நண்பரொருவர் ஒரு மாதத்திற்கு முன் அழைத்துப் பேசினார்:
‘உங்களுக்கு கேபிள் சங்கர் நல்ல ஃப்ரெண்ட்தானே?’
‘ஆமா.. ஏங்க?’
‘அப்பறம் ஏன் அவரோட சினிமா வியாபாரம் புத்தகத்துக்கு விமர்சனம் எழுதல இன்னமும் நீங்க? பொறாமைதானே?’
அப்ப ‘போய்யா’ ன்னு சிரிச்சுட்டு விட்டுட்டேன்.. ஆனா படிச்சப்பறம் அந்தாளு மேல எக்கச்சக்க பொறாமை வருது!
வழக்கமா ஃப்ரெண்ட்ஸோட படைப்புகளுக்கு விமர்சனம் எழுதறப்ப கொஞ்சம் சங்கடம் இருக்கும். (அதுனாலதான் எந்திரன் விமர்சனம் எழுதலயான்னு கேட்கப்படாது..) சொன்னா ஏதாவது நினைச்சுக்குவாரோ, சொல்லலாமோ – கூடாதோங்கறது ஒண்ணு. ரெண்டாவது - குழு, சொறியறதுன்னு சொல்றதுக்குன்னே ஒரு கும்பல் இருக்கே.. அனானி ஆப்ஷன் இல்லாததால நமக்காகவே ஒரு ப்ரொஃபைல் க்ரியேட் பண்ணி திட்டீட்டுப் போறாங்க.. விரலுக்கு எட்டுற இடத்துல அரிச்சாகூட சொறிஞ்சு விட்டுக்கறதுக்கு பயமா இருக்கு. சுய சொறிதலாமே... ஹும்.. கஷ்டகாலம்!
முக்கியமான மூணாவது - படிக்கறப்ப இதை எழுதினது நம்ம ஃப்ரெண்டுங்கறதை மறந்துட்டு படிச்சாதான் சரியா விமர்சனம் பண்ண முடியும். அதுனாலயே கேபிள் சங்கரோட இந்தப் புத்தகம் வந்தப்ப படிக்காம, கொஞ்ச நாள் தள்ளிப் போட்டேன்..
பத்து நாள் முன்னாடிதான் படிக்க எடுத்து ரெண்டொரு நாள்ல படிச்சும் முடிச்சுட்டேன்.. மனுஷன் பிரிச்சு மேஞ்சிருக்காருன்னுதான் சொல்லணும்!
இவர் விமர்சனம் எழுதறப்ப ஏதோ தெரிஞ்சதை - அறிஞ்சதை (ரெண்டும் ஒண்ணுதானா?) வெச்சு எழுதறாருன்னு ஆரம்பத்துல நினைச்சதுண்டு. இந்த புக்கைப் படிச்சப்பறம்தான் அதுல விழுந்து புரண்டிருக்கார்.. ஏன்.. நிறைய இழந்திருக்காருன்னும்கூட தெரிஞ்சுகிட்டேன்.
புக்ல பொதுவா எனக்குப் பிடிச்சது சினிமாவை - கலையை வாழ வைக்கறேன் பேர்வழின்னு புகழ்ந்து, துதி பாடாம – அதை ஒரு தொழிலா, வியாபரமா பார்த்து அந்த வியாபாரம் சம்பந்தமா ஒவ்வொரு மூலை முடுக்கையும் அலசி ஆராய்ஞ்ச விதம். ஒண்ணையும் விடலைன்னா, ஒண்ணையுமே விடலை மனுஷன். ஃபாரின் ரைட்ஸ்லேர்ந்து தியேட்டர்ல முறுக்கு சுண்டல் விக்கறது வரைக்கும் சினிமா மூலமா எப்படியெப்படி சம்பாதிக்கலாம், எங்கெங்க சறுக்கல் வரும்னு தெளிவா புட்டுப் புட்டு வெச்சிருக்காரு!
முன்னுரையில அவர் சொல்றது கவனிக்கப்பட வேண்டிய ஒண்ணு. ‘ஒரு திரைப்படம் தயரிப்பதற்குப் பின்னணியில் உள்ள பணம், உழைப்பு, திறமை எவ்வளவு முக்கியமோ அதே அளவு பணம், உழைப்பு, திறமை ஒரு படத்தை வெளியிடுவதற்கும் வேண்டும்’
இந்த வரி எவ்வளவு உண்மைன்னு புத்தகம் படிச்சு முடிச்சப்பறம் தெரியுது!
பதினைஞ்சு அத்தியாயமா பிரிச்சி, விநியோகத்தின் ஒவ்வொரு நுணுக்கமான பக்கங்களையும் விரிவா அறிமுகம் செஞ்சிருக்காரு கேபிள் சங்கர். நான் உடுமலைல இருக்கறப்ப ஃப்ரெண்ட்ஸ் நாலைஞ்சு பேரு, தியேட்டர்ல தெரிஞ்சவர் மூலமா படம் வெளிவந்த அன்னைக்கே ஒசில பார்க்கலாமான்னு போராடுவோம். அவரு ‘ஒரு வாரத்துக்கு டிக்கெட் இல்லாம படம் பார்க்கலாம்ன்னு அந்தப் பக்கமே வந்துடாதீங்கடா’ன்னு மெரட்டுவாரு. ஏன்னு இதைப் படிக்கறப்பத்தான் தெரிஞ்சது. ஒவ்வொரு தியேட்டர்லயும் விநியோகஸ்தரோட ரெப்ரசெண்டிடீவ் இருப்பாராமே!
சரி.. புத்தகத்துல குறைகள்?
சின்னச் சின்னதா ரெண்டு..
என்னதான் இது தொழில் சம்பந்தமான புத்தகமா இருந்தாலும், சினிமாங்கற சுவாரஸ்யமான களத்தைப் பத்தி எழுதறதால அங்கங்க ஒண்ணு ரெண்டு ஸ்டில்ஸ் இருந்திருக்கலாம். இது ஒரு கட்டத்துல, சீரியஸாவே போய்க்கிட்டிருக்கறதால வர்ற அயர்ச்சியைத் தடுத்திருக்கும்.
ரெண்டாவது.. புத்தகத்துல அங்கங்க விஜய்காந்தை ஞாபகப்படுத்தும் புள்ளி விவரக்கணக்குகள். நிச்சயமா போகிற போக்கில் சொல்லப்பட்டவை அல்ல எனினும், அவற்றிற்கான மூலம் என்ன, எங்கிருந்து ஆசிரியர் இந்தத் தகவல்களைத் திரட்டினார் என்று Annexure ல் குறிப்பிட்டிருந்தாரேயானால், இன்னும் அவற்றின் நம்பகத்தன்மை பல மடங்கு கூடியிருக்கும்.
என்ன சொன்னாலும், சினிமா விநியோகம் பத்தின டாப் டூ பாட்டம் அலசலை எளிமையா புரியற மாதிரி சொல்லப்பட்ட புத்தகம் இதுங்கறதுல மாற்றுக்கருத்து இல்லை.. பின்ன சும்மாவா வந்த வேகத்துல வித்துத் தீர்ந்து ரெண்டாவது பதிப்பும் கலக்கிட்டிருக்கு?
சபாஷ் நண்பா!
சினிமா வியாபாரம்
ஆசிரியர்: சங்கர் நாராயண்
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 144
விலை: ரூ. 90/-
லைன்ல நின்னு வாங்காம - ஆன் லைன்ல வாங்க இங்கே க்ளிக்கவும்.
*
25 comments:
எனக்குத் தன் சுடு சோறு
நல்லா இருக்கு பரிசல்
புத்தக விமர்சனம் நல்லாயிருக்கு.. கட்டாயம் படிக்கணும்... இத இலங்கைக்கப் பெற சிறிது காலம் எடுக்கும் போல இருக்கிறது...
நீங்கெல்லாம் இந்த மாதிரி நல்ல புக்கை ஆன்லைன்ல விக்க/வாங்க மட்டும் தான் வசதி செய்யறீங்க.. e -book மாதிரி படிக்க முடியுதா சொல்லுங்க?
நன்றி பரிசல்.
//Blogger Cable Sankar said...
நன்றி பரிசல்.//
யோஓஓஓஓவ்...
மானத்த வாங்கிட்ட பார்த்தியா? நன்றியாம் நன்றி..
நண்பேன்டா!
//மானத்த வாங்கிட்ட பார்த்தியா? நன்றியாம் நன்றி..
நண்பேன்டா!///
அடப்பாதகா! அப்ப அந்த மனுசன் வயசு உனக்கும் ஆகிடுச்சா! உன்னைப்போய் யூத்துன்னு நினைச்சு ஏமாந்து திரியுறேனே!
மற்றபடி பதிவு..உண்மையான உரைகல்லா இருக்கு!
இப்போ நான் சொல்றேன்!
அங்கிள் நீங்க என் நண்பேன்!
யோவ் சுரேகா..உனக்குத்தான் வயசாயிருச்சின்னா. பொத்திட்டு சுமமா இருக்கிரத விட்டுட்டு.. ஏன் பொறாமை எஙக்ளை மாதிரி யூத்துகளை பார்த்து..:_)
நல்லா இருக்கு விமர்சனம்..
சீக்கிரம் அடுத்த கேள்விய யாராச்சும் கேக்கணுமே பிள்ளையாரே :)
கூப்டா ஃபோனை எடுக்கறதில்லை இந்த சுரேகா பய... என்னான்னு கேளுங்க கேபிள் அந்தாளை..
எல்லாம் ஒரு படத்துல கு.. மா பாட்டு எழுதின திமிரு..
நன்றி ம.தி.சுதா
கோபி... ம்ம்ம்ம்...!
பிரதீபா
கூடிய சீக்கிரம்..
@ சுசி
நிறைய பேர் கேட்டாங்கப்பா... அது அப்பறமா..
:-)
@ கேபிள்
எங்கயோ பல்பு ஃப்யூஸ் போய்டுச்சாமே? ஒருவேளை அதை மாட்டப் போயிருப்பாரோ சுரேகா??
எப்ப பாரு பல்போட த்தான் அலையுறா?
/கூடிய சீக்கிரம்../ இதையே.... தான் ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்கீங்க .
சரி...
புத்தகம் வாசிக்கணும் போல இருக்கு ...நல்லா எழுதியிருக்கிறாருன்னு தெரியுது ... வாழ்த்துக்கள் ...எப்ப கைக்கு கிடைக்குமோ தெரியேல்ல .. :)
நல்ல விமர்சனம் பரிசல்.
// இது ஒரு கட்டத்துல, சீரியஸாவே போய்க்கிட்டிருக்கறதால வர்ற அயர்ச்சியைத் தடுத்திருக்கும்.//
நான் இன்னும் படிக்கலை அண்ணா ., இந்த விமர்சனதிற்கு பிறகு படிக்க முயற்சிக்கிறேன் ..
நல்ல விமர்சனம்..
புத்தக விமர்சனம் நல்லாஇருக்கு.உடுமலையில் இருக்கு போது
திருட்டுத்தனம படம் பார்த்திருக்கிறீர்கள்(திருட்டு வீசிடி பார்ப்பதை போல்)என்னை எல்லம் சேர்த்துக்கள....
தமிழில் சினிமாவின் வியாபாரப் பக்கம் இதுவரை புத்தகமாக்கப்படவில்லை என்பது இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பாகிறது. நல்ல விமர்சனம் பரிசல்.
அடடே!! நிச்சயம் வாங்கணும்! எனக்கும் அந்த வியாபாரம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்க ஆசைதான். (தெரிஞ்சிக்க மட்டும்)
//லைன்ல நின்னு வாங்காம - ஆன் லைன்ல வாங்க இங்கே க்ளிக்கவும்.//
பெண்களுக்கு தனி லைன் உண்டா ? (எதோ ஆண் 'லைன்'னு சொன்னீங்களே ?)
சகோதரா இது ஒரு மன்னிப்பு வேண்டதல்...
இந்தப் பதிவை விசயம் தெரியாமால் நானே இன்ட்லியில் சப்மிட் பண்ணினேன்.. அது எனது பதிவு போல் வந்து விட்டது... மன்னிக்கவும்...
Post a Comment