மான்செஸ்டரிலிருந்து நண்பர் செந்திலுடனான உரையாடலில் இருந்து..
******************
படம் எங்க பார்த்த?
லிவர்பூர்ல், சினி வேர்ல்ட்ல பார்த்தேன். உள்ள போறப்ப ‘ச்சே.. இந்தப் படத்தை இந்தியால ரஜினி ஃபேன்ஸ் கூட பாத்திருக்கணுமே’ன்னு நெனைச்சேன். ஆனா அந்தக் குறையே இருக்கல. செம க்ளாப்ஸ், செம சவுண்டு.. சான்ஸே இல்ல...
படம்?
மாஸ் ஹிட்... உழைப்புக்கு பலன் இருக்குங்கறதுக்கு உதாரணம் இந்தப் படம்.. 60 வயசுல ரஜினி இவ்ளோ கஷ்டப்பட்டு நடிக்கணும்கற தேவையே இல்ல.. சம்பாதிச்சத உட்கார்ந்து சாப்ட்டுட்டுப் போகலாம்.. ஆனா எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பாரு ஷூட்டிங்லன்னு படம் பார்த்தா தெரியுது.. சும்மா உட்கார்ந்து சாப்பிடணும்னு நெனைக்கறவங்கள்லாம் ரஜினியைப் பார்த்துக் கத்துக்கலாம்..
படத்துல சூப்பர் ஸ்டார் யார்?
சிட்டிதான்! ஆனா அதைவிட.... வேணாம்.. போய்ப் பாரு..
காமெடி?
டைமிங் காமெடிதான். செமயா இருக்கு...!
வசனம்?
சுஜாதா –ஷங்கர் – மதன் கார்க்கின்னு போடறாங்க. ஆனா அப்பட்டமா சுஜாதாவோட மூளை, சுஜாதாவோட பேனாவை உணர்ந்தேன். ட்ரெய்லர்ல நீங்க பார்த்த ‘நக்கலா, இல்ல நிக்கல்’ உட்பட பல வசனத்துல சுஜாதா தெரியறாரு.. இந்தப் படத்தைப் பார்க்கறப்ப சுஜாதா இல்லைங்கற ஃபீலே எனக்கு இருக்கல..
ஐஸ்வர்யா?
ராவணனைவிட நல்லா காமிச்சிருக்காங்க. ஃப்ரெஷ்ஷா இருக்காங்க..
ம்யூசிக்?
ஆஸ்கார் குடுத்தது சரிதாண்டான்னு ப்ரூவ் பண்ணிருக்காரு ரஹ்மான். ஃபாரின்னுதான் பேரு.. தியேட்டர்ல சவுண்ட் எஃபெக்ட்டெல்லாம் அவ்ளோ சரியில்ல.. ஆனா சவுண்ட் எஃபெக்ட், பின்னணி எல்லாத்துலயும் மெனக்கெட்டதுக்கு பலன் இருக்கு.
ஷங்கர்?
இந்தியனா, தமிழனா நம்ம எல்லாருமே பெருமைப்பட்டுக்கலாம். க்ளிஷேவான டயலாக்தான் இது. ஆனா இதுதான் உண்மை.. ஹாலிவுட் தரத்துக்குன்னு சொல்லிக்கறது சும்மா இல்ல.. நெஜமாவே ஹாலிவுட் தரம்தான்..
படத்துல உனக்குப் பிடிச்சது?
க்ளைமாக்ஸ்.. ப்பா!! சான்ஸே இல்ல.. க்ளைமாக்ஸுக்காகவே ரிப்பீட்டட் ஆடியன்ஸ் வரும். இது உண்மை..! கடைசில பதினைஞ்சு நிமிஷத்துக்கு படத்துல பங்காற்றினவங்க பேரைப் போடறாங்க.. கார் ஓட்டுனர் உட்பட. இங்க எல்லாரும் அப்ப கைதட்டினாங்க.. சந்தோஷமா இருந்துச்சு..
வேற ஏதாவது?
தியேட்டர்க்குள்ள போறப்ப இந்தப் படத்து போஸ்டர் எங்கயாவது ஒட்டிருந்தா, அதுக்குப் பக்கத்துல நின்னு ஃபோட்டோ எடுத்துகிட்டு ஃபேஸ்புக்ல போடணும்னு நெனைச்சிருந்தேன். ஒரு போஸ்டர்கூட இல்ல. மத்த எல்லா படப் போஸ்டரும் ஒட்டிருந்தாங்க.. அப்பறம் வெளில வர்றப்பதான் பார்த்தோம்.. போஸ்டரை சீலிங்க்ல ஒட்டிருந்தாங்க.. டாப்ல! அப்பவே நினைச்சுட்டேன்.. படம் டாப்தான்-ன்னு!
அதே மாதிரி வெளில வர்றப்ப நிறைய பேர் சொன்னாங்க.. ‘படம் பட்டாசுடா’ன்னு!
கடைசியா ஒரு கேள்வி: உன் ஃபேவரைட் ஹீரோ யார்டா?
என்ன கிருஷ்ணா தெரியாத மாதிரி கேட்கற?
ப்ச்.. எனக்குத் தெரியும்.. நீ சொல்லு..
ஒன் & ஒன்லி கமல்!
*
24 comments:
கேட்கவே சும்மா அதிருதுல்லே.............
//படத்துல உனக்குப் பிடிச்சது?
க்ளைமாக்ஸ்.. ப்பா!! சான்ஸே இல்ல.. க்ளைமாக்ஸுக்காகவே ரிப்பீட்டட் ஆடியன்ஸ் வரும். இது உண்மை..! கடைசில பதினைஞ்சு நிமிஷத்துக்கு படத்துல பங்காற்றினவங்க பேரைப் போடறாங்க.. கார் ஓட்டுனர் உட்பட. இங்க எல்லாரும் அப்ப கைதட்டினாங்க.. சந்தோஷமா இருந்துச்சு..//
One & Onely1 கமல்
see blog...
http://theskystudios.blogspot.com/2010/09/in.html
ரைய் - ரைட் . ஆரம்பிங்கப்பா இனி அவங்கவங்க ஆட்டத்தை...
இப்போது தான் பார்த்து விட்டு வந்தேன். நான் சென்ற திரையரங்கில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மூன்று மொழிகளிலும் படம் ஓடியது. முதல் ஷோ பார்த்து விட்டு வெளியே வந்தால், இருந்த கூட்டத்தை பார்க்கும் போது தப்பி தவறி ஆல்பர்ட் த்யேட்டர் பக்கம் வந்து விட்டோமோ என்ற சந்தேகம்.
நாங்கள் எல்லோரும் விட்ட சவுண்டை பார்த்து, ஆங்கில படம் பார்க்க வந்த அமெரிக்கர்கள் அரண்டு போனது தான் உச்சம்...
கலகலுங்கோஓஓஓஓஓஓஒ
///ப்ச்.. எனக்குத் தெரியும்.. நீ சொல்லு..
ஒன் & ஒன்லி கமல்!//
அட எனக்கும் கமல்தான் ..!!
ஆனா எந்திரன் இவ்ளோ நல்லா வந்திருக்குதுனா கண்டிப்பா பார்த்தே ஆகணும் ..!!
வித்தியாசமான விமர்சனம்..
புது வீடும் நல்லா இருக்கு.
வித்தியாசமா பதிவெழுதறக்குன்னே எப்படில்லாம் சிந்திக்கவேண்டியிருக்குதுல்ல பரிசல்.? ஹிஹி.. நானும் இதே மாதிரி ஒண்ணு போட்டுருக்கேன் இன்னிக்கு, ரெண்டு பேரு பேசிக்கிறாமாதிரி.!
அப்ப படத்த பார்த்திட வேண்டியது தான்..
:))
ஆக எதிர்பார்ப்பை எகிற வச்சிட்டீங்க...
சூப்பர்
இன்னொரு விமர்சனம்..
http://tamilpp.blogspot.com/2010/09/blog-post.html
அடடே ! நானும் லிவர்பூலில்தான் இருக்கிறேன்.ஆனால் இன்றுதான் படம் பார்க்கப் போகிறேன். வழக்கமாக நமட்டுச் சிரிப்புடன் அங்கு பணிப்புரியும் வெள்ளைக்காரர்கள்கூட வியந்துப் பார்த்தார்கள் என்றுக் கேள்விப்பட்டேன். இந்தப் படத்தை விமரிசிக்க சுஜாதா அவர்கள் இல்லையே என்று வருத்தமாக உள்ளது. வாழ்த்துக்கள்!
பரிசல்,நேற்று இரவு தான் இந்தப் படத்தைப் பார்த்தேன் குடும்பத்துடன்.
உண்மையில் படத்தைப் பற்றி சொல்ல எவ்வளவு தேடியும் வார்த்தைகள் கிடைக்கவில்லை.
ரஜினியின் மீது பொறமை கொண்டவர்கள் வாயில் அவல் போடுவது போல் சில லாஜிக்
மீறல்கள் இருந்தாலும் இவர்களின் முயற்சிக்கு,உழைப்புக்கு,கற்பனைக்கு முன்னால் அவை ஒன்றுமில்லை.
படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
படம் இந்திய திரைப்படம் ஹாலிவுட் பிரமாண்டம் என்பது பலருடைய கருத்து. இன்னும் கேபிள் அண்ணன் விமர்சனம் வரலை. பார்ப்போம்.
தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு எடுத்துச் செல்லும் படம் எந்திரன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.... கிளைமாக்ஸ் மட்டும் இல்லை, படத்தின் இரண்டாவது பாதியே அற்புதம்... இன்று காலை இங்கு ஊட்டியில் உள்ள லிபர்ட்டி திரை அரங்கில் முதல் காட்சி சென்று பார்த்தேன் .... ஊட்டியில் உள்ள 3 திரை அரங்குகளில் சிறந்தது இது தான் .. ஆனால் படு மோசம் ...
படம் ஹாலிவோடை மிஞ்சும் அளவுக்கு உள்ளது ..
தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு எடுத்துச் செல்லும் படம் எந்திரன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.... கிளைமாக்ஸ் மட்டும் இல்லை, படத்தின் இரண்டாவது பாதியே அற்புதம்... இன்று காலை இங்கு ஊட்டியில் உள்ள லிபர்ட்டி திரை அரங்கில் முதல் காட்சி சென்று பார்த்தேன் .... ஊட்டியில் உள்ள 3 திரை அரங்குகளில் சிறந்தது இது தான் .. ஆனால் படு மோசம் ...
படம் ஹாலிவோடை மிஞ்சும் அளவுக்கு உள்ளது ..
Last line speaks about the effect of Enthiran really has!! Good review without any selfmade ideas...Great na!!!
Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி
by
TS
டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்
கமல் ரசிகரான உங்கள் நண்பர் “எந்திரன்” படத்தை மிக நிறைவான விமர்சனம் செய்துள்ளார்.... இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை...
படம் நிஜமாவே பட்டாசு....
ரஜினி என்னும் 10,000 வாலா, திரையில் வெடித்து சிதறுகிறது... அந்த கொண்டாட்டத்தில் நாம் அனைவரும் பங்கு கொள்கிறோம்.... மிக்க மகிழ்ச்சியுடன்...
”எந்திரன்” திரைப்படம் கண்டோர் அனைவரின் மனங்களையும் கொள்ளை கொள்ளும் “மந்திரன்”
”எந்திரன்” படத்தை அனைவரும் கண்டு மகிழ வேண்டும்.. படத்தில் பங்கு பெற்ற அனைவரின் உழைப்புக்காகவாவது...
Hello Boss!! THe Recently succesfully runing in ENTHIRAN Movie is a Fully Dubbed Movie on The HOLLYWOOD 2 Movies on Dubbed.
1) First flim of THE BICENTINAL MOVIE
2)Second Movie On IROBOT.
This Movies are Copied in ENTHIRAN...
//ஆதிமூலகிருஷ்ணன் said...
வித்தியாசமா பதிவெழுதறக்குன்னே எப்படில்லாம் சிந்திக்க வேண்டியிருக்குதுல்ல பரிசல்.? ஹிஹி..//
பரிசல், அப்ப இது நெசமாவே பேசிகிட்டது இல்லியா? :-))))
பரிசல்காரன் படம் 'டாப்பு', படத்த மாத்தாதீங்க, நூறு நாளாவது ஓடட்டும் :)
மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.com/
Post a Comment