Saturday, September 11, 2010

மினி.. யாமினி. இனி... காமினி..!

தொடர்கதை எழுதுவது கஷ்டமான காரியமா? தெளிவாக திட்டமிடாவிட்டால் நிச்சயம் கஷ்டம்தான் என்பதை அறிந்து கொள்ள வாய்ப்புத் தந்தது ‘யாமினி’ – மினி தொடரெழுதிய அனுபவம்!

நண்பர் ஆதிமூலகிருஷ்ணன் ‘என்ன செய்யப்போகிறாய் மினி?’ என்றொரு தொடரெழுதிவிட்டு நான் தொடர்வேன் என்று குறிப்பிட்டார். அவரெப்படிக் குறிப்பிடப் போச்சு என்று கேட்க முடியாது. ஒரு மின்னஞ்சல் உரையாடலின்போது ‘உங்க தொடர் விறுவிறுப்பா போகுதுங்க.. எனக்கும் இந்த மாதிரி எழுத ஆசையா இருக்கு. முடிவுல அதைச் சொல்லிடுங்க’ என்று சொன்னது அடியேன்தான்.

ஆயிற்றா? அவரும் கொடுத்துவிட்டார். ஒருநாள் முழுதும் யோசித்தும் என்ன கருவில் எப்படி எழுத என்று ஒரு வெளிச்சமும் கிடைக்கவில்லை. அப்போதுதான் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன் எழுதி வைத்திருந்த யாமினி என்ற கதை ட்ராஃப்டில் கிடந்தது நினைவுக்கு வந்தது.

ஏப்ரல் 2009ல் எழுதப்பட்டது இந்த யாமினியின் முதல் அத்தியாயம். இப்படி ஒரு ஆரம்பம் கொடுத்து நண்பர்கள் ஐந்து பேரை அடுத்தடுத்த அத்தியாயங்களை எழுதச் சொல்லி, ஒரே நாளில் எல்லாருமாக அதை பதிவில் போடுவது என்ற எண்ணத்தில் ஆரம்பித்து எழுதிய அத்தியாயம். நான்கு அத்தியாயம் எழுதப்பட்டாலும் ஒரு சில காரணங்களால் இறுதிப்பகுதி எழுதப்படாததால் அப்படியே கிடப்பில் இருந்தது. ஆதி எழுத அழைத்து உடன் எழுத ஆரம்பிக்காவிட்டால் அதன் ஆரம்ப எதிர்பார்ப்பு வடிந்துவிடும் என்று ஏதோ ஒரு தைரியத்தில் அந்த முதல் அத்தியாயத்தை எடுத்துப் போட்டுவிட்டேன்.

சரி... இப்படி ஒரு தொடர் ஆதி ஆரம்பித்தது எப்படி?

“உங்களிடமிருந்து இப்படி ஒரு தடாலடி க்ரைம் த்ரில்லரை நான் எதிர்பார்க்கவில்லை உங்களுக்கு த்ரில்லர் எழுதுவது பிடிக்குமா என்ன?” கேட்டேன்.

ஆதி: “எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம் தொடர்கதைகள். ஏனெனில் சஸ்பென்ஸ் எனக்குத் தாங்காது, எரிச்சலாகிவிடுவேன். ஆனால் பிளாக் எழுதத் துவங்கியதிலிருந்து நம்மால் முடியுதோ, இல்லையோ எல்லாவிதமான எழுத்து வகைகளையும் முயற்சித்துவிட வேண்டும் என நான் நினைப்பதுண்டு. அனுபவங்கள், கவிதை, கதைகள், விமர்சனம், பேட்டிகள் (அவ்வ்வ்) இன்னும் என்ன கழுதை குதிரைகள் உண்டோ எல்லாவற்றையுமே முயற்சித்திருக்கிறேன். அவற்றில் என்ன இருக்கிறதோ இல்லையோ.. குறைந்த பட்சமாக நகைச்சுவையோ, என்னளவில் தேவையான லாஜிக்குகளோ, எனக்குப் திருப்தியாகும் வரையான பர்பக்ஷனோ இருக்குமாறு பார்த்துக்கொள்வேன்.

இந்த அழகில் இந்தத் தொடர்கதையை மட்டும் ஏன் விட்டு வைக்கவேண்டும் என்று ஒரு எண்ணம் சமீபத்தில் ஏற்பட்டது. அதற்குக் காரணமும் ஒரு பத்திரிகை பிரபலம் என்றாலும் அது ரகசியம், விட்டுத் தொலையுங்கள். எழுதுவதென்று முடிவாகிவிட்டது ஸ்மார்ட் கதைகள் எழுதுவதை விட கிரைம், திரில்லர் எழுதிவிடலாம் என்று முடிவுசெய்தேன். பேய்க்கதை போல துவங்கி வேறு லாஜிக்கல் காரணம் இருக்கலாம் என்பது போல நடித்து, கடைசியில் நான் எப்போ சொன்னேன், இது பேய்க்கதைதான் என முடித்துவிடலாம் என பிளான் பண்ணினேன்”

"இதற்கென்று ஏதாவது ஹோம் வொர்க்?” - நான்.

ஆதி: “இல்லாமலா? கதை ரியலாக வரவேண்டும் என கொஞ்சம் மெனக்கெடுவதுண்டு. அவன் பணக்காரன் என்பதால் அவன் எந்தக் கார் பயன்படுத்துவான், அவன் போன் எப்படியிருக்கும் என்பதெல்லாம் ரிச் நண்பர்களை ரெஃபர் செய்தேன். முதல் காட்சியில் ஹோட்டல், அதன் பாரின் பெயர், அதன் இண்டீரியர் எப்படியிருக்கும் என்பதெல்லாம் நெட்டை ரெஃபர் செய்தேன். கதையில் வருகிறதோ இல்லையோ குடும்பம், ஆட்கள், அலுவலகம் எங்கிருக்கிறது? வீடு எங்கிருக்கிறது? காரில் பயணித்தால் எவ்வளவு நேரமாகும்? என பல விஷயங்களை முன்பே உருவாக்கினேன். கால்வனைஸிங் ஃபாக்டரி எப்படியிருக்கும்? அதன் தொட்டிகளின் அமைப்பு எப்படியிருக்கும்? போன்றவற்றை என் அனுபவத்தில் இருந்து பயன்படுத்தினேன்.

கெமிகல் விஷயத்தில்தான் கொஞ்சம் சொதப்பிவிட்டேன். முதலில் அது என்ன கெமிகல் என்பதை முடிவு செய்யாமல் ஹார்ம்ஃபுல் என்றுமட்டும் முடிவு செய்து ஆரம்பித்துவிட்டேன். அடுத்து வந்தது சிக்கல். கடைசியாக 2 மணி நேர பயங்கர ஆராய்ச்சிக்குப் பிறகு (பரிட்சைக்குக் கூட இப்படி படித்திருக்கமாட்டேன்), DDT என முடிவு செய்தேன், இப்போது DDTக்கான உபயோகம் பிளாக் மார்கெட்டிலாவது இருக்கிறதா எனத் தெரியாமலே இருக்கிறது என டுபாகூர்விட்டு கதையை ஒரு வழியாக முடித்தேன். சினிமாவுக்கு மட்டும்தானா இப்படியெல்லாம் லாஜிக்ஸ் தேவைப்படுகிறது. சாதாரணக் கதையாக இருந்தாலும் குறைந்தபட்சம் இவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது, அது நியாயமானதே எனக் கருதுகிறேன்” என்று தொடர்ந்த ஆதி நிறுத்தினார்.

“சரி பரிசல் உங்கள் விஷயத்தில் எப்படி?”

“நான் முதல் அத்தியாயம் எழுதியது இப்படித்தான். சென்ற வருடத்தின் ஒரு நாள் இரண்டாம் அல்லது மூன்றாம் வாசிப்பாக சுஜாதாவின் தலைமைச் செயலகம் வாசித்துக் கொண்டிருந்தபோது மூளையின் செயல்பாடுகள் குறித்து அவரது விளக்கங்களைப் படித்து, ஒரு வேளை இந்த அமைப்புகளை செயற்கையாக மாற்றப்படும் வாய்ப்புகள் இருந்தால்?’ என்று சிந்தித்ததன் விளைவே முதல் பாகத்தில் விஞ்ஞானியின் சம்பாஷணைகள். அதன் பிறகு போஸ்ட் மார்ட்டத்திலும் மாட்டிக் கொள்ளாத விஷம் எது என்று இரண்டாம் அத்தியாயம் எழுதி முடித்த போது யோசித்து தேடி ஒரு புத்தகத்தில் கண்டு கொண்டதுதான் அகோனைட் விஷம் பற்றிய தகவல்”

“அப்படியென்றால் அது உண்மையா?”

“ஆமாம்.. அகோனைட் விஷத்துக்கு ‘ஸ்டெப் மதர் பாய்ஸன்’ என்றொரு பெயரும் உண்டு. மற்ற எந்த விஷத்தில் ஒருவர் இறந்தாலும் அவரை எரித்த சாம்பலை வைத்துக்கூட இறந்தது எந்த விஷத்தால் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அகோனைட் அப்படியில்லை. பெற்ற தாயின் அன்பைப் புரிந்து கொள்ளலாம் ஆனால் மாற்றாந்தாயின் அன்பைப் புரிந்து கொள்ளவே முடியாது என்ற அர்த்தத்தில்தான் அந்தப் பெயர். சரி ஆதி.... இந்தந்த அத்தியாத்தில் இது என்று முன்கூட்டியே தீர்மானித்திருந்தீர்களா?”

“ஆமாம்.. முதலிலேயே முதல் மூணு எபிசோடுகளில் மூணு கொலை, நான்காவதில் கதைக்கான விளக்கம், சஸ்பென்ஸ்களை உடைப்பது, இறுதியில் எக்ஸிகியூஷன் என தெளிவாக பிளான் செய்துகொண்டேன்.. நீங்கள்?”

“இல்லவே இல்லை. அதுதான் கொஞ்சம் சொதப்பி விட்டது. ஒவ்வொரு அத்தியாயமும் அன்றன்றைக்கு யோசித்து எழுதியதுதான். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை உணர்கிறேன். இப்படி ஒரு தொடர் எழுத இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்குமேயானால் இந்தத் தவறை செய்யவே மாட்டேன்”

“ஆனாலும் சமாளித்துவிட்டீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் கதையில் உள்ளேயே நீங்களும் ஒரு கதாபாத்திரமாகப் போனது நல்ல உத்தி”


“இதை மட்டும் முதலிலேயே தீர்மானித்து வைத்திருந்தேன். அதே போல சில பதிவர்களுக்கு லிங்க் கொடுத்து அவர்களையும் இணைத்ததும் முன்னமே முடிவு செய்யப்பட்ட ஒன்று. சமீபத்தில் எழுத ஆரம்பித்து தினமும் எழுதிக் கலக்கிக் கொண்டிருக்கும் கோபிக்கு மட்டும் லிங்க் கொடுக்க விட்டுப் போயிற்று. அதையும் இன்று நிவர்த்தி செய்துவிட்டேன்!”

ஆதியிடமிருந்து பேசியதில் இருந்து அவரின் உழைப்பும் திட்டமிடும் நேர்த்தியும் நிஜமாகவே பிரமிக்க வைத்தது.


சரி... இனி?


ஒரு சவால்!


நாங்கள் இருவரும் பேசிக் கொண்டதில் இருந்து ஒரு விஷயம் தெரிந்தது. எங்களுக்குப் பின்னூட்டம், மின்னஞ்சல் அனுப்பிய பலருக்குள்ளும் கதை சொல்லும் திறன் மிளிர்கிறது. ஆனால் அவர்கள் பிறர் கதைகளுக்கு விமர்சனம் செய்வதோடு நின்று விடுகிறார்கள் என்று நினைக்கிறோம். ஆகவே உங்களுக்கு ஒரு சவால்.

கீழே உள்ள மூன்று வாக்கியங்களைப் படியுங்கள்:

1) டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

2) “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

3) “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

இந்த மூன்று வாக்கியங்களும் நான் கொடுத்திருக்கும் வரிசைப்படியே வருகிற மாதிரி ஒரு சிறுகதை எழுதுங்கள். விதிகள் இரண்டு:

கதையில் கனவோ, ஃப்ளாஷ்பேக்கோ வரக்கூடாது.

காமினியைக் கெட்டவராக சித்தரிக்கக் கூடாது.

இறுதித் தேதி: அக்டோபர் 15.

நீங்கள் எழுதிய கதையை உங்கள் வலைப்பூவில் வெளியிட்டுக் கொள்ளலாம். வலைப்பூ இல்லாதவர்கள் என் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். வலைப்பூவில் வெளியிட்டாலும் லிங்கை மட்டும் எனக்கு அனுப்பாமல் மொத்த கதையையும் என் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். (kbkk007@gmail.com) க்ரைம் கதைகளில் அதிக பரிச்சயம் உள்ள, கதை எழுதத் தெரிந்த, கதைகளை துல்லியமாக அலசத் தெரிந்த நமது நண்பர் ஒருவர் உங்கள் கதைகளில் சிறந்ததை தேர்வு செய்வார்.

அந்த சிறந்த கதைக்கு என்+ஆதியின் சார்பாக ஒரு சிறு பரிசு உத்தரவாதமாகக் காத்திருக்கிறது. ஒரே கண்டிஷன்: பரிசு இந்திய முகவரிக்கு மட்டுமே அனுப்பப்படும்.

UPDATE:-

நண்பர்களின் ஊக்கத்தைத் தொடர்ந்து ஒரு பரிசு என்பது மூன்று பரிசுகளாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

நடுவர் என்பதற்கு பதிலாக மூன்று பேர் கொண்ட நடுவர் குழு சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்கும்.

போட்டி முடிவு தேதி, இன்ன பிற விஷயங்கள் ஓரிரு தினங்களில் என் வலைப்பூவில் பதிவாக வெளியிடப்படும்.




டிஸ்கி:


http://www.mediafire.com/?l0kqfdpli9jl5eg இதில் உள்ள HTMLஃபைலை ஓபன் செய்தால் ஆதியின் ‘என்ன செய்யப்போகிறார் மினி?’ தொடரின் மின்புத்தகத்தைப் படிக்கலாம்.


http://www.mediafire.com/?clv5l39mn8vo453 இதில் உள்ள HTMLஃபைலை ஓபன் செய்தால் எனது யாமினி தொடரின் மின்புத்தகத்தைப் படிக்கலாம்.



இந்த மின் புத்தகத்தை உருவாக்கிக் கொடுத்த நண்பர் மின்னுது மின்னலுக்கு நன்றி!



.

20 comments:

a said...

Me the first......

a said...

Me the first......

சுசி said...

என்னுடைய மூன்றாவது கேள்வி.. உங்களுக்கு மட்டும் எப்டி இப்டியெல்லாம் தோணுது??

பாராட்டுக்கள் பரிசல்.

ஆதிக்கும் உங்களுக்கும் இவ்ளோ ஆர்வத்தோட,ஆக்கத்தோட கதை எழுதினத்துக்காக மீண்டும் ஒரு சபாஷ் :))

Thuvarakan said...

ஒரு சிறு முயற்சி. திருத்தம் மட்டுமேயிருந்தாலும் சொல்லவும்.....

http://vtthuvarakan.blogspot.com/2010/09/blog-post.html

தங்கள் வழிகாடுக்காக காத்திருக்கிறேன்

Cable சங்கர் said...

நானெல்லாம் போட்டியில கலந்துக்கலாமா..?:)

வெண்பூ said...

ப‌ரிச‌ல், ஆதி,

இந்த‌ ரெண்டு தொட‌ர்க‌ளும் உங்க‌ளை வேறொரு த‌ள‌த்துக்கு கொண்டு போயிருக்குன்னு சொன்னா அது மிகையில்லை. உண்மையில் நீங்க‌ ரெண்டு பேரும் என் ந‌ண்ப‌ர்க‌ளா இருக்கீங்க‌ன்றதால‌ ப‌திவுக‌ளோ க‌தைக‌ளோ ரொம்ப‌ ந‌ல்லா இருந்தாலும் "முதுகு சொறிகிறார்க‌ள்" என்ற‌ விம‌ர்ச‌ன‌த்துக்கு ப‌ய‌ந்து வெளிப்ப‌டையாக‌ பின்னூட்ட‌த்தில் சொல்வ‌தில்லை.

ஆதியின் க‌தையின் வேக‌மும் விறுவிறுப்பும், உங்க‌ள் க‌தையில் எழுத்தாள‌னை புனைவில் (அந்த‌ கெட்டவார்த்தை புனைவு இல்லை இது) உப‌யோக‌ப்ப‌டுத்திய‌தும் என்னை பிர‌மிக்க‌ வைத்த‌து. இப்ப‌டி ஒரு வித்தியாச‌மான‌ விறுவிறுப்பான‌ க‌தையை என்னால‌ எழுத‌ முடியுமான்னு கொஞ்ச‌ம் பொறாமையாக்கூட‌ இருக்கு.

இந்த‌ ப‌திவைப் ப‌டிச்ச‌தும் நீங்க‌ ரெண்டு பேரும் இதுக்காக‌ போட்ட‌ உழைப்பு தெரியுது. வாழ்த்துக‌ள் & பாராட்டுக‌ள்.

அப்புற‌ம் அந்த‌ க‌தைப்போட்டி, ந‌ல்ல‌ முய‌ற்சி.. இதுக்கு விள‌ம்ப‌ர‌ம் டிசைன் ப‌ண்ணி ந‌ண்பர்க‌ள்ட்ட‌ குடுங்க‌. அவ‌ங்க‌வ‌ங்க‌ வலைப்பூல‌ போட‌லாம்.

அதேமாதிரி இறுதித்தேதி ம‌ட்டும்தான் இருக்கு, ப‌ரிசுக‌ள் எப்போது அறிவிக்க‌ப்ப‌டும்ன்ற‌தையும் அறிவிக்க‌வும். இல்லையென்றால் ரொம்ப‌ நாள் காத்திருக்க‌ வேண்டுமோன்னு நினைக்க‌ வாய்ப்பிருக்கு. உங்க‌ள் வ‌லைப்பூ வாச‌க‌ர்களையும் எழுத்தாள‌ர்க‌ளாக்கும் உங்க‌ள் முய‌ற்சிக்கு ந‌ன்றி.

R. Gopi said...

என்னுடைய வலைப்பூ லிங்க் கொடுத்தமைக்கு நன்றி.

தராசு said...

கலக்கல் தல.

ஆதியின் உழைப்பும், செய்வன திருந்தச் செய்ய வேண்டுமென்ற கொளகையும்..... சல்யூட் தல.

உங்களின் அந்த புது உத்தி,,,, தானே ஒரு பாத்திரமாய் மாறி ரவுண்டு கட்டி அடிச்சீங்களே.... கலக்கல்.

இப்பத்தான அண்ணாந்து பாத்திருக்கோம். இன்னும் உங்ககிட்டயெல்லாம் வர நெம்ப நெம்ப நாளாகும்.

vanila said...

enna pudunga poreenga.. (cable)sankara naraayan; maadhiri suya thambattam mattum adichikkalaam... time waste, petrol waste.. energy waste...

Thamira said...

தொடர்கதைப் பகுதிகளுக்கு பின்னூட்டமிடவில்லை. நேரமில்லை ஒரு காரணம். ஒரு வாரம் கொஞ்சம் பிஸியாக இருந்தேன். அதோடு தொடர் முடியட்டும் எனவும் ஒரு எண்ணம் இருந்தது.

பாராட்டினால் வெண்பூ சொன்னது போல சொறிதல் பிரச்சினைதான். விடுங்க. துவக்கம் எனக்கு பிடிக்காமல் இருந்தது. ரொம்ப டிபிகல் கிரைம் கதைகள் போலவே இருந்தது. ஆனால் அடுத்தடுத்து கதை பிக்கப் ஆனது. குறிப்பாக எழுத்தாளர் கதைக்குள் வருவது புதுமை இல்லையென்பதால் அதுவும் துவக்கத்தில் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தாலும் அதையும் எதிர்பாராத கதைச்சூழலுக்குள் கொண்டு போய் பாஸிடிவாக மாற்றி எதிர்பார்ப்பை எகிறவைத்தீர்கள். (3ம் பகுதியும், 4ம் பகுதியும் சிறப்பு) டிபிகல் கிரைம் கதை முடிவோடு முடித்திருக்கிறீர்கள்.

இந்தப்பதிவில் என்னோடு பேசியதையும் எழுதி பெருமை சேர்த்திருக்கிறீர்கள். இதெல்லாமும் சொறிதல் பிரச்சினை ஏற்பட ஏதுவாகும். மேலும் எழுதும் போது இன்னும் பொறுப்பைக் கூட்டும் செயல் இது. சிரமம் தருவன.

நன்றி.

போட்டி ஏற்கனவே சொன்னது போல சிறப்பான ஐடியா. ஆனால் வாக்கியங்களில் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்திருக்கிறீர்கள். பார்க்கலாம் அடுத்த சுவாரசியம் எப்படி என்று.

கதையின் மின்வடிவத்துக்கு மின்னலுக்கு நன்றி. ஹிஹி.. அப்படியே அதற்கு ஒரு அட்டை டிஸைன் செய்தால்தான் என்னவாம்.?

vanila said...

seruppu theriyma... adhu dhaan...

vanila said...

Im ready for any thing

வெண்பூ said...

வெண்ணிலா, வேற‌ இட‌த்துல‌ போடுற‌ க‌மென்ட் இங்க‌ வ‌ருது போல‌.. செக் ப‌ண்ணுங்க‌, ப்ளீஸ்...

Thamira said...

வனிலா, என்ன பிரச்சினை.? யார் மீது கோபம்? :-(

vinu said...

அப்பாடா postai படிச்சு முடிக்கிற வரைக்கும் பயமாகவே இருந்தது எங்கே என்னோட பெயர் கோத்து விட்டுரக்கப்போரீங்கலோன்னு அப்படாஆஆஆஆஅ me escapeeeeeeeeeeeeeeeeee

vanila said...

எனக்கும் பிடிக்கலை ஆதி.. யாருக்குமே பிடிக்காம போயிடுமோ'ன்னு ஒரு பயம்.. பயம் எல்லாருக்கும் வேணும்.. I Love u aathi..

Thuvarakan said...

நீங்கள் சொன்ன படி அனுப்பிஉள்ளேன்.... கதை பற்றிய கருத்தைப் பதிவு செய்யவும் ....... please

சசிகுமார் said...

அனைவரையும் ஊக்குவிக்க கூடிய நல்ல முயற்சி சார் வாழ்த்துக்கள்.

Unknown said...

//.. ஆதிமூலகிருஷ்ணன் said...

வனிலா, என்ன பிரச்சினை.? யார் மீது கோபம்? :-(

vanila said...

எனக்கும் பிடிக்கலை ஆதி.. யாருக்குமே பிடிக்காம போயிடுமோ'ன்னு ஒரு பயம்.. பயம் எல்லாருக்கும் வேணும்.. I Love u aathi.. ..//


தல என்ன விளையாட்டு இது.??. :-)))

'பரிவை' சே.குமார் said...

அனைவரையும் ஊக்குவிக்க கூடிய நல்ல முயற்சி சார் வாழ்த்துக்கள்.