உயிரின் ஒலி
வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை
*************
ஊர்தோறும் சுடுகாடு
ஒருபோதும் குறையலியே
வாழ்க்கை பற்று.
*****************
மேற்கண்ட கவிதைகள் எங்கள் ஊர்க்காரர் மகுடேசுவரன் எழுதியவை.
மகுடேசுவரன் எழுதிய பல கவிதைகள் எங்கள் தலைவர் வெயிலானின் வலைத்தளத்திலும், பிற நண்பர்களின் வலைத்தளத்திலும் நீங்கள் படித்திருப்பீர்கள்.
அண்ணாச்சியின் பதிவில் மகுடேசுவரன் கவிதை - http://www.vadakaraivelan.com/2009/05/5509.html
வெயிலானின் பதிவுகளில் மகுடேசுவரன் கவிதை - http://veyilaan.wordpress.com/2010/04/23/checking/ / http://blogintamil.blogspot.com/2008/12/blog-post_7649.html
குணா என்ற பதிவரின் பார்வையில் மகுடேசுவரன் - http://espalani.blogspot.com/2009/05/blog-post_23.html
காமக் கடும்புனல் கவிதைத் தொகுப்பு பெரிதும் பேசப்பட்டது - புத்தக மதிப்புரை - ஆர்.பி.ராஜநாயஹம்
இப்போது பாடலாசிரியராகவும்/வசனகர்த்தாவாகவும் புது அவதாரமெடுத்திருக்கிறார் - http://www.pesumcinema.com/news1.asp?imgNo=554http://vaarthaikal.wordpress.com/2010/04/15/magudeswaran/
நீங்கள் கவிதை எழுத ஆசைப்படுகிறீர்களென்றால், மகுடேசுவரனின் கவிதைகளைப் படியுங்கள் என்று சுஜாதாவே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.
தனிப்பட்ட முறையில் கவிதைகள் அச்சுக்கு வருமுன்னே, அவரது அழகான கையெழுத்துப் பிரதியிலேயே படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிற எங்கள் வெயிலானின் நெடுநாள் திட்டமாக கவிஞர் மகுடேசுவரனுடன் ஒரு சந்திப்பை இந்த ஞாயிறு திருப்பூரில் ஏற்பாடு செய்திருக்கிறோம்
அவரது வலையகம்: http://kavimagudeswaran.blogspot.com/
காமக் கடும்புனல் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் உங்களுக்காக..
(இங்கிருந்து எடுக்கப்பட்டது)
(கடைசி கவிதையை தவிர்க்காமல் படியுங்கள்.. கொங்குதமிழ் என்றால் என்னவென்று அறிய...)
உடுப்புகள் கிழித்து
உறுப்புகள் கிள்ளிக்கீறி
மானபங்கப்படுத்தினான்
‘உன் தாயாருடையதைப்
போலிருந்ததா’
என்றாள் மானபங்கப்பட்டவள்
முறையல்லாதன செய்கிறாய்....
சொன்னால் கேள் அண்ணா.....
கண்ணீர் மல்கப் பேசு தோழி
உன்னை வன்புணர வந்தவன்
திகைத்து நிற்கட்டும்.
இப்பொழுது தெரிகிறது
பிரம்மச்சரியம்
கடும் நோன்பு
முதிர் கன்னிமை
கொடிய பட்டினி
ஆணின் வாழ்வோட்டத்தில்
நிச்சயம் ஒளிந்திருக்கிறாள்
இன்னொருத்தி
தாயல்லாத
தாரமல்லாத
சகோதரியல்லாத
மகளல்லாத
பரஸ்திரீ
மரணப்படுக்கையில் இருப்பவரின்
ஞாபகத்திலாடும்
கடைசி முகங்களிலொன்று
ஒரு வேசியினூடதாக
இருக்கலாம்.
என்னெய அடீங்கொ
கொல்லுங்கொ
காவலுக்கு ஆள் போடுங்கொ
நீங்கொ பாத்து வெச்சிருக்கிறெ
மாப்புள்ளைக்கெ என்னெக் கட்டி வெய்யுங்கொ
கட்டிக்கெறென்
அவனுக்கு புள்ளெ பெத்துத் தரச்சொல்லுங்கொ
பெத்துக்கெறென்
ஆனா
என்னிக்காவது ஒரு நா
எங்கெய்யாவது ஒரு வாட்டி
அவரு வந்து ‘வா போயர்லாம்’னு
கூப்புட்டுப்போட்டார்னு வெய்ங்கொ
என்றெ அப்பன் மேல சத்தியமாச் சொல்றென்
போட்டெதும் போட்டபெடி கெடக்கெ
அப்பிடியெ அவருகூடப்போயிர்ருவென்.... ஆமா....
*********************************
சந்திப்பு பற்றி:
நாள்: 25 ஜூலை 2010 ஞாயிறு
நேரம்: மாலை 5.30
இடம்: பதிவர் ராமனின் அலுவலகம். குமரன் சாலை, திருப்பூர் (அரோமா உணவகம் எதிரில் - மாடியில் ஜிகுஜிகு ஃப்ளோரசண்ட் வண்ணமடித்த பில்டிங்!)
தொடர்புக்கு அலைபேசி எண்கள்:
செந்தில்நாதன்: 98947 83597
ராமன்: 96006 00688
முரளிகுமார் பத்மநாபன்: 98433 41223
வெயிலான்: 90954 79791
பரிசல்காரன்: 95665 43262
.
24 comments:
//வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை//
இந்தக் கவிதையை முன்பு விகடனில் படித்துள்ளேன்.
எனக்கு மிகப் பிடித்த கவிதை.
சந்திப்புக்கு நானும் வர ஆவல்.
நன்றி பாஸ்.
சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் மூலம் தான் மகுடேஸ்வரன் கவிதைகள் தேடி படித்தேன்.
மிக அற்புதமான கவிஞர், வரிகள்.
சம கால கவிஞரை, எழுத்தை பாராட்டும் திருப்பூர் பதிவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். நன்றிகள் பாராட்டுக்கள்.
///ஊர்தோறும் சுடுகாடு
ஒருபோதும் குறையலியே
வாழ்க்கை பற்று.///
கவிதை கவிதை ..!!
நானும் கலந்துகொள்ள முயற்ச்சிக்கிறேன் அண்ணா ..!!
சிறந்த பகிர்வு. சந்திப்பு சிறக்கட்டும்.
கவிதைகள் அருமை.. கடைசியும்.. பொதுவாகவே நான் கவிதைகளில் என்னைத் தேடுவதில்லை, ஏனென்றால், என்னை அங்கே தொலைத்ததில்லை... மகுடேஸ்வரன் கவிதைகளை விகடனில் வாசித்திருக்கின்றேன்.. ஒரு கவிஞருக்காக அவர் கவிதை புத்தகத்தை கடையில் தேடியது, மனுஷ்யபுத்திரனுக்கு பிறகு மகுடேஸ்வரனுடயதைத்தன்.. வாழ்த்துக்கள்.. பரிசல்..
கடைசி கவிதையிலிருந்து என்னால் இன்னும் கீள முடியவில்லை.
இப்போது நான் திருப்பூரில் இல்லாதது பற்றி வருத்தப்படுகிறேன். கடைசி கவிதை ஒரு குறும்படம்.
raittu thala, we'll meet sunday. unga pathivukku link koduthikiren. pathivu elutha mudyavillai.
// ஜிகுஜிகு ஃப்ளோரசண்ட் வண்ணமடித்த பில்டிங்! //
உங்கள் வலைத்தள பின்புல பச்சை வர்ணத்தில்...... :)
கடைசி கவிதை ....
சந்திப்புக்கு வாழ்த்துக்கள்
கவிதைகள் அபாரம். பகிர்விற்கு நன்றி.
ஆர். கோபி
தமிழின் ஒரு மிகச் சிறந்த கவிஞரைச் சந்திக்கும் வாய்ப்பு உங்கள் வழிப் பலருக்கும் கிட்ட இருப்பதை அறிய மகிழ்ச்சி.
'கவிஞருடன் ஒரு சந்திப்பு' வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
மகுடேஸ்வரனை நிறைய எழுதும்படி என் சார்பாக வேண்டிக்கொள்ளுங்கள். அப்படியே வந்து கலந்துகொள்ளும் வலைப் பதிவர்களையும், என் சார்பாக, மகுடேஸ்வரனின் அருமையான கவித்துவத்தை எல்லாருக்கும் கொண்டு பரப்பும்படி கேட்டுக் கொள்ளுங்கள். இது தமிழுக்கும் இளங்கவிஞர்களுக்கும் நீங்கள் செய்யும் தொண்டாக அமையும்.
வாழ்த்துகளுடன்
ராஜசுந்தரராஜன்
ம்..ரைட்டு..! பாஸ்
முதல் கவிதை மனதை பாரமாக்குகிறது...
நானும் கடும்புனலில் திளைத்தவன்தான். இப்ப 'மெட்ராஸ்காரங்க..' நாங்க பொறாமைப் படலாமா பரிசல்.?
உலுக்குகின்றன கவிதைகள்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
சந்திப்பு இனிதாக வாழ்த்துகள்.
//இப்போது நான் திருப்பூரில் இல்லாதது பற்றி வருத்தப்படுகிறேன். //
எனக்கும் அதே உணர்வு தான்.
மகுடேஸ்வரநிடமிருந்து அவரது அழகான கையெழுத்தில் வந்த கடிதம் இன்னும் வைத்திருக்கிறேன்.
நீங்கள் சுட்டிய அனைத்துமே அருமையான அற்புதமான கவிதைகள். கவிஞருக்கு வாழ்த்துக்கள்
சந்திப்பு சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
திரு. R.P. ராஜநாயகத்துடன் பழக்கம் உண்டா? சில மாதங்களாக அவரின் இடுகைகள் ஏதும் வரவில்லை. தற்போது திருப்பூரில்தானே இருக்கிறார்?
//வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை//
உணர்ந்தவன்....
சந்திப்புக்களால் மனம் நிறைய வாழ்த்துக்களும்...
சுஜாதாவே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்..
இன்னும் பல பத்தாண்டுகள் கழித்து எழுதப்படக்கூடிய கதை, கவிதை, எழுத்தாளர்கள் குறித்து கூட சுஜாதா சொல்லியிருப்பார் போல...
//அவரு வந்து ‘வா போயர்லாம்’னு//
காதலின் நம்பிக்கைகளில் விளையும் வலியின் கொடுமை ஆணை விட பெண்ணுக்கே அதிகம் தெரியும்.
//என்னெய அடீங்கொ
கொல்லுங்கொ............
மிக மிக ஆழமான மறக்க முடியாத கவிதை !! மனதாரப் பாராட்டுக்கள் அந்தக் கவிஞருக்கு, கண்டிப்பாகத் தெரிவியுங்களேன்.. தயவு செய்து !!
//முறையல்லாதன செய்கிறாய்....
சொன்னால் கேள் அண்ணா.....
கண்ணீர் மல்கப் பேசு தோழி
உன்னை வன்புணர வந்தவன்
திகைத்து நிற்கட்டும்.//
”கண்ணீர் மல்கப் பேசு சகோதரி” என்று இருந்தால் கவிதையில் லாஜிக் இருக்கும்!
//இப்பொழுது தெரிகிறது
பிரம்மச்சரியம்
கடும் நோன்பு
முதிர் கன்னிமை
கொடிய பட்டினி//
கொடிய பட்டினிக்கு
எவனாவது சோறு போட்டா
கற்பழிப்புன்னு ஏழு வருசம்
உள்ளே தள்றானுங்க!
*****
இது எதிர் கவுஜ இல்ல, பதில் கவுஜ!
Post a Comment