நேத்து இங்க்லீஷ் நியூஸ் சேனல்களை மேய்ஞ்சுட்டு இருந்தேங்க. (எதைக் காமிச்சாலும் எருமை மாடு மாதிரி சொரணையில்லாம பாக்கறதால மேய்ஞ்சுட்டுன்னுதான் சொல்ல வேண்டியதா இருக்கு!) Headlines Today-வுல ஏதோ அடிதடியைக் காட்டிட்டு இருந்தாங்க.
போபால்-ல ஒரு சீரியல் நடிகையின் காதலனை அவ அப்பாம்மா நடுரோட்டில் போட்டு பின்னி எடுத்துகிட்டிருந்தாங்க.
அவன் பேரு ஜஹாங்கீர். அந்த நடிகைகூட காதலாய் இருந்தானாம். கல்யாணமெல்லாம் பேசினாங்களாம். திடீர்னு அவளுக்கு சீரியல் சான்ஸ் அடிக்க அவங்க வீட்ல ஜகா வாங்க ஆரம்பிச்சாங்களாம். என்னன்னு கேட்கப்போனவனுக்கு அடி-உதை.
‘அதெல்லாம் சும்மா கப்ஸா. அவன் எனக்கு ஃப்ரெண்டு அவ்வளவுதான்’ என்கிறாள் அந்தப் பெண். ‘எனக்கு வயசே 17தான் ஆவுது. மைனர் நான். அதெப்படி அவன் என்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி டார்ச்சர் பண்றான். நான் பாம்பே போனா அங்கயும் வந்து தொந்தரவு பண்றான். அதுனால என் பேரண்ட்ஸ்ட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணினேன்’ என்கிறாள் மேலும்.
விடுவார்களா நம் மீடியா மன்னர்கள். அவன் தலையில் கட்டோடு ஆசுபத்திரியில் இருக்க (இல்லை வீடுதானான்னு தெரியலை) அவன்கிட்ட ஒரு மைக்கு, இவ எங்கியோ இருக்கா, இவகிட்ட ஒரு மைக்கு குடுத்து ‘ம்ம்..இப்ப நீங்க சொல்லுங்க.. இப்ப நீங்க சொல்லுங்க’ன்னு பேட்டி!
அவ சொல்றா.. ‘அவன் நான் படிக்கற காலத்துலேர்ந்தே டார்ச்சர். நல்ல ஃப்ரெண்டுதான். ஆனா அதுக்காக கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோன்னு ஒரே குடைச்சல்..ச்சே’ன்னு.
இவன் உடனே ‘இருங்க இருங்க’ன்னு ஒரு லேப்டாப்பை எடுத்து தெரியுதா தெரியுதான்னு கேட்கறான். மீடியா ஆசாமி ‘நல்லாத் தெரியுது. எங்க கேமரா உங்க லேப்டாப்பை க்ளோஸப்ல காமிக்குது’ன்னு வழியறாரு.
அந்த லேப்டாப்ல அவனும் அந்தப் பொண்ணும் கன்னத்தோட கன்னம் வெச்சு, அவன் மேல அவ சாஞ்சுகிட்டுன்னு நாலைஞ்சு ஸ்டில்ஸ். ‘இது எங்க பண்ணை வீட்டுல எடுத்தது.. இது இங்கன எடுத்தது’ விளக்கம் குடுக்கறாரு இவரு.
‘அதெல்லாம் ஒரு ஃப்ரெண்ட்ஷிப்ல எடுத்தது. காசுக்கே ஜிங்கி அடிக்கற இவனை எவ லவ் பண்ணுவா’ங்கறா அவ.
‘யாரு நானா காசில்லாதவனா? முப்பது கோடி என் பேர்ல இருக்குடி.. வர்றியா பார்க்கறியா?’ - அவன்.
‘ம்க்கும். முன்னூறு ரூவாய்க்கு வக்கில்ல உனக்கு’ - இது அவ.
‘ஏய்... என் ஃபார்ம் ஹவுசுக்கு வாடி. காட்டறேன்.. எங்கப்பா எனக்கு எவ்ளோ சொத்து வெச்சிருக்காருன்னு காமிக்கறேன்’ - இது அவன்.
எல்லாமே லட்சம் பேர் பார்க்கற தொலைக்காட்சில ஒளிபரப்பாகுதுன்னு தெரிஞ்சு பேசறாங்க.
புரச்சி என்னான்னா ஆம்பளை கல்யாணம் பண்ணிக்கங்கறான், அவ போடாங்கறா.. அவ்ளோதான். மத்தபடி இந்த நியூஸ்ல பெரிசா ஒரு மண்ணையும் காணோம். ஆனா இதுபோதும் நாலஞ்சு நாளைக்கு நம்மளுக்குப் பொழுது போவும்...
இவங்களும் எல்லாத்தையும் ஒளிபரப்பிட்டு ‘ஐயா காதலர்களே, காதலிகளே.. நீங்க இப்படி இருக்காதீங்க.. உங்க வாழ்க்கையப் பொதுவுல போட்டுத் தாளிக்காதீங்க’ன்னு அட்வைஸ் வேற..
இதேபோல நாலஞ்சு வாரம் முந்தி நியூஸ்9 சேனல்ல மைசூர்ல நடந்த ஒரு கல்யாணம் காமிச்சாங்க. செம புரச்சிங்க. பாருங்களேன்....
இந்தக் கேஸு ரிவர்ஸு. அவன் ஜாலியா பழகீட்டு இருந்துட்டு ஏதோ எஸ்கேப்பாகலாம்னு இருந்திருக்கான்போல. புடிச்சு சிக்க வெச்சுட்டாங்க! (அவனைப் பாருங்களேன்... எனக்கென்னமோ எல்லா புருஷங்களோட மனசுக்குள்ள இருக்கறதை வெளில செஞ்சு காமிச்சுட்டாருன்னு தோணுது. என்ன சரிதானே ஆதி?)
இந்தக் கல்யாணம் பண்ணின மாப்பிள்ளை இப்ப எப்படி குடும்பம் நடத்தறாரு? அந்தப் பொண்ணு எப்படி இருக்காங்க? ஏதாவது அப்டேட் போடறாங்களா இந்த மீடியாஸ்? தெரியல.
என்னமோ போங்க. அவங்களும் எதையெதையோ ஒளிபரப்பறாங்க நம்மளும் பார்க்கறோம்.
சொல்லறேன்னு திட்டாதீங்க. இந்திய சின்னத்திரை வரலாற்றில் முதன்முறையாக இன்னாருக்கும் இன்னாருக்குமான முதலிரவுக் காட்சியை உங்கள் எக்ஸ்ஒய்இஸட் சேனலில் காணத்தவறாதீர்கள்ன்னு வந்தாலும் ஒண்ணும் சொல்றதுக்கில்ல.
டிஸ்கி: கடைசி பத்திக்கு ‘அதெல்லாம் ஏற்கனவே வந்திருச்சே’ன்னு பின்னூட்டம் வரப்போகுதோன்னு டரியலா ஒருக்கு!
.
37 comments:
ஆமாங்க. கடைசி பத்தி வந்துடுச்சு.நம்ம நாட்டுல இல்ல
//புரச்சி என்னான்னா ஆம்பளை கல்யாணம் பண்ணிக்கங்கறான், அவ போடாங்கறா.. //
இதை தான் 'மொச குட்டி வெளில எட்டி பாக்குதுன்னு' சொலறதா?
ஏன் ஆம்பள மட்டும்தான் போடின்னு சொல்லனுமா?.......பெண்கள் சொல்ல கூடாத?
இதை நான் வன்மையாக கண்டிகின்றேன்............
பெண் பதிவர்களே, அண்ணன் KKவை சற்று என்னவென்று கவனியுங்கள்......
just for email followup! :-)
@ RR
நல்லாத்தானே போய்ட்டிருக்கு?
அவ்வ்வ்வ்...
நல்ல காமெடி பீஸு அவன். அந்த பொண்ணு தைரியத்த பாத்தீங்களா..
இதை எல்லாம் பார்த்து வீணடிக்கும் நேரத்தில் வீட்டில் மனைவிக்கு உதவி செய்திருக்கலாம் பரிசல் நீங்க! :-)
@ புன்னகை
நீங்க சும்மா உட்காருங்க அதுவே போதும்கறாங்கப்பா எங்க வூட்ல. என்ன பண்றது??
//இந்திய சின்னத்திரை வரலாற்றில் முதன்முறையாக இன்னாருக்கும் இன்னாருக்குமான முதலிரவுக் காட்சியை உங்கள் எக்ஸ்ஒய்இஸட் சேனலில் காணத்தவறாதீர்கள்ன்னு வந்தாலும் ஒண்ணும் சொல்றதுக்கில்ல//
சாமியார், நடிகையின் கிளுகிளு கடைசி இரவுக்காட்சி (அப்படின்னு கேனத்தனமான ஒரு நம்பிக்கை!) நம்ம ஊரு சேனலில் வந்ததே..
மீடியாக்களின் கொட்டம் வர வர தாங்க இயலவில்லை தலைவரே, எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் தான் மீடியாக்கள் மைக்கும் கையுமாக கார்த்திகை மாதத்து நாய் போல அலைகிறார்கள், இதை விட என்னால் பச்சையாக திட்ட இயலவில்லை இது குறித்து பாம்பே குண்டு வெடிப்பின் போது http://thurvasar.blogspot.com/2008/12/blog-post.html
மிகவும் கோபமாக ஒரு கட்டுரை எழுதியிருந்தேன், அது தான் எனக்கு இப்போதும் நினைவுக்கு வருகிறது
என்னமோ போங்க...
டெம்ப்ளேட் சூப்பார்ர்ர்ர்..!
ஆவியா...? வந்திருகீங்களாம் சாரி
ஆவில வந்திருகீங்ளாம்...!
வாழ்த்துக்கள்...
:)
பொண்ணு கல்யாணம் முடிஞ்சு போகும்பொழுது அழுவாங்க பாத்திருக்கேன். தாலிகட்டவே மாப்பிள்ளை அழுவுறது தாங்க முடியலை. அந்தப்பொண்ணு அதுகப்புறம் என்னத்த வாழப்போகுது!!!
டீவி காரங்களுக்கு வேலை இல்லை.
ஹஹஹ. இதெல்லாம் ஒரு நியுசுன்னு உக்காந்த்து பார்த்துட்டு அதுக்கு பதிவு வேற போடுற உங்களைச்சொல்லனும்...அதை படிச்ச என்னை என்ன சொல்லுறது???
என்னமோ போங்க... நாடு உருப்டா சரி... :)
அவிங்க தான் வேலையில்லாம இப்படியெல்லாம் ஒளிபரப்புறாய்ங்கன்னா, வேலையத்துப் போய் நீங்களும் பாத்துட்டு எங்க வேலையையும் விட்டு வாசிக்க வைக்குறீங்க. என்னா வில்லத்தனம்...
இப்படி வற்புறுத்தி கல்யாணம் பண்ணிணா எப்படிங்க குடும்பம் நடத்துவாங்க?
மத்ததுக்கெல்லாமும் அந்த கூட்டம் கூட இருந்து ஃபோர்ஸ் பண்ணுமா?
//RR said.
புரச்சி என்னான்னா ஆம்பளை கல்யாணம் பண்ணிக்கங்கறான், அவ போடாங்கறா..
ஏன் ஆம்பள மட்டும்தான் போடின்னு சொல்லனுமா?.......பெண்கள் சொல்ல கூடாத? //
அதானே!
அந்த பொண்ணு அந்த சிரிபு சிரிக்குது, இவன் தலையில அடிச்சிகிட்டு அழுவுறான்!
கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாம்!, உண்மையில் அந்த பொண்ணு பாவம்!
என்ன கொடும சார் இது..
//அந்த பொண்ணு அந்த சிரிபு சிரிக்குது, இவன் தலையில அடிச்சிகிட்டு அழுவுறான்!//
நெறைய எடத்துல சைலண்டா நடக்கிறது, இங்கே வெளிப்படையா நடந்திருக்கு, அத மீடியா போகஸ் பண்ணிர்க்காங்க, ஒரு வேள இது கூட ஏதாவது விளம்பரமோ, எதுவுமே நம்ப முடியலையே,
என்ன ஒன்னு ரெண்டு பேரோட வாழ்க்கைய சீரழிச்சிர்க்காங்க, ஒருத்தவங்க சந்தோசமா எடுத்துர்க்காங்க, இன்னொருத்தறால தாங்க முடியலே,
//ஆமாங்க. கடைசி பத்தி வந்துடுச்சு.நம்ம நாட்டுல இல்ல //
அப்டியா?அப்டியா?... எங்க .. எங்க?
காதலிக்கிறமாதிரி நடிச்சி ஏமாத்திட்டு ஒட்டிபோறதுல ஆம்பளைங்க அதிகமா இல்ல பொண்ணுங்க அதிகமான்னு ஒரு பட்டிமன்றம் வெக்கலாமா தல?
விந்தை மனிதன் நீங்க சொல்லுங்க..
கொடுமைதாங்க!!!!!!!
ந.ப.ந.பரிசல்.
என்னமோ போங்க பரிசல்!
ஆவிக்கு வாழ்த்துகள்.
என்னைக்கு சந்திக்கலாம்?
அந்த போபால் வீடியோ-வை நானும் பார்த்தேன்..
என்னத்த சொல்ல..
என்னமோ போங்க...
என்னாச்சு பரிசல்...... "என்னத்த" கண்ணையா மாதிரி.........
நிச்சயம் அந்த பொண்ணு பாவம் தான்...
//எதைக் காமிச்சாலும் எருமை மாடு மாதிரி சொரணையில்லாம பாக்கறதால மேய்ஞ்சுட்டுன்னுதான் சொல்ல வேண்டியதா இருக்கு!//
:)
narsim said....
ந.ப.ந.பரிசல்//
நல்ல பதிவு நடத்துங்க பரிசல் ?
AAjtak ன்னு ஒரு செய்தி சேனல் எவன் trouser கேழட்டினாலும் இவனுக கேமரா வை வைத்து கொண்டு நிப்பான்னுக. இந்த சேனலில் வரும் எல்லா செய்திகளும் வேடிகியாகத்தான் இறக்கும்
வண்க்கம் புர்ச்சி தலிவரே..
என்ன இருந்தாலும் தினத்தந்தில வர "...(33) ....(29) ..... களாம்....களாம்.... களாம்.....சதக் சதக் என்று குத்தினார்..." மாதிரி த்ரில் இந்த மீடியால இல்ல :(
வட இந்திய நியூஸ் சேனல்களுக்கு நம்மூர் எவ்வளவோ மேல்.
Post a Comment