நேத்திக்கு சேர்தளம் சார்பா வலைப்பதிவு துவங்கல் சம்பந்தமாக பயிற்சிப் பட்டறை நடத்தறதா அறிவிச்சிருந்தோம். சரியா ரெண்டரை மணிக்கு துவங்கறதா இருந்துச்சு. சேர்தளத்தை சேர்ந்த நாங்க ஒரு அஞ்சாறு பேரு ஒண்ணு ஒண்ணரைக்கெல்லாம் போய் சேர்களை அங்க போட, டேபிள்களை இங்க போட, கொண்டு வந்திருந்த லேப்டாப்களை (ஆமா பன்மைதான். மூணு நாலு பேர் கொண்டு வந்திருந்தாங்க) வெச்சு கனெக்ஷன் (இண்டர்நெட் கனெக்ஷன்ப்பா) கரெக்டா இருக்கான்னு செக் பண்ணன்னு பிஸியா இருந்தாங்க.. சாமிநாதனும், சொல்லரசன் ஜேம்ஸும், நிகழ்காலத்தில் சிவாவும் செட் பண்ணி வெச்சிருந்த ப்ரொஜக்டருக்கு வெளிச்சம் வராம ஜன்னல்களை அடைக்க-ன்னு பயங்கர முஸ்தீபுகள்ல இறங்கிட்டிருந்தோம். (ஆக்சுவலா பட்டறை நடந்த இடம் மாடி. அதுனால ஏறிகிட்டிருந்தோம்தான் சரி!)
முரளிகுமார் பத்மநாபன் (ஆமா.. இந்த வார விகடன்ல ரெண்டு கவிதை எழுதின கவிஞர்தான்) ரெண்டு மூணு ‘சக்திமுனைஅறிமுகத்தை’ தயார் செய்து வெச்சிருந்தார்.
சக்திமுனை அறிமுகம்? - பவர்பாய்ண்ட்ப்ரசண்டேஷனுக்கு தனித்தனியா தமிழ் தேடினப்ப இதுதாங்க கிடைச்சது. எங்க தலைவர் வெயிலான் சரியான தமிழ்ப் பைத்தியம்க. எல்லாத்துக்கும் தமிழ்லதான் எழுதணும்பாரு. இப்படித்தான் ‘இற்றைப்படுத்துதல்’ன்னு ஒரு வார்த்தையை ப்ரசண்டேஷன்ல எழுதி வெச்சிருந்தார். அந்த இற்றைப்படுத்துதலுக்கு என்ன அர்த்தம்ன்னு கண்டுபிடிக்கறதுக்குள்ள அது என்னைப் படுத்திடுச்சு! என்னன்னு நீங்க யோசிங்க.. பின்னூட்டத்துல எங்க தலைவர் பதில் சொல்லுவாரு. (அப்பாடா... ஒரு பின்னூட்டம் உறுதி!)
அதும்போக ப்ரசண்டேஷனுக்கு ரெடி பண்ணின எல்லாவற்றையும் ஒரு மென்தகடுல (ஆமா தல.. குறுந்தகடுக்கும் மென்தகடுக்கும் இன்னா டிஃபரண்டு?) போட்டு பல காப்பி எடுத்து வர்ற எல்லாருக்கும் குடுக்க எடுத்து வெச்சிருந்தாரு. வெயிலானும், முரளியும் இவ்வளவெல்லாம் பண்றாங்களேன்னு பார்த்தா அந்தப் பக்கம் ராமன் சேர்தளம் - திருப்பூர் வலைப்பதிவர் குழுமம்ன்னு மூணு தட்டி ரெடி பண்ணி வெச்சிருந்தார். அதையெல்லாம் போய் அங்கங்க கட்டி வெச்சுட்டு வந்து உட்கார்ந்தோம். ரெண்டரை மணிக்கு ஒருத்தரையும் காணல.
கரெக்டா கொஞ்ச நேரத்துல கவின்னு ஒருத்தர் வந்தாரு. சென்னைல இருந்து வந்திருக்கறதாகவும், பத்து நிமிஷம் முன்னாடி பேப்பர் பார்த்திட்டிருந்தப்ப அதுல இருந்த செய்தியைப் பார்த்துட்டு பட்டறைக்கு வந்ததாகவும் சொன்னார். (ஆமாம்.. தினமலர்ல இன்றைய நிகழ்வுகள்ல பதிவர் பட்டறை குறித்து வந்திருந்தது)
அப்ப ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ஒரு அரை மணிநேரத்துல நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள் வந்தாங்க
அப்படீன்னு எழுத ஆசையாத்தான் இருக்கு. ஆனா அவ்வளவெல்லாம் வரல. உங்ககிட்ட சொல்றதுக்கென்ன? ஒரு பத்து, பதினைந்து புதிய முகங்கள் வந்திருந்தாங்க. திருப்பூர்ல இருந்துட்டே பதிவெழுதற சொல்லத்தான் நினைக்கிறேன் கண்ணகி வந்திருந்து சேர்தளம் கூட்டத்துக்கு வந்த முதல் பெண்மணி-ன்னு வரலாற்றுல அவங்க பேரை வரவெச்சுகிட்டாங்க.
கடலையூர் செல்வம் அருமையான ஒரு இண்ட்ரோ குடுத்தாரு. வலைப்பூன்னா என்ன அதனோட வரலாறு என்னன்னு செம ஃப்ளோவுல பேசினாரு. அதுக்கப்பறம் வலைப்பூ ஆரம்பிக்கறது எப்படி, பின்னூட்டம் போடறது எப்படின்னெல்லாம் பேச ஆரம்பிச்சேன் நான். (கூட்டம் முடிஞ்சப்பறம் - புதுசா ஆரம்பிக்கறவங்களுக்கு தேவையானதையும் தாண்டி கமெண்ட் மாடரேஷன், அனானி கமெண்ட்ஸ், ப்ளாக்கர் செட்டிங்ஸ்ன்னு கொஞ்சம் இழுவையா பேசினதா ஃப்ரெண்ட்ஸ் திட்டினாங்க.. சரி நெக்ஸ்ட் டைம் கரெக்ட் பண்ணிக்கலாம்கன்னேன்)
நடுவுல ப்ரேக் விட்டு கூல்ட்ரிங்ஸ், பிஸ்கெட்டெல்லாம் குடுத்தோம். அதுக்கப்பறம் தமிழ்ல தட்டச்சுவது எப்படின்னு NHM Writerஐப் பத்தி ஒரு விளக்கம் கொடுத்தார் நண்பர் முரளி.
முடிக்கும்போது ஒரு நண்பருக்கு அங்கயே அப்பவே வலைப்பூ ஆரம்பிக்கறது எப்படின்னு டெமோ பண்ணினோம். இதோ வெண்புரவி என்கிற அந்த வலைப்பூ!
எல்லாம் முடிஞ்சப்பறம் தலைவரோட நன்றியுரைக்கப்பறம் வந்திருந்த எல்லாருக்கும் மென்தகடு வழங்கப்பட்டது. எல்லாருமே ஒரு நல்ல மனோபாவத்தோட பாராட்டினாங்க. இந்தத் தொடக்கம் எங்களுக்கு வலைப்பூ தொடங்க பயனுள்ள விஷயங்களோடு இருந்தது. ரெண்டு மூணு மாசம் கழிச்சு வேறு சில சந்தேகங்கள் வரலாம்.. அப்ப ஒரு ஃபாலோ அப் கூட்டம் நடத்தினா நல்லதுன்னு சிலர் கருத்து தெரிவிச்சாங்க. அதைக் கருத்துல எடுத்துட்டோம்.
மொத்தத்துல முதல் முயற்சியான இந்த நிகழ்வுல எதாவது குறைகள் இருந்திருந்தா வந்திருந்தவங்க பொறுத்துக்கணும். ஓரிரு கல்லூரிகள்ல வலைப்பூ சம்பந்தமான பயிற்சியளிக்க அழைச்சிருக்காங்க.. அடுத்தடுத்த மாதங்களில் அதற்கான வேலைகள் நடக்கும். எப்படியும் இந்த வருஷத்துக்குள்ள திருப்பூர்-கோவை-ஈரோட்ல நிறைய பேரை ப்ளாக் ஆரம்பிக்க வைக்காம விடப்போறதில்ல... ஆமா!
பதிவர் பட்டறைக் குறித்து தினமலர் செய்தி: