Tuesday, October 12, 2010

பொக்கிஷம்

ண்பன் பணிபுரியும் நிறுவனத்தில் நடந்தது இது. அன்றைய தினம் பாஸ் நேரத்திலேயே அலுவலகம் வந்துவிட்டார். பார்த்தால், அவரது மேனேஜர் அதுவரை வரவேயில்லை. அரைமணி நேரம் காத்திருந்து மேனேஜரின் அலைபேசிக்கு அழைத்திருக்கிறார். நாட் ரீச்சபிள். சரி என்று தனது அலைபேசியில் இருந்த மேனேஜரது வேறொரு எண்ணுக்கு அழைத்திருக்கிறார் பாஸ். மேனேஜர்தான் ஃபோனை எடுத்திருக்கிறார்.

“எங்கய்யா இருக்க? இன்னும் ஆஃபீஸுக்கு வர்லியா?”

“சார் நான் வந்துட்டே இருந்தேன்.. திடீர்னு அந்த ப்ரிண்டிங்ல்ர்ந்து அப்ரூவலுக்கு வரச்சொன்னாங்க.. இப்ப ப்ரிண்டிங்லதான் இருக்கேன். ஓகே பண்ணீட்டு டென் மினிட்ஸ்ல அங்க வந்துடுவேன் சார்..”

“ஓகே ஒகே’ என்று பாஸும் ஃபோனை வைத்துவிட்டாராம்.

இதிலென்ன இருக்கு?

பாஸ் அழைத்த வேறொரு எண் மேனேஜரின் வீட்டு லேண்ட்லைன்! ‘செல்லுல பேசற ஞாபகத்துலயே சொல்லீட்டேன்... அவரும் சரி சரின்னு ஃபோனை வெச்சுட்டாருப்பா’ என்றாராம் மேனேஜர்!

***** ***** ***** ***** *****

ந்தக் கவிஞர் தனது நண்பர்களோடு சிற்றுண்டிக்கு செல்கிறார். தோசை கொண்டுவரச் சொல்கிறார்கிறார்கள். பணியாளர் தோசையுடன் வரத் தாமதமாகிறது. தூரத்தே அவன் வரும்போது நண்பர்கள் கவிஞரிடம் “அவனுக்கு சட்’டென்று ஒரு கவிதை சொல்லு பார்ப்போம்” என்று சவால் விடுகிறார்கள். பக்கத்தில் அவன் வந்ததும் ‘பட்’டென வெண்பா சொல்கிறார் கவிஞர்....

“ஏண்டா இதற்குப்போய் இவ்வளவு நேரமா
போண்டா எடுத்துவா போ”

யாரந்தக் கவிஞர்...? கடைசியில் பார்ப்போம்.

***** ***** ***** ***** *****

சில மளிகைக்கடை அண்ணாச்சிகளின் சின்னச் சின்ன தொழில் நுணுக்கங்கள் ஆச்சர்யப்படுத்தக் கூடியவை! வாடிக்கையாளர்கள் அரை கிலோ சர்க்கரை கேட்டால் கொஞ்சமாக தராசில் எடுத்துப் போட்டுவிட்டு, பிறகு டப்பாவிலிருந்து தராசிலிருக்கும் பொட்டலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நிறுத்துவார்கள். அப்படியின்றி, அதிகமாகப் போட்டுவிட்டு, தராசிலிருந்து எடுத்து தங்கள் மூட்டையில் சேர்ப்பது போல போடமாட்டார்கள்.

நின்று., பார்த்துக்கொண்டிருக்கும் வாடிக்கையாளருக்கு மனதளவில் இது திருப்தி தரும். அதேபோல 25 பைசா, ஐம்பது பைசா பாக்கி இருந்தால் ஒரு ரூபாயாகக் கொடுத்துவிட்டு ‘அப்புறமா வரும்போது குடுங்க’ என்பார்கள்! கண்டிப்பாக அடுத்தமுறை அவர்கள் கடைக்கு போக வைக்கும் அந்த உத்தி!

***** ***** ***** ***** *****

சில வருடங்களுக்கு முன் நடந்தது இது. கோவையின் பிரபல தனியார் பேருந்து போக்குவரத்து நிறுவனம். தீபாவளிக்கு 8.33 சத போனஸ் தருகிறார் முதலாளி. இன்னும் இன்னும் என்று கண்டக்டர், ட்ரைவர்கள் கேட்க.. ‘சட்டப்படி என்ன குடுக்கணுமோ குடுத்தாச்சு. அடம்பிடிக்காம வண்டிய எடுங்க’ என்கிறார்.

‘ஓகே.. டீல்!’ என்றபடி வண்டியை எடுக்கிறார்கள் ட்ரைவர்கள்.

அடுத்த இரண்டு நாள் ட்ரிப் ஷீட் இப்படிக் காட்டுகிறது..

கோவை டூ திருப்பூர் – 52 பயணிகள்
திருப்பூர் டூ கோவை – 52 பயணிகள்
கோவை டூ திருப்பூர் – 52 பயணிகள்
திருப்பூர் டூ கோவை – 52 பயணிகள்
கோவை டூ திருப்பூர் – 52 பயணிகள்
திருப்பூர் டூ கோவை – 52 பயணிகள்

ஒரு நாளின் எல்லா ட்ரிப்புகளும் 52 பயணிகள் மட்டுமே!

இதேதான் மூன்றாவது நாளும்.

நான்காவது நாள் மதியம் முதலாளி ‘என்னப்பா இது?’ எனப் புலம்ப.. ‘சட்டப்படி ஓட்டறோம் முதலாளி.. சட்டத்தை மீறி நாங்க ஒண்ணும் பண்றதில்ல’ என்கின்றனர்.

ஸ்பாட்டிலேயே எக்ஸ்ட்ரா போனஸ் கொடுக்கப்பட்டதாம்!

***** ***** ***** ***** *****

திமூலகிருஷ்ணன் பத்தின ஒரு மேட்டர்...

நம்ம ஆதிக்கு அவரோட ஃப்ரெண்டு ஒருத்தர் வேற ஊர்லேர்ந்து கூப்பிடறாரு.

‘ஆதி... எங்க இருக்க?’

‘பெருங்குடில’

‘ஐ.. நானும்தான்..’ என்றவரின் பக்கத்திலிருந்து டம்ளர் உடையும் ஓசை கேட்டதாகச் செவிவழிச் செய்தி!


***** ***** ***** ***** *****

ங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழிய நண்பன். இரண்டு மாதம் முன்பு திருமணம் நடந்தது. சமீபமாக அவனுடன் வெளியில் செல்லும் போது பர்சை ஒன்றுக்கு பலமுறை திறந்து பார்த்துக் கொள்வதைக் கவனித்தேன்.

‘தம்பி... என்னத அப்படி அடிக்கடி பார்த்துக்கற?” நேரடியாகவே கேட்டேன்..

பர்சைத் திறந்து அதை எடுத்தான். 10000, மற்றும் 1000 ருபையா (இந்தோனேஷியன் கரன்ஸி) நோட்டுகள்.

“கல்யாணத்து வந்த எங்க சொந்தக்காரர் குடுத்தார் சார். இந்தியன் ருபீஸா மாத்தற வரைக்கும் பத்திரமா வெச்சுக்கணும்ல சார். எவ்வளவு சார் வரும் ரூபாய்ல?” என்று கேட்டார்.

“பார்த்து சொல்றேன்” என்று அலுவலகம் வந்து xe.com பார்த்தேன்.

11000 இந்தோனேஷியா ருபையா = 50.78 இந்தியன் ரூபாய்கள் என்று வந்தது.

வெறும் அம்பது ரூபாய் 78 காசு!

சொன்னேன்.

“அடுத்த லீவுக்கு அந்தாளு வரட்டும் சார்” என்றான்.

“அப்படியெல்லாம் சொல்லாதப்பா” என்றதுக்கு சொன்னான்.


“கம்மியா இருக்கேன்னெல்லாம் சங்கடமில்ல சார். இரண்டு மூணு நாளா ‘பத்திரமா வெச்சிருக்கயா.. பத்திரமா வெச்சிருக்கயா’ன்னு கேட்டுட்டே இருந்தார் சார். இதுக்காக நூத்தம்பது ரூபா செலவு பண்ணி ஜிப் வெச்ச பர்செல்லாம் வாங்கினேன் சார்” என்றான்.

பாவமாய் இருந்தது!

***** ***** ***** ***** *****

ரு சோக்கு....

ர்ல ஒரு சொந்தக்காரர் வீட்ல மரணம். அவசர அவசரமா ரயில்வே ஸ்டேஷன்ல போய் டிக்கெட் ரிசர்வ் பண்ணப் போனான் அவன்.

ரிசர்வேஷன் அதிகாரி கேட்டார்: “’பர்த்’ தா?”

இவன் சொன்னான்:

“இல்ல சார். டெத்”

**********************************

அந்தக் கவிஞர் வைரமுத்து.

***




டிஸ் சாவி: தலைப்பு கொஞ்சம் ஓவர்தான்.. அதுக்கான அர்த்தம் புரிஞ்சவங்க விட்டுடுங்க.. மத்தவங்க மன்னிச்சுடுங்க..!




.

26 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

பஸ் ட்ரைவர்களின் சட்டப்படி மேட்டரும்
ஆதியின் பெருங்குடி மேட்டரும் ரசனையான பகிர்தல் பாஸ்...!

RRSLM said...

//பாஸ் அழைத்த வேறொரு எண் மேனேஜரின் வீட்டு லேண்ட்லைன்! ‘செல்லுல பேசற ஞாபகத்துலயே சொல்லீட்டேன்... அவரும் சரி சரின்னு ஃபோனை வெச்சுட்டாருப்பா’ என்றாராம் மேனேஜர்!//

சுலபம்! எனது வீட்டு போன் பெரும்பாலும் என்னுடிய செல் போனுக்கு "forward" செய்யபட்டிருக்கும்.

பாலா அறம்வளர்த்தான் said...

புரியுது புரியுது :-)
மீள் பதிவிலும் அவியலா?

a said...

Pkkisamay oru meel avaiyal...

nalla irukku parisal...

சுசி said...

:))))

Unknown said...

சூப்பர் சோக்கு. வெண்பா கலக்கல்.

Anonymous said...

//பெருங்குடில// :))

கவிஞர் வைரமுத்து!!

R. Gopi said...

மீள்சுக்கு வேற பெயர் கொடுக்க ஆரம்பிச்சாச்சா

Ganesan said...

அருமை, எழுத்தின் வளமை, வாசிப்பவர்க்கு இனிமை.

பொக்கிஷம்--ஆனந்தம்

கார்க்கிபவா said...

தலைப்பு புரிஞ்சிடுச்சு..

சேரனின் பொக்கிஷம் போல, உங்க படைப்பிலே ஆக சிறந்த மொக்கைம்மு சொல்றீங்க.. ஆம் ஐ ரைட்?

Prathap Kumar S. said...

எல்லாமே கலக்கல்...சுவாரஸ்யம்.... இந்தோனேஷீய கரன்சி மேட்டர் செம ரவுசு.
பகிர்வுக்கு நன்றி பரிசல்

CS. Mohan Kumar said...

Interesting to read.

Perungudi, Bus driver, Indonesia currency...all matters bring a smile.

தராசு said...

டிஸ் சாவி ......

ஸ்ஸ்ஸோஓஓஓ, இப்பவே கண்ணக் கட்டுதே.....

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சில விஷயங்களை ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கேன்னு நினைச்சுகிட்டே படிச்சேன்.

பின்னூட்டங்களைப் பார்த்தா தெரியுது :)

Thamira said...

நான் பெருங்குடியிருந்து வந்து 2 வருடங்கள் ஆகப்போகின்றன. ரொம்ப பழைய சேதியாக இருக்கும் போல இருக்குதே.

சட்.. மீள்பதிவா? யோவ்.. என்னா கூட்டு சேந்து கொள்ளையா.? போங்கடா..

பொன்கார்த்திக் said...

சகா கம்பெனி சீக்ரெட்ட வெளிய சொல்லாதிங்க..

Anonymous said...

Try this

http://finance.yahoo.com/currency-converter/?amt=1&from=EUR&to=INR&submit=Convert#from=IDR;to=INR;amt=11000

Vidhoosh said...

விகடன் இன்ஸ்பிரேஷன் ??? :-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்.

MANO நாஞ்சில் மனோ said...

//பெருங்"குடியில" இருக்கேன்///
அட பாண்டி மக்கா........!!!!
சூப்பருங்கோவ்.....

vinthaimanithan said...

ஆரம்பத்துலருந்தே எல்லாம் சோக்காத்தான் இருக்கு... அப்புறம் என்ன தனியா சோக்குன்னு ஒண்ணு?!

Anisha Yunus said...

மளிகைக்கடையின் டெக்னிக் பலமுறை கவனித்ததே என்றாலும், அதில் உள்ள சூட்சுமம், இப்படி படிக்கும்போதுதான் ஒரு புன்முறுவலை தருகிறது. நல்ல தொகுப்பு. மற்றபடி, கவிஞரை எளிதே கணித்து விட முடிகிறது!! :)

priyamudanprabu said...

கலக்கல்.

செல்வா said...

எல்லாமே கலக்கல் அண்ணா ..!

"உழவன்" "Uzhavan" said...

எல்லாமே அட்டகாசம்..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அந்த கவிஞர் வாலினு நெனச்சேன்...ஓ... இவரா? ஒகே ஒகே

அந்த பஸ் ஊழியர் ட்ரிக் சூப்பர்... பாராட்டமா இருக்க முடியல...

மத்ததும் சூப்பர்...ஆனா பொக்கிஷம் கொஞ்சம் ஓவர் தான்... ஹா ஹா ஹா