Wednesday, July 21, 2010

மனைவி கணவனின் மூஞ்சிலயே குத்துவிட நினைக்கும் பத்து தருணங்கள்!








1) அன்னைக்குத்தான் வேலையெல்லாம் கொஞ்சம் சீக்கிரம் முடிச்சுட்டு அக்கடான்னு உட்காருவாங்க. நம்மாளு திடீர்னு அஞ்சாறு ஃப்ரெண்ட்ஸோட வீட்டுக்குப் போய் ‘யாரு வந்திருக்காங்க பாரு டார்லிங்’ன்னு டின்னருக்கோ, லஞ்சுக்கோ அடியப் போடும்போது....

2) ஒரு மாசமா சிரமப்பட்டு அவங்க மனசுல நெனைச்சமாதிரி வீட்ல அங்கங்க அந்தந்தப் பொருட்களை செட் பண்ணி, இண்டீரியரை நல்லவிதமா ரசனையா பண்ணி வெச்சிருப்பாங்க. டக்னு ஏதோ அவசரத்துக்கு ஒரு நாள் அம்மா வீட்டுக்கோ, வேற எங்கயாவதோ போய்ட்டு வருவாங்க. வந்து பார்த்தா வீடு பழையபடி கந்தலா கலைஞ்சிருக்கும் பாருங்க.. அப்ப ஒரு குத்து..

3) அன்னைக்குன்னு புருஷன் மேல ரொம்ப பாசம் பொங்கும்.. பாவம்யா அவன்னு தோணும். சரின்னு டின்னருக்கு அவருக்குப் பிடிச்ச டிஃபன் ஏதாவது செஞ்சு ஹாட் பாக்ஸ்ல வெச்சிருப்பாங்க. பிடிச்ச சட்னி, சாம்பார்ன்னு ரெடியா இருக்கும். அன்னைக்குன்னு ஒரு ஃபோன் கூட பண்ணாம நம்மாளு ஃப்ரெண்ட்ஸ் கூட பார்ட்டின்னு போய்ட்டு, அவங்க கூப்பிடறப்பவும் ‘இதோ வந்துட்டேன்மா.. வந்துட்டே இருக்கேன்’ன்னு அடிச்சு விட்டுட்டு ’கண்டுபிடிக்க மாட்டா ஸ்மெல் இல்ல’ன்னு ஒரு நம்பிக்கைல வீட்டுக்குப் போவான். கதவைத் திறந்த உடனே மனைவியைப் பார்த்து கேனத்தனமா அசடு வழியறதுலேர்ந்தே அவங்க கண்டுபிடிச்சுடுவாங்க. அப்ப தோணும் இவன் மூக்குலயே ஒரு குத்து விட்டா என்ன’ன்னு..

4 - அ) குழந்தைகளைக் கூட்டீட்டு எங்கயாவது போலாம்ன்னு ப்ளான் பண்ணச் சொல்லுவாங்க. நம்மாளும் ப்ளானெல்லாம் பக்காவா போடுவாரு. கிளம்பறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி ‘லீவு சாங்ஷன் ஆகல’ அது இதுன்னு ஏதாவது சொல்லிட்டு ரெண்டு நாள் மூட் அவுட்லயே இருக்க வெச்சுட்டு, அப்பறமா ஏதோ எவரெஸ்ட்ல ஏறினவனாட்டம் ‘எப்படியோ சமாளிச்சுட்டேன் போலாம்’ன்னு சொல்லுவான் பாருங்க.. ‘எதுக்குய்யா டென்ஷனைக் குடுக்கற?’ன்னு ஒரு குத்து விடணும்னு தோணும் அப்ப..

4 -ஆ) டூர் போறப்ப அல்லது எங்கயாவது பிரயாணம் போறப்ப பஸ்ல/ட்ரெய்ல ஏறி எல்லாம் உட்கார்ந்த பிறகு ‘இரு வர்றேன்’னு தம்மடிக்க (அ) புத்தகம் வாங்கன்னு இறங்கிப்போவான் நம்மாளு. வண்டி எடுத்து கொஞ்சம் மூவ் ஆகும். மனைவி அவ்ளோ படபடப்பா தேடுவாங்க.. இவன் சாவகாசமா ஒரு இளிப்பு இளிச்சுட்டு வந்து உட்காருவான் பாருங்க.. எல்லார் முன்னாடி இருந்தாலும் பரவால்லன்னு அப்ப விடணும் ஒரு குத்து...

5) கல்யாணம், காட்சின்னு எங்கயாவது போனா அவங்க ஏதாவது பேசிகிட்டே வந்துட்டு இருப்பாங்க.. நம்மாளு சைஸா ஏதோ ஒரு செவப்புச் சேலைல வர்ற ஃபிகரை ரூட் விட்டுட்டு இருப்பான். அத கவனிக்காம அவங்க ’என்னங்க.. சரிதானே நாஞ்சொல்றது’ன்னு கேட்டு திரும்புவாங்க. இவன் தலையும் புரியாம வாலும் புரியாம ஒரு முழி முழிப்பான்லயா அப்ப விடணும்னு தோணும் அவன் சைட்டடிச்ச கண்லயே ஒரு குத்து...

6)அவங்க அம்மாவோ, அப்பாவோ வரும்போது வீட்டுக்கு வர்ற நம்மாளு, சிரிச்ச முகமா இல்லாம முஞ்சிய ஒரு மாதிரி வெச்சுகிட்டு வாங்க எப்ப வந்தீங்கன்னுகூட கேட்காம நேரா உள்ள போகும்போது அம்மாப்பா அவங்களை சங்கடமா ஒரு பார்வை பார்ப்பாங்க.. அப்ப டக்னு உள்ளாற போய் அவன் மூஞ்சிலயே ஒரு குத்து...

7) பையனோ, பொண்ணோ ஆசையா வந்து அவன் மேல விழுவாங்க... எங்கயோ இருக்கற எரிச்சலை அவங்க மேல காட்டி எரிஞ்சு விழும்போது குட்டீஸ் பாவமா ஒரு பார்வை பார்க்கும் அவங்கம்மாவை. அப்ப தோணும் அவங்களுக்கு...

8) மனைவி தனக்குப் பிடிச்ச/ரொம்ப நாள் தேடிகிட்டிருந்த கலர்ல ஒரு ட்ரெஸ்ஸை க்டைல பார்த்து கண்கள் விரிய.. ‘ஹை.. இதத்தாங்க தேடிகிட்டிருந்தேன்’ன்னு சத்தமா சொல்லிகிட்டே கைல எடுத்து ‘எப்படீங்க இருக்கு இது?’ன்னு கேட்பாங்க. நம்மாளு ஒரு சைஸா மூஞ்சிய வெச்சுகிட்டு ‘ம்ஹூம்’ன்னு உதட்டைப் பிதுக்கி ‘என்ன கலர்டி இது? இதுக்கா இந்த பில்டப்பு’ங்கறா மாதிரி ஒரு போஸ் குடுப்பான் பாருங்க.. அப்ப விடணும் அந்த வாய்லயே ஒரு குத்து..


9) எங்கயாவது ரொமாண்டிக்கான டூர் போயிருப்பாங்க. குட்டீஸ் வெளில விளையாடிகிட்டிருக்கும். மனைவி அந்த இயற்கையை ரசிச்சுகிட்டே ஒரு கப் டீயோ காபியோ கைல எடுத்துட்டு புருஷன்கூட வந்து உட்காரலாம் இங்க’ன்னுஅவனைத் தேடுவாங்க. நம்மாளு யாரு.. அங்கயும் பெரிய போர்வையைப் போத்திட்டு என்னமோ வெட்டி முறிச்சாப்ல தூங்கீட்டிருப்பான். அப்ப எழுப்பி கன்னத்துலயே ஒரு குத்து விடணும்னு தோணும் அவங்களுக்கு..

10) ஆஃபீஸ் விட்டு வீட்டுக்கு வந்து ஏதாவது நாலு வார்த்தை பேசி நேரங்காலமா தூங்காம கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு....




ஐயோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ........



.

57 comments:

Unknown said...

நச்சுனு விழுந்திருக்கு....சாரி. நச்சுனு வந்திருக்கு.

Unknown said...

நல்லா வாங்கியிருக்கீங்கன்னு தெரியுது.

மேவி... said...

சார் ...இதை நீங்க எழுதினதா இல்ல உங்க வீடும்மா எழுதினதா ???

செமைய இருக்குங்க

ம்ம் ...இப்ப தான் என் வீட்டுல கல்யாண பேச்சை எடுத்து இருக்காங்க. நீங்க சொல்லுறதை பார்த்த நான் வாழ்க்கை முழுக்க தர்ம அடி வாங்கிட்டே இருப்பேன் போல இருக்கே :)

(இதுஎல்லாம் நீங்க அடி வாங்கி அனுபவமான்னு கேட்கலாம்ன்னு நினைச்சேன்...ஆனா வேண்டாம்ன்னு விட்டுட்டேன்)

கார்க்கிபவா said...

எதிர் பதிவு போட்டாசுங்கோவ்வ்வ்வ்


http://www.karkibava.com/2010/07/10_21.html

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நம்மாளு தான் இப்படினு நினைச்சா
எல்லா ஆளும் நம்மாளு போல தான்னு புரியறப்போ
........

a said...

இந்த பதிவு எழுதப்பட்ட நேரம் 10 வது பாயிண்ட் நடக்கும்போது....

Cable சங்கர் said...

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நச் :))

Thamiz Priyan said...

நீங்கள் எழுதும் அனுபவ பதிவுகளுக்கு நான் ரொம்ப ரசிகன்.. அந்த வரிசையில் இந்த அனுபவமும் நல்லா இருக்கு பரிசல்!

Admin said...

பரிசல்காரன் வாங்கிய பத்து குத்துக்கள்!
நன்றாக இருந்தது உங்கள் அனுபவம்!! :D

கோவி.கண்ணன் said...

இசகு பிசகாக குத்து விழுந்தால் என்ன ஆகும்னு நினைச்சு பார்த்தேன்.
:)

Thenral said...

anubavithu ezhudi irukkireergal!

Thenral said...

anubavithu ezhudi irukkireergal!

தராசு said...

இல்லையே இது சரியில்லையே, கொஞ்சம் ஓவரா தங்கமணிகள் பக்கம் சாயற மாதிரி இருக்கே.

எதுக்கும் ஆதியை ஒரு வார்த்தை கேட்டுட்டு அப்புறமா பின்னூட்டம் போடறேன்.

Prasanna said...

மனைவியும் இல்லாமல் தோழியும் இல்லாமல் அல்லாடுபவர்கள், இரண்டும் இருக்கும் நண்பர்களை ஓங்கி குத்த வேண்டும் என்று தோன்றும் தருணங்கள்.. ஹீ ஹீ

http://tamilkothu.blogspot.com/2010/07/blog-post_21.html

Ravichandran Somu said...

செம குத்து!

திருநாவுக்கரசு பழனிசாமி said...

(சொந்த) அனுபவம் பேசுகிறது...

Karthick Chidambaram said...

நல்லா வாங்கியிருக்கீங்க!

பத்மா said...

போட்டு தாக்குங்க...

விக்னேஷ்வரி said...

சூப்பர் கிருஷ்ணா. இந்த மாதிரி நல்ல பதிவுகளுக்காகவே நிறைய நீங்க குத்து வாங்கலாம். அனுபவம் பதிவுல கொட்டுது. :)

ARV Loshan said...

அனுபவம் பேசுகிறது...
hee hee :)

வல்லிசிம்ஹன் said...

வெறும் பத்துதான் தேறித்தா:)
இதோ இன்னோண்ணு.தன்னோட பொறந்த நாளை ஞாபகம் வச்சுக்காத புருஷன்,
நண்பனோட மனைவி பிறந்தநாளைக்கு பூங்கொத்துவாங்கிட்டுப் போலாமான்னு வழியும்போது.......

கண்ணகி said...

உண்மையிலயே நீங்க நல்லவருங்க...

'பரிவை' சே.குமார் said...

நல்லா வாங்கியிருக்கீங்கன்னு தெரியுது.

செமைய இருக்குங்க....

nakkeeran said...

nalla kalmbeteega 10 matuma innumeruka solivedunga vankeekatikeerom kannvanmarkal sandozam nakkeeran.m

Anonymous said...

நீங்க சொன்னதுல பத்து குத்தாவது ஒவ்வொரு கணவரும் வாங்கிடுறாங்க

Thamira said...

யோவ், இதெல்லாம் முன்னாடியே ஒரு போன் பண்றதில்லையா? இப்ப பாருங்க எல்லாரும் வண்டியை ஸ்டார்ட் பண்ணி போயிகிட்டிருக்காங்க. நான் இனிம எப்ப எழுதி? போஸ்ட் பண்ணி.. பாப்போம்.

Thamira said...

அப்புறம் குலை நடுங்க வைக்கும், படு பயங்கர பேண்டஸி கதை ஒன்றை படிக்க இங்கு வரவும். இளகிய மனதுடையவர்கள் வரவேண்டாம். (இப்பிடில்லாம் நானே சொன்னாத்தான் ஆச்சு)

http://www.aathi-thamira.com/2010/07/blog-post_21.html

ஹிஹி.. ஒரு விளம்பரம்..

கொல்லான் said...

பத்தாவது பாயன்ட்ல விழுந்த குத்து ...
அருமை.

selventhiran said...

சொம்பு ரொம்ப அடிவாங்கி இருக்கும் போலருக்கே :)

ராகவேந்திரன் said...

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்
என்ன அழகாக பொருந்துகிறது இந்த பாடலின் வரிகள் இந்த இடுகைக்கு

Anonymous said...

உங்க வீட்டம்மாவை பாக்கும்போது பூரிக்கட்டையின் உபயோகங்கள் பத்தி எடுத்து சொல்லலாம்னு இருக்கேன்.

Eswari said...

மிச்ச 10 தருணங்கள் அடுத்த பதிவிலா?

அமுதா கிருஷ்ணா said...

சூப்பர் குத்துக்கள்..

வால்பையன் said...

முகமெல்லாம் கொழகட்டை மாதிரி வீங்கியிருந்தப்பவே சந்தேகபட்டேன்!

Anonymous said...

மொதல்ல வீட்டு ஜன்னல மூடி வைக்கணும், யாரோ நம்மள நோட்டம் விட்டு பரிசல் கிட்ட போட்டு கொடுத்துட்டாய்ங்க ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

செம மாத்து வாங்கியிருப்பீங்க போல..

sowri said...

நீங்க எப்போ என் வீட்டுக்கு வந்தேங்க?

யோ வொய்ஸ் (யோகா) said...

அனுபவமா?

தெய்வசுகந்தி said...

:-))!!!!!!!!

vanila said...

குத்துப்பா(ட்)டு என்பது இது தானோ..

Thamira said...

நல்லதொரு பிளாஸ்டராக எடுத்துக்கொண்டு நம் தளத்துக்கு வரவும்.

http://www.aathi-thamira.com/2010/07/blog-post_856.html

Joseph said...

அண்ணி படிச்சுட்டாங்களாண்ணா?

நாளைக்கு உங்க மூஞ்சிய போட்டோ எடுத்து மெயில் அனுப்புங்க.

பாரதசாரி said...

இந்த பதிவிற்கு என் பங்குக்கு என் சோகத்தையும் சொல்லலாம்னு எழுத நெனச்சேன், என் வூட்டுக்காரம்மா, ஒரு கேள்வி கேட்டாங்கோ, "பதினோரவது தருணம் தெரியுமான்னு, பேசாம அனானியா பின்னூட்டலம்னு யோசிக்கிறேன்"

திங்கள் சத்யா said...

பாஸ். மனவிகளின் உனர்வுகளை அப்படியே பிரதிபலிச்சிருக்கீங்க. குமுதத்துலயோ அல்லது ஆ.வி.யிலயோ இதை பிரசுரிச்சிருந்தா செம ஹிட் ஆகியிருக்கும். கார்டூனிஸ் பாலாதான் இதைப் படிக்கச் சொல்லி எஃப்.பி.ல போட்டிருந்தார். உங்க ரெண்டு பேருக்கும் வாழ்த்து(க்)கள்.

பனித்துளி சங்கர் said...

இன்னைக்கு என்ன ஒரே குத்து மழையாவே இருக்கே எல்லாப் பதிவுகளும் . உசாரா இருக்கணும்போல இருக்கு . நல்லா இருக்கு தல . பகிர்வுக்கு நன்றி

பா.ராஜாராம் said...

அப்ப,

நீர்தான் இந்த குத்துக்கல்லாம் ஆதியா? (ஹி..ஹி.. ஆதி தளத்தில் இருந்து வர்றேன்)

கலக்கல் பாஸ்! :-))

மேவி... said...

மேனஜர் முகத்தில் குத்து விட நினைக்கும் பத்து தருணங்கள்

R. Gopi said...

இதே போல வலைப்பூ எழுதுபவரை வாசகர் குத்து விடத் தோன்றும் பத்து தருணங்களை எழுதலாமே? உ-ம். மொக்கை பதிவு

கோபி, பெங்களூரு

vanila said...

@ திங்கள் சத்யா..
பாஸ். மனவிகளின் உனர்வுகளை அப்படியே பிரதிபலிச்சிருக்கீங்க.


manaivigal.. you mean wives..

Sabarinathan Arthanari said...

:)

Thenammai Lakshmanan said...

விலாவாரியா வாங்கிஇருப்பீங்க போல தெரியுது... ஹாஹாஹா ..

Unknown said...

super............

Anonymous said...

ஏய்யா... இப்படி கிளப்பி விடுவிர்கள்.இந்த சூழ்நிலைக்கான மறுபக்கத்தை பார்க்க வேண்டும்.(குத்து வாங்க தயாராக இருக்கும் சங்கத்தின் சார்பாக)

ILA (a) இளா said...

போன வாரம் சிறந்த பதிவு

என்பார்வையில்(சிபஎபா)
, இந்த இடுகையச் சேர்த்திருக்கேன்.

Asiya Omar said...

இதுவும் நல்லாதான் இருக்கு,ஆனால் இத்தனை குத்தையும் தாங்க முடியுமா?அவர்களால்.

கொங்கு நாடோடி said...

http://realhero123.blogspot.com/2010/07/blog-post.html

படிங்க, ஆரோ யாரையோ காப்பி அடிக்கறாங்க ...