மரியாதை கூடுகிறது.
ஜோவுக்கு என் அன்புகள்!
ஒரு நல்ல நண்பரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளமுடிந்தது. நன்றி பரிசல், வாழ்த்துகள் ஜோஸஃப்.!
.
பேட்டிய போட்டுட்டு ஆதி அண்ணே மாதிரி கலவரத்தை கூட்டத்தோட நின்னு வேடிக்கை பாக்க கூடாது.. அப்பப்போ எந்த சைடுலயாது பூந்து சண்டை போடணும் ஆமா...
jokes apart...ஜோசப்பின் மேல் மரியாதை இன்னமும் கூடுகிறது...
//இந்தியாவை விட்டுப் போய் வெளிநாட்டுல வேலை செய்யறோமேன்னு வருத்தம் உண்டா?
இல்லைங்க. உண்மை என்னான்னா நான் இந்தியாவில் வேலை தேடும்போது என் கூட இண்டர்வ்யூ அட்டண்ட் பண்ணினவங்ககூட நான் போட்டி போட முடியல. அதே வெளிநாட்டுல ஈஸியா செலக்ட் ஆகி செட்டில் ஆய்ட்டேன். ஆக, என்னைவிட புத்திசாலிகள் இந்தியாவுலதான் வேலை செஞ்சுட்டு இருக்காங்க’ //
100 % உண்மை
:))
நானும் தராசு அண்ணனோடு சேர்ந்து தொப்பியை கழட்டுகிறேன்
ஜோசப், கடைசி வரி படித்ததுமே கண்கள் கலங்கியது..
பதிவுலகம் குறித்த பார்வை சிறப்பானது.
வாழ்த்துக்கள் ஜோசப் ..
Great interview..
என்னாது பேட்டியா? ஆள விடுங்க சாமிகளா
வணக்கம் ஜோசப்!
நன்றி கிருஷ்ணா!
நூறு ஆண்டுகள் வாழ்ந்து இது போல் பல சேவைகள் செய்ய வாழ்த்துக்கள்!
நளினா
//கல்லூரிப் படிப்பில் முதல் பெஞ்ச் மாணவன் //
இத நான் வண்மையா கண்டிக்கிரேன்..
//கோவை செல்ல வழி காட்டும்விதமாக அவருடன் காரில் சென்றவாறே கண்ட பேட்டி..//
ஏனுங்கண்ணா.. திருப்பூரிலிருந்து கோவைக்கு போகிற வழியை திருப்பூரிலிருந்தே சொல்லலாமே..
//கருத்து வேற்றுமைகளை மீறி நட்பு வளரணும். அதானே நட்பு? ஒரே கருத்துள்ள இரண்டு பேர் நட்பா இருக்கறதுல என்ன ஸ்பெஷல் இருக்கு?//
Note பண்ணுங்கடா.. தத்துவமா உதிருது..
//(ஜோசப் பால்ராஜை புகைப்படம் எடுக்க பதிவர்கள் போட்டா போட்டி)//
அடப்பாவிகளா.. இப்படி ஆகுமுன்னு தெரியாம நானும் பலிகடா ஆயிட்டனே..
//நான் தனியாளில்லைன்னு எனக்கு உரக்கச் சொன்னது பதிவுலகம்தான்.//
ஆமா.. தல, தனி மரம் இல்ல.. தோப்பூபூபூ..
//சிங்கைநாதன் ஓரளவு தேறிவந்த சமயம் ஒருநாள் ஃபோன்ல கூப்பிட்டான் குசும்பன். ‘டேய் ஜோசப்... இனி எனக்கு கவலையில்லைடா.. ஏதாவது ஒண்ணுன்னா நீங்க எல்லாம் இருக்கீங்கடா’ன்னுட்டு ஃபோனை வெச்சுட்டான். எனக்கு பேச்சே வர்ல.//
ச்சே ஒரே ஃபீலிங்ஸ்ஸ்ஸ்ஸ்..
//என்னைவிட புத்திசாலிகள் இந்தியாவுலதான் வேலை செஞ்சுட்டு இருக்காங்க//
என்னே அடக்கம்.. என்னே அடக்கம்..
நண்பர்களே..
நீங்கள் பாசத்தோடு ஜோசப் என்று, யூசுப் அய்யங்கார் என்றும் அழைக்கும் பால்ராஜு எனக்கு சமீபத்தில் தான் பழக்கம்.. இப்போ தான் சில நாட்களுக்கு முன், 20/21 வருஷமாத்தான் தெரியும்..
ரொம்ப பழக்கம் எல்லாம் கிடையாது.. அதுனால நான் அவரபத்தி இப்போ சொல்லறது ரொம்ப கம்மியானது தான்..
அவரோட அப்பா பேரு “அடைக்கலம்”.. அடைக்கலம் பெத்த புள்ள பிறருக்கு அடைக்கலம் குடுக்கலேனா எப்படி??
இன்னைக்கு நேத்து இல்லங்க.. அவரு படிக்க வச்ச புள்ளங்க கணக்கை எடுத்தா அட்லீஸ்ட் ஒரு Class Roomஆவது தேறும்..
அவரு நிறைய படிப்பாரு.. கதை புஸ்தகத்தை சொன்னேனுங்க..
பொன்னியின் செல்வனை எனக்கு அறிமுகப்படுத்தியதே அவரு தான்..
(ராஜ ராஜன் எங்க தாத்தான்னு கதை சொல்லுவாரு..அத விடுங்க)
நிறைய சுத்துவாரு..
அடிப்படையில அவரு ஒரு பத்திரிக்கையாளர்.. உங்களுக்கு தெரியுமா?? கல்லூரியிலேயே ஒரு பத்திரிக்கை நடத்தினாரு..
அவருக்கு தூங்கறதுனா ரொம்ப பிடிக்கும்.. ஆனா தூங்கத்தான் மாட்டாரு.. இப்பவும் சிங்கப்பூர் சென்றும் அதே தொடர்கிறது.. பாருங்க நமக்கு இரவு 10 தான் ஆகும்.. சரி அதான் ஜோசப் ஆன்லைனில் இருக்காரே பேசுவோமேன்னு பேசுவோம்.. ஆனா அப்போ அவருக்கு மணி - 12:30.. இல்லங்க இப்போ பேச முடியாதுன்னு ஒரு நாளும் சொல்ல மாட்டாரு..
என்னமோ போங்க.. எனக்கு அவரை முழுசாத் தெரியாது.. தெரிஞ்சவங்க இன்னும் சொல்லுங்களேன்..
நீங்க என்(ம்) நட்பு வட்டத்துல இருக்கிறது பெருமையா இருக்கு ஜோசப். நீடூழி வாழ வேண்டும்.
கல்விக்கு மட்டுமல்ல, கல்யாணத்திற்கும் உதவுபவர் தான் நம் ஜோ...
//காரில் இருந்த யாருமே கொஞ்ச நேரத்துக்கு பேசவே இல்லை./
கார்க்கியும்... ஜோசப்.. நல்லா இருப்பிங்க. //
நானும்.. Keep Going Joseph..
நல்ல பதிவு தல, ஒரு இன்ஸ்பிரேஷன் பதிவு இது, எனக்கு ஜோவை இவ்ளோ தெரியாது, சந்திக்கும்போது இது தெரிந்திருந்தால் கையை கொஞ்சம் அழுத்தமா பிடிசிருந்திருபேன். வாழ்த்துக்கள் ஜோ, நன்றி பரிசல்.
பரிசல் மற்றும் ஜோசப்,
நன்றாக வந்துள்ளது பகிர்வு..
// டேய் ஜோசப்... இனி எனக்கு கவலையில்லைடா.. ஏதாவது ஒண்ணுன்னா நீங்க எல்லாம் இருக்கீங்கடா’ன்னுட்டு ஃபோனை வெச்சுட்டான் //
சில நேரங்களில் பதிவுலக சர்ச்சைகளால் சலிப்படைந்தாலும், இது போன்ற கருத்துக்கள் நம்பிக்கை அளிக்கிறது..நன்றி குசும்பன்..
பரிசல் அண்ட் ஜோ... குட் :))))))))))
Good Interview....
தம்பி ஜோசப்புக்கு வாழ்த்துகள்!
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
உங்களது முயற்சிக்கு வாழ்த்துகள் ஜோசப்.
பகிர்வுக்கு நன்றி பரிசல்.
ஏதோ பேட்டியாம் ! விஜியக்காவ்வ்வ் வாங்க இங்க :)-//
ஓய் மணிகண்டன் லொள்ளா? அடுத்த பேட்டி உன்னைத்தான். பரிசல் எடுக்க மாட்டார், நாந்தான். பீ கேர்ஃபுல்.... இங்க நோ கும்மி.
ம்ம்ம்... நல்லதொரு அறிமுகம்.. ஜோசப் சார் அவர்களைப் பற்றி நிறைய தெரியாத அருமையான விஷயங்கள் தந்திருக்கிறீர்கள் நன்றி:-)
இப்போ கூட ஒரு பேட்டி எடுத்து அதையும் உங்க பதிவுல போடறதுக்கு ரொம்ம்ம்ம்ம்ப தைரியம் வேண்டும் கிருஷ்ணா - உங்க தைரியத்துக்குப் பாராட்டுக்கள்.
// ILA(@)இளா said... என்னாது பேட்டியா? ஆள விடுங்க சாமிகளா//
என்னா இளா - எவ்வளவோ பாத்துட்டோம், இன்னொரு எபிசோட் பாக்க மாட்டோமா??
ஜோசப் - புனைவு எழுதி ட்ராஃப்ட்ல வச்சிடுங்க..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
(ஜோசப் பால்ராஜை புகைப்படம் எடுக்க பதிவர்கள் போட்டா போட்டி)
,,,,,,,,,,,,,,,
முடியலாஆஆஆஆஆஆஆஆஆஆஆ
(ஆட்டோக்ராஃப் வாங்கும் கூட்டத்தின் ஒரு பகுதி)
.............
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ப்பாஆஆஆ
புதுசா வர்ற பதிவர்களுக்கு என்ன சொல்ல வர்றீங்க?
கிண்டலா? நான் என்ன அவ்ளோ பெரிய ஆளா?
.............
ஆதானே?
ஜோசப் சிரித்துக் கொண்டே சொன்னார்: ‘இந்தப் பொண்ணுக்கு யாரும் இல்லைண்ணா. சிங்கப்பூர்ல இருக்கறப்ப எங்க க்ரூப் மூலமா கேள்விப்பட்டு முழு படிப்புச் செலவும் நான் ஏத்துகிட்டிருக்கேண்ணா.. ‘இந்தியா வந்தா வந்து பார்த்துட்டுப் போங்கண்ணா’ன்னு சொல்லீட்டே இருக்கும். அதான் பார்த்துட்டு வந்தேன்’
காரில் இருந்த யாருமே கொஞ்ச நேரத்துக்கு பேசவே இல்லை.
////////
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
நிஜமாவே ஜோசப்பு கொடுத்த பேட்டிதான்.. :_)
மாரநேரிநீ அப்படின்னு ஒரு blog இப்போ ஆரம்பிச்சா எதாவது நடக்குமா boss? :)
Srini
ஜோசப்புக்கு ஒந்றும் பகிர்ந்த பரிசலுக்கு ஒன்றுமாய் ரெண்டு பூங்கொத்து!
இன்னும் அவர் செஞ்ச நல்லவை நிறைய இருக்கு. அத அவரு சொல்ல மாட்டாரு.
நான் சொன்னாலும் அடிப்பாரு.
சுபா அப்டிங்கிற தங்கச்சிய பத்தி கேளுங்க அவருகிட்ட. ஜோ அண்ணா இல்லைன்னா இந்த சுபா இப்ப இருக்க முடியாது. இத படிச்சுட்டு என்னைய திட்றதுக்காகவாச்சும் எனக்கு போன் பண்ணுங்க ஜோ அண்ணா.
சுபா,
சிட்னி.
இப்படி ஒரு நல்லவரை பாக்க சந்தர்ப்பம் கிடைச்சும் மிஸ் செஞ்சுட்டேன்:(.
வாழ்த்துக்கள் ஜோசப் & பரிசல்
வாழ்த்துக்கள் ஜோசப்..
நன்றி பரிசல்..
"தாரணி பிரியா said...
இப்படி ஒரு நல்லவரை பாக்க சந்தர்ப்பம் கிடைச்சும் மிஸ் செஞ்சுட்டேன்:(. "
அதே அதே ....
(அக்கா சமுதாயத்துக்கு நீங்க செய்ற நல்லதெல்லாம் உங்களுக்கே தெரியல)
அன்பின் ஜோசப்...
வாழ்கிறீர்கள்....உண்மையாகவும்...எங்கள் மனங்களிலும்...
ஒரு நல்ல மனிதரை அங்கிகரித்ததர்க்கு அறிமுகம் செய்ததற்கு
நன்றி பரிசல்.
அன்புடன் கபிலன்.
இந்த செக்யூர் ஃபீலிங்கை ஒருத்தனுக்கு குடுக்க வெச்ச பதிவுலகுக்கு நன்றின்னு நினைச்சுட்டேன்.//
இது சாதாரண விஷயம் இல்லை. இந்த பிரச்னையில் இந்த நேரத்தில் நம்மை மீட்டெடுக்க யாரும் இல்லை என்ற துயர் தான் பல தற்கொலைகளுக்கு காரணம் வாழ்த்துக்கள் ஜோசெப் !
இதே பேட்டி உள்ளூர் ஆளை எடுத்தா நிலைமையே வேற .
வாழ்த்துக்கள் ஜோ !!!
தொடருங்கள்
A very nice posting Parisal.
Though I don't know Mr Joseph, I am inspired by his helping tendency.
Regards
R Gopi
இன்னும் கொஞ்சம் பெட்டரா எதிர்பார்த்தேன்:(
There is no wrods to describe your service...We also want to participate on the same...Next time onwards please include me as part of this social service...
Before helping a person you will be analyzing the background of the person...Sometime your hard work will fall in wrong person's hand
ஜோசப்... தி கிரேட்
கிரேட்! ஜோசப் நல்ல உடல்நிலையோடு நீடூடி வாழ வேண்டும்.
ஜோசப்,
உன்னை சந்திக்க ஆசை. முடியுமா?
பேட்டிக்கு நன்றி சொல்லி உங்களை அந்நியப்படுத்த விரும்பவில்லை பரிசல் அண்ணா.
பின்னூட்டத்தில் வாழ்த்தியவர்களுக்கும் நன்றி சொல்லி யாரையும் தூரத்தில் வைக்க விரும்பவில்லை.
@வடகரை வேலன் அண்ணாச்சி,
அண்ணாச்சி, நீங்கள் சொல்லியது எங்கள் அன்பு பெரியவா கோவியாரின் வாழ்க்கை. நான் பகுதிநேர மேற்படிப்பில் தான் படித்தேன். ஆனால் கோவியாருடன் ஒப்பிடுமளவுக்கு கடினமான உழைப்பாளி இல்லை என்பதே உண்மை.
உங்கள் புகழ்சிகள் என் தலையில் கனமாக ஏறாதிருக்க இறைவனை வேண்டுகிறேன். அத்தனை புகழ்சிகளுக்கும் உரியவன் அல்ல நான் என்பதை உணர்ந்தே இருக்கின்றேன்.
அன்புடன்,
ஜோசப் பால்ராஜ்
பால் நீங்க பேசினாலே பேட்டி கொடுப்பது போலத்தான் இருக்கும்.....
அப்புறம் பேட்டி னா? எப்புடி இருக்கும்....????
இருந்தாலும் ரொம்ப அடக்கமாதான் பதில் சொல்லி இருக்கீங்க.....
வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்ல...... (Gud job.... Keep it up...(குட் ஜாப் nu பேட்டிய சொல்லல....... உதவினதற்காக..... )
P.S - I ve read that fully as u requested... thats y posting a comment...
போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்சிபஎபா இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.நன்றி!
ஜோசப் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்..
ஜோசெப் அண்ணேன்...ஐ லவ் யு அண்ணேன்...! :)
வெளியூர்க்காரன் உங்களுக்கு சலாம் சொல்றான்..! :)
ஜோசெப் அண்ணேன்...ஐ லவ் யு அண்ணேன்...! :)
வெளியூர்க்காரன் உங்களுக்கு சலாம் சொல்றான்..! :)
@Govi Kannan../
கோவி கண்ணன் அண்ணேன் புதுசா எழுத வர்ற சிங்கப்பூர் பதிவர்கள் எல்லாருக்கும் எப்டி பதிவு எழுதறதுன்னு ஹெல்ப் பண்ணுவாராம்...நான் வந்து ரொம்ப நாளாச்சு...எனக்கு எதுவும் ஹெல்ப் பண்ண மாட்டேங்குறாரு..என் அப்டி....?? :)
நான் தனியாளில்லைன்னு எனக்கு உரக்கச் சொன்னது பதிவுலகம்தான்.//
அனுபவிக்கும் உண்மை.
ஜோ மேல மரியாதை ரொம்ப உயர்ந்திருக்கு. நன்றி கிருஷ்ணா. மகிழ்ச்சியும்.
Post a Comment