இதுக்கு முன்னாடி கடினமா கேள்விக்கு பதில் சொன்ன அனுபவம் உண்டா ? (பிரியமுடன் பிரபு)
உண்டு. உங்கள் ஜூனியர் மாத இதழில் சில வாசகர்களை தேர்வு செய்து அந்த வாசகர்களையே ஆசிரியர் குழுவாக இருக்கப் பணித்தார்கள். அப்போது எனக்கு இரண்டு கேள்வி கொடுத்தார்கள். ஒரு கேள்வியும் பதிலும் நன்றாக நினைவிருக்கிறது.
கேள்வி: உயிருக்குப் போராடும் ஒரு பெண், கற்புக்குப் போராடும் ஒரு பெண் இருவரில் யாருக்கு முதலில் உதவுவீர்கள்?
இதற்கு நான் சொன்ன பதில்: கற்புக்குப் போராடும் பெண்ணுக்கு முதலில் உதவி செய்வேன். உயிருக்குப் போராடும் பெண்ணுக்கு முதல் உதவி செய்வேன்.
(எல்லாரும் ஜோரா கைதட்டியாச்சா.. வெரிகுட்!)
******************
நீங்கள் முட்டாள் என்பது உங்களுக்குத் தெரியுமா தெரியாதா? (வால்பையன் )
நிச்சயமா தெரியும் வால்!
**********************
என் ஆசை நாயகி தமன்னா நடிக்க இருக்கும் அடுத்த தமிழ் படங்கள் எவை? (ராம்ஜி யாஹூ)
அப்பாய்ன்மெண்ட் வாங்கிக் குடுங்க. சமர்த்தா உட்கார்ந்து பேசி, கேட்டுச் சொல்றேனே... (எப்படியெல்லாம் கெளம்பறாங்கப்பா..)
***********************
ஏதாவது வெளியிடங்களுக்கு போகும்பொழுது நாம் அணிந்திருந்த சட்டை போலவே அச்சு அசலாக சட்டை அணிந்திருக்கும் முன் பின் அறிந்திருக்காத ஒருவர் மீது அந்த நேரத்தில் ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டு அவரையே வெறித்து பார்க்கிறோமே ஏன்? (ப்ரியமுடன் வசந்த்)
என் இனமடா நீ என்கிற ஈர்ப்புதான். வேற என்ன?
****************************
பரிசல், சுஜாதா ஒப்பிடுக. (HVL)
நல்ல வேளை இதைப் படிக்க அவர் இல்லை...
***************************
இந்த பின் நவீனத்துவம், பின் நவீனத்துவம்னு சொல்றாங்களே அப்படின்னா என்ன? (பாலா)
இந்தப் பதிவைப் படிங்க..
*****************************
நண்பர்களின் வளர்ச்சியைப் பார்த்து ஏற்படும் சிறு பொறாமையை யும்,அதனால் வரும் ஆற்றாமையையும் தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுவதை எப்படித் தடுக்கலாம்? (M.G.Ravi Kumar)
நாமும் முன்னேற வேண்டும் என்ற தூண்டுதலைத் தரும் சின்னப் பொறாமையை அங்கீகரிக்கலாம். ஆற்றாமையையும், தாழ்வு மனப்பான்மையையும் அண்டவே விடக்கூடாது.
தவிர்க்க ஒரே வழி... நம்மை அவருடன் ஒப்பிடுவதை முழுவதுமாக நிறுத்திக் கொள்வதுதான்.
சிறந்த கேள்விக்கான பரிசு கொடுக்க முடிவு செய்தால் உங்க கதை தொகுப்பை தவிர வேறென்ன தருவீர்கள்? (கார்க்கி)
என் அன்பு.
வாழ்க்கை உங்களுக்கு எப்ப அழகாத் தோணுது? எல்லா சுதந்திரங்களோட முக்கியமா நண்பர்களோட இருந்தப்பவா?.. தவிர்க்க முடியாத,தவிர்க்க கூடாத பொறுப்புகளோடு இருக்கறப்பவா? (சிவக்குமார்)
என்னையும் நம்பி இப்படி ஒரு கேள்வி கேட்க உங்களை மாதிரி ஒரு ஜீவன் இருக்குன்னு நெனைக்கறப்ப...
எதுல அதிகமா புல்லரிக்கும்... ஒரு பையன் பொண்ணுகிட்ட ல்வ்வை சொன்னதும் அந்த பொண்ணும் உடனே ஏத்துகிறப்பவா? இல்லை திடீர்னு ஒரு பொண்ணு பையன் முன்னாடி வந்து தானாகவே தன்னோட காதலை சொல்றப்பவா? (சிவக்குமார்)
நிச்சயமா ரெண்டாவதுலதான் சிவா. புல்லரிக்குமான்னு தெரியல. சந்தோஷமா இருக்கும். உலகமே அழகா தெரியும். எதிர்ல வர்றவங்க போறவங்களுக்கெல்லாம் புன்னகையைத் தரச்சொல்லும்..
சமீபத்தில் அட இது ரொம்ப நல்லாயிருக்கே அப்படீன்னு தோணினது?(சிவக்குமார்)
ஹி...ஹி.... சொன்னா வீட்ல அடிவிழும்க. விட்டுடுங்க..
அட கொய்யாலே இவ்வளவு நாளா இது எனக்கு தெரியாம போச்சே..அப்படீன்னு உங்களுக்கு எதேனும் அனுபவம் உண்டா.. (சிவக்குமார்)
நிறைய... முதல் டைம் ஃப்ளைட்ல போறப்ப ஜன்னல் வழியா தெரிஞ்ச விமான இறக்கைகளைப் பார்த்து, கூடவே இன்னொரு ஃப்ளைட்டும் போட்டி போட்டுட்டு வருதுய்யா நெனைச்ச ஆளு நான்..
கடைசியா ஒரு ஹாட் கொஸ்டின்.. செம்மொழி மாநாட்டுக்கு இளையாராஜா இசையமைக்காதில் உங்களுக்கு வருத்தம் உண்டா??இல்லையா??? (சிவக்குமார்)
ஏற்கனவே அவர் இசையமைச்ச நிறைய பாட்டு தமிழை எங்கெங்கெல்லாமோ கொண்டு சேர்த்திருக்கு.. இந்த ஒரு பாட்டு போடலைன்னா என்ன? ஆனா அவரோட மகன் அதுல பங்கு வகிச்சதுல சந்தோஷம்..
வினாக்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை? (வான்முகில்)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அழுதுடுவேன்க..
கி.பி. 2100 -ல் இருக்கப் போகிற உலகமொழிகள் என்னவாயிருக்கும்? குறிப்பா தமிழ் எந்த நிலைமையில இருக்கும்? (க.அண்ணாமலை)
இருக்கப்போகிற உலகமொழிகள் என்னவாயிருக்கும்? அதான் நீங்களே சொல்லிட்டீங்கள்ல... இருக்கும்! தமிழ் அதுபாட்டுக்கு இருக்கும்... யாரும் ஒண்ணும் பண்ண முடியாது...
ஆமா... என்னையெல்லாம் இப்படி கேள்வி கேட்கணும்ன்னு உங்களுக்கு யாரு சொல்லிக் கொடுத்தாங்க???
*******************************************
இனிமே கேள்வி கேளுன்னு சொல்லுவியடா நீ?-ங்கற ஸ்டைலிலயே கேள்வி கேட்ட நண்பர்களுக்கு தேங்க்ஸ்!
19 comments:
சுவையான கேள்வி பதில்கள்.அருமை.
எவ்வளவு டீப்பா எறங்கி கேள்வி கேக்குறாங்க..
எவ்வளவு டீப்பா எறங்கி கேள்வி கேக்குறாங்க..
என்னா பரிசல் நண்பா...
என் கேள்வி என்னாச்சி? பதில் சொல்ல முடியல்லையா?
என்னவோ போங்க பாஸ்.
என் கேள்விக்கு பதில் சொல்லலின்னா பரிசல் கமுந்திரும்.
பாத்து ......
ஆனாலும் நண்பா...
பதில்கள் மிக சாமர்த்தியமாக இருந்தன.
செம கேள்வி பதிலுங்க .....
கலக்கல் .....
உங்களுக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் என்ன சம்பந்தம்?
பதிலுக்கு இவ்வளுவுன்னு காசு எது கொடுத்தாங்களா
அருமை,,,
பதில்கள் சுவைக்கின்றன. வாழ்த்துக்கள்
//இதுக்கு முன்னாடி கடினமா கேள்விக்கு/
"கடினமான" கேள்வி என்று எழுதினால் வேறு பொருள் தருகிறதே
________________________
உங்க அன்ப வச்சுக்கிட்டு நான் என்ன செய்ய? அதுசரி, அன்புன்றது உங்க வீட்டு நாய் பேரு இல்லைதானே?
முதலில், என் கேள்விக்கு(ம்) பதில் சொன்னமைக்கு நன்றி!......
அந்த M.G.Ravikumar நான் தான்!...ஹி ஹி!......
இதைத் தொடருமாறு மிக்க அன்புடனும் கையில் கம்புடனும் கேட்டுக் கொள்கிறேன்!..
read your post-modern post only today..from the link tat you had given...excellent..
பதில்களுக்கு நன்றி. அருமை.
இந்த வார கேள்விகள்
தமிழ் வலைப்பதிவுகளை பள்ளி (பதினொன்றாம் வகுப்பிற்கு மேல்) , கல்லூரி மாணவர்களை படிக்க சிபாரிசு செய்வீர்களா?
இன்னும் எத்தனை வருடம்/மாதம் பதிவுகள் மீது உங்களுக்கு ஆர்வம் இருக்கும் என எண்ணுகிறீர்கள் ?
சுஜாதா, எஸ் ராமகிருஷ்ணன்- இருவரிடம் இருந்தும் ஒரு எழுத்தாளர் கற்று கொள்ள வேண்டியவைகள் எவை ?
நீங்கள் முட்டாள் என்பது உங்களுக்குத் தெரியுமா தெரியாதா? (வால்பையன் )
நிச்சயமா தெரியும் வால்!//
நான் சும்மா லுலுலாயிக்கு தான் கேட்டேன், சீரியஸ் ஆகிறாதிங்க! திருப்பூர் தாங்காது!
முகராசி.. சார்...!முகராசி!
சில பேரைப்பாத்தா தான்.. இப்புடியெல்லாம் கேள்வி கேட்கனும்னு தோணும்!
:)
பத்திரிகைகள் ரேஞ்சுக்கு பிகு பண்ணீயிருக்கீங்க போல. என் கேள்வியைக் காணோம்.
Post a Comment