22 ஜூலை 2008.
நான் ட்விட்டர் அக்கவுண்ட் ஆரம்பித்த நாள்.
எப்படி கரெக்டாகத் தெரிகிறது? இதோ இங்கே போனால் உங்கள் ட்விட்டர் கணக்கு ஆரம்பிக்கப் பட்ட தேதியைத் தெரிந்து கொள்ளலாம்.
ஆரம்பத்தில் யாருடைய வலைப்பூவிலேயோ இந்த ட்விட்டரைப் பார்த்து ஏதோ சாட்டிங் சமாச்சாரம் என்று நானும் இணைத்தேன். ஆனால் தொட்ர்ந்து அதில் இயங்கவில்லை. அதன் சூட்சுமம் புரியவே இல்லை. அப்புறம் அதைத் தூக்கிவிட்டேன்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதைப் பற்றி அறியவந்து ஆர்வமானேன். ‘140 எழுத்துகள் உனக்கு. எடுத்துக்கோ. என்ன வேணும்னாலும் எழுது’ என்று சொல்கிறது ட்விட்டர். ‘கலைஞன் ஒரு காட்டாறு அவனுக்கு அணைபோட நீ யார்?’ என்று கேள்வி கேட்பவர்கள் ஒரு ஓரமாக குந்திக் கொள்ள, இளைஞர் கூட்டம் ட்விட்டருக்குப் பின்னால் படையெடுத்தது. அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு!
இன்றைக்கு நாளேடுகளில் ட்விட்டரைப் பற்றி ஒரு செய்தியேனும் வராத நாட்கள் மிகக் குறைவு. ட்விட்டரில் நமீதா சேர்ந்தால் செய்தி. சச்சின் சேர்ந்தால் சாதனை. ஷாருக்கான் தினமும் 'குளிக்க சோப்பும், டவலும் எடுத்துகொண்டேன்' என்பதிலிருந்து ட்விட்டி மகிழ்கிறார். கோவா ஆட்டத்தின் போது அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்னரே ட்விட்டரில் ‘மழையால் இன்னைக்கு ஆட்டத்துக்கு ஆப்பு’ என்று சொன்ன ரோகித் ஷர்மா, யுவராஜ் சிங்கின் கைங்கர்யத்தால் ஆட்ட நாளின் போது ட்விட்ட வீரர்களுக்குத் தடை.. விஜய் நடிக்கும் ‘வேலாயுதம்’ ஹீரோயின் ஹன்சிகா ‘கவலைப் படாதீங்க.. கூடிய சீக்கிரம் விஜய்யை ட்விட்டர் அக்கவுண்ட் ஆரம்பிக்க வைக்கிறேன்’ என்கிறார். இப்படி எங்கெங்கு காணிணும் ட்விட்டர் புராணம்.
இந்தியாவில் ட்விட்டரை பிரபலப்படுத்திய பெருமை சசி தரூரையே சாரும். விமானப் பயணத்தின் போது ‘எகானமி க்ளாஸ் மாட்டுத் தொழுவம் போலிருக்கிறது’ என்று சொல்லித் தொலைக்க, ‘அப்ப அதுல வர்றவங்க மாடுகளா?’ என்று - அதில் வருபவர்கள் கேட்டார்களோ இல்லையோ - எதிர்கட்சிகள் கேட்க, ட்விட்டர் என்றால் என்ன என்று பொதுஜனம் முதற்கொண்டு கேட்க ஆரம்பித்தார்கள். அதன்பிறகும் அடிக்கடி ட்விட்டரில் ஏதாவது சொல்லி மாட்டிக் கொள்வது அவருக்கு வாடிக்கையாகிவிட்டது.
வாராந்திர இதழ்கள் சுவையான ட்வீட்களை அள்ளி எடுத்துக் கொஞ்சி மகிழ்கிறது.
‘உங்க ட்விட்ட விகடன்ல பார்த்தேன். அதுமூலமாத்தான் உங்களை ஃபாலோ பண்ணினேன்’ என்று என்னிடம் சொல்பவர்கள் நிறைய பேர்.
வலைஞர்கள் (வலைப்பதிவர்கள்) போல, ட்விட்டர்கள் ட்வீப்பிள்ஸ் என்றழைக்கப்பட்டு, செல்லுமிடமெல்லாம் சந்தித்துக் கொள்கிறார்கள். பேச்சும் 140 வார்த்தைகளுக்குள்ளா என்று தெரியவில்லை!
எது எப்படியோ ட்விட்டரின் வடிவமும், எதையும் சுருங்க சுவாரஸ்யமாய்ச் சொல்ல வைக்கும் அதன் விதியும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
இத்தனை பீடிகையும் எதற்கு? நான் சமீபத்தில் எழுதிய சில ட்விட்களைப் பகிர்ந்து கொள்ளத்தான்.
(என்னை ட்விட்டரில் தொடர இந்த வலைப்பூவின் இடது பக்கத்தில் உள்ள குருவியைக் க்ளிக்குங்கள்.)
***************************** ********************** ******************
‘நேரம் சரியில்லை கெடா வெட்டணும்’ என்கிறார்கள். பாவம், அந்த ஆட்டுக்குத்தான் நேரம் சரியில்லை.
*
அரசியல் பத்தி எப்பக் கேட்டாலும் ஒரு தடவை சொன்னதையேதான் நூறு தடவையும் சொல்றாரு சூப்பர்ஸ்டாரு! #வருவியா வரமாட்டியா வரலேன்னா உம்பேச்சு கா!
*
‘எத்தனை தூரம் வேண்டுமானாலும் அடித்து விளையாடுங்கள்’ - இது ஒரு ப்ரா விளம்பரம்! ஹ்ஹூம்!
*
மனைவி: ‘சாப்பிட்டாச்சா?’ நான்: ’ஓ!’ மனைவி: ‘கொழம்பு எப்படி இருக்கு?’ நான்: ‘அருமை!’ மனைவி: ’இன்னைக்கு வெறும் லெமன் ரைஸ்தான் வெச்சேன்’ #ஙே
*
என் மனைவி சுடிதாருக்கு மேட்சா ஷால் கிடைக்கறதுக்குள்ள விஜயகாந்துக்கு கூட்டணி கிடைச்சுடும் போலிருக்கு. #ஷாப்பிங் டார்ச்சர்ஸ்
*
தண்ணின்னாலே எப்பவுமே சண்டைதான் #காவிரி #முல்லைப்பெரியாறு #குழாயடி #டாஸ்மாக்
*
ஆஃபீஸுக்கு வந்தால் வீட்டு வேலைகளின் பாக்கியும், வீட்டுக்குவந்தால் ஆஃபீஸின் பெண்டிங் வேலைகளும் ஞாபகத்துக்கு வருகிறது. #நாராயணா
*
மலபார் கோல்ட் விளம்பரத்தில் இளையராஜா. #தங்கமான ராசா
*
பேருந்தில், ரயிலில் தனித்தனியே லவுட் ஸ்பீக்கரில் பாட்டு கேட்போரின் செல்ஃபோன்களைப் பறிமுதல் செய்ய அவசரச் சட்டம் கொண்டு வா ஆண்டவா!
*
“நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன... நீதான் எந்தன் ஒளிவிளக்கு.. (தோழி அப்டேட் அல்ல..ஃப்லிப்ஸ் ட்யூப்லைட்டைப் பார்த்து பாடியது)
*
தூத்துக்குடி டாஸ்மாக் முன் இருந்த “இங்கே பார் வசதி உண்டு’ என்பதில் ‘ச’வை மட்டும் விட்டுப் படித்து ஒரு கணம் திடுக்கிட்டேன்.
*
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் இலவச கழிப்பிடம்/குளியலறை. 5 பைசா வாங்கவில்லை. அவ்வளவு சுத்தமாக இருக்கிறது!
*
வாழ்க்கையிலேயே முதல்முறையாக பாத்ரூமில் பாத்டப்-பிற்கு மேல் சீலிங் ஃபேனைப் பார்க்கிறேன். #சுகம் ஹோட்டல்ஸ், தூத்துக்குடி.
*
மெனக்கெட்டு ரோடு போட்டு, ரோடு போட்டதுக்கு பாராட்டு விழாக்கு வர்றவங்களை வரவேற்று பேனர் வைக்க அந்த ரோட்டையே தோண்டறாங்க.#கொடுமைடா சாமி
*
இந்தியா செகண்ட் பேட்டிங் என்று தெரிந்ததும் பர்மிஷனைக் கேன்சல் செய்து ஆஃபீஸ் நெட்டில் ஸ்கோர் பார்ப்பவனே புத்திசாலி #சாமர்த்தியன் சொல்
*
அழகான பெண்கள் ஓவர் டேக் செய்ய முயலும்போது வழி விட்டு ரசிப்பவனே புத்திசாலி #சாமர்த்தியன் சொல்
*
ஆஃபீஸுக்கு 15 நிமிடம் லேட்டானால் வேறு சில ஆஃபீஸ் வேலைகளையும் முடித்து ஒரு மணி நேரம் லேட்டாகச் சென்று ரிப்போர்ட் செய்பவனே
புத்திசாலி #சா.சொ
*
இளம்பெண் லிஃப்ட் கேட்கும்போது, மாட்டியிருக்கும் Back Bagஐ கழற்றி பைக் முன்னால் வைத்துக் கொள்பவனே புத்திசாலி! #சாமர்த்தியன் சொல்
*
விக்ரம், த்ரிஷா, விஜய், மம்முட்டி... இப்போதெல்லாம் பல நிறுவனங்களின் ப்ராண்ட் அம்பாசிடர்கள் - க்ராண்ட் அம்பாசிடர்களாக இருக்கின்றனர்.
*
டபுள் செஞ்சுரியை மகளுக்கு அர்ப்பணிக்கிறார் சச்சின். நானும் நேத்து ஆஃபீஸ்ல வாங்கின பாராட்டை என் மகளுக்கு அர்ப்பணிச்சுக்கறேன்.
*
நாளைக்கு ஆயுதபூஜையாம். பலபேரை வீழ்த்திய உன் கண்களுக்கு மறக்காமல் கற்பூரம் காட்டு #தோழி அப்டேட்ஸ்
*
பைக்கில் செல்லும்போது கன்னிப் பெண்களைக் கடக்கும்போதுதான் ரிவர்வ்யூ மிர்ரர் சரியான பொசிஷனில் இல்லையென்பதைக் கவனிக்க முடிகிறது.
*
காமன்வெல்த் முடியும்போது, கம்பெனியில் போனஸ் போட்டுவிடுவார்கள். நானும் தங்கத்துக்காக ஓடவேண்டியிருக்கும். #மனைவி சொல்லே மந்திரம்
*
அன்னையின் தாலாட்டும், இளையராஜாவின் பாடல்களும் தரமுடியாத ஆழ்ந்த நித்திரையை ஆஃபீஸ் மீட்டிங்குகள் தருகின்றன #நிதர்சனம்
*
மகளிர் டென்னிஸ், மகளிர் டேபிள் டென்னிஸெல்லாம் பார்க்கும்போதுதான் ‘காமன்’வெல்த்துக்கு அர்த்தம் புரிகிறது..! #ஆணாதிக்க ட்வீட்
*
பஸ் ஸ்டாண்ட், விமான நிலையங்களைவிடவும் ரயில் நிலையத்தில் காணும் கன்னிகள் மனதைக் கவர்கிறார்கள். #அவதானிப்பு
*** *** *** *** ***
27 comments:
கலக்கல் ட்வீட்ஸ்!
சூப்பர் பதிவு. அப்புறம் நம்ம பதிவு பக்கம் வந்துடாதீங்க. அப்டியே ஷாக் ஆய்டுவீங்க!
டுவிட்டர் கணக்கு ஆரம்பித்த தேதியை கரெக்டாக சொன்னீர்கள்... நான் பிளாக்கர் அக்கவுன்ட் ஆரம்பித்த தேதியை தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன்... ஏதாவது ஆப்ஷன் இருக்கிறதா...
:-)
ஜயா,
நானும் உங்களின் டிவிட்டரில் follower என்பதை பதிவு செய்து கொள்கிறேன்..
:)!
kalakkal
7 - very natural
9 - same pinch
22 - this tweet made me to follow you in twitter.
17, 18, 25 - :D
இவ்ளோ விஷயம் இருக்கா
நன்றி
all (twits) are gud.
டிவிட்டும் போதுதான் உங்க 'இளம்' (ஜொள்ளு ?) மனசு தெரியுது. வீட்டுல பாக்க மாட்டாங்கன்னு மனச டிவிட்டிடீங்க, இப்ப பதிவாக மாறிடிச்சுல்ல. இனி வீட்டுல 'அர்ச்சனை' ஸ்வீட்ஸ்தேன். :)
எல்லாமே படிச்சு அண்ணா ..
எப்படின்னா நான்தான் உங்க பஸ்ல பின்னாடி வரேன்ல..!!
எல்லா ட்விட்டையும் ப்ளாக்ல பதிவா போடலாம், ஆனா எல்லா பதிவையும் ட்விட்ட முடியுமா ?
சூப்பரு அப்பு.... அட்ரா சக்கை ...அட்ரா சக்கை ...
அன்பு தீபாவளி வாழ்த்துகள்
//
மெனக்கெட்டு ரோடு போட்டு, ரோடு போட்டதுக்கு பாராட்டு விழாக்கு வர்றவங்களை வரவேற்று பேனர் வைக்க அந்த ரோட்டையே தோண்டறாங்க.#கொடுமைடா சாமி
//
நான் ரொம்ப ரசித்தது.......
//
பேச்சும் 140 வார்த்தைகளுக்குள்ளா என்று தெரியவில்லை!
//
சூப்பர்..........
Nice!..:)
தண்ணின்னாலே எப்பவுமே சண்டைதான் #காவிரி #முல்லைப்பெரியாறு #குழாயடி #டாஸ்மாக்
மாஸ்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!
//பைக்கில் செல்லும்போது கன்னிப் பெண்களைக் கடக்கும்போதுதான் ரிவர்வ்யூ மிர்ரர் சரியான பொசிஷனில் இல்லையென்பதைக் கவனிக்க முடிகிறது.//
Nice!! :)
நல்லா இருக்குண்ணே
super!!
//காமன்வெல்த் முடியும்போது, கம்பெனியில் போனஸ் போட்டுவிடுவார்கள். நானும் தங்கத்துக்காக ஓடவேண்டியிருக்கும். #மனைவி சொல்லே மந்திரம்//
// சிவா said...
கலக்கல் ட்வீட்ஸ்!//
repeatuuuuu
அப்புறம் ஆனந்தவிகடனின் ஆஸ்தான ட்விட்டாசிரியர் ஆனதை எழுதலையா??
சுவையான பதிவு.
all joke is nice.
இளம்பெண் லிஃப்ட் கேட்கும்போது, மாட்டியிருக்கும் Back Bagஐ கழற்றி பைக் முன்னால் வைத்துக் கொள்பவனே புத்திசாலி! #சாமர்த்தியன் சொல்
-அண்ணி இவர கொஞ்சம் என்னன்னு கேளுங்க...
Post a Comment